Archive for the ‘சமஸ்கிருதம்’ Category

இந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா? [2]

மார்ச் 5, 2020

இந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா?  [2]

DK - Krishna issue-Stalin

ஸ்டாலின்ராமதாஸ் அறிக்கைகள் வேடமா, போலியா, அரசியலா?: ஸ்டாலின் சொன்னது, “மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் உணர்வை மீறிமாநில உரிமையை நசுக்கும் விதமாக, திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் எடுத்துக் கொண்டு தமிழர்களின் நாகரிகத்தைகலாச்சாரத்தை சிதைக்க மத்திய பா... அரசு முயற்சி செய்யுமேயானால்அதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு கோயில்களை தொல்லியல் துறை கையகப்படுத்த முயன்றால் அதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்[1]. பாமக அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்தபோதிலும், கடும் வார்த்தைகளால் மத்திய அரசை கண்டிக்க தவறவில்லை[2]. இவ்விருவரும் ஒரே மாதிரி அறிக்கை விடுத்துள்ளதை, சில ஊடகங்கள் எடுத்துக் காட்டியுள்ளன[3]. இருப்பினும், பாமக இந்து விரோத கட்சியோ, நாத்திகக் கட்சியோ இல்லை[4]. மேலும், திராவிடத்தை ஒழிப்போம் என்று ராமதாஸ் குரல் கொடுத்துள்ளதை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். ஆகவே, இவையெல்லாம் அரசியலுக்காக என்று தான் எடுத்துக் கொள்ளலாம்.

Anti-Hindu, Stalin acts in a different way-3
இந்துவிரோதி ஸ்டாலின் அறிக்கையைத் தொடர்ந்து இந்துதுவேஷி வீரமணியின் அறிக்கை: தமிழக கோவில்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதா? என்று மத்திய அரசுக்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்[5]. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[6]: “தமிழகத்தில் கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறையை (Hindu Religious Endowment Board Department) சார்ந்ததாகும்.  நீதிக்கட்சி என்ற ஜஸ்டீஸ் கட்சியாகிய திராவிடர் ஆட்சியில் பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்ப்புகளை எதிர்த்துப் போராடி, அதை பிரிட்டிஷ் அரசு காலத்திலே சட்டமாக்கி சாதனை புரிந்தனர்[7]. கோவில் அர்ச்சகர்பெருச்சாளிகள்‘ ‘பூனைகளாகவும் கோவில் வருமானங்களை சரி வர தணிக்கையின்றி சுரண் டியதைத் தடுக்கவே அச்சட்டம்[8]. அதனுடைய கடமைபக்தி பரப்புவதோ, கும்பாபிசேகம் செய்வதோ அல்ல; சட்டப்படி; வருகிற வருமானம் சரிவரச் செலவிடப்பட்டு கணக்குக் காட்டப்படுகிறதா? என்பதற்குத்தான்! மற்ற வட மாநிலங்களில் கோவில்கள் தனித்தனியே சுரண்டல் பக்தி வியாபார நிலையங்களாக, ‘கொள்ளை கூட்டுறவு வினைஎன்று வடலூரார் சொன்னபடி நடந்துவரும் நிலையில், நீதிக்கட்சி 95 ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்றுச் சாதனை செய்தது”.

June 2018, SriRangam temple, Stalin, priest apply paste-Stalin removed-2

இந்துவிரோதி வீரமணியின் ஒப்பாரி: இந்து-துரோகி வீரமணி, தொடர்ந்து ஒப்பாரி வைத்தது, “இதனை ஒழித்து மீண்டும் பார்ப்பனர் கொள்ளைக்கு வழிவகுக்கவே இங்கு அரசுத் துறையாக அது இருக்கக்கூடாது என்று இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. தயானந்த சரசுவதி என்ற (மஞ்சக்குடி நடராஜய்யர் தான் இவர்) பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தில் வழக்கே போட்டு, அது நிலுவையில் உள்ளது. அந்தத் துறைமீது தொடர்ந்து பழி சுமத்தி, கடமையாற்றும் அதிகாரிகள்மீது அழிவழக்குகள் போட்டு, மிகவும் தொல்லை கொடுத்து, எப்படியும் அந்த ஏற்பாட்டை மாநில அரசுத் துறையில் இருப்பதை ஒழிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று  [02-03-2020], தொல்பொருள்துறை கண்காணிப்பின் கீழ் உள்ள தமிழக கோவில்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர இருக்கிறது என்று மத்திய மந்திரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இது மிகவும் ஆபத்தான, மாநில உரிமையை பறிக்கும் விபரீத யோசனை. இதன்படி பார்த்தால் தஞ்சை பெரிய கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் நிலை வெகுவிரைவில் வரும். இதனை தொடக்க நிலையிலேயே தடுத்து நிறுத்தவேண்டியது தமிழக அரசின் அவசர கடமையாகும்.

