Archive for the ‘ஜீயர்’ Category

பல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!

பிப்ரவரி 15, 2020

பல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!

The palanquin row - DK Veeramani letter, feb.2020

பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்தார், தருமபுர ஆதீனம்: “மனிதர்கள் சுமந்துசெல்லும் பல்லக்கில், தருமபுரம் ஆதீனகர்த்தர் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பல்லக்கில் செல்வதைக் கைவிட்டு, ஆதீனகர்த்தர் கோயிலுக்கு நடந்தே சென்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்று விகடன் தன் கருத்தை வாசகர் மீது திணித்துள்ளது[1]. “நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தின் புதிய ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இவர், ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்திவருகிறார். அப்போது, பக்தர்கள் அவரைபட்டினப்பிரவேசம்எனப்படும் நிகழ்ச்சியாக, பல்லக்கில் அமர வைத்து, தோளில் சுமந்து கோயிலுக்கு அழைத்துச்செல்கின்றனர்,” என்று செய்தியாக போட்ட போது, ஏன், எதற்கு என்று விவரங்களைப் போட்டிருக்க வேண்டும்[2]. ஆனால், போடாமல், “இந்த நிகழ்ச்சிக்கு, சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார். “ஆதீனகர்த்தரை பல்லக்கில் தூக்கிச்சென்றால் போராட்டம் நடத்தப்படும்என அறிவித்திருந்தார்,” என்று போட்டு, முன்னமே தெரிந்தது போல செய்தியைத் தொடர்ந்தது. அதன்படி திக மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பனந்தாள் கடைவீதியில் நேற்று திரண்டிருந்தனர். இவர்களுடன் நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டிருந்தனர்.

DK gave petition directly to Adhinam, dinamani, Feb.2020

12-02-2020 பட்டின பிரவேசம் பற்றி வீரமணிக்கு முன்னரே தெரிந்தது எவ்வாறு? 06-02-2020 அன்று வீரமணியின் கடிதம்[3]: வீரமணிக்கு “பட்டின பிரவேசம்” பற்றி முன்னரே தெரிந்திருந்ததால், 06-02-2020 அன்றே, விடுதலையில் கடிதம் ஒன்று பிரசுரம் ஆகிறது. “தருமபுர மடத்துக்குப் புதிய ஆதினகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர்நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட[4]மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் – ‘மனித உரி மையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. திராவிட சந்நிதானங்கள் மீது நமக்கு மதிப்புண்டு என்ற போதிலும் கூட, பல்லாண்டுகளுக்கு முன்பே இதே தருமபுர ஆதினத்தில் நடைமுறையில் இருந்த மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைத் தடுப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலையீட்டின் பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடைபெற்றுஅதற்குப்பின் அது நிறுத்தப்பட்டது. பிறகு திருவாவடு துறை ஆதினகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்திய போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப் பட்டது, பிறகு நிறுத்தப்பட்டு விட்டது. இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தருமபுர ஆதினகர்த்தர் அதனை புதுப்பிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச்சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு. இந்த நிலையில் தருமபுர ஆதினகர்த்தர் வரும் 12.2.2020 அன்று மேற்கொள்ள விருக்கும் மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நியாயமான இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.                                                       தலைவர், திராவிடர் கழகம், சென்னை, 6.2.2020.” ஆக, 12-02-2020 அன்று “பட்டின பிரவேசம்” இருப்பது இந்துவிரோதிக்ளுக்குத் தெரிந்திருக்கிறது, ஆனால், இந்து அமைப்புகளுக்குத் தெரியவில்லை.

DK Veeramani riding chariot

மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, 09-02-2020 அன்று மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகம் மனு[5]: தினமணி, “மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளா் கி. தளபதிராஜ், தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளை 09-02-2020, ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்,” என்று செய்தி வெளியிட்டுள்ளது[6]. பக்தர்களை காண நேரம் எடுத்துக் கொள்வது, காக்க வைப்பது, மறுப்பது என்று இருக்கும் நிலையில், அவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து, உள்ளே விட்டு, மனு பெற்று, போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார் எனும் போது, இவர் மீது தான் சந்தேகம் எழுகின்றது. வந்தவர்களிடம், ஆதீனம் தனது மரபு, பாரம்பரியம் முதலியவற்றை கூறி இருக்க வேண்டும். பல்லக்கில் போவது என்பது, அதிகாரத்தைக் காட்டுவதற்கு அல்ல, பாரம்பரியமாக நடந்து வரும் சடங்கு. ஏன் மலைக் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை “டோலி” மூலம் தூக்கிச் செல்வது தொழிலாகவே நடந்து வருகிறது.

