Archive for the ‘சந்திரசேகரேந்திர சரஸ்வதி’ Category

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? [3]

ஜூலை 27, 2020

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? [3]

Puri Sankarachariyar, Vedic mathematics

Puri Sankarachariyar, Vedic mathematics

பூரி சங்கராச்சாரியாரின்வேத கணிதம்இனிக்கிறது, ஆனால், அந்த ஆச்சாரியார், மடம் முதலியன இந்துத்துவ வாதிகளுக்கு கசக்கின்றனவா?:  பூரி மடத்து 143வது சங்கராச்சாரியார், பாரத் கிருஷ்ண தீர்த்தர், “வேத கணிதம்” என்ற புத்தகத்தை எழுதியது உலகத்திற்கே தெரியும். அவர் வழி வந்த பூரி மடத்து 143வது சங்கராச்சாரியார், நிஸ்சலானந்த சரஸ்வதி ஆவர். ஜூலை 22, 2019 அன்று சந்திராயன் -2 [Chandrayaan-2] ராக்கெட் செல்லுத்திய போது வாழ்த்தினார்[1]. புராணங்களில் உள்ள விமானங்கள் பற்றிக் கூட விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யலாம் என்றார்[2]. 2016ல் ISRO அஹமதாபாதிற்குச் சென்ற போது, “வேத கணிதம்” பற்றி சொற்பொழிவாற்றினார்[3]. வழக்கம் போல, இக்கருத்திற்கு ஊடகங்கள் விமர்சனம் செய்தன[4]. சில திரித்து வெளியிட்டன[5]. சில அவை பொய் என்றன. ஆனால், 2016ல் ISRO அஹமதாபாதிற்குச் சென்ற போது, “வேத கணிதம்” பற்றி சொற்பொழிவாற்றயதை மறுக்கவில்லை. ஆகவே, ஊடகங்கள் எப்படி வேண்டுமென்றே, அவதூறு செய்ய வேண்டும் என்று திட்டத்துடன் வேலை செய்கிறார்களோ, அதேபோல, இந்துத்துவ வாதிகளும், சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகிற்ஸ்ர்கள். ஆக, “பூரி சங்கராச்சாரியாரின் “வேத கணிதம்” இனிக்கிறது, ஆனால், அந்த ஆச்சாரியார், மடம் முதலியன இந்துத்துவ வாதிகளுக்கு கசக்கின்றனவா?”, என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். சங்கர மடங்களை விமர்சிக்கும், தூஷிக்கும் இந்துத்துவ வாதிகளே பதில் சொல்வீரா? சங்கர மடங்களை விமர்சிக்கும், தூஷிக்கும் இந்துத்துவ வாதிகளே யோசிப்பீரா?

Puri Sankarcharya imparted Vedic mathematics to ISRO

பூரி சங்கராச்சாரியார், ISRO அஹமதாபாதிற்குச் சென்ற போது, “வேத கணிதம்” பற்றி சொற்பொழிவாற்றினார்.

Acharya Sushil Goswami and Indore Shahar Quazi Mohammad Ishrat Ali with John Dayal

கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு, சில இந்து சந்நியாசிகள், இந்துமதத்தை விமர்சிப்பது: ஜான் தயாள் என்ற கிருத்துவப் பாதிரியை வைத்து, இந்து மடாதிபதிகளை தாக்கிய வேலைகளில் இந்துத்துவவாதிகள் ஈடுபட்டுள்ளார்கள்! ஒரிஸாவில் ஶ்ரீலக்ஷ்மணானந்தரை மிரட்டிய ஆள் இந்த பாதிரி தான்! பிறகு, அவர்கள், கிருத்துவர்களால் கொலை செய்யப் பட்டார். கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள் என்று பெரிய நாடகம் போட்டதில், முக்கிய பங்காற்றியவர் ஜான் தயாள். பிறகு கிருத்துவர்களே கற்பழித்தனர் என்று தெரிந்தவுடன் அமைதியாகி விட்டார். 2018ல் சிறுபான்மையினர்- கிருத்துவர்கள் இந்தியாவில் தாக்கப் படுகின்றனர் என்று, சுஷில் கோஸ்வாமி என்ற இந்து சாமியாரை வைத்து, மாநாடு நடத்தி, அறிக்கையும் விட்டார்[6]. போபால் டையோசிஸ் சார்பில், அத்தகைய கூத்து நடந்தது[7]. பிறகு எப்படி அந்த இந்து சாமியார் கலந்து கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சாமியாரை, இந்துத்துவாதிகள் விமர்சில்லவில்லை.

