Archive for the ‘ஜாதி’ Category

“நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” புத்தகம் சரித்திரமா, இடதுசாரி திரிபுவாதமா, தேர்தல் நேர துவேசமா, மோடி எதிப்பு மட்டும் தானா? [1]

மார்ச் 23, 2019

நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” புத்தகம் சரித்திரமா, இடதுசாரி திரிபுவாதமா, தேர்தல் நேர துவேசமா, மோடி எதிப்பு மட்டும் தானா? [1]

Nadar -book wrapper-back on 22-03-2019

நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” – புத்தக வெளியீடு (08-03-2019): 06-o3-2019 அன்று காஞ்சிபுரத்தில், மோடி என்.டி.ஏ தேர்தல் கூட்டத்தை ஆரம்பித்த அதே நாளில், அதிமுக அரசு “நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” [‘Is Nadars’ history black or saffron?’] என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை மதுரையில் உள்ள உலகத் தமிழ் சங்கம் கட்டிடத்தில் நடத்த அனுமதி மறுத்தது என்ற பீடிகையுடன், TheMewsMinute பீடிகையுடன் விசயத்தை ஆரம்பித்தது[1]. வைகை லா பர்ம் [Vaigai Law Firm] என்ற கம்பெனி[2] நடத்தி வரும், லஜபதி ராய் அப்புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், அப்புத்தகம் ஜாதி மற்றும் மதம் சம்பந்தப் பட்டதாகவும், நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறவர்கள் அரசுக்கு எதிரான கருத்துகளை சொல்பவர்களாகவும் இருப்பதால், அனுமதி மறுக்கப் படுகிறது என்று 06-03-2019 அன்று தெரிவித்தது[3]. மற்றபடி, “ஏ.ஆர்.மெய்யம்மை” என்பவர் எழுதிய அந்த செய்தி தொகுப்பு, இடதுசாரி மற்றும் திக-கம்யூனிஸ சித்தாந்திகளுக்கு வக்காலத்து வாங்கும் போக்கில் இருந்தது[4].  பிறகு நீதிமன்றம் அனுமதி அளித்ததால் அந்நிகழ்ச்சி நடைபெற்றது என்ற செய்தி வந்தது[5]. அப்புத்தகத்தை இலக்கிய கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும், தேவையானால், மாற்றுக் கருத்தை அதே போல வெளியிடலாம் என்று நீதிபதி தெரிவித்தாராம்!

Madras High Court judment 7-3-2019

I may end on this note. Whether the past is black or saffron, let the future be rosy.:  நீதிபதி வி.ஆர். சுவாமிநாதன் சொன்னது, “However, a division bench of justice granted permission citing that the book is an addition to the Tamil literature irrespective of its contents” – அப்புத்தகத்தில் என்ன இருந்தாலும், அது தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சேர்ப்பாக இருக்கும் என்று எடுத்துக் காட்டி அனுமதி கொடுத்தார் நீதிபதி[6].இத்தகைய புத்தகங்களை எல்லாம் இலக்கியத்தில் சேர்த்தால் இலக்கியத்தின் கதி என்னவாகும் என்று கவனிக்க வேண்டும். தீர்ப்பைப் படித்தால், கருத்துரிமை மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மற்ற இயக்கங்கள் உபயோகம் பற்றி அலசியுள்ளது தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசு பள்ளிகளில் சாகா செயல்படுவதை தடுக்க முடியாது என்ற தீர்ப்பின் ஆதாரமாக, இவர்களுக்கும், அந்த அரசு அரங்கத்தில் இடம் மறுக்கக் கூடாது என்பதனை எடுத்துக் காட்டியுள்ளார்[7]. முடிவாக அவர் பதிவு செய்தது[8], “I may end on this note. Whether the past is black or saffron, let the future be rosy.” “கடந்த காலம் கருப்பாக இருக்கட்டும், அல்லது காவியாக இருக்கட்டும், ரோஜாவைப் போன்று [நன்றாக, சிறப்பாக, மென்மையாக] இருக்கட்டும்.” இதை இந்த கம்யூனிஸ கூட்டத்தில் உருவர் கூட எடுத்துக் காட்டவில்லை, மாறாக, அந்த நீதிபதி ஒரு பிராமணர் என்று எடுத்துக் காட்டியது திகைப்பாக இருக்கிறது. கம்யூனிஸ-மோடி-எதிர்ப்புக் கூட்டத்தினரில் வழக்கறிஞர் பலர் இருந்தலும், நீதிபதி குறிப்பிட்ட அந்த கடைசி வரி ஏன் நினைவுக்கு வரவில்லை என்பது விசித்திரமாக உள்ளது.

Madras High Court judment 7-3-2019 last line

விழாவிற்கு அனுமதி, மறுப்பு மறுபடியும் அனுமதி  – பின்னணி என்ன?: “நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” என்ற நூலை எழுதி நீதிமன்றப் வழக்கிற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய், என்று ஊடகங்கள் கூறியுள்ளன. ஒருவேளை புத்தக விளம்பரத்திற்காக இவர்களே செய்திருக்கலாம் என்று கூட சொல்லலாம். ஏனெனில், விழாவில் பலர் பெயர்களைப் போட்டு, யேஷ்யங்களைக் கிளப்பி விட்டு, பிறகு, அதில் குறிப்பிட்டவர்கள் வராமல் இருப்பது இன்றைய போக்கு. மெய்யம்மையும் இதனை அபாரமாக எடுத்துக் காட்டியுள்ளார்[9]. மார்ச்-08, 2019 வெள்ளிக்கிழமையன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பூங்கோதை ஆலடி அருணா, சம்பத் சீனிவாசன், ச.ராஜசேகர், சுப.உதயகுமார், இயக்குனர் அமீர், கா.பிரபு ராஜதுரை, அ.மார்க்ஸ், கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர். இதில் நூலினை பெற்றுக்கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை “நான் சாதியை ஆதரிப்பவள் இல்லை” என்று கூறி நாடர்கள் பற்றிய சிறு வரலாற்று சுருக்கத்தை பகிர்ந்தார்.G R Viswanathan, Judge

நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா?” – தீக்கதிர் கொடுக்கும் விளக்கம்[10]: இதே தினம் 14.05.1897 அன்று இருளப்ப நாடார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாடார் சமூகத்தினர் கமுதி மீனாட்சி அம்மன் கோவிலில் தீப்பந்தம் ஏந்தி, பால்குடம் தலையில் சுமந்து மேள தாள ஆரவாரத்துடன் சிலை வழிபாடு செய்த பிறகு அன்றைய கோவில் நிர்வாகி பாஸ்கர சேதுபதியால், நாடார்களின் கோவில் நுழைவு கோவில் சிலையை தீட்டுப்படுத்தியதாக மதுரை சார்பு நீதிமன்றத்தில் வழக்கிடப்பட்டு நீதிமன்றம் இந்து மத சாஸ்திரங்களை அலசி ஆராய்ந்து நாடார்கள் கோவிலுக்குள் நுழைந்ததை கண்டித்து ஐநூறு ரூபாய் அபராதம் விதித்தது. உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் ஒத்திசைவுக்கு சம்மதித்த சேதுபதி தரப்பு முப்பத்தி ஐந்தாயிரம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அனுமதிக்க இசைந்து முன்பணமாக ஐந்தாயிரம் பெற்றுக்கொண்ட பிறகு அவரது மகனின் பாதுகாவலராக மனைவியைக்கொண்டு ஒத்திசைவுக்கு எதிராக வாதிட்டது. அன்றைய தேதிகளில் தங்கத்தின் விலை ஒரு பவுன் 18 ரூபாய் என்பது நினைவு கூரத்தக்கது. மெட்றாஸ் உயர் நீதிமன்றமும் இந்து சாஸ்திரங்களின் துணையுடன் நாடார்களின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. கிட்டத்தட்ட அதே காலத்தில்(1890) பாஸ்கர சேதுபதி இந்து மதத்தின் மேன்மையை மேலை நாடுகளில் பரப்ப, விவேகானந்தருக்கு பண உதவி செய்து அவர்அமெரிக்க சிகாகோ மாநாட்டில் சகோதரர்களே ! சகோதரிகளே !! என முழக்கமிட்டு கைத்தட்டல் பெற்ற போது அவரது உள்ளூர் சகோதர சகோதரிகள் கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டு தங்களை உள்ளே அனுமதிக்க சனாதன இந்து தர்மவான்களை கெஞ்சிக்கொண்டிருந்தனர்[11].

வேதபிரகாஷ்

23-03-2019

Nadar book release function 8-3-2019

[1] TheMewsMinute, Launch of book on Nadar history gives TN govt jitters? Permission for event denied, AR Meyyammai, Thursday, March 07, 2019 – 10:38.

[2] Vaigai Law Firm , Address: 593, Kurivikaran Road, KK Nagar, Madurai- 625001, Landmark: Near Wakf Board College, Phone: (0452) 4391785, Mobile: 9843251788.

[3] In a letter addressed to Vaigai Law Firm run by Lajapathi Roy, the World Tamil Sangam Director Dr P Chandra said, “With reference to Roy’s communication on February 18, 2019, permission was sought only for a function regarding the release of a book on Nadars’ history. But based on the subsequent letter dated March 6, 2019, we hereby inform that permission for the event is denied as those who hold contrary views on the government are participating as chief guests and also because it appears to be a caste and religious-oriented function.”

 https://www.thenewsminute.com/article/book-nadar-history-gives-tn-govt-jitters-permission-launch-event-denied-97883

[4] AR Meyyammai is a journalist with two decades of experience, has worked for The Hindu, The New Indian Express and Deccan Chronicle, என்று அடியில் விவரத்தைக் கொடுத்தது – திநியூஸ்மினியூட்.

[5] The Times of India, Book on nadars released at World Tamil Sangam after court nod, TNN, March 9, 2019, 04:00 IST.

[6]https://timesofindia.indiatimes.com/city/madurai/book-on-nadars-released-at-world-tamil-sangam-after-court-nod/articleshow/68327107.cms

[7] BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT, DATED: 07.03.2019, CORAM:  THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN, WP (MD) Nos.5392 & 5477 of 2019 and WMP (MD) Nos.4284 & 4358 & 4359 of 2019

 T.Lajapathi Roy                          … Petitioner in both cases

                                                         Vs.

1.The District Collector,

O/o. District Collectorate,

Madurai.

2.The World Tamil Sangam,

Rep.by its Assistant Director,

Dr.Thangaraj Salai,

Madurai – 625 020.

3.The World Tamil Sangam,

Rep.by its Director (Incharge),

Dr.Thangaraj Salai,

Nearby Government Law College,

Madurai – 625 020. …

… Respondents in WP(MD)No.5392 of 2019

 

Respondentin WP(MD)No.5477 of 2019

 

[8] https://indiankanoon.org/doc/77832643/

[9] TheMewsMinute, Launch of book on Nadar history gives TN govt jitters? Permission for event denied, AR Meyyammai, Thursday, March 07, 2019 – 10:38.

https://www.thenewsminute.com/article/book-nadar-history-gives-tn-govt-jitters-permission-launch-event-denied-97883

[10] தீக்கதிர், நாடார்களின் வரலாறு கறுப்பா ? காவியா ??, [Lajapathy Roy, Kalai Arasu முகநூல் பதிவிலிருந்து.. ] kannan, POSTED ON MAY 14, 2018, 3:03 PM.

[11]https://theekkathir.in/2018/05/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/

பொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா-எதிர்ப்பா?