EVR riding chariot

 பட்டினப்பிரவேசம்பாரம்பரியம் என்றால் ஆதீனம் தடுப்பவர்கள் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்: விகடன் தொடர்கிறது, “இந்நிலையில், நேற்று திருப்பனந்தாளில் உள்ள அருணஜடேஸ்வரர் கோயிலுக்கு ஆதீனகர்த்தர் வருகைதந்தார். கோயிலுக்கு அருகேயுள்ள விநாயகர் சந்நிதியில், காசி மடம் சார்பில் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயிலுக்கு அவரை பட்டினப்பிரவேசம் எனப்படும் பல்லக்கில் வைத்து சுமந்துசெல்ல தயார் நிலையில் இருந்தனர். அப்படியென்றால், ஆதீனம் தம்மை மிரட்டியது மற்றவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அப்போது, திராவிடர் கழகத்தின் போராட்டம் குறித்து ஆதீனகர்த்தருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். “இதில் எனக்கும் உடன்பாடில்லை” என்றுகூறி, பல்லக்கில் செல்வதைத் தவிர்த்துவிட்டு, கோயிலுக்கு நடந்தே சென்றார். அப்படி என்றால், ஆதீனம் மீதே சந்தேகம் எழுகின்றது. ஏனெனில், முதலில் அவர் தனது மற்றும் மடம் இவற்றி உரிமைகள் என்ன என்பதனை சட்டப் படி தெரிந்திருக்கவில்லை மற்றும் திராவிட அரசியலுக்கு ஒத்துப் போகிறார் என்று தெரிகிறது. இதனால் தான், ஆதீன நிலங்களை இதே நாத்திக மற்றும் இந்துவிரோத ஏன் இந்துக்கள் அல்லாதவர்களும் அபகரித்துக் கொண்டு, வாடகை-குத்தகை பாக்கி வைத்து, சொந்தம் கொண்டாடி, நீதிமன்றகளிலும் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

Karu riding chariot

ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லைஎன்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர்: இதற்கிடையே, திராவிடர் கழகத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கறுப்புக்கொடியுடன் கூடியிருந்தனர். அவர்களிடம் “ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர். அதாவது போலீஸார் சட்டப் படி நடவடிக்கை எடுக்காமல், தடுப்பவர்களுக்கு துணையாக இருந்தார்கள் என்றாகிறது, அதனால் போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்து ‘பெரியார் வாழ்க’ ‘அம்பேத்கர் வாழ்க’ ‘தருமபுர ஆதீனகர்த்தருக்கு நன்றி’ என்ற முழக்கங்கள் எழுப்பிவிட்டு கலைந்துசென்றனர். திராவிடர் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று பல்லக்கில் செல்வதைத் தவிர்த்த தருமபுர ஆதீனகர்த்தருக்கு பாராட்டையும் நன்றியையும் தி.க-வினர் தெரிவித்துள்ளனர். அதாவது, எந்த பொறுப்பையும் ஏற்க முடியாத ஆதினத்திற்கு, ஒரு நாத்திகனிடமிருந்து, இந்துவிரோத கும்பலிடமிருந்து சான்றிதழ் வேண்டும் என்று எதிர்பார்த்து மகிழ்வது, திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

15-02-2020.

DK Veeramani riding chariot, umbrella-blessing

[1] விகடன், மனிதனை மனிதன் சுமப்பதா?!’ –பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்த தருமபுர ஆதீனம், மு.இராகவன், பா.பிரசன்ன வெங்கடேஷ், Published:Yesterday at 6 PMUpdated:Yesterday at 6 PM

[2] https://www.vikatan.com/spiritual/gods/dharmapuram-adheenam-avoided-pallak-event-after-dk-opposition

