தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)!
நடிகர் கமலகாசன் / கமல்ஹாசன் தனது 61-வது பிறந்தநாள் விழாவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் ரசிகர்களுடன் 07-11-2015 (சனிக்கிழமை) அன்று கொண்டாடினார். நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் நடத்தியவர்களுக்கு கேடயங்கள், பள்ளிக்கட்டிட நிதி போன்றவற்றை அவர் வழங்கினார். அப்பொழுது பல பிரச்சினைகளைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது. திராவிட கழகத்தின் மூலம் வெளிவரும் “விடுதலை”யில் வந்துள்ளவற்றை வைத்து, அதை மற்ற செய்திகளோடு ஒப்பிட்டு சேர்த்து, இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஏன் “விடுதலை” என்று கேட்கலாம். ஏனெனில், விடுதலையில், இவரைப் பற்றிய நாத்திக சிறப்பை எடுத்துக் காட்டிஆவரது ந்ண்பர்கள் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தீபாவளி வந்து விட்டாலே, கமல் ஹஸன் சொன்னது என்று “மயிலாடன்” என்ற பெயரில் கமலின் நாத்திக மேன்மையினை எடுத்துக் காட்டுவார்கள். அடுத்த “பெரியார்” அல்லதும் வாழும் “பெரியார்” போல சித்தரித்துக் காட்டுகிறார்கள். எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிதழ்களின் விவரம், அடிக்குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தலைப்புகள் (கீழேயுள்ள ஒவ்வொரு பத்திக்குக் கொடுக்கப்பட்டுள்ளது), அதிலுள்ளதையே தலைப்பாகக் கொண்டு, விடுபட்டவற்றை சேர்த்துக் கொண்டுள்ளேன். கமல் பேசியதை “இடாலிக் / சாய்வெழித்துகளில்” குறிப்பிடப்பட்டுள்ளது, எனது விமர்சனங்கள் சாதாரண எழுத்துகளில் உள்ளன.
சாமி சிலை பயன் தராது[1] (கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் உரிமைகள் மோதுகின்றன): “நாம் ஆண்டுதோறும் நற்பணிகள் செய்து வருகிறோம். அதனை நினைவூட்டும் விழாவாகவே இது நடத்தப்படுகிறது. இங்கு பரிசு பொருட்கள் எனக்கு தரப்பட்டன. விழா காலங்களில் நீங்கள் செய்யும் உதவிகள் எல்லாம் எனக்காக செய்யும் மரியாதைகள் அல்ல என்று நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு பரிசாக அளிக்கப்படும் தங்கமும், வைரமும் வேலைக்கு ஆகாது. நீங்கள் அன்போடு கொடுக்கிறீர்கள், வெள்ளியிலான சாமி சிலையும் தந்தார்கள். புத்தகம், மருந்துகள் பயன் படக்கூடியவை. சாமி சிலை பயன்தராது. பக்தியும் மேம்படாது. அதை உருக்கத்தான் வேண்டும். ஒவ்வொரு முறையும் சந்தேகத்துடன் பல கேள்விகள் என் மீது எழுப்பப்பட்டு இருக்கின்றன. என் படங்கள் வெளியாகும் போது, நீ நல்ல நடிகன் தானா என்று ஒவ்வொரு முறையும் எழுப்பப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அக்கேள்விக்கான பதிலாக துணிச்சலும், திறமையும் என்னிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கும் வரை நான் இந்த தொழிலில் நீடிப்பேன்”. வெள்ளிவிக்கிரகங்கள் கொடுப்பது பிடிக்காது எனும்போது, ஒன்று அவ்வாறு கொடுக்க வேண்டாம், காசாகக் கொடுங்கள் என்று கேட்கலாம் அல்லது கமலின் இந்துவிரோததன்மையினை அறிந்து, ரசிகர்கள் அவ்வாறு கொடுக்காமல் இருக்கலாம். இதிலும் உரிமைகள் மோதத்தான் செய்கின்றன.
