மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? கோவில் மற்றும் பங்காரு அடிகளார் வளர்ந்த விதம் [1]
முன்னுரை: இக்கட்டுரை பக்தியை விமர்சிக்க எழுதப் படவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக திண்டிவனம் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கிருத்துவர் மற்றும் முகமதியர்களின் ஆக்கிரமிப்பு முதலிய காரியங்களை எடுத்துக் கொண்டு, அப்பாவி இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப் படுகின்றனர் மற்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கவே ஞாபகப் படுத்தப் படுகிறது. அச்ச்ரப்பாக்க மலை மட்டும் ஆக்கிரமிக்கப் படவில்லை, பின்பக்கத்தில் உள்ள மலைப்பகுதிகளும் ஆக்கிரமிக்கப் பட்டு வருகின்றன. ஏற்கெனவே, செஞ்சி கோதண்டராம கோவில் கிருத்துவர்களுக்கு விற்கப் பட்டு மீட்கப்பட்டுள்ளது. ஞானனந்த கிரி ஆஸ்ரமம் போகும் வழியில், மலையில் ஒரு தர்கா கட்டப் பட்டுள்ளது. ஆனால், இவையெல்லாமே அரசு, அரசு ஊழியர் முதலியோர்களின் ஒத்துழைப்புடன் நடந்திருக்கின்றன. திராவிடத்துவம் பேசும் இவர்கள் இவர்களை விமர்சிப்பதில்லை. மேல்மருவத்தூர் குறிசொல்லும், நோய் தீர்க்கும் அதிசயங்களை குறைசொல்லவில்லை. ஆனால், மற்ற இந்துக்களின் நம்பிக்கைகளை மோசமாக, கேவலமாக, ஆபாசமாக, தூஷித்து வருகின்றன. ஈவேராவும் இதில் விதிவிலக்கல்ல. உண்மையில் ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து பிஎச்.டிகளை சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில், செக்யூலரிஸ நாட்டில் நாத்திகம் கூட பாரபட்சமாக வேலை செய்கிறது, மதம்-ஜாதி பார்த்து தான் முடிக்கி விடப்படுகிறது என்று தெரிகிறது. முன்பு http://www.indiainteracts.com என்ற தளத்தில் பதிவு செய்த கட்டுரைகள் எல்லாம் காணாமல் போய் விட்ட்தால், மறுபடியும் தொகுத்து, பதிவு செய்ய தீர்மானித்தேன்[1].
பண்ருட்டி கோவிலில் மாரி, மேரியானது (25-12-2018): கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் படைவீட்டு அம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது[2]. இங்கு மார்கழி மாதத்தையொட்டி தினமும் காலையில் சிறப்பு பூஜை- வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 25-12-2018 அன்று காலை கோவிலில் உள்ள மூலவர் ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது[3]. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் முன்னணி, அய்யப்ப பாதுகாப்பு மன்ற நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர்[4]. உடனே அவர்கள் அம்மனுக்கு செய்யப்பட்டு இருந்த மேரிமாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்[5]. கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது பற்றிய தகவல் அறிந்ததும் அங்கு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉசேன் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்[6]. அவர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அம்மனுக்கு செய்யப்பட்டுள்ள மேரி மாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும். இல்லையென்றால் கோவிலின் கதவை திறந்து உள்ளே சென்று அலங்காரத்தை அகற்றுவோம் என்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதன் பின்னர் போலீசார் கோவில் நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மூலம் கோவில் கதவு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த மேரி மாதா அலங்காரத்தை அகற்றினர்[7]. அதனை தொடர்ந்து கோவில் முன்பு திரண்டிருந்த அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
பழைய கோவில் பங்காருவின் கட்டுப் பாட்டிற்குள் வந்தது[8]: மேல்மருவத்தூர் கோவில் திடீரென்று வந்துவிடவில்லை. 1960-70களிலிருந்து பாண்டிச்சேரி-கடலூர்-திருவண்ணாமலை முதலிய இடங்களுக்குச் சென்று வந்ததால், இக்கோவில் ஒரு வேப்பமரத்தின் கீழ், முதலில் சிறியதாக இருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்திருக்கறார்கள். கீழ்மருவத்தூரில் முதலில் உண்மையான கோவில் இருந்தது என்றும், பிறகு அது மேல்மருவத்தூருக்கு மாற்றப் பட்டதாகவும் சொல்லப் பட்டது. பங்காரு பஸ்-கன்டெக்டராக வேலை பார்த்து வந்தார், என்றெல்லாம் சொல்லப் பட்டது[9]. பழைய கோவில் பூசாரியுடன் நட்பை வளர்த்துக் கொண்டு, ஒரு நிலையில், இவரே அக்கோவிலை பெற்று விட்டதாகவும் சொல்லப் பட்டது[10]. குறிப்பாக, அவ்விடத்தில், ஒரு கல் / பீடம் இருந்ததாகவும், அதன் மீது உட்கார்ந்து “குறி” சொன்னால், அது பலிக்கும் என்றும் நம்பப்பட்டது. பழைய பூசாரியை விலக்கி விட்டு, பங்காரு, இக்கோவிலை வைத்து குறி சொல்ல ஆரம்பித்தவுடன், கூட்டம் அதிகம் வந்தது, பணம் சேர்ந்தத்து. இதனால், பத்தாண்டுகளில் நிலைமை மாறி விட்டது. 1970லிருந்து இவரது குறிசொல்லும் அதிசயம் முதலியவை -சக்தி -வெளிபட்டன.
