இந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்! [3]
இந்து திருமணங்களை விமர்சிக்கும் ஸ்டாலின்[1]: சாருநிவேதிதா, தொடர்கிறார்[2], “அடுத்து, இந்து திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத மந்திரங்கள் அசிங்கம் என்கிறார் ஸ்டாலின். எப்போது ஸ்டாலின், சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார் என, தெரியவில்லை. அசிங்கம் என்று யார் அவருக்குச் சொன்னது? வேதங்களில் சொல்லப்பட்டுள்ள, அதியற்புதமான தத்துவ உண்மைகளும், கவித்துவ வீச்சுக்களும் அவருக்குத் தெரியுமா? தெரியாமலேயே, ஸ்டாலின் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறுவதற்காக, வெறுப்பு அரசியலில் இறங்குகிறார். ஏன், தேவாலயங்களில் கேட்கும் லத்தீன் பிரார்த்தனைகளும், மசூதிகளில் கேட்கும் அரபி பிரார்த்தனைகளும் மட்டும் ஸ்டாலினுக்கு இனிக்கிறதா? தேர்தல் வரும் நேரத்தில் ஸ்டாலின், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்காக எப்படியெல்லாம் வேலை செய்கிறார் பாருங்கள்!”
ஜெயலலியாவின் இறப்பை அரசியலாக்கியது[3]: சாருநிவேதிதா, தொடர்கிறார்[4], “உண்மையில் பார்த்தால், ஜெயலலிதாவின் மர்மமான மரணத்தின் போது, கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோருமே, அ.தி.மு.க.,வை வெறுத்தனர். ஏனென்றால், இப்போதெல்லாம் ஒரு பெட்டிக்கடைக்கு போய் வெற்றிலை பாக்கு வாங்கினாலே, அது, ‘சிசிடிவி‘யில் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு மனிதர்களின் அந்தரங்கமே காணாமல் போய், எல்லாமே காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின், ஜெ.,வின் உடல் மட்டும், மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தது. காலை வெட்டி விட்டனர்; ‘எம்பார்மிங்‘ பண்ணின உடம்பு என்றனர். எல்லாமே யூகங்கள்; மர்மங்கள். இவை அனைத்தும், மாயாஜால கதைகளில், ராஜா ராணி கதைகளில் வருவது போலத்தான் நடந்தது. மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே போயினர். ஜெ.,வின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தையும், ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தி.மு.க.,வை போல, அ.தி.மு.க., அல்ல. தி.மு.க.,வுக்கு ஒரு வலுவான அடித்தளம் இருக்கிறது. தலைமையில் யார் இருந்தாலும் சரி, தி.மு.க., காரன், தி.மு.க., காரன் தான். குடும்பமே, தி.மு.க.,வில் இருக்கும். அப்பன், மகன், பேரன் என்று, தலைமுறை தலைமுறையாக, தி.மு.க.,வில் இருப்பர். ஆனால், அ.தி.மு.க.,வுக்கு அப்படிப்பட்ட அடித்தளம் உண்டா என்பது சந்தேகமே.”
அதிமுகவின் அணுகுமுறை, ஸ்டாலினின் எதிர்மறை போக்கு[5]: “எம்.ஜி.ஆர்., ரசிகர்களே, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். ‘அங்கே, எம்.ஜி.ஆர்.,தான் எல்லாம்; அவருக்கு பின், அ.தி.மு.க.,வே இருக்காது‘ என, தி.மு.க.,வினர் நினைத்தனர். நான் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், எம்.ஜி.ஆருக்கு பின், ஜெ., வந்தார். ஒரே தலைவர்; அவர் வைத்ததுதான் சட்டம்; அவரே கட்சி; அவரே எல்லாம். ஜெ.,க்குபின், அ.தி.மு.க., இருக்காது என, தி.மு.க.,வினர் நினைத்தனர். நானும், அப்படித்தான் நினைத்தேன். ஆனால். ஜெ., இருக்கும் போது, யாருக்குமே தெரியாத, இ.பி.எஸ்., இன்று முதல்வராக நிலைத்து விட்டார். மக்களும் அவரை ஏற்றுக் கொண்டனர். இதற்கு, மூன்று காரணங்கள். மக்களின் மறதி; ஸ்டாலினின் வாய்; மூன்றாவது, ‘எனக்கு எல்லாம் தெரியும்‘ என்ற மனோபாவம் இல்லாமல், இ.பி.எஸ்., அதிகாரிகளை வைத்து, காரியம் சாதிக்கிறார். மக்களுக்குத் தொந்தரவு இல்லை. இருந்தாலும், என்னால் முந்தைய தேர்தல்களை போல, இந்த முறை முடிவுகள் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. காரணம், மக்கள் ஒரு விரக்தியான நிலையில் இருக்கின்றனர். யாருக்கு ஓட்டுப் போட்டாலும், மக்களின் அடிப்படை வசதிகள் எதுவுமே தீர்க்கப்படாமல் தான் இருக்கின்றன.” -சாருநிவேதிதா, எழுத்தாளர்[6].
