Archive for the ‘சங்கராச்சாரியார்’ Category

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டா

ஜனவரி 24, 2014

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டாதா?

நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு அடி சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி

நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு அடி சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி

ஒரு சாமியார் / சந்நியாசி இவ்வாறு கோபப்படலாமா, அடிக்கலாமா: நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி கன்னத்தில் பளார் என்று அடித்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது[1] என்று ஊடகங்கள் செய்தியப் பரப்பியுள்ளது. ஒரு சாமியார் / சந்நியாசி இவ்வாறு கோபப்படலாமா, அடிக்கலாமா என்ற விவாதத்தை வேறு கிளப்பியுள்ளார்கள். நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு அளவு கடந்த சுதந்திரம் உள்ளது என்ற நிலையில் உண்மையை அல்லது நடந்ததை நடந்தது போல சொல்லாமல், மாற்றி ஜனரஞ்சக அல்லது தூண்டிவிடும் உற்சாக செய்திகளாக வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில், இவ்விசயத்தை அலச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அரசியல்  குறித்து  பேசகூடாது  என்று வலியுறுத்தப்பட்ட பிறகும் அரசியல் பற்றிய கேள்வி கேட்டது: நாட்டின், நான்கு முக்கிய பீடங்களில் ஒன்றான, வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க, துவாரகா பீடத்தின் தலைமை குருவாக இருப்பவர், சுவாமி சொரூபானந்த சரஸ்வதி. காங்கிரஸ் மற்றும் அக்கட்சித் தலைவர்கள், பலருடன் நெருக்கமாக உள்ளவர் அந்த சாமியார்[2]. மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரில் நடந்த விழாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேசத்தின் தலைநகரான போபாலிலிருந்து 375 கிமீ தொலைவில் ஜபல்பூரில் உள்ள ஒரு கோவிலின் நிகழ்சியில் கலந்து கொண்டு, பேட்டி கொடுக்கும் போது இது நடந்தது[3]. முன்னதாகவே அரசியல் குறித்து பேச கூடாது என்று அபிஷேக் சர்மா என்ற அந்த ஊடகக்காரருக்கு வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது[4]. இருப்பினும், அந்த செய்தியாளர் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியிடம் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அமைதியை இழந்த சாமியார் எதிர்பாராத விதமாக செய்தியாளரின் கன்னத்தில் அடித்துவிட்டார்[5], என்று செய்திகள் வந்துள்ளன. ஆகவே, அபிஷேக் சர்மா ஏன் வேண்டுமென்றே அவரிடம் அந்த கேள்வியைக் கேட்டார் என்று தெரியவில்லை. “சோனியா பிரதம மந்திரியாக ஏன் வரக்கூடாது” என்றுஇ கேட்டிருக்கலாமே?

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி

நரேந்திரமோடி  பிரதமர்  ஆகுவதற்கு  நான்  எந்த  ஒரு  எதிர்ப்பும்  தெரிவிக்கபோவது  இல்லை,  ஆனால்  அவர்  என்ன  செய்ய வேண்டும்  என்று  நினைக்கிறாறோ  அதனை  மக்களுக்கு  தெளிவுபடுத்த  வேண்டும்”: ஜாபல்பூரில் பேசிய சாமியார் பிரதமரை எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார், என்று தமிழ் நாளிதழ் கூறியுள்ளது. மோடி குறித்து சாமியார் பேசுகையில், “நரேந்திர மோடி பிரதமர் ஆகுவதற்கு நான் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கபோவது இல்லை, ஆனால் அவர்  என்ன வேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்”, என்று கூறியுள்ளார்[6]. பிறகு ஊடகக்காரர்களிடம், அதிகமாகவே அரசியல் பேசியுள்ளார், என்று ஊடகங்கள் நீட்டியுள்ளன. “மோடி, ராகுல், அரவிந்த் கேசரிவால் முதலியோர் இந்த நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவர்கள், ஏனெனில் அவர்களது பேச்சுகளில் தேச வளர்ச்சி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு பற்றிய விவரங்கள் தெளிவு இல்லை”, என்றும் கூறியுள்ளார்[7].

