Archive for the ‘குஸ்பு’ Category

குஷ்பு ஒரு வழியாக பிஜேபியில் சேர்ந்தே விட்டார்: முருகன் திட்டம் வெற்றியில் முடிந்துள்ளது – பிஜேபிக்கு லாபம் உண்டா, ஆர்.எஸ்.எஸ் சுயபரிசோதனை செய்யுமா? (3)

ஒக்ரோபர் 14, 2020

குஷ்பு ஒரு வழியாக பிஜேபியில் சேர்ந்தே விட்டார்: முருகன் திட்டம் வெற்றியில் முடிந்துள்ளது – பிஜேபிக்கு லாபம் உண்டா, ஆர்.எஸ்.எஸ் சுயபரிசோதனை செய்யுமா? (3)

ஹத்ராஸ் விசயத்தில் காங்கிரஸ் தலைவர்களைப் போற்றி, மோடி-யோகி முதலியோரை நக்கலடித்து பேசிய குஷ்பு, எப்படி மாறினார்?: 05-10-2020 அன்று, குஷ்பு[1], “அமித் ஷா நலம்பெற ட்விட் போட்டதால் நான் பாஜகாவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவியது[2]. கட்சி மாறிய வதந்திக்கு இந்தக்கூட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது[3]. பிரதமர் விரைவில் பதில் சொல்லும் காலம் வரும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்,’’ என்று தெரிவித்தார்[4]. இந்த வீடியோவும் இன்னும் சுற்றில் உள்ளது. ஆனால், 12-10-2020 அன்று பிஜேபியில் சேர்ந்த செய்தி வருகின்றது, அப்படி ஒரு வாரத்தில் என்ன நடந்தது? குஷ்பு எப்படி தலைகீழாக பல்டி அடிக்க முடிந்தது? தில்லியில் பிஜேபி தலைவர்களை சந்திப்பது ஒரே நாளில் அரங்கேற்றம் நடத்த முடியுமா? இக்கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் யோசிக்க வேண்டிய விசயம் ஆகிறது: சினி.ரிப்போர்டர்ஸ்.காம்[5], “ட்விட்டரில் பக்தாஸை விரட்டி, விரட்டி அடிச்சீங்களே. நீங்கள் போய் இப்படி பாஜகவில் சேரலாமா?. இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. என்னமா இப்படி பண்றீங்களேமா என்று தெரிவித்துள்ளனர். குஷ்பு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்க காத்திருப்பதாக கஸ்தூரி ஒரு ட்வீட் போட்டார்.  அதை பார்த்தவர்கள், முதலில் குஷ்பு பாஜகவுக்கு சென்றிருக்கிறார். அடுத்து நீங்களா?. உங்களை கூட பாஜகவில் சேர வருமாறு அழைத்ததாக அண்மையில் கூறினீர்களே. அக்கா, நீங்களும் அந்த பக்கம் போய்விடுவீர்களா? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவினர் ஏன் நடிகைகளை தங்கள் கட்சியில் சேர வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சங்கிகள் எல்லாம் மங்கிகள் மாதிரி நடந்து கொள்கிறார்கள் என்று சொன்ன குஷ்பு பாஜகவுக்கு சென்றுவிட்டாரே கஸ்தூரி அக்கா. இது பற்றி உங்கள் கருத்து என்ன?. பாஜகவில் குஷ்பு என்கிற தலைப்பில் தயவு செய்து உங்கள் யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிடுங்கள். உங்கள் கருத்துகளை கேட்க ஆவலாக இருக்கிறோம் கஸ்தூரி அக்கா என்று தெரிவித்துள்ளனர்,” இப்படி தமாஷாக போட்டாலும், அதில் உள்ள விவகாரங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்[6]. இத்தனை விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தன்னுடைய ஒழுக்கமுள்ள இயக்கம், தூய பிம்பம் கறை படாமல் காத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது.

குஷ்புவின் தனிப்பட்ட பிரச்சினையை பிஜேபி எப்படி தீர்க்க முடியும்?: மார்ச் 2020லேயே தான் காங்கிரஸிலிருந்து விலக தீர்மானித்ததாகவும், கொரோனா விவகாரத்தினால், நேரியையாக மேலிடத்தை சந்திக்க முடியாத நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார். அழகிரி முடிந்த வரை சமாதனம் செய்தும் ஒப்புக்கொள்ளவில்லை. தனது ராஜினாமா கடிதத்தில்[7], “……..பணத்துக்காகவோ, புகழுக்காகவே நான் கட்சியில் இணையவில்லை. களத்திலிருக்கும் மக்களோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத, மக்கள் அங்கீகாரம் இல்லாத சிலர் கட்சியின் உயர் பதவியில் அமர்ந்துகொண்டு கட்டளை பிறப்பிக்கிறார்கள்[8]. கட்சியின் நலனுக்காக உண்மையில் உழைக்கும் என்னைப் போன்றவர்களை அவர்கள் புறந்தள்ளுவதோடு, ஒடுக்கவும் செய்கிறார்கள். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கட்சியிலிருந்து விலகுவதாக நான் முடிவு செய்திருக்கிறேன். காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன்[9]. இந்தச் சமயத்தில், ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும்,’’ என்று குஷ்பு குறிப்பிட்டிருக்கிறார்[10]. அந்நிலையில், பிஜேபியில் இணைந்தால், வெல்லக்கூடிய எம்.எல்.ஏ சீட், அல்லது ராஜ்ய சபா எம்பி அளிக்கப் படும் என்றதால்[11], கவர்ச்சிகர ஸ்டார் பிரச்சாரகர் என்ற முறையில் இணைக்கப் பட்டுள்ளதாக, ஒரு பிஜேபி தலைவர் கூறினார்[12]. இருப்பினும், அவருடைய தனிப்பட்ட பிரச்சினைகளை பிஜேபி எப்படி தீர்க்க முடியும்?

பெண்களை வைத்து பிஜேபி செய்து வரும் பரிசோதனை: பிஜேபி ஏற்கெனவே நடிகைகள், பெண்-பேச்சாளர்கள் முதலியோரை வைத்து செய்த பரிசோதனைகள் நிறையவே உள்ளன. லக்ஷ்மி, கௌதமி, ஜெயலக்‌ஷ்மி, காயத்ரி, ஜெமிலா, பர்வீன் சுல்தானா, நமிதா….. என்றுள்ளனர். தமாஷாக “அம்மாடியோவ்! பயங்கர ஜொல்லு பார்ட்டி (BJP) தான்!,” என்று கிண்டலடிப்பதும் உண்டு, ஜெயபிரதா, ஹேமாமாலினி, கிரண் கேர்,, வைஜயந்தி மாலா, தீபிகா, ரூபா கங்குலி, சௌந்தர்யா, ஸ்ருதி… போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா, என்று தொடர்ந்தது. மதுவந்தி, குட்டி பத்மினி, ஜெயலட்சுமி, சுபத்ரா முகர்ஜி, காஞ்சனா, ரூபாஞ்சனா, ரிம்ஜிம்,… ….அடடா ஜில்ஜில் தான்! இன்னும் யாரல்லாம் .. வரப் போகிறார்களோ? மாதவி லதா, ஆஷா பர்தோலாய், அங்கூர் லதா டேகா, பிரியங்கா காலிதா, ரித்திகா அஸாரிகா, பிரதிமா தேவி, ஜெயஶ்ரீ கோஸ்வாமி..என்று தொடரும். வடகிழக்கு மாநிலங்கள் (வங்காளம் உட்பட) லாக்கட் சட்டர்ஜி, மௌமிதா குப்தா, மௌசுமி சட்டர்ஜி, ரூபா பட்டாச்சார்யா, அஞ்சு கோஸ், அஞ்சனா பாசு, ஈஷா கோபிக்கர், ஷைனா……….என்றுள்ளனர். ஏக் துஜே கே லியே போல ஒரு பாட்டே எழுதலாம் போலிருக்கிறது! லாக்கட், ரிம்ஜிம், மௌமிதா, மௌசுமி, அஞ்சு, அஞ்சனா, நமிதா…………ஆனால், குஷ்பு நிறையவே திட்டியிருக்கிறார். ஶ்ரீகிருஷ்ணர் சிசுபாலனை 100 திட்டுக்கள் திட்ட அனுமதித்து, பிறகு கொல்லத்தான் செய்தார். கூட்டு சேர்த்துக் கொள்ளவில்லை! அம்மாவின் வேண்டுகோளை மதித்தார்! காங்கிரஸ் மற்ற திராவிடக் கட்சிகளைப் பொன்ற பரிசோதனைகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை! கொள்கையுடன் இருப்பவன் மாறமாட்டான்! இதில் ஏற்கெனவே பல பெண்கள் விலகிவிட்டார்கள்.