ஜனவரி 24, 2017

பொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியனசுனாசானா ஆதரவாஎதிர்ப்பா?

porukki-twitter-swamy-used-frequently

நான் பொறுக்கி தான்: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின[1]. பொதுவாக சாமி ஆங்கிலத்தில் ஸ்லாங் போன்ற விதத்தில் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது உண்டு. அதனை புரிந்து கொள்வது கண்டனம். அவ்விதத்தில் “பொறுக்கி” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. இதைப்பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன் தாக்கம் மற்றவர்களிடையே ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சுப. வீரபாண்டியன், “பொறுக்கி சாமி” என்றார். மெரினாவில் ஒரு பெண் அவரை கிண்டலடித்து பேசிய வீடியோவும் சுற்றில் உள்ளது. அந்நிலையில், அமல் ஹஸன், “யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[2]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்,” என்று பேசியதை, சினி உலகம் என்ற தளம் கமல்ஹாசன் பேசியதை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது. எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அதற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்[3] என்றெல்லாம் விளக்கியது.

porukki-reality-at-marina-kamal-and-swamy

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் கமல்ஹாசன் பேசியது: இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ‘‘இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம்[4]. இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளிப்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது[5].

 porukki-twitter-subavira-pandian-and-swamy

என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம், கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்:நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[6]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்[7]. திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம்[8]. இது தன்மானம். அரசியல் இல்லை[9]. குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம்[10]. கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்[11]. அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’  இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

aloor-sha-nawas-questioning-swamy-for-his-remarks

ஜல்லிகட்டும், கமல் ஹஸனும்: கமல் ஹஸனும் எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதால், விரக்தியினால் கோபம் அதிகமாகியுள்ளது தெரிகிறது. போதாகுறைக்கு, கௌதமியும் தனியாக சென்று விட்டார். அடங்காப்பிடாரி மகள்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றே தெரிகிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிலையில், ஆரம்பித்திலிருந்தே தோல்விடைந்த மனிதராகத்தான் இருந்தார். நல்ல நடிகன் என்ற நிலைமை எல்லாவற்றிற்கும் எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. வியாபாரம் என்றால் லாபம் வர வேண்டும், அப்பொழுது தான், ஷோவைத் தொடர்ந்து நடத்த முடியும். பணம் இல்லாததால், பொத்தீஸ் போன்ற விளம்பரங்களில் நடித்ததும் தெரிய வந்தது. எது எப்படியாகிலும், வெள்ளநிவாரண தொகையிலும் சர்ச்சை ஏற்பட்டது. இவரது நாத்திகம், இவரை மக்களிடத்திலிருந்து பிரித்து வைக்கின்றது என்பது தெரிந்த விசயாமாக இருக்கிறது. ஏனெனில், 23-01-2017 அன்று, ஜல்லிக்கட்டு கடவுள் சம்பதப்பட்ட அடங்காக உள்ளதே என்று என்.டி.டி.வி வி நிருபர் கேட்டதற்கு, இவர் சரியாக பதில் சொல்லாமல், மழுப்பியது. அந்த நிருபருக்கே தமாஷாக இருந்தது.

© வேதபிரகாஷ்

24-01-2017

jallikattu-would-held-this-year-samy

[1] சினி-உலகம், நான் டெல்லி பொறுக்கி இல்லைகமல்ஹாசன் பதிலடி, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017..

[2] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.

[3] http://www.cineulagam.com/actors/06/135686

[4] தினமணி, நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி, By DIN,  Published on : 23rd January 2017 10:36 AM

[5] http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jan/23/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-2636435.html

[6] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.

[7] http://www.dailythanthi.com/News/CinemaNews/2017/01/23012840/I-porukkitan-Tamil-Delhi-will-not-tolerate–Actor.vpf

[8] தினமலர், நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017.. 13.47. IST.

[9] http://cinema.dinamalar.com/tamil-news/55426/cinema/Kollywood/Yes-I-am-Tamil-Porukki-kamal-slams-Subramaniya-Swamy.htm

[10] தமிழ்.இந்து, ஆம், நான் தமிழ் பொறுக்கிதான்: கமல்ஹாசன், Published: January 22, 2017 17:29 ISTUpdated: January 22, 2017 18:45 IST

[11] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article9496139.ece

கோவில்களில் ஆபாச-அசிங்க நடனங்கள் நடப்பதற்கு யார் காரணம்? இரட்டை உடை நடனத்தை ஆடுவது, ஆட்டுவிப்பது, அத்தகையோரைக் கூட்டி வருவது யார்-யார்?

நவம்பர் 26, 2016

கோவில்களில் ஆபாச-அசிங்க நடனங்கள் நடப்பதற்கு யார் காரணம்? இரட்டை உடை நடனத்தை ஆடுவது, ஆட்டுவிப்பது, அத்தகையோரைக் கூட்டி வருவது யார்-யார்?

obscene-and-vulgar-dances-at-temples-denied-permission

சட்டஒழுங்கு பிரச்சினை தொடர்பான சம்பவங்கள் குறித்து தகுந்த முடிவு எடுக்கும் பொறுப்பு போலீசிடம் ஒப்படைப்பு[1]: “பிரவீன் பாய் தொக்காடியா மற்றும் கர்நாடகா மாநில அரசு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 2004-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், ‘சட்டஒழுங்கு பிரச்சினை தொடர்பான சம்பவங்கள் குறித்து தகுந்த முடிவு எடுக்கும் பொறுப்பை போலீசாரிடம் ஒப்படைத்து விட வேண்டும்என்று தெளிவாக கூறியுள்ளது. இதன்படி, மனுதாரர்கள் தங்களது ஊரில் உள்ள கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்க எந்த அடிப்படை உரிமைகளும் இல்லை என்று முடிவு செய்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக் கேட்டு தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன்”. இவ்வாறு, கோவில் திருவிழாவின் போது ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்[2].