Karu-as-nataraja

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கருணா!

இந்துவிரோதி வீரமணியின் ஒப்பாரி தொடர்கிறது: இந்து-துரோகி வீரமணி, தொடர்ந்து ஒப்பாரி வைத்தது, “கிஷிமி என்ற தொல்பொருள் துறையின்கீழ் இருப்பது மேற்பார்வை, சிற்பங்கள் முத லியவை மட்டுமே என்பது அறவே மாற்றப்பட்டு, மத்திய அரசு கோவில் களாகவே அவை அறிவிக்கப்பட்டு கையகப்படுத்தப்படக் கூடும். நீதிக்கட்சி திராவிடர் ஆட்சி செய்த இந்து சமய அறநிலையத் துறையை மெல்லக் கொல்லும் நஞ்சுபோல ஒழிக்கவே இது ஒரு முன்னோட்டம்கவனமாக இருக்கட்டும் தமிழக அரசு! இப்படி நாம் சுட்டிக்காட்டும்போது சிலர் நாத்திகர்கள் கோவிலுக்கு போகாதவர்கள், ஏன் இதுபற்றி கவலைப்படவேண்டும்? என்று கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு சொல்கிறோம், இது ஆத்திகர்நாத்திகர் உரிமை பிரச்சினை இல்லை. மாநிலங்களின் உரிமை பிரச்சினை என்பதும், தனிநபர்கள் வடநாட்டில் கோவில்களை வைத்து பிழைப்பு நடத்தும், சுரண்டலுக்காகவே பயன்படுத்தும் பேராபத்துகள் இங்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வருமுன்னர் தடுப்பதே புத்தி சாலித்தனம்!,” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தினத்தந்தி, இந்த ஒப்பாரியில் துவேச வரிகளை நீக்கி, சிறியதாக செய்தி வெளியிட்டிருந்தது. விடுதலையில் முழுமையாக உள்ளது.

Kani, Tirupati case filed

இந்துவிரோத திராவிட கட்சிகள், தலைவர்கள், சித்தாந்திகள், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியாகவேண்டும்: கடந்த 60 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தான், பகுத்தறிவு என்ற பெயரில் பலவற்றை செய்துள்ளது. ஈவேரா, அண்ணா, கருணாநிதி…..என்று எல்லோருமே தங்களது இந்துவிரோதத்தை பரப்பி, கோவில்-எதிர்ப்பு, கடவுள் மறுப்பு கொள்கைகளை திணித்து, மக்களைக் கெடுத்து, கோவில்கள், கோவில் சொத்துகளை கொள்ளை அடித்து, சிலைகளை கடத்தி விற்க உதவியுள்ளார்கள். இன்று வரை கருணாநிதியின் மகன் ஸ்டாலின் மற்றும் மகள் கனிமொழி, வீரமணி மற்ற வகையறாக்கள் இந்து மதம், கடவுள், சடங்கு, நம்பிக்கைகள் முதலியவற்றைப் பற்றி ஆபாசமாக, அசிங்கமாக, நாகரிகமற்ற முறைகளில் பேசி வருகிறாற்கள். ஊடகங்களில் அவை ஆதாரமாக பதிவாகி உள்ளன. அந்நிலையில், இவர்கள் திடீரென்று  தாங்கள் கோவில்கள் மீது அக்கரை உள்ளது போன்று காட்டிக் கொள்ள அறிக்கைகள் விடுப்பது, அரசியல் என்றே வெளிக் காட்டியுள்ளது. உண்மையில் அவர்களுக்கு, எந்த அக்கரையும் இல்லை.

