Archive for the ‘ஜெய்கணேஷ்’ Category

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? கோவில் மற்றும் பங்காரு அடிகளார் கிருஸ்துவ சார்பு நோக்கி சாய்வதேன்? [2]

திசெம்பர் 27, 2018

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? கோவில் மற்றும் பங்காரு அடிகளார் கிருஸ்துவ சார்பு நோக்கி சாய்வதேன்? [2]

Kick for Mariyatha- EVR

திராவிடம் கோவிலில் புகுந்த கதை: பெரியார்-ஈவேரா 1973 வரை உயிரோடு இருந்திருக்கிறார். 1960-1973 காலகட்டத்தில் பங்காரு அடிகளின் குறி சொல்லுதல் போன்ற விவகாரங்கள், செய்திகள் எல்லாம் ஈவேரா நாயக்கருக்குத் தெரிந்திருக்கும். “சித்தர்காடு மாரியாத்தாளுக்கு உதை” என்று கட்டுரை எழுதிய ஈவேரா இந்த பங்காரு பூசாரியையும், ஆதிபராசக்தியையும் எப்படி விட்டு வைத்தார் என்பது அதிசயம் தான்[1]. பூசாரியின் போக்கிரித் தனத்தால் அவ்வாறு செய்தான் என்று எழுதிய நாயக்கர் அமைதியாக ரசித்தார் போலும்[2]. வீரமணியும் கண்டுகொள்ளவில்லை. இதை அலசி எழுதிய என்னுடைய கட்டுரைகளை இங்கு படிக்கலாம்[3]. பங்காருக்கு 32 வயது என்பதால், அவருக்கும் திராவிட அரசியல், நாத்திகம் மற்றும் சிலையுடைப்பு இந்துவிரோதம் முதலியன தெரிந்திருக்கும். அரசியலும் இக்கோவில் வளர்ச்சியுடன் சேர்ந்தே இருந்துள்ளது. விசாலாக்ஷி நெடுஞ்செழியன், இக்கோவிலில் அதிக ஈடுபாடு, அக்கரைக் கொண்டிருந்தார். நாத்திகம் பேசும் நெடுஞ்செழியனின் மனைவி எப்படி, கோவிலுடன் சம்பந்தப் பட்டுள்ளார் என்ற கேள்விகள் எழுந்தன. ஒருவேளை, ஈவேரா நாயக்கர் நாத்திகராக இருந்தார்,ஐந்த பங்காரு நாயக்கார் ஆத்திராக இருந்தார் என்பதனால், விசாலாக்ஷிக்கு பக்தி வந்ததா அல்லது திராவிட நாத்திகர்கள் எப்பொழுதுமே தமது மனைவி, துணைவி, சகோதரி, மகள் போன்றோரை வைத்து சாமி கும்பிட வைத்து பலன் பெறுவர் என்ற “பிராக்ஷி” [proxy] யுக்தி முறையில் நடந்ததா என்பதனை ஆதிபராசக்தி அல்லது அம்மா தான் சொல்ல வேண்டும்!

Bangaru with MGR, RM Veerappan, Zail Singh etc

விசாலாக்ஷி நெடுன்செழியன் பக்தை ஆனது, எம்ஜிஆரின் ஆதாவு: பங்காரு ஆரம்பகாலங்களில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தார் என்று முன்னமே சொல்லப்பட்டது. கோவில் கட்டி உண்டியல் வைத்து சம்பாதிக்கலாம், என்று மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலை அருகில் ஒருவிக்கிரகத்தை வைத்து, குறி சொல்ல ஆரம்பித்தார். வந்த பணத்தில் சிறு கோவில் போல அமைத்தார். பகல் நேர ஆசிரிய பணியோடு மாலை நேரம் பூஜைகளையும் நடத்தினார். ஒருநாள் காவல்துறை அந்த கோவிலுக்குள் நுழைந்து, பங்காருவை கைது செய்தது. கள்ள நோட்டு அடிப்பதாக புகார். இதனால் வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு, பல லட்சம் ரூபாய் பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது[4]. இந்த இடைப்பட்ட காலத்துக்குள், எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த பகுத்தறிவு நெடுஞ்சழியனின் மனைவி விசாலாட்சி பங்காருவின் தீவிர பக்தையாக இருந்ததால், பங்காரு அடிகள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்[5].