obscene-and-vulgar-dances-at-temples-ramanathapuram-tv-18நீதிபதியை ஏமாற்றிய வக்கீலும், கோவில்களை கொள்ளையடிக்கும் திராவிட கூட்டமும்: நீதிபதியில் உத்தரவில் பல விசயங்கள் வெளியாகியுள்ளன. வரம்பு மீறிய திருவிழா அமைக்கும் கூட்டத்தினருக்கு ஆஜரான வக்கீல், நிதிபதியையே நம்பும்படி, ஏமாற்றியுள்ளார். இதனால், அவரும், நம்பி முன்பு அனுமதி கொடுத்துள்ளார். அதை அறிந்ததால் தான், இப்பொழுது, வருத்தம் தெரிவித்துள்ளார்[3]. “மனுதாரர்கள் தங்களது ஊரில் உள்ள கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்க எந்த அடிப்படை உரிமைகளும் இல்லை என்று முடிவு செய்கிறேன்,” என்றபோது, அவர்களது உண்மை உருவத்தைத் தோலுரித்திக் காட்டியுள்ளார்[4]. அவ்வாறு உரிமைகள் இல்லாதவர்கள் கோவில்களை நிர்வகிப்பதால் தான், கோவில்கள் சீரழிந்து வருகின்றன, சிலைகள் களவாடப்பட்டு வருகின்றன, சொத்துகள் கொள்ளை போகின்றான. போதாகுறைக்கு, முஸ்லிம்கள், கிருத்துவர்கள் எல்லாம் கோவில் சொத்துகளை வாங்கியுள்ளனர். இன்றும் அனுபவித்து வாடகையை லட்சக்கணக்கில், கொடுக்காமல் ஏய்த்து வருகின்றனர். இதற்கெல்லாம் துணைபோவது, நாத்திக-இந்து-விரோத திராவிட ஆட்சியாளர்களும், அரசு நிர்வாகிகளும் தான் காரணம். “இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக் கேட்டு தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன்,” என்று தள்ளுபடி செய்துள்ளார். இனி, மேல் முறையீடு செய்வார்களா என்று பார்க்க வேண்டும்.

omalur-chemmandippatti-mariamman-koil-nude-dance-june-2016ஜூலை 2013ல் நடந்த ஆபாச நடனம், கைது: உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது. அரூரை அடுத்த முத்தானூரில் கோவில் விழாவில் ஆபாச நடனம் ஆடியதாக 2 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். அரூர் வட்டம், முத்தானூரில் மாரியம்மன் கோவில் திருவிழா ஜூன் 26 ஆம் தேதி 2013 நடைபெற்றது. இந்த விழாவில் நடன நிகழ்ச்சி நடத்த கிராம மக்கள் காவல்துறையில் அனுமதி கேட்டனர். ஆனால் காவல்துறையிலனர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் விழா குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதிப்பெற்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை காவல்துறையினர் வீடியோ படம் பிடித்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு வீடியோவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், நடன நிகழ்ச்சியில் ஆபசமாகவும், பெண்களை கேலியாக சித்தரிக்கும் வகையிலும் இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக, நடனக்குழு மேலாளர் சுபாஷ் (32), முத்தானூர் கிராமத் தலைவர் அம்மாசி (எ) திருப்பதி (49) ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்[5]. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முத்தானூர் ஊர்க்கவுண்டர் ராஜேந்திரன், கோயில் தர்மகர்த்தா சக்கரவர்த்தி, பொங்களூர் மல்லிக்கரையைச் சேர்ந்த ராஜி மனைவி அமிர்தா, சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி அழகுஜோதி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்[6].

obscene-and-vulgar-dances-at-dravidian-partiesகோவில் திருவிழா பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் முதலிய காரணிகளை மீறுவது ஏன்?: விகடனில், எஸ். அசோக் என்பவர், செக்யூலரிஸம் மற்றும் இந்துமத ஆதரவு தோரணையில் எழுதியுள்ள ஒரு கட்டுரை, தமிழகத்தின் கோவில்களில் நடக்கும் போக்கை அறியமுடிவதால், அலசலுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவர் கொடுத்துள்ளவற்றை இடது பக்கம் மற்றும் எனது கருத்தை வலது பக்கம் என்று கொடுக்கப்பட்டுள்ளன:

கோவில் திருவிழா என்றாலே ஆபாசப் பாடலும், அடிதடி பிரச்னையும், போலீஸ் தடியடியும் நவீன திருவிழாக்களின் அடையாளமாக மாறி வருகிறது. போலிச் சாமியார், காமச் சாமியார், ஆபாச அர்ச்சகர், ஊழல் கோவில் நிர்வாகம், கோவில் வருமானத்தை மட்டுமே பார்க்கும் அரசாங்கம் என்பதையெல்லாம் தாண்டி கடவுள் அருள் நமக்கு கிடைக்க கோவிலுக்கு சென்றால் அங்கே ‘டங்கா மாரி’ பாடலுக்கும் சாமி வந்து ஆடும் அளவிற்கு பாடல் ஒலிபரப்பபடுகிறது. முதலில், அத்தகையவை எவ்வாறு, எப்பொழுதிலிருந்து நடக்க ஆரம்பித்தன, யாரால், எவ்விதமாக ஊக்குவிக்கப்பட்டன, இப்பொழுதும் அவற்றை நடத்துவது யார் போன்ற கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்லியாகி வேண்டும். போலி என்று எதுவும் திடீரென்று உருவாகிவிட முடியாது. அந்த போலிகளின் உபயோகம் யாருக்கு லாபத்தைக் கொடுக்கிறது என்பதனையுமாராய வேண்டும்.

obscene-and-vulgar-dances-at-dravidian-parties-admkகோவில் திருவிழாவா? இல்லை, ஆபாச நடனகுடிகாரர்களின் போதைவிழாவா: கோவில் திருவிழாவா? இல்லை, குடிகாரர்களின் போதைவிழாவா எனச் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு நிலைமை உள்ளது.