Stalin 60th marriage-2

 1. தமிழர்களின் நாகரிகத்தை – கலாசாரத்தை பற்றி ஸ்டாலினுக்கு ஏதாவது தெரியுமா? இதுவரை சிதைத்தது தெரியாதா என்ன?
 2. துரோகம் என்றெல்லாம் பேசும் இந்த ஆளுக்கு, என்ன யோக்கியதை இருக்கிறது? கோவிலுக்கும் ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமே இல்லையே?
 3. அமாவாசை-அப்துல் காதர் என்றால் கூட பரவில்லை, இந்த ஸ்டாலின் – கோவில் ஒட்டவே ஒட்டவில்லையே, கழகக் கண்மணிகளே?
 4. ஶ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து பிள என்ற நன்னாளை பார்த்த அப்பன், வைத்த ஶ்ரீரங்க சந்தனத்தை அழித்த மகன், பிறகு என்ன வெங்காயம்?
 5. இதில் மாபெரும் இந்து விரோதி வீரமணி நுழைவது தான், அதை விடக் கொடுமை! ஏதாவது இருக்க வேண்டாமா? கொஞ்சம் கூட இல்லையே?
 6. நொண்டியின் 100 கிமீ ஓட்டம், கசாப்புக் காரனின் அஹிம்சை, விபச்சாரியின் கற்பு, சிலையுடைப்பு ஈவேரா, இவற்றைவிட அசிங்கமாக இருக்கிறதே?
 7. தாலியறுப்பு கேசுகள், அமங்கல மூஞ்சிகள், துவேஷ-விஷம் கக்கும் வாய்கள், குரூரமான மங்கள், இவைகளா கோவில்களுக்கு வக்காலத்து வாங்குவது?
 8. தமிழர்களின் கலாசாரத்தை சிதைக்க பா.ஜ.க. முயற்சி செய்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றால், அந்த மக்கள் எல்லோரும் இந்துவிரோதிகளா?
 9. திராவிட கட்சிகளே, இது பிஜேபி எதிர்ப்பா, இந்து எதிர்ப்பா; இல்லை கோவில் ஆதரவா சனாதன ஆதரவா? வெளிப்படையாக சொல்வாயா?
 10. திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்ற பாமக இப்பொழுது கூட்டு சேர்வது, இந்துவிரோதமா, பிஜேபிஎதிர்ப்பா, கூட்டணி ஒத்திகையா?
 11. நாளைக்கு பீஜேபி, திமுகவுடன் கூட்டணி வைத்தால், எல்லா பிஜேபிகாரர்களும் தூக்கில் தொங்கவேண்டும், செய்வார்களா? செய்வார்களா? செய்வார்களா?

© வேதபிரகாஷ்

04-03-2020

DK Veeramani hate speech 23-03-2019-2

[1] தமிழ்.ஒன்.இந்தியா, மத்திய அரசுக்கு எதிராக ஒரே குரலில் ஸ்டாலின்ராமதாஸ்.. ஆவேச அறிக்கைகள்.. செம திருப்பம், By Veerakumar, Updated: Tuesday, March 3, 2020, 19:57 [IST].

[2] https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-condemns-union-government-for-taking-control-of-tamilnadu-temples-378690.html

[3] ஏசியா.நெட்.நியூஸ், ஒரே புள்ளியில் இணைந்த மு..ஸ்டாலின்ராமதாஸ்மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு..!, By Vinoth Kumar..KumarTamil Nadu, First Published 4, Mar 2020, 12:20 PM IST …

[4] https://tamil.asianetnews.com/politics/mk-stalin-ramadoss-joining-the-same-point-q6npov

[5] தினத்தந்தி, தமிழக கோவில்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதா? – மத்திய அரசுக்கு கி.வீரமணி கண்டனம், பதிவு: மார்ச் 04, 2020 02:15 AM

[6] https://www.dailythanthi.com/News/State/2020/03/04014956/Trying-to-take-control-of-temples-in-Tamil-Nadu–K.vpf

[7] விடுதலை, தொல்பொருள் துறையின்கீழ் வரும் தமிழகக் கோவில்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஏற்பாடா, செவ்வாய், 03 மார்ச் 2020 14:38

[8] http://www.viduthalai.in/headline/196556-2020-03-03-09-29-14.html

சித்தர்கள் உண்ணாவிரதம் – தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்?