“மோடி, ராகுல், அரவிந்த் கேசரிவால் முதலியோர் இந்த நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவர்கள், ஏனெனில் அவர்களது பேச்சுகளில் தேச வளர்ச்சி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு பற்றிய விவரங்கள் தெளிவு இல்லை”: இப்படி அவர் சொன்னதை பெரிது படுத்திக் காட்டவில்லை. ராகுலை குறைக்கூறிவிட்டார் என்று ஓலமிடவில்லை. காங்கிரஸுக்கு வேண்டியவர் என்று மட்டும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பிறகு ராகுலை ஏன் விமர்சிக்க வேண்டும், அப்படியென்றால், வேறு யார் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி பதவிக்கு தகுதியானவர், என்று அவரிடம் கேட்டிருக்கலாமே. அதைவிடுத்து ஏன் மோடியை மட்டும் பிடித்துக் கொண்டு பிரசினையைக் கிளப்பவேண்டும்? கடந்த பத்தாண்டுகளில் யுபிஏ அல்லது காங்கிரஸ் தலைமையில் நடந்துள்ள ஆட்சியில் தேச வளர்ச்சி, ஊழல் முதலியவை ஏவ்வாறிருந்தன, என்பது இவருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே, மேலும் இவரது பீடமே துவாரகாவில், குஜராத்தில் உள்ளது. அப்படியென்றால், குஜராத்தில் அவை எப்படியிருந்தன என்றும் தெரிந்திருக்குமே?

“அவர் கை மைக்கின் மீதுதான் பட்டது”: அபிஷேக் சர்மா, சங்கராச்சாரியார் மீது புகார் கொடுக்கவில்லையா என்று மற்றவர்கள் கேட்டப்போது, “அவர் மரியாதைக்குரிய சந்நியாசி, துரதிருஷ்டவசமாக, கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு செய்துள்ளார். இதையெல்லாம் வேலை செய்யும் போது ஏற்படும் விபத்தாக எடுத்துக் கொள்ளவேண்டியது தான்”, என்றும் பதில் கூறியுள்ளார்[8]. “அவர் கையை நீட்டிய போது, நான் குனிந்து விட்டேன், அவர் கை மைக்கின் மீதுதான் பட்டது”, என்றும் விளக்கினார்[9]. வீடியோவைப் பார்க்கும் போது, இதுதான் உண்மை என்று தெரிகிறது. இருப்பினும், ஊடகங்கள் ஏற்கெனவே கன்னத்தில் அறைந்து விட்டார், அடித்து விட்டார்[10] என்று செய்திகளைப் பரப்பி விட்டன.

காங்கிரஸ்-பிஜேபி விவாதம்: மாநில காங்கிரஸ் தலைவர் மயங்க் அகர்வால், “முதலில் அத்தகைய கேள்விகளை அவரிடத்தில் கேட்டிருக்கக் கூடாது. மேலும், அவர் செய்தியாளரின் கன்னத்தில் செல்லமாகத்தான் தட்டியிருக்கிறார். அதனை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர் பிரசங்கம் செய்யும் வேளையில் அத்தகைய கேள்வி கேட்டிருப்பது சரியில்லை”, [Rajniti ki baat nahi karna (Don’t talk politics)] என்றும் குறிப்பிட்டிருக்கிறார்[11]. பிஜேபி இதை எதிர்த்தாலும் பெரிது படுத்த விரும்பவில்லை என்று தெரிகிறது. தேர்தல் சமயமாயிற்றே!