இன்றைக்குள்ள சூழலில் நாகரீகமான குடும்பத்தினர் கோவில் திருவிழா, முக்கியமான கோவில் நிகழ்ச்சி என்றாலே பயந்து வீட்டில் முடங்கும் நிலை உள்ளது. ஆதி சங்கரர், ஜீயர், மோட்சம் அடைந்த காஞ்சி பெரியவர் போன்றோரால் வளர்க்கப்பட்ட புனிதமான கோவில் சடங்குகள் இன்று சங்கடங்களாக மாறி விட்டது. மதத்தலைவர்களை இழிவு படுத்தும் நிலையில், தமிழக பௌத்தறிவுவாதிகள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் போது, அவர்களின் சீடர்கள் பயங்ரமாகத் தாக்கப்பட்டு வரும் போது, பக்தர்களும் வீடுகளில் முடங்கித் தான் கிடக்கின்றனர். நடைபெற வேண்டிய சடங்குகள், கிரியைகள், விழாக்கள் எல்லாம் இவர்களால் தடுக்கப்பட்டுள்ளன.

obscene-and-vulgar-dances-at-temples-madurai-dinakaranகோவிலுக்காக மாண்ட மனிதர்கள் பிறந்த பூமி இது: அன்னியப்படை எடுப்பின் போது கோவிலுக்காக மாண்ட மனிதர்கள் பிறந்த பூமி இது. சரண் அடைந்து தூக்கு கயிறை ஏற்க வேண்டும் என்று சொன்ன ஆங்கிலேயருக்கு சவலாக விளங்கிய மருது சகோதரர்கள், காளையர் கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவிலை பீரங்கி வைத்து தகர்ப்போம் என்று ஆங்கிலேயர் மிரட்டியவுடன் உயிரைக்கொடுத்தாவது கோவிலை காக்க வேண்டும் என்று உயிர் துறந்து கோவிலை மீட்ட மருது சகோதரர்கள் வாழ்ந்த மண்ணா இது என சந்தேகம் கொள்ள வைக்கிறது.

இங்கிருந்து பல ஆயிரம் செலவழித்து கேரளாவில் உள்ள குருவாயூரப்பனை சட்டை இல்லாமல் பக்தியுடன் வணங்கும் தமிழன், திருப்பதியில் விரதமிருந்து பெருமாளை சேவிக்கும் நம்மவர்கள் இங்கு மட்டும் ஆட்டம் போடுவது ஏன்? முன்பெல்லாம் கோவில் விழாக்களில் ராமாயண சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம், பட்டிமன்றம் என ஆன்மிகத்தோடு இணைந்த நிகழ்ச்சிகள் நடக்கும். தற்போது ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக சினிமாவை ஒட்டிய கலை நிகழ்சிகள் நடத்துகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் குத்துப்பாட்டை பார்த்தால் நம் தெய்வ வழிபாட்டின் புனிதத்தை எப்படி புரிந்துகொள்வார்கள்? கோவிலை பீரங்கி வைத்து தகர்ப்போம் என்று, ஆங்கிலேயர் போல, இன்றும் சொல்லி மிரட்டியது அறிஞர் அண்ணாதுரை அவர்கள் தானே? ராமாயண சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம், …..முதலியவை ஒழிக்கத்தான் “பட்டிமன்றம்” வந்தது. பிற்கு, இந்த ஆபாச-அசிங்க “இரட்டை உடை” நடனம் வந்தது. கேரளா-ஆந்திரா சென்று வந்தவர்களுக்கு, இதெல்லாம் தெரியாமல் போனது ஏன்? “ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக சினிமாவை ஒட்டிய கலை நிகழ்சிகள் நடத்து”, என்று எந்த அப்பன், பெருமாள் சொன்னார்? இங்கிருக்கும் பெரியார், அறிஞர், கலைஞர், பேராசிரியர், மூதறிஞர், கவிக்கோ, பெருங்கவிக்கோ, ……முதலிய இத்யாதிகள் ஏன் கவலைப்படவில்லை?

© வேதபிரகாஷ்

26-11-2016

Karu-as-nataraja

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கருணா!

[1] தினத்தந்தி, ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடனத்தை அனுமதிக்க முடியாது ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு,  பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 26,2016, 1:32 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 26,2016, 3:45 AM IST.

http://www.dailythanthi.com/News/State/2016/11/26013226/High-Court-judge-orders.vpf

[2] http://www.dailythanthi.com/News/State/2016/11/26013226/High-Court-judge-orders.vpf

[3] The Hindu, Court declines permission for ‘dance programmes’ at temple, STAFF REPORTER,CHENNAI: NOVEMBER 26, 2016 00:26 IST UPDATED: NOVEMBER 26, 2016 00:26 IST.UPDATED: NOVEMBER 26, 2016 00:26 IST

[4] http://www.thehindu.com/news/national/tamil-nadu/Court-declines-permission-for-%E2%80%98dance-programmes%E2%80%99-at-temple/article16702780.ece

[5] வெப்துனியா, கோவில் திருவிழாவில் ஆபாச நடனம், சனி, 26 நவம்பர் 2016

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-113070100033_1.htm

ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை!

மே 26, 2016

ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை!

Vallalar Manram, Neur Agraharam

வழக்கம் போல இந்த ஆண்டும் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனைக்குப் புறப்பட்டோம். வல்லளார் மன்றத்தில் தங்கினோம். நெரூர் அக்ரரஹார வீதியில் மாற்றம் எதுவும் இல்லை. நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் சபாவுக்கு செல்லும் வழியில் சிலதூரத்திற்கு கான்கிரீட் சாலை அமைத்துள்ளனர். திருமதி ஈஸ்வரி சங்கர், ஒன்றிய கவுன்சிலர் என்று கான்கிரீட் அறிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மண்தெரு இருந்ததால், நான்கு வரிசைகளில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட வசதியாக இருந்தது.  நடுவில் காவிரி ஆற்று நீர் ஓடுகிறது, இரு பக்கமும் மண் தெரு, பழைய ஓடு வீடுகள். சில வீடுகள் கூரை விழுந்து, இடிபாடுகளுடன் கிடக்கின்றன. 15-05-2016 அன்று அங்கடைந்தபோது, தெரு இப்படித்தான் இருந்தது. வழக்கம் போல இருக்கும் கூட்டம் இல்லை. வீதி காலியாக இருந்தது. அடுத்த நாள் (16-05-2016) தேர்தல் என்ற காரணம் இருந்தாலும், வழக்கம் போல அங்கபிரத்க்ஷ்ணம் நடக்காது என்பதால் கூட்டம் குறைந்து விட்டது என்று தெரிகிறது.

