Archive for the ‘கருணாநிதி’ Category
ஏப்ரல் 16, 2019
அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்! [4]

‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்‘ என்று கனிமொழி[1]: தினமலர் தொடர்ந்து சொல்வது, “துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவரது தங்கை கனிமொழி, ‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்’ என, பேசுகிறார். தி.மு.க.,வுக்கு எதிராக, இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அகோபில மடம் சார்பில் நடத்தப்படும், ‘நரசிம்மப்ரியா’ என்ற ஆன்மிக பத்திரிகையின் ஆசிரியர் அனந்த பத்மனாபாச்சாரியாருடன் பேசினோம். “இந்து மத சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துவது, ‘இந்து என்றால் திருடன்’ என, விளக்கம் கூறுவது, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசுவது, கிருஷ்ணரை அவதூறாக பேசுவது, நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டவர்களை கேலி பேசுவது, கோவிலில் திருநீறு பூசினால் அதை அழிப்பது என, ஸ்டாலினும் அவரது அடிப்பொடிகளும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல் படுகின்றனர்.”பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா? இந்துக்கள் இப்போது பொங்கி எழுகின்றனர். இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விட, யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதை இந்துக்களிடம் எடுத்துச் சொல்ல, தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தி.மு.க.,வை எதிர்ப்பதால், வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், எந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.”என்ன பேசினாலும், அந்த பொருளில் பேசவில்லை என்று கடைசி நேரத்தில், ஒரு விளக்கம் கொடுத்து விட்டால், இந்துக்கள் அதை நம்பி நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இருந்தது. அதை, அவர் பல தேர்தல்களில் பயன்படுத்தி விட்டார். ஸ்டாலினால் அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை. ஒரு கண்டன அறிக்கையைக்கூட, மக்கள் நம்பும் வகையில் எழுதிக் கொடுக்க அவரிடம் ஆட்கள் இல்லை.”இனியும், இளிச்ச வாயர்களாக இருந்து ஏமாற, இந்துக்கள் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வரும் போது, எங்கள் முயற்சியின் சக்தி உலகத்துக்கு தெரியும்,” என்றார் ஆச்சாரியார்.

இந்துக்கள் அனைவரும், திமுகவிற்கு எதிராக ஓட்டுப் போடுவார்களா?[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்? இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு.க.வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது? தி.மு.க., அமோக வெற்றி பெற்று, 184 தொகுதிகளை பிடித்து ஆட்சிக்கு வந்தது. இப்போதும் அப்படிதான் நடக்கும்,” என்கிறார் பாரதி. இந்துக்கள், ஒரே மாதிரி ஓட்டு போடுவார்களா என்பது மே, 23ம் தேதி தெரியும்”. – வி

திராவிட தீவிரவாதம் வளர்த்து வரும் வெறுப்புப் பேச்சு: வெறுப்புப் பேச்சு (Hate Speech[4]) என்பது ஒரு இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, பரம்பரை, உடல் குறைகள், பேசும் மொழி, அரசியல் ஈடுபாடு, சமுதாயப் பின்னணி, குறிப்பிட்ட குழுவினரின் வெளித்தோற்றம் (உயரம், அகலம், எடை, தோலின் நிறம் ஆகிய குறிப்பிட்ட அடையாளம்) கொண்டோரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அந்த அடையாளங்களைப் பழித்துப் பேசி மற்றவர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுவதும் பரப்புரை செய்வதும் வெறுப்புப் பேச்சு ஆகும். இதை சினிமா, வசனங்கள், ஜோக்குகள் என்ற போர்வையில் செய்யப் பட்டு வருகின்றன. சொற்களால் குறிப்பிட்ட நபர் அல்லது சாராரின் மனம் புண்படுவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் இவ் வெறுப்பை வெளிப்படுத்தும் காரியங்களை திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இவ்வகையான நடவடிக்கைகளை பல நாடுகளிலும் அரசுகள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன, ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆள்வதாலும், 1970லிருந்து திராவிடத்துவ ஆதரவு அதிகாரிகள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் இருப்பதனால், முறையாக சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை. “காலை கைது, மாலை விடுதலை” என்ற கொள்கையில் நிறைவேறி வருகிறது.. அதே குற்றத்தை ஆயிரக் கணக்காணோர் 50 ஆண்டுகளாக திரும்பி-திரும்பி செய்து வருகின்றனர். சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும் இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக இருக்கின்றது எனவும் சில சாரார் வாதிடுகின்றனர்.

கருத்துச் சுதந்திரமும், அரசிலல் போலித் தனமும்: இப்படியும் குற்றங்கள் வளர்ந்து வருகின்றன, வளர்க்கப் பட்டு வருகின்றன. அதே நேரத்தில் “கருத்துச் சுதந்திரம்” என்பதற்கு, விள்க்கம் இல்லை, இப்பொழுது, திராவிடத்துவ கருத்துச் சுதந்திரம், இந்துக்களைத் தாக்கியுள்ளது, பிறகு ஏன் மற்ற நம்பிக்கையாளர்களை அவர்களது கருத்துச் சுதந்திரம் மண்டியிடுகிறது என்று தெரியவில்லை. ஆகவே, இது போலித் தனமானது என்று தெரிகிறது. இந்துக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது, அவர்கள் பதிலுக்கு எதையும் சொல்ல 1950களிலிருந்து, அனுமதிக்கப் படவில்லையே? இதுவரை “பார்ப்பன எதிர்ப்பு” போர்வையில் இருந்ததால், அமைதியாக இருந்தனர் போலும். இப்பொழுது, அதிகாரம் தேவை எனும் போது, இந்து உணர்வு மற்றவர்களுக்கும் வந்து விட்டதால், அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர். இதனை 14-04-2019 அன்று நியூஸ்-எக்ஸில் அதிமுக [கிஷோர்] மற்றும் திமுக [இளங்கோவன்] பேச்சாளர்களிடமிருந்து நன்றாகவே வெளிப்பட்டது.

திராவிட தீவிரவாதம், மோடி துவேசமாகி, கொலையில் முடிந்துள்ளது: வெறுப்புப் பேச்சு [Hate speech] என்று இன்று பரவலாக பேசப்பட்டு, கண்டிக்கப் படுகிறது, ஆனால், திராவிடத்துவ அரசியல் மேடை பேச்சுகளே அதில் தான் வளர்ந்தது, திறமையை வளர்த்தது, அத்தகையெ துவேச கக்கல்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் கொடுக்கப் பட்டன. இன்றும் ஸ்டாலின் அதில் சளைத்தவராக இல்லை. மோடி எதிர்ப்பு துவேசம் எதற்கு? முதலில் திமுக என்.டி.ஏவோடு கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தது. மோடி கருணாநிதி வீட்டிற்கு எல்லாம் சென்று குசலம் விசாரித்தார். ஸ்டாலினும், கனிமொழியும் பூரித்து விட்டனர். ஆனால், திடீரென்று திமுக மோடிவிரோதியாகியது. சகிப்புத் தன்மை [Tolerance] எப்படி சகிப்புத் தன்மையற்றதாகி [Intolerance] துவேசத்தில் முடிந்தது என்பது அரசியல் ரகசியம் என்று சொல்ல வேண்டும். காங்கிரஸ் கூட்டு உண்டாகியவுடன், ஸ்டாலின், மோடியை திருடன், களவாணி என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். மோடி தமிழக விரோதி போல சித்தரித்து, அதில் வெற்றியும் கண்டனர். ஈவேராவின் “பார்ப்பானைக் கொல்” போன்ற திராவிட தீவிரவாதம், கொலைவெறி முதலியன எப்படி இன்று வரை, பூணூல் / தாலி அறுப்புகளில் நடந்து வருகின்றனவோ, அதுபோல, ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்ட மோடி துவேசம், கருப்பு பலூன்கள் விட்டு, இன்று கொலையில் முடிந்துள்ளது.

தாலி கட்ட ஸ்டாலின் ஐயர், தாலி அறுக்க வீரசமணி ஐயர்: நாங்களும் “ஐயர்” தான் இந்த திருமணத்தை செய்து விட்டு, இன்னும் இரண்டு திருமணங்க்களுக்கு செல்ல வேண்டியுள்ளது, என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு ஸ்டாலின் வந்தாகி விட்டது[5]. நாளைக்கு தாலி அறுக்க, அந்த வீரமணி ஐயர் வரலா.ஆனால், இத்திருமணங்கள் எல்லாம், இத்தகைய இந்து விரோதிகள், இந்துமத துவேசிகள் முதலியோர் நடத்தி வைப்பதால், திருமணங்கள் மங்கலமாக இருக்குமா, இல்வாழ்க்கை சிறக்குமா, நாளைக்கு தாலி அறுப்பில் முடியுமா போன்ற பிரச்சினைகளை ந்ன்றாக கவனித்து தீர்மானம் செய்ய வேண்டும். ஈவேரா நடத்தி வைத்த திருமணங்கள் அசிங்கப்பட்டதை ஸ்டாலினே, இந்த வீடியோவில் ஒப்புக் கொண்டு சொல்லியாகி விட்டது. ஆகவே, சட்டப்படி, மரியாதை, நோக்கியதை பெற்ற பிறகு, இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் செய்து வைக்கும் திருமணங்கள் எங்கு போய் முடியும் என்று யோசிக்க வேண்டும். சட்டப்புறம்பாக இருப்படை, சட்டத்தில் கொண்டு வந்து, மரியாதை கொள்ளலாம். ஆனால், இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் உண்டாகும் அநாச்சாரங்களை, குழப்பங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அனுபவிக்க வேண்டியது தான்.
வேதபிரகாஷ்
14-04-2019

[1] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[2] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[4] speech that attacks, threatens, or insults a person or group on the basis of national origin, ethnicity, color, religion, gender, gender identity, sexual orientation, or disability
[5] https://www.youtube.com/watch?v=Declz2hIXIA
குறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கனிமொழி, கருணாநிதி, குருட்டு கருணாநிதி, சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், பச்சை. வைரஸ், பொறுமை, மோடி, மோடி எதிர்ப்பு, வன்முறை, வீரமணி, வெறுப்புப் பேச்சு, வெறுப்புப்பேச்சு, ஸ்டாலின்
இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, கருணாநிதி, கருத்து, கழகம், கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, சுடாலின், திக, திராவிட தீவிரவாதம், துர்கா, துவேசப் பேச்சு, தூத்துக்குடி, நச்சு பாம்பு, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, பகுத்தறவி, பகுத்தறிவு, பயங்கரவாதம், பலி, பிஜேபி, பெதும்பை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பேதை, பொய், பொறுமை, மதம், மாயாவதி, மோடி, மோடி துவேசம், யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், வன்முறை, வாக்காளர், விருது, வெறி, வெறுப்பு, வெறுப்புப் பேச்சு, ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 16, 2019
அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்! [3]

விவாக மந்திரங்களுக்கு வக்கிரமான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டது: இதற்கு வக்காலத்து வாங்குவது, இந்த மந்திரத்தின் திரிபு விளக்கம்:
“சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ”
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. “நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்”, இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம், என்று இந்துவிரோதிகள் கூறுகின்றனர்[1]. “சமஸ்கிருத அறிஞர் ராமானுஜதாதாச்சாரியார்” தனது ‘இந்துமதம் எங்கே போகிறது?’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக இதை பரப்பி வருகின்றனர். ஒருவேளை, அவர் கொடுத்த முழுவிவரத்தை “எடிட்” செய்து போட்டிருக்கலாம். உண்மையில், இப்பிரச்சினை 150 ஆண்டுகளாக அலசப்பட்டு, அதற்கு விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு ரிக் வேதம் – Rig Veda 10.85.40 – பிரச்சினை இல்லை, அதன் பொருளை படித்தறிந்து விளக்கம் கொடுப்பதில் தான் விசமத்தனம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு படித்தால் கூட அத்தகைய வக்கிரத் தன்மையான திரிபு விளக்கம் இல்லை[2].

