இந்துத்துவம் பிணைக்கும் போது பிஜேபிகாரன், ஆர்.எஸ்.எஸ்.முதியவரைக் கொலை செய்ய முடியுமா? குற்ற மனப்பாங்கு எப்படி வந்தது – சுயபரிசோதனை செய்யவேண்டும்!
கருடா சௌக்கியமா? பரசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கேட்டது!: அதிகாரம் ஊழலை உண்டாக்கும், சிதைக்கும், அதுபோல, அளவுக்கு அதிகமான அதிகாரம், எதேச்சாதிகாரம் அதிக அளவில் ஊழலை, நாசத்தை, சேதத்தை உண்டாக்கும் (Power corrupts, absolute power corrupts absolutely). ஒரு சாதாரண மனிதன் கூட, அதிகாரத்தைக் கொடுத்தால், கொஞ்சம் கொஞ்சமாக அகம்பாவம், ஆணவம், திமிர், மமதை, இருமாப்பு என்று ஆட ஆரம்பித்து விடுவான். “யாரும் இருக்கும் இடத்தில் இருது கொண்டால், எல்லாம் சௌக்கியமே,” கருடன் சொன்னது. இந்துத்துவ வாதிகளுக்கு, இதெல்லாம் தெரியாது என்று சொல்ல முடியாது. தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகளால், முதலில் சுய-பரிசோதனை செய்து கொண்டு, என்ன பிரச்சினை என்று அறிந்து, அதனை தீர்க்க முயற்சிக்க வேண்டும். பிரம்மாவை ஒதுக்கி, சிவனைப் போல வரம் கொடுத்துக் கொண்டே இருந்தால், பஸ்மாசுரர்கள் அதிகமாகிக் கொண்டே இருப்பார்கள். கட்டுப் படுத்த வேண்டும். லெட்டர்பேட், விசிடிங் கார்டுகள் அதிகமாகின்றன எனும்போதே, செக் வைக்க வேண்டும்.
அபினவ் தீர்த்தசுவாமி சொத்துக்களும், ஆக்கிரமித்த பிஜேபி தலைவரும்: மடத்தின் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் வடக்கு மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலன் (68), (வயது 80) என்கிறது மாலைமுரசு, 65 என்கிறது இன்னொரு ஊடகம்[1]. ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மகன் வாசுதேவன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மண்டல பொறுப்பாளர்[2]. அப்பகுதியில் உள்ள அபினவ் தீர்த்தசுவாமி மடத்தின் பொறுப்பாளராக கோபாலன் இருந்துவந்தார்[3]. இந்த மடத்துக்கு கும்பகோணம், நாச்சியார்கோவில் பகுதியில் நிறைய சொத்துக்கள் உள்ளதால், இதை கோபாலன்தான் நிர்வகித்து வந்துள்ளார். இந்த மடத்துக்கு சொந்தமான 13 கடைகள் அப்பகுதியில் உள்ளன. இங்கு கடை நடத்தியவர்களில் பலர் வாடகை செலுத்தாமல் இழுத்தடித்ததால், மடத்தின் நிர்வாகத்தினர் கூறியதன்பேரில், அனைவரும் கடைகளை காலி செய்துவிட்டனர். ஆனால், அங்கு டெய்லர் கடை நடத்திவந்த பாஜகவின் நாச்சியார்கோவில் நகரத் தலைவரான சரவணன் (48) மட்டும், கடையை காலி செய்ய மறுத்துவிட்டார்.
நீதி மன்றத்திற்குச் சென்றது, காலிசெய்யச் சொன்னது: இதையடுத்து, நீதிமன்றத்தில் கோபாலன் தொடர்ந்த வழக்கில், கடையை காலிசெய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதால், கடை காலி செய்யப்பட்டது. இதுதான் இவர்களுக்கு இடையே பிரச்சனையாக இருந்தது[4]. முதலில் 2 லட்சம் வாடகை பணத்தை தருகிறேன் என்றவர் நாளடைவில், “இது என் அப்பா வெச்ச கடை, ரொம்ப வருஷமா கடை வெச்சிருக்கோம். நீ கோர்ட்டுக்கு போனால்கூட கடை எங்களுக்குதான்,” என்று சொல்லி உள்ளார். சரவணன் இப்படி சொல்லிவிட்டதால், கோபாலன் வேறு வழி தெரியாமல் கோர்ட் உதவியை நாடினார்.. கடைசியில் சரவணனை கடையை காலி செய்ய கோர்ட் சொல்லிவிட்டது. இந்த உத்தரவையடுத்து, “கடையை காலி செய்தால் ரூ.2 லட்சம் தரேன்னு சொன்னீங்களே அந்த பணம் எங்கே,” என்று கோபாலன் கேட்டார்.. அதற்கு சரவணன், “அது கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி சொன்னது, இப்பதான் தீர்ப்பு வந்துடுச்சே” என்று வாக்குவாதம் செய்து வந்துள்ளார்[5].