Sadasiva Brimendrar 102 Aradhana Nerur

ரஜினி வந்து விட்டுப் போன சித்தர் கோவில்: கரூர் அருகே நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனையின் போது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்தர் சமாதி, ரஜினி முதலியோர் வந்து போகின்றனர் என்ற செய்திகளால் பிரபலமாகி வருகின்றது[1]. சினிமாகாரர்கள் வந்து போகிறார்கள் என்றால் பக்தி கூடுகிறதா, பக்தர்கள் கூடுகிறார்களா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்களும் நெரூர் கோவிலுக்கு வருகின்றனர். மற்ற நேரங்களில் இவ்வூருக்கு வர்பவர்கள் யாரும் இல்லை எனலாம். அதனால், இவ்விழா நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவ்வூர் மக்கள் ஆர்பாட்டம் செய்வதுண்டு. நூறு ஆண்டுகளாக இவ்விழா நடந்து கொண்டிருக்கும் போது, ஏன் வருடாவருடம், இதில்லை-அதில்லை என்று உள்ளூர் மக்கள் புகார் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

Nerur Ahrahara street, where Sadasiva Trust is there, concrete road has been laid.

ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனையின் போது கோவிலுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்: அவ்வாறு ஒவ்வொரு வருடமும், ஏதாவது கோரிக்கை வைத்து புகார் கொடுப்பர். 2016லும் அதேபோன்ற புகார்களை வைத்தனர். நெரூர் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாலும், குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து தண்ணீர் தேங்கி நிற்பதாலும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது[2]. டூவீலர்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், குண்டும், குழியுமான சாலையில் செல்லும் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, நெரூரில் சதாசிவம் பிரமேந்திரர் கோவிலுக்கு செல்லும் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று தினமலர் செய்தி வெளியிட்டது[3]. நெரூர் சதாசிவ கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்[4]. சுகாதார வளாகம் இல்லாமல் இருப்பதால், திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிட வசதி, இருக்கை வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றெல்லாம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன[5]. ஆனால், 101 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த அங்கப் பிரதிக்ஷணம் நின்று விட்டதால், இவ்வருடம் கூட்டம் வரவில்லை என்பதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

Nerur Ahrahara street, where Sadasiva Trust is there

நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம்: நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம் 16-05-2016 அன்று நடைபெற்றது[6]. கரூர் அருகே உள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் 102வது ஆராதனை விழா கடந்த 11ம்தேதி துவங்கியது. வைசாக சுத்த பஞ்சமி சங்கரஜெயந்தி அன்று உற்சவம் ஆரம்பித்து தினமும் பாகவத கோஷ்டியுடன் உஞ்சவிருத்தி, கிராம பிரதட்சணம், மஹன்யாசபூர்வ அபிஷேகம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் நடைபெற்றது[7].  வழக்கம் போல, அலங்கரிக்கப்பட்ட சதாசிவ பிரமேந்திராளின் உருவப் படத்தினை மடத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இசை கச்சேரியை ரசித்ததுடன், சதாசிவ பிரமேந்திராளின் அருளும், ஆசியும் பெற்றனர்[8]. 16-05-2016 அன்று (திங்கள்) வைசாக சுத்த தசமி தினத்தில் பிரம்மேந்திரசரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்சவம் நடைபெற்றது. லட்சார்ச்சனை பூர்த்தியும், ஸந்தர்ப்பனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  விழா ஏற்பாடுகளை நெருர் சதாசிவபிரம்மேந்திர சபா, நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சேவா டிரஸ்ட், நிர்வாக அங்கத்தினர் பக்தர்கள் செய்திருந்தனர். 25-05-2016, புதன்கிழமை அன்று நிகழ்ச்சிகள் முழுமை அடைந்தன[9].

IMG_20160515_125905397

102வது ஆராதனையின் போது அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை: 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அங்கபிரதிக்சணம் இவ்வருடம் நடைபெறவில்லை. சென்ற வருடம் தடை விதித்தது என்றால், ஒரு வருட காலமாக, நெரூர் சதாசிவ பிரும்மேந்திரர் சபை மற்றும் இதை ஆதரிக்கும் பல பிரபலங்கள், பக்தர்கள், சித்தர்-விரும்பிகள் மற்றும் அவரை ஆராதித்தித்தால் பலன் அடைந்தவர்கள் ஏன் மௌனமாக இருந்தார்கள் என்று தெரியவில்லை.  பல நீதிபதிகள், வக்கீல்கள் எல்லோருமே வந்து சென்றுள்ளனர். பிறகு, அவர்களுக்குக் கூட ஒன்றும் தோன்றவில்லையா என்று புரியவில்லை. இதுவிசயமாக 15-05-2016 அன்று ஹனுமந்தராவ் என்பவருடன் பேசி, விசாரித்தபோது, வழக்கைப் பற்றிய விவரங்கள், திருச்சியில் உள்ள வக்கீலுக்குத் தான் தெரியும் என்றும், இவ்வருடம் அங்கப்பிரதிக்சணம் நடைபெறாது என்றும் தெரிவித்தார். 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அங்கபிரதிக்சணம் நிறுத்தப்பட்டால், அதை ஏற்கக்கூடிய மக்களின் நம்பிக்கைப் புண்படாதா, அவர்களது உரிமைகள் பாதிக்கப்படாதா என்பதெல்லாம் ஆராயவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்ததில், இதுவரை அசுத்தத்தால் இலைகளில் புரண்டவர்களுக்கு நோய் ஏற்பட்டது போன்ற எந்த புகாரும் இல்லை. மாறாக தனது நோய் போய் விட்டது என்று சிலர் கூறிக் கொண்டுள்ளனர். ஆகவே, அந்த தலித் பாண்டியன் வேண்டுமென்றே விளம்பரத்திற்காக இவ்வழக்கைப் போட்டிருப்பதும், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் பக்தர்கள் பயந்து அமைதியாக இருப்பதும் தெரிகிறது. உதாரணத்திற்கு ஏப்ரல் 2016ல் நடந்த ஒரு நிகழ்ச்சி குறிப்பிட்டப்படுகிறது. ஏனெனில், கரூர் அருகே அது நடந்துள்ளது.

