Archive for the ‘கம்யூனிஸ்ட்’ Category
ஜூலை 13, 2020
தேவையில்லாமல், திராவிடத்துவம் மற்றும் இந்துத்துவம் இடையில் சிக்கிக் கொண்ட பார்ப்பனியம்!

மாரிதாஸின் பதிவுகளை ஆதரிக்க வேண்டும் என்று ஒரே நச்சரிப்பு. கேட்டுப் பாருங்கள் என்று இன்-பாக்ஸில் தொந்தரவு, சரி என்று மிக கவனமாக பார்க்க / கேட்க ஆரம்பித்தேன். முன்பே, தவறுகள் இருந்தபோது சுட்டிக் காட்டி இருக்கிறேன், ஆனால், எந்த பதிலும் இல்லை. ஒரு வழி பாதைப் போன்று சென்று கொண்டிருந்தது. அதனால், கீழ் கண்ட படிவு செய்தேன்:
- மாரிதாஸின் மாணவர்கள் புரிந்து கொள்வது எப்படி என்று வீடியோ போடும் யுக்தி, ஏன் இந்துத்துவ வாதிகளுக்கு என்று போடக் கூடாது?
- இவர் செய்யும், எதிர் ஆலோசனை [Negative suggestion], எதிர்வினை பிரச்சாரம் [negative propaganda] முறைகள் மாணவர்களுக்குத் தேவையில்லை!
- டெலி-சீரியல்கள் பார்க்கும் ரீடியில் உள்ள இவை நிச்சயமாக மாணவர்களுக்குத் தேவையில்லை! அந்நேரத்தில் உருப்படியாக படிக்கலாம்!
- அக்டோபர் 2017ல் ஆரம்பித்ததால் மாணவர்களுக்கு என்ன பலன் இந்துத்துவ வாதிகளுக்கு அல்லது பிஜேபிக்கு என்ன பலன் ஏற்பட்டது?
- ஏற்கெனவே உள்ள விசயங்களைத் தொகுத்து வீடியோ போடுவதால் இந்த்துத்துவ வாதிகள், திராவிடத்துவ வாதிகளை விட சிறந்து விட்டார்களா?
- தமிழகத்தில் அத்தகைய பிரச்சாரம் எடுபடவில்லை, சட்டரீதியிலும் சிறக்கவில்லை, மாறாக வைகோ எம்பி ஆனது தான் நிதர்சனம்!
- இப்பொழுது மாணவர்களுக்குத் தேவை படிப்பு, படிப்பில் தேர்ச்சி, தேர்ச்சியில் அதிக மதிப்பெண், வேலை, திருமணம், வாழ்க்கையில் செட்டில் ஆவது!
- சித்தாந்தம், சித்தாந்த மறுப்பு, சிந்தாந்த கண்டனம் முதலியன பிஜேபி-கார்ட் ஹோல்டர்களுக்குத் தேவை, மாணவர்களுக்கு அல்ல!
- தமிழகத்தைப் பொறுத்த வரையில், புரையோடியிருக்கும் ஊழலை ஒழிக்க வேண்டும், அதுதான், எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறது!
- ஊழலை எதிர்த்து பிரச்சாரம் செய்யாமல், சமசரம் செய்து கொண்டு, மாணவர்களை குறி வைப்பது வியாபாரமே தவிர, அவர்களுக்கு நல்லது செய்வதல்ல!
வேதபிரகாஷ்
13-07-2019

வேண்டிய நண்பர்கள் இப்படி கருத்தைத் தெரிவித்தனர்: என்னுடைய கருத்திற்கு, ஆதரித்தும், எதிரித்தும் இவ்வாறு பதில்கள் வந்தன:
- பிரச்சாரம் செய்வது அனைவருக்காகவும் தான். குறிப்பாக இளைய சமுதாயமான இளைஞர்கள் தெரிந்து கொள்வதில் நீண்டகால பயனளிக்கும் திட்டம். இதில் என்ன தவறு? யாராவது பூனைக்கு மணிகட்ட வேண்டும். தைரியமாக மாரிதாஸ் கட்டுகிறார். இதையும் குறை கூறினால் என்ன செய்வது?
- மாணவர்களை தவறாக வழிநடத்த ஒரு வெறிநாய் கூட்டம் அலையும் போது நல்வழிகாட்டுவது தவறில்லை என்பது மட்டுமல்ல தற்போதைய தேவையும் என்பதே என் கருத்து. மேலும் மாரிதாஸ் கூறுவது அனைவருக்குமே தான்.
- மாணவ பருவத்தில் அரசியலில் ஈடுபடுவதே தவறு. அவர்கள் பாட சிலபஸ்ஸில் ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு பிறகு அரசியலை ஒரு பாடமாக வைக்கலாம். கல்வி கூடங்களில் மாணவர் சங்கம் என்பதை தவிர்க்க வேண்டும். காரணம் அதில் அரசியல் கட்சிகள் தலையீடு இருக்கிறது. பெற்றோர் – ஆசிரியர் சங்கம் இருப்பதுபோல் மாணவர் – ஆசிரியர் சங்கம் இருக்கலாம். அதில் மாணவர்களின் representatives இருக்கலாமே தவிர தலைவர் என்றும் செயலர் என்றும் இருக்ககூடாது. இது ரவுடி மாணவர்கள் உருவாவது தடுக்கப் படும் மற்றும் ஒழுக்கம் இருக்கும்.
- நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் உறுப்பினராகி தீவிரமாக ஈடுபடுதல் தேவையில்லை.
ஒரு பெண்மணி கூட தினமும், எல்லா விவகாரங்கள் பற்றி வீடியோ போட்டு வருகிறார். ஆனால், அவர் தா பிஜேபி என்று ஒப்புக் கொண்டார். அதோடு, அதை விட்டு விட்டேன். ஏனெனில், அரசியல் ரீதியில் செல்லும் போது, இவ்விவகாரங்களில் நுழைய எனக்கு விருப்பமில்லை.

மாரிதாஸ் தாக்குதலுக்கும், திக–திமுக–கம்யூனிஸ்டுகள் தாக்குதல்களுக்கும் என்ன சம்பந்தம்?: இப்பொழுது, மாரிதாஸ் வீடியோக்களை மையமாக வைத்துக் கொண்டு, திக-திமுக-கம்யூனிஸ்ட் மற்ற உதிரிகள், இந்துமதத்தை தாக்க ஆரம்பித்துள்ளனர். அது அப்படியே பார்ப்பன எதிர்ப்பு என்ற ரீதியில் திரும்பியுள்ளது. “இந்து மக்கள் எங்கள் மக்கள் அதில் எந்த சிக்கலும் இல்லை, திராவிடம் என்ற போர்வாளை எடுப்போம், பார்ப்பனீயத்தை வேருடன் அறுப்போம்,” என்று சுப.வீரப் பாண்டியன் சொல்லும் போது, தாக்கப் பாடுவது, தாக்கப் படப் போவது எது? பார்ப்பனீயம், பிராமணியம் ஒன்றா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
- பார்ப்பனியம் என்றால் என்ன? என்று அகமது பக்ரூதீன், மாநில அமைப்புச் செயலாளர் விசிக! விளக்க வேண்டிய அவசியம் என்ன?
- அப்படியென்றால், ஏதோ ஒரு பார்ப்பான் அல்லது பிராமணன், இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமா?
- இந்துக்கள், இந்துக்களின் உரிமைகளை பார்பனீயம் பறித்துள்ளது என்ற சுப.வீரபாண்டியனின் கண்டிபிடிப்பு!
- இதற்கு, இந்துத்துவம் பார்ப்பனீயர்களின் உரிமைகளை பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா இல்லை, பார்பனீயத்தின் உரிமைகளை இந்துத்துவம் பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா?
- சம்பூகன் கட்டுக்கதையை இந்துத்துவ வாதிகள் உண்மை என்று வாதிக்கின்றனர், தீனிப் போட்டு வருகின்றனர்! எச்சரித்தும் கேட்கவில்லை! சுப.வீரப்பாண்டியன் போன்ற
- பஸ்மாசுரர்கள் கைவைத்துள்ளனர்! ஆக சூட்டை உணர்வது இந்துக்களா, இந்துத்துவ வாதிகளா, பார்ப்பனர்களா, பிராமணர்களா? யார் யார்?