ஜனவரி 13, 2020

சித்தர்கள் உண்ணாவிரதம் – தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்?

Siddhar fasting-1

ஆழ்வார்கள்நாயன்மார்களை விட தமிழுக்கு இக்கால சித்தாந்திகள் செய்திருக்கிறார்களா?: மக்களுக்கு விளம்பரம் வேண்டும் என்றால், என்னவேண்டுமானாலும் செய்வார்கள் போலும். தமிழ்-சமஸ்கிருதம் பிரச்சினைகளைக் கிளப்ப, இப்படி, “சித்தர்” வேடத்தில், கிளம்பி விட்டார்கள் போலும். உண்மையில், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், இத்தகைய போலித்தனமான உள்கோக்கம் கொண்ட செயல்களுக்கு “சித்தர்” வேடத்தை உபயோகித்து இருக்க மாட்டார்கள். ஆழ்வார்கள்-நாயன்மர்கள் செய்ததை விட இத்தகைய வேடதாரிகள் ஒன்றும் செய்து விடவில்லை. உண்மையில் அவர்கள் தான் தமிழின் மூலம், மக்களுக்கு வேதக் கருத்துகளை, அடிப்படைகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார்கள். அப்பொழுது, மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. மொழிவெறி, மொழி-காழ்ப்பு, மொழி-துவேசம் போன்ற நிலைகளில் யாரும் செயல்படவில்லை. ராஜராஜன் மற்றும் ராஜேந்திரன் காலத்தில், தமிழ்நாட்டின் புகழை உலகம் முழுவதும் பரவும் முறையில் தங்களது வீரத்தினால், பராக்கிரமத்தால், நியாய-தர்மங்களினால் நடந்து கொண்டு, வெற்றிக் கொண்டு, மக்களுக்கு உகந்த முறையில் ஆட்சி செய்தனர். அதனால் தான் 950-1250 BCE காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

Siddhar fasting-2

ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழர்களை எதிர்க்கும் மர்மம் என்ன?: ஆனால், இப்பொழுதோ, சோழர்களை இழித்துப் பழித்துப் பேசி, எழுதி, பொய்மை மூலம், மக்களை ஏமாற்ற, போலிகள் நிறைய பேர் கிளம்பியுள்ளனர். முன்பு, திராவிடத்துவ, கம்யூனிஸ, இந்துவிரோத கோஷ்டிகள், சோழர்கள் கோவில்களைக் கட்டியதற்கே, பிரச்சாரம் செய்தனர். அவர்கள் பிராமண அடிவருடிகள், பார்ப்பனியத்தை வளர்த்தவர்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தனர். ரஞ்சித் போன்ற கூத்தாடிகளும் இந்த பொய்மை-மாய்மாலங்களில் இறங்கி  பிரச்சாரம் செய்தனர். அயல்நாட்டு அறிவிஜீவிகளை வைத்தும், இந்த்தகைய பிரச்சாரங்களை அதிகப் படுத்தினர். தஞ்சை கோவிலில், இந்தி கல்வெட்டுகளை வைத்தனர் என்றும் புளுகினர். இப்பொழுது, இந்த போலி சித்தர்கள் கிளம்பியுள்ளனர். கோவில்களை இடித்த துலுக்கர்களை எதிர்ப்பதில்லை. விக்கிரங்களைத் திருடிய திராவிடத்துவ கும்பல்களைக் கண்டிக்க வில்லை. கோவில்களில்  கொள்ளை அடிக்கும், அறநிலையத் திருடர்களையும் தண்டிக்கவில்லை. மாறாக, இவ்விசத்தில் இறங்கியுள்ளனர்.