வழக்கம் போல விடியோ மிஸ்ஸிங், சவுண்ட் ரிகார்டிங்: “இந்தியா டுடே”, வெளியிட்டுள்ள வீடியோவிலும் அவர் சதாரணமாக கையினால் விலக்குவது போலவே உள்ளது[12]. ஆனால், வீடியோவை வெட்டி, ஒட்டி அவர் ஏதோ “பட், பட்” என்று திரும்ப-திரும்ப அடிப்பதைப் போன்று காட்டியுள்ளார்கள். இது விசமத்தனமாதாகும். “நரேந்திர மோடி பிரதம மந்திரி ஆவதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று  அபிஷேக் சர்மா கேட்டபோது, “தூரப் போ, அதைப் பற்றியெல்லாம் கேட்காதே”, [‘चल हट जा यहां से। मुझे राजनीति पर बात नहीं करनी।’] என்று சாதாரணமாகச் சொல்லி[13], விலக்கி விடுவதைப் போன்று உள்ளது.

முஸ்லிம்மதத்  தலைவர் அறிவுரை கூறுகிறாராம்: இருப்பினும் சில ஊடகங்கள் இதனை பெரிது படுத்திக் காட்டியுள்ளன. “சங்கராச்சாரியார் செய்தியாளரை அறைந்து விட்டார்[14], கன்னத்தில் பளார்……” என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஒரு டிவிசெனலில், ஒரு முஸ்லிம் மதத்தலைவர், “மதகுருமார்கள், சந்நியாசிகள் எல்லோரும் இவ்வாறு கோபப்படக்கூடாது, அடிக்கக் கூடாது”, என்று அறிவுரை சொல்வதைப் போலக் காட்டியுள்ளது. முஸ்லிம் இமாம்கள், காஜிக்கள் முதலியோர்கள், இந்தியாவில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், கொள்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயமே. கிறிஸ்தவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரியார்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அப்பொழுது, இந்து சாமியாரைக் கூப்பிட்டு, டிவிசெனல்கள் அவர்களது கருத்தைக் கேட்கவில்லையே? இதுவும் செக்யூலரிஸத்தில் வந்து விடும் போலும்!

வேதபிரகாஷ்

© 24-01-2014


[1] தினத்தந்தி, நரேந்திரமோடிகுறித்துகேள்விஎழுப்பியசெய்தியாளருக்குஅடிசாமியார்ஸ்வரூபானந்தசரஸ்வதி, ஜனவரி 24, 2014.

[8] Sharma, however, is not willing to lodge a formal complaint with the police. “He is a revered saint. Unfortunately, he lost his temper. The incident was nothing but a professional hazard,” Sharma told HT.

http://www.hindustantimes.com/india-news/mp-shankaracharya-swaroopanand-slaps-journalist-for-question-on-modi/article1-1175900.aspx

[9] The reporter later said he was not hit as “I ducked and Jagadguru’s hand only hit my mike”. He said would not lodge a police complaint as Swaroopanand is held in high esteem by the people.

http://news.outlookindia.com/items.aspx?artid=825957

[10] தினமலர், மோடிபற்றிகேட்டநிருபரைஅடித்தசாமியார், ஜனவரி 24.2014.

http://www.dinamalar.com/news_detail.asp?id=902129

Advertisements

இந்து முன்னணியே, ஓடாதே – நில்! இப்படி கத்துவது திக!

ஜூலை 11, 2010

இந்து முன்னணியே, ஓடாதே – நில்! இப்படி கத்துவது திக!

கரூரில் இந்து முன்னணியின் வாலாட்-டத்தால் – திராவிடர் கழகத்தின் மண்-டல மாநாடு ஒன்றை ஈரம் காய்வதற்குள் நடத்தும்படி நேர்ந்தது.

செம்மொழி மாநாட்டு விளம்பரப் பதாகையைக் கிழித்து தங்களின் தமிழ் வேஷத்தினை துல்லியமாகக் காட்டிவிட்டனர். கலைஞரின் உருவப்படத்தைக் சிதைத்ததன் மூலம் தங்களின் ஜென்ம விரோதத்தனத்தை விளம்பரப் படுத்திக்கொண்டனர்.

மாநாட்டில் அவர்கள் போட்ட காட்டுக் கூச்சல் கரூர் மக்களை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அந்த நேரம் பார்த்து திராவிடர் கழகத் தலைவர் கரூரில் திராவிடர் கழக மண்டல மாநாடு என்று வெளியிட்ட அறிவிப்பு கரூர் மக்களைக் களிப்படையச் செய்துவிட்டது.

