Archive for the ‘ஜெயின்’ Category

பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில், சர்ச்சுகளில், மசூதிகளில் இல்லாமல் எங்கே செல்லும்’’ – செக்யூலரிஸ இந்தியாவில், செக்யூலரிஸ வாதம் செய்யவேண்டும்! [2]

ஜூலை 22, 2018

பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில், சர்ச்சுகளில், மசூதிகளில் இல்லாமல் எங்கே செல்லும்’’ – செக்யூலரிஸ இந்தியாவில், செக்யூலரிஸ வாதம் செய்யவேண்டும்! [2]

The secular debate on mother goddesses and mensus.vedaprakash-2

பெண்ணைபெண்மையினை தெய்வமாக, வழிபாடு செய்விக்கின்ற, மரியாதை செய்யும் சின்னமாகக் கொண்டால், ஒரே மாதிரி நடந்து கொள்ளவேண்டும்: அவ்வாறு செய்யாமல், [போலித் தனமாக நடந்து கொண்டதால், கிழ்கண்ட வினாக்கள், விசயங்கள் எழுப்பப்படுகின்றன:

 1. பெண்கள் பிரச்சினை எனும்போது கூட, இந்துத்துவவாதி வகையறாக்களில், எந்த பெண்மணியும் பொங்குவதாக காணோமே?
 2. ஆனந்த விகடனில் கவிதை எழுதினால், அவன் பெரிய கவிஞனா? அவனுக்கு செக்யூலரிஸ கவித்துவம் ஏனில்லை?
 3. பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் சர்ச்சில், மசூதியில் இல்லாமல் எங்கே செல்லும், அப்படி என்றே செக்யூலரிஸமாக ஏன் கேட்கவில்லை?
 4. பெண்கள் மாதவிடாய் பிரச்சினை என்றால், பெண்களிடம் [அம்மா, பெண்டாட்டி, மகள்] கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்!
 5. குதிரைக்கு குர்ரம் என்றால், யானைக்கு அர்ரம் என்ற லாஜிக்கில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் கவிஞன், வெங்காய பகுத்தறிவுவாதியாகி விடுவாயா?
 6. முதலில் இந்த இந்துவிரோதிகள் எல்லாம், துலுக்க-கிருத்துவ புராணங்கள் படித்து கேள்விகள் கேட்க வேண்டும், இல்லை பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்.
 7. வேதம், ஆகமம், வேதாகமம் என்று போட்டுக் கொண்டு உலாவரும் போது, வெங்காயம் அவங்களை கேட்டிருக்க வேண்டும்.
 8. துலுக்க-கிருத்துவ பெண்-தெய்வகங்களுக்கு ஜாக்கெட், புடவை மாட்டி தேர்பவனியில் விடுறாங்களே, கேட்க வெங்காயங்களுக்கு துப்பியில்லையா?
 9. தமிழ்தாய்க்கு பொங்கினவங்களே, தமிழ்தாய் மாதவிடாய் காலங்களில் தமிழகத்தை விட்டு சென்று விடுவாள் என்று சொல்வாயோ?
 10. 50 வருடங்களுக்கு, தமிழர் தந்தை என்றபோது, தமிழர் தாய் யார் என்று கேட்டபோதும் பொங்கிய பெர்சுகளும் இப்பொழுது பொத்திக் கொண்டு இருக்கின்றன!

இங்கு எழுப்பப்பட்டுள்ள, ஒவ்வொரு விசயத்தின் பின்னாலும், விளக்கம் கொடுக்கலாம், ஏனெனில், அவையெல்லாம் கடந்த 60-70 ஆண்டுகளில் நடந்தவை தாம்.