May 10, 1986 - Melmaruvattur function at Marina - Zail Singh, MGR etc.

1966 முதல் 1977 வரை ஏற்பட்ட மாற்றங்கள்: பழைய கோவில் வேப்பமரத்தின் கீழ் இருந்தது, 1966 புயலில் அந்த வேப்ப மரம் விழுந்தது, அங்கிருந்து சுயம்பு விக்கிரகம் கிடைத்தது என்றெல்லாம் சொல்லப் பட்டது. அது மட்டுமல்லாது, அச்சரப்பாக்கத்திலிருந்து, ஒரு ஒளி வந்து, இங்கு மறைந்தது  என்றும் சொல்லப் பட்டது. அங்கிருந்து ஒளி வந்த்தோ இல்லையோ, அம்மலையை ஆக்கிரமித்துக் கொண்டு, கிருத்துவர்கள், ஒரு பெரிய சர்ச்சைக் கட்டி விட்டனர். இருப்பினும், புற்று 1974ல் வைக்கப்பட்டது. அதே ஆண்டில் குறி சொல்லும் மேடை, மண்டபம் எல்லாம் கட்டப்பட்டன. நிதியுதவி, வரும்படி அதிகமானது. கூட்டம் அதிகமானதால், 1977 கோவில் விரிவாக்கப்பட்டது. 19-01-1977 அன்று கருவறை கட்டும் வேலை ஆரம்பிக்கப் பட்டது. 25-11-1997 அன்று புதிய விக்கிரகம் கர்ப்பகிருகத்தில் வைக்கப் பட்டது.  கரிக்கோல் பவனி 01-05-1977 அன்று ஆரம்பித்து, 05-06-1977 அன்று முடிந்தது.

May 10, 1986 - Spiritual Yagna for world Peace inaugurated by Zail Singh

2007ல் துவக்கப் பட்ட ஆன்மீக இயக்கம்: செப்டம்பர் 9, 2007ல் “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம்” [Melmaruvathur Adiparasakti Spiritual Movement (MASM)] ஆரம்பிக்கப் பட்டதாக சொல்லப் படுகிறது, ஆனால், அது, டிசம்பர் 13, 2007ல் பதிவாகியுள்ளது. தரும மற்றும் மத டிரஸ்ட் [charitable and religious trust] என்ற நிலையில், பங்காரு நாயக்கர், அவரது மனைவி வி.லக்ஷ்மி, மகன்கள் ஜி.பி.அன்பழகன், ஜி.பி.செந்தில்குமார், ஏ.கே.வேன்கடசாமி, பி.ஶ்ரீதேவி. பி.உமாதேவி, எஸ்.கோபிநாத், எஸ்.மாரிமுத்து, மற்றும் நெருங்கியவர் என்று 9 டிரஸ்டிகள் கொண்ட அமைப்பாக பதிவு செய்யப் பட்டது. அதில் தைபூசம் என்றெல்லாம் கொண்டாடுவோம் என்றுள்ளது, கிருஸ்துமஸ் கொண்டாடுவோம் என்றெல்லாம் இல்லை. ஆகவே, அத்தகைய மாற்றம் எப்படி, ஏன், யாரால் அறிமுகப்படுத்தப் பட்டது என்பதனை ஆராய வேண்டியுள்ளது. வீடியோக்கள் செக்யூலரிஸ பாணியில் கிருத்துவர், முஸ்லிம்கள் எல்லோரும் மேல்மருவத்தூருக்கு செல்வது போல காட்டுகின்றன[6].

