சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? [2]
காங்கிரஸ்–பிஜேபி மடாதிபதிகள் மீது ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்தது: தேர்தல் நேரங்களில் சந்நியாசிகள், மடாதிபதிகள் முதலியோர் அரசியல் தலைவர்களுக்கு ஆசி கூறுதல், வாழ்த்துப் பெறுதல், ஏன் சிலர் பிரச்சாரம் செய்தல் போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கின்றன[1]. 1990களில் இவை அதிகமாகின. காங்கிரஸ், பிஜேபி, சமஜ்வாடி என்று எல்லா கட்சிகளும் இந்த யுக்தியைக் கையாண்டன[2]. காங்கிரஸ் தலைவர்கள் சங்கராச்சாரியார்களிடமே சென்று ஆசி பெறுவதும் நடந்தது. காங்கிரஸ் குறிப்பாக வடவிந்தியாவில் உள்ள முக்கியமான கோவில்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த மஹந்துகள், மடாதிபதிகளை, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கட்டுக்குள் வைத்திருந்தது. குறிப்பாக “சார் தாம் யாத்திரை[3],” வைஷ்ணவதேவி, மானசரோவர்-கைலாஷ் போன்ற யாத்திரைகளுக்கு, அரசு, போலீஸ், பாதுகாப்புப் படை, ஏன் ராணுவம் முதலிவற்றின் உதவி தேவை. இங்கும், “சார் தாம் யாத்திரை” என்பது ஆதிசங்கரர் எவ்வாறு பாரதம் முழுவதும் சென்று வந்தாரோ [பூரி, ராமேஸ்வரம், துவாரகை மற்றும் பத்ரிநாத்] அதைப் போன்றது. ஆனால், இப்பொழுது, வடநாட்டிலேயே, உத்தரக்காண்ட் மாநிலத்திலேயெ [யமோனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்] சுருங்கி விட்டது. இவற்றை வைத்தும், அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. பிஜேபி அரசியல் ஆதிக்கம் பெற்றும், மத்திய மாநிலங்களில் ஆட்சி ஏற்ற நிலையில், அந்த அதிகார-தாக்கம், முதலியவை இருகட்சிகளுக்கும் இடையே பிரச்சினை ஆகியது. இதனால், மஹந்துகள், சந்நியாசிகள், மடாதிபதிகள் முதலியோரிடம் வெறுபாடு தோன்றும் நிலை உருவாகியது.
சங்கராச்சாரியார்கள் விமர்சிக்கப்பட்டது: குறிப்பிட்டவர்கள் காங்கிரஸுக்கு, பிஜேபிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று ஊடகங்கள் ஊதி பெரிதாக்கின. அதற்கேற்றார் போல மஹந்துகள், சந்நியாசிகள், மடாதிபதிகள் சம்பந்தப் பட்ட தீர்ப்புகளில் அத்தகைய தாக்கம் இருந்ததை கவனிக்க முடிந்தது. அந்நிலையில் தான், துவாரகா மடாதிபதி ஶ்ரீ ஸ்வரூபானந்தர் காங்கிரஸுக்கு வேண்டியவர், பூரி சங்கராச்சாரியார் பழமைவாதி, சிருங்கேரி மடாதிபதி காங்கிரஸுக்கு மிக-மிக நெருக்கமானவர், காஞ்சி மடம் பிஜேபிக்கு சார்புடையது, போன்ற பிம்பங்கள், மாயைகள் உருவாக்கப் பட்டன. காங்கிரஸின் ஊடக பீரங்கி, “நேரஷனல் ஹெரால்ட்,” எப்பொழுதும், இந்துக்களுக்கு எதிரான கட்டுரைகளை பிரசுரித்து வருகின்றது. அவ்வப்போது மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறது. இதனால், அது இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றும் பிரச்சாரம் செய்யப் படுகிறது. 2013ல் பெருவெள்ளம் உண்டானபோது, கேதார்நாத்தில் உள்ள ஆதிசங்கரர் சமாதியும் பாதிப்புக்கு உள்ளானது[4]. அதனால், அதனை, மறுபடியும் புனர்-நிர்மாணம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன[5]. அப்பணிகள் இன்றும் நடந்து வருகின்றன. அப்பொழுதும், ஊடகங்கள் பிரிவினை உண்டாக்கும் முறையில் செய்திகளை (கேதார்நாத் பூஜாரி மற்றும் ஸ்வரூபானந்தர் சாஸ்திர ரீதியிலான கருத்துக்களை) வெளியிட்டன[6]. ஸ்வரூபானந்தர் முறையாக (பூஜாரிக்கு என்ன தகுதிகள் வேண்டும், வேதங்கள் முதலியவை படித்திருக்க வேண்டும் போன்ற விசயங்கள்) விளக்கியதைத் திரித்து வெளியிட்டன[7]. 2017ல் ராகுல் காந்தி, அஹமது படேலுடன், சோமநாத் கோவிலுக்குச் சென்றபோது, அவர்கள், “இந்துக்கள் அல்லாதவர்,” என்று கோவில்-நுழைவு ரிஜிஸ்டரில் குறிப்பிடப் பட்டது[8]. அதாவது கூட வந்தவர் முஸ்லிம் என்பதால், இவரும் கிருத்துவர் என்று நினைத்து அவ்வாறு எழுதப் பட்டிருக்கலாம். ஆட்சி மாற்றங்கள் நடக்கும் போது, இந்துக்கள் தான் கஷ்டப்படவேண்டும், அரசியல்வாதிகள் அல்ல. அதாவது, அத்தகைய அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் சித்தாந்த மோதல், இந்துக்களைப் பாதிக்கின்றது என்ற விசயம் எடுத்துக் காட்டப் படுகிறது.
