Archive for the ‘சிறுபான்மை’ Category

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம்  – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன? (2)

ஏப்ரல் 10, 2018

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம்  – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன? (2)

Modi advice to cadre-08-04-2018

மோடி தெளிவாக பா... எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசியது: பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முடிந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது[1]: “தலித் இன மக்களுக்காக பா... அரசு ஏழு முக்கிய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் தலித் இன மக்களுக்கு அதுபற்றி தெரியவில்லை. பா... எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி தலித் இன மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்தியாவில் எஸ்.சி. எஸ்.டி. இன மக்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் 20 ஆயிரத்து 844 உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் பா... எம்.பி.க்கள் செல்ல வேண்டும். ஒரு நாள் இரவு அந்த கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும்[2]. மறுநாள் பா... அரசின் தலித் நலத்திட்டங்கள் பற்றி பா... எம்.பி.க்கள் மக்களிடம் விரிவாக பேச வேண்டும். இதன் மூலம் நாடுமுழுவதும் உள்ள தலித் இன மக்களுக்கு பா... செய்து வரும் நல்லப்பணிகள் தெரியவரும். வருகிற 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்த தினமாகும். அன்றைய தினம் பா... எம்.பி.க்கள் இந்த பணியை தொடங்க வேண்டும். மே மாதம் 5-ந்தேதி வரை தலித் மக்களை சந்திக்கும் பணியில் பா... எம்.பி.க்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். பா... மந்திரிகள் மூத்த நிர்வாகிகளும் இந்த பணியில் இணைய வேண்டும்.” மோடி அளவுக்கு, பிஜேபியில் இருக்கும் மற்றவர்களுக்கு அரசியல் சாணக்கியத்தனம், மேக்வில்லியன் சாதுர்யம், முதலிய இல்லை என்பதால், தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு, கட்சியின் பெயரைக் கெடுத்து வருகிறார்கள் எனலாம்.

Modi not happy with Amit Shah - SC issue
மோடி தெளிவாக சதியைபிரச்சாரத்தை வெளிப்படுத்தியது: பாஜக தொடங்கப்பட்ட 38-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தில்லியில் கட்சித் தலைவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது[3]:

 1. ஏழைத் தாய்க்கு பிறந்தவர் (நான்) பிரதமர் பதவியை அடைந்துள்ளதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த யாரும் நாட்டின் உயர் பதவியை எட்டினால் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
 2. பாஜக என்பது பிராமணர்கள் மற்றும் பனியா (வட மாநில வணிக சமூகத்தினர்) கட்சியாகவே நீண்டகாலமாக கருத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளோம்.
 3. ஏழை, எளிய மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது எதிர்க்கட்சிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாஜகவின் செல்வாக்கை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
 4. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என நாட்டின் அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களும் பாஜக சார்பில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களாக உள்ளனர். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம்தான் பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.பி.க்களைப் பெற முடிந்தது.
 5. பாஜகவின் இந்த வளர்ச்சியை சிதைக்கும் நோக்கில் இப்போது எதிர்க்கட்சிகள் வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். மக்கள் மத்தியில் தவறான தகவல்களையும் பரப்பும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு எதிராக, நமது கட்சியினர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்காகவும் நாம் உழைக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் தூண்டுதல்களால் நாம் பொறுமை இழந்துவிடக் கூடாது.
 6. இது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்ததுவிட்ட நவீன உலகம். நமது கொள்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் மத்தியில் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். கட்சி தொடங்கிய 38 ஆண்டுகளில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம்.
 7. காங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.
 8. பாஜகவுக்கு கிடைத்த சிறந்த தலைவர்களும், தன்னலம் கருதாத தொண்டர்களும்தான் நமது சாதனைகளுக்கு காரணம்”என்றார் அவர்[4].

மோடி-ரசிகர்கள், மோடி-தாசர்கள், பிஜேபிகாரர்கள் மோடி சொன்னதை கவனித்து செயல்பட்டாலே, 2019 தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.