[3] விடுதலை, தருமபுரம் ஆதினகர்த்தர் மேற்கொள்ளும் பட்டினப்பிரவேசம் நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல் மறியல், வியாழன், 06 பிப்ரவரி 2020 14:38

 https://www.viduthalai.in/headline/195202-2020-02-06-09-13-41.html

[4]  இது அப்பட்டமான பொய்யாகும். இவர்கள் செய்யும் கலாட்டாவினால் தான் பயந்து பக்தர்கள் செய்வதும், தடுப்பதுமான நிலை ஏற்பட்டுள்ளது. ஶ்ரீரங்கத்திலு,இப்பிரச்சினை உள்ளது. The Board of Trustees of Arulmighu Sree Ranganathar temple, at Srirrangam, Trichy, had passed a resolution No.107, on 27.09.2010, giving up the practice of carrying person in a Palanquin, in the temple premises. The said resolution has not been challenged, till date. Further, it is also noted that the Tamil Nadu Association of Temple Employees had also passed a resolution, on 23.10.2010, stating that they would not take part in the practice of carrying persons in Palanquins in the temple premises. ஶ்ரீரங்கம் கோவில் டிரஸ்டிகள் மற்றும் கோவில் ஊழியர் சங்கம் தீர்மானங்களை வைத்து நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ததே தவிர உண்மையில், அந்த பாரம்பரிய முறை மற்றும் உரிமை பற்றி அலசவில்லை. Madras High Court – Vedavyasa R.Lakshmi Narasimha vs The Commissioner on 19 October, 2010; BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT – DATED: 19/10/2010 – https://indiankanoon.org/doc/1594161/ பிறகு, மறுபரிசீலினை மனுவும் நிராகரிக்கப் பட்டுள்ளது – https://indiankanoon.org/doc/14854463/ – இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்டதா என்றும் தெரியவில்லை. 2015ல் நடந்துள்ளது.

[5] தினமணி, பட்டடினப் பிரவேசத்தை கைவிட தருமபுரம் ஆதீனத்திடம் திராவிடா் கழகம் வேண்டுகோள், By DIN | Published on : 10th February 2020 01:53 AM |

[6] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/feb/10/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-3353733.html

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)!

நவம்பர் 9, 2015

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)!

அண்ணா, பெரியார், கமல் - கற்பனைப் படம்

அண்ணா, பெரியார், கமல் – கற்பனைப் படம்

நடிகர் கமலகாசன் / கமல்ஹாசன் தனது 61-வது பிறந்தநாள் விழாவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் ரசிகர்களுடன் 07-11-2015 (சனிக்கிழமை) அன்று கொண்டாடினார். நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் நடத்தியவர்களுக்கு கேடயங்கள், பள்ளிக்கட்டிட நிதி போன்றவற்றை அவர் வழங்கினார். அப்பொழுது பல பிரச்சினைகளைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது. திராவிட கழகத்தின் மூலம் வெளிவரும் “விடுதலை”யில் வந்துள்ளவற்றை வைத்து, அதை மற்ற செய்திகளோடு ஒப்பிட்டு சேர்த்து, இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஏன் “விடுதலை” என்று கேட்கலாம். ஏனெனில், விடுதலையில், இவரைப் பற்றிய நாத்திக சிறப்பை எடுத்துக் காட்டிஆவரது ந்ண்பர்கள் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தீபாவளி வந்து விட்டாலே, கமல் ஹஸன் சொன்னது என்று “மயிலாடன்” என்ற பெயரில் கமலின் நாத்திக மேன்மையினை எடுத்துக் காட்டுவார்கள். அடுத்த “பெரியார்” அல்லதும் வாழும் “பெரியார்” போல சித்தரித்துக் காட்டுகிறார்கள். எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிதழ்களின் விவரம், அடிக்குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தலைப்புகள் (கீழேயுள்ள ஒவ்வொரு பத்திக்குக் கொடுக்கப்பட்டுள்ளது), அதிலுள்ளதையே தலைப்பாகக் கொண்டு, விடுபட்டவற்றை சேர்த்துக் கொண்டுள்ளேன். கமல் பேசியதை “இடாலிக் / சாய்வெழித்துகளில்” குறிப்பிடப்பட்டுள்ளது, எனது விமர்சனங்கள் சாதாரண எழுத்துகளில் உள்ளன.