News ramil 22-07-2018

உண்மை செக்யூலரிஸ விமர்சனம் தேவை: கோவில்-மசூதி-சர்ச்சுகள் மதிப்பிற்கு, மரியாதைக்கு, வழிபாட்டிற்கு என்றால், எல்லா மதங்களும் இந்தியாவில் ஒரே மாதிரி பாவிக்கப்படுகின்றன என்றால், செக்யூலரிஸ தீட்டில் பெண்தெய்வங்களை ஒதுக்கி வைக்க முடியாது. இடவொதிக்கீடு கொடுத்து, தனியாக அனுப்பி விட முடியாது. இந்து, கிருத்துவ, துலுக்க பெண்தெய்வங்கள் அனைத்தையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். ஆனால், நீதிமன்றங்களில், தொலைகாட்சி விவாதங்களில், ஊடகங்களில், கலை சம்பந்தப்பட்ட விசயங்களில், இலக்கிய-கவித்துவங்களில், ஒருமதம் மட்டும், ஏதாவது ஒரு விதத்தில் தொடர்ந்து விமர்சிக்கப் படுகிறது என்றால், அது திட்டமிட்ட முயற்சி, வேலையாகிறது. அவ்வாறான, பாவனையை ஊக்குவிப்பது, வளர்ப்பது, நிர்வாகிப்பது செக்யூலரிஸம் ஆகாது.

Mary dropping girdle to Thomas

ஆகம மற்றும் மந்திர-தந்திர-யந்திர முறை வழிபாடுகள் வெவ்வேறானவை: கோவில் வழிபாடு எல்லாம், ஒரே சட்டதிட்டங்களில் இல்லை, மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறை வேறுவிதமானது. கடவுளை நம்பாத ஜைன-பௌத்த மதங்கள், ஏன் கோவில்களைக் கட்டின என்று ஆராய்ந்தால், அவற்றின் போலித் தனம் வெளிப்படும். ஆகம சாத்திரங்கள் கிரேக்கர், மிலேச்சர், துலுக்கர் முதலியோர் ஆக்கிரமிப்பு-படையெடுப்புகளுக்குப் பிறகு தோன்றியவை. முன்பு போல, சௌசடி / 64 ஜோகினி போன்ற சக்தி-வழிபாடு கோவில்களில் பெண்களை அனுப்ப உரிமைகள் கேட்கப் படுமா? கேட்க மாட்டார்கள். ஏனெனில், அத்தகைய விவகாரங்களில் சிக்கமாட்டார்கள். கோவில்கள் ஜைன-பௌத்த-மிலேச்ச-துலுக்கர்களால் தாக்கப்பட்டதால், மறுபடியும் இந்துக்களை கோவில்வழிபாட்டு முறைகளில் தகவமைத்துக் கொள்ள, ஆகமசாத்திரங்கள் உருவாகின. முன்பெல்லாம் கோவில்கள் இடிக்கப்பட்டால், அப்படியே விடப்பட்டன. முக்கியமான கோவில்களை மீட்க பாராடினர். மீட்டு மாற்றிக் கட்டிக் கொண்டனர். இதனால், கிரியைகள், சடங்குகள் முதலியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு திசைகளில் நுழைவு, வழிபாடு, முதலியவற்றில் வேற்பாடு ஏற்பட்டன.

