Archive for the ‘குன்றக்குடி அடிகளார்’ Category

குன்றக்குடி அடிகள்-ஈவேரா பெரியார்: ஆத்திக-நாத்திக கூட்டா, இந்து-இந்துவிரோத மோதலா, அரசியல் சமரசமா? (3)

ஒக்ரோபர் 6, 2020

குன்றக்குடி அடிகள்-ஈவேரா பெரியார்: ஆத்திக-நாத்திக கூட்டா, இந்து-இந்துவிரோத மோதலா, அரசியல் சமரசமா? (3)

ஈவேரா கருணாநிதிக்கு சிலை வைக்க விரும்பியது, குன்றக்குடி ஒப்புக் கொண்டது (1971), 1975ல் தானே திறந்து வைத்தது: அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. 24-01-1971 அன்று சேலம் மூடநம்பிக்கை ஊர்வலத்தில் ஈவேரா பவனி வந்தார். திகவினர் ராமர், சீதை, சிவன், பார்வதி, முருகன் என்று எல்லா கடவுளர்களின் சித்தரன்களும் ஆபாசமாக வரையப் பட்டு ஊர்வலத்தில் எடுத்துச் சென்றனர். அடிகள் என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார். அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர்.

விநாயகர் சிலை உடைத்தவன் ஆணைக்குக் கட்டுப் பட்டு, இந்துவிரோதிக்கு, உயிருள்ள போதே சிலை வைத்து, திறந்து வைத்த சைவ மடாதிபதி: சிலை உடைத்தவனுக்கு அடிகள் மரியாதை செய்வது, ஆதரவு தெரிவிப்பது முதலியன முரண்பாடுள்ள காரியங்கள் தாம். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார்.  1971ம் ஆண்டு ஈவேரா  கலைஞருக்கான சிலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கினார். சிலை அமைக்கும் குழுவின் புரவலராக அவர் இருந்தார். தலைவராக குன்றக்குடி அடிகளார் இருந்தார். இதுவும் சைவ மடாதிபதிக்கு உகந்தது அல்ல. துணைத் தலைவராக இன்றைய திக தலைவர் வீரமணி. 1975ல் கருணாநிதியின் சிலை மசூதிக்கு முன்பாக, அவர் ஆட்சியில் இருக்கும் போதே, ஜெனரல் பாட்டர்ஸன் – மவுண்ட் ரோடு சந்திப்பில் வைக்கப் பட்டது. அப்பொழுதே “உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பதா, விக்கிரங்களை / சிலைகளை எதிர்ப்பவர், தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதா, இதனால், தீமை ஏற்படும்……….,” போன்ற பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப் பட்டன. ஆத்திகரான, கடவுளை நம்பிய குன்றக்குடி அடிகள், நாத்திகரான-இந்துவிரோதியான, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்! இதிலிருந்தே, அவரது இந்துத் தன்மை கேள்விக்குறியானது.

அடிகளின் காமகோடி மடாதிபதி பற்றிய குழப்பம்: அனைவரும் அர்ச்சகராகலாம் மற்றும் தெய்வீகப் பேரவை விசயங்களில், காஞ்சி காமகோடி என்று குறிப்பிடும் போது, குழப்பத்துடன் இருந்த நிலை வெளிப்படுகிறது. அடிகளாரின் காலம் (1925-1995), ஆகவே இவர் காமகோடி மடாதிபதிகள் பற்றி குழம்பி இருக்கிறார் அல்லது நூல்களைத் தொகுத்தவர் குழம்பி இருக்கிறார் என்று தெரிகிறது. இல்லை பிரச்சினையை திசைத் திருப்ப விரும்புகின்றனர் போலும். 1940-1970 காலங்களில் ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி மிகவும் மதிப்புக்குரிய மடாதிபதியாக இருந்தார். பல அயல்நாட்டு அரசர்கள், அரசிகள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள் என்று வந்து பேட்டி கண்டு சென்றனர்.  “புதியவர்” வந்த பிறகு இடைவெளி அதிகமாகியது, என்று குறிப்பிடும் போது அந்த குழப்பம், முரண்பாடு வெளிப்படுகிறது. ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி (1894-1994) மற்றும் ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி (1935-2018) காமகோடி மடாதிபதிகளாக இருந்தனர். முன்னர் ஶ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி-V, 1907ல் மடாதிபதி ஆனாலும், ஏழு நாட்களில் காலமானதால், ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி பட்டத்திற்கு வருகிறர். 1907லிருந்து 1994 வரை ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி மடாதிபதியாக இருந்தார். 1994ல் தான் ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி மடாதிபதி ஆனார். ஆகவே, “புதியவர்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. இவர்களுக்குள் இருக்கும் குழப்பம் அடிகளின் எழுத்துகளில் தெரிகிறது.  ஆக மொத்தம் பார்ப்பன-எதிர்ப்பு, இவ்வாறு வேலை செய்தது திண்ணம்.

