ஐயப்பனின் கிருத்துவ நண்பன் – வெளுத்தன், வெளுத்தச்சன், ஜெகோமோ பெனிசியோ, செபாஸ்டியன் யார்?:
ஆன்மீகதலத்தை, சுற்றுலாதலம் போல வைத்து பொருளாதார ரீதியில் கணக்கு போடுவது: கோடிக்கணக்கில் ஐய்யப்ப பக்தர்கள் வந்து செல்வதினால், போக்குவரத்து, தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி மற்றும் இதர வசதிகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு, சுற்றுலா கோணத்தில் ஆராய்ச்சி, கணக்கீடுகள் முதலியன நடந்து வருகின்றன[1]. இப்பக்தர்கள் கூட்டமெல்லாம், “வந்து-சென்றுவிடும்” கூட்டம் ஆதலால், அப்பொழுதைய தேவைகளைப் பூர்த்தி செய்தால் போதும் என்ற ரீதியில், குறுவியாபாரிகளை வைத்துக் கொண்டு, பெரிய ஏஜென்ட்-வியாபாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். திரும்பச் செல்லும் போது, பிரசாதம், டாலர்கள், மாலைகள், பொம்மைகள் முதலியவற்றை வாங்கிச் செல்வார்கள் என்று கணக்குப் போடுகிறார்கள். பக்தி பாடல்கள் அடங்கிய காசட், இப்பொழுது சிடி நிச்சயமாக 5,000 விற்பனையாகும் என்று தீர்மானிக்கின்றனர்[2]. இத்தகைய வியாபார நோக்கு, பக்தியைத் தாக்கும் என்பது திண்ணம். இவையெல்லாமும், “வாவர் பள்ளி” போன்று வருடாவருடம் உருவாக்கப்படுபவை தான். நாளடைவில், சபரிமலை யாத்திரையில், ஒரு அங்கமாகி விடும். ஆகவே, சபரி மலை யாத்திரையின் புனிதத்தைக் காக்க வேண்டும். இடைக்காலத்திலிருந்து, கோவில் கட்டுப்பாடு, ஆங்கிலேயர், கம்யூனிஸ்டுகள் என்று கைமாறி இருக்கும் பட்சத்தில், வருமானம் வருவதால், செலவழிக்கிறோம் / சதி செய்து தருகிறோம் என்ற நிலையில், அனைத்துமே எச்சரிக்கையுடன் கவனிக்கப்பட வேண்டியவைதான்.
ஐயப்பனின் கிருத்துவ நண்பன் – வெளுத்தன், வெளுத்தச்சன், ஜெகோமோ பெனிசியோ, செபாஸ்டியன் யார்?: கிருத்துவர்களும், ஐயப்பனுடைய நண்பர் ஒரு கிருத்துவர் என்ற கதையை உருவாக்கினர். 2008ல் அர்துங்கல் என்ற இடத்தில் உள்ள சர்ச் [Stephanos Church at Arthungal] ஐயப்பனின் நெருங்கிய நண்பனால் கட்டப்பட்டது என்றும், அவன் வேலுதா, வெளுத்தச்சன், அர்துங்கல் வெளுத்தச்சன் [Velutha / Veluthachan / Arthunkal Veluthachan] என்ற கிருத்துவன் என்றும், அதனால், சபரிமலைக்கு போகும் பக்தர்கள் இந்த சர்ச்சுக்கு வந்து செல்ல வேண்டும் ஒரு கதையை ஆரம்பித்தனர்[3]. இது கடற்கரையில் சபரிமலைக்குத் தொலைவில் உள்ளது. வெளுத்தச்சன் = வெளுத்த அச்சன் என்றால், வெள்ளைக்கார அப்பா, அதாவது “பறங்கியன் / வெள்ளைக்காரன்” என்பது மலையாளத்தில் அவ்வாறு சொல்லப்படுகிறது. உண்மையில் போர்ச்சுகீசியர் இங்கிருந்த ஒரு கோவிலை இடித்து, ஒரு சர்ச்சைக் கட்டினர். பிறகு அது புதுப்பிக்கப்பட்டது. இது அவர்கள் இடித்த எத்தனையோ கோவில்களுள் ஒன்று என்று தெரிகிறது. இதேபோல, இந்த ஆன்ட்ரூஸ் [St Andrew’s Church at Arthunkal in Alappuzha District] சர்ச் பற்றிய கதை வேறுவிதமாக சொல்லப்பட்டது. பயஸ் அரட்டுக்குளம் [Church Vicar Fr Pius Arattukulam] என்ற பாதிரி, இச்சர்ச்சின் பூஜாரிகளில் ஒருவன் ஐயப்பனின் நண்பன் என்று கதையை சொல்ல ஆரம்பித்தார்[4]. இவரின் கதைப்படி, 1584ல் பாதிரியான ஜெகோமோ பெனிசியோ [Fr Jacomo Fenicio] என்பவன் தான் ஐயப்பனின் தோழனாம்! “மனோரமா”வோ, அந்த நண்பன் செபாஸ்டியன் என்றே குறிப்பிடுகிறது[5]. இது இந்து-கிருத்துவ மதங்களின் ஒற்றுமையின் சின்னமாக இருக்கிறது என்று “டெக்கான் ஹெரால்டில்” வந்துள்ளது[6]. அப்பொழுது, “டெக்கான் ஹெரால்டுக்கு”, ஒரு பதில்லை அனுப்பியிருந்தேன், ஆனால், அவர்கள் போடவில்லை.