பிஜேபியை, மோடியை, ராமஜன்ம பூமி என்று எல்லாவற்றையும் விமர்சித்த குஷ்புவை எப்படி அணுகப் போகிறார்கள்?: குஷ்புவின் டுவீட்டுகள் அசாதாரணமானவை. அவற்றை எல்லாம் தமிழில் போட்டால், இந்துத்துவ வாதிகளால் தாங்க முடியாது.

 1. மோடியை, ராமஜன்ம பூமி விவகாரத்தை, ராமரை விட மோடி பெரிய ஆள் ஆகி விட்டார், என்று “ராமரை மோடி கோவிலுக்கு அழைத்துச் செல்லும் படம்” போட்டு கிண்டலடித்தார். எப்பொழுடு வெடிக்கும் என்று சொல்ல முடியாது, என்றது.
 2. “மன் கி பாத்-ல் பேசுகின்ற விசயங்கள் வெடிகுண்டுகளாக டிக்-டிக் என்று ஒலித்துக் கொண்டிருக்கின்றன”,
 3. மற்ற விவகாரங்களை, “அச்சே தின்” என்று வாக்களித்தது இது தானா, என்று பல நிகழ்வுகளைக் குறிப்பிட்டது.
 4.  मोदी है तो मुमकिन है (மோடி இருந்தால் அது சாத்தியமாகும்) என்று சாலையில் பள்ளம் உண்டான போட்டோவைப் போட்டு என்று கிண்டல் அடித்தது,
 5. இவற்றையெல்லாம் பிஜேபி-காரர்கள், மோடி-பக்தர்கள், காவி போராளிகள் மறந்து விடுவார்களா?

இவையெல்லாம் இம்மாதம் வரை தொடர்ந்துள்ளது. அப்படியென்றால், காங்கிரஸா-பிஜேபியா என்ற நிலையில், ஜாக்கிரதையாக கடைசிவரை செயல்பட்டுள்ளார். எங்கு சாதகம், பாதுகாப்பு, பலன் என்று ஆராய்ந்து, பேரம் பேசித்தான், தீர்மானத்துடன், பிஜேபியில் சேர்ந்தார் என்று தெரிகிறது. அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றும் நியாயப் படுத்தப் பார்க்கிறார்கள். குஷ்பாவ் தாகரே (15 August 1922 – 28 December 2003) என்று பிஜேபி தலைவர் மற்றும் எம்.பி இருந்தார். அவரை எத்தனை தமிழக பிஜேபி-காரர்களுக்குத் தெரியும்? அவரையே மறந்து விடும் அளவிற்கு, இன்னொரு குஷ்பு / வாசனை வந்திருக்கிறது! போகின்ற வேகத்தைப் பார்த்தால், “பாரத் மாதாகி ஜே” என்பதற்கு பதிலாக,  “குஷ்பு மாதா கி ஜே,” என்று கோஷம் போடுவார்கள் போல!

© வேதபிரகாஷ்

13-10-2020


[1] ஏசியாநெட்.நியூஸ், அமித் ஷாவுக்காக ட்விட் போட்டால் நான் பா...,காரியா..? கொந்தளிக்கும் குஷ்பு..! , Thiraviaraj RM, Tamil Nadu, First Published 5, Oct 2020, 6:41 PM…

[2] https://tamil.asianetnews.com/politics/if-i-tweet-for-amit-shah-will-i-join-bjp-kariya-turbulent-khushbu-qhqcnd

[3] மாலை மலர், பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரப்புகிறார்கள்குஷ்பு, பதிவு: அக்டோபர் 05, 2020 18:32 IST

[4] https://www.maalaimalar.com/news/district/2020/10/05183244/1942351/Kushboo-says-He-is-rumored-to-be-joining-the-BJP.vpf

[5] சினி.ரிப்போர்டர்ஸ்.காம், மரம் விட்டு மரம் தாவும் குஷ்புஎன்ன ஆச்சு.. டிரெண்டிங்கில் முதலிடம்!, By Cinebazaar Web Mon, 12 Oct 2020.

[6] https://cinereporters.com/latest-news/kushboo-joints-bjp-in-tomorrow/cid1501215.htm

[7] புதிய தலைமுறை, சிலர் என்னை ஒடுக்கினர்’ – காங்கிரஸில் இருந்து குஷ்பு விலகல், Web Team, Published :12,Oct 2020 10:02 AM

[8] http://www.puthiyathalaimurai.com/newsview/83536/kushboo-resigned-from-congress

[9] விகடன், மதிப்பு அப்படியே இருக்கும்!’- சோனியாவுக்குக் கடிதம்; காங்கிரஸிலிருந்து விலகிய குஷ்பு, தினேஷ் ராமையா,  Published:12 Oct 2020 9 AM, Updated:12 Oct 2020 9 AM.

[10] https://www.vikatan.com/news/politics/kushboo-quits-congress-and-from-all-responsibilities

[11] Indian Express, Explained: After battling BJP for long, why has Khushbu Sundar joined BJP?, Written by Arun Janardhanan, Edited by Explained Desk | Chennai | Updated: October 13, 2020 10:38:16 am

[12] A senior BJP leader from Tamil Nadu who was not aware about Khushbu’s decision until Sunday night said she is going to be the star campaigner of BJP in Tamil Nadu. “A winnable MLA seat can make her an MLA or even a Rajya Sabha MP post when the time comes,” he said.

https://indianexpress.com/article/explained/khushbu-sundar-bjp-congress-6722127/

குஷ்பு ஒரு வழியாக பிஜேபியில் சேர்ந்தே விட்டார்: முருகன் திட்டம் வெற்றியில் முடிந்துள்ளது (1)

ஒக்ரோபர் 14, 2020

குஷ்பு ஒரு வழியாக பிஜேபியில் சேர்ந்தே விட்டார்: முருகன் திட்டம் வெற்றியில் முடிந்துள்ளது (1)


11-10-2020 அன்று குஷ்பு, சுந்தருடன் தில்லி சென்றது: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கடந்த சில தினங்களாக டுவிட்டரில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து பதிவிட்டும், உள்துறை மந்திரி அமித்ஷா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவர் நலம் பெற வாழ்த்தும் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது[1]. இதன்பின்னர், அ.தி.மு.க. முதல் அமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் வாழ்த்து தெரிவித்தார்[2]. பிரதமர், உள்துறை மந்திரி, முதல்-அமைச்சர் ஆகியோருக்கு வாழ்த்து சொல்வதில் எந்த தவறும் இல்லை எனவும் அவர் கூறி வந்தார். இதையடுத்து கடந்த சில தினங்களாக நடிகை குஷ்பு, பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக வதந்தி பரவியது.  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றுவிட்டு திரும்பிவந்த நடிகை குஷ்பு, 11-10-2020, அன்று இரவு 9.30 மணிக்கு திடீரென அவசரம் அவசரமாக டெல்லி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார்.