மாரிதாஸ் தாக்குதலுக்கும், பார்ப்பன் – பிராமண தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம்?: அரசியல் ரீதியாக, மாரிதாஸுக்கும் திக-திமுக-கம்யூனிஸ்டுகள்-பெரியாரிஸ்டுகள்-அம்பேத்கரைட்டுகள் முதலியோருக்கும் சச்சரவு என்றால், அதில் பார்ப்பனர்-பிராமணர் என்று சொல்லிக் கொண்டு அவர்களது தலைகளை உருட்டுவதேன்?
- 1930களில் பிரமாணர் அல்லாத இயக்கம்,
- 1940களில் பிராமண எதிர்ப்பாகி,
- 1950களில் பார்ப்பன துவேசமாகி,
- 1960களில் பூணூல்கள் அறுக்கப் பட்டு,
- 1970களில் வார்த்தைத் தீவிரவாதங்களில் வறுக்கப் பட்டு,
- 1980களில் அடிக்கப் பட்டு
- 1990களில் வெட்டப் பட்டு,
- 2000களில் அசிங்கப் படுத்தப் பட்டு.
- 2010களில் பன்றிக்கு பூணூல், பூணூல் அறுப்பு முதலியவையாகி
- 2020களில், மறுபடியும் வேரறுப்போம் என்று முடிந்துள்ளது.

பிராமணர்களுக்கு எச்சரிக்கை: இப்படி பேசப்படும்போது, பிராமணர்கள் தாக்கப்படுவது நோக்கத்தக்கது.
- ஆகவே, முன்பே குறிப்பிட்டபடி, இதனால் மறுபடியும் சில குடுமிகள், பூணூல்கள் அறுக்கப்படலாம்.
- அயோத்யா மண்டபத்தின் பிராமணர்கள் தாக்கப்படலாம் அல்லது மீது பெட்ரோல் குண்டு எரியப்படலாம்.
- ராகவேந்திர மடங்களில் விக்கிரங்கள் உடைக்கப் படலாம்.
- அவர்களும் பேச்சிற்கு திகவினருக்குப் பதிலாக பெரியார்-திக என்று யாரையாவது கைது செய்து விஷயத்தை அமுக்கிவிடலாம்.

ஆனால், உலகத்தில், இப்படி பிராமணர்கள், “பிராமணர்கள்” என்ற ஒரே காரணத்திற்காக திட்டப்படுவது, அவமானம் செய்யப்படுவது, தாக்கப் படுவது, பெண்கள் இழிவுப் படுத்தபடுவது, ஊடகங்கள் கேவலப்படுத்துவது, ஆட்சியளர்கள், அதுவும் முதல் மந்திரி, மற்றவர்கள் அவதூறு பேசுவது போன்றவை, வேறெங்கும் நடக்காது என்பது நிச்சயமே. ஆகவே, ஏன் பிராமணர்கள் இவ்வாறுத் தாக்கபடுகிறர்கள்? அவ்வாறு தாக்குபவர்களின் மனோநிலை என்ன? மனோதத்துவம் என்ன? இல்லையென்ற பிறகும், இருக்கிறது என்று இனவெறியை மனத்தில் ஏற்றிக் கொண்டு, “பார்ப்பனீயத்தை எதிர்ப்போம்” என்ற சித்தாந்தத்தின் முகமூடியில் ஜாதிவெறியை வைத்துக் கொண்டு இவ்வாறு உலா வருவது ஏன்?
© வேதபிரகாஷ்
13-07-2010

குறிச்சொற்கள்:இந்து, இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துத்துவம், இந்துமதம், பாஜக, பாரதிய ஜனதா கட்சி, பார்ப்பனன், பார்ப்பனர், பார்ப்பான், பிஜேபி, பிராமணத் துவேஷம், பிராமணர், பிராமணாள், பிராமணீயம், மாரிதாஸ், வீடியோ
ஆன்மீகம், ஆன்மீகம்., இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மக்கள் கட்சி, இந்து மாநாடு, இந்து முன்னணி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்கள், இந்துக்கள் ஐக்கியம், எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கம்யூனிஸ்ட், கரு.பழனியப்பன், சங்கம், சங்கரச்சாரி, சங்கராச்சாரியார் சுவாமி, சமூகத் தீவிரவாதம், சம்புகன், சம்பூகன், சாரதா பீடம், சிங்வி, சித்தர்கள், சிவன், சிவன் கோவில், சிவம், சுகி சிவம், சோனியா, சோமன், திக, திட்டம், திமுக, திராவிட தீவிரவாதம், திராவிட நாத்திகம், திராவிடம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பாப்பான், பாரதிய ஜனதா கட்சி, பார்ப்பான், பிஜேபி, பிஜேபி நகரத்தலைவர், பிஜேபிகாரன், பிராமணாள், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பேச்சாளர், பேச்சு, மாரிதாஸ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூன் 30, 2020
ராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன்? இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன? [2]

ஜைன–பௌத்த ராமாயணங்கள் மற்றும் சூப்பனகையின் மகன் சம்புகன்: ஜைன ராமாயணங்களில் மூன்று வகைகள் / புரட்டி மாற்றிய வடிவங்களில் உள்ளன[1].
- விமலசூரி (3rd century BCE and 4th century CE).
- குணபத்ரன் (fl. fourth century CE)
- சம்கதாசன் (fl. fifth century CE)
என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, ராமாயணங்களை பாலி, சமஸ்கிருதம், அப்பிரம்ஸா மொழிகளில் எழுதி வைத்தனர். இவையெல்லாமே, “விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா” பாணியில் எழுதப் பட்டவை. ராமனுடைய எதிரிகளான ராவணன், வாலி எல்லோருமே ஜைனர்கள். லக்ஷ்மணன் தான் ஹீரோ, ராமனின் சகோதரி சீதை என்றுதான் உள்ளன. இன்னொரு ஜைன ராமாயணத்தில், ராவணனின் மகள் சீதை என்ற கதையும் எழுதி வைத்தனர். கௌசிக ராமாயணத்தில் வரும் சம்புகனை, லக்ஷ்மணன் கொல்கிறான். அவன் சூப்பணகையின் மகனாக சித்தரிக்கப் படுகிறான். அவன், ஒரு சக்தி வாய்ந்த கத்தியைப் பெற, தலைகீழாகத் தொங்கி தவம் செய்வது போல சித்தரிக்கப் படுகிறான்[2]. இங்கு, இந்த சம்புகனைக் கொல்வது லக்ஷ்மணன், ராமன் இல்லை. ஏனெனில், ஜைன ராமாயணத்தில், ஹீரோ லக்ஷ்மணன் தான். சீதை ராமனுக்கு சகோதரி. ஆக இப்படி 300[3], 3000 ராமாயணங்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். ஆக, ஒன்றொன்றிற்கும், விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. இந்துக்கள் இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அதனால் தான் “சம்புக வதம்” என்று நாடகங்கள்[4], நடத்தினாலும், வெகுஜன மக்களின் மீது எந்த தாக்கமும் இல்லை. அதாவது, அவை பொய் என்பதால், கண்டு கொள்வதில்லை. 1987க்குப் பிறகு, இப்பொழுது 2020ல் ராமாயணத்தை மறுபடியும் தொலைக்காட்சியில் காட்டினால், கோடிக்கணக்கில் மக்கள் குடும்பத்துடன் கண்டு களிக்கின்றனர். அமெரிக்க பல்கலைக் கழகங்களில் இருந்து, ஆராய்ச்சி செய்கிறேன் என்று, புத்தகங்களை வெளியிட்டுபவர்கள், முதலில், இவ்வுண்மையினை அறியவேண்டும்..