ரிக் வேதம் – 10.85.40 சுலோகத்தின் பொருள் என்ன?: உண்மையில் அந்த உருவகப்படுத்தப் பட்டுள்ள கடவுளர்கள், பெண்ணிற்கு அந்தந்த காலத்தில் தகுந்த வளர்ச்சி, ஆரோக்கியம் முதலியவை கொடுக்குமாறு வேண்டப் படுகிறது. வீரஸ்வாமி கிருஷ்ண ராஜ் என்ற மருத்துவர், மருத்துவ ரீதியில், இந்த மந்திரத்தின் பொருளை விளக்கியுள்ளார்[3].
எண் |
சங்க இலக்கியம் படி குறிப்பிடப்படும் பெயர் |
வயது |
ரிக் வேத மந்திரத்தின் பொருள் |
Explanation by Dr Veeraswamy Krishnaraj, M.D |
1 |
குழந்தை |
0 முதல் 4 வரை |
சோமன் / சந்திரன் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
|
In charge of Pubarche, appearance of pubic hair |
2 |
பேதை.
|
5 முதல் 8 வயது |
3 |
பெதும்பை |
9 முதல் 10 வயது வரை |
விஸ்வவசு என்ற தேவதை அவளுக்கு சிறந்த பேச்சு வர உதவுகிறது.
|
In charge of Thelarche, appearance breasts. |
4 |
மங்கை.
|
11 முதல் 14 வயது வரை |
5 |
மடந்தை |
15 முதல் 18 வயது வரை |
அக்னி அவள் பெண்ணாக மற்ற உதவுகிறது.
|
In charge of Menarche, 1st periods |
6 |
அரிவை |
19 முதல் 24 வயது வரை |

இதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்[4]: தினமலர் சொல்வது[5], “மதத்தால் மனிதர்களை பிரித்து, ஓட்டுகளை கைப்பற்ற கட்சிகள் முயற்சி செய்வது, நாட்டுக்கே ஆபத்தில் முடியும் என, சமூக சிந்தனையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். என்றாலும், மதம் பிடிக்கும் அளவுக்கு, பல தலைவர்கள் மதத்தை நம்புகிற நிலை தான், பரவலாக காணப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவுவாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான். பா. ஜ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.ஜ., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது”.

ஸ்டாலின் இந்து திருமணத்தைத் தூஷித்தது[6]: தினமலர் தொடர்ந்து சொல்வது[7], “கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு.க.,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்துத்வா என்ற பெயரில் அரசியல் செய்யும், பா. ஜ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என அவர்கள் கேட்கின்றனர்”.

‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ வாதம்[8]: தினமலர் தொடர்ந்து சொல்வது[9], “சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், ‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ என்ற விஷக்கருத்தையும் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். ‘ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யாமல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்‘ என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.”

ஸ்டாலின் கொடுத்த விளக்கம்[10]: தினமலர் தொடர்ந்து சொல்வது[11], ‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர். ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
வேதபிரகாஷ்
14-04-2019

[1] http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb19/36758-2019-03-07-04-12-33
[3] Dr Veeraswamy Krishnaraj, M.D,Woman and Four Husbands, https://www.bhagavadgitausa.com/woman_and_four_serial_husbands.htm
[4] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[6] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[8] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[10] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
குறிச்சொற்கள்:அக்னி, அரிவை, ஆதித்யநாத், இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், ஓமம், கந்தர்வன், கல்யாணம், சோமன், தாலி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருமணம், துர்கா ஸ்டாலின், பெதும்பை, பேதை, மங்கை, மடந்தை, ரிக், ரிக் வேடம், வேதம், ஸ்டாலின், ஹோமம்
அக்னி, அசிங்கம், அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆஸம்கான், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கந்தர்வன், கருணாநிதி, கழகம், கோவிந்தராஜ், சுடாலின், சோமன், தலித், திக, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பிஜேபி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், போட்டி, போதை, மடந்தை, மந்திரம், மோடி, யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், லிஞ்சிங், வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 2, 2019
இந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்! [3]

இந்து திருமணங்களை விமர்சிக்கும் ஸ்டாலின்[1]: சாருநிவேதிதா, தொடர்கிறார்[2], “அடுத்து, இந்து திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத மந்திரங்கள் அசிங்கம் என்கிறார் ஸ்டாலின். எப்போது ஸ்டாலின், சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார் என, தெரியவில்லை. அசிங்கம் என்று யார் அவருக்குச் சொன்னது? வேதங்களில் சொல்லப்பட்டுள்ள, அதியற்புதமான தத்துவ உண்மைகளும், கவித்துவ வீச்சுக்களும் அவருக்குத் தெரியுமா? தெரியாமலேயே, ஸ்டாலின் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறுவதற்காக, வெறுப்பு அரசியலில் இறங்குகிறார். ஏன், தேவாலயங்களில் கேட்கும் லத்தீன் பிரார்த்தனைகளும், மசூதிகளில் கேட்கும் அரபி பிரார்த்தனைகளும் மட்டும் ஸ்டாலினுக்கு இனிக்கிறதா? தேர்தல் வரும் நேரத்தில் ஸ்டாலின், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்காக எப்படியெல்லாம் வேலை செய்கிறார் பாருங்கள்!”

ஜெயலலியாவின் இறப்பை அரசியலாக்கியது[3]: சாருநிவேதிதா, தொடர்கிறார்[4], “உண்மையில் பார்த்தால், ஜெயலலிதாவின் மர்மமான மரணத்தின் போது, கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோருமே, அ.தி.மு.க.,வை வெறுத்தனர். ஏனென்றால், இப்போதெல்லாம் ஒரு பெட்டிக்கடைக்கு போய் வெற்றிலை பாக்கு வாங்கினாலே, அது, ‘சிசிடிவி‘யில் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு மனிதர்களின் அந்தரங்கமே காணாமல் போய், எல்லாமே காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின், ஜெ.,வின் உடல் மட்டும், மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தது. காலை வெட்டி விட்டனர்; ‘எம்பார்மிங்‘ பண்ணின உடம்பு என்றனர். எல்லாமே யூகங்கள்; மர்மங்கள். இவை அனைத்தும், மாயாஜால கதைகளில், ராஜா ராணி கதைகளில் வருவது போலத்தான் நடந்தது. மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே போயினர். ஜெ.,வின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தையும், ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தி.மு.க.,வை போல, அ.தி.மு.க., அல்ல. தி.மு.க.,வுக்கு ஒரு வலுவான அடித்தளம் இருக்கிறது. தலைமையில் யார் இருந்தாலும் சரி, தி.மு.க., காரன், தி.மு.க., காரன் தான். குடும்பமே, தி.மு.க.,வில் இருக்கும். அப்பன், மகன், பேரன் என்று, தலைமுறை தலைமுறையாக, தி.மு.க.,வில் இருப்பர். ஆனால், அ.தி.மு.க.,வுக்கு அப்படிப்பட்ட அடித்தளம் உண்டா என்பது சந்தேகமே.”

அதிமுகவின் அணுகுமுறை, ஸ்டாலினின் எதிர்மறை போக்கு[5]: “எம்.ஜி.ஆர்., ரசிகர்களே, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். ‘அங்கே, எம்.ஜி.ஆர்.,தான் எல்லாம்; அவருக்கு பின், அ.தி.மு.க.,வே இருக்காது‘ என, தி.மு.க.,வினர் நினைத்தனர். நான் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், எம்.ஜி.ஆருக்கு பின், ஜெ., வந்தார். ஒரே தலைவர்; அவர் வைத்ததுதான் சட்டம்; அவரே கட்சி; அவரே எல்லாம். ஜெ.,க்குபின், அ.தி.மு.க., இருக்காது என, தி.மு.க.,வினர் நினைத்தனர். நானும், அப்படித்தான் நினைத்தேன். ஆனால். ஜெ., இருக்கும் போது, யாருக்குமே தெரியாத, இ.பி.எஸ்., இன்று முதல்வராக நிலைத்து விட்டார். மக்களும் அவரை ஏற்றுக் கொண்டனர். இதற்கு, மூன்று காரணங்கள். மக்களின் மறதி; ஸ்டாலினின் வாய்; மூன்றாவது, ‘எனக்கு எல்லாம் தெரியும்‘ என்ற மனோபாவம் இல்லாமல், இ.பி.எஸ்., அதிகாரிகளை வைத்து, காரியம் சாதிக்கிறார். மக்களுக்குத் தொந்தரவு இல்லை. இருந்தாலும், என்னால் முந்தைய தேர்தல்களை போல, இந்த முறை முடிவுகள் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. காரணம், மக்கள் ஒரு விரக்தியான நிலையில் இருக்கின்றனர். யாருக்கு ஓட்டுப் போட்டாலும், மக்களின் அடிப்படை வசதிகள் எதுவுமே தீர்க்கப்படாமல் தான் இருக்கின்றன.” -சாருநிவேதிதா, எழுத்தாளர்[6].

2019ல் இந்துத்துவாதிகளுக்கு ஏன் திடீரென்று ரோஷம், கோபம் வந்துள்ளது?: ஆக இவையெல்லாமே தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கொதிக்கும், குதிக்கும், பொங்கும் போக்கு தான் தெரிகிறதே தவிர, என்னடா, ஶ்ரீகிருஷ்ணரை இவ்வாறு தூஷிக்கிறார்களே என்று பொங்கிய்யதாகத் தெரியவில்லை. பகவத் கீதை மீது கை வைத்து, நீதிமன்றங்களில் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். அந்நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். ஆனால், வருடா வருடம், அக்கயவர்கள் தூஷித்துக் கொண்டிருக்கும் போது, இவ்வருடம் தான், இவர்களுக்கு, சூடு, சொரணை, ரோஷம், மானம் எல்லாம் வந்தது போல இருக்கிறது. பணம், பதவி, புகழ், விளம்பரம் போன்ற ஆதாயங்களுக்காக, அக்கயவர்களுடனே கூட்டு வைத்துக் கொண்டனர், தேர்தல் போது, பிரச்சாரமும் செய்தனர். டி.ஆர்.பாலுவுக்கு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்தது. ஆனால், ஶ்ரீகிருஷ்ண தூஷணத்தை எதிர்க்க வேண்டும் என்று இவர்களில் எவருக்கும் தோன்றவில்லை போலும். பதவியைப் பெற்ற இந்துத்துவ வக்கீலுக்கும் தோன்றவில்லை போலும். ஒரு வேளை வழக்குகள் கிடைக்காது, காசு கிடைக்காது என்று ஒதுங்கி விட்டனர் போலும்.

இந்துமதம் எல்லா இந்துக்களுக்கும் தான்: “டெக்கான் குரோனிகல்” என்ற ஆங்கில நாளேடு, “வீரமணி பேசியதை எதிர்த்து பிராமணர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்,” என்று ஒரு புகைப்படம்ம் போட்டு, செய்தி வெளியிட்டுள்ளது! சரி,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் நடத்தவில்லையா? இந்துக்கள் என்று ஏன் போடவில்லை? இங்குதான், ஊடகங்களின் குசும்புத்தனம் வெளிப்படுகிறது. ஏதோ, இந்துமதம் தாக்கப் பட்டால், பிராமணர்களுக்குத் தான் கோபம்-ரோஷம் வரும் மற்றவர்களுக்கு வராது என்பது போன்ற திரிபுவாதம், சித்தரிப்பு மற்றும் அவ்வாறான திணிப்பு. இந்துமதம், பிராமணிஸம் என்றால், பிறகு, க்ஷத்திரியரிஸம், வைசியரிஸம், சூத்திராயிஸம் என்றெல்லாம் வர வேண்டும். ஆகவே, முதலில் இந்துக்கள், இத்தகைய விசமத்தனங்களை எதிர்க்கவேண்டும். பார்ப்பன எதிர்ப்புப் போர்வையில், இந்துவிரோத சித்தாந்திகள் ஒளிந்து கொண்டு வேலை செய்வதை கவனிக்கலாம். இந்துக்களிடையே ஒற்றுமை இல்லாத வரையில், அவர்கள் இணைந்து தான் வேலை செய்வார்கள்.