பங்காரு நாயக்கரின் குடும்பம்: 03-03-1941 அன்று பிறந்தார். 1960ல் பள்ளிப் படிப்பிற்கு பிறகு, ஆசிரியர் ஆனார். தனது 27 வயதில், செப்டம்பர் 1968ல் லக்ஷ்மி [வெங்கடாசல நாயக்கரின் புதல்வி] என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு, கோவில்-குறி சொல்லுதல் போன்றவற்றில் இறங்கினார். பங்காரு நாயக்கர் – லக்ஷ்மி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள், அவர்கள் பெயர், பொறுப்பு கீழ்கண்டவாறு கொடுக்கப் பட்டுள்ளன.
எண் | மகன் / மகள் | மனைவி / கணவன் | பொறுப்பு |
1 | அன்பழகன் | ஆஷா | கோவில் கல்லூரி |
2 | செந்தில்குமார் | ஶ்ரீலேகா | கோவில், கல்லூரி |
3 | சக்திதேவி | டி. ரமேஷ் | மருத்துவ கல்லூரி |
4 | உமாதேவி | பி.ஜெய்கணேஷ் | நிர்வாகம், நிதி |
இவர்கள் எல்லோருமே இருக்கின்ற கோவில், பள்ளிகள், கல்லூரிகள், டிரஸ்டுகள் மற்ற நிருவனங்களில் உறுப்பினர், இயக்குனர், என்றெல்லாம் பதவி வகித்து வருகின்றனர். குடும்பம் நிறுவனங்களை நடத்துவதில் பிரச்சினை இல்லை, ஆனால், வழக்குகள் முதலிய வரும் போது, மதம், நம்பிக்கை, ஆன்மீகம் எல்லாமே கேள்விக்குள்ளாகி, குறியாகி விடுகிறது. குறியால், இக்குறியை மாற்ற முடியாது போனது, நமிக்கையை உடைக்கிறது.
வேதபிரகாஷ்
26-12-2018
[1] இப்பொழுதே பல அடிகுறிப்பு ஆதாரங்கள் இணைதளங்களிலிருந்து மறைய ஆரம்பித்து விட்டன. குறிப்பிட்டகாலத்திற்குப் பிறகு எடுத்து விடுகிறார்கள் போலிருக்கிறது.
[2] மாலைமலர், ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம்–பாஜக, இந்து முன்னணியினர் போராட்டம், பதிவு: டிசம்பர் 25, 2018 15:46
[3] https://www.maalaimalar.com/News/District/2018/12/25154625/1219815/BJP-and-Hindu-munnani-protest-against-mary-madha-decoration.vpf
[4] ஏசியா.நெட்.நியூஸ், மேரி மாதாவாக மாறிய மாரியாத்தா… பண்ருட்டி அருகே பதற்றம்…!, By Vinoth KumarFirst Published 26, Dec 2018, 2:07 PM IST.
[5] https://tamil.asianetnews.com/tamilnadu/panrutti-mary-madha-decoration-pkc5ba
[6] நியூஸ்.டிஎம், மாரியம்மனை மேரியம்மனாக அலங்காரம்… பண்ருட்டியில் பரபரப்பு…!, Newstm Desk | Last Modified : 26 Dec, 2018 07:17 pm.
[7] https://www.newstm.in/news/tamilnadu/district/52313-panrutti-mary-amman-mari-amman.html
[8] இக்கட்டுரை பக்தியை விமர்சிக்க எழுதப் படவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதிகளில் நடக்கும் கிருத்துவர் மற்றும் முகமதியர்களின் ஆக்கிரமிப்பு முதலிய காரியங்களை எடுத்துக் கொண்டு, அப்பாவி இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப் படுகின்றனர் மற்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கவே ஞாபகப் படுத்தப் படுகிறது.
[9] “சொல்லப்பட்டது” என்று என்று ஏன் குறிப்பிடப் பட்டது என்றால், 1970-80களில் அப்பகுதிகளில், பஸ்களில், தெருக்களில், இவ்விசயங்கள் தாராளமாகப் பேசப் பட்டன. பிறகு, 1980-90களில் ஏற்பட்ட அரசியல் நெருக்கங்கள் முதலியவற்றால், அவை குறைக்கப் பட்டன. 1990-2000களில் மறைக்கப் பட்டு புதிய கதைகள் உண்டாக்கப் பட்டன.
[10] இதைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன, ஆனால், இப்பொழுது காணமல் இருக்கின்றன. மேலும் சர்ச்சைக்குரியதாக இருப்பதால், தவிர்க்கப் படுகிறது.