பிராமண, ஜைன, பௌத்த மடாலயங்கள்-ஆஸ்ரமங்களின் வேறுபாடு: ஜைன-பௌத்தர்கள் உடலுடன் நிர்வாணம் / நிரியாணம் அடைய முயன்றுள்ளனர். அதற்க்காக, மந்திர-தந்திர-யந்திர முறைகளில், “வஜ்ராயன தந்திரம்”, “வாமாசாரம்” போன்ற யுக்திகளைக் கையாண்டுள்ளனர். அவற்றில் தான், இவ்வாறாக, தலைகீழாகத் தொங்கி தவம் செய்தல், யாகம் செய்தல், தலையை அறுத்து பலி கொடுத்தல், போன்றவை விளக்கப் படுகின்றன. விக்கிரமாதித்தியன் போன்ற கதைகளில் காளிக்கு பலி கொடுக்கும் மந்திரவாதியைக் கவனித்திருக்கலாம். ஜைன ஓலைச்சுவடிகள், சித்திரங்கள் மற்றும் புத்தகங்களில் இத்தகைய “தலைக்கீழ் முறை” யுக்திகள் விளக்கப் பட்டிருக்கின்றன. “விருக்ஷாஸன” என்று ஜைனத்தில் ஒரு ஆசனம் உள்ளது. ஆனால், வேதங்களில் அத்தகைய முறைகள் இல்லை. பிராமணர்களின் தொழில் படிப்பது-படிக்கவிப்பது என்றிருந்ததால், நூல்கள், பள்ளிகள் / ஆஸ்ரமங்க்கள் முதலியவற்றை அவர்கள் நடத்தி வந்தார்கள். பிராமணர்களிடம் சத்திரியர்கள் கல்வி கற்க அனுப்பப் படுவதை இதிகாசம்-புராணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், ஜைன-பௌத்த கல்விகூடங்கள், மடங்கள், விஹாரங்கள் தோன்றியபோது, அவை தொலைவில், மலைப்பகுதிகளில் செயல்பட்டன. திகம்பர ஜைனர்கள் தனியாக வாழ்ந்தனர். பௌத்தர்களின் மடாலயங்களும் அவ்வாறே செயல்பட்டன. மந்த்ரகா த போஸ் என்ற ஆராய்ச்சியாளர், தான் இதுவரை, ராமன் வாலி மற்றும் சம்புகனைக் கொன்றது போன்ற சித்திரம் / ஓவியத்தை பார்க்கவில்லை என்கிறார். 17ம் நூற்றாண்டு பாரசீக ஓவியத்தில்காணப்படுவதால், அத்தகைய பிரதிபலிப்பு பிறகு உண்டாகியிருக்க வேண்டும்.

சம்புகனை ராமர் கொன்றார்– கட்டுக்கதை, பரப்பும் விதம்: ஆனால், இவற்றையெல்லாம் விடுத்து, மறைத்து இன்றும் கீழ்கண்டவை நடந்து வருகின்றன:
- கட்டுக்கதை என்று தெரிந்தும், “ராமன் சம்புகனைக் கொன்றான்” கதையை, இந்துவிரோதிகள் அவ்வப்போது, அவிழ்த்து விடுவர், விடுகின்றனர்!
- வால்மீகி ராமாயணத்தில், இல்லை, அது இடைச்செருகல் என்று பற்பல சரித்திராசிரியர்கள், பண்டிதர்கள் எடுத்துக் காட்டினாலும் அது தொடர்கிறது.
- சம்புகன் தலைகீழாகத் தொங்கி கொண்டு தவம் செய்தான், யாகம் செய்தான், வித்தைக் காட்டினான் என்றெல்லாம் புனைவுகள்!
- அதுமட்டுமல்ல, அப்படியே அதே தேகத்துடன் சுவர்க்கத்திற்கு போக வேண்டும் என்று தவத்தை / யாகத்தை ஆரம்பித்தான், என்று சொல்லிக் கொள்கிறான்!
- அப்படியெல்லாம் செய்யப் படும் தவங்கள் வேதங்களில் இல்லையே, எந்த பிராம்மணனும் பார்ப்பானும் செய்ததில்லை, இன்றும் செய்வதில்லையே?
- பிறகு சம்புகன் அதை யாரிடமிருந்துக் கற்றுக் கொண்டான்? ஜைன-பௌத்த தந்திரங்களில் அத்தகைய கடின யுக்திகள் உள்ளன!
- ஆக, ஜைனர்கள் எப்படி ராமாயாணத்தை தலைகிழாக்கி “ஜைன ராமாயணத்தைப்” புனைந்தனறோ, அதே போல பௌத்தர்கள் செய்த வினைதான் இது!
- விஸ்வாமித்திரர் அவ்வாறு பிடிவாதமாக முயற்சித்தது, க்ஷத்திரிய-பிரமாண மோதலை, வெறுப்பை வெளிப்படுத்த புனைந்தது.
- சம்புகன் ராமன் புனைவு க்ஷத்திரிய-சூத்திர மோதலில் வெளிப்பாடாக்கியது, விக்ரம்-வேதாளக் கதைகளில் சுருண்டது!
- ஏனெனில் ராமர்- குஹன், சபரி, அனுமன், விபீஷணன் என்று எல்லோரிடத்திலும் அன்பாக இருந்தார். அதாவது, எஸ்.டி மற்று எஸ்.சிக்களின் விடுதலை வீரர்!
- ஆக, சம்புகனை ராமன் ஏற்கவில்லை என்பது ஒவ்வாதது, பௌத்தர்கள் விஷமத் தனம் – இடைசெருகல் செய்தும் மாட்டிக் கொண்டனர்!
- விஸ்வாமித்திரர்-சம்புகன்-விக்கிரமதி்த்தன் கதைகள், தலைகீழாக தொங்கும் விவகாரங்கள் தான். “தலைகீழ் தொங்கல்” வேலை தொடர்கிறது!
© வேதபிரகாஷ்
29-06-2020

[1] The story of Rama in Jainism can be broadly classified into three groups; Samghadasa’s version, Vimalsuri’s version and Gunabhadra’s version.
Vimalsuri’s version
Author Language Work
|
|
Vimalsuri |
Prakrit |
Paumchariya |
Shilankacharya |
Prakrit |
Chaupannamahapurusa Chariyam |
Haribhadra |
Prakrit |
Dhurtakhyana |
Bhadreshvara |
Prakrit |
Khavali |
Shilankacharya |
Prakrit |
Chaupannamahapurusa Chariyam |
Ravishena |
Sanskrit |
Padmapurana |
Yogashastra Vritti |
Sanskrit |
Hemachandra |
Hemchandra |
Sanskrit |
Trishashtisalakapurusha Charitra |
Dhaneshvara |
Sanskrit |
Shatrunjaya Mahatma |
Svayambhu |
Apbhramsha |
Paumchariyu |
|
Gunabhadra’s Version
Author Language Work
|
|
Gunabhadra |
Sanskrit |
Uttarpurana |
Krishna |
Sanskrit |
Punyachandrodaya |
Pushpadanta |
Apbhramsha |
Mahapurana |
Samghadasa’s version
Author Language Work
|
Samghadasa Gani |
Prakrit |
Vasudevahindi |
Harisena |
Prakrit |
Kathakosha |
|
[2] John Brockington, Mary Brockington, The Other Ramayana Women: Regional Rejection and Response, Routledge, New York, 2016
[3] Ramanujan, A.K. 1992. Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translation, in Many Ramayanas: The Diversity of a Narrative Tradition in South Asia in (Paula Richman ed.) pp. 22-49. Delhi: Oxford University Press.
[4] Richman, Paula. Why Can’ta Shudra Perform Asceticism? Sambuka in Three Modern South Indian Plays.” The Ramayana Revisited (2004): pp.125-148.
Between 1920 and 1954, in sharp contrast, three influential south Indian playwrights analyzed below responded to Sambuka’s beheading not with approval but with horror. Juxtaposing plays in Telugu, Tamil, and Kannada suggests how troubling Rama’s beheading of a shudra proved in twentieth-century south India. The earliest of the three plays examined in this essay was written in Telugu by Tripuraneni Ramasvami Chaudari (1887–1943).
A more extreme attack on Rama’s treatment of S ambuka appears in the 1954 play titled Ramayana Natakam [Ramayana drama] by Thiruvarur K. Thangaraju, a Tamil journalist, playwright, and actor.
In the mid-1940s, Sudra Tapasvi [The Shudra ascetic] was published in Kannada. Its author, K. V. “Kuvempu” Puttappa (1904–1994) enjoyed an extraordinarily successful career as a writer and public intellectual in Karnataka.

குறிச்சொற்கள்:சத்திரியன், சம்புகன், சம்பூகன், சிரச் சேதம், சிரச்சேதம், சூத்திரன், ஜைன ராமாயணம், தலை வெட்டு, பிராமணர், முன்னூறு ராமாயணங்கள், ராமன், ராமானுஜம், ராமாயணம், வர்ணம், வால்மீகி, வால்மீகி ராமாயணம், வெட்டு, வைசியர், ஷம்புகன், ஷம்பூகன்
அரசியல், இடைசெருகல், இட்டுக் கதை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, எதிர்ப்பு, கட்டுக் கதை, கதை கட்டு, கம்யூனிஸ்ட், கருத்து, கலவரம், காட்டுவாசி, காபிர், க்ஷத்திரியன், சகிப்புத் தன்மை, சங்கம், சந்நியாசி, சபரி, சம்புகன், சம்பூகன், சிரச் சேதம், சிரச்சேதம், சூத்திரன், துவேசம், தூஷண வேலைகள், பிராமணன், பேச்சு, பொய்க் கதை, வனவாசி, வழக்கு, ஷம்புகன், ஷம்பூகன், ஹிந்து, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 7, 2019
கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: நாத்திக-அரசியல் மோதலில் முடிந்த விவகாரம்! [2]

வைகோ கண்டனம் தெரிவித்தது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்[1], ‘‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து திருச்சியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் அண்ணன் கி.வீரமணி அவர்களின் வாகனம் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது….மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது தாக்குதல் நடத்த முனைந்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்……..மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இயக்கங்கள், கட்சிகள் குறிப்பிட்ட எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சமூக, மத நல்லிணக்கம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவை என்று வைகோ தெரிவித்துள்ளார்[2].

திகவினர் சொல்வது என்ன? விடுதலையில் வெளியானது[3]: திருச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்து முன்னணி காலிகள் கலவரத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். கூட்டம் முடிந்து கழகத் தலைவர் சென்ற வேனை மறித்துத் தாக்குதலுக்குத் திட்டமிட்டனர். காவல்துறை கைகட்டி சேவகம் செய்வதுபோல நடந்துகொண்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நாடாளுமன்ற திமுக – காங்கிரஸ் கூட் டணி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் 04.04.2019 அன்று மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்கூட்டியே முறைப்படி அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பீம நகர் பகுதியில் வேறு கூட்டம் இருப்பதாகக் கூறி, வேறு பகுதிக்கு கூட்டத்தை மாற்றச் சொல்லி காவல்துறை சார்பில் சொல்லப்படவே, காவல்துறையின் பரிந்துரைப்படியே தாராநல்லூர், கீரைக்கொல்லை பகுதிக்கு கூட்டம் மாற்றப்பட்டு, கடைசி நேரத்தில் அனுமதி பெறப்பட்டு கூட்டத்திற்கான பணிகள் வெகுவேகமாக நடை பெற்றன. ஆனால், நேற்று பீம நகர் பகுதியில் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது[4].

காவல்துறை ஏன் அப்படி நடந்துகொண்டது என்று தெரியவில்லை[5]: முதல் கூட்டம் பெரம்பலூரில் முடிந்து, அமைதியான முறையில் அடுத்த கூட்டம் திருச்சி கீரைக்கொல்லை பகுதியில் தொடங்கி, ஏராளமான பொதுமக்களின் வரவேற்போடு நடைபெற்று வந்த நிலையில், கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்து முன்னணியைச் சேர்ந்த 12 காலிகள் மேடையை நோக்கி செருப்பையும், கற்களையும் வீசி கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். தடுக்க வந்த தோழர்கள் மீது, நாற்காலிகளை விசிறியடித்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களை வளைத்துப் பிடித்த தோழர்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதில் மேலும் இருவரை கழகத் தோழர்கள் காவல்துறையிடம் அடையாளம் காட்டியபோதும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் காவல்துறை அனுமதித்துவந்தது. இந்நிலையில் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உரையாற்றினார். முதல் பிரச்சாரக் கூட்டத்தை பெரம்பலூரில் முடித்து மேடைக்கு வந்த தமிழர் தலைவருக்கு பெரும் கரவொலியுடன் வரவேற்பு வழங்கினர் பொது மக்கள். கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கவனித்துக் கொள்ளும். பொதுமக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என்று அமைதிப்படுத்தியபடி தன்னுடைய உரையைத் தொடங்கிய தமிழர் தலைவர், மோடி அரசின் மோசடிகளையும், அதிமுக அரசின் அடிமைத் தனத்தையும், காங்கிரஸ் – திமுக கூட்டணியின் செயல்திட்டங்கள் குறித்தும் ஆதாரங்களை எடுத்துவைத்து 40 நிமிடம் உரையாற்றினார். பேரார்வத்துடன் பொதுமக்கள் செவி மடுத்தனர்[6].

மோதல் – பரஸ்பர குற்றச்சாட்டு[7]:சரியாக இரவு 10 மணிக்குள் அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்று முடிந்து, செய்தியாளர்களையும் சந்தித்துவிட்டு தமிழர் தலைவரின் வாகனம் கிளம்பிய சில நிமிடங்களில் அந்தச் சாலையின் முனையில் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த இந்து முன்னணி காலிகள் பலர், தமிழர் தலைவரைத் தாக்கும் நோக்கத்தோடு கையில் கற்களை ஏந்தியபடி தமிழர் தலைவரின் வாகனத்தை நோக்கி தாக்க முயற்சித்து, இரு சக்கர வாகனங்களிலும், ஓடியும் வந்தனர். பின்னால் வந்து கொண்டிருந்த தோழர்கள் மீதும் கல்வீசியும், மூர்க்கத்தனமாக மோதியும் தாக்குதல் நடத்தினர். இதில் திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் தாக்கப்பட்டு காயமேற்பட்டது. வன்முறைத் தாக்குதல் நடந்த பின்னரும், காவல்துறையினர் காவல் பணியில் முழு கவனத்துடன் இல்லாமல் இருந்ததே பிந்தைய நிகழ்ச்சிக்குக் காரணமாயிற்று. வழக்கமாக, தலைவர்கள் மீது இத்தகைய தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றால், பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, தலைவர்களின் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்புக்கென அணிவகுத்து வரும். ஆனால், அசாதாரண சூழல் நிலவியதோடு, வன்முறைத் தாக்குதல் ஒன்று நடந்து பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அப்படி எந்த பாதுகாப்பு முயற்சியிலும் காவல் துறை ஈடுபடவேயில்லை. கழகத் தோழர்கள் மட்டுமே தமிழர் தலைவரின் வாகனத்தின் முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக வாகனங்களில் வந்தனர்[8].

இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டது[9]: கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு ஒரு மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் திடீரென காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ், செயலாளர் மோகன்தாஸ், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், பெல் ஆறுமுகம், செய்தியாளர் பாலு (எ) செந்தமிழினியன், கனகராஜ், ஆத்தூர் சுரேஷ் ஆகிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டுள்ளார்களோ அவர்கள் மீதே வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திராவிடர் கழகத் தலைவருக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் வகையில் தொடர்ந்து துக்ளக்’, தினமலர்’, விஜயபாரதம்’ உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன-இந்துத்துவ வாதிகளும் எழுதியும், பேசியும், தூண்டியும் வந்த சூழலில், அது மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை[10].
© வேதபிரகாஷ்
06-04-2019

[1] news18, தி.க. கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: வைகோ கண்டனம்!, Updated: April 5, 2019, 1:29 PM IST.
[2] https://tamil.news18.com/news/tamil-nadu/vaiko-condemns-hindu-munnani-cadres-who-stirred-violence-in-dravidar-kazhagam-meeting-presided-by-k-veeramani-vi-135687.html
[3] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[4] https://www.viduthalai.in/e-paper/179293.html
[5] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[6] https://www.viduthalai.in/e-paper/179293.html
[7] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[8] https://www.viduthalai.in/e-paper/179293.html
[9] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[10] https://www.viduthalai.in/e-paper/179293.html
குறிச்சொற்கள்:இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கம்யூனிசம், கம்யூனிஸ்ட், கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், திருச்சி, துர்கா, துர்கா ஸ்டாலின், தூஷண வேலைகள், நாத்திக மூட நம்பிக்கை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், வீரமணி, வைகோ, ஸ்டாலின்
அவதூறு செயல்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கம்யூனிஸ்ட், செக்யூலரிஸம், தீவிரவாதம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நம்பிக்கை, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸ்ட், பெரியார், மதம், மதவெறி, மதிமுக, ராதா, ராதாராணி, ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 24, 2019
“நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” புத்தகம் சரித்திரமா, இடதுசாரி திரிபுவாதமா, தேர்தல் நேர துவேசமா, மோடி எதிப்பு மட்டும் தானா? [3]