ஶ்ரீகிருஷ்ண தூஷணத்திற்கு பதில் [2017-2019]: 2017லிருந்தே திக-வீரமணி, ஸ்டாலின் இதே பல்லவியைப் பாடி வருகின்றனர். விவரங்களை கீழ்கண்ட எனது பதிவுகளில் விளக்கமாக படிக்கலாம்.
- “கிருஷ்ணர் பொம்பளப் பொறுக்கி” என்ற அளவுக்கு, சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள தோரணை – ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி தருணத்தில் தொடரும்தூஷணங்கள் [1]
https://antihidnu.wordpress.com/2018/09/07/blaspheming-krishna-on-the-occasion-of-krishna-jayanti-dravidian-way/
- ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? [2]
https://antihidnu.wordpress.com/2018/09/07/blaspheming-krishna-anti-hindu-atheist-and-mohammedan-way/
- ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? [3]
https://antihidnu.wordpress.com/2018/09/07/medieval-mohammedan-anti-krishna-blasphemy-continues-through-europeans-and-atheists/
- ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன்? பக்தி மார்க்கம்அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]
https://antihidnu.wordpress.com/2018/09/07/anti-krishna-propaganda-continues-through-atheists-and-secularists/
- திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [1]
https://antihidnu.wordpress.com/2018/09/26/dmk-not-anti-hindu-clarifying-stalin-though-atheist/
- திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [2]
https://antihidnu.wordpress.com/2018/09/26/proven-anti-hindus-like-dravidian-leaders-need-not-be-apologetic/
- திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாநிதியும், சம்பந்திகளும் [3]
- https://antihidnu.wordpress.com/2018/09/27/anti-hindu-dravidian-gangs-cannot-compromise-with-hindus-but-continue-blasphemy/

இந்துவிரோதிகளும், போலி இந்துத்துவ வாதிகளும் கூட்டு சேர்வது எப்படி?: அவர்கள் மாறவில்லை, மாறமாட்டார்கள், ஆனால், இந்துக்கள் மாறுவதால் தான் பிரச்சினை. அக்காலத்திலிருந்து, இக்காலம் வரை இந்துக்களில் தான் துரோகிகள் இருக்கிறார்கள். இந்தியர்களாக இருந்து கொண்டு, இந்தியாவை விமர்சிப்பது, குறை கூறுவது, ஏன், எதிராகப் பேசுவதை இந்தியர்கள் தான் அதிகமாக செய்து வருகிறார்கள். இந்துக்களும் பணம், பதவி, விளம்பரம், குறுகிய கால லாபம் முதலியவற்றைகருத்திற் வைத்துக் கொண்டு துரோகிகளாக செயல்படுகின்றனர். அவர்களது, எழுத்துகள்-பேச்சுகள் தான் இந்துவிரோதிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர், இலக்கியம், புத்தக வெளியீடு போன்ற முகமூடிகளில் ஒன்று சேர்கின்றனர், கொள்ளை அடிக்கின்றனர். விளம்பரத்திற்கு புகார் கொடுக்கும் இயக்கங்கள் பிறகு அமைதியாகி விடும். வைரமுத்து, கமல் போன்றோர் மீது கொடுத்த புகார்கள் என்னவாகின? வழக்கை சந்தித்தார்களா, இல்லை இந்துத்துவவாதிகள், தொடர்ந்து நடத்தினார்களா?
© வேதபிரகாஷ்
02-04-2019

[1] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38
[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922
[3] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38
[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922
[5] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38.
[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922
குறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், கனிமொழி, கருணாநிதி, குங்குமம், குங்குமம் அழித்தல், குங்குமம் ரத்தம், குருட்டு கருணாநிதி, சந்தனம், திக, திமுக, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நெற்றியில் குங்குமம், ராஜாத்தி, விபூதி, ஸ்டாலின்
அதிமுக, அரசியல், அரவிந்தன் நீலகண்டன், ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து நாடார், இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இல கணேசன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், குங்குமம், கோபி, கோபிகா, கோபிகை, சந்தனம், செக்யூலரிஸம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொறுக்கி, பொறுக்கி சாமி, விபூதி, ஸ்டாலின், ஹோமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 2, 2019
இந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்! [2]

வீரமணியைக் கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது: இந்துக்கள் வழிபடும் பகவத்கீதையின் நாயகன் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி, வழக்கம் போல இந்துக்கள் ஏதும் செய்ய மாட்டார்கள், கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் திராவிட கழகத்தின் வீரமணி, தனது அநாகரிக பேச்சை பரப்பியுள்ளார்[1]. பகவான் கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் திக தலைவர் வீரமணி பேசியதைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது[2]. இந்த கூட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணரை அவதூறாக பேசிய கி வீரமணியை கைது செய்யக்கோரி இந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்துக்கள் பாதுகாப்பு இயக்கம், அகில இந்திய யாதவ சபை மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், இயக்கங்கள் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஸ்ரீகிருஷ்ணர் பற்றி அவதூறு பேச்சு; கி.வீரமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தல்: ஆர்ப்பாட்டம் தொடர்பாக இல.கணேசன் கூறியதாவது[3]: “திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி புராணங்களை தெளிவாகப் படித்திருப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் எதையும் படிக்கவில்லை என்று தெரிகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் 11-வது வயதில் கம்சனைக் கொன்ற பிறகு குருகுலத்துக்குச் சென்றுவிட்டார். அதற்கு முந்தைய பருவத்தில் பாலகனாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் செய்த செயல்களை வக்கிரமான எண்ணத்துடன் செய்ததாக சொல்வது பொருத்தமற்றது. மக்கள் மனதை புண்படுத்திய கி.வீரமணி, தான் பேசியது தவறு என்று கூறி வருத்தம் தெரிவிப்பது நல்லது. தேர்தல் நேரத்தில் இதுபோல் பேசுவது திமுகவுக்கு எந்த அளவுக்கு வாக்குகள் பாதிக்கும் என்று தெரியாமல் பேசியிருக்கிறார். அதனால், வருத்தம் தெரிவிப்பது நல்லது,” இவ்வாறு அவர் கூறினார்[4]. அதாவது, அரசியல்வாதி, அரசியல்வாதி போன்றே பேசியுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்: இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்து மதத்தையும், இந்து மக்களின் தெய்வங்களை பற்றியும் அவதூறாக பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்[5]. இதனைத் தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய செந்தில், வீரமணி பேச்சு, உலகெங்கிலும் வாழும் இந்துக்களின் மத உணர்வையும், நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்தார்[6]. திண்டுக்கல் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா ஆகியோர் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் கூறியிருப்பதாவது[7]: “தி.க. தலைவர் வீரமணி, இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையில் கிருஷ்ணரை தொடர்புப்படுத்தி பேசியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் மத கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி வருகிறார். எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனறு தெரிவித்துள்ளனர்[8].

ஜெகத்ரக்ஷகனின் ஆழ்வார்கள் ஆய்வுமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்[9]. அப்போது அவர் பேசியதாவது[10]: “நான் இந்துக்களுக்கு எதிரானது என்பது போல் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல. திமுக.,வும் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல. என் மனைவி கோவிலுக்கு செல்வதை நான் தடுக்கவில்லை. இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர்.”ஜெகத்ரக்ஷகன், “ஆழ்வார்கள் ஆய்வு மையம்” வைத்து நடத்துவதே, எத்தகைய போலித் தனமாகி விட்டது என்பதனை கவனிக்கலாம். ஆழ்வார்கள் எல்லோரும் என்ன கிருஷ்ணனை விடுத்து, வேறொருவரையா போற்றிப் பாடினர்?

சாரு நிவேதிதாவின் கட்டுரை[11]: தினமலரில், இவரது கட்டுரை வெளி வந்துள்ளது, அதில்[12], “மத சார்பின்மை என்றால், எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்க வேண்டும். ரம்ஜானின் போது, குல்லா அணிந்து, நோன்பு கஞ்சி குடித்து, புகைப்படத்துக்கு, ‘போஸ்‘ கொடுக்கிறார் ஸ்டாலின். கோவிலில் திருநீறு வைத்தால் மட்டும், ஏன், ஏதோ நெருப்பை தொட்டது போல் பதறிப் போய் அழிக்கிறார்; விபூதி வைத்து விட்டாலே, பகுத்தறிவு பறந்து விடுமா… அவ்வளவு பலவீனமானதா உங்கள் பகுத்தறிவு? எதிராளியை மதிப்பது, அற்புதமான மானுடப் பண்பு. ஒரு சீக்கியரின் எதிரே, யாரும் புகைக்க மாட்டார்கள். ஏனென்றால், புகைப்பது அந்த மதத்தில் பாவம். அதைப் போலவே, மாட்டை தெய்வமாக வணங்குபவனின் எதிரே, மாட்டின் மாமிசத்தைப் புசிக்காதிருப்பதும், ஒரு நாகரிகம் தான். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான், உலகம் பல்வேறுபட்ட கலாச்சார வேறுபாடுகள் உடைய மனிதர்களும், வாழத் தகுதியான இடமாக இருக்கும். இதை, இத்தனை முதிர்ந்த வயதிலும் ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லை போல தெரிகிறது”.
ஸ்டாலினின் இந்துவிரோத போக்கு[13]: சாருநிவேதிதா, எழுத்தாளர் தொடர்கிறார்[14], “முஸ்லிம் வீட்டு திருமணத்துக்கு போனவர், இந்துக்களின் திருமணங்களை திட்டுகிறார். ஹோம புகையில், அங்கே எல்லோரும் அழுகிறார்களாம். கட்சித் தொண்டர்களும், சமூக விரோத குண்டர்களும், டயரைப் போட்டு எரிப்பதால் வரும் புகையும், ஹோமத்தில் எழும்பும் புகையும் ஒன்று என, நினைத்து விட்டாரா ஸ்டாலின்? ஹோமப் புகை என்பது, அரிய வகை மூலிகைகளை தீமூட்டி, அதில் நெய் ஊற்றி வளர்க்கப்படும் அக்னியால் உண்டாவது. இதனால், சுற்றுப்புறச் சூழலில் உள்ள மாசு அகற்றப்படுகிறது. மத சார்பின்மை கட்சியை சேர்ந்தவர் என்பதால், ஸ்டாலின், தர்காவுக்குச் சென்றிருப்பார் என்று நம்புகிறேன். தர்காவில் அவர், சாம்பிராணி சட்டியை பார்த்திருக்கலாம். குங்கிலியம் என்ற மரப்பிசினும், படிகாரமும் சேர்ந்தது தான் சாம்பிராணி. அந்தப் புகை உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும், சாம்பிராணி போடும் பழக்கம் இருந்தது. ‘பகுத்தறிவால்‘ காணாமல் போன பல விஷயங்களில், சாம்பிராணியும் ஒன்று.”
© வேதபிரகாஷ்
02-04-2019

[1] தினமலர், வீரமணியின் அநாகரிக பேச்சு; இந்துக்கள் கொதிப்பு; சென்னையில் போராட்டம், Updated : மார் 30, 2019 15:26 | Added : மார் 30, 2019 10:16.
[2] https://www.dinamalar.com/News_Detail.asp?Id=2244849
[3] தி.இந்து, ஸ்ரீகிருஷ்ணர் பற்றி அவதூறு பேச்சு; கி.வீரமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தல், Published : 31 Mar 2019 06:24 IST, Updated : 31 Mar 2019 06:24 IST
[4] https://tamil.thehindu.com/tamilnadu/article26691030.ece
[5] தினத்தந்தி, கி.வீரமணி மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார், பதிவு : மார்ச் 29, 2019, 05:50 PM
[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/29175017/1030311/Veeramani-chennai-police-case.vpf
[7] மாலைமலர், பழனி போலீஸ் நிலையத்தில் வீரமணி மீது இந்து முன்னணி புகார்
பதிவு: ஏப்ரல் 01, 2019 15:19
[8] https://www.maalaimalar.com/News/State/2019/04/01151953/1235077/Hindu-munnani-complaint-against-Veeramani-in-palani.vpf
[9] தினத்தந்தி, இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார், பதிவு: ஏப்ரல் 01, 2019 13:05 PM
[10] https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/01130550/Some-have-created-the-image-of-a-DMK-opponent.vpf?fbclid=IwAR09Xqy4-YgZCkLl291-8CpJwG6t63Ddcfyk5LMZtUWH7BIswX-MpEFfSFE
[11] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38
[12] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922
[13] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38.
[14] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922
குறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கனிமொழி, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், வீரமணி, ஸ்டாலின்
அரசியல், அரவிந்தன் நீலகண்டன், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இல கணேசன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கோபி, கோபிகா, கோபிகை, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், பகுத்தறிவு, ராசலீலா, ராசலீலை, ராதாராணி, ராஸலீலா, ராஸலீலை, வீரமணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 2, 2019
இந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்! [1]

வீரமணி ஶ்ரீகிருஷ்ணரைப் பற்றி பேசியது என்ன? (23-03-2019)[1]: 23.3.2019 மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அவசர சிறப்புக் கூடத்தில் வீராணி பேசியது[2], “……… எடுத்துக்காட்டாகக் கிருஷ்ணன் என்ற கடவுளை எடுத்துக் கொள்ளலாம். குளிக்கும் பெண்களின் ஆடை களைத் திருடிச் சென்று அவர்களை நிர்வாணமாக இரசித்த கயவாளிதானே இந்தக் கிருஷ்ணன்! வெட்கமில்லாமல் இந்தக் கேடு கெட்ட இந்தக் காட்சியை கண்ணாடி சட்டம் போட்டு அப்பொழுதெல்லாம் வீட்டிலும் மாட்டி வைத்துப் பூசை செய்ததுண்டே! இத்தகைய கடவுளைக் கும்பிடுபவன், நம்புபவன் எப்படி ஒழுக்கவானாக இருக்க முடியும்? ஈவ் டீசிங் என்ற பிரிவின்கீழ் கைது செய்யப்பட வேண்டிய ஒரு குற்றவாளி உண்டு என்று சொன்னால், அவன் இந்தப் பகவான்‘ கிருஷ்ணனாகவேதான் …ஒழுக்கமுள்ள, யோக்கியமுள்ள ஒரு கடவுளைக் கூடக் கற்பிக்க முடியாத ஒரு மதம்தான் இந்து மதம் என்பதை மறுக்க முடியுமா? இந்த ஒழுக்கம் கெட்டவனையும் கடவுளாகக் கும்பிடும் கூட்டம் யோக்கியமானதாம் – இந்த ஒழுக்கக் கேட்டை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டி, மக்களை நல்வழிக்குக் கொண்டுவரப் பாடுபட்ட தந்தை பெரியாரால்தான் ஒழுக்கம் கெட்டுவிட்டதாம்!…….” இப்படி உளறிக் கொட்டி வருவது அந்த ஆளின் மடத்தனம் என்று தான் சொல்ல வேண்டும். நான்கு சுவர்களுக்கு மத்தியில், தன்னுடைய கூட்டத்டை வைத்துக் கொண்டு, இவ்வாறு பேடித் தனமாகப் பிதற்றி வருவது அவர்களது தொழிலாக உள்ளது.