Siddhar fasting-3
குடமுழக்கு விழாவுக்கு குந்தகம் இழைக்கும் குழப்பவாதிகள்: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் பிப்ரவரி 5- ந் தேதி நடைபெறுகிறது[1]. இவ்விழாவை தமிழில் திருமறைகள் ஓதி நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்[2]. அப்படியென்றால், சீமான் போன்ற கோஷ்டிகள், இதற்கு உதவுவது போலத் தெரிகிறது. தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆன்மிக மக்களும் தமிழார்வளர்களும் எழுப்பி வருகிறார்கள்[3]. இந்த நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட சித்தர் அடியார்கள் மதுரையில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில் மந்தையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தி வருகிறார்கள்[4]. சத்யபாமா அறக்கட்டளை நிறுவனர் சத்யபாமா முன்னிலை வகித்தார்[5]. ஐகோர்ட் வழக்கறிஞர் பாபுஜெகநாத், அறக்கட்டளை நிர்வாகிகள் பாண்டியராஜ், வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தஞ்சை கோயிலில், செந்தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென வலியுறுத்திப் பேசினர்[6]. இதில் 98 பெண் சித்தர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Siddhar fasting-4

குடமுழுக்கு நடத்த போலிகள் குறுக்கிடுவது விந்தைதான்: சித்தர் அடியார்கள் கூறும்போது, ”1,000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு தமிழ் மொழி வழியிலேயே நடத்தப்பட்டுள்ளது. ஆனால், சமீபகாலமாக குடமுழுக்கு விழாவை சமம்ஸ்கிருத மொழியில் மாற்றி நடத்துவதால் கோயிலின் ஆகம விதிகளுக்கு முரணாக உள்ளது. தமிழ்மொழியில் குடமுழுக்கு விழா நடத்தக் கோரி பன்னிரண்டாவது சித்தர் சார்பாக இந்து அறநிலையத்துறைக்கும் முதலமைச்சருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் செவி சாய்க்காமல் சம்ஸ்கிருதத்திலேயே நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழ்மொழி வழியில் தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்த உத்தரவிட வேண்டும்,” என்றனர்[7]. தமிழார்வளர்கள் மட்டும் வலியுறுத்தி வந்த இக்கோரிக்கையை ஆன்மிக சான்றோர்களும் முன்வைத்து வருகிறார்கள்[8]. மதுரை வண்டியூர் வீரராகப் பெருமாள் மந்தையில், சித்தர் பீடாதிபதி ஞாலகுருசித்தர் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட சித்தர் அடியார்கள் உண்ணாவிரதம் இருந்து வருவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Siddhar fasting-5

தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்களின் பின்னணி என்ன?: தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்? இதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவர்களது விவரங்கள் என்ன? இவர்களது தமிழார்வம், ஆன்மீகம், சித்தம் முதலியவை என்ன? இவர்களது பின்னணி என்ன? உண்ணாவிரதம் அடையாளமா, நாள் முழுவதுமா, இரண்டு நாட்களா, சாகும் வரையிலா? இல்லை சித்த்ர்கள் போல சாகாமலேயே, செய்து கொண்டிருப்பார்களா? ஒரு நாள் நடத்த வேண்டும் என்றால், சாமியானா, நாற்காலிகள் முதலியவற்றிற்கு யார் வாடகைக் கொடுத்தது? சித்தர்கள் என்பதால், காற்றிலிருந்து வந்து, காற்றிலேயே மறைந்து விடுமா? இவர்களுக்கு, வழக்கறிஞர் துணை, ஆலோசனை எல்லாம் எதற்கு? அரசியல் தொடர்புகள் உள்ளனவா? இவர்கள் இந்துக்களா, இல்லை, நாங்கள் தமிழர்கள் என்பார்களா, சைவர்கள், இந்துக்கள் அல்ல என்பார்களா? ஆக, பின்னணி விவரங்கள் தெரியாமல், சொல்லாமல், திடீரென்று தோன்றியுள்ள இவர்கள் சித்தகள் தாம்!