சனாதனத்தால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட நாடார்கள் (08-03-2019): உதயகுமார் பேசியது, “இக்கூட்டத்திற்கு போகாதே என்று சில நண்பர்கள் வலியுருத்தினார்கள். ஏனெனில், அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் எல்லோருமே நாடார்கள். அமீரும் முஸ்லிம் நாடார். கரு.நாகராஜன் போல, கரு.பழனியப்பன் பச்சை நாடார். சிலர் காவிக்குள் கருப்பு மற்றும் கருப்பில் காவி இருக்கு. என்னைப் பொறுத்த வரையில் கருப்பும் இல்லை, காவியும் இல்லை என்பது தான். ஏனெனில், இதெல்லாம் பச்சை துரோகம். பல வரிகள் 18 கீழ்ஜாதியினரின் மீது திருவாகூர் அரசு விதித்தது. விவேகானந்தர் இந்த அரசை “பைத்தியக்காரகளின் புகலிடம்” என்று விமர்சித்தார். தோள்சீலை போராட்டம் மூலம் முலைகளை மறைக்கும் உரிமை பெற்றார்கள். இன்றும் ஜாதி மேன்மை-தாழ்மை செயல்பட்டு வருகிறது. ஜீன்ஸ் போடக் கூடாது என்றுள்ளது….ஜெயமோகன் என்னை விமர்சிப்பது, எதிர்த்து நிற்கவேண்டும் என்பது தெரிகிறது,” ஆர்.எஸ்.எஸ் (தாழ்த்தப் பட்டவர் கோவிலுக்குள் அனுமதிக்கப் போது, வெளியேறியது), இந்து மகாசபா (சமூக சீர்திருத்தம்) முதலியவற்றைப் பற்றியும் திரிபு விளக்கம் கொடுத்தது, இவரது போக்கைக் காட்டுகிறது.

08-03-2019 பேச்சுகள் 23-03-2019ல் தொடர்ந்தது: சென்னை கூட்டத்திற்கு வினவு விளம்பரம் கொடுத்து வருகிறது[1]. இந்நிகழ்ச்சி பற்றியும் கொடுத்தது[2]. இவர்கள் பேசிய பேச்சுகளை யூ-டியூப் மூலமும் பரப்பி வருகின்றனர். 23-03-2019 அன்று சென்னையில் நடந்த கூட்டத்திலும் அதையேத் தான் பேசியுள்ளனர். வந்திருந்த கூட்டத்தில் பெரும்பாலோர், கம்யூனிஸ, திக-நாத்திக, கிருத்து-துலுக்க கும்பலாகத் தான் இருந்தது. புத்தகத்திலும், ஒன்றும் புதியதாக இல்லை. அரைத்த மாவையே, திரும்ப அரைத்து, நிறைய படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம் போல, மோடி-எதிர்ப்பு போர்வையில், உணர்ச்சிப் பூர்வமான, திராவிடத்திற்கே உரித்தான மேடைப் பேச்சு போல, பொரிந்து தள்ளினார்கள்.

வந்திருந்த சுமார் 100 பேர் ஏற்கெனவே அந்த சித்தாந்த்தில் ஊறியவர்கள் என்பதால், அவர்களுக்கும் புதியதாக எந்த விசயமோ, தகவலோ கிடைக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக நிகழ்ச்சி ஆரம்பித்தது. ஒருவர் “மன்னிக்கவும்” என்றெல்லாம் சொன்னார். பிறகு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். முதலில் பேசியவர் நாடார்கள் பாஜக பக்கம் போகிறார்கள், ஆர்.எஸ்.எஸ் தான் புத்தகத்தை எதிர்த்து வழக்கு போட்டது என்றேல்லாம் பேசினார். வழக்கறிஞர் வஞ்சிநாதன் [மய்யம் கட்சி] என்பவரு அதே தோரணையில் பேசினார். நீதிபதி வி.ஆர்.விஸ்வநாதன், ஒரு பிராமணர், இருப்பினும் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தார். பிறகு பார்ப்பனர் என்ற ஓலம் ஏன் என்று தெரியவில்லை.

திருமாவளவன் நேரங்கடந்து வந்தார், “மன்னிகவும்…நான் புத்தகத்தை படிக்கவில்லை. இருப்பினும் நாடார்களின் நிறம் கருப்புதான்…..”, என்று முடித்தார். ஏழு மணிக்கு முக்கியமானவரை சந்திக்க வேண்டும் என்று 6.35ற்கே புறப்பட்டு விட்டார். அவருடன் 20 பேர் சென்று விட்டனர். ஊடகக்காரர்களும் நழிவி விட்டனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேசியது: ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமனும், வீமர்சித்து பேசினார். தன்னிலையுணார்ந்து ஜாக்கிரதையாக பேசினார் எனலாம். இருப்பினும் அவர் சொல்ல வேண்டிய கருத்துகள் எல்லாவற்றையும் சொல்லி விட்டார். முன்னுரையில் நீதிபதி கடைசியில் குறிப்பிட்டதை, லஜபதி ராய் குறிப்பிட்டதை, அரிபரந்தாமன் எடுத்துக் காட்டினார். அதற்கு நீதிபதிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார். கமுதி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு நாடார்கள் சென்ற பாதையை சுவர் எழுப்பி மறைத்தனர். வரத ராவ் என்பவர் அந்த தீர்ப்பையும் கொடுத்தார்.

வெள்ளையன் பேசியது: நாடார் என்றால், நான் வர மாட்டேன் என்று சொன்னேன். ஆனால், லஜபதி ராய் சொன்னதால் வந்தேன். நான் வணிக சங்கத்தின் தலைவராக இருப்பதினால், வருவதில்லை. பொதுநல எண்ணம் இருக்க வேண்டும். நான் விபூதியை வைத்திருக்கிறேன் என்பதை கவனித்தீர்களா? எங்களது குலதெய்வத்தின் நினைவாக வைத்திருக்கிறேன். இப்புத்தகத்தை நான் படிக்கவில்லை. ஆனால், பிறகு படிப்பேன். திருச்செந்தூர் கோவிலில் நாடார்களை அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், காமராஜர் நிலையில் மாறியது. மற்றவர்களை மதிக்க வேண்டும். கருத்துகளைத் திணிக்கக் கூடாது. வெளிநாட்டுப் பொருட்களை வாங்கக் கூடாது என்ற நோக்கில், மே 5 2019 அன்று, சுவதேசி பிரகடன மாநாடு என்று என்று நடத்தப் போகிறோம்.

லஜபதி ராய் பேசினது: பிறகு லஜபதி ராய் ஏற்புரையில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக சமூகம் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒரு ஜாதி சமூகம் ஆகும். திரைப்படங்களில் “சண்டாளன், சண்டாளப் பாவி” வார்த்தை பிரயோகம் சாதாரணமாக இருக்கிறது. “பக்கி” என்றால் மலத்தை சுமக்கும் ஜாதி என்று தெரிய வருகிறது. 5000 வருடங்களுக்கு முன்னர் நாம் எல்லோருமே ஒரே ஜாதி தான். முன்பு நான் வெளியிட்ட புத்தகங்கள் விற்கவில்லை. ஆனால், இப்புத்தகம் ஆயிரக் கணக்கில் விற்று விட்டது. ஒருவேளை, “காவி” என்ற வார்த்தையினால் ஆர்.எஸ்.எஸ்-ஆல் பிரபலம் அடைந்தது போலும். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மக்களுக்கு தெரிய வைக்க வேண்டும் என்று நீதிபதி வேணுகோபால் கமிஷனில் தெரிவித்தார். அதைத்தான் நான் செய்கிறேன். கன்னியாகுமரியில், எம்பெருமாள் நாயுடு கோவில் நுழைப்பு போராட்டம் நடத்தினார். 1936ல் ஆலய பிரவேச சட்டம் கொண்டு வரப்பது. மதம் மாறப் போகிறோம் என்று கேரள இழவர்கள் அறிவித்ததால், அச்சட்டம் வந்தது. இந்தியாவில் எந்த இனமும் கிடையாது. கலப்பினம் தான் உள்ளது. நாஞ்சில் நாடன் கூட ஆரியன், திராவிடன் இனங்கள் எல்லாம் பொய் என்றிருக்கிறார். SCs, STs, முஸ்லிம், கிருத்துவர் எல்லோரும் சேர்ந்து செயல்படவேண்டும்,” என்று முடித்தார்.