வீரமணியின் மீது புகார் (31-03-2019): இந்து கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் 31-03-2919, ஞாயிற்றுக்கிழமை புகார் மனு அளித்தனர்[3].சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது இந்து கடவுள் கிருஷ்ணரின் அவதாரத்தையும், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தையும் தொடர்புபடுத்தி அவர் இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட இந்து அமைப்பினர் கி.வீரமணியை கைது செய்யக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பக்தி என்பது தனிநபரின் நம்பிக்கை, அந்த நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் வீரமணி பேசியுள்ளார். இது இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளதாக தெரிகிறது. மேலும் அவரது பேச்சு மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது[4].

திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை (27-03-2019): ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது[5]: “18 சட்டசபை தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார். பின் விவசாய கடன், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்திலும் அ.தி.மு.க., வினர் கொள்ளை அடித்து வருகின்றனர். தி.மு.க., கூட்டணியில் உள்ள இந்துக்களை விட சிறுபான்மையாக உள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தான் மோடியை விரட்டும் பொறுப்பு அதிகம் உள்ளது. நாங்கள் திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம். மோடியை விரட்ட இப்படிதான் வேஷம் அணிந்து செயல்பட வேண்டும்,” என்றார். இந்துக்களை ஏமாளிகள் போல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது[6]. அதாவது, இந்துக்கள் அந்த அளவிற்கு ஏமாளிகள் என்பது போல பேசியிருக்கிறார். இப்பொழுது கூட, விபூதி வைத்த யாருக்கும் கோபம் வரவில்லை போலும்!

ஓட்டு வங்கி என்ற ரீதியில் செய்திகள் வெளியிடப் படுவது: ஹிந்து மதக் கடவுள் கிருஷ்ணர் குறித்து, திராவிடர் கழக தலைவர் வீரமணி, தரக்குறைவாக விமர்சித்த வீடியோ, வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ, தங்களின் ஓட்டு வங்கியை பாதித்து, ஹிந்துக்களின் ஓட்டுக்கள் கிடைக்காமல் செய்து, அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு சாதகமாகி விடுமோ என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலைமையை சமாளிக்க, வீரமணி பேச்சுக்கு, ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., கூட்டணிகள் இடையே, நேரடி போட்டி நிலவுகிறது. 2014 லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தி.மு.க., இந்த முறை, அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற, துடிப்புடன் தேர்தல் பணியாற்றி வருகிறது. இம்முறை, எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளான, துரைமுருகன், பொன்முடி போன்றோர், தங்கள் வாரிசுகளையும் களம் இறக்கி உள்ளனர். அனைவரும் பணத்தை வாரி இறைத்து, வெற்றிக்கு கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்துமதத்தைத் தூஷிக்கும் பரம்பரை: கருணாநிதி இருக்கும் வரை, இந்துமதத்தைத் தூஷித்துக் கொண்டுதான் இருந்தார். அபானின் பிள்ளை என்ற விதத்தில் யதப்பாமல் அதனை ஸ்டாலின் மற்றும் கனிமொழி செய்டு வருகின்றனர். திருப்பதி பெருமாளை கிண்டலடித்த கனிமொழி, அடக்கி வாசிக்கிறார். அவரது தாயார் ராஜாத்தி அம்மாள், திருச்செந்துார் முருகன் கோவிலுக்குசென்று, மகளின் வெற்றிக்காக சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்நிலையில், தி.மு.க.,விற்கு ஆதரவு அளிக்கும், வீரமணி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹிந்துக்களிடம், குறிப்பாக கிருஷ்ணரை வழிபடுவோரிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ என்று குறிப்பிடுவதால், இவர்கள் விடுதலையைப் படிக்கவில்லை என்று தெரிகிறது.

தமிழகத்தில் வீரமணியின் பேச்சு கண்டனத்திற்கு உண்டானது: சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், கிருஷ்ணரை வழிபடும் ஹிந்து அமைப்பினர், தி.மு.க.,வுக்கு எதிராகவும், வீரமணிக்கு எதிராகவும், போராட்டங்களை துவக்கி உள்ளனர். எனவே, ‘வீரமணி பேச்சுக்கு, கண்டனம் தெரிவியுங்கள்; அவர் பேச தடை விதியுங்கள். கூட்டணியில் இருந்து அவரை ஓரங்கட்டுங்கள்’ என, ஸ்டாலினிடம், மாவட்ட செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்[7]. தி.மு.க.,வினர் மத்தியில் மட்டுமின்றி, கூட்டணி கட்சியினர் மத்தியிலும், கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், ஸ்டாலின் செய்வதறியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. ‘தன் தந்தை காலத்தில் இருந்து, தி.மு.க.,வுடன் நட்பு பாராட்டும் வீரமணியை, எப்படி எடுத்தெறிந்து பேச முடியும்’ என்ற, தர்ம சங்கடமான நிலை, அவருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இது தேர்தல் நேரம் என்பதால், ஸ்டாலின் தயக்கமின்றி, முக்கிய முடிவை எடுப்பார் என, அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்[8].
© வேதபிரகாஷ்
02-04-2019

[1] விடுதலை, பொள்ளாச்சி – ஓர் எச்சரிக்கை–ஒழுக்கத்தை ஓம்பிய பெரியார் எங்கே, ஒழுக்கக்கேடன் கிருஷ்ண பக்தர்கள் கூட்டம் எங்கே?, 24-03-2019
[2] https://www.viduthalai.in/page1/178638.html
[3] தினமணி, கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் இந்து அமைப்பினர் மனு, By DIN | Published on : 01st April 2019 06:15 AM
[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/apr/01/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3124739.html
[5] தினமலர், திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை, Added : மார் 27, 2019 23:14
[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2242814
[7] தினமலர், அம்போ? தி.மு.க.,வுக்கு ஹிந்துக்கள் ஓட்டு கிடைக்காது? கிருஷ்ணர் பற்றி வீரமணி அவதூறால் சிக்கல், பதிவு செய்த நாள் : மார்ச் 30,2019,20:03 IST
[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2244948
குறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், உடை பறித்தல், கனிமொழி, கருணாநிதி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துணி இழுத்தல், துர்கா, துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், ராஜாத்தி, வஸ்த்ர ஹரண், வீரமணி, ஸ்டாலின்
அரசியல், அவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கோபிகா, கோபிகை, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொறுக்கி, பொறுக்கி சாமி, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாராணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்ரெம்பர் 26, 2018
திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [2]

நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடிகம் ஆடிய ஸ்டாலின் (2015): ஸ்டாலின் தனது ‘நமக்கு நாமே’ பயணத்தின் 10 ஆவது நாளான செப்டம்பர் 2015 அன்று, திருக்கோஷ்டியூர் நோக்கி மனைவி துர்கா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். சுற்றுப்பயணத்தில் திட்டமிடாத பகுதிக்கு ஸ்டாலின் சென்றதால் தொண்டர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். 108 வைணவத்தலங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலுக்கு அவர் சென்றார்[1]. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஸ்டாலினுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது[2]. இதைத் தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்த மு.க.ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா ஆகியோர் ராமானுஜர் உபதேசித்த 106 அடி உயர கருங்கல் கோபுரத்தையும் பார்வையிட்டு தரிசனம் செய்தனர்[3]. அதாவது, வேடிக்கைப் பார்க்கச் சென்றார் அவ்வளவுதான். இந்து போல அல்லது பக்தியுடன் செல்லவில்லை. பிறகு, அக்டோபர் முதல் வாரத்தில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மக்களை சந்தித்து குறை கேட்டார். தஞ்சை மேல வீதி காமாட்சி அம்மன் கோவிலில் இந்து மத குருக்கள், அர்ச்சகர்களுடன் கலந்துரையாடினார்[4]. பட்டாச்சாரியர்கள், குருக்கள், அர்ச்சகர்கள் சந்திப்பு என்று ஶ்ரீ பங்காரு காமாக்ஷி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது அந்த நாடகம். ஸ்டாலின், பின்னர் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் ஆயர் மற்றும் தேவாலய பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இதுதான் அந்த இந்துவிரோதியின் செக்யூலரிஸ நாடகம் எனலாம். ஆனால், இந்து அமைப்பினர் இதனை ஏன் கண்டுகொள்ளவில்லை என்ரு தெரியவில்லை. ஶ்ரீரங்கத்தில், சந்தனத்தை நெற்றியில் வைத்ததும், போத்திய பொன்னாடையாலேயே அழித்த ஸ்டாலின், இந்து விரோதி தானே?

நாத்திகன் கோவிலுகுச் சென்றதும், பூரண கும்ப மரியாதை பெற்றதும்–ஜூன் 2018: ஜூன் 21-22, 2018 தேதிகளில், இரண்டு நாள் பயணமாக திருச்சி வந்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீனின் துணைவியார் ஹாஜியானி லத்திபா பேகத்தை அவரின் இல்லத்தில் சென்று உடல் நலம் விசாரித்தார். காலை 8 மணியளவில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீராமனுஜர் மடத்தில் இருக்கும் பத்மசாலி திருமண மண்டபத்துக்குச் சென்றார். வரும் வழியில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீஅரங்கநாதர் சுவாமி திருக்கோயில் எதிரில் உள்ள ரெங்கா கோபுரம் அருகே திருக்கோயில் சார்பில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்டாலினை யானை ஆசீர்வதித்து மாலை அணிவித்தது. பின்னர் வெள்ளை கோபுரம் அருகே அகோபிலம் மடத்தைச் சேர்ந்த தேசிய ஆச்சாரியார் தலைமையில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது[5]. இதையடுத்து ஶ்ரீரங்கம் வந்த ஸ்டாலினுக்கு சுந்தர் பட்டர் தலைமையில் ராஜகோபுரம் அருகே, யானை மாலை அணிவிக்க, அடுத்து பூரண கும்ப மரியாதை அளித்தனர்[6]. இதற்கு “நக்கீரன்” கொடுத்துள்ள வக்காலத்து இதோ!

நக்கீரனின் வக்காலத்து – ஆன்மீக அரசியலும், பெண்டாட்டியின் சுக்கிரபரிகார பூஜையும், நாத்திக ஸ்டாலினும்: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பெருமாளை தரிசனம் செய்ய இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் எப்போதும் திரண்டு வருவார்கள்.
தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சி தன்னை தக்கவைத்து கொள்வதற்காக மக்களிடையே ஆன்மீகம் குறித்து நிறைய பேச ஆரம்பித்தனர். அதன் ஓரு பகுதியாக தான் சமீபத்தில் ரஜினி அரசியல் இறங்குவேன் என்று அறிவித்ததற்கு பிறகு ஆன்மீக அரசியல் பற்றி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பபட்டது. இந்த நிலையில் இந்த ஆன்மீக அரசியல் என்பது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை என்கிறார்கள்.
|
நாத்திகர்களுக்கும், பகுத்தறிவுகளுக்கும், வெங்காயங்களும் என்ன ஆன்மீகம் இருக்கிறது, அதிலிருந்து ஆன்மீக அரசியல் வருவதற்கு என்று தெரியவில்லை! அரசமரத்தைச் சுற்றினால் இடுப்புப் பெருக்குமா என்று கேள்வி கேட்கும் கோஷ்டியினருக்கு, ஏனிந்த “ஆன்மீக” ஆசை? யார் நம்புவார்கள்?
|
உடன் பிறப்புகள். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிராத்தனை செய்வதற்காக மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அடிக்கடி வருவது வழக்கம்.