சுவதேசி விஞ்ஞான இயக்கத்தையும் திராவிடத்துவம் பாதித்தது: அடிகளே குறிப்பிட்டுள்ளது, “கை.இ.வாசு என்ற சிறந்த விஞ்ஞானி; காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் அவர் இயக்குநராகப் பணி செய்யும்போது சுதேசி விஞ்ஞான இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தில் நமக்குப் பொறுப்பு ஏற்படுத்தித் தந்தார்,” என்று கே.ஐ.வாசுவைக் குறிப்பிட்டுள்ளார். குன்றக்குடி தொகுப்பு நூலில்[1], “குன்றக்குடிக்கு அருகிலுள்ள காரைக்குடியில் மத்திய அரசின் மின்வேதியியல் ஆய்வுநிறுவனம் ஒன்று உள்ளது. அந்நிறுவனத்தை அடிகளார் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டார். அடிகளாரை அந்நிறுவனம் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டது. அந்நிறுவனத்தின் அறிவியல் உதவியைக் கொண்டு சுதேசி அறிவியல் இயக்கம் (சுதேசி விஞ்ஞான இயக்கம்[2] என்று ஒரு இயக்கத்தையே தோற்றுவித்தார் அடிகளார். அவ்வியக்கத்தைப் பல்கலைக்கழகங்களின் அரங்குவரை கொண்டு சென்றார் அடிகளார்.” சுவதேசி விஞ்ஞானத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றத்தில், ஒரு மாத இதழையும் ஆரம்பித்தார். அப்பொழுது பாரத விஞ்ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. ஆனால், நாட்கள் செல்ல-செல்ல அதன் போக்கும் மாறியது. அதாவது, திக-திமுக உறவுகளினால், அத்தகைய பழங்கால விஞ்ஞான போற்றுதல் போன்றவை நிறுத்தப் பட்டன. இதனால், கே.ஐ.வாசு போன்ற விஞ்ஞானிகள் காரைக்குடியை விட்டு, பெங்களுருக்குச் சென்று, அங்கு, “சுவதேசி விஞ்ஞான அந்தோலன்,” என்று ஆரம்பித்து, இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் பற்றிய மாநாடுகளை நடத்தி வருகின்றனர்[3]. அடிகளார் ஏப்ரல் 15, 1995ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

மூலங்கள், இரண்டாம் தர-மூலங்கள், சரிபார்க்க முடியாத ஆவணகள் முதலியவை அடிகள்-பெரியார் பற்றி உண்மை அறிய முடியவில்லை: சமீப கால தலைவர்களை 60-90 வயதானவர்கள் நன்றாகவே கவனித்துள்ளனர், அவர்களது பேச்சுக்களைக் கேட்டுள்ளனர்,  செய்திகளை வாசித்துள்ளனர், எழுத்துகளைப் படித்துள்ளனர். ஆனால், இப்பொழுது, அவர்களைப் பற்றிய  உண்மைகளை சொல்லாமல், ஏதோ மாயாஜால கதைகள் போன்று, போற்றி பாராட்டி, புதிய வர்ணனைகளை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  10-20 படங்களை சேர்த்து, வீடியோ எடுத்து, புதிய கதைகளை உருவாக்குகின்றனர். இதனால், உண்மைகளை மறைத்து விடலாம் அல்லது அத்தகைய புதிய புனைவுகளினால், புதிய கட்டுக்கதைகளை உருவாக்கலாம், ஆனால், சுலபமாக அவற்றின் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளலாம். இப்பொழுது, எழுதுகின்ற சரித்திரம், கதைகள் எல்லாமே ஒரு தரப்புடையதாக இருக்கிறது. திராவிடத்துவ தலைவர்களைப் பற்றி, அவர்களே எழுதுவது, புத்தகங்களாகப் போட்டு சுற்றில் விட்டுள்ளது என்றுதான் உள்ளனவே தவிர, அவர்களது டைரிகள், எழுத்துகள், ஆவணங்கள் முதலியவற்றை பொது மக்களுக்கு, குறிப்பாக ஆய்ச்சியாளர்களுக்குக்கூட, முழுமையாகக் காட்டப் படுவதில்லை. இரண்டாம் தர-மூலங்களை விட தாழ்ந்த, சர்பார்க்க முடியாத, ஆவணங்கள், ஆவண நகல்கள் முதலியவை காட்டப் படுகின்றன. எழுத்தாளர்-ஆராய்ச்சியாளர்களும் மறுபக்கம் உள்ள ஆவணங்களை பார்ப்பது, சரி பார்ப்பது, விசாரிப்பது கிடையாது. இன்று இருக்கும் திராவிடத்துவ தலைவர்களின் மகன், மகள், மறுமகன், மறுமகள், பேரன், பேத்தி மற்ற உறவினர்கள் கூட உண்மையினைக் கூரத் தயங்குகின்றனர், ஏன் அஞ்சுகின்றனர், அதனால், உண்மையினை மறைக்கவே செய்கின்றனர். அவ்வாறு மற்ற மூலங்களை சரிபார்க்கும் போது, உண்மை தெரிய வருகின்றது.  இதனால் தான், இன்று ஈவேரா-பெரியார் பற்றி ஆராய்ச்சிகள் அவரது நடவடிக்கைகள், சித்தாந்தம் உதலியவற்றைக் கேள்விக் குறிகளாக்குகின்றன.