கடந்த செவ்வாயன்று (6-.7-.2010) கரூரைச் சிறுக்கச் செய்து கருஞ்சட்டைக் கடல் பெருக்கெடுத்து ஓடியது. கருஞ்சட்டைச் சேனை பெருத்தது – கரூர் சிறுத்தது. ஆத்திரம் வராதோ ஆரியக் கும்பலுக்கு? எரிச்சல் முட்டாதா இந்து முன்னணிக் கூட்டத்துக்கு?

கழக மாநாடு நடக்குமுன் கரூர் இந்து முன்னணியினர் சில வினாக்களைத் துண்டு வெளியீடுகள் மூலமாகவும், சுவரொட்டிகள் மூலமாகவும் எழுப்பியிருந்தனர்.

வினாக்கணைகள்தானே கருஞ்சட்டைச் சேனைக்கு விருப்பமான உணவு? எதிர்ப்புதானே எங்களுக்கு இன்பத் தேனிலா?

இந்து முன்னணி எழுப்பிய வினாக்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மாநாட்-டில் பதில்களைக் கூறிவிட்டார் என்று தினமணி (9.-7.-2010) மரியாதையாக ஒப்புக் கொண்டிருக்கிறது – அதனைப் பாராட்டலாம்தான்!

இந்து முன்னணியினர் புதியதாக சில வினாக்-களை எழுப்பியதாக அதே தினமணி வெளியிட்டுள்ளது.

(1) காஞ்சி சங்கரமடத் தலை-வராக தலித் ஒருவர் தலைவராக நியமிக்கப்படும்பொழுது தி.க.விலும் நியமிப்போம் என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

காஞ்சி சங்கர மடம் பிராமணர்-களாலும், மதுரை ஆதீனம் மடம் பிள்ளைமார்-களாலும், கோவை மருதாச்சலம் அடிகளார் மடம் கவுண்டர்-களாலும், கோவிலூர் மடம் செட்டியார்களாலும் பராமரிக்-கப்படுகிறது. இவ்வாறு சமுதாய-வாரியாக மடங்கள் உள்ளன.

தி.க. கடவுள் மறுப்பு இயக்-கமாக இருந்து வந்ததா? இல்லை, ஒரு ஜாதி சார்ந்த இயக்கமா என்பதைத் தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வேண்டு-கோளுடன் கூடிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இதன் மூலம் காஞ்சி சங்கர மடம் பிராமணர்-களுக்கு மட்-டும், பிராமணர்களால் தோற்று-விக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதற்கு வேண்டுமானால் கரூர் இந்து முன்னணியினரை ஒரு முறை கைதட்டிப் பாராட்டலாம்.

காஞ்சி மடம் என்பது பார்ப்பனர்களின் மடம்- பார்ப்-பனர்களுக்காகவே உள்ள மடம். சூத்திர பஞ்சம தமிழர்-களே, அங்கு ஏன் செல்-கிறீர்கள்? அவர்களின் கால்-களில் ஏன் மண்டியிடுகிறீர்கள்? ஏன் காணிக்கையைக் கொட்டு-கிறீர்கள்.

சங்கர மடத்தினால் நிறு-வப்பட்ட அத்தனை அறக்-கட்டளைகளும் பார்ப்பனர்-களுக்காகத்தான் _ அத்தனை உதவிகளும், சலுகைகளும். சமாராதனைகளும் பார்ப்-பனர்களின் வயிற்றில் அறுத்துக் கட்டுவதற்குத்தான் என்று திராவிடர் கழகம் சொல்லும் பொழுதெல்லாம் – எழுதும்-போதெல்லாம் – இது குறுகிய கண்ணோட்டம், பிராமணத் துவேஷம் என்று சொல்லி வந்ததெல்லாம் பசப்பு வார்த்தைகள்; பகட்டு வார்த்தைகள் என்பது புரியவில்லையா? கரூர் கொடுத்த அடியில், தமிழர் தலைவர் மான-மிகு கி.வீரமணி அவர்கள் கொடுத்த சாட்டை-யடியில் விழி பிதுங்கி, மண்டைக் காய்ந்து, மளமளவென்று உண்மைச் சரக்கை ஊரறிய உலகறிய உளறிக் கொட்டி விட்டது. இது சங்கர மடத்துக்கும், சங்கர மடப் பக்தர்களுக்கும் மறை-விடத்தில் தேள் கொட்-டியது போன்றதுதான். இந்து முன்னணி வகையறாக்களுக்கு மிக முக்கியமான கேள்வி ஒன்று செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

இனி சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லப்படுவதற்கு அவர் அருகதை உடையவர்தானா?