முதியவர் கோபாலன் 30-06-2020 அன்று கொலை செய்யப் பட்டார் – 01-07-2020 மாலை செய்தி: 30-06-2020 செவ்வாய் கிழமை, இரவு தனது வீட்டின் திண்ணையில் கோபாலன் அமர்ந்து இருந்தார்[6]. முதலில் வாக்குவாதம் நடந்துள்ளது[7]. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கோபாலனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்[8]. இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கோபாலன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்[9]. இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மடத்தின் பொறுப்பாளராக பதவி வகித்து வந்த கோபாலன், மடத்துக்கு சொந்தமான சில கடைகளை பல மாதங்களாக போராடி காலி செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பிஜேபி நகரத்தலைவர் கொன்றதை ஒப்புக் கொண்டது, 02-07-2020 மாலை செய்தி இதனால், கோபத்தில் இருந்துவந்த சரவணன் 30-06-2020 இரவு மதுபோதையில் சென்று, தன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த கோபாலனை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில், கோபாலன் உயிரிழந்தார். நாச்சியார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர்[10]. விசாரணையில் உண்மையினை ஒப்புக் கொண்டார் என்று போலீஸார் கூறுகின்றனர்[11]. இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம்[12]. “கடையை காலி செய்யச் சொன்னதால் கோபாலன் மீது கோபத்தில் இருந்துள்ளார் சரவணன். இவர் பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ளார். இந்நிலையில் கொரோனாவால் டெய்லர் கடை வருமானமும் போய்விட்டதால், பணரீதியாக கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் கோபாலன் மீதான ஆத்திரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த சரவணன் மாம்பழம் வெட்டுவதற்கு எனக் கூறி புதிய கத்தி ஒன்றை வாங்கி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு முன் நின்றுகொண்டிந்த கோபாலனிடம், ` என் கடையைக் காலி செய்ய வைத்துவிட்டாயே.. உன்னை சும்மாவிடமாட்டேன்’ எனக் கூறி கத்தியைக் கொண்டு முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிக் கொலை செய்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சரவணனைக் கைது செய்துவிட்டோம்” என்றனர்[13].
“இது என் அப்பா வெச்ச கடை, ரொம்ப வருஷமா கடை வெச்சிருக்கோம். நீ கோர்ட்டுக்கு போனால்கூட கடை எங்களுக்குதான்,”: பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ள சரவணன் இவ்வாறு சொன்னதில் பல திடுக்கிடும் விவரங்கள் வெளி வருகின்றன:
- கோவில்-மடத்து சொத்து என்று சரவணனுக்குத் தெரிந்திருக்கிறது.
- பிஜேபி கோவில்-மடத்து சொத்துக்களை அரசிடமிருந்தே மீட்க போராடி வருவது தெரிந்த விசயமே.
- “உழுதவனுக்குத் தான் நிலம்,” என்பது போல, “ஆக்கிரமிப்புக் காரனுக்குத் தான் சொத்து சொந்தம்,” என்ற தத்துவத்தை யார் சொல்லிக் கொடுத்தது?
- அந்நிலையில் பிஜெபி தலைவரே, அவ்வாறு மடத்து சொத்தினை அபகரித்து, தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
- பிஜேபிகாரர்களுக்கு அவ்வாறு தான் பயிற்சி அளிக்கப் படுகிறதா? சரவணனுக்கு அத்தகைய எண்ணன் வந்தபோதே, அவன் தடுக்கப் பட்டிருந்தால், இத்தகைய ஆக்கிரமிப்பு நடந்திருக்காது.