Acharya sushil with John Dayal

ஜோதிர் மட விவகாரம்: ஜோதிர் மடம், இப்பொழுது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது. 57 ஆண்டுகளாக வழக்கில் இருந்ததால், சங்கரச்சாரியார் இல்லை. பிறகு, இரண்டு சந்நியாசிகள் உரிமை கொண்டாடி தாங்க்கள் தான் சங்கராச்சாரியார் என்று அறிவித்துக் கொண்டனர். ஆனால் இருவருமே, காங்கிரஸ்-பிஜேபி ஆதரவு பெற்றவர்கள். பிரச்சினை நீதிமன்றத்திற்குச் சென்றது. இருவருக்கும் அந்த உரிமை இல்லை என்று அறிவித்து, 2017ல் மூன்று மாதங்களில் ஆச்சாரியார் நியமிக்கப் படவேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தும் இன்று வரை நியமனம் செய்யப் படவில்லை. ஆனால், அவ்வப்போது, பிரச்சினையை வைத்துக் கொண்டு, செய்திகளில் இழுத்து விடுகிறார்கள்.

Sankaracharya arrrest manipulated to tarnis the image of the mutt

காஞ்சி மடம் மற்று ம் ஆச்சாரியார்கள் எவ்வாறு தாக்கப் பட்டனர், இன்றும் தாக்கப் பட்டு வருகிறார்கள் என்று சொல்லத் தேவையில்லை!: காஞ்சிப் பெரியவர் மூக்குக் கண்ணாடி போட்ட போது, அவரை, திராவிட தலைவர்கள் உட்பட கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர். “மூக்குக் கண்ணாடி” போட்டுக் கொண்டார். “காட்ரேக்ட் ஆபரேஷன்” செய்து கொண்டார் என்றெல்லாம் நக்கல் அடித்தன. அண்ணா கேன்சர் நோயுக்கு, அமெரிக்கா சென்றது, சிகிச்சை பெற்றது, பலன் இல்லாமல் இறந்தது பற்றியெல்லாம் பகுத்தறிவுகள் அறிந்தும், இவரை கிண்டல் செய்தன. பெரியாருக்கும் சுகவினங்கள் பல இருந்தன. எல்லோருக்கும் தெரிந்தும் இருந்தன. ஆனால், “பகுத்தறிவு” இல்லாதவர்கள் அவ்வாறு கிண்டல் செய்யவில்லை[8]. 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ந்தேதி திடீரென மடத்திலிருந்து ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி காணாமல் போனபோது, ஊடகங்கள் மறுபடியும் அவதூறுகளை அள்ளி வீசி ஊளையிட்டன. 2004ல் கைது, 2013ல் விடுவிப்பு, 2018ல் சமாதி என்று சென்றது. ஆனால், இன்றும் குளைத்துக் கொண்டிருக்கின்றன. ஆக இதெல்லாம், தனிப்பட்ட மனிதர், சந்நியாசி, மடாதிபட, மடம் இவற்றையும் தாண்டி, வேறெதையோ குறி வைப்பது தெரிகிறது.

Jeyalalita with Kanchi mutt acharyas

காஞ்சி மடத்திற்கு எதிராகத் தொடர்ந்த விமர்சனங்கள்: ஒரு இணைதளம்[9], “பின்னாளில் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர்  ராமன் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட போதும் அகில இந்திய அளவில் மீண்டும் சர்ச்சை நாயகனாக பேசப்பட்டார். ஆனால் ஒரு கொலை வழக்கை, புலனாய்வு அதிகாரிகளை கொண்டு எவ்வளவு பரபரப்பாக்க முடியுமோ அந்த அளவுக்கு, கிரைம், கிளாமர், பாலியல் புகார் என சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் விஷயங்களை நுழைத்து திசை மாற்றப்பட்ட போதே வழக்கு தொடரப்பட்டதின் உண்மையான நோக்கம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அரசியல் சதுரங்கத்தில் சிக்கிய அவருக்கு என்ன நேரும் என்று சிக்கவைத்தவர்களுக்கு தெரியும்..மற்றவர்களுக்கும் தெரியும். எதிர்பார்த்தபடியே நீதிமன்றத்தால் நிரபராதி என வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயேந்திரர். பரபரப்பு சம்பவங்களின் அடிப்படையில் இப்படி சர்ச்சையின் நாயகனாக பேசப்பட்ட மடாதிபதிதான், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், மருத்துவ மனைகள், சேவை மையங்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்கிடைக்கும் வகையில் மடத்தின் பணிகளை விரிவு படுத்தியவர். கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கென்றே ஜெயேந்திரர் நிறுவிய சந்திரசேகரர் கிராம வளர்ச்சி அறக்கட்டளை யால் பயனடைந்தவர்கள், பயனடைபவர்கள் ஏராளம். காஞ்சியில் உள்ள வேதபாடசாலைகள், பாலாற்றங்கரையில் கலை நயத்தோடு மிளிரும் மகா பெரியவருக்கான மணி மண்டபம், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தற்போது மிளிரும் விதம் போன்றவையெல்லாம் ஜெயேந்திரரின் பெயரை என்றென்றைக்கும் சொல்லக்கூடியவை,” என்கிறது[10].