அடிகளாரால் திராவிட நாத்திகத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை, மாறாக அவர்களுடன் ஒத்துழைத்தார்: ரங்கநாதன், ரங்கநாத பிள்ளை, கந்தசாமி தம்பிரான், “ஶ்ரீலஶ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,” குன்றக்குடி அடிகள், குன்றக்குடி அடிகளார் அவர்களின் எழுத்துகள் 16 புத்தகங்களாகத் தொகுக்கப் பட்டுள்ளன. பெரியாரின் எழுதுகள், பேச்சுகள் முதலியனவும் தொகுக்கப் பட்டுள்ளன. ஆனால், இரண்டையும் குறிப்பிட்ட ஆண்டு நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, முரண்பாடுகள் காணப்படுகின்றன. அதிலும் இந்த அடிகள்-பெரியார் விவரிப்புகளில், ஏதோ இருவரும் ஒன்றாக செயல்பட்டனர் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கினாலும், பொது மக்களுக்கு அறியப்பட்ட நிகழ்வுகள் ராமசாமி நாயக்கர் ஈவேராக இருந்த போதிலும், பெரியாக மாறியபோதும், இந்து-எதிர்ப்பு, இந்த்-காழ்ப்பு, இந்து-துவேசம் முதலியவை மாறவில்லை. அடிகளாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அண்ணாவிடம் எவ்வளவு கெஞ்சினாலும், அப்பர் சிலை வைக்க முடியவில்லை. கருணாநிதி காலத்திலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால், பள்ளிகள் என்று உருவாக்கி, வேறு வழியில் திரும்பினார். இருப்பினும், அவர்களுடைய சகவாசத்தினால், இந்துமதம் தாக்கப் படாமல் இருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அருள் நெறித் திருக்கூட்டம், தெய்வீகப் பேரவை என்றெல்லாம் துவக்கப் பட்டாலும், திராவிட நாத்திகத்தை எதிர்க்காமல், அதனுடன் சேர்ந்து போனதால், மற்றவர்கள் நம்பவில்லை. அதனால், அவை செயலிழந்தன.

© வேதபிரகாஷ்

05-10-2020


[1]  குன்றக்குடி அடிகள், குன்றக்குடி அடிகளார் நூல்வரிசைபொது, தொகுதி.13, பக்கம்.17

[2] அறிவியல் தமிழை வளர்க்கும் விதத்திலும், நவீன விஞ்ஞான ஆய்வுகளை தமிழுக்கு கொண்டு வரும் வகையில், சுதேசி விஞ்ஞான இயக்கம் தமிழகத்தில் செயல்படுகிறது.குன்றக்குடி அடிகளார் இதனை தொடங்கினார். காரைக்குடியில் மைய மின் வேதியியல் ஆய்வகத்தில் இதன் அலுவலகம் உள்ளது. “அறிக அறிவியல்’ என்னும் பத்திரிகையையும் “சுதேசி விஞ்ஞான இயக்கம்’ செயல்படுத்துகிறது.அறிவியல் தொடர்பான கருத்தரங்குகளையும் சுதேசி விஞ்ஞான இயக்கம் நடத்துகிறது.

[3]  கே.வி.ராமகிருஷ்ண ராவ், கே.ஐ.வாசுவிடமிருந்து பெற்ற விவரங்களிலிருந்து, அந்நிலை அறியப்படுகிறது. சித்தாந்தம் எவ்வாறு எல்லாவற்றையும் பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ரங்கநாதன்-ராமசாமி, ரங்கநாதன் பிள்ளை-ராமசாமி நாயக்கர், குன்றக்குடி அடிகள்-ஈவேரா பெரியார்: ஆத்திக-நாத்திக கூட்டா, இந்து-இந்துவிரோத மோதலா, அரசியல் சமரசமா? (1)