அப்படி அவர் வரும்போது எல்லாம் அவருடன் கே.என். நேருவின் மனைவியும் வருவார்களாம். எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவும், இழந்ததை மீண்டும் பெறுவதற்காகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுக்கிரபரிகாரா பூஜை செய்ததன் பலனாக தான் தன் குடும்பத்திலும், அரசியலிலும் இரு தனித்தன்மை கிடைத்தாம்[7]. அதே போல தான் தற்போதும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று மனைவியின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்[8]. மு.க.ஸ்டாலின் என்கிறார்கள்.
|
நாத்திகனுக்கு பெண்டாட்டி சுக்கிரபரிகாரா பூஜை செய்தால், பலன் கிடைக்கும் என்று எந்த புராணம் சொல்கிறது? பெண்டாட்டியின் ஆசையை நிறைவேற்ற மற்ற கோவில்களுக்கும் சென்றிருக்க வேண்டுமே? செல்லவில்லையே? இங்கே மட்டும், பலன் கிடைக்க வேண்டுமானால், வெங்காயம், பெண்டாட்டியுடன் வரவேண்டும் என்று சொல்லப் பட்டதா?
|
இதன் அடிப்படையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறவினர்கள் இரண்டு பேரின் திருமணமும், கட்சியினர் இருவரது மகளுக்கும், மகனுக்கு காதுகுத்தும் நிகழ்ச்சியும் ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில், இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுர வாசலில், யானை வைத்து மாலை அணி்வித்து ஸ்ரீரங்க பட்டர்கள் தலைமையில் ஸ்டாலினுக்கு பூரண மரியாதை கொடுத்தனர். தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு திருமஞ்சன பொட்டு வைத்தார் பட்டர். அதனை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் மெதுவாக அழித்தார்.
|
அதாவது ஸ்டாலின் – துர்கா தம்பதியராக வந்து செல்ல, எல்லாமே, திமுகவினரால் செய்த “செட்–அப்” போலும்! அப்படி, எந்த திராவிடப் புரோகிதர் சொன்னார் என்று தெரியவில்லை. பட்டர் வைத்த சந்தனத்தை பட்டென்று, போத்திய பட்டு வஸ்திரத்தினால், துடைத்தெரிந்ததும், பரிகார பூஜை தானோ? சிரித்துக் கொண்டே துரோகம் செய்யும் போக்கு வெளிப்பட்டு விட்டதே?
|
உடன் இருந்த வழக்கறிஞர் பாஸ்கர் மாலை அணிவித்த யானைக்கு கரும்பு சாப்பிட கொடுத்தார். கோவிலுக்குள் வருமாறு பட்டர்கள் அழைத்த போது, மறுத்து சென்று விட்டார். அதன் பிறகு உடனே கோவிலின் வெளி சுற்று வழியே ஒரு சுற்று சுற்றி நேராக கல்யாண மண்டபத்திற்கு சென்றார்.
© வேதபிரகாஷ்
15-09-2018

[1] விகடன், மனைவியுடன் ஸ்டாலின் கோவிலுக்கு திடீர் வருகை; சாமி தரிசனம்: கட்சியினரிடையே பரபரப்பு!, Posted Date : 13:03 (29/09/2015)Last updated : 13:43 (29/09/2015)
[2] https://www.vikatan.com/news/tamilnadu/53036.html
[3] தமிள்ஸ்.நவ்.நியூஸ், திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் அல்லள் மு க ஸ்டாலின், அக்டோபர் 17, 2015.
[4] http://tamilsnow.com/?p=62030
[5] விகடன், பூரண கும்ப மரியாதை… யானை ஆசீர்வாதம்… ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு, சி.ய.ஆனந்தகுமார், மற்றும்ன்.ஜி.மணிகண்டன், Posted Date : 11:48 (22/06/2018)Last updated : 11:48 (22/06/2018)
[6] https://www.vikatan.com/news/tamilnadu/128482-stalins-srirangam-visit.html
[7] நக்கீரன், மனைவிக்காக ஸ்ரீரங்கம் வந்த மு.க.ஸ்டாலின்!, ஜே.டி.ஆர், Published on 22/06/2018 (12:28) | Edited on 22/06/2018 (12:30)
[8] https://nakkheeran.in/24-by-7-news/politics/mk-stalin-cames-srirangam-temple-his-wife
குறிச்சொற்கள்:இந்து, இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துத்துவம், இந்துமதம் தாக்கப்படுவது, குங்குமம், குங்குமம் அழித்தல், குங்குமம் ரத்தம், சுடாலின், துர்கா, நெற்றியில் குங்குமம், ரத்தம், ஸ்டாலின்
இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கருத்து, கோவில் அர்ச்சகர், கோவில் இடிப்பு, சுடாலின், செக்யூலரிஸம், திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நம்பிக்கை, பகுத்தறிவு, பசு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
செப்ரெம்பர் 26, 2018
திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [1]

“தி.இந்து” ஸ்டாலினிடம் எடுத்த பிரத்யேக பேட்டி[1] செப்டம்பர் 2018): இந்துக்களுக்கு எதிரானவர்கள் போலவும், கடவுளுக்கு எதிரானவர்கள் போலவும் திமுகவை வேண்டுமென்றே சிலர் சித்திரிக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[2]. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தி இந்துவுக்கு (ஆங்கிலம்) பேட்டி அளித்தார்[3]. வேறெந்த நாளிதழும் போடாத வேளையில், “தி.இந்து” மட்டும் போட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது[4]. பி. கோலப்பன் என்பவர், அப்போது அவரிடம், “கடவுள் குறித்த நிலைப்பாட்டைப் பொதுக்குழுவில் முதல்முறையாக எடுத்திருக்கிறீர்கள். பாஜகவின் வளர்ச்சிக்குப் பின் கடவுளுக்கு எதிரான அல்லது மதத்துக்கு எதிரான பிரச்சாரத்தையோ மேற்கொள்வது கடினம் என்பதால் அந்த நிலைப்பாட்டை எடுத்தீர்களா அல்லது இந்துக்களுக்கு எதிரான திமுக என்ற நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்பட்டதா? எனக் கேட்கப்பட்டது”, அதாவது கேட்டாராம். இந்த கேள்வியே சொல்லி வைத்து கேட்டது போலத்தான் உள்ளது. அதற்கு முக ஸ்டாலின் அளித்ததாக, “தி.இந்து” செய்தி போட்டுள்ளது. “தி.இந்து” இதே செய்தியை, ஆங்கிலத்தில் இரண்டு முறை, இரண்டு இணைத்தள லிங்குகளில் வெளியிட்டுள்ளது[5]. அதே கோலப்பன் பெயர் தான் அதிலும் காணப்படுகிறது[6].

இந்துக்களுக்கு எதிரான திமுக என்ற நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்பட்டதா? ஸ்டாலினின் விரிவான பதில்: அதற்கு முக ஸ்டாலின் அளித்த பதில்: ”இந்தக் கேள்விக்கு நான் விரிவாகப் பதில் அளிக்க விரும்புகிறேன். ஒன்றே கடவுள், ஒருவனே தேவன் என்று அண்ணா அறிவித்து, நான் பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், தேங்காயும் உடைக்கமாட்டேன் என்றார். இந்தக் கருத்தை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பலமுறை வலியுறுத்திப் பேசியுள்ளார். ஆனால், ஒரு தரப்பினர் இந்த உண்மைகளை வேண்டுமென்றே அழுத்தி, மறைத்து, எங்களை இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும், கடவுளுக்கு எதிரானவர்கள் என்றும் வேண்டுமென்றே சித்தரிக்கிறார்கள். கடவுள் குறித்து அண்ணா பேசும்போது, பாரதியாரின் வரிகளை எடுத்துப் பேசுகையில், அறியாமையே, ஆயிரம் கடவுள்களைத் தேடுகிறது என்றார். கருணாநிதி எப்போதும், பாகுபாடு இல்லாத வகையில் அணுகக்கூடியவர். தன்னுடைய சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் ஒருபோதும் மற்றவர்கள் மீது திணிக்காதவர். கடவுள் மீதான நம்பிக்கைக்கும், மதத்தின் மீதான நம்பிக்கைக்கும் அவர் எதிரானவர் இல்லை. கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவராகக் கருணாநிதி இருந்திருந்தால், ஏன் கபாலீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைத்து, தூர்வார வேண்டும்”.

இந்துக்கள் குறித்து கருணாநிதி என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: ஸ்டாலினின் விரிவான பதில் தொடர்கிறது, “திருவண்ணாமலை கோயிலின் சிதிலமடைந்த ஒரு பகுதியை அவரே முன்வந்து ஏன் சீரமைக்க வேண்டும். 20 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த திருவாரூர் கோயில் தேரை 1969-ம் ஆண்டு ஓடவைக்க முயற்சிகள் எடுத்து, தன்னுடைய அமைச்சரவையில் இருந்த மனனி நாராயணசாமியை அந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வைத்தார். இந்துக்கள் குறித்து கருணாநிதி என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள். விவேகானந்தர் போதித்தது போல் ஒவ்வொருவரும் இந்துத்துவா கருத்துகளைப் பின்பற்றி இருந்தால் அதைக் காட்டிலும் பெரிதாக இருந்திருக்காது. நான் அதற்கு எதிரானவன் இல்லை. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையாக இருப்பதால்தான் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளித்து, அவர்களிடையே நம்பிக்கை ஏற்பட அறிவுறுத்தினோம். அதேநேரத்தில், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், அதனால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற கூற்றும் தவறானது. கடவுள் குறித்து நான் பேசும் போது, அண்ணா, கருணாநிதி கூறிய கருத்துகளை மனதில் வைத்தே பேசினேன். கடவுளுக்கு எதிராக, மதத்துக்கு எதிராக திமுக ஒருபோதும் பிரச்சாரம் செய்தது இல்லை”.

திமுகவின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகளை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் செய்யும் பிரச்சாரம்: ஸ்டாலினின் விரிவான பதில் தொடர்கிறது, “திமுகவின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகளை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற விஷமத்தனமாக திமுக கடவுளுக்கும், இந்துக்களுக்கும் எதிரான கட்சி என்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். சமூகத்தில் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் குலைக்கும் நோக்கில் நாட்டைத் துண்டாடும் எண்ணத்துடன், வகுப்புவாதத்தையும், அடிப்படை வாதத்தையும் பரப்புபவர்களுக்கு எதிராகவே திமுக பிரச்சாரம் செய்கிறது. எதிர்காலத்திலும் திமுகவின் இந்தப் பிரச்சாரம் தொடரும். பாஜக வளர்ந்து வருகிறது என்று நீங்கள் கூறியதைக் கேட்டபோதுதான் எனக்குச் சிரிப்பு வருகிறது. பாஜக வளர்கிறதா அல்லது வீழ்ச்சி அடைந்துவருகிறாதா என நடுநிலையான மக்களிடம் கேட்டால் அவர்கள் கண்டுபிடிப்பார்கள்”. இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தூஷித்துக் கொண்டே இப்படி சொல்லிக் கொண்டால், இந்துக்கள் நம்புவார்களா?: 2015ல், கும்பகோணத்தில் கோவில் பூஜாரிகளுடன் சந்திப்பை வைத்துக் கொண்ட ஸ்டாலின் அதே “தி.இந்து”வுடன் பேசும் போதும், இதே போன்ற கருத்தை சொன்னது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். திமுகவில் உள்ளவர் 90% இந்துக்கள். தனது குடும்பத்தினருக்கு தெய்வ நம்பிக்கை உள்ளது. எனது மனைவியும் கோவில்களுக்க்கு எல்லாம் சென்று வருகிறாள். அதன் குறுக்கே நான் நிற்பதில்லை. தனது பயணத்தில் முதலில் திருகோஷ்டியூர் கோவிலுக்கு சென்றாராம், ஏனெனில், அங்கு தான் ராமானுஜர் தனது குரு சொன்னதையும் கேட்காமல், கோவில் கோபுரத்தின் மீது ஏறி, தனக்குச் சொல்லிக் கொடுத்ததை உரக்க எல்லோருக்கும் தெரியும் படி சொன்னாராம்[7]. “நாங்கள் எல்லோரும் அண்ணாவைப் பின்பற்றுபவர்கள், அதன் படி திருமூலர் சொன்னபடி “ஒன்றே குலம், ஒருவனே தெய்வம்” என்பதை ஏற்றவர்கள். எங்கள் தலைவர், ராமானுஜர் டெலி–சீரியலுக்கு டயலாக் எழுதினார். ஏனெனில், அவர் எல்லோரும் கோவிலில் நுழைவதற்ற்கு வழி வகுத்தார். தேர்தல் வருவதால் கோவில்களுக்கு செல்கிறேன் என்ற வாதத்தை மறுத்து, நான் எல்லா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும், முன்னர் கூட கோவில்களுக்கு சென்றுள்ளேன், எனக்கு பூர்ண கும்பம் மரியாதை கொடுக்கப்பட்டது” கூறிக் கொண்டார்[8]. மேலும் தொடர்ந்து சொன்னது[9], “கன்னியாகுமரி மாவட்டத்தில் நமக்கு நாமே பயணத்தை துவக்கும்முன் சர்வ சமய தலைவர்களையும் நான் சந்தித்தேன். மசூதிகளுக்கும் சென்றிருக்கிறேன். வேளாங்கண்ணி ஆலயத்துக்கும் சென்றிருக்கிறேன். ஏன், திமுக தலைவர் கருணாநிதி எப்போதெல்லாம் சென்னை சைதாப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு அப்பகுதி கோயில்கள் சார்பில் சிறந்த முறையில் வரவேற்பு அளிப்பது வழக்கம்,” என்றார்[10].

ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன?: இப்படியெல்லாம் திடீரென்று செய்திகள் வரவேண்டிய அவசியம் என்னவென்று யோசிக்க வேண்டியுள்ளது. 2019-தேர்தல் நேரத்தில் இவ்வாறு அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் என்று தான், மக்கள் நினைப்பார்கள். நிச்சயமாக பொது மக்கள், திராவிட கட்சியினர் குறிப்பாக, திக-திமுக வகையறாக்களை இந்துக்களுக்கு சாதகமானவர்கள் என்று நினைக்கவே மாட்டார்கள். ஏனென்றால், ஸ்டாலினே நெற்றியில் வைத்த குங்குமத்தைத் துடைத்துப் போட்டது, மூன்று மாதங்களுல்லு முன்னர் ஶ்ரீரங்கத்தில் நெற்றியில் வைத்த சந்தனத்தை அழித்துக் கொண்டது போன்ற வேலைகளை ஸ்டாலின் செய்தது அனைவருக்கும் தெரிந்து தான் உள்ளது. அந்நிலையில், ஒருவேளை பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்ற உள்நோக்கத்துடன், ஸ்டாலின் இப்படி சொல்லியிருக்கலாம். வாஜ்பாயி காலத்தில் திமுக கூட்டு வைத்துக் கொண்டது. அத்தகைய கூட்டை 2019ல் வைத்துக் கொள்ள இப்படி பேசியிருக்கலாம். ஆனால், மக்கள் நம்புவார்களா? பிஜேபி இத்தகைய இந்துவிரோதிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ளுமா என்று பார்க்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
15-09-2019

[1] தமிழ்.இந்து, இந்துக்களுக்கும், கடவுளுக்கும் எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி, பி.கோலப்பன், Published : 24 Sep 2018 15:32 IST; Updated : 24 Sep 2018 15:32 IST
[2] https://tamil.thehindu.com/tamilnadu/article25027406.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers
[3] The Hindu, Stalin sees a bid to portray DMK as anti-God, anti-Hindu; terms it mischievous, B. Kolappan, SEPTEMBER 23, 2018 22:34 IST; UPDATED: SEPTEMBER 24, 2018 18:29 IST.
[4] https://www.thehindu.com/news/national/tamil-nadu/stalin-interview/article25022253.ece
[5] The Hindu, Bid to portray DMK as anti-Hindu mischievous, B. Kolappan, SEPTEMBER 23, 2018 22:34 IST; UPDATED: SEPTEMBER 24, 2018 18:29 IST.
[6] https://www.thehindu.com/news/national/tamil-nadu/bid-to-portray-dmk-as-anti-hindu-mischievous/article25025286.ece
[7] Stalin, who had a meeting with a team of temple priests in Kumbakonam, said he visited Thirukoshtiyur temple in the first phase of his tour because it was there Saint Ramanuja, ignoring the warning of his teacher, climbed the temple tower and spoke aloud so that everyone could know what he had been taught.
The Hindu, DMK – not anti-Hindu, B. Kolappan, October 17, 2015 00:00 IST; UPDATED: October 17, 2015 10:30 IST
[8] “We, the followers of Anna, have faith in Thirumoolar’s dictum Ontrey Kulam Oruvaney Devan (There is one community and one God). Our leader Kalaignar wrote dialogues for the tele-serial Ramanuja, because it was he who had paved way for entry of all communities, including Dalits, into the temples,” he said. Rejecting the allegation that he was visiting temples and meeting priests in view of the coming election, the DMK leader said that he respected the sentiments of all sections of people and even in the past had visited temples and accepted the poorna kumbam .
https://www.thehindu.com/news/cities/chennai/dmk-is-not-antihindu-stalin/article7772219.ece
[9] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து எதிர்ப்பு இயக்கம் அல்ல திமுக: சொல்கிறார் ஸ்டாலின், By Mayura Akilan Updated: Saturday, October 17, 2015, 13:20 [IST].
[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-not-anti-hidhu-says-stalin-237922.html
குறிச்சொற்கள்:இந்து, இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், இந்துத்துவம், இந்துவிரோதி, கனிமொழி, கருணாநிதி, கோவில் இடிப்பு, கோவில் கொள்ளை, சிலை உடைத்தல், திராவிட நாத்திகம், துர்கா, நாத்திக வாதம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், நாயக்கர், பெரியார், ராஜாத்தி, ஸ்டாலின்
அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, செக்யூலரிஸம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், நம்பிக்கை, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [1] அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ஓகஸ்ட் 11, 2018
இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், கவிதா கைது, துறைகள் மோதும் பின்னணி என்ன? [1]

அறநிலையத் துறை ஊழலுக்குத் திரும்பியது: தமிழக அரசுத் துறைகள் 1970களிலிருந்து ஓருமித்த கொள்கையுடன் செயல் பட்டு வருகின்றன. திராவிட அரசியல், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழியர்கள் என்று எல்லோருமே ஒன்றுபட்டு வேலை செய்து வருகிறனர். “முகமது பின் துக்ளக்” நாடகத்தில் சோ வசனம் போல லஞ்சம் மேலிருந்து, கீழ்வரை பட்டுவாடா செய்யப்பட்டது. சர்க்காரியா கமிஷனிடம் கூட அவர்கள் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று அறிவுருத்தப் பட்டனர். பிறகு, சர்க்காரியா கமிஷனே அசந்து விட்டது. எல்லாமே விஞ்ஞான ரீதியில் நடைப் பெற்று வருகிறது என்று சொல்லி விட்டது. இந்து அறநிலையைத் துறையினைப் பொறுத்த வரையில், அண்ணா இருந்த வரை, அப்படியும்-இப்படியுமாக ஊழலோடுத்தான் இயங்கி வந்தது. ஆனால், கருணாநிதி ஆட்சியிலிருந்து, அது நிலைநிறுத்தப் பட்டு, நிறுவனப்படுத்தப் பட்ட முறையானது. அமைதியாக கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். முதலமைச்சர்கள் நாத்திகர்களாக இருந்தது பிரச்சினை இல்லை, ஆனால், அந்த சித்தாந்தத்தினால் ஊக்குவித்து வளர்க்கப் பட்ட ஊழியர், அதிகாரிகள் தாம், இப்பொழுது, பெரிய குற்றவாளிகளாக மாறியுள்ளனர்.

கோவில்களில் வியபாரம் பெருக ஊழலோடு, மாற்றுமதத்தினர் நுழைந்தனர்: கோவில்களில், கோவில்களைச் சுற்றி கடைகள் அதிகமாகின. வியாபாரம் பெருக-பெருக போட்டி அதிகமாகியது. கட்சிக்காரர்கள் தக்கார் என்று எல்லாவற்றிலும் நுழைந்து ஊழலைப் பெருக்கினர். சொத்துக்களை குத்தகை விடும் நிலையில், அந்நிய மதத்தினரும் நுழைந்தனர். இப்படியாக 1970-2018 ஆண்டுகளில் பல வழக்குகளில் விவரங்கள் வெளியானாலும், மறைக்கப்பட்டன. பொங்கல் கண்காட்சியில், பக்தி கமழும் வகையில், பிரம்மாண்டமாக ஸ்டால் வைத்து, மக்களை மயக்கினர். அடடா, நாத்திக அரசின் கீழுள்ள அறத்துறை இப்படியா நடக்கிறது என்று “திராவிட மாயையில்” சிக்கி ஏமாந்தனர். ஆனால், அந்த கவர்ச்சியை வைத்துக் கொண்டு தான் கொள்ளையே அடிக்கப் பட்டு வருகிறது. ஸ்டால் அமைப்பதிலேயே கோடிகள் கணக்கில் கான்ட்ராக்ட் மற்றமதத்தினருக்குச் சென்றது. கும்பாபிஷேகம், கோவில் புனரமைப்பு, போன்ற விவகாரங்களில் லட்சங்கள் பெறப்படுகிறன. ஆக, இத்துறை “தெய்வீக ஊழல் துறையாக” திராவிட ஆட்சியில் இருந்து வருகிறது. இதனால், சங்கங்கள் அமைக்கப் பட்டு, ஊழலே வியாபாரமாக்கப் பட்டது. இதனால் தான் இப்பொழுது சங்கங்கள் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவதூற்றைப் பூசப்பார்க்கின்றன.

கவிதா கைது, சங்கம் அறிக்கை, துறைகள்ஃ மோதும் பின்னணி: காவல்துறை அதிகாரியாக முறையான விசாரணை நடத்தாமல் தனிப்பட்ட விளம்பரத்திற்காக வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி ஐஜி பொன் மாணிக்கவேல் அத்துமீறி நடப்பதாக அறநிலையத்துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது[1]. ஐஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக உயர் நீதிமன்றத்தால் சிறப்பாக நியமிக்கப்பட்டார்[2]. சிலை கடத்தல் பிரிவில் ஐஜி பொன் மாணிக்கவேலின் செயல்கள் காவல்துறை அதிகாரிகளே விமர்சிக்கும் வண்ணம் தனி நபர் விளம்பர வேலைகளாக அமைகிறது என்ற பிரச்சாரம் எழுந்தது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் உண்மைகளைவிட கூடுதல் தகவல் என்ற பெயரில் பல தகவல்கள் பரப்பப்பட்டன. சமீபத்தில் தமிழக அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா திடீரென கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்தது எந்த அடிப்படையில், அவருக்கு முறையாக சம்மன் அனுப்பினீர்களா? விசாரணைக்கு அழைத்தீர்களா என்று உயர் நீதீமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்ட விதம் குறித்த விமர்சனம் வைத்த அறநிலையத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்[3].

சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீதரன் [the State president of the Federation of All HR&CE Associations N.L. Sridharan] செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”சிலை கடத்தல் குறித்த வழக்குகளின் விசாரணையில் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதும், அதே சமயத்தில் தவறேதும் செய்யாத நிரபராதிகள் யாரும் கைதுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதும் கூட்டமைப்பின் கோரிக்கையாகும். இத்துறையில் நேர்மையாக தன் கடமையைச் சட்ட விதிகளின்படி நிறைவேற்றும்பொழுது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு நிலைகளில் துறை அலுவலர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கிறார்கள். கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் அடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளிப்பேன் என்று மிரட்டுகிறார்கள். இதனால் அதிகாரிகளுக்கு வேலை செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது”.

ஐஜி பொன் மாணிக்கவேல் கேட்ட தகவல்களை அறநிலையத் துறை கொடுக்க மறுத்தது: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “அறநிலையத்துறையில் நேர்மையாக செயல்பட்ட கூடுதல் ஆணையர் கவிதா மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், எந்தவித முகாந்திரமுமின்றி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைப்பற்றியும், அறநிலையத் துறைப்பற்றியும் உண்மைக்கு மாறான தகவல்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களிடையே இத்துறை மற்றும் துறை அலுவலர்கள் மீது சிலை கடத்தலுக்கு உடந்தை என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஐஜி பொன் மாணிக்கவேல் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் கோயில்களுக்கு சொந்தமான சிலைகள் குறித்த விவரங்களை புகைப்படத்துடன் அளிக்கும்படி கோரியிருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி அத்தகைய விளம்பரங்களை வழங்க இயலாது எனவும், சிலை களவு குறித்து குறிப்பான விவரங்கள் கோரப்பட்டால் அந்தச் சிலைகள் குறித்து மட்டும் விவரங்கள் வழங்கப்படும் என்று முன்னாள் ஆளுநர் தனபால் தெரிவித்தார்”.

வெளிநாட்டு மியூசியங்கள் தாங்களாகவே திரும்பிக் கொடுத்ததை, மீட்டதாக பொன் மாணிக்கவேல் கூறிக்கொண்டார்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “அதன் பின்னர் வெளிநாடுகளில் உள்ள மியூசியங்களில் கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள் தவறான தகவல் அடிப்படையில் தங்களுக்கு விற்கப்பட்டதை அறிந்து அந்த நிறுவனங்கள் தாங்களாகவே சிலைகளை ஒப்படைக்க முன் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தானே கண்டுபிடித்ததாக பொன் மாணிக்கவேல் தவறான தகவல்களை ஊடகங்களில் பரப்பினார்[4]. இதுகுறித்து பொன் மாணிக்கவேல் மீது அப்போதைய ஆளுநர் தனபால் புகார் அளித்தார். இதனால் பொன் மாணிக்கவேலுக்கு தனபால் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உருவானது[5]. இதையடுத்து பழனி தண்டாயுதபாணி கோயில் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக தனபால் மீது வழக்குப் பதிவு செய்தார். மேற்கண்ட வழக்குக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்ட அனைத்து அலுவலர்களிடமும் தனபால் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்க பொன் மாணிக்கவேல் முனைந்தார்”.