27-09-2020-க்கு முன்னரே 12-10-2020 செய்தி தினமலரின் வந்தது எப்படி?: 27-09-2020 தினமலரில், “பா.ஜ.வில் சேருகிறார் நடிகை குஷ்பு?” என்று செய்தி வந்தது. அதிலேயே, எல்லா விவரங்களும் இருந்தது கவனிக்கத் தக்கது. “காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, அடுத்த சில நாட்களில், டில்லியில், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைகிறார்[3]. கடந்த, 2016 சட்டசபை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்புவுக்கு, சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. காங்., தலைவர் பதவியை ராகுல் ஏற்க மறுத்ததும், சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றவர்கள், தலைவர் பதவியை ஏற்கலாம் என்ற கருத்துக்கு, குஷ்பு ஆதரவு அளித்தார். இதனால், தமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி, இளைஞர் காங்., தலைவர் ஹசன் மவுலானா உள்ளிட்ட சிலர், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சமீபத்தில், சென்னை வந்த, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வரவேற்பு நிகழ்ச்சியில், குஷ்பு பங்கேற்றார். அப்போது, ‘தமிழக காங்கிரசில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும், தன்னை அழைப்பதில்லை’ என, அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், குஷ்புவின் கணவர் சுந்தர் சி, தமிழக பா.ஜ., தலைவர் முருகனை சந்தித்து பேசியதாக தெரிகிறது[4]. எனவே, அடுத்த சில நாட்களில், டில்லியில், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, அக்கட்சியில் இணைகிறார் குஷ்பு. பீஹார் சட்டசபை தேர்தலில் மட்டுமின்றி, தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் சட்டசபை தேர்தலிலும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக களமிறங்கும் குஷ்பு, காங்கிரஸ் கட்சியையும், ராகுலையும் எதிர்த்து தீவிர பிரசாரம் செய்வார் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன”.

28-09-2020 – அண்ணாமலை பேச்சை, பிறகு மற்றவர் பேசியது: இதையெடுத்து அண்ணாமலையும், குஷ்புவை வரவேற்றுப் பேசியது வெளியானது[5]. “நடிகை குஷ்பு பாஜவுக்கு கட்டாய வரணும்…, பாஜகவின் இணைகிறாரா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், குஷ்பு பாஜகவில் சேர்ந்தால், அதை வரவேற்பேன். குஷ்பு பாஜகவில் சேர்ந்தால், பாஜக மேல் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதையும் தமிழகத்தில் பாஜக வளர்கிறது என்பதையும் காட்டும். மேலும் குஷ்பு தைரியமான பெண்மணி. அவருடைய தைரியம் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடியவை. ” என்று அன்புடன் அழைத்தார் என்று செய்தி. குஷ்பு பாஜகவில் சேரப்போவதாக கடந்த இரண்டு மாதங்களாகவே (ஜூலை-ஆகஸ்ட்) தகவல்கள் வருகின்றன. புதியக் கல்விக் கொள்கையை ஆதரித்து பேசியதிலிருந்து அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்தது. தமிழக காங்கிரஸ் குஷ்புவைப் புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர்.சி தமிழக பாஜக தலைவர் எல்.முருகனைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது[6].

12-10-2020 காலை நட்டாவுடன் சந்திப்பு: 11-10-2020 அன்று, விமான நிலையத்தில் பார்த்தபோது நடிகை குஷ்புவிடம் நிருபர்கள், நீங்கள் பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வருகிறதே உண்மையா? என்று கேட்டனர். அதற்கு அவர், “கருத்து சொல்ல விரும்பவில்லை” (நோ காமண்ட்ஸ்) என பதில் அளித்தார். மேலும் அவரிடம், நீங்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறீர்களா? என்று கேட்டதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அத்துடன் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல போவதில்லை என கூறிவிட்டு டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவருடைய கணவரும், திரைப்பட இயக்குனருமான சுந்தர்.சி.யும் உடன் சென்றார். அவர் பா.ஜ.க.வில் இன்று இணைய இருக்கிறார் என்றும் டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை 12-10-2020 அன்று சந்திக்கிறார் என்றும் தகவல் வெளியானது. இதன்பின்னர் தனது டுவிட்டரில், பார்வைகள், புரிதல்கள், விருப்பு, வெறுப்புகள், காலத்திற்கேற்ப மாறும் என்றும் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்றும் குஷ்பு பதிவு வெளியிட்டார்.

காங்கிரஸிலிருந்து குஷ்பு நீக்கம், குஷ்புவின் கடிதம் 12-10-2020: இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டு உள்ளார் என காங்கிரஸ் கட்சி 12-10-2020 அன்று அறிவிப்பு வெளியிட்டது.  பதவி பறிக்கப்பட்ட சில நிமிடங்களில் காங்கிரசில் இருந்து குஷ்பு விலகினார். ஆதே நாளில் ராஜினாமா கடிதம் கொடுத்தார். காங்கிரசில் இருந்து விலகுவது பற்றி கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய தேசிய காங்கிரசின் முதன்மை உறுப்பினர் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளராக நாட்டுக்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். “கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கட்சி தோற்கடிக்கப்பட்டபோது, கீழ்மட்டத்தில் காங்கிரஸ் இருந்தபோது கட்சியில் நான் இணைந்தேன். கட்சியில் பெயருக்காகவோ, புகழுக்காகவோ, பணஆதாயத்திற்காகவோ நான் சேரவில்லை.  கட்சியின் உண்மை நிலை மற்றும் சமூக அங்கீகாரம் ஆகியவற்றுடன் எவ்வித தொடர்பும் இல்லாத சிலரால், கட்சியின் உயர்மட்டத்தில் உள்ள சிலரால், காங்கிரசில் உண்மையாக பணியாற்ற விரும்பிய என்னை போன்றவர்கள் தள்ளிவிடப்பட்டனர்.  நசுக்கப்பட்டனர். நீண்டகால முழுமையான பரிசீலனைக்கு பின்பே கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்.  அதன்படி, இந்திய தேசிய காங்கிரசின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். நான் தனிப்பட்ட முறையில், ராகுல் காந்திஜி மற்றும் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.  உங்கள் மீதுள்ள மரியாதை தொடர்ந்து இருக்கும்,” என தெரிவித்து உள்ளார். செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து தான் நீக்கப் பட்டார், என்றிருக்கும் போது, முதன்மை உறுப்பினலிருந்தும் ராஜினாமா செய்தது, முன்னரே தீர்மானித்து முடிவு செய்தது என்று உறுதியாகிறது.

குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தது யாருக்கு பலன் அளிக்கும்?: பிபிசி.தமிழ், “திரைப்பட நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கிறார். குஷ்புவின் இந்த முடிவு அவருக்கோ பாரதிய ஜனதா கட்சிக்கோ பலன் அளிக்குமா?”, என்று கதையை ஆரம்பித்தது[7].பிறகு, குஷ்பு புராணம் பாடி போற்றியுள்ளது[8], “தெளிவு, துணிச்சல், அரசியல் பார்வை ஆகியவை கொண்டவராக உருவெடுத்திருந்த குஷ்பு, 2010வாக்கில் தி.மு.கவில் இணைந்தார். அதற்குப் பிறகு காங்கிரஸ், இப்போது பா.. என பத்தாண்டுகளுக்குள் 3வது கட்சிக்குத் தாவியிருக்கிறார் அவர். 2021ல் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சி அமைப்புகளை வலுப்படுத்தியிருப்பதோடு, புதிய நிர்வாகிகள் நியமனம், பல கட்சிகளிலிருந்தும் தொண்டர்கள், தலைவர்களைச் சேர்ப்பது என பரபரப்பாக இருக்கிறது மாநில தலைமை. ஏற்கனவே தி.மு.கவிலிருந்து வி.பி. துரைசாமி, கு.. செல்வம் ஆகியோர் பா..கவில் இணைந்தது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது காங்கிரசில் இருந்து குஷ்புவும் பாஜகவில் இணைந்திருக்கிறார்”. ஏற்கெனவே நிறைய பேர் இருக்கிறார்களே, அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

© வேதபிரகாஷ்

13-10-2020[1] தினத்தந்தி, காங்கிரசில் உயர்மட்டத்தில் உள்ள சிலரால் நசுக்கப்பட்டேன்; குஷ்பு விலகல் கடிதம், பதிவு: அக்டோபர் 12,  2020 11:15 AM

[2] https://www.dailythanthi.com/News/India/2020/10/12111516/I-was-crushed-by-some-at-the-top-in-Congress-Khushbus.vpf

[3] தினமலர், பா..,வில் சேருகிறார் நடிகை குஷ்பு?, Updated : செப் 27, 2020 01:10 | Added : செப் 27, 2020 01:08.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2621677

[5] ஏசியா.நெட்.நியூஸ்,நடிகை குஷ்பு பாஜகவுக்கு கட்டாயம் வரணும்அன்போடு அழைக்கும் அண்ணாமலை..!, By Asianet Tamil, Chennai, First Published 29, Sep 2020, 8:38 AM.

[6] https://tamil.asianetnews.com/politics/annamalai-invite-actress-kushboo-to-join-bjp-qhegq8

[7] பிபிசி தமிழ், குஷ்புவின் வருகை பா..கவுக்கு உதவுமா? ஆய்வாளர்களின் பார்வை என்ன?, முரளிதரன் காசி விஸ்வநாதன், 12-10-2020. https://www.bbc.com/tamil/india-54514372

[8] https://www.bbc.com/tamil/india-54514372

‘லாபம் கொழிக்கும் காவி உடை’ – கவர்ச்சி-ஆபாச-சினிமா நடிகை குஷ்புவின் காழ்ப்புக் கொண்ட இந்து-விரோத வியாக்யானம் (2)!

செப்ரெம்பர் 19, 2015

லாபம் கொழிக்கும் காவி உடை‘ – கவர்ச்சிஆபாசசினிமா நடிகை குஷ்புவின் காழ்ப்புக் கொண்ட இந்து-விரோத வியாக்யானம் (2)!

குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.5

குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.5

 1. குஷ்புவின் கீசெயினும், ராதே மாவின் சூலமும்: நெயில் கட்டர் போன்ற கூரிய பொருட்களை கையில் எடுத்துச் செல்லும் பைகளில் இருக்கக் கூடாது என்பது தெரிந்த விசயம் தான்[1]. காம்பஸ், டிவைடர் போன்றவையே வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், சூட்கேஸில் போட்டு, கார்கோவில் இருக்கலாம். பலமுறை துபாய், கனடா, என்று ஜாலி டிரிப் அடித்து வரும் குஷ்புவுக்கு இதெல்லாம் தெரியவில்லை என்றால், சரியான ஜோக்குதான் எனலாம். சீக்கியர்கள் கத்தி வைத்துக் கொள்வது, ஆனந்த மார்க் துறவியர் சூலத்தை வைத்துக் கொள்வது முதலியன ஏற்கெனவே தடை செய்யப்பட்டது. ஆனால் 9” x 6” அளவில் கிர்பான் வைத்துக் கொள்ளாலாம் என்று விமானத்துறை பாதுகாப்பு பீரோ 2002ல் சுற்றறிக்கை மூலம் அனுமதித்துள்ளது. இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் 25 பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போலத்தான் ராதே மா விசயமும். இருப்பினும் ஆகஸ்டில் ராதே மா சூலத்துடன் விமான நிலையத்தில் வந்தபோது, அதனை எதிர்த்து போலீஸாருடன் புகார் கொடுத்துள்ளார்[2]. விசயங்களை, உண்மைகளை முழுவதுமாக அறிந்து கொண்டு பேச-எழுத் வேண்டும். ஆனால், திராவிட பாரம்பரியம், பெரியாரிஸம் என்று பேசுபவகள் அவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆகவே அரைகுறை விசயங்களை வைத்துக் கொண்டு, இப்படி உணர்ச்சி வசப்பட்டு கொட்டியிருக்கும் வேலையை செய்திருக்க வேண்டாம்.

  kirpan allowed in planes - B CA S circular

  kirpan allowed in planes – B CA S circular

 1. ராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய் உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினிகளும் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்கள்: “சென்னையிலிருந்து டெல்லி செல்லும்வரை சாமியார்களைப் பற்றிய சிந்தனையே எனக்குள் வட்டமடித்தது என்பதே செயற்கையாக இருக்கிறது”, அதாவது அப்படித்தான் சிந்திப்பேன் என்று தீர்மானமாக இருந்தார் போலும்.. கடந்த 25 ஆண்டுகளாக கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், முல்லாக்கள் என்று கணக்குப் பார்த்தால், ஆயிரக்கணக்கானவர் பலவித செக்ஸ்-குற்றங்கள், பாலியல் வன்புணர்ச்சிகள், கொக்கோக-பாலியல் முதலியவற்றில் ஈடுப்பட்டுள்ளார்கள், தினம்-தினம் அத்தகைய பலான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், குஷ்புவுக்கு ஒன்று கூட தென்படவில்லை என்பது ஆச்சரியமே! ஆனால், ராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய் உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினிகளும் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்களாம். இவர்களைச் சுற்றி மோசடிகள், ஆபாசம், கொலை, கொள்ளை, வரதட்சணை, கற்பழிப்பு என பல்வேறு சமூகவிரோத செயல்களாகவே செய்திகள் வலம்வந்தபடி இருக்கின்றனவாம். இப்படிப்பட்ட சாமியார்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்களை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் மட்டும் குறைந்த பாடில்லை. இன்று தேசத்தில் வலம் வரும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதேனும் ஒரு சந்தேகரேகைப் படரவே செய்கிறது. இதில் எந்த ஒரு சாமியாரும் விதிவிலக்கல்ல, என்றெல்லாம் எழுதினால், மற்றவர்களைப் பற்றி கண்டுகொள்ளாதது ஏனோ?. பாரபட்சம் மிக்க இத்தகைய எழுத்துகள், தீர்மானித்து எழுதியவைப் போன்று தெரிகின்றன.

  restricted-items-in air travel India

  restricted-items-in air travel India

 1. கடவுளை காணுவதற்கு சாமியார் என்கிற மீடியேட்டர் எதற்கு?: கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களைத்தான் கேட்க வேண்டும். அங்கு தான் “பாவ மன்னிப்பு” என்று இடையில், கத்தோலிக்க சாமி வந்து, விவரங்களை அறிந்து கொண்டு, மன்னிப்பு கேட்கும் பெண்களையே மேய்ந்து விடுகிறார்கள். காஜி-முல்லா-மௌல்விக்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். “லா இல இல்லால்ல மொஹம்மது ரசுரல்லா” என்றால், முஸ்லிமாகப் பிறந்து வளர்ந்து, இன்றும் முஸ்லிம் சகோதரர்களுடன் தொடர்பு வைத்துள்ள நகத்துக்கு, அர்ஹனுக்கு, குஷ்புவுக்கு நம்மைவிட நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால், அவற்றைப் பற்றி பேசமாட்டார். ஏனெனில், ரஹ்மானுக்கு போட்டால் போல இந்த நடிகைக்கும் பத்வா போட்டு விடுவார்கள் என்ற பயம் போலும். பெரியாரிஸ்டுகள் எப்படி முஸ்லிம்களுடன், கிறிஸ்தவர்களுடன் தாஜா செய்து, கூடிக்குலவி நாத்திக ஆட்டம் போட்டார்களோ, அதேபோல குஷ்பு இப்பொழுது, செக்யூலரிஸ குத்தாட்டம் போட்டிடுக்கிறார் போலும். “சாமியார்களின் தோற்றம் தருகிற ஒரு வித மாயைதான், மக்களை மதிமயங்க வைத்து விடுகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ளாத வரைக்கும் சாமியார்களுக்குக் கொண்டாட்டம்தான்”, என்று முடித்திருக்கும் குஷ்புவுக்கும் கொண்டாட்டம் தான்!.