Veeramani, Styaraj, Karunanidhi and Kamal

Veeramani, Styaraj, Karunanidhi and Kamal

சாமி சிலை பயன் தராது[1] (கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் உரிமைகள் மோதுகின்றன): “நாம் ஆண்டுதோறும் நற்பணிகள் செய்து வருகிறோம். அதனை நினைவூட்டும் விழாவாகவே இது நடத்தப்படுகிறது. இங்கு பரிசு பொருட்கள் எனக்கு தரப்பட்டன. விழா காலங்களில் நீங்கள் செய்யும் உதவிகள் எல்லாம் எனக்காக செய்யும் மரியாதைகள் அல்ல என்று நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு பரிசாக அளிக்கப்படும் தங்கமும், வைரமும் வேலைக்கு ஆகாது. நீங்கள் அன்போடு கொடுக்கிறீர்கள், வெள்ளியிலான சாமி சிலையும் தந்தார்கள். புத்தகம், மருந்துகள் பயன் படக்கூடியவை. சாமி சிலை பயன்தராது. பக்தியும் மேம்படாது. அதை உருக்கத்தான் வேண்டும். ஒவ்வொரு முறையும் சந்தேகத்துடன் பல கேள்விகள் என் மீது எழுப்பப்பட்டு இருக்கின்றன. என் படங்கள் வெளியாகும் போது, நீ நல்ல நடிகன் தானா என்று ஒவ்வொரு முறையும் எழுப்பப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அக்கேள்விக்கான பதிலாக துணிச்சலும், திறமையும் என்னிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கும் வரை நான் இந்த தொழிலில் நீடிப்பேன். வெள்ளிவிக்கிரகங்கள் கொடுப்பது பிடிக்காது எனும்போது, ஒன்று அவ்வாறு கொடுக்க வேண்டாம், காசாகக் கொடுங்கள் என்று கேட்கலாம் அல்லது கமலின் இந்துவிரோததன்மையினை அறிந்து, ரசிகர்கள் அவ்வாறு கொடுக்காமல் இருக்கலாம். இதிலும் உரிமைகள் மோதத்தான் செய்கின்றன.

Satyaraj, Veeramani, Karunanidhi and Kamal

Satyaraj, Veeramani, Karunanidhi and Kamal

அரசியலுக்கு வரமாட்டேன்: விழாவில் கமல் பேசுகையில், “ஐந்தாண்டுக்கு ஒருமுறை என்னை ஏன் அரசியலுக்கு வருகிறீர்களா என்று ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். நலத்திட்டங்கள் வழங்குவதால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்கிறார்கள்[2]. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன், கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டேன். அது வேறு ஒரு தளம். 5 ஆண்டுக்கு ஒருமுறை எமது விரலில் கறை படிவதே போதும். வேறு எந்த கறையும் வேண்டாம். என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும். கமலஹாசன் என்ற பேருந்தில் ஏறினால் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன். என்னுடன் இருப்பவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அரசியல் பற்றி புரியாதவர்களும் அல்ல. அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம். பகுத்தறிவு என்பது அரசியலால் எமக்கு கிடைக்கவில்லை”, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்[3]ஆனால், பகுத்தறிவுவதிகள் தாம், தமிழகத்தில் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

வீரமணி, கமல், ஸ்டாலின் புத்தக வெளியீடு

வீரமணி, கமல், ஸ்டாலின் புத்தக வெளியீடு

அரசியலைப் பற்றிய முரண்பாடான நிலை: தினமணி, “தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும், அதில் பங்கெடுப்பேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்”, என்று செய்தி வெள்ளியிட்டுள்ளது[4]. அக்டோபர் 30ம் தேதி, மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்[5]. அவருடானான இந்த திடீர் சந்திப்பு குறித்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘‘ராஜ் தாக்கரே என் நீண்ட நாள் நண்பர். நட்பு ரீதியாகவே அவரை சந்திக்க வந்தேன்’’ என கூறினார்[6]. இந்த சந்திப்பின் போது நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனும் உடன் இருந்தார். பாலிவுட்டில் உள்ளவர்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் சிவசேனா ஆதரவு, அணைப்பு, அனுசரிப்பு இல்லாமல் தொழில் நடத்தமுடியாது என்று எந்த சினிமாக்காரனுக்கும் தெரியும். கமல் ஹஸனுடனான மும்பை தொடர்பு அலாதியானது. சரிகாவுடன் இருந்து தான், இரண்டு பெண்களை பெற்றுக் 1986 –ஸ்ருதி மற்றும் 1991 – அக்ஷரா ஆண்டுகளில் கொண்டுள்ளார். சென்னைக்கு சரிகா வந்துள்ளார், ஆனால், சிம்ரன் தொடர்பினால் விவாகரத்து நடந்தது[7]. இப்பொழுது சோடாராஜன் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் இத்தகைய சந்திப்புகளின் பின்னணி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

Kamal pretending as a Hindu - frustrated on all accounts

Kamal pretending as a Hindu – frustrated on all accounts

விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?[8]: “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. திருப்பிக் கொடுத்திருந்தால், அவர் வக்கீல் தொழிலை செய்திருக்க முடியாது. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”.  முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது.