Rahul, anti-Modi pitch, communal tourism

காங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல: இப்படி மோடி சொன்னதை கவனிக்க வேண்டும். மைனாரிட்டி, பின்தங்கிய வகுப்பினர், எஸ்.சி மற்றும் எஸ்.டி என்ற கூட்டமைப்பில் மக்களைப் பிரித்து, அவர்களை இந்துக்களுக்கு எதிராக்கி, அதாவது பிஜேபிக்கு எதிராக்கி, வெற்றி பெறலாம் என்ற திட்டத்தில் தான், காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கவும் தயாகி விட்டது. 60-70 ஆட்சி காலத்தில், காங்கிரஸ் விசுவாசிகள் பற்பல துறைகளில், பதவிகளில் இருப்பதால், அவர்களின் ஆதரவால், தமக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திட்டத்தில் செயல்படுவதும் தெரிகிறது. உச்சநீதி மன்றங்களில் மாறுபட்ட தீர்ப்புகள் வருவது, அவைப் பற்றி ஊடகங்களில் தவறான செய்திகள் வருவது, விவாதங்களில் திரிபு வாதங்கள் கொடுப்பது, சமூக ஊடகங்களில், வலைதளங்களில், பொய்யான விவரங்களைப் பரப்புவது போன்றவை, பிஜேபிக்கு எதிராக இல்லாமல், நாட்டிற்கே எதிராக இருப்பதையும் கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினையை உண்டாக்கி, அதன் மூலம் ஆதாயம் கிட்ட பார்க்கிறது. இவற்றையெல்லாம் பிஜேபி கவனித்துக் கொள்ள வேண்டும்.

Owasi talking about dalit-mukt Bharat Jan.2018

ஆக பிஜேபிகாரர்கள் கவனிக்க வேண்டியது: பிஜேபி ஆதரவாளர்கள், மோடி பிரியர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள் இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்று தெரியவில்லை.

 1. எஸ்.சிக்களை ஒதுக்கினால், பிஜேபிக்கு இழப்பு ஏற்படும், இது வரை நான்கு பிஜேபி எம்பிக்கள்[5], மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
 2. மோடி, இவ்விசயத்தில் [எஸ்.சி விவகாரம்] அமீத் ஷாவிடம் அதிருப்தியைத் தெரிவித்துள்ளாதாக தெரிகிறது.
 3. உபியில், மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் உடன்படிக்கை [யாதவ் + எஸ்.சி ஓட்டு%] ஏற்பட்டால், பிஜேபிக்கு பாதிப்பு ஏற்படும்.
 4. எதிர்கட்சிகள் எஸ்.சி விவகாரத்தை வைத்துக் கொண்டு, குழப்பத்தை ஏற்படுத்தி, தேர்தல் பிரச்சாரமாக்க திட்டமாகி விட்டது[6].
 5. லிங்காயத்து தனி மதம், ஜைனர்களுக்கு அவ்வாறான ஆசை காட்டுவது, ஆந்திராவுக்கு, சிறப்பு அந்தஸ்து காவிரி பிரச்சினை..இப்படி பிஜேபிக்கு எதிராக….பிரச்சினைகள் உருவாக்கப்பட்டது.
 6. ஜி.எஸ்.டி அமூல் தாமதத்தால், அமெரிக்க முதலீடு தேக்கம், அமூலுக்குப் பிறகு உண்டான தயக்கம், வேலைகள் உருவாக்குவதில் தாக்கம், பிஜேபிக்கு பாதிப்பு.
 7. “தலித்-முக்த்” பாரத்[7] என்று [“காங்கிரஸ்-முக்த் பாரத்”எதிராக] காங்கிரஸ் விசமத் தனமான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது! ஒவைஸி பேசியதை ராகுல் பேசியயுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது[8].
 8. மேற்கு வங்காளம், ஒரிஸா, ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா என்று பிஜேபி இல்லாத மாநிலங்கள் மீது குறி வைத்துள்ளது காங்கிரஸ்.
 9. பிரிவினைவாதம், திராவிட நாடு, கம்யூனிஸம் முதலியவை மறுபடியும் பழைய பாட்டை பாட ஆரம்பித்துள்ளதை கவனிக்கலாம்!
 10. மோடியின் ஆளுமைத் தன்மையினை உபயோகப் படுத்திக் கொள்வதில், இவை தடங்களாக இருக்கும் பொய் பிரச்சாரத்திற்கு உதவும்.