  குஷ்பு - தாலி, ருத்ராக்ஷம், இத்யாதி

  குஷ்பு – தாலி, ருத்ராக்ஷம், இத்யாதி

 1. கார்பரேட் சாமியார்களால் தான் மூடநம்பிக்கைகள் தழைத்தோங்குன்றன: அதாவது, ஒரு வேளை கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தங்களது மதங்களையே கம்பெனிகள் தாம், லிமிடெட், பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளாக வைத்துக் கொண்டுள்ளார்கள் என்று சூசகமாக எடுத்துக் காட்டியுள்ளார் போலும். கார்பரேட் மதங்களாகவே இருக்கும் போது, அதிலிருக்கும் எல்லோருமே கார்பரேட் மதத்தலைவர்களாகத்தான் இருப்பார்கள். அதனால் தான் வாடிகன் பேங்கே உள்ளது. ஷரீயத் பேங்குகள் என்று இவர்களும் வைத்துக் கொண்டுள்ளார்கள். அங்கு நடந்த, நடக்கும், ஊழல்களு, மோசடிகள், பிராடு வேலைகள் ஊடகங்களில் உலக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், குஷ்புவுக்குத் தெரியவில்லை. அவர்களது நம்பிக்கைகள் பற்றி எடுத்துக் காட்டவே முடியவில்லை போலும், அதனால், இங்குள்ள மூடநம்பிக்கைகள் என்று குறிப்பிடுகிறார்! இருப்பினும் அவரது கருத்தில் எனக்கு எந்தவித மாறுபாடும் தோன்றவில்லை, என்று தமிழ்.ஒன்.இந்தியா ஆமாம் போட்டிருக்கிறது.

  குஷ்பு - தாலி, கற்பு பற்றிய வியாக்யானம்

  குஷ்பு – தாலி, கற்பு பற்றிய வியாக்யானம்

 1. கார்பரேட் சாமியார்களின் வருட வருமானம்: கிறிஸ்தவ கார்பரேட்டுகளின் மோசடிகௐ கோர்ட்டுகளுக்குச் சென்று நாறுகின்றன. கேரளாவிலோ, சர்ச் எனக்கா-உனக்கா என்று சண்டை போட்டு கோர்ட்டுக்குச் சென்றுள்ளன. மில்லியன் கணக்கில் வரும் பணத்தை ஏய்த்து ஜாலியாக ஜல்ஸா செய்து கொண்டிருக்கிறாற்கள். அவையெல்லாம் பல கட்டுரைகள் மூலம் www.christianityindia.wordpress.com மற்றும் www.islamindia.wordpress.com இணைதளங்களில் பல கட்டுரைகளில் விளக்கமாகக் கொடுத்துள்ளதால், இங்கு அவற்றை திரும்ப விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தாம் அந்நிய செலாவணி சட்டம், அந்நிய நிதி பெறுதல் மற்றும் கட்டுப்பாடு சட்டம் முதலியவற்றை ஏய்த்து வருகிறார்கள். அவர்கள் தங்களது வருமானத்தையே காட்டுவதில்லை, அதாவது, அந்த உரிய சட்டங்களின் கீழ் தாக்கல் செய்ய வேண்டிய வருடாந்திர கணக்கு விவரங்கள், சான்றுகள் முதலிவற்றை தாக்கல் செய்வதே இல்லை. மேலும், நடிகையாக இருக்கும் இவர், சேவை வரி கட்ட மாட்டேன் என்று மற்றவர்களுடன் கொடிபிடித்தது, போராட்டம் நடத்தியது முதலியவை ஞாபகம் இல்லை போலும்.

  குஷ்பு - கனடாவில் குத்தாட்டம்

  குஷ்பு – கனடாவில் குத்தாட்டம்

 1. கார்பரேட் சாமியார்களுக்கு மத்தியில் நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்: குஷ்புவின் காழ்ப்பு, வெறுப்பு, தூஷணம் முதலியவை இங்கு வெளிப்பட்டுள்ளன. கால் நிர்வாணமாக நடிப்பது, அரைகுறை ஆடைகளுடன் ஆடுவது, படுக்கை அறை காட்சிகளில் கொக்கோக உணர்ச்சிகள் தூண்டும் வகையில் நடிப்பது-நடந்து கொள்வது முதலியவை குஷ்பு போன்ற நடிகைகளுக்கு கைவந்த கலையாக இருக்கலாம். இதனால், சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, சஞ்சிகைகளில் புகைப்படங்கள் போட்டு காட்டியிருப்பதும் தெரிந்த விசயமே. ஜினாகட் நங்கா சாதுக்களின் நடனத்தை இங்கு இழுத்திருப்பது, குஷ்புவின் வக்கிரத்தைத் தான் காட்டுகிறது. “பாவநாத் கண்காட்சி” என்பது, வருடா வருடம் அங்கு நடக்கிறது என்பது தெரிந்த விசயமே[3]. முற்றும் துறந்த அந்த சந்நியாசிகளில் ஆண்டு முழுவதும், மலைமேல் வாழ்ந்து, ஒரே முறை, இந்த விழாவில் பங்கு கொள்ள இறங்கி வருகிறார்கள். கத்திகளுடன் அவர்கள் ஆடும் நடனம் சிறப்புப் பெற்றது. அது லட்சக்கணக்கான மக்கள் முன்பாக நடக்கிறது. யாரும் குஷ்புவைப் போல, விரசத்துடன் யோசித்துப் பார்த்ததில்லை. ஆபாச நடிகையாக இருந்ததினால், அந்நடிகைக்கு அத்தகைய மோசமான எண்ணங்கள் வந்து, இவ்வாறு கேவலமாக தனது சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளார் போலும்.

  Kushboo in ectasy of love making

  Kushboo in ectasy of love making

 1. கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது[4]: “என்னைப் பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது. அவர்களுடைய நம்பிக்கை அவர்களுக்கு. என்னுடைய நம்பிக்கை எனக்கு. நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதில் எனக்கு கர்வமும் உண்டு; திமிரும் உண்டு!”, “இவ்வாறு நடிகை குஷ்பு எழுதியுள்ளார் என்று தமிழ்.ஒன்.இந்தியா முடித்துள்ளது[5].
என்னைப் பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை, என்பது தானாக கூறியுள்ளது, அதனால், அடுத்தவருக்கு எப்படி புரியும் என்று விளக்கவில்லை[6].
அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது. இந்த கட்டுரை மூலமே அந்நடிகையின் நிலை வெளிப்பட்டுவிட்டது.
அவர்களுடைய நம்பிக்கை அவர்களுக்கு. என்னுடைய நம்பிக்கை எனக்கு. மொஹம்மது கூறியதை, கூறியுள்ளார் போலும். ஆக, தான் ஒரு முஸ்லிம் என்பதனை நிரூபிக்கிறார் போலும்.
நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதில் எனக்கு கர்வமும் உண்டு; திமிரும் உண்டு! ஆமாம், அதுதான் படித்துப் பார்த்தாலே தெரிகிறதே!