ஆதிசங்கரர் (507-477 BCE) ஏற்படுத்திய மடங்கள்: ஆதிசங்கரரின் தேதியைக் குறிப்பிடுவதிலேயே அரசியல் ஆரம்பிக்கிறது எனலாம். ஆங்கிலேயர் ஆரம்பித்து வைத்த அந்த பிரச்சினை இன்றும் முடியவில்லை. ஆதிசங்கரரின் காலம் 507-477 BCE என்று சிருங்கேரி மடம் தவிர மற்ற மடங்கள் ஏற்றுக் கொள்கின்றன. சிருங்கேரி 788-820 CE என்று கொள்கிறது. ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடங்கள், விவரங்கள், கீழ் வருமாறு:
மடத்தின் பெயர் | திசை | பெயர் | தற்போதைய மடாதிபதி | |
1 | உத்தராண்ய மட் | வடக்கு | ஜோதிர் மடம்,
உத்தரகாண்ட் |
நியமிக்கப் படவில்லை |
2 | தக்ஷிணாயன் மட் | தெற்கு | துவாரகா மடம்,
குஜராத் |
ஶ்ரீஸ்வரூபானந்த சரச்வதி |
3 | பூர்வம்ன்ய மட் | கிழக்கு | பூரி, ஒரிஸா | நிஸ்சலாநந்த சரஸ்வதி |
4 | பஸ்சிம்ன்ய மட் | மேற்கு | சிருங்கேரி, கர்நாடகா | பாரதி தீர்த்த மஹாஸ்வாமி |
5 | காஞ்சி காமகோடி | தெற்கு | காஞ்சி, தமிழ் நாடு. | விஜயேந்திர சரஸ்வதி |
இந்தியாவில் உள்ள இந்துக்கள், நிச்சயமாக இவர்களை பக்தியுடன், மரியாதையுடன், சிறப்புடன் பின்பற்றி வருகிறார்கள். அந்நிலையில், அரசியலை காரணமாக வைத்துக் கொண்டு, ஊடகக்காரர்கள், நிருபர்கள், பேட்டி கண்பவர்கள், எழுத்தாளர்கள் என்றெல்லாம் இருப்பவர்கள், இவர்களைப் பற்றி தாறுமாறாக செய்திகளை வெளியிடுவது, விமர்சிப்பது என்று செய்து வருகிறார்கள். Hon’ble, Mr, His Holiness, Rev., மௌலி, முல்லா, சாஹிப், ஹாஜி என்றெல்லாம் மற்ற மதத்தலைவர்களை குறுப்பிடும் போது, இவர்களை அப்படியே குறிப்பிடுவது முதலியன நடந்து வருகிறது. மேலும் துவாரகா, பூரி மற்றும் காஞ்சி மடங்கள், மடாதிபதிகள் என்று வரும் போது, கிண்டலாக, கேலியாக, நக்கலாக தலைப்பிட்டு செய்திகள் போடுவது என்பன தொடர்ந்து நடந்து வருகிறது.
பூரி சங்கரச்சாரியாரை விமர்சிப்பது ஏன்?: பூரி சங்கராச்சாரியார், பல பாரம்பரிய விசயங்களை சாஸ்திரங்களின் படி விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார். இக்காலத்திற்கு ஏற்ப விளக்கங்களையும் கொடுக்கிறார். ஆனால், ஊடகங்கள், இந்தியிலிருந்து மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்று முழுப்பேச்சையும் குறிப்பிடாமல், ஒரே வரியில் அவர் வர்ணாஷ்ரமத்தை ஆதரிக்கிறார் என்று செய்திகள்ளை போடுகின்றனர்.
- முசல்மான்கள், கிருத்துவர் எப்படி தங்களது மதங்களை வேகமாக வளர்த்துக் கொள்கிறார்கள்? இந்துக்களால் ஏன் முடியவில்லை?
- இந்துக்களின் சோம்பேறித்தனம், கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வரமாகிறது!
- முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களின் மதம் மாற்றும் முறைகளை
எப்படிக் கட்டுப்படுத்துவது? - இந்து ஒற்றுமையின்மையை கிருத்துவம் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறது!