© வேதபிரகாஷ்

09-04-2018

Ragul talks like Owasi about dalit-mukt Bharat April.2018

[1] மாலைமலர், தலித் கிராமங்களுக்கு சென்று தங்கி இருந்து பேசுங்கள் பாஜக எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு, பதிவு: ஏப்ரல் 07, 2018 16:20

[2] https://www.maalaimalar.com/News/National/2018/04/07162004/1155690/Narendra-Modi-asks-BJP-MPs-to-spend-two-nights-in.vpf

[3] தினமணி, எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளன: மோடி குற்றச்சாட்டு, By DIN | Published on : 07th April 2018 01:08 AM .

[4]http://www.dinamani.com/india/2018/apr/07/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2894948.html

[5] Bahraich MP Savitri Bai Phule, Robertsganj MP Chhote Lal Kharwar and Etawah MP Ashok Kumar Dohre.  Nagina constituency, Yashwant Singh

[6] Pioneer, Modi working to make India Dalit-mukt: Cong, Monday, 09 April 2018 | PNS | New Delhi

[7] http://www.dailypioneer.com/nation/modi-working-to-make-india-dalit-mukt-cong.html

[8] News.18, BJP Wants a Muslim-mukt, Dalit-mukt Bharat: Asaduddin Owaisi, Sakshi Khanna | CNN-News18Updated:January 23, 2018, 12:11 PM IST

https://www.news18.com/news/politics/bjp-wants-a-muslim-mukt-dalit-mukt-bharat-asaduddin-owaisi-1639413.html

அம்பேத்கரைவிட அறிவாளியா ராகுல் – மறுபடியும் காங்கிரஸ் செய்துள்ள பெரிய துரோகம் –- ஜெயின் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து!

ஜனவரி 21, 2014

அம்பேத்கரைவிட அறிவாளியா ராகுல் – மறுபடியும் காங்கிரஸ் செய்துள்ள பெரிய துரோகம் –- ஜெயின் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து!

அம்பேத்கரை மிஞ்சிய ராகுல்

அம்பேத்கரை மிஞ்சிய ராகுல்

ஜைன சமாஜத்தினர் ராகுலை சந்தித்தது (20-01-2014): இந்தியாவில் ஜெயின் சமூகத்தினர் சுமார் 50 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்கள் தங்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். (உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், ஜெயின் சமூகம் சிறுபான்மையினர் பட்டியலில் உள்ளது[1]). ஜெயின் சமூக பிரதிநிதிகள் 20-01-2014 அன்று காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர். அதை அவர், பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்திற்கு கொண்டு சென்றார். ஜெயின் மதத்தினரை சிறுபான்மை பிரிவின் கீழ் சேர்க்க, ராகுல் ஆர்வமாக உள்ளார். இது தொடர்பாக, பிரதமருடன் தொடர்பு கொண்டு, ராகுல் பேசியுள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி, ஜெயின் சமுதாயத்தினர், ராகுலிடம் வலியுறுத்தி உள்ளனர்.