முத்தையா ஸ்தபதி விவகாரம்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “இதே போன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமஸ்கந்தர் சிலை விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முத்தையா ஸ்தபதியிடம் கூடுதல் ஆணையர் கவிதா கூறியதன் அடிப்படையில் தங்கம் வசூலிக்கப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்[6]. அப்படி அளிக்காவிட்டால், ஸ்தபதியின் மகனை விசாரணை அழைக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள்ளனர். காஞ்சிபுரம் கோயில் திருப்பணி வழக்கில் தடையாணை பெற்றதால் அவர் மீது கோபமாக இருந்த பொன் மாணிக்கவேல், உள் நோக்கத்துடம் சோமஸ்கந்தர் சிலை வழக்கில் செயல் அலுவலர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் கைது செய்துள்ளார்[7]. ஆனால் குற்றத்தை ஒப்புக்கொண்ட செயல் அலுவலரைக் கைது செய்யவில்லை”.
வேதபிரகாஷ்
08-08-2018

[1] தி.இந்து, மீறுகிறார் பொன் மாணிக்கவேல்: அறநிலையத்துறை ஊழியர்கள் புகார், Published : 06 Aug 2018 18:22 IST; Updated : 06 Aug 2018 18:22 IST.
[2] https://tamil.thehindu.com/tamilnadu/article24616050.ece
[3] தினகரன், அறநிலையத்துறை அதிகாரிகள் மீதான கைது நடவடிக்கை தொடர்ந்தால் போராட்டம் : அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை, 2018-08-07@ 02:40:22
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426302
[4] தினமணி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் எங்களை களங்கப்படுத்துகின்றனர்: இந்து சமய அறநிலைய பணியாளர்கள் குற்றச்சாட்டு, By DIN | Published on : 07th August 2018 01:29 AM |
[5]http://www.dinamani.com/tamilnadu/2018/aug/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A-2975648.html
[6] விகடன், “பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.!” – அறநிலையத்துறை சங்கங்கள் குற்றச்சாட்டு, இ.லோகேஷ்வரி, கே.ஜெரோம், Posted Date : 21:39 (06/08/2018); Last updated : 21:50 (06/08/2018).
[7] https://www.vikatan.com/news/tamilnadu/133239-ponmanikavel-is-directed-by-rss-charitable-associations.html
குறிச்சொற்கள்:அரசியல், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, ஊழல், கவிதா, கூட்டமைப்பு, சிலை, சிலை திருட்டு, சோம ஸ்கந்தர், திருமகள், பொன் மாணிக்கவேல், மாணிக்கவேல், முத்தையா, முத்தையா ஸ்தபதி, லஞ்சம், விக்கிரகம், ஶ்ரீதரன், ஸ்தபதி, Sthapathi
அரசியல், அறநிலையத் துறை, ஆகம விதி, ஆர்.எஸ்.எஸ், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், ஐம்பொன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கவிதா, சோமஸ்கந்தர், தங்கம், தனபால், திருமகள், முத்தையா, முத்தையா ஸ்தபதி, ஸ்தபதி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 26, 2016
இரட்டை உடை ஆபாச-அசிங்க-நடினமும், செக்யூலரிஸ குழப்பவாதமும், திராவிட சித்தாந்த ஆட்சியாளர்கள்-நிர்வாகிகளும்!

1960களிலிருந்து 2016 வரை திரைப்படங்கள் அவ்வாறு கேடுகெட்டது ஏன், அத்தகைய படங்களை எடுப்பது யார்?: திரைப்படங்கள் ஏற்கனவே நமது கோவிலை நல்ல விதமாக காண்பிக்கத் தவறி விட்டன.
இனி திரைப்படங்களில் கோவில்களில் காதல் பாடல்கள், நடனங்கள் இடம்பெறுவது போன்ற காட்சிகளை சென்சார் தடை செய்ய வேண்டும். ஒரு மதத்தை, ஜாதியை இழிவாக பேசுவதை ஏற்காத சென்சார் போர்டு, அந்த மதத்தின் புனிதமான கோவிலை மட்டும் காதலர்கள் மோசமான உடையில் ஆபாச நடனம் ஆடும் இடமாகவும், குத்துப்பாட்டு ஆடும் இடமாகவும் மக்களிடம் காண்பிக்க எப்படி அனுமதிக்கிறது? காளிக்கு ‘காதல் பாட்டு’, முனியாண்டிக்கு ‘முத்தப்பாட்டு’, அழகருக்கு ‘ஆபாசப் பாட்டு’ என எங்கும் சினிமா பாட்டு தான்.
|
ஏ. பி. நாகராஜன், குன்னக்குடி வைத்தியநாதன் முதலியோர் ஞாபகம் உள்ளதா? அத்தகையோர் இப்பொழுது தமிழகத்தில் ஏனில்லை? 1960களுக்குப் பிறகு என்ன நடந்தது? “கோவிகளில் டூயட்” போன்ற “ஐடியா” எப்படி, யாரிடத்திலிருந்து உருவானது? காளிக்கு ‘காதல் பாட்டு’, முனியாண்டிக்கு ‘முத்தப்பாட்டு’, அழகருக்கு ‘ஆபாசப் பாட்டு’ முதலியவற்றை இயற்றும் கவிகள், கவிக்கோக்கள், பெருங்கவிக்கோக்கள்…….யார், அவர்களுக்கு விருதுகள் கொடுத்து, கௌரவிப்பது யார்?
|
அதிலும் பள்ளி, கல்லூரி தேர்வுப்பருவத்தில் கோவில் திருவிழா என்ற பெயரில் காலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை ஆடல் பாடல் குத்தாட்ட நிகழ்ச்சியை கோவில் நிர்வாகமே செய்து கொடுப்பது தெய்வத்தை நினைக்காமல் தெருக்கூத்தையே நினைக்க வைக்கும்.

திராவிட நாத்திக அரசியலை அடையாளங்காணாமல், நடிகர்கள்–ஜாதி என்றெல்லாம் பேசுவது போலித்தனமே: முன்பெல்லாம் கோவில்களில் கட்டுப்பாடு இருந்தது [அப்படியென்றால், இப்பொழுது ஏனில்லை என்று கூறிவிட்டு தொடர வேண்டும், ஆனால், அவ்வாறு நோய் மூலம் அறியப்படவில்லை].
இன்று இருக்கும் இளைய தலைமுறை அஜித், விஜய், சூர்யா என பிரிவாக பிரிந்து தெருவுக்கு தெரு ஜாதி ரீதியில் நடிகர் பாடலும், ஜாதிப் பாடல்களும், ஜாதி தலைவருக்கு சுவரொட்டி ஓட்டுவதும், குடித்து விட்டு கோவில் திருவிழாவில் ஆடுவதை பெருமையாக நினைப்பதும் காளிக்கே பொறுக்குமா எனத் தெரியவில்லை. சிவராத்திரி அன்று கூட தெருவுக்குத் தெரு சினிமாப்பாடல்களை (பக்திப் பாடல்கள் அல்ல) ஒலிபரப்பி சிந்தனையில் சினிமாப் பாடல்கள் தான் நிற்கும் நிலை உள்ளது.
|
ஜாதிகளை ஒழிப்போம் என்று சொன்ன திராவிட சித்தாந்திகளால் ஏன் ஜாதிகளை அழிக்க முடியவில்லை? ஜாதிகளை, ஜாதி சங்கங்களைப் பெருக்கியதை அவர்கள் ஏன் தடுக்கவில்லை? “காளிக்குப் பொறுக்குமா” என்று கேட்பதை விட, அவ்வாறு ஆடும், ஆடுவதை பார்க்கும், அவர்களுக்கு காசு கொடுக்கும்….முதலியோரின் அம்மாக்கள், சகோதரிகள், மகள்கள், அத்தைகள், பெரியம்மாக்கள், பாட்டிகள் ……முதலியோர் எப்படி அமைதியாக இருக்கின்றனர்?
|

கண்ட கண்ட மேளமும் இசைப்பதை தடுக்க வேண்டும்: இதற்கும் மேலாக வாண வேடிக்கை என்று இதயம் பதற வைக்கும் வெடியுடன் திருவிழா நடத்துவார்கள். வெடி போட்டு விழா நடத்துகிறேன் என்று ஊரில் உள்ள வயதானவர்கள், பசு, நாய் விலங்கினங்கள் முடங்கும் அளவிற்கு வெடிச் சத்தமும், கண்ட கண்ட மேளமும் இசைப்பதை தடுக்க வேண்டும்.
நமது தமிழ் மண்ணுக்குரிய பாரம்பரிய இசை மட்டுமே உகந்தது. முன்பு வெடி போட்டு சாமி ஊர்வலமாக வருவதை சொன்னார்கள். இன்று சிங்கப்பூர் முருகனுக்கு விழா எடுப்பதை ஒரு நிமிட அலைபேசியில் தெரிவித்து விடுகின்றனர். பிறகு எதற்கு வீண் வெடிச்சத்தம், வெடிச் செலவு? அந்த வெடிச் செலவில் 10 மாணவர்களை படிக்க வைக்கலாமே அல்லது ஊருக்கு சுத்திகரிப்பு குடிநீர் சாதனம் அமைக்கலாமே?
|
“சப்த மாசு” விசயத்தில் இறங்கி, குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது. வெடி-வாணவேடிக்கைகள் எல்லாம் கோவில் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. உண்மையில், நீரை மாசு படுத்தியது யார் என்று தெரிந்து கொண்ட பிறகு, அதனை சுத்தக்ரிப்புப் பற்றி பேசலாம். சமூக சீரழிகளின் மூலங்களை வெளிப்படையாக சொல்லாமல், சுற்றி வளைக்கும் போக்குதான் தெரிகிறது.
|
இனி வரும் வெயில் காலத்தில் மக்களின் மன நிலையும் சூடாகவே இருக்கும். விவசாய வேலைகள் இல்லாததால் வீண் பிரச்னைகளும், மது போதைத் தகராறுகளும், சாதி ரீதியில் சண்டைகளும் அதிகமாக ஏற்படும். ஆகவே கோவில்கள் நமது ஒழுக்கத்தை மேம்படுத்தவே முன்னோர்கள் கோவிலை கொடுத்தார்கள் என்பதை மறந்து, கோவிலை பொழுது போக்கு இடமாக மாற்றியதை அரசும் வேடிக்கை பார்ப்பது கோவிலின் புனித தன்மையை அழிக்கிறது.

ஒரு மதத்தை அழிக்க மத மாற்றமோ, மத ரீதியில் பின்னடைவு நிகழ்வுகளோ தேவை இல்லை, அதிலுள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை அழித்தாலே போதும்[1]: பல ஆயிரம் வருடங்கள் புயல், மழை பார்த்த கோவில்கள், பல நூறு அந்நிய படை எடுப்பை மீறி வளர்ந்த கோவில்கள், குடி போதையால், சினிமாவால் வீழ்த்தப்படுகிறது.
ஒரு மதத்தை அழிக்க மத மாற்றமோ, மத ரீதியில் பின்னடைவு நிகழ்வுகளோ தேவை இல்லை. அந்த மதத்தில் உள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை அழித்தாலே போதும். தற்போது அந்தக் காரியம் கோவில் திருழா என்ற பெயரில் அடாவடியாக மது போதைக் கும்பலால் நடக்கிறது என்றால் மிகையாகது
|
இது வரை கொஞ்சம் பெரியாரிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் கலந்து கருத்துகளை சொல்லியப் பிறகு, இங்கு ஏதோ “ஒரு மதத்தை” ஆதரிப்பது போல எழுதுவது போலித்தனமே. முதலில், “மதத்தில் உள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை,” அழித்து வருவது யார் என்று வெளிப்படையாக சொல்லப்படவேண்டும்.
|

குழப்பவாதத்தில் வெளிப்பட்டுள்ள தீர்வு பரிந்துரைகள்: திருவிழாவில் தெய்வ அனுக்கிரகம் கூட,
1. சிறிய கோவில், பெரிய கோவில் என்றாலும் கடவுள் ஒன்றே என நினைத்து சினிமா பாடல், ஜாதிப்பாடல், ஜாதி ரீதியான சுவரொட்டிகள் இல்லாத கோவில் திருவிழா வேண்டும்.
2. அசைவ உணவு இல்லாமல் இருக்க வேண்டும்.
3. பொது இடங்களில் புகை பிடிக்க, மது அருந்த தடை இருப்பது போல, பொதுக்காரியங்களில் மது குடித்து விட்டு வருவோருக்கு கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதியில்லை என்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
4. திருவிழா நேரங்களில் உள்ளூர் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளித்து மக்களின் குடிபோதைக்கு விடுமுறை தர வேண்டும்.
5. வான வேடிக்கை, அதிக சத்தம் தரும் வெடிகள், காது கிழியும் கேரளா போன்ற மேளத்திற்கு தடை வேண்டும்.
|
1. கடவுளே இல்லை, இந்து கடவுளே இல்லை என்று அறிவித்து தானே, இவையெல்லாம் நடக்கின்றன. “பராசக்தி”யில் ஆரம்பித்தது, இவ்வாறு விரிந்துள்ளது.
2. பசுக்கறி சாப்பிடும் விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் போது, இது கிண்டலா, கேலியா என்று தெரியவில்லை!
3. அது தான், கோவில் “பொது இடம்” என்று அறிவித்து விட்டதால், கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்களே? அவர்கள் தானே இப்பொழுது தக்கார், தர்மகர்த்தா என்றெல்லாம் பதவிகளில் இருந்து கொண்டு, இத்தகைய “கொண்டாட்டங்களை” நடத்துகின்றனர்!
4. பாவம், உண்ணாவிரதத்திற்கு, எதிராக உண்ணும் விரதம் கொண்டாட்டம் நடத்தப்படும் தமிழக்த்தில், அப்படியே விடுமுறை அளித்தாலும், சரக்கடிக்காமலா இருப்பார்கள்?
5. இதெல்லாம், தீபாவளி வேண்டாம் போன்ற, போலித்தனமான வாதங்கள் தாம்.
|
‘டங்கா மாரி’ இனி அடங்கட்டும். …மாரியம்மன் மனம் குளிரட்டும்..![2], என்று முடித்திருக்கும் போது, இந்து மதம் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு வெளிப்படுகிறது. எஸ். அசோக் நல்ல கருத்துகளை பதிவு செய்ய ஆசைப்பட்டாலும், குழப்புவாதத்தால், “கிச்சடி” சித்தாந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
© வேதபிரகாஷ்
26-11-2016