கூட்டத்தின் சுருக்கமான விவரங்கள்: இக்கூட்டத்தின் பேச்சாளர்கள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு:
- “நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” புத்தக அறிமுக விழா 03.2019 அன்று மாலை 5 மணியளவில், சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கத்தில் நடைபெற்றது.
- சுமார் 100 பேர் அதில் கலந்து கொண்டனர், பெரும்பாலும் கருப்புகள் இருந்தன, காவிகளை காணவில்லை! சில நாடார்கள் இருந்தனர்.
- நிகழ்ச்சி ஆரம்பம் ஐந்து என்றாலும், 6.50 வரை வர வேண்டியவர்கள் வரவில்லை போலும்! ஒருவர் மன்னிக்கவும் என்று சமாளித்துக் கொண்டிருந்தார்.
- வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன், மாவட்ட செயலாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், நிகழ்ச்சி தொகுப்பாளராக மோடியை வசைப் பட்டிக் கொண்டிருந்தார்.
- வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா. மையம் நாடார்கள் பிஜேபி பக்கம் போய் விட்டார்கள், பாசிஸம் வள்ர்கிறது என்றார்.
- தமிழிசையும், பொன்னாரும் எப்போவுமே சுப்ரமணிய சுவாமியா ஆக முடியாது, அதே தான் தமிழிசையும் நிர்மலா சீதாராமனா ஆக முடியாது.
- பார்ப்பனன், பார்ப்பனீயம், பாசிஸம் என்றேல்லாம் ஊளையிட்டு, அனுமதி கொடுத்தது நீதிபதி ஒரு பிராமணர் என்று பெரிய தமாஷா ஆகிவிட்டது.
- லேட்டாக வந்த திருமாவளவன் லேட்டஸ்டாக சொன்னது, நான் இப்புத்தகத்தைப் படிக்கவில்லை, இருப்பினும் நாட்டார்கள் நிறம் கருப்புதான்.
- திருமா வந்தவுடன், ஆர்வ கோளாறினால், புத்தக வெளியீடு இப்பொழுது தொடங்கும் என்றார் வழக்கறிஞ்சர், பிறகு சமாளித்துக் கொண்டார்.
- புத்தகம் நன்றாக விற்பதற்கு, ஆர்.எஸ்.எஸ்.க்கு நன்றி தெரிவிக்கப் பட்டது! 2000 போட்டார்களாம் விற்றுவிட்டதாம், 3000 போடப் போகிறார்களாம்.
- வெள்ளையன், தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை லேட்டாக வந்த மர்மத்தை கூடிய நியாயவான்கள், தர்மவான்கள் தான் விளக்க வேண்டும்.
- ஓய்வு நீதிபதி அரிபரந்தாமன், தன்னை கம்யூனிஸவாதி என்று வெளிப் படுத்திக் கொண்டதால், எச்சரிக்கையோடு விமர்சனம் செய்தார்.
- விழாவிற்கு வந்தவர்களுக்கு டீ கொடுத்தது படு தமாஷாக இருந்தது, சாராயமோ, கள்ளோ, பதநீரோ கொடுத்திருந்தால் மோடியை மறந்திருக்கலாம்.
- ஆக இந்து-சித்தாந்த எதிரிகள் தயாராக இருக்கிறார்கள், இந்துத்துவ / அரசியல் வாதிகள் தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்! [14]

சிந்தாந்த நீதிபதிகள், அரசியல்வாதி நியமன நீதிபதிகள் நடுநிலையாக தீர்ப்பளிக்க முடியுமா?: இப்படி ஒரு கேள்வி எழுபப் பட்டது. சரியான கேள்வி, நிச்சயமாக அவர்களின் மனங்கள் சித்தாந்தங்களில் ஊறியிருப்பதால், அவர்களின் தீர்ப்புகள் சார்புடையதாகவே இருக்கும், இருக்கின்றன. மேலும் அவர்களது “நீதிபதி” வேலையே, அரசியல் ஆதரவு, பரிந்துரை, தேர்வு என்ற முறையில் தான் நடக்கிறது. இதில் கட்சி-ஆதரவு, ஜாதி, மதம் என்ற ரீதியில் தான், நீதிபதி பதவிகள் ஒதுக்கப் படுகின்றன. பிறகு, அவர்கள் தமது எஜமானர்களுக்கு விசுவாசமாகத் தானே இருக்க வேண்டும். திமுக ஆரம்பித்த அம்முறை அதிமுகவினாலும் தொடரப் பட்டது. அந்தந்த கட்சிகளின் பெயர்களிலேயே வழக்கறிஞர்கள் சங்கங்கள் எல்லாம் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. பிறகு என்ன நீதிபதிகளின் சமத்துவம், சமநீதி, சமநோக்கு எல்லாம்? 1% நீதிபதிகள் வேண்டுமானால் அவ்வாறு இருக்கலாம், 99% அரசியல் ஏஜென்டுகள் தாம். அதனால் தான், சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தெருக்களுக்கு வந்து, ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு, சேற்றை வாரி இறைத்துக் கொண்டனர். ஆக, நீதித்துறையும் வியாபாரட்திற்கு, பேரத்திற்கு, அரசியலுக்கு உட்படுத்தப் படும் போது, தீர்ப்புகளும் சார்பினால் சாய்கின்றன, சித்தாந்தத்தினால் சீரழிகின்றன. யார் தான் காப்பாற்றப் போகிறார்களோ?
வேதபிரகாஷ்
23-03-2019

[1] வினவு, நாடார் வரலாறு கறுப்பா… ? காவியா… ? | சென்னையில் நூல் அறிமுக விழா !, By மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – March 20, 2019
[2] https://www.vinavu.com/2019/03/20/nadar-varalaru-book-release-in-chennai/
குறிச்சொற்கள்:அரி பரந்தாமன், கம்யூனிசம், கம்யூனிஸ்ட், கள், சாணார், சாதி, சாதியம், சாராயம், நாடார், நாடார்கள் வரலாறு, நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?, பனை, பனை மரம், மது, முஸ்லிம் நாடார்., லஜ்பதி ராய், வெள்ளைய்யன்
“இந்து மகா சபா”, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து நாடார், இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இயக்குனர் அமீர், உதயகுமார், கம்யூனிஸ்ட், கரு.பழனியப்பன், கா.பிரபு ராஜதுரை, கார்பரேட், காவி, காவி உடை, காவியுடை, கிறிஸ்தவ நாடார், சுப.உதயகுமார், சுவாமிநாதன், நாடார், நாடார்கள் வரலாறு, நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?, நீதிபதி வி.ஆர். சுவாமிநாதன், பிராமணாள், பூங்கோதை, பூங்கோதை ஆலடி அருணா, முஸ்லிம் நாடார்., மோடி, வி.ஆர். சுவாமிநாதன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 22, 2018
பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில், சர்ச்சுகளில், மசூதிகளில் இல்லாமல் எங்கே செல்லும்’’ – செக்யூலரிஸ இந்தியாவில், செக்யூலரிஸ வாதம் செய்யவேண்டும்! [1]

“சபரிமலையில் பெண்கள் – மரபா? உரிமையா?” என்ற தலைப்பில் விவாதம்[1]: சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க முடியாது என கோவில் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்தது. வழிபாடு என்பது சட்டம் சார்ந்தது கிடையாது. வழிபாட்டிற்கு ஆண், பெண் வேற்றுமை கிடையாது அவர்களுக்கு உரிமை உண்டு எனவே கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்குள் வந்தால் புனிதம் கெட்டுவிடும் என கோயில் நிர்வாகம் உறுதியாக தெரிவித்தது. இதுகுறித்து புதியதலைமுறை தனியார் தொலைக்காட்சியில் “சபரிமலையில் பெண்கள் – மரபா? உரிமையா?” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது[2]. அப்போது, ’பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்குள் வந்தால் புனிதம் கெட்டுவிடும் என கூறுகின்றனர். பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில் இல்லாமல் எங்கே செல்லும்’’ என நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திகேயன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மதத்தினையும், தெய்வத்தையும் அவமதித்து பேசியதாக எழுந்த சர்ச்சைக்கு தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில் இல்லாமல் எங்கே செல்லும்’’: நிகழ்ச்சியில் அய்யப்பன் கோவிலில் பெண்களை நுழைய அனுமதிப்பது தொடர்பாக ஒரு விவாதம். நெறியாளர் கார்த்திகேயன். நண்பர் திருப்பதி நாராயணன் அதில் பங்கேற்றிருந்தார். அப்போது, நெறியாளர் கார்த்திகேயன், அந்த மூன்று நாட்களில், பெண்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்றால், பெண் தெய்வங்களும் அந்த மூன்று நாட்கள் கோவிலுக்குள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லுங்களேன் என்று சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ஆனந்த விகடன் கவிதையை மேற்கோள் காட்டி பேசினார்[3]. நண்பர் திருப்பதி நாராயணன், இது இழிவானது. இப்படி சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றார்[4]. இதனால், இந்துக்கள் மனம் புண்பட சமூக வளைதளத்தில் கண்டனம் தெரிவித்தனர்.