May 10, 1986 - Melmaruvattur function at Marina - Zail Singh, MGR etc.2

1985ல் நடந்த கோவில் விரிவாக்கம்: 1985ல் சித்தர் பீடத்தின் கட்டிட வளர்ச்சிப் பணிக்குழு தொடங்கப்பட்டது. ராஜகோபுரம், பெரிய மண்டபம், புற்று மண்டபம், அங்கப் பிரதக்ஷிண மண்டபம், எண்கோண மண்டபம், முதலியவை கட்டுவதற்கு தீர்மானிக்கப் பட்டது. சங்கர்-கணேஷ் குழுவினர் மூலம் இசைக்கச்சேரி பல இடங்களில் ஏற்பாடு செய்யப் பட்டு பணம் / நன்கொடை பெறப்பட்டது. இக்கால கட்டத்தில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தார், நெடுஞ்செழியன் நிதியமைச்சராக இருந்தார். எம்ஜிஆரே விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதனால், அரசியல் செல்வாக்கு அதிகமாகவே சேர்ந்து விட்டது என்றாகிறது. ஆனால், திராவிடத்தால் ஆன்மீகம் நீர்த்ததா, பணம், அதிகாரம்,மமதை இவற்றால் சீரழிந்ததா என்பதை அம்மாவின் பக்தர்கள் தான் சொல்ல வேண்டும்.

May 10, 1986 - Book release by Zail Singh

May 10, 1986 அன்று மெரினாவில் நடந்த விழா: மே மாதம் 10, 1986ல், மெரினா கடற்கரையில், ஆதிபராசக்தி டிரஸ்டின் சார்பாக முப்பெரும் விழா நடத்தப் பட்டது. உலக அமைதிற்காக மாநாடு [Conference for World Peace],  உலக அமைதிற்காக ஆன்மீக வேள்வி [Spiritual Yagna for World Peace] மற்றும் புத்தகம் வெளியிடப் பட்டது. பாரத ஜனாதிபதி ஜெயில் சிங் யாகத்தை ஆரம்பித்து வைத்தார். எம்ஜிஆர் பங்காரு அடிகளுக்கு சால்வை போத்தி பாராட்டினார். புத்தகத்தை ஜனாதிபதி வெளியிட அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் பெற்றுக் கொண்டார். அவ்வாறு திராவிட கட்சி, திராவிட ஆன்மீக போர்வையில் இந்நிகழ்சி அரங்கேறியது. அடுத்த ஆண்டே- 1987, இவரது பதவி காலம் முடிந்தது, எம்ஜிஆருக்கும் சுகவீனம் ஏற்பட்டு 24-12-1987ல் காலமானார்.  கிருத்துவர்கள் அந்த ழாண்டு கிருஸ்துமஸ் கொண்டாட வேண்டாம் என்று அறிவித்ததும் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். இதனாலேயே, பங்காரு அடிகள் கொண்டாட ஆரம்பித்தாரா? அல்லது கிருத்துவர்கள் வற்புருத்தினரா?

Melmaruvattur raid July 2010

பங்காரு அடிகளார் வீட்டின் முன் சோதனை நடத்துவதற்காக குழுமியிருந்த வருமான வரித் துறையினர் (ஜூலை 2010)[7]: மதுராந்தகம்,ஜூலை 3: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பொறியியல்,மருத்துவக் கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை தொடங்கி 17 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். அறநிலைய நிறுவனர் பங்காரு அடிகளார், அவரது மூத்த மகன் அன்பழகன், அவரது மகள் ஸ்ரீதேவி ஆகியோரது வீடுகளிலும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 6 மணி வரை வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். 2010ல் சிபிஐ ரெயிட் நடந்தது, அதிலிருந்து, கோவிலில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. மேனாட்டு பக்தர்கள் என்று வர ஆரம்பித்தனர். இதனால், திடீரென்று, கிருஸ்துமஸ் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப் பட்டது. அதுதான், பிறகு, அம்மனையே மேரியாக அலங்கரித்து, கொண்டாடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. முன்பு, இதை சுட்டிக் காட்டியபோது, “அம்மா பக்தர்கள்” என்னை வசை பாடினர்! இங்கு விசயம் பக்தியைப் பற்றியதல்ல. மதம், நம்பிக்கை பெயரில், கிருத்துவத்தை நுழைக்கும் போக்கு தான் எடுத்துக் காட்டப் படுகிறது. அருகில், அச்சரபாக்க மலை கிருத்துவர்களால் வலைக்கப் பட்ட போது, பங்காரு அடிகள் தமது அதிகாரத்தால் தடுத்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை.