ஒக்ரோபர் 6, 2020

ரங்கநாதன்-ராமசாமி, ரங்கநாதன் பிள்ளை-ராமசாமி நாயக்கர், குன்றக்குடி அடிகள்-ஈவேரா பெரியார்: ஆத்திக-நாத்திக கூட்டா, இந்து-இந்துவிரோத மோதலா, அரசியல் சமரசமா? (1)

ரங்கநாதன் கந்தசாமி தம்பிரான் ஆகி, 1952ல் “ஶ்ரீலஶ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” ஆனது: குன்றக்குடி அடிகளின் வாழ்க்கை வரலாறு, ஆன்மீகத்தையும் தாண்டியதாகத் தெரிகிறது. ஒரு பக்கம் அவர் சைவத்தை, இந்துமதத்தை ஆதரித்து செயல்பட்டார் என்றிருந்தாலும், பிறகு, திக-திமுக தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு, ஆன்மீக நலன்களுக்காக பாடுபடவில்லை, எதிர்மறையாக் செயல்பட்டார் என்பது போல் உள்ளது. எனவே, அவரது வாழ்க்கை குறிப்புகளை ஆராய்வோம். தமிழ்நாடு தஞ்சாவூரில் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும்  சிற்றூரில் சீனிவாசம் பிள்ளை, சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு ரங்கநாதன் ஜூலை 11, 1925 அன்று பிறந்தான். இவன் தான் பிறகு குன்றக்குடி அடிகள் என்றறியப்பட்டார். ரங்கநாதனுக்கு முந்திப் பிறந்த சகோதரர் இருவர்; சகோதரி ஒருவர். 1944ல் பள்ளிப் படிப்பு முடிந்ததும், தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலைக்கு சேர்ந்தார். 1945-48 காலகட்டத்தில் “கந்தசாமி தம்பிரான்,” என்று தீக்ஷைப் பெற்று முறைப்படி தருமபுரம் தமிழ்க் கல்லூரியில், தமிழ் கற்றுக் கொண்டார். 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 5-இல் ஆதீன இளவரசராகிய அவர், 1952 ஜூன் 16 ஆம் தேதி முதல் அத்திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 1952ல் “ஶ்ரீலஶ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என்று 45ஆவது குருமகா சந்நிதானமாக, ஆதீனப் பொறுப்பேற்ற காலம், இந்து மதத்திற்கு மிகவும் சோதனையான காலம், என்று தினமணி வர்ணிக்கிறது[1].

இறைமறுப்பு காலத்தில் அடிகள் மடாதிபதி ஆனது: இறைமறுப்புப் பிரசாரங்களால் தாக்குதலுக்கும், கண்டனத்துக்கும் உரியதாக இந்து மதம் ஆயிற்று. தமிழகத்தில் திராவிடர் கழகம் / திமுக மற்றும் அதன் தலைவர் ஈவேரா / பெரியார், அண்ணா, கருணாநிதி முதலியோர்களின் அரசியல், சித்தாந்தம் மற்றும் இந்துவிரோத சித்தாந்தம் எல்லோரும் அறிந்தது எனலாம். இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று ஈவேரா தொடர்ந்து 1953ல் “ஆபாச விநாயகர்” உருவத்தை உடைத்து, உருவ வணக்கக் கடவுள்- பித்தலாட்டம் என்றும் பிரச்சாரம் செய்தார்[2]. இதன் எதிர்கால விபரீதங்களை மனதில் எண்ணிய அடிகளார், காலத்திற்கேற்ப, இந்து மதத்தின் உன்னத சீலங்களைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினார், என்று தினமணி செய்தியில் உள்ளது. இதன்பொருட்டு 1952 ஆகஸ்ட் 11 ஆம் நாள் சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில் ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றை நடத்தினார். அதன்விளைவாகத் தோன்றியதே “அருள்நெறித் திருக்கூட்டம்,”[3] என்றெல்லாம் விவரித்தது. 1954ல் ஈவேராவை சந்தித்ததாக உள்ளது. ஆனால், அச்சந்திப்பிற்குப் பிறகு, போக்கு ஒன்றும் மாறவில்லை. அடிகளின் தொகுப்பு நூல்கள் 16 வெளியிடப் பட்டுள்ளன. அவற்றிலிருந்து விவரங்கள் எடுக்கப் பட்டுள்ளன. பிறகு ஈவேரா-பெரியார் புத்தகங்களுடன் ஒப்பிடப் படுகின்றன. மற்ற துணை புத்தகங்களும் (secondary-secondary sources) உதவிக்கு எடுத்தாளப் படுகின்றன. 01-08-1953 அன்று விநாயகர் சிலையை உடைத்தால், 01-11-1953 அன்று, குன்றக்குடி அடிகளுடன் காரில், மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு பிரயாணம் செய்தாராம்! பிறகு என்ன சைவம், வெங்காயம் எல்லாம்!