Siddhar fasting-6

 1. கோயில் குடமுழுக்கு தமிழ்மொழியில் நடத்த வேண்டும்! – உண்ணாவிரதம் இருக்கும் சித்தர்கள், இது பெரிய ஜோக் என்றே சொல்ல வேண்டும்!
 2. சித்தர்கள் எல்லாவற்றையும் கடந்தவர்கள் ஆயிற்றே, பிறகு, ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்? அப்படியென்றால் சாப்பிடும் சித்தர்களா?
 3. திராவிடக் கட்சிகள் உண்ணும் விரதம் மேற்கொள்ளும் பாணியில் தான், இவர்களின் செயல்பாடு உள்ளது. சமீபத்தில் கூட சூரிய கிரகணத்தின் போது, உண்பேன் என்று வேடிக்கைக் காட்டினார்கள்!
 4. அதே போல சித்தர்களுக்கு எல்லா மொழிகளையும் அறிந்தவர்கள் ஆயிற்றே? பிறகு என்ன தமிழ் என்றெல்லாம் கேட்பது?
 5. இந்த காலத்தில் 2020ல் “சித்தர்கள்” என்று யார் சான்றிதழ் கொடுப்பது, கல்லூரி உள்ளதா? அவ்வாறு சித்தர் ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்?
 6. கருப்பு, சிகப்பு, பச்சை சர்ட்டுகள், மூக்குக் கண்ணாடி சகிதம் அணிந்த ஆண்கள், புடவை கட்டிய பெண்கள் என்றெல்லாம் இருப்பார்களா?
 7. இந்த சித்தர்களை, காஷ்மீர், ஜே.என்.யூ, பாகி-பங்களா எல்லை பகுதிகள் என்று அனுப்பி வைத்தால், எல்லா பிரச்சினைகளும் தீர்ந்திருக்குமே?
 8. ராஜராஜசோழன் காலத்தில் இருந்த கருவூர் சித்தரை விட இந்த சித்தர் பெரிய சித்தர்களா? அப்பொழுது இல்லாத மொழி பிரச்சினை இப்பொழுது எப்படி?
 9. செல்போன், செருப்பு, கடிகாரம் எல்லாம் போட்டிருக்கும், இந்த சித்தர்கள், இன்னொரு கோவிலையே கட்டி, அங்கு புரட்சியை செய்யலாமே?
 10. சித்தர்கள் பெயரில், இத்தகைய கேலிக் கூத்து ஆடுவதை விட்டு, உண்மையான பக்தி, சிரத்தை முதலியவற்றுடன், மக்களுக்கு உபயோகமான சேவைகளை செய்தான், நல்ல பெயர் கிடைக்கும்.

© வேதபிரகாஷ்

13-01-2020

Siddhar fasting-7

[1] தமிழ்.ஒன்.இந்தியா, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்குதமிழில் நடத்த கோரி சித்தர்கள் உண்ணாவிரதம், By Mathivanan Maran | Published: Sunday, January 12, 2020, 19:36 [IST]

[2] http://tamil.oneindia.com/news/madurai/siddhars-hold-protest-on-thanjavur-temple-s-consecration-should-be-done-with-tamil-373945.html

[3] நியூஸ்.7.டிவி, மதுரையில் சித்தர்கள் உண்ணாவிரத போராட்டம்!, January 12, 2020, Posted By : Nandhakumar.

[4] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/12/1/2020/monk-protest-against-sanskrit-language-pooja-tanjore-temple

[5] தினகரன், பிப்.5ம் தேதி சமஸ்கிருதத்தில் நடத்த எதிர்ப்பு தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு விழா: மதுரை உண்ணாவிரதத்தில் சித்தர்கள் வலியுறுத்தல், 2020-01-13@ 00:29:04

[6] http://dinakaran.com/News_Detail.asp?Nid=555941

[7] விகடன், பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ்மொழியில் நடத்த வேண்டும்! – உண்ணாவிரதம் இருக்கும் சித்தர்கள், செ.சல்மான் பாரிஸ், ஈ.ஜெ.நந்தகுமார், Published:Yesterday at 6 PM; Updated:Yesterday at 6 PM

[8] https://www.vikatan.com/news/protest/thanjavur-periya-koil-kumbabhisekam-issue