இனி கண்டிப்பாக அழுத்தம் திருத்தமாக ஜெகத்குரு என்று சொல்லுவதை வாபஸ் வாங்கிக் கொண்டு, பார்ப்பன குரு என்றுதான் அழைக்க வேண்டும். ஏன் என்றால் இந்து முன்னணியே ஒப்புக் கொண்டுவிட்டது – சங்கர மடம் பார்ப்-பனர்களுக்கானது என்று. அவாள் அவாளை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும் – தாராளமாக தூக்கிச் சுமக்கட்டும் -_- சுயமரியாதைக்காரர்கள் அப்பொழுது கண்டிப்பாக குறுக்கிடவே மாட்டார்கள் _- மாட்டவே மாட்டார்கள். அப்பொழுதும் கூட பார்ப்பன குரு என்று அழைக்க-வேண்டுமே தவிர பிராமணக் குரு என்று அழைக்கக்கூடாது. அப்படி அழைத்தால் பார்ப்-பனர் அல்லாத எங்களை சூத்திரர்கள் என்று மறை-முகமாக அழைப்பதாகப் பொருள்படும். அதன் காரண-மாக சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி! என்ற முழக்கம் எங்களை உசுப்பிவிடும்.

இன்னொன்றும் இருக்-கிறது. இந்துக்களின் தலைவர் சங்கராச்சாரியார் என்றும் குறிப்பிடக்கூடாது; இந்துக்-களே ஒன்று சேர்வீர் என்று அழைப்பு கொடுக்கும் யோக்-கியதையும் அவாளுக்குக் கிடை-யவே கிடையாது; வேண்டுமா-னால் பார்ப்பனர்களே ஒன்று சேருங்கள் என்று கூப்பிட்டுத் தொலையட்டும்!

இனிமேல் சைவக் கோயில்களில் குடமுழுக்கு செய்ய சங்கராச்சாரி-யார்கள் வரக்கூடாது. அப்படி ஒரு தடைச் சட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். சைவர்கள் வேறு – பார்ப்-பனர்கள் வேறு என்பதை ஆயிரம் ஆயிரம் எடுத்துக் காட்டுகளுடன் தமிழ-ரான _ சைவ மெய்யன்பரான, தமிழ்க்கடல் மறைமலை அடிகள் எம்.எல். பிள்ளை என அழைக்கப்பட்ட கா.சு.பிள்ளை போன்றவர்கள் கறாராகவே எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இனிமேல் சங்கராச்சாரியார் உபந்நியாசம் செய்ய வேண்டுமானால் பார்ப்பனர் வட்டத்துக்குள் தான் சுருங்கிக் கொள்ள வேண்டும்.

ஆன்மீகம் என்ற போர்வையில் பார்ப்பனர் அல்லாதாரை வளைக்கும் அயோக்கியத் தனத்தில் ஈடுபடக்கூடாது – அதற்கான அடிப்படைத் தகுதி அவர்களுக்குக் கிடையாது என்பதை இந்து முன்னணி தினமணி வாயிலாகத் தெரிவித்துக் கொண்டு விட்டது.

திராவிடர் கழகத்துக்குத் தலித் ஒருவர் தலைவராக வருவதில் எந்த விதத் தடையும் கிடையாது. தலித் வரக்கூடாது என்ற விதிகளும் இல்லை.

