ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை – “தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (3)
வீரமணியின் விடுதலையின் திரிக்கப்பட்ட செய்தி விமர்சனம்[1]: விடுதலையில் “வீரமணி பொய்களையும் சேர்த்து இவ்விதமாக செய்தியை வெளியிட்டார்[2]. வேண்டுதலுக்காக பிறர் சாப்பிட்ட எச்சில் இலையின் மீது உருளும் அநாகரிகமான காட்டு விலங்காண்டித் தனத்துக்கு மதுரை நீதிமன்றம் தடைவிதித்தது. கரூர் மாவட்டம் நெரூர் என்ற கிராமத்தில் உள்ள சதாசிவ பிரமேந்திரர் கோவில் உள்ளது. கன்னடப் பார்ப்பனப் பஜனைப் பாடகர் சதாசிவ பிமேந்திரா[3] என்பவன் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்து பஜனைப் பாடினானாம்[4]. அவர் இங்குள்ள பார்ப்பனர் வீட்டில் சாப்பிட்டு விட்டுச் சென்றாராம் அன்றுமுதல் இங்குள்ள கோவிலில் அனைவரும் சாப்பிட்ட எச்சில் இலையில் ஊர்க்காரர்கள் உருள வேண்டும் என்ற ஒரு முட்டாள் தனமான நம்பிக்கை உருவாக்கப்பட்டது. இதனை ஆரம்பத்தில் சிலர் மட்டுமே செய்துவந்த இந்த அசிங்கத்தனமான செயல் பிறகு பலவித பொய்க் கதைகளுடன் அந்த ஊர்க்காரர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்குப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பத்திரிகை இணைப்பில் வரும் ஆன்மீக இதழில் இந்த எச்சில் இலை உருளும் விழாவில் கலந்துகொண்டால் அய்ஸ்வர்யம் (செல்வம்) பெருகும் என்று புளுகித்தள்ள விரைவிலேயே இந்த விழா முக்கியமாக கரூர் திருச்சி போன்ற ஊர்களில் பிரபலமானது. ”
தீர்ப்பு வரும் என்று தெரிந்த பிறகு காலையிலேயே நடத்த ஆரம்பித்துவிட்டனர் என்று புளுகிய விடுதலை: விடுதலை தொடர்கிறது, “100 ஆண்டுகளாக தொடந்து நடந்து வந்த இந்த விழா இந்த ஆண்டு 101- ஆவது விழாவாக விளம்பரம் செய்யப்பட்டு உள்ளூர் தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு என விழாக்குழுவினர் கூறியிருந்தனர். இந்த மனிதத்தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப் படுத்துவதை தடைசெய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளயத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி. தலித்பாண்டியன் என்பவர் மதுரை நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். மணிக் குமார், வி.எம்.வேலுமணி எச்சில் இலையில் உருளும் விழாவிற்கு உடனடியாக தடைவிதித்தனர். எப்போதும் மதிய உணவிற்குபிறகு நடை பெறும் இந்த விழா நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் என்று தெரிந்த பிறகு காலையிலேயே நடத்த ஆரம்பித்துவிட்டனர். தாலி அறுப்பு விழாவிற்கு தடை விதிப்பு முன்னமே தெரிந்ததால், முன்னமே நடத்தியதை வைத்து வீரமணி எழுதியிருப்ப்து தெரிகிறது. இந்த நீதிமன்றத் தடை குறித்த செய்தி முடியாது என்று கூறி தடைசெய்தது இந்த செய்தி விடுதலை நாளிதழில் வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.”
“தலித்” போர்வையில் இந்துக்களைப் பிரிக்கும் முயற்சி: நெரூரில் வருடாவருடம், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் நினைவு நாள் கொண்டாடப்படும் தேதியில், தெருவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சாப்பாடுப் போடப்படுகிறது. இதில் எல்லா சமுதாய மக்களும் கலந்து கொண்டு உணவு உண்டு வருகிறார்கள். உணவு உண்ட பிறகு, வேண்டிக் கொண்டவர்கள், சாப்பிட்டப் பின் உள்ள அந்த இலைகளில் உருளுவது / அங்கப்பிரக்ஷணம் செய்வது பழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறுதான் 28-04-2015 அன்று நெரூரில் வழக்கமாக நடந்து முடிந்தது. ஆனால், போலீஸார் அங்கு வந்திருந்தது, சிலரின் கவனத்தில் பட்டது. விசாரித்தபோது, யாரோ அந்த இலைகளில் உருளுவது / அங்கப்பிரக்ஷணம் செய்வது பழக்கத்தை / சடங்கை தடுக்க நீதி மன்றத்தில் தடை விதிக்க மனுதாக்குதல் செய்துள்ளதால், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்று பாதுகாப்பிற்கு வந்துள்ளதாக அறிவித்தனர். பிறகு தான், சில நாளிதழ்களில் வந்துள்ள செய்திகளின் படி, தலித் பாண்டியன் என்பவர், பிராமணர் சாப்பிட்ட இலைகளில் பிராமணர்-அல்லாதவர் இலைகளில் உருள வைப்பது / அங்கப்பிரக்ஷணம் செய்ய வைப்பது நிகழ்சிக்கு தடை விதிக்கப்பட வேண்டும் ஏனெனில், அதில் இலைகளில் மிச்சம் வைத்த எச்சில் சாதத்தை உண்ணவைக்கிறார்கள் என்று மனுவில் அறிவித்திருந்ததால், தடை விதிக்கப்பட்டது. ஆனால், உண்மைக்குப் புறம்பாக, அத்தகைய வாதத்தை மனுவில் இருந்தது மற்றும் விவரங்கள் சரிபார்க்காமல் தடைவிதித்திருப்பது தெரிகிறது. இனி அடுத்த வருடம் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
© வேதபிரகாஷ்
08-05-2015
[1] http://www.viduthalai.in/headline/100565-2015-04-29-10-09-53.html
[2] விடுதலை, கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!எச்சில் இலையில் உருளும் மக்கள்தடைவிதித்தது மதுரை நீதிமன்றம், புதன், 29 ஏப்ரல் 2015 15:38; Read more: http://www.viduthalai.in/headline/100565-2015-04-29-10-09-53.html#ixzz3ZV63S2sK,
[3] கன்னடப் பார்ப்பனப் பஜனைப் பாடகர் என்பது பொய்யானதாகும். சிவராமகிருஷ்ணனன் என்ற பெயரைக் கொண்டவர் தெலுங்கு பிராமணர் ஆவர்.
[4] சதாசிவ பிமேந்திரா என்பவன் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்து பஜனைப் பாடினானாம். என்று குறிப்பிடுவதிலிருந்து, எந்த அளவிற்கு துவேசம் வெளிப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இதே முறையில் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை இந்த நாத்திகர்கள் குறிப்பிடாததைக் கவனிக்க வேண்டும்.