வழக்கம் போல அலுத்துப் போன சித்தாந்தத்தை அவிழ்துப் போட்டுள்ளார். இதை யாரும் கண்டுகொள்ள போவதில்லை. சினிமாவில் வேண்டுமானால் வேகும், இங்கு வேகாது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், கூடிய சீக்கிரத்தில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய் விடும் என்று தீர்மானித்து, இந்நடிகை செயலில் இறங்கியுள்ளது தெரிகிறது.

குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.6

குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.6

தமிழினி வீரலட்சுமியின் குஷ்புஎதிர்ப்பு[7]: நடிகை குஷ்பு தமிழ்க்கலாச்சாரத்துக்கு எதிராகப் பேசியதால் கடும் சர்ச்சைகள் எழுந்தன. குஷ்பு தொடர்ந்து அவ்வாறு பேசிவருவதாக ஒருசில தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில் குஷ்புவின் தொடர் ஒன்றை வெளியிடவிருக்கிறது நக்கீரன் ஏடு. ஏற்கெனவே குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட தமிழர் முன்னேற்றப் படை என்கிற அமைப்பு. நக்கீரன் ஏடு குஷ்பு தொடரை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது.  தொடரை வெளியிட்டால் நக்கீரன் அலுவலம் முன் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் சொல்லியிருக்கின்றனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: “ஒரு கட்சியின் தலைவரின் அரசியல் அறிவை அங்கத்தின் ஆராய்ச்சியில் கண்டுப்பிடிக்க முடியாது, அகத்தின் ஆராய்ச்சியால் தான் கண்டுப்பிடிக்க முடியும். இதை உணர்ந்து நக்கீரன் வார இதழ் செயல்பட வேண்டும். தமிழர் பண்பாட்டை சீர் அழிக்க வந்த கள்ளத்தோனி கவர்ச்சி நடிகை குஷ்பு!!! தமிழரின் பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம், வாழ்வியல் நெறி, இவற்றிக்கு எதிராக பேசியும் செயல்ப்பட்டு வருபவர் கவர்ச்சி நடிகை குஷ்பு இவரை பற்றி நக்கீரன் வார இதழில் தொடர் கட்டுரையை எழுதி வெளியிடுவதின் மூலம் குஷ்புவின் செய்கையை நக்கீரன் வார இதழ் ஊக்கப்படுததுவது போல் உள்ளது. இது தமிழக தமிழர்களையும்,உலக தமிழர்களையும்,மிகவும் வேதனைப்படுத்தும் பெரும் செயலாகும். நக்கீரன் வார இதழ் குஷ்புவின் தொடர் கட்டுரையை வெளியிட்டால் நக்கீரன் பத்திகை அலுவலகம் எதிரில் எனது தலைமையில் தமிழர் முன்னேற்ற படையினர் சாகும் வரை உண்ணாவிரதத்தில் அமருவோம்”, தமிழினி, கி.வீரலட்சுமி, தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழர் முன்னேற்ற படை. உண்ணாவிரதம் இருந்தாரா, சாகும் வரை இருந்தாரா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், மக்கள் தங்கள் பெயர் வரவேண்டும் என்று யாதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள் போலும்!

© வேதபிரகாஷ்

19-09-2015

[1] http://www.airindia.in/baggage-tips-and-restricted-items.htm

[2] A lawyer on Thursday filed a complaint with the airport police station in Mumbai, alleging that the controversial ‘godwoman’ Radhe Maa had carried a trishul (trident) with her at an airport and on a flight during her recent travels. Advocate Rajkumar Rajhans had given an application to the police, seeking action against Radhe Maa for breach of security rules, said DCP (detection) Dhananjay Kulkarni.

But no FIR had been registered yet, he added.

http://www.firstpost.com/india/now-radhe-maa-trouble-carrying-trishul-airport-2392188.html

[3] http://www.indiantravellers.co.in/travel/asia/india/gujarat/somnath/bhavnath-mahadev-fair-worship-lord-shiva

[4] ஒன்.இந்தியா.தமிழ், வஞ்சக சிரிப்புடன் அடிமைகளுக்காக காத்துக் கிடக்கிறார்கள் டுபாக்கூர் சாமியார்கள்நடிகை குஷ்பு பொளேர், Posted by: Mathi, Updated: Friday, September 4, 2015, 16:35 [IST].

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/kushboo-dares-self-style-godmans-235002.html

[6] இதில் யாருக்கும் பிரச்சினை இல்லை. இந்த நாட்டின் தத்துவங்களில் அது ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், போலி நாத்திகம், திராவிட-நாத்திகம் முதலியன, இந்து-விரோத-நாத்திகம் என்ற நிலையில் துவேசத்துடன் வேலை செது வருகிறது.

[7] தமிழ்.வலை, கவர்ச்சி நடிகை குஷ்புவின் தொடரை வெளியிடுவதா? –நக்கீரன் ஏட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்பு, ஏப்ரல்.28, 2015.

‘லாபம் கொழிக்கும் காவி உடை’ – கவர்ச்சி-ஆபாச-சினிமா நடிகை குஷ்புவின் காழ்ப்புக் கொண்ட இந்து-விரோத வியாக்யானம் (1)!

செப்ரெம்பர் 19, 2015

லாபம் கொழிக்கும் காவி உடை‘ – கவர்ச்சிஆபாசசினிமா நடிகை குஷ்புவின் காழ்ப்புக் கொண்ட இந்து-விரோத வியாக்யானம் (1)!

kushboo-dares-self-style-godman and woman

kushboo-dares-self-style-godman and woman

அரசியல் பக்கபலத்தினால், இன்று பிஜேபிவிரோதம், எல்லைகளைக் கடந்து, இந்துவிரோதமாக வெளிப்படுவது: இணைதளங்களில், “தம்மை பெரியாரிஸ்ட் என்று பிரகடனப்படுத்தி வரும் நடிகை குஷ்பு டுபாக்கூர் கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றி உண்மை முகங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார்[1] என்று, நக்கீரன் வாரமிருறை இதழில் நடிகை குஷ்பு ‘லாபம் கொழிக்கும் காவி உடை’ என்ற தலைப்பில் எழுதியுள்ளதை போட்டு சிலர் பரப்ப முயற்சித்துள்ளனர். சபாஷ் போட்ட ஒருவர், காரணத்தைக் குறிப்பிடாமல் ஊதியள்ளார்[2]. குஷ்பு கவர்ச்சி நடிகை, ஆபாச நடிகை என்று தான் பிரபலமாகி, பிறகு பணம் சம்பாதித்தப் பின், முதலீடுகள் செய்யும் போது, அரசியல்வாதிகளின் ஆதரவு வேண்டும் என்பதற்காக, திமுகவில் 2011ல் சேர்ந்தார். ஆனால், அங்கு “திராவிட திருவிளையாடல்கள்” பல வழிகளில், இந்த “ஆரிய அம்மையாரை” சிக்கவைக்க முயன்றதால், தப்பித்தோம்-பிழைத்தோம் என்று ஜூன்.16 2014 அன்று வெளியேறினார். பிறகு நவம்பர்.26 2014ல் காங்கிரஸில் சேர்ந்தார். நகத் கான், அர்ஹன் என்ற பெயர்களில் குழந்தை நடிகையாக உலா வந்து (செப்டம்பர்.29 1970ல் பிறந்தவர்), கவர்ச்சி நடிகையாகி, மும்பையிலிருந்து இறக்குமதியான, முஸ்லீமான இந்த நடிகை, குஷ்புவானார். சர்ச்சைகள் பலவற்றில் (கே. பாலச்சந்தர், பிரபு) சிக்கிக் கொண்ட குஷ்பு, மார்ச்.9.2000 அன்று சுந்தர் என்ற நடிகரைத் திருமணம் செய்து கொண்டார். அரசியல் பக்கபலத்தினால், இன்று பிஜேபி-விரோதம், எல்லைகளைக் கடந்து, இந்து-விரோதமாக வெளிப்பட்டு வருகிறது. அதில் இந்த கூத்தாடி நடிகையும் தனது பங்கைச் சேத்துள்ளார். மற்ற சித்தாந்த, திரிபுவாத, செக்யூலரிஸ கூத்தாடிகள் மகிழ்வோடு பகிர்ந்துள்ளன.