Sringeri acharya with Rahul Gandhi

சிருங்கேரி மடத்தின் நிலை: சிருங்கேரி மடம் ஆச்சாரியாரும், காங்கிரசுடன் நெருக்கமாகத்தான் இருந்திருக்கிறது. ராஜிவ் காந்தி முன்னர் சிருங்கேரி மடாதிபதியுடன் இருந்த புகைப்படத்தை, ஆச்சாரியார், ராகுல் காந்திக்குக் கொடுக்கிறார்! ஏன் ஒரு சாமி படத்தைக் கொடுத்திருக்கலாமே? ஆனால், துவாராகா பீட சங்கராச்சாரியை வசை பாடுகின்றனர், இந்துத்துவ வாதிகள் அதனை விமர்சித்தது இல்லை.  காஞ்சியிலிருந்து கும்பகோணம் சென்று, திரும்பி காஞ்சிக்கு வந்ததை விமர்சிக்கின்றனர். அதேபோல, சிருங்கேரியும் இடம்பெயர்ந்து திரும்பி வந்து சேர்ந்துள்ளது. பொதுவாக, சிருங்கேரி மடத்தவர்களுக்கு, காஞ்சி மடம் மீது வெறுபுள்ளது. அது ஏன் என்று தெரியவில்லை. இதனை 1950-60களிலிருந்து வெளிப்படுவது தெரிகிறது. நீதிமன்ற தீர்ப்புகளும் அதனை வெளிப்படுத்துகின்றது[11]. உதாரணத்திற்கு ஒன்று கொடுக்கப் படுகிறது[12]. இங்கு மடாதிபதிகளே, கோர்ட்டூகுச் சென்றார்களா அல்லது வேறு எவராவது தூண்டி விட்டு சென்றார்களா என்று கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், சங்கராச்சாரியார் அளவில் இருப்பவர்கள், அவ்வாறு, “தென்னிந்தியா முழுவதும் என்னுடைய ஆதிக்கத்தில் வரும்,” என்று கேட்டுப் பெறுவதா ஆன்மீக அதிகாரம் என்று புரியவில்லை. வழக்குத் தொடர்ந்திருக்க மாட்டார்கள். நீதிமன்றம் சிருங்கேரி சார்பில் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. ஆனால், அத்தகைய விவரங்கள், விமர்சனங்களைத் தான், இந்துவிரோதிகள் எடுத்து உபயோகப் படுத்திக் கொள்கின்றனர்.

© வேதபிரகாஷ்

27-07-2020

Sringeri politics with Congress

[1] The Pioneer, ‘Puranas can be reference for space scientists’, Friday, 02 August 2019 | PNS | PURI.

[2] https://www.dailypioneer.com/2019/state-editions/—puranas-can-be-reference-for-space-scientists—.html

[3] He [The ISRO membe] further clarified that the Shankaracharya had paid a visit to ISRO Ahmedabad in 2016, when he had delivered a speech about the importance of Vedic Mathematics and how ISRO scientists can benefit by having some knowledge of the same. He had also spoken about how Vedic mathematics can help scientific inventions.

https://www.thequint.com/news/webqoof/media-houses-wrongly-quote-vedic-math-expert-to-claim-isros-reliance-on-him-for-chandrayaan-2

[4] Asian Age, Seer helped with Vedic maths in moon mission, AKSHAYA KUMAR SAHOO, Published : Aug 3, 2019, 1:43 am IST, Updated : Aug 3, 2019, 1:43 am IST

[5] https://www.asianage.com/india/all-india/030819/seer-helped-with-vedic-maths-in-moon-mission.html – :~:text=Puri%20Shankaracharya%20is%20a%20Vedic%20maths%20expert.&text=Sources%20said%20that%20Indian%20Space,launch%20of%20the%20Chandrayaan-2.

[6] AICU, Hindu Savant Acharya Sushil Goswami aharaj, Indore Shahr Qazi join Bishops in Memo to State Governor, CM, Press statement, Bhopal, February 20, 2018.