இயக்கத்தின் கொள்கைகளில் தோய்ந்து, இயக்கத்திற்காகப் பாடுபடும் இயக்கத் தோழர்களின் மதிப்பைப் பெறும் எந்தத் தலித்தும் திராவிடர் கழகத்தின் தலைவராக வருவதில் தடையில்லை. கழகப் பொறுப்புகள் என்பது வேலை வாய்ப்பு அலுவல-கமும் அல்ல -_ இடஒதுக்கீடு சுழற்சி முறைக்கு. தொண்டு செய்வதற்குரிய துல்லியமான இடம்.

பார்ப்பனர்கள் கழகத்தில் உறுப்பிரான முடியவே முடியாது. கழகத்தில் உறுப்பினராகும் எவரும் அதன் தலைமையிடத்துக்கு வர வாய்ப்பு இருக்கும் போது திராவிடர் கழகத்திற்குத் தலித் தலைவர் என்ற கேள்விக்கே இடமில்லை.

ஜாதி உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு சமூகப் புரட்சி இயக்கம் திராவிடர் கழகம் என்பது எதிரிகளும் ஒப்புக்கொள்ளக்கூடியதாகும். இதில் ஜாதிப் பிரச்சினையைத் திணிக்கப் பார்ப்பது பரிதாபத்திற்குரியது.

தலித் ஒருவர் திராவிடர் கழகத்-திற்குத் தலைவராக வருவதற்குத் தடையில்லை என்பது போல, சங்கர மடத்திற்கு அப்படி ஒரு விதி _- சம்பிரதாயம் உண்டா – இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் தேவை.

(2) கடவுள் இல்லை என்பதை மாநாட்டில் பங்கேற்கும் அரசியல் கட்சி-யினரைத் தேர்தலில் போட்டி-யிடும்போது கடவுள் இல்லை என்று கூறுவோரின் வாக்குகள் மட்டுமே போதும், கடவுள் நம்பிக்கை உள்ள-வர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று கூறமுடியுமா என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளதாக தினமணி கூறுகிறது. இது தேர்தலில் நிற்கக் கூடியவர்-களைப் பார்த்து எழுப்பப்பட வேண்டிய கேள்வி.

இன்னொன்று, – தேர்தல் என்பது கடவுள் உண்டா -இல்லையா என்பதற்-காக நடத்தப்படுவது அல்ல. – ஆட்சியை அமைப்பதில் அந்தந்தக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்து-கின்றன. அங்கே அரசியலைப் பார்க்-கிறார்களே தவிர ஆன்மிகவாதிகளா, நாத்திகர்களா என்று பார்ப்பதில்லை. அரசியல் கட்சிகளில் ஆன்மிகவாதி-களும் உண்டு. நாத்திகவாதிகளும் உண்டு. அப்படி இருக்கும் போது அரசி-யல் கட்சிகள் இதனை முன்னிறுத்த வாய்ப்பே கிடையாது.

அதே நேரத்தில் இந்து முன்னணி-யினர் கவனத்தை 1971-_ஆம் ஆண்டிற்கு இழுத்துப் போக வேண்டியதுதான்.

சேலத்தில் 23-.1.-1971 அன்று மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய ஜனசங்கத்தினர் (இன்றைய இந்து முன்னணி – பா.ஜ.க. வகையறா) தந்தை பெரியார் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, தந்தை பெரியார் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அலங்கார வண்டியின் மீது செருப்பை வீசினார்கள். அந்தச் செருப்பை இலாவகமாகப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் உருவத்திற்குப் பாதுகா பட்டாபிஷேகம் (செருப்படி) செய்தனர். கழகத் தோழர்கள்! ஊர்வ-லத்தின் முடிவில் இராமர் உருவமும் கொளுத்தப்பட்டது. அதன் மூலம் தமிழர்களின் தன்மான உணர்வுத் தீயின் உக்கிரம் வெளிப்பட்டது.