1953-1956: ஈவேரா-அடிகள் சந்திப்பு, விநாயகர் சிலை உடைப்பு, அடிகளின் பாராட்டு: 1954 ஜூலை 10 ஆம் நாள் இதன் முதல் மாநாடு தேவகோட்டையில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. இங்கு இவர் பார்ப்பனர் என்பதை விட, இந்தியாவின் கவர்னர்-ஜெனரல் என்ற முறையில் அழைக்கப் பட்டிருக்கலாம்[4]. பின்னர் முழு வீச்சோடு செயல்பட்ட இவ்வியக்கத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமல்லாது, இலங்கையிலும் கிளைத்தன. 1955ல் இந்திஎதிர்ப்பு என்று மறுபடியும் ஆரம்பித்து, ஈவேரா ராமன் படத்தை எரிக்கச் செய்து ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்தினார். அதாவது, அடிகளாரின் சந்திப்பு பிரயோஜனமாகவில்லை என்று தெரிகிறது. “அருள்நெறித் திருக்கூட்டம்” – அதன் செயலாக்கப்பிரிவாக “அருள்நெறித் திருப்பணி மன்றம்” எனும் அமைப்பும் 1955 ஜூன் 10 ஆம் நாள் கிளைத்தது என்பது வியப்பு தான். ஏனெனில், அதே ஈவேராவுக்கு, 12-09-1956 அன்று, இதே அடிகள் தலைமையில் “தன்மான வீரர்” என்று டாலர் பரிசளித்தார்! அதாவது, இருவரும் சேர்ந்து ஏதோ செய்வது உறுதியாகிறது.

“தெய்வீகப் பேரவை”  ஆரம்பிக்கப் பட்டது: அப்போதைய தமிழக அரசின் (காங்கிரஸ்) துணையோடு தமிழ்நாடு “தெய்வீகப் பேரவை” எனும் அமைப்பு, 1966 இல் ஆரம்பிக்கப்பட்டது. தருமை ஆதீன குருமகா சந்நிதானம் தலைமையேற்ற இப்பேரவையில் அவருக்குப்பின், 1969 முதல் 1976 வரை அடிகளார் தலைமையேற்று அரும்பணிகள் பல ஆற்றினார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இவர் திராவிட சித்தாந்திகளுடன் நட்பு வைத்துக் கொண்டார். இதனால், தனது “இந்து சார்பு” பேச்சுகள்-எழுத்துகள் குறைந்தன. ஈவேரா, வீரமணி, அண்ணா, கருணாநிதி என்று எல்லோரிடத்திலும் பழகினார்.  1956ல் அண்ணா குன்றக்குடி மடத்திற்கு வந்தார், வினோபா பாவே வந்தார்; 1959ல் பிரதமர் நேரு மாநாட்டிற்கு வந்தார் என்பது எல்லாம், இவர் தனது அரசியல் தாக்கம் மூலம் தனது பள்ளி முதலியவற்றை ஏற்படுத்தப் பயன்படுத்தி கொண்டார் என்று தெரிகிறது. காங்கிரஸ்காரர் போன்று காட்டிக் கொண்டு, இந்துவிரோத திராவிட நாத்திகத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். தனது தாக்கத்தினால், அவர்களது விக்கிர உடைப்பு, இந்து பழிப்பு, முதலியவற்றை அவரால் தடுக்க முடியவில்லை. மாறாக, அத்தகையோரைப் பாராட்டி வந்துள்ளது முரண்பாட்டை அல்லது உள்ளிருக்கும் உறவை எடுத்துக் காட்டுகிறது.