[7] press statement was issued at a press conference in the Bhopal, Madhya Pradesh, by Mr. Lancy D Cunha, the National President of the All India Catholic Union, and Dr. John Dayal, Official Spokesman and former President. Acharya Sushil Goswami and Indore Shahar Quazi Mohammad Ishrat Ali led a galaxy of religious leaders of Madhya Pradesh who spoke out against communal and extremist forces targeting the Christian and other minority groups.

http://www.bhopalarchdiocese.in/detail.php?str=readnews&nid=109

[8] பெரியார், அண்ணா, கரு, மற்ற திகக்காரர்கள் பேசியதை எழுத முடியாத அளவில் அசிங்கமாக இருந்தததால், அவை மறைக்கப் பட்டன [எழுதாமல் விடப்பட்டன]. ஞாபகம் இருந்தாலும், இன்றும் அவை அவ்வாறுத்தான் உள்ளன. அவர்கள் இல்லை என்றாலும், கேட்டவர்கள் பலர் சாட்சிகளாக இன்றும் இருக்கிறார்கள். நாகரிகம் கருதி தான் அவற்றையெல்லாம் வெளியே சொல்லாமல் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்கள் மறைந்தால், அவர்களுடன் அந்த உண்மைகளும் மறைந்து விடும்.

[9] பத்திரிக்கை.காம், சாமான்யர்களின் சங்கராச்சாரியார்…. சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன், 2 years ago-2018, A.T.S Pandian.

[10] https://www.patrikai.com/common-peoples-wish-sankarachariyar-special-article-by-elumalai-venkatesan/

[11] Madras High Court, K. Rajendran vs Government Of Tamil Nadu And Ors. on 27 June, 1984; Equivalent citations: AIR 1985 Mad 44; Bench: R Pandian.

[12] https://indiankanoon.org/doc/1060441/

Swarupananda issue- Pranab Mukherjee getting blessings

தமிழில் பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்!

ஜூலை 3, 2010

தமிழில்பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்!

http://www.viduthalai.periyar.org.in/20100703/snews02.html

தமிழில்பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்

திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற காஞ்சி சங்கராச்சாரியார்) ஒருநாள் தங்கியிருந்த போது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து-வைத்தார். ஏன் தாத்தாச்சாரியாரே.. .நாம எவ்வளவோ சபை நடத்துறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்ரோம். ஆனா… பிராமணா-ளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே… அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவர் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே… என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன். நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்-தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி?… ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?…

திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்தத் திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.

இதப்பாரும்…எல்லா கோயில்கள்லயம் திருப்பாவை _ திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச்சேரும். ஏன்னா… நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும். தமிழ். என்ன சொல்றீர்? என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.

சமஸ்கிருதத்தில் பேசியது மற்றவர்களுக்குப் புரியவில்லையாம்: நாங்கள் இப்படி பெரிய திட்டம் பற்றி சத்தமாக சிரித்து பேசிக் கொண்டிருந்த போதும்… சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள். அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக் கூட நாங்கள் பேசிக்கொள்வது புரியாது.

ஏன் ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?  என்று மகா-பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்: உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒருநாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்?… புரிந்து நடந்து கொள்… என்றேன். அப்போதும் அந்த கேள்வியை கேட்டவர்களுக்கு புரியவில்லை. உங்களுக்கு…?

(இந்து மதம் எங்கே போகிறது) அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

விடுதலையின் திரிபு-பொய்வாதம்: இதன் பொருள் புரிகிறதா? தமிழ் நீஷப்பாஷை என்பதும் சமஸ்கிருதம் தெய்வப் பாஷை என்பதும் அவாளின் உறுதியான எண்ணம். தமிழில் பேசிவிட்டால் தோஷம் ஏற்பட்டு விடும்; உடனே குளிக்க வேண்டுமாம், என்ன புரிகிறதோ தமிழர்களே!

ஏன்னா… நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும். தமிழ். என்ன சொல்றீர்? என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.

இப்படி சொல்லிவிட்டு, பிறகு எப்படி, அத்தகைய விளக்கம் அளிக்க முடியும்?

திருப்பாவை – திருவெம்பாவை என்ன அரேபிய மொழியிலா உள்ளது? தமிழில் தானே உள்ளது? பிறகு எதற்கு, திருப்பாவை – திருவெம்பாவை உற்சவம் நடத்த சொல்லவேண்டும், “சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு” ஏற்படவேண்டும்?
ஆக, வீரமணி நிச்சயமாக பொய்சொல்வது தெரிகிறது.