Kali -Shiva, Buddhist inculturatiom

ஜைன-பௌத்த-மிலேச்ச மதங்ஜ்கள் பெண்களை சீரழித்தது: ஆகம சாத்திரங்கள் முதல் மூன்று நூற்றாண்டுகளிலிருந்து, 14-15 நூற்றாண்டுகள் வரை உருவாக்கப் பட்டன. மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறைகளில் ஜைன-பௌத்த மதங்கள் பெண்களை அதிகமாக உபயோகப்படுத்தின, சீரழித்தன! இடைகாலத்தில், துலுக்கர் மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறைகளில் நுழைந்தபோது, அவை பாலியல் ரீதியில் கெடுத்து, சிற்பங்களிலும் உருவெடுத்தன. ஜோகினி, யோகினி என்றால், மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்களில் ஈடுபடுத்தப்பட்ட / ஈடுபட்ட சிரத்தையுடன் கூடிய பெண்கள். ஜைன மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்கள் முந்தையவை, பௌத்தர்கள் ஓரளவிற்கு அவற்றை எடுத்தாண்டனர், தகவமைத்துக் கொண்டனர். ஜைன-பௌத்த மந்திர-தந்திர-யந்திர நூல்கள் பிற்காலத்தில் தான் தோன்றுகின்றன – இடைகாலத்தில் துலுக்கரின் தாக்கத்தில் அவை மாறுகின்றன. தரிசனம் கிடைக்க குறுக்குவழிகள் கண்டுபிடித்தது போல, விரைவாக, உடனடியாக பலன் பெற அநாசார முறைகள் கடைபிடிக்கப்பட்டன. அதற்கு மக்களிடையே அதிகாரம் கிடைக்க, இந்து கடவுளர்களின் பெயர்கள், வேதம், ஆகமம், வேதாகமம் போன்ற பிரயோகங்களும் வந்தன.

Padmavati tantra- Jaina inculturatiom

வேதமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டது: வேதங்களில், கடவுள் ஒன்று என்றபோது, அதற்கு மேலாக இல்லை என்றாகிறது. “பிரம்மம்” ஒன்று என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு, அது இல்லை என்று, ஜைன-பௌத்த மதங்கள் பிரச்சாரம் செய்து, இல்லாததை, மகாவீரர்-புத்தனுக்கு ஒப்பீடு செய்தன. அத்தகைய முறைகள் சைவத்தைத் தாக்கியபோது, புதிய கதைகள் உருவாக்கப்பட்டன. “உள்-கலாச்சாரமயமாக்கல்” முறையை ஜைனர்கள் அதிகமாக பயன்படுத்தினர். பௌத்தர்கள் சிறிது மாற்றிக் கொண்டனர். பௌதத்தை சைவர்களுக்கு ஏற்றபடி கொடுக்க, புத்தனையும் அப்படியே காட்டிக் கொண்டனர். ஆகவே, இவ்வுண்மைகளை நீதிமன்றங்களில் வழக்குகளில் முறையாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இல்லையென்றால், இக்காலத்தில், உண்மைகள் மறைக்கப்படும். தவறான முன்னுதாரணங்கள் உண்டாக்கப் படும்.

© வேதபிரகாஷ்

22-07-2018

Kali kills Shiva

அம்பேத்கரைவிட அறிவாளியா ராகுல் – மறுபடியும் காங்கிரஸ் செய்துள்ள பெரிய துரோகம் –- ஜெயின் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து!

ஜனவரி 21, 2014

அம்பேத்கரைவிட அறிவாளியா ராகுல் – மறுபடியும் காங்கிரஸ் செய்துள்ள பெரிய துரோகம் –- ஜெயின் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து!

அம்பேத்கரை மிஞ்சிய ராகுல்

அம்பேத்கரை மிஞ்சிய ராகுல்

ஜைன சமாஜத்தினர் ராகுலை சந்தித்தது (20-01-2014): இந்தியாவில் ஜெயின் சமூகத்தினர் சுமார் 50 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்கள் தங்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். (உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், ஜெயின் சமூகம் சிறுபான்மையினர் பட்டியலில் உள்ளது[1]). ஜெயின் சமூக பிரதிநிதிகள் 20-01-2014 அன்று காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர். அதை அவர், பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்திற்கு கொண்டு சென்றார். ஜெயின் மதத்தினரை சிறுபான்மை பிரிவின் கீழ் சேர்க்க, ராகுல் ஆர்வமாக உள்ளார். இது தொடர்பாக, பிரதமருடன் தொடர்பு கொண்டு, ராகுல் பேசியுள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி, ஜெயின் சமுதாயத்தினர், ராகுலிடம் வலியுறுத்தி உள்ளனர்.