Minority status to Jains cartoon

Minority status to Jains cartoon

சிறுபான்மைஅந்தஸ்துஉடனேஅளித்தது (21-01-2014): ஜெயின் சமுதாயத்தின் ஓட்டுகளை அள்ளுவதற்காக, இந்த கோரிக்கையை ஏற்க காங்., தீவிரமாக உள்ளது[2]. இந்த நிலையில் 21-01-2014 அன்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் ஜெயின் சமூகத்தினரை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது[3]. ஆனால், இதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. ஆகவே, இப்புதல் ஒரு சரத்துடன் சேர்ந்தது என்று குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பில் இந்திய சிறுபான்மையினர் கமிஷன் சட்டத்தின் சரத்து 2(c) ன் படி அந்த அந்தஸ்த்தைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

Minority status to Jains - hindi news cutting

Minority status to Jains – hindi news cutting

நீதிமன்றங்களில்நிலுவையிலுள்ளவழக்குகளைமீறிஅந்தஸ்துகொடுத்தது: 2005ல் ஜெயினர்கள் சிறுபான்மைஅந்தஸ்த்தைக் கேட்டு பல் பாடில் [Jains advocate Bal Patil ] வழக்குத் தொடுத்த போது, உச்சநீதிமன்றம், அத்தகைய தீர்மானத்தை மாநிலங்கள் தாம், “மொழி மற்றும் மதரீதியிலாக” [ T.M.A. Pai case ] அவ்வாறு உள்ளார்களா என்று கண்டறிந்து அத்தகைய நிலையை அறிவிக்க முடியும் என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மறுபரிசீலினை மனு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது[4]. மேலும் இவ்வழக்கில் படிப்பளிக்கும் நிறுவனங்கள் நிர்வகிக்கின்ற கல்லூரிகளுக்கு அத்தகைய அந்தஸ்து கொடுக்கலாமா, கூடாதா என்ற பிரச்சினையில் தான் வழக்குப் போடப் பட்டது[5]. இப்பொழுது, இதனை, மதரீதியில் சிறுபான்மை என்ற நோக்கில் திசைமாறுவது நோக்கத்தக்கது. இந்நிலையில், சோனியா காங்கிரஸ் வேண்டுமென்றே, சட்டத்தின் நிலையை அறிந்தும், தேர்தல் காலத்தில் ஓட்டுகளை, சீட்டுகளைப் பெறலாம், அல்லது அச்சமூகத்தினரை உடைத்து ஆதரவைப் பெறலாம் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. இதே காரணத்திற்காக, பிஜேபியும் அமையாக இருக்கிறது என்பதனை கவனிக்கலாம்.

Minority status to Jains cartoon.vedaprakash

Minority status to Jains cartoon.vedaprakash

ஆறவதுசிறுபான்மையினர்ஆவார்களாம்: ஒருவேளை, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஜைனர்களுக்கு சார்பாக முடிவானால், செக்யூலரிஸ இந்தியாவில் இவர்கள் ஆறாவது சிறுபான்மையினர் என்ற அந்தஸ்தைப் பெறுவர்[6]. அதைத் தொடர்ந்து ஜெயின் சமூகத்திற்கான அரசு சலுகைகள் வழங்கப்படும். ஏற்கனவே

 1. முஸ்லிம்,
 2. கிறிஸ்தவர்,
 3. சீக்கியர்,
 4. புத்தமதத்தினர் மற்றும்
 5. பார்சி இனத்தவர்

சிறுபான்மையினர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மத்திய சிறுபான்மை விவகாரஆமைச்சர், ரஹ்மான் கான், ஜைனர்களிடமிருந்து அத்தகைய கோரிக்கை வந்துள்ளது என்றும், அது பரிசீலினையுள்ளது என்றும் அறிவித்திருந்தார். 2001 சென்சஸின் படி 0.4% ஜைனர்கள் இந்திய ஜனத்தொகையில் உள்ளனர்.