- கோவில்-மடத்து சொத்துக்கள் ஆக்கிரமிப்பு என்றால், சமூகவளைதளங்களில் இந்துத்துவவாதிகள் பிண்ணி எடுத்து விடுகிறார்கள்.
- ஆனால், இதை எப்படி கண்டு கொள்ளாமல் விட்டர்கள் என்று தெரியவில்லை.
- ஆகவே, சட்டப் படியான நடவடிக்கை, போராட்டம், மீட்பு எனும்போது, சம்பந்தப் பட்டவர்கள் கொள்கைகளுடன் செயல்பட வேண்டும்.
- நானும் மற்றவர்களைப் போல [திக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் ஆக்கிரமிப்புக் காரர்கள்] ஆக்கிரமித்துக் கொள்வேன், தனதாக்கிக் கொள்வேன் என்ற மனப்பாங்கில் இருந்தால், பிஜேபியில் இருக்க வேண்டிய அவசியமே இல்லையே?
- அதிகாரம், பணம் எல்லாம் வந்தால், அகம்பாவம், ஆணவம், திமிர் எல்லாம் வரலாம், ஆனால், இந்து என்ற உணர்வு இருக்க வேண்டும். அது இல்லாமல், இவ்வாறு செயல்பட்டதால் தான், இந்த ஆள் கொலையும் செய்திருக்கிறான்.
இந்துத்துவவாதிகள், இந்துத்துவ அரசியல்வாதிகள், இந்துத்துவ சிந்தனையாளர்கள், இந்துத்துவ அபிமானிகள் …இவற்றைப் பற்றி பொறுமயாக ஆராய வேண்டும், மாற்றிக் கொள்ள வேண்டும்.
© வேதபிரகாஷ்
02-07-2020
[1] ஊடகங்கள் எப்படி விவரங்களை சேகரிக்கின்றன, செய்திகளாகப் போடுகின்றன, செய்திகளாக்குகின்றன, அவற்றின் தரம் எப்படியுள்ளது என்பதனை, இது போன்று என்னுடைய பல பதிவுகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்.
[2] தமிழ்.இந்து, ஆர்எஸ்எஸ் பிரமுகரின் தந்தை கொலை; நாச்சியார்கோவில் நகர பாஜக தலைவர் கைது, Published : 02 Jul 2020 07:33 AM; Last Updated : 02 Jul 2020 07:37 AM
[3] https://www.hindutamil.in/news/tamilnadu/562225-bjp-leader-arrested-for-rss-cadre-murder.html
[4] தமிழ்.ஒன்.இந்தியா, 65 வயது ஆர்எஸ்எஸ் பிரமுகரை.. கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற.. பாஜக நிர்வாகி.. ஷாக்கில் கும்பகோணம்! By Hemavandhana | Updated: Wednesday, July 1, 2020, 17:44 [IST]
[5] https://tamil.oneindia.com/news/thanjavur/kumbakonam-mattam-incharge-murder-by-bjp-cadre-390012.html
[6] தினமணி, கும்பகோணம் அருகே அபிநவதீர்த்தர் மடத்தின் பொறுப்பாளர் கொலை, By DIN | Published on : 30th June 2020 10:36 PM.
[7] https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jun/30/uttaradi-mutt-incharge-killed-near-kumbakonam-3431524.html
[8] மாலைமலர், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் தந்தை கொலை– மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு, பதிவு: ஜூலை 01, 2020 13:23 IST
[9] https://www.maalaimalar.com/news/district/2020/07/01132323/1661015/RSS-Administrator-father-murdered-police-investigation.vpf
[10] NEWS18, தஞ்சையில் 87 வயது முதியவர் கொலையில் சிக்கிய பாஜக முன்னாள் நிர்வாகி, LAST UPDATED: JULY 2, 2020, 8:59 PM IST.
[11] https://tamil.news18.com/news/live-updates/tanjore-rss-man-murder-ex-bjp-man-arrested-san-312139.html
[12] விகடன், `வருமானமும் போச்சு.. கடையும் போச்சு!’ –மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி, கே.குணசீலன், Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM.
[13] https://www.vikatan.com/news/crime/old-man-murdered-by-bjp-cadre-in-kumbakonam?artfrm=v4