Minority status to Jains cartoon

Minority status to Jains cartoon

சிறுபான்மைஅந்தஸ்துஉடனேஅளித்தது (21-01-2014): ஜெயின் சமுதாயத்தின் ஓட்டுகளை அள்ளுவதற்காக, இந்த கோரிக்கையை ஏற்க காங்., தீவிரமாக உள்ளது[2]. இந்த நிலையில் 21-01-2014 அன்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் ஜெயின் சமூகத்தினரை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது[3]. ஆனால், இதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. ஆகவே, இப்புதல் ஒரு சரத்துடன் சேர்ந்தது என்று குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பில் இந்திய சிறுபான்மையினர் கமிஷன் சட்டத்தின் சரத்து 2(c) ன் படி அந்த அந்தஸ்த்தைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

Minority status to Jains - hindi news cutting

Minority status to Jains – hindi news cutting

நீதிமன்றங்களில்நிலுவையிலுள்ளவழக்குகளைமீறிஅந்தஸ்துகொடுத்தது: 2005ல் ஜெயினர்கள் சிறுபான்மைஅந்தஸ்த்தைக் கேட்டு பல் பாடில் [Jains advocate Bal Patil ] வழக்குத் தொடுத்த போது, உச்சநீதிமன்றம், அத்தகைய தீர்மானத்தை மாநிலங்கள் தாம், “மொழி மற்றும் மதரீதியிலாக” [ T.M.A. Pai case ] அவ்வாறு உள்ளார்களா என்று கண்டறிந்து அத்தகைய நிலையை அறிவிக்க முடியும் என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மறுபரிசீலினை மனு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது[4]. மேலும் இவ்வழக்கில் படிப்பளிக்கும் நிறுவனங்கள் நிர்வகிக்கின்ற கல்லூரிகளுக்கு அத்தகைய அந்தஸ்து கொடுக்கலாமா, கூடாதா என்ற பிரச்சினையில் தான் வழக்குப் போடப் பட்டது[5]. இப்பொழுது, இதனை, மதரீதியில் சிறுபான்மை என்ற நோக்கில் திசைமாறுவது நோக்கத்தக்கது. இந்நிலையில், சோனியா காங்கிரஸ் வேண்டுமென்றே, சட்டத்தின் நிலையை அறிந்தும், தேர்தல் காலத்தில் ஓட்டுகளை, சீட்டுகளைப் பெறலாம், அல்லது அச்சமூகத்தினரை உடைத்து ஆதரவைப் பெறலாம் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. இதே காரணத்திற்காக, பிஜேபியும் அமையாக இருக்கிறது என்பதனை கவனிக்கலாம்.

Minority status to Jains cartoon.vedaprakash

Minority status to Jains cartoon.vedaprakash

ஆறவதுசிறுபான்மையினர்ஆவார்களாம்: ஒருவேளை, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஜைனர்களுக்கு சார்பாக முடிவானால், செக்யூலரிஸ இந்தியாவில் இவர்கள் ஆறாவது சிறுபான்மையினர் என்ற அந்தஸ்தைப் பெறுவர்[6]. அதைத் தொடர்ந்து ஜெயின் சமூகத்திற்கான அரசு சலுகைகள் வழங்கப்படும். ஏற்கனவே

 1. முஸ்லிம்,
 2. கிறிஸ்தவர்,
 3. சீக்கியர்,
 4. புத்தமதத்தினர் மற்றும்
 5. பார்சி இனத்தவர்

சிறுபான்மையினர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மத்திய சிறுபான்மை விவகாரஆமைச்சர், ரஹ்மான் கான், ஜைனர்களிடமிருந்து அத்தகைய கோரிக்கை வந்துள்ளது என்றும், அது பரிசீலினையுள்ளது என்றும் அறிவித்திருந்தார். 2001 சென்சஸின் படி 0.4% ஜைனர்கள் இந்திய ஜனத்தொகையில் உள்ளனர்.