அரசியலுக்கு வரமாட்டேன்: விழாவில் கமல் பேசுகையில், “ஐந்தாண்டுக்கு ஒருமுறை என்னை ஏன் அரசியலுக்கு வருகிறீர்களா என்று ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். நலத்திட்டங்கள் வழங்குவதால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்கிறார்கள்[2]. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன், கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டேன். அது வேறு ஒரு தளம். 5 ஆண்டுக்கு ஒருமுறை எமது விரலில் கறை படிவதே போதும். வேறு எந்த கறையும் வேண்டாம். என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும். கமலஹாசன் என்ற பேருந்தில் ஏறினால் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன். என்னுடன் இருப்பவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அரசியல் பற்றி புரியாதவர்களும் அல்ல. அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம். பகுத்தறிவு என்பது அரசியலால் எமக்கு கிடைக்கவில்லை”, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்[3]. ஆனால், பகுத்தறிவுவதிகள் தாம், தமிழகத்தில் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அரசியலைப் பற்றிய முரண்பாடான நிலை: தினமணி, “தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும், அதில் பங்கெடுப்பேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்”, என்று செய்தி வெள்ளியிட்டுள்ளது[4]. அக்டோபர் 30ம் தேதி, மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்[5]. அவருடானான இந்த திடீர் சந்திப்பு குறித்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘‘ராஜ் தாக்கரே என் நீண்ட நாள் நண்பர். நட்பு ரீதியாகவே அவரை சந்திக்க வந்தேன்’’ என கூறினார்[6]. இந்த சந்திப்பின் போது நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனும் உடன் இருந்தார். பாலிவுட்டில் உள்ளவர்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் சிவசேனா ஆதரவு, அணைப்பு, அனுசரிப்பு இல்லாமல் தொழில் நடத்தமுடியாது என்று எந்த சினிமாக்காரனுக்கும் தெரியும். கமல் ஹஸனுடனான மும்பை தொடர்பு அலாதியானது. சரிகாவுடன் இருந்து தான், இரண்டு பெண்களை பெற்றுக் 1986 –ஸ்ருதி மற்றும் 1991 – அக்ஷரா ஆண்டுகளில் கொண்டுள்ளார். சென்னைக்கு சரிகா வந்துள்ளார், ஆனால், சிம்ரன் தொடர்பினால் விவாகரத்து நடந்தது[7]. இப்பொழுது சோடாராஜன் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் இத்தகைய சந்திப்புகளின் பின்னணி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?[8]: “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. திருப்பிக் கொடுத்திருந்தால், அவர் வக்கீல் தொழிலை செய்திருக்க முடியாது. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”. முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது.
எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு: “எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு. ஆனாலும் ஒரு தாய் அன்பாக என் நெற்றியில் விபூதி பூசினால் அழிக்கமாட்டேன். அதுதான் என் பகுத்தறிவு. இந்த பகுத்தறிவு அரசியல் வாயிலாக வந்தது அல்ல. நல்ல மனதில் இருந்து வந்தது”. இதுவும் போலித்தனமாக இருக்கிறது. நாங்குனேரியில் விபூதி சகிதம் சென்றது ஏன் என்று யாரும் கேட்கவில்லை போலும். நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார்[9]. அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்[10]. அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்து, பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார். இதைப் பற்றி, முந்தைய பதிவில் அலசப்பட்டுள்ளது. ரசிகர்கள் தாம் இத்தகைய முரண்பாடுகள், இரட்டை வேடங்கள் அல்லது போலித்தனம் போன்றதைக் கண்டுகொள்ள வேண்டும்.
தெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. கமல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[11]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[12]. மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[13]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன்? என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்”[14]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இதர ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும். அப்படியென்றால் குடிப்பவர்கள் குடித்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. பொதுவாக குடிக்காதே, உடலுக்குக் கேடு என்றுதான் அறிவுரை கூறுவார்கள். இவரோ கடவுள் இருக்காரா-இல்லையா என்ற உதாரணத்தைத் தவறாகக் குறிப்பிட்டு, நன்றாகக் குடியுங்கள் என்பது போல வாதிடுகிறார்.
© வேதபிரகாஷ்
09-11-2015
[1] விடுதலை, தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை கலைஞானி கமலகாசன் கருத்துரை, ஞாயிறு, 08 நவம்பர் 2015 15:06, பக்கம்.1.
[2] தமிழ்.ஒன்.இந்தியா, நான் அரசியலுக்கு கண்டிப்பாக வரமாட்டேன்… நடிகர் கமலஹாசன் பரபரப்பு பேச்சு!, Posted by: Karthikeyan, Updated: Saturday, November 7, 2015, 20:58 [IST].
[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-kamal-hasan-birthday-function-speech-239457.html
[4] தினமணி, தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும் பங்கெடுப்பேன்:கமல்ஹாசன், By சென்னை, First Published : 08 November 2015 03:29 AM IST.
[5] மாலைமலர், மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 31, 5:34 AM IST
[6] http://www.maalaimalar.com/2015/10/31053411/Kamal-Haasan-meets-Raj-Thacker.html
[7] Filmmaker and southern superstar Kamal Haasan has always had a tumultous time especially when it comes to his personal life. The actor had two failed marriages, both breaking due to the involvement of a second woman. Kamal Haasan’s first marriage was to actress Veena Ganapathy which broke apart when Haasan grew closer to actress Sarika. His marriage to Sarika failed when Haasan was alleged to be in a relationship with a relatively younger actress Simran. The divorce was pain staking and apparently ugly.
[8] தினத்தந்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST
விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு
[9] http://cinema.dinamalar.com/tamil-news/21599/cinema/Kollywood/Kamal-meets-godman-with-spiritual-get-up.htm
[10] மாலைமலர், ஆன்மீகத்துக்கு மாறினாரா கமல்?: நெற்றியில் விபூதி பூசினார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 03, 12:59 PM IST.
[11] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.
[12] மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.
[13] http://www.maalaimalar.com/2015/11/08024247/Kamal-Hassan-speech-My-toleran.html
[14] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7855849.ece