Nerur, Agraharam Street, Unjivritti as usual on 15-05-2016

ஏப்ரல் 2016 திருவிழாவில் சுத்தமற்ற உணவு உண்டதால் வாந்தி, மயக்கம்: கரூர் அருகே கோவில் திருவிழாவில் சுகாதாரமற்ற நீரினை சமைத்து சாப்பிட்ட 10 குழந்தைகள் உள்ளிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம் ஏறபட்டது[10]. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா பகுதியை சார்ந்த நெரூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10,11,12 2016 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் திருவிழாவின் இறுதி நாளான 12 ஆம் தேதி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு கிடா வெட்டி கறி இன்று வரை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த கிடா வெட்டிற்கு சமையல் செய்வதற்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து உபயோகபடுத்தியுள்ளனர் ஆனால் அந்த நீர் மிகவும் கலங்கலாகவும் செந்நிறமாகவும், மாசுபடித்திருந்த நிலையிலும் இருந்து வந்துள்ளது. ஆனால் அதை அறியாத மக்கள் அந்த தண்ணீரை உணவு சமைப்பதற்கு பயன்படுத்தி சாப்பிட்டுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து இன்று பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம், வயிற்றுவலி போன்ற இன்னல்களுக்கு ஆளாகினர், சம்பவம் அறிந்த சுகாதார துறை மருத்துவர்கள், செவிலியர்கள் முகாம் அமைத்து பாதிக்கபட்டவர்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது[11]. ஆனால், அந்த தலித் பாண்டியன் இதற்காக ஒன்றும் செய்யவில்லை. அதாவது, அசுத்தத்தினால் இம்மாதிரி பிரச்சினை ஏற்படலாம், ஆனால், நெரூரில் அத்தகைய பிரச்சினை இல்லை. இருப்பினும் வழக்கு, தடை எல்லாம் நடந்தேறியுள்ளன.

தலித் பாண்டியன், கரூர்

யார் இந்த தலித் பாண்டியன்?: இவர் தலித் விடுதலை இயக்கம், தேசிய அம்மைப்பாளர். ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் போட வேண்டும் என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்பவர்[12].  சென்ற ஆண்டு 2015ல், 101ஆம் ஆண்டு விழாவாக நடைபெற இருந்த இந்த மனிதத் தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.தலித் பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக விழாவிற்குத் தடை விதித்தனர்[13]. இவர் வேலாயுதபாளையத்தில், அண்ணாநகர், ஆதிதிராவிட காலனியில் வைத்து வருபவர்[14]. இவருக்கு பகவதி அம்மன் கோவில் திருவிழா சமாசாரம் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஒன்றும் செய்யவில்லை. எனவே,  நெரூர் விசயத்தில், ஏதோ உள்நோக்கத்துடன், யாரோ தூண்டுதலின் மீது வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று தெரிகிறது. இந்து அமைப்புகள் இதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை அவர்களுக்குத் தெரியாது என்று கூட சொல்லலாம்.

 © வேதபிரகாஷ்

 26-05-2016

[1] http://www.astrosuper.com/2011/10/blog-post_8478.html

[2] தினமலர், சதாசிவ பிரமேந்திரர் கோவில் சாலையை சீரமைக்க கோரிக்கை, மார்ச்.55,, 20166.007.14

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1472127

[4] தினமலர், புக்கார்பெட்ட்டி-கரூர், மே22.2016,  11.22.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1527014

[6] தினகரன், நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம், பதிவு செய்த நேரம்:2016-05-17 10:18:43

[7] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=573606&cat=504

[8] ஈநாடு.இந்தியா, சதாசிவ பிரமேந்திராள் கோயிலில் 102-வது ஆராதனை விழா, Published 11-May-2016 19:45 IST

[9] http://tamil.eenaduindia.com/Rainbow/SoulSpace/2016/05/11194604/Sri-Sadasiva-Piramentiral-Temple-festival-in-karur.vpf

[10]
தமிழ்.வெப்துனிய்யா, சுகாதாரமற்ற நீரில் சமைத்து சாப்பிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம்: கரூரில் பரபரப்பு, வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (15:19 IST)

[11] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/75-peopls-vomiting-fainting-in-karur-116041500032_1.html

[12] http://www.dinamani.com/edition_trichy/karur/article1399470.ece

[13] http://www.unmaionline.com/new/2587-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html

[14] DALIT PANDIYAN.V. Age:: 30, Category:SC. Sex:Male. Address: S/O. VELLAIYAN, 10/46, ADIDRAVIDA COLONY, ANNA. NAGAR, VELAYUTHAMPALAYAM …

ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை – “தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (3)

மே 8, 2015

ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை“தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (3)

எச்சில் இலையில் உருளும் மக்கள்-vituthalai

எச்சில் இலையில் உருளும் மக்கள்-vituthalai

வீரமணியின் விடுதலையின் திரிக்கப்பட்ட செய்தி விமர்சனம்[1]: விடுதலையில் “வீரமணி பொய்களையும் சேர்த்து இவ்விதமாக செய்தியை வெளியிட்டார்[2]. வேண்டுதலுக்காக பிறர் சாப்பிட்ட எச்சில் இலையின் மீது உருளும் அநாகரிகமான காட்டு விலங்காண்டித் தனத்துக்கு மதுரை நீதிமன்றம் தடைவிதித்ததுகரூர் மாவட்டம் நெரூர் என்ற கிராமத்தில் உள்ள சதாசிவ பிரமேந்திரர் கோவில் உள்ளது. கன்னடப் பார்ப்பனப் பஜனைப் பாடகர் சதாசிவ பிமேந்திரா[3] என்பவன் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்து பஜனைப் பாடினானாம்[4]. அவர் இங்குள்ள பார்ப்பனர் வீட்டில் சாப்பிட்டு விட்டுச் சென்றாராம் அன்றுமுதல் இங்குள்ள கோவிலில் அனைவரும் சாப்பிட்ட எச்சில் இலையில் ஊர்க்காரர்கள் உருள வேண்டும் என்ற ஒரு முட்டாள் தனமான நம்பிக்கை உருவாக்கப்பட்டது. இதனை ஆரம்பத்தில் சிலர் மட்டுமே செய்துவந்த இந்த அசிங்கத்தனமான செயல் பிறகு பலவித பொய்க் கதைகளுடன் அந்த ஊர்க்காரர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்குப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பத்திரிகை இணைப்பில் வரும் ஆன்மீக இதழில் இந்த எச்சில் இலை உருளும் விழாவில் கலந்துகொண்டால் அய்ஸ்வர்யம் (செல்வம்) பெருகும் என்று புளுகித்தள்ள விரைவிலேயே இந்த விழா முக்கியமாக கரூர் திருச்சி போன்ற ஊர்களில் பிரபலமானது.  ”