T.M.A.Pai Foundation & Ors vs State Of Karnataka & Ors on 31 October, 2002[7]: டி.எம்.ஏ. பை பவுண்டேஷன் வழக்கு பள்ளி, கல்லூரி முதலியவற்றை நிர்வாகிக்க்கும் விசயத்தில் சலுகைகளைப் பெறுவதற்காக, சிறுபான்மை அந்தஸ்து கேட்டு உச்சநீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் சென்றனர். இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின், பிரிவு 25ன் படி, “சமூக மற்றும் படிப்பு நிர்வாகமுறைகளுக்கு” ஜைன, பௌத்த மற்றும் சீக்கிய நிறுவனங்கள், இந்துக்களைப் போன்றே கருதப்படும் என்றுள்ளது. ஆகவே, முதலில் இதனை உடைத்தாக வேண்டியுள்ளது. பிறகு பிரிவு 30ன் கீழ் வர, தங்களை “சிறுபான்மையினர்” என்று தெர்வித்துக் கொள்ளவேண்டும், பிறகு அரசு அவ்வாறே அறிவிக்க வேண்டும். அம்பேத்கர் இப்பிரிவுகளை நுழைக்கும் போது, ஏகப்பட்ட விவாதங்கள் நடந்து பின்னர் தான், இப்பிரிவுகள் ஒப்புக் கொள்ளப்பட்டு, சட்டத்தில் இடம் பெற்றன. ஆனால், இன்றோ, அம்பேத்கரையும் மீறி ராகுல் போன்றோர் ஒரே நாளில், சட்டங்களை மீறத் தயாராகி விட்டனர்.  “மொழிரீதியில் அல்லது மதரீதியில்” சிறுபான்மையினர் எனும் போது, ஒவ்வொரு மாநிலத்திலும், அவ்வாறு ஏகப்பட்ட பிரிவுகள் வருவார்கள்.

 • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்துக்கள் வருவார்கள், ஆனால், அவர்களுக்கு அந்நிலை கொடுக்கப் படவில்லை.
 • சமஸ்கிருத மொழி ரீதியில் அம்மொழி பேசுபவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் “சிறுபான்மை அந்தஸ்து” கிடைக்க வேண்டும், கிடைப்பதில்லை.
 • பிராமணர்களும் அவ்வாறே கேட்கலாம், கேட்டால் எதிர்ப்பு வந்துவிடும்.
 • இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
 • ஆனால், செக்யூலரிஸ இந்தியாவில் சட்டங்கள், தீர்ப்புகள் எல்லாம் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுவதில்லை, அமூல் படுத்தப்படுவதில்லை.

வேதபிரகாஷ்

© 21-01-2014


[3] தினத்தந்தி, ஜெயின்சமூகத்துக்குசிறுபான்மையினர்அந்தஸ்து; மத்தியமந்திரிசபைஒப்புதல்வழங்கியது, பதிவு செய்த நாள் : Jan 21 | 04:49 am

[4] In 2005, the Supreme Court had disposed the appeal of minority-designation-for-Jains advocate Bal Patil — in the case that now goes by his name — on the ground that the judgment in the T.M.A. Pai case had said States would be the unit for considering demands of both linguistic and religious minority status. A review petition filed by the Centre in this regard is still pending.

http://www.thehindu.com/news/national/minority-status-accorded-to-jains/article5598368.ece

[6] The Union Cabinet on Monday decided to accord minority status to Jains but the decision would be subject to the outcome of pending cases on the issue. If the court cases are settled in favour of the Jains, the community would become the sixth designated minority community of the country. As per the Cabinet note, Jains would be included as a minority under Section 2(c) of the National Commission for Minorities (NCM) Act (NCM), 1992.

http://www.thehindu.com/news/national/minority-status-accorded-to-jains/article5598368.ece

[7] Supreme Court of India – T.M.A.Pai Foundation & Ors vs State Of Karnataka & Ors on 31 October, 2002

Author: Kirpal Bench: B.N.Kirpal, G.B.Pattanaik, V.N.Khare, S Babu, S.S.M.Quadri; CASE NO.: Writ Petition (civil) 317 of 1993; http://www.indiankanoon.org/doc/512761/