Kamal pretending as a Hindu - asking permission to shoot

Kamal pretending as a Hindu – asking permission to shoot

எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு: “எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு. ஆனாலும் ஒரு தாய் அன்பாக என் நெற்றியில் விபூதி பூசினால் அழிக்கமாட்டேன். அதுதான் என் பகுத்தறிவு. இந்த பகுத்தறிவு அரசியல் வாயிலாக வந்தது அல்ல. நல்ல மனதில் இருந்து வந்தது”. இதுவும் போலித்தனமாக இருக்கிறது. நாங்குனேரியில் விபூதி சகிதம் சென்றது ஏன் என்று யாரும் கேட்கவில்லை போலும். நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார்[9]. அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்[10]. அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்து, பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார். இதைப் பற்றி, முந்தைய பதிவில் அலசப்பட்டுள்ளது. ரசிகர்கள் தாம் இத்தகைய முரண்பாடுகள், இரட்டை வேடங்கள் அல்லது போலித்தனம் போன்றதைக் கண்டுகொள்ள வேண்டும்.

அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும்

அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும்

தெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. கமல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[11]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[12].  மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[13]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன்? என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்[14]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இதர ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும். அப்படியென்றால் குடிப்பவர்கள் குடித்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. பொதுவாக குடிக்காதே, உடலுக்குக் கேடு என்றுதான் அறிவுரை கூறுவார்கள். இவரோ கடவுள் இருக்காரா-இல்லையா என்ற உதாரணத்தைத் தவறாகக் குறிப்பிட்டு, நன்றாகக் குடியுங்கள் என்பது போல வாதிடுகிறார்.

© வேதபிரகாஷ்

09-11-2015

[1] விடுதலை, தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை கலைஞானி கமலகாசன் கருத்துரை, ஞாயிறு, 08 நவம்பர் 2015 15:06, பக்கம்.1.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, நான் அரசியலுக்கு கண்டிப்பாக வரமாட்டேன்நடிகர் கமலஹாசன் பரபரப்பு பேச்சு!, Posted by: Karthikeyan, Updated: Saturday, November 7, 2015, 20:58 [IST].

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-kamal-hasan-birthday-function-speech-239457.html

[4] தினமணி, தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும் பங்கெடுப்பேன்:கமல்ஹாசன், By சென்னை, First Published : 08 November 2015 03:29 AM IST.

[5] மாலைமலர், மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 31, 5:34 AM IST

[6] http://www.maalaimalar.com/2015/10/31053411/Kamal-Haasan-meets-Raj-Thacker.html

[7] Filmmaker and southern superstar Kamal Haasan has always had a tumultous time especially when it comes to his personal life. The actor had two failed marriages, both breaking due to the involvement of a second woman. Kamal Haasan’s first marriage was to actress Veena Ganapathy which broke apart when Haasan grew closer to actress Sarika. His marriage to Sarika failed when Haasan was alleged to be in a relationship with a relatively younger actress Simran. The divorce was pain staking and apparently ugly.

http://indianexpress.com/article/entertainment/entertainment-others/divorced-kamal-haasan-sarika-greet-each-other-warmly-at-shamitabh-music-launch/

[8] தினத்தந்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST

விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு

[9] http://cinema.dinamalar.com/tamil-news/21599/cinema/Kollywood/Kamal-meets-godman-with-spiritual-get-up.htm

[10] மாலைமலர், ஆன்மீகத்துக்கு மாறினாரா கமல்?: நெற்றியில் விபூதி பூசினார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 03, 12:59 PM IST.

[11] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.

[12]  மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.

[13] http://www.maalaimalar.com/2015/11/08024247/Kamal-Hassan-speech-My-toleran.html

[14] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7855849.ece