காங்கிரஸிலிருந்து விலகி, திகதிமுகவிற்கு சென்றது: 1950ஆம் ஆண்டின் மத்தியில் பிள்ளையார் சிலை உடைப்பு மற்றும் ராமர் சிலை உடைப்பு போராட்டங்களை பெரியார் முன்னெடுத்தார். ஆனால், இவர் எதிர்க்கவில்லை. இந்தப் போராட்டத்துக்கு அருள்நெறி திருக் கூட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பெரியாரின் போராட்டத்துக்கு எதிர்வினை ஆற்றினார். துண்டறிக்கைகளை வெளியிட்டார், என்று திராவிடத்துவவாதிகள் விளக்கம் கொடுத்தாலும், இவரது பிறழ்ச்சி வெளிப்பட்டது. மறைமலை அடிகள் போன்று, இவரும், திராவித்துவத் தலைவர்கள் நன்றாகப் பயன்படுத்துக் கொண்டார்கள் என்று தெரிகிறது[5]. 1948-49ஆம் ஆண்டில் மாவட்ட கழகங்களுக்கு நடந்த தேர்தலிலும், 1967ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் காமராசரை ஆதரித்து காங்கிரசுக்கு வாக்குகேட்டு பிரச்சாரம் செய்தவர், பிறகு திராவிட கட்சிகளின் பின் சென்றது திகைப்பாக இருக்கிறது. 1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் முரண்பட்டது வியப்பாக இருந்தது. 1967ஆம் ஆண்டு காரைக்குடி திருக்குறள் விழாவுக்கு வந்த அண்ணாவை மடத்திற்கு சிறப்பு விருந்தினராக வரவேற்று, அவருக்கு மடத்தின் மரபுப்படி வரவேற்பு கொடுத்து பேச வைத்தார். 1965ஆம் ஆண்டில் “மொழிப்போராட்டம்” என்று நடந்தபோது குன்றக்குடியில் அடிகளார் தலைமையில் அமைதிகாக்கும் ஊர்வலம் நடந்தது. “தமிழ் வாழ்க என்பது மட்டுமே இந்த ஊர்வலத்தில் முழக்கமாக இருந்தது,” என்றெல்லாம் விளக்கம் அளித்தாலும், இவரது அரசியலிலலஈடுபடும் போக்குத் தெரிந்தது.  இதனால், குன்றக்குடி அடிகளார் கைது செய்யப்பட்டு 350 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது[6].  ஆக சைவம் என்றும் இல்லாமல், இந்து என்ற நிலையும் இல்லாமல், திராவிட நாத்திகர்களுடன் சமரசம் செய்து கொண்டது தான் வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

05-10-2020


[1] தினமணி, அருள்நெறித் தமிழ் வளர்த்த அடிகளார், Published on : 20th September 2012 04:20 PM.

[2]  சாமி.சிதம்பரனா, தமிழர் தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார கழகம், சென்னை, 1997.

[3] https://www.dinamani.com/editorial-articles/2009/oct/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-88054.html

[4]  பிராமணர் அல்லாத இயக்கம் என்று ஆரம்பித்தாலும், அது பார்ப்பன வெறுப்பு-காழ்ப்பு-விரோத இயக்கமாக மாறி செயல்பட்டது. மற்ற உயர்ஜாதியினர், குறிப்பாக முதலியார், பிள்ளை, நாயக்கர், முதலியோர் அதிகமாகவே அத்தகைய உணர்வு கொண்டிருந்தனர்.

[5]  மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கம் என்ற போர்வையில், சைவத்திற்கு திரிபு விளக்கம் கொடுத்து, சைவர்களைப் பிரித்தார். அதன் தாக்கம் தான் இன்றும் சுகிசிவம் போன்றோரிடம் வெளிப்படுகிறது.

[6] சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் ஒருவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றிப் பேசும்போது, ‘மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ்காரராகிய அடிகளார். இந்தியை எதிர்த்து ஊர்வலம் நடத்தி யுள்ளார்” என்று பேசினார். அப்போது முதல்வர் பக்தவச்சலம், “அடிகளார் எங்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. அடிகளார் காங்கிரஸ் வேறு” என்று பதில் கூறினார்.  குன்றக்குடி அடிகள், பக்கம்.120.

அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வழக்கு நடவடிக்கைகளைத் திரும்பப்பெற ஆணை பிறப்பித்தார். அதுமட்டுமா? அரசு பெற்ற அபராதத் தொகை யையும் திரும்பக் கொடுக்கும்படி ஆணை பிறப்பித்தார்! வழக்கு நடவடிக்கையைத் திரும்பப்பெற்ற அரசாணை கிடைத்தது. பணமும் கிடைத்தது. பக்கம்.121.

பல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!

பிப்ரவரி 15, 2020

பல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!

The palanquin row - DK Veeramani letter, feb.2020

பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்தார், தருமபுர ஆதீனம்: “மனிதர்கள் சுமந்துசெல்லும் பல்லக்கில், தருமபுரம் ஆதீனகர்த்தர் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பல்லக்கில் செல்வதைக் கைவிட்டு, ஆதீனகர்த்தர் கோயிலுக்கு நடந்தே சென்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்று விகடன் தன் கருத்தை வாசகர் மீது திணித்துள்ளது[1]. “நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தின் புதிய ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இவர், ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்திவருகிறார். அப்போது, பக்தர்கள் அவரைபட்டினப்பிரவேசம்எனப்படும் நிகழ்ச்சியாக, பல்லக்கில் அமர வைத்து, தோளில் சுமந்து கோயிலுக்கு அழைத்துச்செல்கின்றனர்,” என்று செய்தியாக போட்ட போது, ஏன், எதற்கு என்று விவரங்களைப் போட்டிருக்க வேண்டும்[2]. ஆனால், போடாமல், “இந்த நிகழ்ச்சிக்கு, சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார். “ஆதீனகர்த்தரை பல்லக்கில் தூக்கிச்சென்றால் போராட்டம் நடத்தப்படும்என அறிவித்திருந்தார்,” என்று போட்டு, முன்னமே தெரிந்தது போல செய்தியைத் தொடர்ந்தது. அதன்படி திக மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பனந்தாள் கடைவீதியில் நேற்று திரண்டிருந்தனர். இவர்களுடன் நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டிருந்தனர்.