வேதபிரகாஷ்

26-12-2018

Christian pstor with Bangaru

[1] உண்மையில் ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து பிஎச்.டிகளை சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில், செக்யூலரிஸ நாட்டில் நாத்திகம் கூட பாரபட்சமாக வெலை செய்கிறது, மதம்-ஜாதி பார்த்து தான் முடிக்கி விடப்படுகிறது என்று தெரிகிறது.

[2] https://dravidianatheism.wordpress.com/2016/03/20/priest-kicked-goddess-the-perverted-writing-of-evr-periyar-exposed/

[3] https://dravidianatheism.wordpress.com/2016/03/20/evr-periyar-perversion-and-characteristics-were-due-to-failures-in-his-personal-life/

[4] இதற்கான இணைதள பதிவுகள் மறை ஆரம்பித்து விட்டன.

[5] http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_38.html

[6] https://www.youtube.com/watch?v=EvJvdTZjg08

[7] தினமணி, மேல்மருவத்தூர் அடிகளார் வீட்டில் சோதனை, First Published : 04 Jul 2010 02:28:15 AM IST

Advertisements

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? கோவில் மற்றும் பங்காரு அடிகளார் வளர்ந்த விதம் [1]

திசெம்பர் 27, 2018

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? கோவில் மற்றும் பங்காரு அடிகளார் வளர்ந்த விதம் [1]

Mari turned Mary -Dinamalar cutting

முன்னுரை: இக்கட்டுரை பக்தியை விமர்சிக்க எழுதப் படவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக திண்டிவனம் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கிருத்துவர் மற்றும் முகமதியர்களின் ஆக்கிரமிப்பு முதலிய காரியங்களை எடுத்துக் கொண்டு, அப்பாவி இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப் படுகின்றனர் மற்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கவே ஞாபகப் படுத்தப் படுகிறது. அச்ச்ரப்பாக்க மலை மட்டும் ஆக்கிரமிக்கப் படவில்லை, பின்பக்கத்தில் உள்ள மலைப்பகுதிகளும் ஆக்கிரமிக்கப் பட்டு வருகின்றன. ஏற்கெனவே, செஞ்சி கோதண்டராம கோவில் கிருத்துவர்களுக்கு விற்கப் பட்டு மீட்கப்பட்டுள்ளது. ஞானனந்த கிரி ஆஸ்ரமம் போகும் வழியில், மலையில் ஒரு தர்கா கட்டப் பட்டுள்ளது. ஆனால், இவையெல்லாமே அரசு, அரசு ஊழியர் முதலியோர்களின் ஒத்துழைப்புடன் நடந்திருக்கின்றன. திராவிடத்துவம் பேசும் இவர்கள் இவர்களை விமர்சிப்பதில்லை. மேல்மருவத்தூர் குறிசொல்லும், நோய் தீர்க்கும் அதிசயங்களை குறைசொல்லவில்லை. ஆனால், மற்ற இந்துக்களின் நம்பிக்கைகளை மோசமாக, கேவலமாக, ஆபாசமாக, தூஷித்து வருகின்றன. ஈவேராவும் இதில் விதிவிலக்கல்ல. உண்மையில் ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து பிஎச்.டிகளை சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில், செக்யூலரிஸ நாட்டில் நாத்திகம் கூட பாரபட்சமாக வேலை செய்கிறது, மதம்-ஜாதி பார்த்து தான் முடிக்கி விடப்படுகிறது என்று தெரிகிறது. முன்பு http://www.indiainteracts.com என்ற தளத்தில் பதிவு செய்த கட்டுரைகள் எல்லாம் காணாமல் போய் விட்ட்தால், மறுபடியும் தொகுத்து, பதிவு செய்ய தீர்மானித்தேன்[1].