எச். ராஜா கண்டனம், கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரம்: இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ஹெச். ராஜா தனது முகநூல் பக்கத்தில், “நெறியாளர் என்கிற போர்வையில் தொகுப்பாளர் இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தாலி, தீபாவளி விசயங்களில் இவ்வாறு இந்துவிரோத கருத்துகளை சொல்லிவருகிறார்கள்[5]. இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ எனத் தெரிவித்து இருந்தார். அதே நேரத்தில், கார்த்திகேயனை ஆதரித்து கம்யூனிஸ்ட் அனுதாபிகள் பதிவிட்டனர். கேள்வியெழுப்பியமைக்காகவே கார்த்திகேயனை வசைபாடியுள்ளார் ஹெச்.ராஜா. மேலும், கார்த்திகேயனின் குடும்பமும் மிரட்டப்படுவதாக தெரிகிறது[6]. பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றது முதலே மத ரீதியிலான செயற்பாடுகள் அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய அவர்கள் முனைந்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அறிவாசான் தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என கருத்து தெரிவித்துவிட்டு, பூகம்பத்தினை போல் எதிர்ப்பு கிளம்பியவுடன் அதனை நான் தெரிவிக்கவில்லை என ஹெச்.ராஜா பயந்து பின் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தினை பொறுத்தமட்டில் கருத்தியல் ரீதியிலாக எதிர்க்க வலுவற்றவர்களே, தனி நபர்களுக்கெதிரான வன்முறை அரசியலை முன் வைப்பார்கள் என்பதுவும் ஏற்கத்தக்கதுவே[7].

கார்த்திகேயன் மன்னிப்பு: இந்நிலையில், இந்த நிகழ்ச்சியையை தொகுத்து வழங்கிய கார்த்திகேயன் தனது முக நூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இரண்டு நாட்களுக்கு முன் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டிய ஒரு கவிதை சிலரின் மனதை காயப்படுத்தியிருக்கிறதை அறிகிறேன். ஒரு வார இதழில் வெளிவந்த அந்தக் கவிதையை குறிப்பிட்டதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. யார் உணர்வுகளையும் காயப்படுத்தும் எண்ணமும் இல்லை. எனினும் யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக முழு மனதுடன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். இதில் ஒன்றும் வ்ருத்தப் பட்டதாகத் தெரியவில்லை. வழக்கம் போல, “யார் மனதாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்,’’ பாணி போலித்தனமானது, என்பது அனைவரும் அறிந்ததாகிறது. தொலைகாட்சியில், சமூக வளைதளங்களில் தூஷிப்பது என்பது ஏற்றுக் கொள்ல முடியாதது. யோசித்துப் பேசவில்லை என்றெல்லாம் சொல்லி தபித்துக் கொள்ல முடியாது. பத்து பேருக்குத் தெரிந்ததை, லட்சக்கணக்கில் மக்கள் தெரிந்து கொள்ளும் முறையிலதறிவித்து விட்டு, யாரோ சொன்னதை, நான் சொன்னேன் என்று தப்பித்து விட முடியாது. அவ்வாறு சொன்ன போக்கே அவரது உள்நோக்கத்தை எடுத்துக் காட்டி விட்டது.

செக்யூலரிஸ விதண்டாவாதம் என்று ஒன்றை உருவாக்கினால், எல்லா தெய்வங்களையும் பழிக்கலாம், தூஷிக்கலாம்: பொதுவாக நம்பிக்கையாளர்களை நம்புகிறவன், மதிப்பவன் நான், தெய்வநம்பிக்கை எனும்போது, அதிகமாக மதிப்பவன் நாம், ஆனால், இந்து தெய்வங்களை, பிம்பங்களை அறியாதவர் தூஷிக்கும் போது, வாதத்தில் ஈடுபடுவது அவசியமாகிறது, ஒரு இந்தியன், இந்து என்பவன், சரித்திரத்தை மதமூலங்களை அறியாமல் பிதற்றக் கூடாது, விதண்டாவாதம் செய்யக் கூடாது. செக்யூலரிஸ விதண்டாவாதம் என்று ஒன்றை உருவாக்கினால், எல்லா தெய்வங்களையும் பழிக்கலாம், தூஷிக்கலாம். பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில் இல்லாமல் எங்கே செல்லும் என்று கேட்டது கேடுகெட்ட தம் தான். இதனால் வேறுவழியில்லாமல், பெண்தெய்வங்களின் மாதவிடாய் பற்றி சரித்திர ரீதியில் சொல்ல வேண்டிய அவசியமாகிறது. இந்து மதத்தைப் பொறுத்த வரையில், புராணங்களின் படி, மனிதர்கள் கடவுளர்களாக்கப் பட்டிருப்பதால், எதிலும் பிரச்சினையில்லை. மனிதன் தெய்வமாக முயற்சிப்பதும், ஜீவன்முக்தியாவதும், அவதாரமாவதும், மனிதனாகவே இருப்பதும், இறப்பதும், இந்துக்களின் நிதர்சனம். இந்துக்கு கடவுள் எல்லாம் ஆவான், வாடா-போடா அளவுக்கு அந்நியோன்யம், ஏனெனில், அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை. பக்தி பரவசத்தில் பெண்தெய்வத்தை வாடி-போடி என்று கூட சொல்லுவான், ஆனால், அவள் வருவாள், தாய், மகள், சகோதரி போல் வருவாள்[8].

கிருத்துவ பெண்தெய்வங்கள் பற்றியும், செக்யூலரிஸ ரீதியில் இதே கேள்வியைக் கேட்கலாமே?: “பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் சர்ச்சில் / மசூதியில் இல்லாமல் எங்கே செல்லும்?’’என்று கார்த்திகேயன் கேட்டிருந்தால், அவரது செக்யூலரிஸத்தைப் பாராட்டியிருக்கலாம். ஆனால், உணர்ந்து தான் கேட்கவில்லை. கேட்டிருந்தால், இந்நேரம் பென்டு நிமிர்ந்திருக்கும். ஆனால் உங்கள் துலுக்க, கிருத்துவ பெண்ண்தெய்வங்கள் வருவார்களா, அவர்களின் நிலையென்ன என்று இந்துக்கள் கேட்கவில்லையே? மேரிக்கு மாதவிடாய் வருமா-வராதா, உண்டா-இல்லையா என்றெல்லாம் நீங்கள் தானே பல்கலை அளவில்[9] ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறார்கள்! அல்லாவுக்கு மூன்று மகள்கள் இருந்தார்கள் என்றால், தாய் இருந்தார் என்றாகும்போது[10], அவர்களின் நிலையென்ன என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். பொதுவாக கிருத்துவ-துலுக்கர் இவற்றை மறைத்து காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். போதாகுறைக்கு, செக்யூலரிஸ வகையறாக்கள், கிருத்துவ-துலுக்கப் புராணங்களைஒப் படிப்ப்பதில்லை. படித்தாலும், உண்மையினை வெளியே சொல்வதில்லை. சொனால், அவர்களது முகமுடி கிழிந்து விடும்.
© வேதபிரகாஷ்
22-07-2018