DK gave petition directly to Adhinam, dinamani, Feb.2020

12-02-2020 பட்டின பிரவேசம் பற்றி வீரமணிக்கு முன்னரே தெரிந்தது எவ்வாறு? 06-02-2020 அன்று வீரமணியின் கடிதம்[3]: வீரமணிக்கு “பட்டின பிரவேசம்” பற்றி முன்னரே தெரிந்திருந்ததால், 06-02-2020 அன்றே, விடுதலையில் கடிதம் ஒன்று பிரசுரம் ஆகிறது. “தருமபுர மடத்துக்குப் புதிய ஆதினகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர்நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட[4]மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் – ‘மனித உரி மையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. திராவிட சந்நிதானங்கள் மீது நமக்கு மதிப்புண்டு என்ற போதிலும் கூட, பல்லாண்டுகளுக்கு முன்பே இதே தருமபுர ஆதினத்தில் நடைமுறையில் இருந்த மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைத் தடுப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலையீட்டின் பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடைபெற்றுஅதற்குப்பின் அது நிறுத்தப்பட்டது. பிறகு திருவாவடு துறை ஆதினகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்திய போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப் பட்டது, பிறகு நிறுத்தப்பட்டு விட்டது. இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தருமபுர ஆதினகர்த்தர் அதனை புதுப்பிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச்சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு. இந்த நிலையில் தருமபுர ஆதினகர்த்தர் வரும் 12.2.2020 அன்று மேற்கொள்ள விருக்கும் மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நியாயமான இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.                                                       தலைவர், திராவிடர் கழகம், சென்னை, 6.2.2020.” ஆக, 12-02-2020 அன்று “பட்டின பிரவேசம்” இருப்பது இந்துவிரோதிக்ளுக்குத் தெரிந்திருக்கிறது, ஆனால், இந்து அமைப்புகளுக்குத் தெரியவில்லை.

DK Veeramani riding chariot

மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, 09-02-2020 அன்று மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகம் மனு[5]: தினமணி, “மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளா் கி. தளபதிராஜ், தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளை 09-02-2020, ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்,” என்று செய்தி வெளியிட்டுள்ளது[6]. பக்தர்களை காண நேரம் எடுத்துக் கொள்வது, காக்க வைப்பது, மறுப்பது என்று இருக்கும் நிலையில், அவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து, உள்ளே விட்டு, மனு பெற்று, போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார் எனும் போது, இவர் மீது தான் சந்தேகம் எழுகின்றது. வந்தவர்களிடம், ஆதீனம் தனது மரபு, பாரம்பரியம் முதலியவற்றை கூறி இருக்க வேண்டும். பல்லக்கில் போவது என்பது, அதிகாரத்தைக் காட்டுவதற்கு அல்ல, பாரம்பரியமாக நடந்து வரும் சடங்கு. ஏன் மலைக் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை “டோலி” மூலம் தூக்கிச் செல்வது தொழிலாகவே நடந்து வருகிறது.

EVR riding chariot

 பட்டினப்பிரவேசம்பாரம்பரியம் என்றால் ஆதீனம் தடுப்பவர்கள் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்: விகடன் தொடர்கிறது, “இந்நிலையில், நேற்று திருப்பனந்தாளில் உள்ள அருணஜடேஸ்வரர் கோயிலுக்கு ஆதீனகர்த்தர் வருகைதந்தார். கோயிலுக்கு அருகேயுள்ள விநாயகர் சந்நிதியில், காசி மடம் சார்பில் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயிலுக்கு அவரை பட்டினப்பிரவேசம் எனப்படும் பல்லக்கில் வைத்து சுமந்துசெல்ல தயார் நிலையில் இருந்தனர். அப்படியென்றால், ஆதீனம் தம்மை மிரட்டியது மற்றவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அப்போது, திராவிடர் கழகத்தின் போராட்டம் குறித்து ஆதீனகர்த்தருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். “இதில் எனக்கும் உடன்பாடில்லை” என்றுகூறி, பல்லக்கில் செல்வதைத் தவிர்த்துவிட்டு, கோயிலுக்கு நடந்தே சென்றார். அப்படி என்றால், ஆதீனம் மீதே சந்தேகம் எழுகின்றது. ஏனெனில், முதலில் அவர் தனது மற்றும் மடம் இவற்றி உரிமைகள் என்ன என்பதனை சட்டப் படி தெரிந்திருக்கவில்லை மற்றும் திராவிட அரசியலுக்கு ஒத்துப் போகிறார் என்று தெரிகிறது. இதனால் தான், ஆதீன நிலங்களை இதே நாத்திக மற்றும் இந்துவிரோத ஏன் இந்துக்கள் அல்லாதவர்களும் அபகரித்துக் கொண்டு, வாடகை-குத்தகை பாக்கி வைத்து, சொந்தம் கொண்டாடி, நீதிமன்றகளிலும் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