Bangaru young man

பண்ருட்டி கோவிலில் மாரி, மேரியானது (25-12-2018): கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் படைவீட்டு அம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது[2]. இங்கு மார்கழி மாதத்தையொட்டி தினமும் காலையில் சிறப்பு பூஜை- வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 25-12-2018 அன்று காலை கோவிலில் உள்ள மூலவர் ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது[3]. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் முன்னணி, அய்யப்ப பாதுகாப்பு மன்ற நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர்[4]. உடனே அவர்கள் அம்மனுக்கு செய்யப்பட்டு இருந்த மேரிமாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்[5]. கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது பற்றிய தகவல் அறிந்ததும் அங்கு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉசேன் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்[6]. அவர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அம்மனுக்கு செய்யப்பட்டுள்ள மேரி மாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும். இல்லையென்றால் கோவிலின் கதவை திறந்து உள்ளே சென்று அலங்காரத்தை அகற்றுவோம் என்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதன் பின்னர் போலீசார் கோவில் நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மூலம் கோவில் கதவு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த மேரி மாதா அலங்காரத்தை அகற்றினர்[7]. அதனை தொடர்ந்து கோவில் முன்பு திரண்டிருந்த அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Melmaruvattur old temple ant-hill

பழைய கோவில் பங்காருவின் கட்டுப் பாட்டிற்குள் வந்தது[8]: மேல்மருவத்தூர் கோவில் திடீரென்று வந்துவிடவில்லை. 1960-70களிலிருந்து பாண்டிச்சேரி-கடலூர்-திருவண்ணாமலை முதலிய இடங்களுக்குச் சென்று வந்ததால், இக்கோவில் ஒரு வேப்பமரத்தின் கீழ், முதலில் சிறியதாக இருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்திருக்கறார்கள். கீழ்மருவத்தூரில் முதலில் உண்மையான கோவில்  இருந்தது என்றும், பிறகு அது மேல்மருவத்தூருக்கு மாற்றப் பட்டதாகவும் சொல்லப் பட்டது. பங்காரு பஸ்-கன்டெக்டராக வேலை பார்த்து வந்தார், என்றெல்லாம் சொல்லப் பட்டது[9]. பழைய கோவில் பூசாரியுடன் நட்பை வளர்த்துக் கொண்டு, ஒரு நிலையில், இவரே அக்கோவிலை பெற்று விட்டதாகவும் சொல்லப் பட்டது[10]. குறிப்பாக, அவ்விடத்தில், ஒரு கல் / பீடம் இருந்ததாகவும், அதன் மீது உட்கார்ந்து “குறி” சொன்னால், அது பலிக்கும் என்றும் நம்பப்பட்டது. பழைய பூசாரியை விலக்கி விட்டு, பங்காரு, இக்கோவிலை வைத்து குறி சொல்ல ஆரம்பித்தவுடன், கூட்டம் அதிகம் வந்தது, பணம் சேர்ந்தத்து. இதனால், பத்தாண்டுகளில் நிலைமை மாறி விட்டது. 1970லிருந்து இவரது குறிசொல்லும் அதிசயம் முதலியவை -சக்தி -வெளிபட்டன.

Bangaru family, sons wife etc

பங்காரு நாயக்கரின் குடும்பம்: 03-03-1941 அன்று பிறந்தார். 1960ல் பள்ளிப் படிப்பிற்கு பிறகு, ஆசிரியர் ஆனார். தனது 27 வயதில், செப்டம்பர் 1968ல் லக்ஷ்மி [வெங்கடாசல நாயக்கரின் புதல்வி] என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு, கோவில்-குறி சொல்லுதல் போன்றவற்றில் இறங்கினார்.  பங்காரு நாயக்கர் – லக்ஷ்மி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள், அவர்கள் பெயர், பொறுப்பு கீழ்கண்டவாறு கொடுக்கப் பட்டுள்ளன.