குஷ்பு தொடர் - நக்கீரன்

குஷ்பு தொடர் – நக்கீரன்

பெரியாரிஸம், அரசியல் பக்கபலம், சாமியார்களை வசைப்பாடுதல்: இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் அதிக அளவில், கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், சாமியார்கள் முதலியோர்களின் செக்ஸ்-குற்றங்கள், பாலியல் வன்புணர்ச்சிகள், காமக்களியாட்டங்கள், கொக்கோக புனைவுகள், சிறார்-சிறுமி பாலியல்-பிடோபைல் செக்ஸ் முறைகள், கற்பழிப்புகள், கன்னியாஸ்திரிகளையே கற்பழித்தல், புணர்தல் போன்ற செயல்களில் ஈடுபடல் என்று ஆயிரக்கணக்கான வழக்குகள், கைதுகள், செய்திகள் என்று வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த குஷ்புக்கு, இவை எதுவுமே கண்ணில் படாதது, செய்திகளில் அறியாமல் இருப்பது, ஒருவேளை தெரிந்தும், தெரியாதது மாதிரி இருப்பது முதலியவை ஆச்சரியமாகவோ உள்ளது. முஸ்லிம்களின் செக்ஸைப் பற்றியும் கூற வேண்டிய அவசியம் இல்லை. அவை வெளிப்படையாக ஐசிஸ்-தோரணையில் நடந்து கொண்டிருக்கின்றன. அமீனா போன்ற திருமணங்களில் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன. மாந்திரீகம் போன்றவற்றில் தர்காக்களில், நோய்-தீர்க்கும் இடங்களில் கிருத்துவர்களைப் போலவே செய்து வருகிறார்கள். ஆனால், நகத்துக்கு, அர்ஹனுக்கு, குஷ்புவுக்கு இதெல்லாம் கூட தெரியாமலே தான் இருந்து வருகிறது. ஆனால், இந்து சாமியார்கள் என்றால், தெரிந்து விடுகிறது. இனி குஷ்புவின் ‘லாபம் கொழிக்கும் காவி உடை’ பற்றி பார்ப்போம். குஷ்புவின் கட்டுரை அப்படியே 7 பத்திகளாக, தலைப்பிட்டு கீழேபோடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு நம்முடைய அலசல் முதலியவை கொடுக்கப்பட்டுள்ளன.

குஷ்பு - விகடனை தாக்குதல்

குஷ்பு – விகடனை தாக்குதல்

 1. குஷ்புவின் கீசெயினும், ராதே மாவின் சூலமும்: சில கட்சியின் தலைமை அழைத்ததன் பேரில் அண்மையில் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றபோது வழக்கமாக நடக்கும் சோதனைகளை செய்தனர் ஏர்போர்ட் அதிகாரிகள். அப்போது, என்னுடைய கீ செயினைக் கூட விட்டு வைக்க வில்லை. சின்ன நெயில் கட்டரைக் கூட எடுத்துச்செல்ல அனுமதிக்க வில்லை. “”கீ செயினில் என்ன இருக்கப்போகிறது?” என கேட்ட போது, “”மன்னிக்கவும்… இது, எங்களுடைய டூட்டி மேடம்” என்றனர். அந்தசமயத்தில், மும்பையின் சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதேமா விமானத்தில் செல்லும்போது தனது திரிசூலத் தையும் எடுத்துச் செல்கிறார் என்பது எனக்கு நினைவுக்கு வந்தது. அதைப்பற்றி, ஏர்போர்ட் அதிகாரிகளிடம், “”ஒருபெண் சாமியார் திரிசூலத்தையே விமானத்தில் எடுத்துச் செல் கிறார். ஆனால், எங்களிடம் கீ செயினைக் கூட விட்டு வைப்ப தில்லை. சாமியார்கள் என்றால் அவ்வளவு பக்தியும் பரவசமும் உங்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது” என்று சொல்லிவிட்டுச் சென்றேன்.

  குஷ்பு - நக்கீரனைத் தாக்குதல்

  குஷ்பு – நக்கீரனைத் தாக்குதல்

 1. ராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய் உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினிகளும் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்கள்: சென்னையிலிருந்து டெல்லி செல்லும்வரை சாமியார்களைப் பற்றிய சிந்தனையே எனக்குள் வட்டமடித்தது. ராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய் உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினிகளும் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்கள். இவர்களைச் சுற்றி மோசடிகள், ஆபாசம், கொலை, கொள்ளை, வரதட்சணை, கற்பழிப்பு என பல்வேறு சமூகவிரோத செயல்களாகவே செய்திகள் வலம்வந்தபடி இருக்கின்றன. இப்படிப்பட்ட சாமியார்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்களை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் மட்டும் குறைந்த பாடில்லை. இன்று தேசத்தில் வலம் வரும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதேனும் ஒரு சந்தேகரேகைப் படரவே செய்கிறது. இதில் எந்த ஒரு சாமியாரும் விதிவிலக்கல்ல.

  குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை

  குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை

 1. கடவுளை காணுவதற்கு சாமியார் என்கிற மீடியேட்டர் எதற்கு?: ஆன்மிகவாதிகளிடம் தங்கள் குறைகளைச் சொல்லி அதற்கு நிவாரணம் தேடும் முகமாகத் தான் அவர்களைத் தேடி மக்கள் ஓடுகிறார்கள். மக்களிடம் பக்தி அதிகரிக்கும்போது அந்த சாமியார்களே அவர்களுக்கு கடவுளாகத் தெரிகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அந்த கடவுளைத் தேடி கோயில்களுக்குச் செல்கிறார்கள். போக முடியாதவர்கள் அவரவர் வீடுகளிலேயே பூஜிக்கிறார்கள். அப்போது கடவுளிடம் நேரடியாகவே குறைகளைச் சொல்லும் வாய்ப்பு கிடைப்பதாக அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. அப்படி நேரடியாகவே முறையிட்டும், தனது பக்தர்களின் குறைகளை தீர்க்க முன்வராத கடவுள், இடைத்தரகர்கள் போல தங்களைக் காட்டிக்கொள்ளும் சாமியார்கள் வழியாகவா வந்துவிடப் போகிறார்? கடவுளை காணுவதற்கு சாமியார் என்கிற மீடியேட்டர் எதற்கு? இதை ஏன் மக்கள் புரிந்து கொள்வதில்லை? மக்களிடம் இருக்கும் அறியாமையையும் மூடநம்பிக்கைகளையும் சாமியார்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ளாததால்தான் அத்தனை கிரிமினல் வேலைகளையும் செய்து வருகிறார்கள் சாமியார்கள். ஒவ்வொருவரின் சொந்த புத்தியும் சொல்லாத எந்த ஒரு விசயத்தையும் சாமியார்கள் சொல்லி விடுவதில்லை. சாமியார்களின் தோற்றம் தருகிற ஒரு வித மாயைதான், மக்களை மதிமயங்க வைத்து விடுகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ளாத வரைக்கும் சாமியார்களுக்குக் கொண்டாட்டம்தான்.

  குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.2

  குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.2

 1. கார்பரேட் சாமியார்களால் தான் மூடநம்பிக்கைகள் தழைத்தோங்குன்றன: “சிலமாதங்களுக்கு முன்பு, மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் என்கிற சட்டத்தை அறிமுகப்படுத் தியது கர்நாடக அரசு. ஆனால், இதை எதிர்த்து சாமியார்கள் கூட்டம் கொந்தளித்ததும் அந்தச் சட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளை சாமியார்கள் தொடர்ந்து பாதுகாப்பதன் பின்னணியில் அவர்களிடம் இருக்கும் பணவெறி, காம இச்சை, சுயநலம் போன்றவைகள்தான் காரணங்களாக இருக்கின்றன. “எளிமையும் தூய்மையும் நேர்மையும் இருக்க வேண்டிய மடங்கள் இன்றைக்கு ஆடம்பர பங்களாக்களாக உருமாறி நிற்கிறது. கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு ஆன்மிகத்தைப் போதிக்கும் கார்பரேட் சாமியார்களால் தான் மூடநம்பிக்கைகள் தழைத்தோங்குன்றனஎன்கிறார் என்னுடைய பகுத்தறிவு தோழர்”. அவரது கருத்தில் எனக்கு எந்தவித மாறுபாடும் தோன்றவில்லை, என்று தமிழ்.ஒன்.இந்தியா ஆமாம் போட்டிருக்கிறது.

  குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.3

  குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.3

 1. கார்பரேட் சாமியார்களின் வருட வருமானம்: ஏனெனில், நமது தேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் கார்பரேட் முதலாளிகள் மட்டுமல்ல பல பணக்கார சாமியார்களும் வளமையாக வளர்ந்தே இருக்கின்றனர். அப்படிப்பட்ட சாமியார்களின் வரவு செலவுகள், வர்த்தக விளம்பரங்கள், சொத்துக்களைப் படித்தால் தலைச் சுற்றுகிறது. டெல்லியில் ஆசிரமம் வைத்துக் கொண்டு அத்தனை தகிடுத்தத்தங்களை யும் செய்த அஸ்ராம்பாபுவின் ஆண்டு வருமானம் 350 கோடி, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள் வைத்திருக்கும் அமிர்தானந்தமயின் ஓராண்டு வர்த்தகம் 500 கோடி, வாழும் கலையை காசு வாங்கிக்கொண்டு மக்களுக்கு போதிக்கும் ரவி சங்கரின் வருட வருமானம் 450 கோடி, யோக சிகிச்சைகளை செய்து வரும் பாபாராம்தேவின் வரவு -செலவு 350 கோடி என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. இதில் ஒவ்வொரு சாமியாரின் சொத்துக்களை கணக்கிட்டால் ஒவ்வொருவரும் சுமார் 1000 கோடிக்கு அதிபதிகளாகவே இருக்கிறார்கள் என்றும் அந்த புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டு கின்றன. இதில் கொடுமை என்னன்னா, இவர்களின் வரி ஏய்ப்புக்கு அரசாங்கமே துணை நிற்பதுதான். ஒரு சாமானியன் தனது வருமானவரிக்கணக்கில் 1 ரூபாயை மறைத்து விட்டால் அவனுக்கு எதிராக எத்தனை சட்டங்கள் பாய்கின்றன? அதில் ஒரு சட்டமாவது கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யும் சாமியார்கள் மீது பாய்ந்திருக் கின்றனவா? இல்லையே!

  குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.4

  குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.4

 1. கார்பரேட் சாமியார்களுக்கு மத்தியில் நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்: மதங்களைக் கடந்த ஆன்மிகம் என சொல்லிக் கொண்டு அத்தனை சாமியார்களும் அரசியலை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருப்பதுதான் இதற்குக் காரணம் என சொல்லலாம். நேரடியான தங்களது அரசியல் நடவடிக்கைகள் மூலமாகவே இதனை பல சாமியார்களும் உணர்த்திக் கொண்டு தானிருக்கிறார்கள். அபரிமிதமான நிதிக் குவியல் களால் தங்களின் மடங்களை கார்பரேட் நிறுவனமயப்படுத்தி விடுவதால் இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு எளிதில் கைக்கூடி விடுகிறது. கார்பரேட் சாமியார்களுக்கு மத்தியில் நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமிருப்பதில்லை. குஜராத் மாநிலம் ஜூனாகாத் மலைப் பகுதியை சிவபெருமானின் முகமாக பாவித்து வழிபாடு நடத்துகிறார்கள் நிர்வாண சாமியார்கள். இதே மலைப்பகுதியை ஜைன மதத்தினரும் வழிபடுகின்றனர். இம் மலை அடிவாரங்களில் நிர்வாண சாமியார்களின் மடங்கள் ஏராளமாக இருக்கின்றன. கும்பமேளா காலங்களில் ஹரித்துவார், அலகாபாத் இடங்களில் ஒன்று திரண்டு வழிபாடு நடத்துவது பொதுவான நிலையாக இருந்தாலும் ஒவ்வொரு வருசமும் மகா சிவராத்திரி நாளில் ஜூனாகாத் மலை அடிவாரத்தில் இவர்கள் ஒன்றுதிரண்டு நிர்வாணக் குளியல் நடத்தி வழிபடு வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நிர்வாண சாமியார் களில் எந்த பிரிவினர் முதலில் குளிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் சிவபெருமானின் அருள் நேரடியாக அவர்களை கைவிடுவதில்லை. அதனால் சாமியார்களின் செல் வாக்கும் குறைவதில்லை. ஒரு வேளை சாமியார்களின் செல் வாக்கு குறைந்துபோனால், புதுப் புது சாமியார்கள், அரசியல்வாதி களால் அடையாளப்படுத்தப் பட்டுக் கொண்டேயிருப்பார்கள். ஆன்மிகத்தில் மதிமயங்கும் நம் மக்களும் சாமியார்களின் அருளாசியை பெறுவதற்கு அடிமையாகிக்கொண்டே இருப்பதால் வஞ்சகச் சிரிப்புடனே காத்துக் கிடக்கிறார்கள் நம் தேசத்து நவீன சாமியார்கள்.

  குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.6

  குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.6

 1. கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது: “என்னைப் பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது. அவர்களுடைய நம்பிக்கை அவர்களுக்கு. என்னுடைய நம்பிக்கை எனக்கு. நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதில் எனக்கு கர்வமும் உண்டு; திமிரும் உண்டு!”, இவ்வாறு நடிகை குஷ்பு எழுதியுள்ளார்[3]. இனி இந்த 7 பத்திகளைப் பற்றிய அலசலைக் காண்போம். அந்நடிகைக்கு பதில் சொல்வது என்பதை விட, பொதுவாக கம்யூனிஸ, மார்க்சிஸ்ட், செக்யூலரிஸ மற்ற இந்து விரோத சக்திகள் இதே தோரணையில் பேசி-எழுதி வருவதனால், அத்தகைய அரைவேக்காட்டு, பொய்மால பேச்சுகள், ஏமாற்று-போலித்தன எழுத்துகள்,. பாரபட்ச கருத்துகள், துவேச நிந்தனைகள், முதலியவற்றை எடுத்துக் காட்டவேண்டும் என்ற நிலையில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

19-09-2015

[1] ஒன்.இந்தியா.தமிழ், வஞ்சக சிரிப்புடன் அடிமைகளுக்காக காத்துக் கிடக்கிறார்கள் டுபாக்கூர் சாமியார்கள்நடிகை குஷ்பு பொளேர், Posted by: Mathi, Updated: Friday, September 4, 2015, 16:35 [IST].

[2] http://pandianpandi.blogspot.com/2015/09/Kusbu-article.html

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/kushboo-dares-self-style-godmans-235002.html