போன்ற வீடியோ சொற்பொழிவுகளில், பிரச்சினையை நேரிடையாக விளக்குகிறார். இதுவரை மற்றவர்களின் கருத்துகள் இவ்வாறு வெளிப்படையாக, வெளியிடப் படவில்லை. மேலும், இந்திய அரசியல் சாசனத்தின் 25வது பிரிவைப் பற்றி கொடுக்கும் விளக்கம் சட்டப்படி அருமையாக இருக்கிறது. இவரைப் போலத்தான், ஶ்ரீ ஸ்வரூபானந்தரும், “கோவில் என்ற அமைப்பில் எல்லோருடைய பங்கும் இருக்கிறது. பிராமணர்களுக்கு மட்டும் உரிமை இல்லை[9]. செருப்பு தைப்பவன், துணி துவைப்பவன், பொற்கொல்லன், நாவிதன் என்று எல்லொருக்குமே கோவிலை பராமரிக்க உரிமைகள் இருந்தன. ஆனால், இவர்கள் எல்லோரும் கோவிலை விட்டு, வேறு வேலை செய்யச் சென்று விட்டனர். இத்தகையோ ஒருவர் இல்லாவிட்டாலும், முன்பெல்லாம், கோவில் இயங்க முடியாது. அதனால், இப்பொழுது ஏதோ பிராமணர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்பது போலிருக்கிறது. அதனால், அனைத்து ஜாதியினரும் மறுப்டியும் கோவில்களுக்கு வரவேண்டும். அரசாங்கள் அவரவர்களுக்கு உரிய நிதியுதவி செய்ய வேண்டும். 21,000 ஏக்கர் கோவில் நிலங்களைக் கோவில்களுக்குத் திரும்ப அளிக்க வேண்டும்,” என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், ஊடகங்கள் இதை செய்தியாக போடவில்லை. விவாதிக்கவில்லை. ஆக, ஒரு இது மடாதிபதி, இந்துக்களின் உரிமைகளைப் பற்றி கவனம் கொள்வது, பேசுவது, விளக்குவது எப்படி கேலிக்கு, விமர்சனத்திற்கு உள்ளாக்க முடியும் என்று தெரியவில்லை. இப்பொழுது சமூக ஊடகங்களில், stooge, agent, criminal அதாவது கைக்கூலி, கையாள், கிரிமினல் போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப் பட்டுள்ளன.
© வேதபிரகாஷ்
27-07-2020
[1] Hinduism Today, Swamis Campaign In India Elections, Sinha, B.N., Magazine Web Edition, July 1991,
[2] https://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=837
[3] முதலில் ஆதிசங்கரர் சென்று வந்த பூரி, ராமேஸ்வரம், துவாரகை மற்றும் பத்ரிநாத் என்று இருந்தது. இப்பொழுது, யமோனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் புண்ணியஸ்தலங்களுக்கு செல்லும் யாத்திரை என்றாகியது.
[4] Times of India, Shankaracharya samadhi swept away, TNN | Updated: Jun 22, 2013, 06:31 IST.
[5] https://timesofindia.indiatimes.com/india/Shankaracharya-samadhi-swept-away/articleshow/20709897.cms
[6] The Hindu, On a mission to rebuild the Shankara Samadhi Sthal, C. S. Narayanan Kutty, KANHANGAD, FEBRUARY 20, 2014 10:07 IST, UPDATED: MAY 18, 2016 09:39 IST.
[7] https://www.thehindu.com/news/national/kerala/on-a-mission-to-rebuild-the-shankara-samadhi-sthal/article5708821.ece
[8] Times of India, Somnath temple visit: Rahul Gandhi listed as ‘non-Hindu’, Devika Bhattacharya | TIMESOFINDIA.COM | Updated: Nov 29, 2017, 21:54
[9] The Hindu, Temples never belonged to Brahmins alone: Sharada Peetham seer, SPECIAL CORRESPONDENT WARANGAL:, OCTOBER 30, 2014 00:01 IST;
UPDATED: MAY 23, 2016 16:37 IST.
Temples were not the sole property of Brahmins alone but of 21 other castes involved in their set-up and maintenance, observed Sharada Peetham pontiff Swami Swaroopananda. The pontiff, who was here to deliver a discourse, told reporters that the temple system was sabotaged by vested interests who drove away the people and left it with only Brahmins. “The cobbler, washerman, goldsmith, barber all are involved in the maintenance of the temple. Every caste is important and without a single person, the temple will not function,” he pointed out. Swami Swaroopananda said he would soon meet Chief Minister K. Chandrasekhar Rao and urge him to restore 21,000 acres of endowment lands which were occupied by individuals. The priests should be paid a pension like other government employees. He said he would visit all the abandoned temples in Andhra Pradesh from December 11 to January 11, spend a night at each temple and organise a meeting with local people to revive them. In February, he would visit similar temples in Telangana. “Telangana has very old and popular temples that are in dire straits due to dwindling patronage and indifference of authorities. On behalf of Sharada Peetham, we will make efforts to mobilise people of all castes and motivate them to restore those temples,” he said. Captain V. Laxmikantha Rao, MLA V. Satish, Archaka Samakhya leader Gangu Upendra Sharma, Brahmana Samakhya leader I. Satyamohan and others were present.
[10] https://www.thehindu.com/news/national/telangana/temples-never-belonged-to-brahmins-alone-sharada-peetham-seer/article6544987.ece