எண் மகன் / மகள் மனைவி / கணவன் பொறுப்பு
1 அன்பழகன் ஆஷா கோவில் கல்லூரி
2 செந்தில்குமார் ஶ்ரீலேகா கோவில், கல்லூரி
3 சக்திதேவி டி. ரமேஷ் மருத்துவ கல்லூரி
4 உமாதேவி பி.ஜெய்கணேஷ் நிர்வாகம், நிதி

இவர்கள் எல்லோருமே இருக்கின்ற கோவில், பள்ளிகள், கல்லூரிகள், டிரஸ்டுகள் மற்ற நிருவனங்களில் உறுப்பினர், இயக்குனர், என்றெல்லாம் பதவி வகித்து வருகின்றனர். குடும்பம் நிறுவனங்களை நடத்துவதில் பிரச்சினை இல்லை, ஆனால், வழக்குகள் முதலிய வரும் போது, மதம், நம்பிக்கை, ஆன்மீகம் எல்லாமே கேள்விக்குள்ளாகி, குறியாகி விடுகிறது. குறியால், இக்குறியை மாற்ற முடியாது போனது, நமிக்கையை உடைக்கிறது.

Melmaruvathur seculaism -comfusig

வேதபிரகாஷ்

 

26-12-2018

[1] இப்பொழுதே பல அடிகுறிப்பு ஆதாரங்கள் இணைதளங்களிலிருந்து மறைய ஆரம்பித்து விட்டன. குறிப்பிட்டகாலத்திற்குப் பிறகு எடுத்து விடுகிறார்கள் போலிருக்கிறது.

[2] மாலைமலர், ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம்பாஜக, இந்து முன்னணியினர் போராட்டம், பதிவு: டிசம்பர் 25, 2018 15:46

[3]  https://www.maalaimalar.com/News/District/2018/12/25154625/1219815/BJP-and-Hindu-munnani-protest-against-mary-madha-decoration.vpf

[4] ஏசியா.நெட்.நியூஸ், மேரி மாதாவாக மாறிய மாரியாத்தாபண்ருட்டி அருகே பதற்றம்…!, By Vinoth KumarFirst Published 26, Dec 2018, 2:07 PM IST.

[5] https://tamil.asianetnews.com/tamilnadu/panrutti-mary-madha-decoration-pkc5ba

[6] நியூஸ்.டிஎம், மாரியம்மனை மேரியம்மனாக அலங்காரம்பண்ருட்டியில் பரபரப்பு…!, Newstm Desk | Last Modified : 26 Dec, 2018 07:17 pm.

[7] https://www.newstm.in/news/tamilnadu/district/52313-panrutti-mary-amman-mari-amman.html

[8]  இக்கட்டுரை பக்தியை விமர்சிக்க எழுதப் படவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதிகளில் நடக்கும் கிருத்துவர் மற்றும் முகமதியர்களின் ஆக்கிரமிப்பு முதலிய காரியங்களை எடுத்துக் கொண்டு, அப்பாவி இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப் படுகின்றனர் மற்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கவே ஞாபகப் படுத்தப் படுகிறது.

[9] “சொல்லப்பட்டது” என்று என்று ஏன் குறிப்பிடப் பட்டது என்றால், 1970-80களில் அப்பகுதிகளில், பஸ்களில், தெருக்களில், இவ்விசயங்கள் தாராளமாகப் பேசப் பட்டன. பிறகு, 1980-90களில் ஏற்பட்ட அரசியல் நெருக்கங்கள் முதலியவற்றால், அவை குறைக்கப் பட்டன. 1990-2000களில் மறைக்கப் பட்டு புதிய கதைகள் உண்டாக்கப் பட்டன.

[10] இதைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன, ஆனால், இப்பொழுது காணமல் இருக்கின்றன. மேலும் சர்ச்சைக்குரியதாக இருப்பதால், தவிர்க்கப் படுகிறது.