2019ல் இந்துத்துவாதிகளுக்கு ஏன் திடீரென்று ரோஷம், கோபம் வந்துள்ளது?: ஆக இவையெல்லாமே தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கொதிக்கும், குதிக்கும், பொங்கும் போக்கு தான் தெரிகிறதே தவிர, என்னடா, ஶ்ரீகிருஷ்ணரை இவ்வாறு தூஷிக்கிறார்களே என்று பொங்கிய்யதாகத் தெரியவில்லை. பகவத் கீதை மீது கை வைத்து, நீதிமன்றங்களில் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். அந்நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். ஆனால், வருடா வருடம், அக்கயவர்கள் தூஷித்துக் கொண்டிருக்கும் போது, இவ்வருடம் தான், இவர்களுக்கு, சூடு, சொரணை, ரோஷம், மானம் எல்லாம் வந்தது போல இருக்கிறது. பணம், பதவி, புகழ், விளம்பரம் போன்ற ஆதாயங்களுக்காக, அக்கயவர்களுடனே கூட்டு வைத்துக் கொண்டனர், தேர்தல் போது, பிரச்சாரமும் செய்தனர். டி.ஆர்.பாலுவுக்கு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்தது. ஆனால், ஶ்ரீகிருஷ்ண தூஷணத்தை எதிர்க்க வேண்டும் என்று இவர்களில் எவருக்கும் தோன்றவில்லை போலும். பதவியைப் பெற்ற இந்துத்துவ வக்கீலுக்கும் தோன்றவில்லை போலும். ஒரு வேளை வழக்குகள் கிடைக்காது, காசு கிடைக்காது என்று ஒதுங்கி விட்டனர் போலும்.
இந்துமதம் எல்லா இந்துக்களுக்கும் தான்: “டெக்கான் குரோனிகல்” என்ற ஆங்கில நாளேடு, “வீரமணி பேசியதை எதிர்த்து பிராமணர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்,” என்று ஒரு புகைப்படம்ம் போட்டு, செய்தி வெளியிட்டுள்ளது! சரி,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் நடத்தவில்லையா? இந்துக்கள் என்று ஏன் போடவில்லை? இங்குதான், ஊடகங்களின் குசும்புத்தனம் வெளிப்படுகிறது. ஏதோ, இந்துமதம் தாக்கப் பட்டால், பிராமணர்களுக்குத் தான் கோபம்-ரோஷம் வரும் மற்றவர்களுக்கு வராது என்பது போன்ற திரிபுவாதம், சித்தரிப்பு மற்றும் அவ்வாறான திணிப்பு. இந்துமதம், பிராமணிஸம் என்றால், பிறகு, க்ஷத்திரியரிஸம், வைசியரிஸம், சூத்திராயிஸம் என்றெல்லாம் வர வேண்டும். ஆகவே, முதலில் இந்துக்கள், இத்தகைய விசமத்தனங்களை எதிர்க்கவேண்டும். பார்ப்பன எதிர்ப்புப் போர்வையில், இந்துவிரோத சித்தாந்திகள் ஒளிந்து கொண்டு வேலை செய்வதை கவனிக்கலாம். இந்துக்களிடையே ஒற்றுமை இல்லாத வரையில், அவர்கள் இணைந்து தான் வேலை செய்வார்கள்.
ஶ்ரீகிருஷ்ண தூஷணத்திற்கு பதில் [2017-2019]: 2017லிருந்தே திக-வீரமணி, ஸ்டாலின் இதே பல்லவியைப் பாடி வருகின்றனர். விவரங்களை கீழ்கண்ட எனது பதிவுகளில் விளக்கமாக படிக்கலாம்.
- “கிருஷ்ணர் பொம்பளப் பொறுக்கி” என்ற அளவுக்கு, சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள தோரணை – ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி தருணத்தில் தொடரும்தூஷணங்கள் [1]
- ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? [2]
- ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? [3]
- ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன்? பக்தி மார்க்கம்அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]
- திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [1]
https://antihidnu.wordpress.com/2018/09/26/dmk-not-anti-hindu-clarifying-stalin-though-atheist/
- திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [2]
- திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாநிதியும், சம்பந்திகளும் [3]
- https://antihidnu.wordpress.com/2018/09/27/anti-hindu-dravidian-gangs-cannot-compromise-with-hindus-but-continue-blasphemy/
இந்துவிரோதிகளும், போலி இந்துத்துவ வாதிகளும் கூட்டு சேர்வது எப்படி?: அவர்கள் மாறவில்லை, மாறமாட்டார்கள், ஆனால், இந்துக்கள் மாறுவதால் தான் பிரச்சினை. அக்காலத்திலிருந்து, இக்காலம் வரை இந்துக்களில் தான் துரோகிகள் இருக்கிறார்கள். இந்தியர்களாக இருந்து கொண்டு, இந்தியாவை விமர்சிப்பது, குறை கூறுவது, ஏன், எதிராகப் பேசுவதை இந்தியர்கள் தான் அதிகமாக செய்து வருகிறார்கள். இந்துக்களும் பணம், பதவி, விளம்பரம், குறுகிய கால லாபம் முதலியவற்றைகருத்திற் வைத்துக் கொண்டு துரோகிகளாக செயல்படுகின்றனர். அவர்களது, எழுத்துகள்-பேச்சுகள் தான் இந்துவிரோதிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர், இலக்கியம், புத்தக வெளியீடு போன்ற முகமூடிகளில் ஒன்று சேர்கின்றனர், கொள்ளை அடிக்கின்றனர். விளம்பரத்திற்கு புகார் கொடுக்கும் இயக்கங்கள் பிறகு அமைதியாகி விடும். வைரமுத்து, கமல் போன்றோர் மீது கொடுத்த புகார்கள் என்னவாகின? வழக்கை சந்தித்தார்களா, இல்லை இந்துத்துவவாதிகள், தொடர்ந்து நடத்தினார்களா?
© வேதபிரகாஷ்
02-04-2019
[1] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38
[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922
[3] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38
[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922
[5] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38.
[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922