T.M.A.Pai Foundation & Ors vs State Of Karnataka & Ors on 31 October, 2002[7]: டி.எம்.ஏ. பை பவுண்டேஷன் வழக்கு பள்ளி, கல்லூரி முதலியவற்றை நிர்வாகிக்க்கும் விசயத்தில் சலுகைகளைப் பெறுவதற்காக, சிறுபான்மை அந்தஸ்து கேட்டு உச்சநீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் சென்றனர். இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின், பிரிவு 25ன் படி, “சமூக மற்றும் படிப்பு நிர்வாகமுறைகளுக்கு” ஜைன, பௌத்த மற்றும் சீக்கிய நிறுவனங்கள், இந்துக்களைப் போன்றே கருதப்படும் என்றுள்ளது. ஆகவே, முதலில் இதனை உடைத்தாக வேண்டியுள்ளது. பிறகு பிரிவு 30ன் கீழ் வர, தங்களை “சிறுபான்மையினர்” என்று தெர்வித்துக் கொள்ளவேண்டும், பிறகு அரசு அவ்வாறே அறிவிக்க வேண்டும். அம்பேத்கர் இப்பிரிவுகளை நுழைக்கும் போது, ஏகப்பட்ட விவாதங்கள் நடந்து பின்னர் தான், இப்பிரிவுகள் ஒப்புக் கொள்ளப்பட்டு, சட்டத்தில் இடம் பெற்றன. ஆனால், இன்றோ, அம்பேத்கரையும் மீறி ராகுல் போன்றோர் ஒரே நாளில், சட்டங்களை மீறத் தயாராகி விட்டனர்.  “மொழிரீதியில் அல்லது மதரீதியில்” சிறுபான்மையினர் எனும் போது, ஒவ்வொரு மாநிலத்திலும், அவ்வாறு ஏகப்பட்ட பிரிவுகள் வருவார்கள்.

 • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்துக்கள் வருவார்கள், ஆனால், அவர்களுக்கு அந்நிலை கொடுக்கப் படவில்லை.
 • சமஸ்கிருத மொழி ரீதியில் அம்மொழி பேசுபவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் “சிறுபான்மை அந்தஸ்து” கிடைக்க வேண்டும், கிடைப்பதில்லை.
 • பிராமணர்களும் அவ்வாறே கேட்கலாம், கேட்டால் எதிர்ப்பு வந்துவிடும்.
 • இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
 • ஆனால், செக்யூலரிஸ இந்தியாவில் சட்டங்கள், தீர்ப்புகள் எல்லாம் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுவதில்லை, அமூல் படுத்தப்படுவதில்லை.

வேதபிரகாஷ்

© 21-01-2014


[3] தினத்தந்தி, ஜெயின்சமூகத்துக்குசிறுபான்மையினர்அந்தஸ்து; மத்தியமந்திரிசபைஒப்புதல்வழங்கியது, பதிவு செய்த நாள் : Jan 21 | 04:49 am

[4] In 2005, the Supreme Court had disposed the appeal of minority-designation-for-Jains advocate Bal Patil — in the case that now goes by his name — on the ground that the judgment in the T.M.A. Pai case had said States would be the unit for considering demands of both linguistic and religious minority status. A review petition filed by the Centre in this regard is still pending.

http://www.thehindu.com/news/national/minority-status-accorded-to-jains/article5598368.ece

[6] The Union Cabinet on Monday decided to accord minority status to Jains but the decision would be subject to the outcome of pending cases on the issue. If the court cases are settled in favour of the Jains, the community would become the sixth designated minority community of the country. As per the Cabinet note, Jains would be included as a minority under Section 2(c) of the National Commission for Minorities (NCM) Act (NCM), 1992.

http://www.thehindu.com/news/national/minority-status-accorded-to-jains/article5598368.ece

[7] Supreme Court of India – T.M.A.Pai Foundation & Ors vs State Of Karnataka & Ors on 31 October, 2002

Author: Kirpal Bench: B.N.Kirpal, G.B.Pattanaik, V.N.Khare, S Babu, S.S.M.Quadri; CASE NO.: Writ Petition (civil) 317 of 1993; http://www.indiankanoon.org/doc/512761/