“டெக்கான் ஹெரால்டுக்கு” ஜனவரி.19, 2010ல் அனுப்பிய கமென்ட்ஸ்[7]: “வாவரைப் போலவே, இந்த ஆள், ஐயப்பனின் நண்பன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. ஐயப்ப பக்தர்களை ஏமாற்றுவதற்கு, “அமர்-அக்பர்-அந்தனி” பாணியில் இக்கதையை உருவாக்கப் பார்க்கிறார்கள் போலும்! இதற்கு சரித்திர ஆதாரம் எதுவுல் இல்லை என்பதனால், முளையிலேயே இதனை கிள்ளியெறிய வேண்டும். தாமஸ் கட்டுக்கதையினை உறுதிசெய்ய, இதனை நுழைத்து, இதனை ஐயப்பனுடன் சம்பந்தப்படுத்த முயல்கிறார்கள். அந்த பாரிஷில் / சர்ச்சில் உள்ள ஆவணங்களை, அவர்கள் தமதிச்சைக்கேற்றவாறு, எப்படி வேண்டுமானாலும் மாற்றி-மாற்றி எழுதி வைத்துக் கொள்ளலாம். அவற்றின் தேதிகளை கண்டுபிடித்தால் உண்மை தெரிந்து விடும். அதனால், அவற்றின் தேதிகள் வரும் வரை கிருத்துவர்கள் அமைதியாக இருப்பது நல்லது”, என்று அனுப்பினேன், ஆனால், அவர்கள் அதனை வெளியிடவில்லை. அதேபோல, அவற்றையும் சோதனைக்கு அனுப்பவில்லை!
ஐயப்ப யாத்திரையை காப்பியடித்து நடத்தும் கார்த்திகை மாத விழாக்கள்: ஜூலை 2010ல் இதற்கு பெசிலிகா என்ற அந்தஸ்தை கொடுக்கப்பட்டதால், இவ்வாறான கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என்று தெரிகிறது. சபரிமலை ஐயப்பன் யாத்திரைப் போலவே, அதே காலத்தில் டிசம்பர்.10 முதல் ஜனவரி 27 தேதிகளில் மாலையணிந்து இந்த சர்ச்சுக்கு வருகின்றனர். ஜனவரி 20ம் தேதி தேரில் செபாஸ்டியன் என்ற கிருத்துவ சாமியை வைத்துக் கொண்டு ஊரவலமாக செல்கின்றனர். “தி இந்து” இதற்கு அளவுக்கு அதிகமாகவே விளம்பரம் கொடுத்து வருகிறது[8]. இங்கு மாலைகளைக் கழற்றி வைக்கின்றனர். உண்மையில், ஐயப்ப பக்தர்கள், விரதத்திற்கு அணிந்த மாலையை இங்கு கழட்டி வைப்பது சரியில்லை. ஆகவே, கிருத்துவர்கள் இந்துக்களை ஏமாற்றவே இத்தகைய முறைகளை புதியதாக ஏற்படுத்துகின்றனர். ஏற்கெனவே, இந்து கோவிலை அடித்து, அதற்குண்டான பெரிய நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, தாமஸ் கட்டுக் கதையுடனும் இணைக்கின்றனர். வெளுத்தன், வெளுத்தச்சன், அர்துங்கல் வெளுத்தச்சன், ஜெகோமோ பெனிசியோ என்றெல்லாம் சொல்லி, அது செபாஸ்டியன் என்கின்றனர். இவ்வாறு கட்டுக்கதைகளைப் புனைவதற்கு இவர்களுக்கு துளிக்கூட வெட்கம் இல்லை என்று தெரிகிறது. 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட, இக்கட்டுக்கதையை இந்தியாவில், போர்ச்சுகீசியரால் பரப்ப ஆரம்பிக்கப் பட்டு, இப்பொழுது, ஐயப்பனின் நண்பன் என்ற நிலையில் வந்துள்ளது.
ஐயப்பனின் நண்பர் ஒரு கிருத்துவ பாதிரி: புதிய கதைத் திரிக்கப்படுகிறது!: இத்தலைப்பில், 2010ல் நான் செய்த பதிவு இது[9] – ஃபினிஸியோ என்ற பாதிரி இருந்தானாம். அவனுக்கு இந்து கலாச்சாரம் என்றால் பிடிக்குமாம். அவன் ஐயப்பனுடைய நண்பனாம்…………………….இப்படி ஒரு கதையைத் திரிக்க கிருத்துவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்! எங்கிருந்து வந்தான் அந்த பாதிரி? 1498ற்கு பிறகு வந்தான், 1632ல் செத்தான் என்றால், அப்பொழுது ஏது ஐயப்பன்! என்ன கேவலம், இப்படியெல்லாம் கூட புரட்டுவேலைகள் செய்வார்களா? பிறகு தாமஸ் புரட்டு வேறு பேசுகிறார்கள்! இதில்தான் அவர்களது போலித்தனமும், கள்ளத்தனமும் வெளிப்படுகிறது. ஐயப்ப பக்தர்களே உஷார்! இந்த போலிகளை நம்பி, ஐயப்பனை விட்டுவிடப் போகிறீர்கள்!
கிருத்துவர்களால் சொல்லப்படும் கதை: 1579ல் எலயிடது ஆட்சியாளன் முதேடது அனுமதி கொடுத்தபோது ஆர்துங்கல் என்ற இடத்தில் இருந்த மார்தோமா / சால்திய கிருத்துவர்கள், தாமஸ் பெயரில் ஒரு குடிசையைக் கட்டினார்களாம். போர்ச்சுகீசியர் அங்கு வந்தபோது பாப்டிஸம் பெறாத அந்த “கிருத்துவர்களை”க் கண்டனராம்! அந்த குடிசையை எடுத்துவிட்டு, “சந்தநந்தராவோஸ்” என்ற பெயரில் 30-11-1581ல் மரத்தினால் மரத்தினால் ஒரு கட்டிடம் கட்டினார்களாம். பிறகு அவர்கள் அந்த “கிருத்துவர்களை” வலுக்கட்டாயமாக “மதம்” மாற்றி, லத்தீன் சடங்குகளை ஏற்றுக்கொள்ளச் செய்தனராம்! 1584ல் காஸ்பர் பயஸ் என்பவனிருந்தானாம். அவ்வருடமே ஜகோமோ ஃபெனிஸியோ, அரசனின் அனுமதியுடன் கல்லினால் ஒரு சர்ச் கட்ட ஆரம்பித்து, 7 வருடங்களில் – 1591ல் முடித்தானாம். 1619ல் மறுபடியும் அங்கு வேலைக்கு அமர்த்தபட்ட போது அதிசயங்களை செய்ய ஆரம்பித்தானாம். அப்பொழுது அவனுக்குப் பெயர் “வேலுதச்சன்” என்பதாம். 1632ல் செத்துவிட்டானாம். பிறகு அந்த சர்ச் மறுபடி-மறுபடி கட்டப்பட்டதாம். ஆர்துங்கல் சர்ச் – இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்! பழைய கட்டிடம் கேரளாவில் இருக்கும் சாதாரண கட்டிடம். முன்பகுதி சர்ச் மாதிரி பிறகு கட்டப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது. இது சாதாரண வழிபாட்டுக் கூடம். எந்த கோவிலும் இப்படித்தான் இருக்கும். கேரளாவில் கோவில்களை இடித்து, சர்ச்சுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை மறைக்க, தாமஸ் கட்டுக் கதையை வைத்துக் கொண்டு, இவையெல்லாம் முதல் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டன என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்! மேலும், இந்தியாவில் இத்தகைய கட்டிட மாற்றங்கள் அந்நியர்கள் ஆட்சி காலங்களில் மிகவும் அதிகமாக நடந்துள்ளன. இக்கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை.
© வேதபிரகாஷ்
12-12-2015
[1] Muraleedharan, K. P. “Economic Benefits of Pilgrimage Tourism: A Case Study of Sabarimala Pilgrimage with Special Reference to Pandalam Rural Locality in Kerala (India).” (2009).
[2] Shetty, Kavitha. “Divine Pop.” (1990).
[3] http://www.haindavakeralam.com/amritha-tv-spreading-hk14941
[4] Legend has it that one of the early priests of the church was a friend of Lord Ayyappa, the adopted son of the King of a small principality called Pandalam, now in Pathanamthitta District, Church Vicar Fr Pius Arattukulam said.
http://www.deccanherald.com/content/46635/church-portals-open-ayyappa-devotees.html
[5] The belief –Lord Ayyappa, it is said, used to be very friendly with St Sebastian. They were so close that the two were considered brothers by people of both the religions. It is this ideal of religious harmony that draws Sabarimala pilgrims to Arthunkal Basilica.
[6] A 16th century Catholic Church built by Portuguese missionaries in a coastal hamlet near here stands out as a model of religious harmony with a tradition of hosting Hindu pilgrims returning after worshipping Lord Ayyappa at the famous Sabarimala temple.
Deccan Herald, Church portals open for Ayyappa devotees, Last updated: 13 January, 2010
[7]https://christianityindia.wordpress.com/2010/01/19/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/
[8] http://www.thehindu.com/news/national/kerala/arthunkal-church-fete-gets-under-way/article6779690.ece
[9]https://christianityindia.wordpress.com/2010/01/19/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/