Karu riding chariot

ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லைஎன்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர்: இதற்கிடையே, திராவிடர் கழகத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கறுப்புக்கொடியுடன் கூடியிருந்தனர். அவர்களிடம் “ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர். அதாவது போலீஸார் சட்டப் படி நடவடிக்கை எடுக்காமல், தடுப்பவர்களுக்கு துணையாக இருந்தார்கள் என்றாகிறது, அதனால் போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்து ‘பெரியார் வாழ்க’ ‘அம்பேத்கர் வாழ்க’ ‘தருமபுர ஆதீனகர்த்தருக்கு நன்றி’ என்ற முழக்கங்கள் எழுப்பிவிட்டு கலைந்துசென்றனர். திராவிடர் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று பல்லக்கில் செல்வதைத் தவிர்த்த தருமபுர ஆதீனகர்த்தருக்கு பாராட்டையும் நன்றியையும் தி.க-வினர் தெரிவித்துள்ளனர். அதாவது, எந்த பொறுப்பையும் ஏற்க முடியாத ஆதினத்திற்கு, ஒரு நாத்திகனிடமிருந்து, இந்துவிரோத கும்பலிடமிருந்து சான்றிதழ் வேண்டும் என்று எதிர்பார்த்து மகிழ்வது, திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

15-02-2020.

DK Veeramani riding chariot, umbrella-blessing

[1] விகடன், மனிதனை மனிதன் சுமப்பதா?!’ –பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்த தருமபுர ஆதீனம், மு.இராகவன், பா.பிரசன்ன வெங்கடேஷ், Published:Yesterday at 6 PMUpdated:Yesterday at 6 PM

[2] https://www.vikatan.com/spiritual/gods/dharmapuram-adheenam-avoided-pallak-event-after-dk-opposition

[3] விடுதலை, தருமபுரம் ஆதினகர்த்தர் மேற்கொள்ளும் பட்டினப்பிரவேசம் நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல் மறியல், வியாழன், 06 பிப்ரவரி 2020 14:38

 https://www.viduthalai.in/headline/195202-2020-02-06-09-13-41.html

[4]  இது அப்பட்டமான பொய்யாகும். இவர்கள் செய்யும் கலாட்டாவினால் தான் பயந்து பக்தர்கள் செய்வதும், தடுப்பதுமான நிலை ஏற்பட்டுள்ளது. ஶ்ரீரங்கத்திலு,இப்பிரச்சினை உள்ளது. The Board of Trustees of Arulmighu Sree Ranganathar temple, at Srirrangam, Trichy, had passed a resolution No.107, on 27.09.2010, giving up the practice of carrying person in a Palanquin, in the temple premises. The said resolution has not been challenged, till date. Further, it is also noted that the Tamil Nadu Association of Temple Employees had also passed a resolution, on 23.10.2010, stating that they would not take part in the practice of carrying persons in Palanquins in the temple premises. ஶ்ரீரங்கம் கோவில் டிரஸ்டிகள் மற்றும் கோவில் ஊழியர் சங்கம் தீர்மானங்களை வைத்து நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ததே தவிர உண்மையில், அந்த பாரம்பரிய முறை மற்றும் உரிமை பற்றி அலசவில்லை. Madras High Court – Vedavyasa R.Lakshmi Narasimha vs The Commissioner on 19 October, 2010; BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT – DATED: 19/10/2010 – https://indiankanoon.org/doc/1594161/ பிறகு, மறுபரிசீலினை மனுவும் நிராகரிக்கப் பட்டுள்ளது – https://indiankanoon.org/doc/14854463/ – இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்டதா என்றும் தெரியவில்லை. 2015ல் நடந்துள்ளது.

[5] தினமணி, பட்டடினப் பிரவேசத்தை கைவிட தருமபுரம் ஆதீனத்திடம் திராவிடா் கழகம் வேண்டுகோள், By DIN | Published on : 10th February 2020 01:53 AM |

[6] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/feb/10/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-3353733.html