[1] விகடன், மாரியம்மனுக்கும் ‘டங்கா மாரியா‘?, எஸ்.அசோக், Posted Date : 15:43 (06/04/2015), Last updated : 16:00 (06/04/2015)
http://www.vikatan.com/news/vasagar-pakkam/44753.art
[2] http://www.vikatan.com/news/vasagar-pakkam/44753.art
குறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அசிங்கம், அரசியல், ஆபாச கரகம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், கரகாட்டம், குத்தாட்டம், கோவில் நடனம், சினிமா, செக்ஸ் ஆட்டம், டங்கா மாரா, தப்பட்டை, தாரை, திருவிழா நடனம், நடனம், பெண்கள், மூட நம்பிக்கை
அசிங்க கரகாட்டம், அசிங்க நடனம், அசிங்கம், அதிமுக, அரசியல், ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, கரகம், கரகாட்டம், கருணாநிதி, குத்தாட்டம், கூத்து, கோவில் குத்தாட்டம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், செக்யூலரிஸம், செக்ஸ், டாஸ்மார்க், தடை, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், நடனம், பகுத்தறிவு, புகார், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்ரெம்பர் 2, 2015
கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்துள்ளதாக சொல்லிக் கொண்ட யு.ஆர்.அனந்தமூர்த்தியும், அதனை திரும்பச் சொன்ன கல்பர்கியும்: உண்மையான நாத்திகமா, மரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா – கொலைகளில் முடியும் நிலைகள் (2)

dhabolkar-pansare-kalburgi
பசவேஸ்வரைப் பற்றி அவதூறாக எழுதிய கல்பர்கி: பவவேஸ்வரைப் பற்றியும் அவதூறாக எழுதியதால், அந்த சமூகத்தினர் இவர் மீது கோபம் கொண்டனர். பசவேஸ்வரர் அவரது சகோதரிக்கும், ஒரு செக்கிலியனுக்கும் பிறந்தவர் என்று எழுதினார். இன்னொருஇடத்தில், பசவேஸ்வரர் மற்றும் அவருடைய மனைவி இருவரிடையே இருந்த உறவுமுறையப் பற்றி கேள்விகளை எழுப்பினார்[1]. இதனால் எதிர்ப்பு கிளம்பியதால், அத்தகைய வரிகளை தனது புத்தகத்திலிருந்து நீக்கியதோடு, இனிமேல் லிங்காயத் கலச்சாரத்தை பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும் எழுதமாட்டேன் என்று தீர்மானித்துக் கொண்டார். 2014ல் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதா கொண்டுவரவது பற்றிய விவாதத்தின் போது, கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வது சரிதான், ஏனெனில், அதற்கு எந்த தண்டனையும் கிடைக்காது. யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதியதைக் குறிப்பிட்டு, அவர் சிறுவயதில் தான் அவ்வாறு கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டதை எடுத்துக் காட்டினார்[2]. இதனால் அவ்விருவர் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டது (The police filed cases under sections 295A and 298 of the Indian Penal Code against both writers). அவ்வாறு அவர் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசினார்[3]. கல்புர்கியின் கொலை தொடர்பாக அவரது மகள் ரூபா தர்ஷி குற்றம் சாட்டுகிறாரே, தனது தந்தை இவ்வாறெல்லாம் எழுதுவது, பேசுவது நாகரிகமாக இருந்ததா, இல்லையா என்று யோசித்துப் பார்க்கவில்லையா?

Basava – honoured and defamed
அவதூறாக எழுதியதால் முன்னர் சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே மற்றும் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டது: பிப்ரவரி மாதம் 2015ல் சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே என்பவர், “சிவாஜி கோன் ஹோதா” என்ற தலைப்பில், மஹாராஷ்ட்ர வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் அவதூறாக எழுதியதால், அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்[4]. ஆகஸ்ட்.2013ல் மஹாராஷ்ட்ராவின் “அந்தசிரத்த நிர்மூலன் சமிதி” என்ற மூடநம்பிக்கை அழிப்பு சமிதி என்ற இயக்கத்தைத் துவக்கியவரான நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார்[5]. சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே மற்றும் நரேந்திர தபோல்கர் முதலியோரும், அவதூறான விசயங்களை பேசியதற்காகவும், எழுதியதற்ற்காகவும் கொல்லப்பட்டனர் என்று ஊடகங்கள் கூறின. ஆனால், அவர்கள் ஏன் செக்யூலரிஸ ரீதியில் நடந்து கொள்ளவில்லை என்பதுதான் வியப்பாக உள்ளது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு, ஆனால், ஒருவரது கருத்து சுதந்திரம், இன்னொருவரது கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடாது என்றும் உள்ளது. ஆனால், நாத்திகம், பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பழமைவாத-எதிர்ப்பு, முதலியவற்றையெல்லாம் எதிர்க்கிறேன் என்று கருத்து சுதந்திர சித்தாந்தவாதிகள் ஏன் செக்யூலரிஸத்தை தமது அறிவிவெளிப்படலுக்கு, ஞானப்பீறிடலுக்கு, அந்தரந்தங்களுக்கு உபயோகிக்கவில்லை?

Pansare defaming Sivaji with ideology
யு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி விக்கிரங்களின் மீது, படங்களின் மீது மூத்திரம் பெய்தால், பெய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா?: யு.ஆர்.அனந்தமூர்த்தி கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டபோது, இந்துக்கள் அல்லாதவர்கள் கோபப்படவில்லை. அவரது கிறிஸ்தவ மனைவி எஸ்தரும் கண்டுகொள்ளவில்லை. கிருத்துவத்திலும் விக்கிரகங்கள் உள்ளனவே, அவர்கள் வருத்தப்படுவார்கள், கோபப்படுவார்கள் என்று எச்சரிக்கவில்லை, கண்டிக்கவில்லை. கல்பர்கி அதனை திரும்பச் சொன்ன போது, அவரது மனைவி மற்றும் மகளுக்கு செக்யூலரிஸ ரீதியில் பேசுங்களேன் என்று சொல்லவில்லை. ஒருவேளை யு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி விக்கிரங்களின் மீது, படங்களின் மீது மூத்திரம் பெய்தால், பெய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏன் சொல்லவில்லை என்று தெரியவில்லை. அதாவது, இதெல்லாம் இந்துமத நம்பிக்கைக்களுக்கு எதிரானது, என்று செக்யூலரிஸ பழங்கள் அமைதியாக மூடிக்கொண்டிருந்தன என்றாகிறது. அப்படியென்றால், சர்ச்சுகளில் விக்கிரங்கள் உடைக்கப் பட்டன என்று ஊளையிட்டனவே ஏன்? அப்பொழுது, அந்த விக்கிரங்களும் எந்த தண்டனையும் கொடுக்கவில்லையே? ஏசு, சோசப், மேரி என்று எல்லா கடவுளர்களும் காப்பாற்றுவார்கள் என்றால், ஏன் ஊளையிட்டு வழக்கு தொடர்ந்தார்கள்? உண்மையான நாத்திகமா, மரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா என்று யாரும் அலசிப்பார்க்கவில்லை? அப்படி நடுநிலையோடு, உண்மையான அறிவிஜீவித்தனத்துடன் சீர்தூக்கிப் பார்த்திருந்தால், கொலைகளில் முடிந்துள்ள நிலைகள் உருவாகிருக்காது, உயிர்களும் எடுக்கப்பட்டிருக்க மாட்டாது.

End of reason – Kalburgi, Dabholkar and Pansare
மரணதண்டனை கூடாது என்று வாதிடுபவர்கள், மரணத்தை ஏற்படுத்தவர்களால் மரணித்தவர்களப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அதாவது உயிர் எடுப்பவர்களைப் பற்றி ஆதரித்து பேசுவர்கள், அவர்களால் உயிர் எடுக்கப்பட்டவர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. இங்கும், கருத்தைச் சொல்லியவர்களுக்கு எதிராக கருத்தைச் சொல்லலாமே என்று கூட யாடும் வாதத்தை வைக்கவில்லை. ஆனால், ஒருவேளை அவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தால், அது தனிமனிதர்களின் மீது துவேசத்தை வெளிக்காட்டிய நிலையாக, அவதூறு பேசிய-உண்டாக்கிய நிலையாகத்தான் மாறியிருக்கும். பிள்ளையார் சிலைகளை உடைத்த பெரியாரின் சிலையை உடைக்கிறேன் என்றால், அது பெரியப் பிரச்சினையாகிறது. இதில் என்ன தத்துவ கோளாறு, சித்தாந்த வேற்றுமை, தர்க்க-முரண்பாடு உள்ளது என்று தெரியவில்லை. அதுபோலவே, விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதால், அவைகளால் எந்த தண்டனையும் கொடுக்க முடியாது என்று ஆர்பரித்தவர்கள், தங்களைக் காத்துக் கொள்ள போலீஸாரைத்தான் தேடியுள்ளனர். அவதூறாக பேசியதைக் கண்டித்தவர்களும் போலீஸாரிடம் தான் சென்ருள்ளனர். புகார் கொடுத்தனர். பிறகு போலீஸார் தான் எல்லோரையும் விட பெரியவர்களா? இந்த நாத்திகர்களை, பகுத்தறிவாளிகளை, மூடநம்பிக்கை எதிர்ப்பாளிகளை ஏம் அவர்களாளேயோ அல்லது அவர்களது சித்தாந்த நாயகர்களாலேயோ காப்பாற்ற முடியவில்லை?
© வேதபிரகாஷ்
02-09-2015
[1] According to The Indian Express, “(h)is exploration of the life and relationships of patron saint of the Lingayat community Basavanna had attracted the ire of radicals in the community”.
The report goes on to quote senior journalist Subash Hugar who highlighted that “(in)one of the articles, he wrote that Channabasava, who is also a Lingayat seer, was born from a relationship between Basavanna’s sister and a cobbler. In another, he raised questions over Basavanna’s relationship with his wife”.
http://indianexpress.com/article/india/india-others/ex-vc-m-m-kalaburgi-who-had-run-ins-with-hardliners-shot/
[2] More recently, in 2014, Dr Kalburgi walked into a controversy while speaking on a proposed anti-superstition bill in Bengaluru where he claimed that it is alright to urinate on the idols of gods and that there would be no retribution. He referred to a piece of work by Kannada Jnanpith award-winning writer U R Ananthamurthy, who claimed to have urinated on idols of gods as a child. The police filed cases under sections 295A and 298 of the Indian Penal Code against both writers.
http://indianexpress.com/article/india/india-others/ex-vc-m-m-kalaburgi-who-had-run-ins-with-hardliners-shot/
[3] http://www.firstpost.com/india/heres-what-we-know-about-slain-rationalist-mm-kalburgi-2414654.html
[4] In February this year, CPI leader Govind Pansare — whose biography of Shivaji titled Shivaji Kon Hota riled a handful of groups in Maharashtra — was killed after two unknown assailants fired at him and his wife in front of their house in Kolhapur district.
http://www.firstpost.com/india/heres-what-we-know-about-slain-rationalist-mm-kalburgi-2414654.html
[5] Narendra Dabholkar, the founder-president of Maharashtra-based Andhashraddha Nirmoolan Samiti — an organisation set up to eradicate superstition, was killed in August 2013, but his killers remain at large.
http://www.firstpost.com/india/heres-what-we-know-about-slain-rationalist-mm-kalburgi-2414654.html
குறிச்சொற்கள்:அனந்தமூர்த்தி, ஆராய்ச்சியாளர்கள், இந்திய நாகரிகம், இந்தியவியல், இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து முன்னணி, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, ஊடகக்காரர்கள், கல்பர்கி, கோவிந்த பன்ஸரே, திராவிட நாத்திகம், நரேந்திர தபோல்கர், நாத்திகம், பகுத்தறிவு
அனந்தமூர்த்தி, அவதூறு செயல்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, கம்யூனிஸ்ட், கருணாநிதி, கல்பர்கி, காங்கிரஸ், கோவிந்த பன்ஸரே, நரேந்திர தபோல்கர், நாத்திகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »