மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாடமா அல்லது கிருத்துவ ஆதிக்கமா? [4]
அரசியல் சார்பு, ஆதரவு மற்றும் பங்கு / விருப்பமுள்ள நிறுவனங்கள் புறம்போக்கு நிலங்கள் பெறுவது முதலியன: தமிழகத்தில் கோவில் நிலங்களை அடுத்து, ஆக்கிரமிக்கப் படுவது, புறம்போக்கு நிலங்கள் தாம். ஓடை, ஏரி உள்வை மற்றும் குளம் [“water course poramboke i.e. Odai, Eri Ulvai and Kulam”] முதலிய இடங்களில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விடலாம் போன்ற விதிமுறைகள் உருவாக்கியுள்ளன. இதை பயன்படுத்திக் கொண்டு, அரசியல்வாதிகளின் சார்பு, ஆதரவு மற்றும் பங்கு / விருப்பமுள்ள நிறுவனங்கள், அத்தகைய நிலங்களைப் பெற்று வருகின்றன[1]:
எண் | கல்லூரி / டிரஸ்ட் | அரசாங்க ஆணை | நில அளவு |
(a) | Vellore Engineering College, Vellore District, presently VIT at Katpadi | by G.O.Ms.No.112 (Revenue), dated 09.03.2001 | 98.80 Acres |
(b) | Nagarathinam Angalammal Educational Trust, Valayakulam Village, Madurai District | by G.O.Ms.No.77, Revenue, dated 20.02. 2001 | 10.10 Hectares |
(c) | Melmaruvathur Adhiparasakthi Educational Institutions, Kesavarayan Pettai Village, Kancheepuram District | by G.O.Ms.No.643 Revenue, dated 08.12.1999 | 34.65.5 Hectares |
(d) | Periyar Mariyammai Educational & Charitable Trust, Vallam, Thanjavur District | by G.O.Ms.No.142, Revenue, dated 26.03.2003 | 65.26 Acres |
(e) | Thangachiammal Charitable Trust for constructing College buildings at Kengalathur Village, Sivagangai District, | by G.O.Ms.No.286, Revenue, dated 28.08.2001 | 25 Acres |
(f) | Management of Annai Mathammal Sheela Engineering College, Erumapatti Village, Namakkal District | by G.O.No.285, Revenue, dated 28.08.2001 | 11.98 Acres |
இதில் ஆதிபராசக்தி கல்வி நிறுவங்களும் அடக்கம்[2]. இதற்கும் பக்தகளுக்கும் சம்பந்தம் இல்லை. ஆகையால், கோவில் எனும் போது, புனிதம் காக்கப்பட வேண்டும்.
இணைதளத்தில் பங்காரு அடிகளை கிருத்துவராக்கும் முறை: கோபால நாயக்கருக்கும், மீனாம்பாளுக்கும் மேரிக்கு கிருஸ்து பிறந்தது போல பங்காரு 03-03-1941ல் பிறந்ததாம்! “இப்பூமியில் கோடிக்கணக்கான பெண்கள் இருக்கும் போது கிருஸ்துவை பெற்றெடுக்க, ஏன் மேரி ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? அதே போல சாதாரண கிராமத்தில் வாழும் மீனாம்பாளுக்கு ஏன் பங்காரு குழந்தை பிறக்க வேண்டும்,” என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு, பைபிள் வார்த்தைகளை உபயோகப் படுத்தி அதற்கு விளக்கமும் கொடுக்கப்படுகிறது[3]. “அவதாரம்” என்பதனை விளக்க ஏசுகிருஸ்து உதாரணமும் கொடுக்கப் படுகிறது[4]. 2000 வருடங்களுக்கு முன்னர் கடவுள் ஏசு கிருஸ்து இப்பூமியில் கட்டவுளின் மைந்தனாக அவதரித்தார். ஆனால், மக்கள் அவரை அவ்வாறு நம்பவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சிலுவையில் அறையப் பட்டு கொடூரமாக இறக்க வேண்டியதாயிற்று, என்ற விளக்கம் எல்லாம் கொடுக்கப் பட்டது. ஆக, பங்காரு நாயக்கர் அம்மாவா, அப்பாவா, தேவகுமாரனா என்ற குழப்பத்தை உண்டாக்கியது!
குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் முடவர்கள் நடக்கிறார்கள், பிணங்கள் உயிரோடு எழும்புகின்றன ரீதியில் அம்மா!: இனி அம்மா புகழ் பாடும் வீடியோக்கள் இணைதளங்களில் உலா வருகின்றன. அதில், குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் முடவர்கள் நடக்கிறார்கள், என்றுதான் பிரச்சாரம் செய்யப் படுகிறது. அங்கு வந்தால் எல்லா நோய்களும் தீர்ந்து, பிரச்சினைகளும் விடும், தீர்வுகள் கிடைக்கும் என்ற ரீதியில் அதிரடி பிரச்சாரம் செய்யப் படுகிறது. பிறகு, ஆதிபராசக்தி பெயரில் எதற்கு மருத்துவ கல்லூரி, அதில் ஊழல், சிபிஐ ரெயிட், கைது, என்றெல்லாம் எப்படி என்று தெரியவில்லை. அம்மா அவற்றையெல்லாம் “குறி” பார்த்து முதலிலேயே சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை. ஏசுவின் அவதாரப் பிள்ளை என்ற ரீதியில், மேரியோ-கர்த்தரோ அறிவித்திருக்கலாமே, ஏன் அறிவிக்கவில்லை? எல்லாமே ஆன்மீகமாக, செக்ட்ய்ய்லரிஸமாக மாறிவிட்டதா? குறிமேடை இவருக்கு மட்டும் பொய்த்து விட்டதா?
ஆண் பெண்ணாகி, அம்மாவாகி, ஆதி–பரா–சக்தியாகி, மேரியான அதிசயம், இங்கு தான் பார்க்க முடியும்: பங்காரு நாயக்கர் அம்மாவாகி, ஆதிபராசக்தியாகி, அவதாரமாகி, ஏசுகிருஸ்துவாகி வரும் நிலையில், ஆதிபராசக்தி விக்கிரகமே மேரியாகி வரும் அதிசயம், கடந்த ஆண்டுகளில் நடந்து வருகிறது. அப்பொழுதெல்லாம், கோவிலுக்கு செல்பவர்களுக்குத் தான், இத்தகைய விவகாரங்கள் தெரியும். இப்பொழுது, டிசம்பர் 2018ல் ஊடகங்களில் வெளி வருவதால், இந்து அமைப்பினர் எதிர்த்துள்ளனர். சர்ச்சுகளில் உள்ள மேரிக்கு, ஆதிபராசக்தி போல அலங்காரம் செய்வார்களா என்றால், செய்வார்கள், அதனால் தான் முட்டாள் இந்துக்கள் வேளாங்கன்னி, பூண்டு மாதா போன்ற இடங்களுக்குச் சென்று வருகின்றனர். இனி அச்சரபாக்கம் திரிபுரங்களை எரித்த சிவன் கோவில் மறக்கப்படும், இந்த சர்ச் மற்றும் மேல்மருவத்தூர் புராணங்களை மக்கள் நம்ப ஆரம்பித்து விடுவர். இந்தியாவில், இதுபோலத்தான், சரித்திரம் மறைக்கப் பட்டு, அழிக்கப் படுகிறது. அதற்கு முட்டாள் இந்துக்கள் துணை போகின்றனர்.
ஜனநாயகம், செக்யூலரிஸம், சமத்துவம், ஆன்மீகம் என்ற போர்வையில், இந்துதெய்வத்திற்கு வேடம் போட்டு, பங்கு போட முடியாது!: இதுவரை செக்யூலரிஸம் பேசி 40 வருடங்களாக இந்துக்களை ஏமாற்றி வந்தனர். திராவிட, நாத்திக, இந்துவிரோத கருணாநிதி, திக கோஷ்டியினர் சமத்துவம் போர்வையில் வேலை செய்ய ஆரம்பித்தனர்.இப்பொழுது “ஆன்மீகம்” என்று ஆரம்பித்துள்ளனர். சிலை திருட்டு, சிலை எதிர்ப்பு களவாணிகள் எல்லோரும், சிலை வைத்து பூஜை செய்து, கும்பிட ஆரம்பித்து விட்டனர். ஆனால், இந்து தெய்வங்களை இவ்வாறு மாற்ற முயல்வது எப்படி? ஜனநாயக மதம் என்ற ரீதியில், அதனை கடைபிடிக்கிறார்களா? இவ்வாறு ஜனநாயகம், செக்யூலரிஸம், சமத்துவம், ஆன்மீகம், நாத்திகம் என்று எல்லாமே எப்படி இந்துக்களுக்கு எதிராக செயல் பட முடியும்? ஆகவே, இதில் ஒரு திட்டம் உள்ளது தான் தெரிகிறது, அது ஜனநாயகத்திற்கே ஒவ்வாதது, மக்கள் புரிந்து கொண்டால், அவர்களுக்கு ஆபத்து தான், இதனை இந்த ஏமாற்றுவாத சித்தாதிகள் கவனிக்க வேண்டும்.
இந்துக்கள் இந்துக்களாக இருக்க வேண்டும்: ஆதிபராசக்தி ஒயக்கம், நிறுவனம், டிரஸ்டுகளுக்கு வேறுவித பிரச்சினைகள் இருக்கலாம். அவை கோவிலைப் பற்றியதல்ல. இப்பொழுது பண்ருட்டி சமாசாரம் முடிந்து விட்டது. ஆனால், மேல்மருவத்தூரில் ஒன்றும் செய்யவில்லை:
- மேல்மருவத்தூரில் பல ஆண்டுகளாக இந்த கூத்து நடைபெறுகிறது, அப்பொழுது எடுத்துக் காட்டியபோது “அம்மா பக்தர்கள்” என்னை வசை பாடினர்.
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக டிரஸ்ட் கீழ், கிருஸ்துமஸ் கூத்து நடைபெறுகிறது! கேட்பதற்கு இந்துத்துவ வாதிகளுக்கும் திராணியில்லை.
- மேல்மருவத்தூர் கல்லூரி சேர்க்கைக்கு பணம் பிரச்சினையால் சிபிஐ ரெயிட் எல்லாம் நடந்தது, ஆனால், என்னவாயிற்று என்று தெரியவில்லை.
- அடிகளாரிடம் விசாரணை, அவரது மகன், மகள் உள்பட குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை, அவரது வீட்டிலும் சோதனை என்றெல்லாம் செய்தி.
- அம்மா தான் அல்லா, அல்லா தான் அம்மா என்று அம்மா ஆணையிட்டதால், இந்த அம்மா வியாழக்கிழமை தோரும் குரானை படிக்க ஆணையிட்டாராம்.
- குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் முடவர்கள் நடக்கிறார்கள், பிணங்கள் உயிரோடு எழும்புகின்றன ரீதியில் அம்மா.
- ஆண் பெண்ணாகி, அம்மாவாகி, ஆதி-பரா-சக்தியாகி, மேரியான அதிசயம், இங்கு தான் பார்க்க முடியும்!இனி மைனாரிடி ஆனாலும் ஆச்சரியம் இல்லை.
- இன்னொருத்தர் தன்னை முருகனின் அவதாரம் என்கிறார், இவர் தன்னை அம்மா, மேரி, ஏசு என்கிறார், பிறகு உலகத்தில் என்ன பிரச்சினை.
- ஜனநாயகம், செக்யூலரிஸம், சமத்துவம், ஆன்மீகம் என்ற போர்வையில், இந்துதெய்வத்திற்கு வேடம் போட்டு, பங்கு போட முடியாது! [10]
© வேதபிரகாஷ்
27-12-2018
[1] Madras High Court – Tmt.Kannammal Educational Trust vs The State Of Tamil Nadu on 27 February, 2017; IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 27.02.2017 – CORAM:The Honourable Mr. Justice B.RAJENDRAN; Writ Petition No.2279 of 2017.
[2] https://indiankanoon.org/doc/113172194/
[3] March 3rd 1941, is a golden day in the history of the world. Yes, it was on this wonderful day, that at the simple home of Gopala Naicker family at Melmaruvathur, his wife Mrs. Meenaambaal gave birth to a boy baby. Among the millions of women on this earth, why was Mother Mary chosen to give birth to Christ? Why was Mrs. Meenaambaal, a simple lady from the small hamlet of Melmaruvathur chosen to beget this Son of Her, Shri Bangaaru Adigalaar? http://www.sakthiolhi.org/adigalar.html
[4] Incarnation: Common people fail to recognize incarnation. Therefore, like a fish being caught by baiting it with another fish or worm, so also, to impress and make the people realize incarnations, they are given the earthly benefits that they ask for, their incurable diseases are cured and their problems are solved. All the scientific and technological advancements have only increased the sophistication and standard of human living. The human nature remains the same with regard to spirituality and God consciousness. 2000 years back when Lord Jesus Christ came upon this earth as the Son of God, people never believed and finally He was crucified and set to a horrible and painful death.