அவ்வளவுதான்! மார்ச்சு முதல் வாரத்தில் நடைபெற விருந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.-வுக்கு எதிராக இந்தப் பிரச்சினையைத் திருப்பினார்கள். இராமனை செருப்பா லடித்த தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பெரிய பெரிய சுவரொட்-டிகளை வெளியிட்டனர். துக்ளக்கும் இதே தினமணியும் நிர்வாண ஆட்டம் போட்டன. அய்யப்பனையும் முருகனை-யும் பிரார்த்தித்தது தினமணி -_- தி.மு.க. தோற்க வேண்டுமாம்

முடிவு என்ன தெரியுமா? ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரித்த தி.மு.க. 183 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 இல் அதற்குக் கிடைத்த இடங்கள் 138 தான். இராமனை செருப்பாலடித்த நிலையில் 45 இடங்களைக் கூடுதலாகப் பெற்றது. அப்போது ராஜாஜி என்ன அறிக்கை வெளியிட்டார்? தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக் கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடு கள், தெய்வபக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்வோரின் திருமுன்னரே அவரது ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை.

இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி யிழந்துவிட்டது; இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்று கல்கியில் (4.-4.-1971) தமது கருத்தை வெளியிட்டார் ஆச்சாரியார்.

இந்து முன்னணியே! இந்து முன்-னணியே! இதற்கு என்ன பதில் சொல்-கிறாய்?

ஆஸ்திகம் – நாஸ்திகத்தை முன்னி-றுத்தி நடைபெற்ற தேர்தலில் நாஸ் திகம் வென்றுவிட்டதே – _ நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறாயா? வீண் சவடால் வேண்டாம்! ஓடாதே, நில்!

தமிழில் பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்!

ஜூலை 3, 2010

தமிழில்பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்!

http://www.viduthalai.periyar.org.in/20100703/snews02.html

தமிழில்பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்

திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற காஞ்சி சங்கராச்சாரியார்) ஒருநாள் தங்கியிருந்த போது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து-வைத்தார். ஏன் தாத்தாச்சாரியாரே.. .நாம எவ்வளவோ சபை நடத்துறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்ரோம். ஆனா… பிராமணா-ளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே… அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவர் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே… என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன். நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்-தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி?… ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?…

திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்தத் திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.

இதப்பாரும்…எல்லா கோயில்கள்லயம் திருப்பாவை _ திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச்சேரும். ஏன்னா… நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும். தமிழ். என்ன சொல்றீர்? என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.

சமஸ்கிருதத்தில் பேசியது மற்றவர்களுக்குப் புரியவில்லையாம்: நாங்கள் இப்படி பெரிய திட்டம் பற்றி சத்தமாக சிரித்து பேசிக் கொண்டிருந்த போதும்… சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள். அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக் கூட நாங்கள் பேசிக்கொள்வது புரியாது.

ஏன் ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?  என்று மகா-பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்: உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒருநாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்?… புரிந்து நடந்து கொள்… என்றேன். அப்போதும் அந்த கேள்வியை கேட்டவர்களுக்கு புரியவில்லை. உங்களுக்கு…?

(இந்து மதம் எங்கே போகிறது) அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

விடுதலையின் திரிபு-பொய்வாதம்: இதன் பொருள் புரிகிறதா? தமிழ் நீஷப்பாஷை என்பதும் சமஸ்கிருதம் தெய்வப் பாஷை என்பதும் அவாளின் உறுதியான எண்ணம். தமிழில் பேசிவிட்டால் தோஷம் ஏற்பட்டு விடும்; உடனே குளிக்க வேண்டுமாம், என்ன புரிகிறதோ தமிழர்களே!

ஏன்னா… நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும். தமிழ். என்ன சொல்றீர்? என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.

இப்படி சொல்லிவிட்டு, பிறகு எப்படி, அத்தகைய விளக்கம் அளிக்க முடியும்?

திருப்பாவை – திருவெம்பாவை என்ன அரேபிய மொழியிலா உள்ளது? தமிழில் தானே உள்ளது? பிறகு எதற்கு, திருப்பாவை – திருவெம்பாவை உற்சவம் நடத்த சொல்லவேண்டும், “சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு” ஏற்படவேண்டும்?
ஆக, வீரமணி நிச்சயமாக பொய்சொல்வது தெரிகிறது.