Madey Snana- at Kukke gets Karnataka HC nod

Madey Snana- at Kukke gets Karnataka HC nod

தீர்ப்பு வரும் என்று தெரிந்த பிறகு காலையிலேயே நடத்த ஆரம்பித்துவிட்டனர் என்று புளுகிய விடுதலை: விடுதலை தொடர்கிறது, “100 ஆண்டுகளாக தொடந்து நடந்து வந்த இந்த விழா இந்த ஆண்டு 101- ஆவது விழாவாக விளம்பரம் செய்யப்பட்டு உள்ளூர் தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு என விழாக்குழுவினர் கூறியிருந்தனர். இந்த மனிதத்தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப் படுத்துவதை தடைசெய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளயத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி. தலித்பாண்டியன் என்பவர் மதுரை நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். மணிக் குமார், வி.எம்.வேலுமணி எச்சில் இலையில் உருளும் விழாவிற்கு உடனடியாக தடைவிதித்தனர்.  எப்போதும் மதிய உணவிற்குபிறகு நடை பெறும் இந்த விழா நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் என்று தெரிந்த பிறகு காலையிலேயே நடத்த ஆரம்பித்துவிட்டனர். தாலி அறுப்பு விழாவிற்கு தடை விதிப்பு முன்னமே தெரிந்ததால், முன்னமே நடத்தியதை வைத்து வீரமணி எழுதியிருப்ப்து தெரிகிறது. இந்த நீதிமன்றத் தடை குறித்த செய்தி முடியாது என்று கூறி தடைசெய்தது இந்த செய்தி விடுதலை நாளிதழில் வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.”

நெரூர் - 2015 - புதியவர்- எல்லோரும்

நெரூர் – 2015 – புதியவர்- எல்லோரும்

தலித்போர்வையில் இந்துக்களைப் பிரிக்கும் முயற்சி: நெரூரில் வருடாவருடம், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் நினைவு நாள் கொண்டாடப்படும் தேதியில், தெருவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சாப்பாடுப் போடப்படுகிறது. இதில் எல்லா சமுதாய மக்களும் கலந்து கொண்டு உணவு உண்டு வருகிறார்கள். உணவு உண்ட பிறகு, வேண்டிக் கொண்டவர்கள், சாப்பிட்டப் பின் உள்ள அந்த இலைகளில் உருளுவது / அங்கப்பிரக்ஷணம் செய்வது பழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறுதான் 28-04-2015 அன்று நெரூரில் வழக்கமாக நடந்து முடிந்தது. ஆனால், போலீஸார் அங்கு வந்திருந்தது, சிலரின் கவனத்தில் பட்டது. விசாரித்தபோது, யாரோ அந்த இலைகளில் உருளுவது / அங்கப்பிரக்ஷணம் செய்வது பழக்கத்தை / சடங்கை தடுக்க நீதி மன்றத்தில் தடை விதிக்க மனுதாக்குதல் செய்துள்ளதால், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்று பாதுகாப்பிற்கு வந்துள்ளதாக அறிவித்தனர். பிறகு தான், சில நாளிதழ்களில் வந்துள்ள செய்திகளின் படி, தலித் பாண்டியன் என்பவர், பிராமணர் சாப்பிட்ட இலைகளில் பிராமணர்-அல்லாதவர் இலைகளில் உருள வைப்பது / அங்கப்பிரக்ஷணம் செய்ய வைப்பது நிகழ்சிக்கு தடை விதிக்கப்பட வேண்டும் ஏனெனில், அதில் இலைகளில் மிச்சம் வைத்த எச்சில் சாதத்தை உண்ணவைக்கிறார்கள் என்று மனுவில் அறிவித்திருந்ததால், தடை விதிக்கப்பட்டது. ஆனால், உண்மைக்குப் புறம்பாக, அத்தகைய வாதத்தை மனுவில் இருந்தது மற்றும் விவரங்கள் சரிபார்க்காமல் தடைவிதித்திருப்பது தெரிகிறது. இனி அடுத்த வருடம் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

நெரூர் - 2015 - மூன்று வரிசை பந்தி - கூட்டம்  வித்தியாசம் இல்லை- 28-04-2015

நெரூர் – 2015 – மூன்று வரிசை பந்தி – கூட்டம் வித்தியாசம் இல்லை- 28-04-2015

© வேதபிரகாஷ்

08-05-2015

[1] http://www.viduthalai.in/headline/100565-2015-04-29-10-09-53.html

[2] விடுதலை, கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!எச்சில் இலையில் உருளும் மக்கள்தடைவிதித்தது மதுரை நீதிமன்றம், புதன், 29 ஏப்ரல் 2015 15:38; Read more: http://www.viduthalai.in/headline/100565-2015-04-29-10-09-53.html#ixzz3ZV63S2sK,

[3] கன்னடப் பார்ப்பனப் பஜனைப் பாடகர் என்பது பொய்யானதாகும். சிவராமகிருஷ்ணனன் என்ற பெயரைக் கொண்டவர் தெலுங்கு பிராமணர் ஆவர்.

[4] சதாசிவ பிமேந்திரா என்பவன் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்து பஜனைப் பாடினானாம். என்று குறிப்பிடுவதிலிருந்து, எந்த அளவிற்கு துவேசம் வெளிப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இதே முறையில் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை இந்த நாத்திகர்கள் குறிப்பிடாததைக் கவனிக்க வேண்டும்.