[1]newstm.in, இந்து மதத்தை அவமதித்ததாக சர்ச்சை… மண்டியிட்ட தனியார் டிவி தொகுப்பாளர்!, ஆர்.எம்.திரவியராஜ் | Last Modified : 21 Jul, 2018 05:10 pm.
[2] http://www.newstm.in/news/tamilnadu/general/41440-controversy-apologized-private-tv-presenter.html
[3] தீக்கதிர், மனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு?, on JUL 21, 2018 .
[4]https://theekkathir.in/2018/07/21/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/
[5] தினசரி, புதியதலைமுறை நிர்வாகத்தின் இந்து விரோத நிலைப்பாடு: ஹெச்.ராஜா கண்டனம், செங்கோட்டை ஶ்ரீராம், 21-07-2018.
https://dhinasari.com/politics/48285-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.html
[6] ஐபிசி.தமிழ், இந்துக் கடவுள்களை அவமதித்தாரா கார்த்திகேயன் ; ஊடகவியலாளரை மிரட்டும் ஹெச்.ராஜா.!, Elamparithi Thamizh, 20-07-2018,
[7] https://www.ibctamil.com/india/80/103577
[8]
அபிராமி சொல்லடி அபிராமி – வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே – முழு
நிலவினைக் காட்டு உன் கண்ணாலே |
ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா…. |
ஆதிபரசக்தி, படத்தில் வரும் பாடல்கள்.
[9] https://udayton.edu/imri/mary/m/menstruation-and-mary.php
[10] And they assign unto Allah daughters. Be He glorified! and unto themselves what they desire; – 16:57
Hath your Lord then distinguished you (O men of Mecca) by giving you sons, and hath chosen for Himself females from among the angels? Lo! verily ye speak an awful word! – 17:40
Now ask them (O Muhammad): Hath thy Lord daughters whereas they have sons? – 37:149
Or created We the angels females while they were present? – 37:150
Lo! it is of their falsehood that they say: – 37:151
Allah hath begotten. And lo! verily they tell a lie. – 37:152
(And again of their falsehood): He hath preferred daughters to sons – 37:153
Or chooseth He daughters of all that He hath created, and honoureth He you with sons? – 43:16
And if one of them hath tidings of that which he likeneth to the Beneficent One, his countenance becometh black and he is full of inward rage. – 43:17
And they make the angels, who are the slaves of the Beneficent, females. Did they witness their creation? Their testimony will be recorded and they will be questioned. – 43:19
Or hath He daughters whereas ye have sons? – 52:39
Have ye thought upon Al Lat and Al Uzza – 53:19
And Manat, the third, the other? – 53:20
Are yours the males and His the females? – 53:21
That indeed were an unfair division! – 53:22
They are but names which ye have named, ye and your fathers, for which Allah hath revealed no warrant. They follow but a guess and that which (they) themselves desire. And now the guidance from their Lord hath come unto them. – 53:23
குறிச்சொற்கள்:அசுத்தம், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லாவின் மகள், அல்லாவின் மகள்கள், ஆகம சாஸ்திரம், ஆகம விதி, ஆகமம், கார்த்திகேயன், கோவில், சர்ச், தீட்டு, தேவாலயம், புதிய தலைமுறை, பெண் தெய்வம், மசூதி, மாதவிடாய், மேரி, ரத்தம்
அசிங்கம், அரசியல், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாவின் மகள், அல்லாவின் மகள்கள், அவதூறு செயல்கள், ஆகம விதி, ஆல்-லத், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, எச். ராஜா, கம்யூனிஸ்ட், கார்த்திகேயன், தீட்டு, நம்பிக்கை, பகுத்தறிவு, பக்தி, பிஜேபி, பிரச்சாரம், புதிய தலைமுறை, புதியதலைமுறை, பெண், பெண் தெய்வம், மாதவிடாய், விலக்கி வைத்தல், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 19, 2018
லக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [2]

ஒரே படம், ஒரே சம்பவம், ஆனால், வக்கிரத்துடன் ஊடகங்கள் தலைப்பிட்டு போட்ட செய்திகளின் போக்கு: மேற்குறிப்பிட்ட வீடியோவைப் பார்த்தாலே, உண்மை விளங்கும், ஆனால், ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு, ஊடகங்கள் அநாகரிகமாக செய்துள்ள அவதூறு, அவற்றின், அவற்றின் பின்னால் இருக்கும் வக்கிர மனிதர்களின் பண்மை, கலாச்சாரத்தை, கண்ணியத்தை எடுத்துக் காட்டுகிறது.
- பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளரின் அனுமதியின்றி ஆளுநர் அவரை தொடுவது[1] கண்ணியமான செயலல்ல என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்[2].
- பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிய[3] விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கண்டனம் தெரிவித்தனர்[4].
- #கன்னம்கிள்ளிகவர்னர்; கலாய்க்கும் நெட்டிசன்கள்[5]
- Video: பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தடவிய கவர்னர்[6]
- கன்னத்தைத் தொட்ட ஆளுநர்… பதிலடி கொடுத்த நிருபர்…![7]
பெண் பத்திரிக்கையாளரைத் தொடுவது, கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார். கன்னம் கிள்ளிய / கன்னத்தை தட்டிய / தடவிய கவர்னர்….என்று பலவாறு வர்ணித்தது ஆபாசமாக, அருவருப்பாக இருந்தது[8]. ஆனால், அந்த அம்மணி அதைப் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை, சொன்னதையே திரும்ப-திரும்ப சொல்லி, கவர்னர் என்னை அப்படி செய்து விட்டார் என்று தான் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்[9].

ஆளுநர் எதனால் அப்படிச் செய்தார்? – அதாவது கன்னத்தைத் தட்டினார்?: விகடன் சொல்வதாவது[10] – செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம், “செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததும் கவர்னர் இருக்கையிலிருந்து எழுந்தார் அப்போது எங்கள் அருகில் இருந்த ரிப்போர்ட்டர் ஒருவர், `நீங்கள் தமிழ் கற்றுக்கொண்டிருப்பதாகச் சொன்னீர்கள் அது தற்போது எந்த அளவில் உள்ளது?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘தமிழ் ஒரு இனிமையான மொழி. நான் அதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்‘ என்றார். அந்த சமயம் கவர்னர் அருகில் இருந்த நானும் மற்றொரு ரிப்போர்ட்டரும் ‘உங்களது தமிழ் ஆசிரியர் யார்?’ என்று கேட்டோம். அதற்கு அவர் சிரித்தார். மேலும், ‘மாநில அரசின் ஆட்சிமுறை நிறைவாக உள்ளது என்கிறீர்களே அப்படியென்றால் மறைமுகமாக பல்கலைக்கழக நிர்வாகம்தான் தவறு என்கிறீர்களா?’ என்று நான் கேட்டேன். எனது அந்தக் கேள்வியை அவர் கேட்டுக் கொண்டாரா என்று கூடத் தெரியவில்லை. சட்டென எனது கன்னத்தை தட்டிக் கொடுத்தார்” என்று கூறியவர் மேற்படி எதுவும் பேச மறுத்துவிட்டார். ” ஆக, பொதுவில் செய்தியாக பரப்பும் இவற்றை, உண்மை என்ன என்பதை உறுதியாக சொல்லாமலே, பிரச்சாரம் செய்வது நோக்கத் தக்கது.

ஸ்டாலின், கனிமொழி, வாசுகி உமாநாத், ஜோதிமணி என்று டுவிட்டியது: அவரது “தட்டல்” எதிர்ப்பு வார்த்தை பதிவு ஏதோ தீண்டாமை வெளிப்படுத்தும் அறுவருப்பான விதமாக, ஆணவப்பிடிவாதமாக இருந்தது “என் முகத்தை பலதடவை கழுவினேன், இருப்பினும் அதிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை, அந்த அளவுக்கு கவர்னர் என்னை கொதிக்க மற்றும் கோபம் கொள்ள செய்தார். அது உம்மைப் பொறுத்த வரையில் பாராட்டு மற்றும் தாத்தாவின் அணுகுமுறையாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, நீர் செய்தது தவறு”. அவரது கழுவலுக்குப் பிறகு ஆதரவான பதிவுகள் ஸ்டாலின், கனிமொழி, போன்றவர்களிடமிருந்து தான் ஆரம்பித்தன. ஸ்டாலின் சொன்னது[11], “துரதிருஷ்டவசமானது மட்டும் அல்ல . அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்கு துளியும் ஏற்புடையது அல்ல! ”. கனிமொழி சொன்னது[12], “நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின்அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.” வாசுகி உமாநாத், ஜோதிமணி முதலியோரது பதிவுகள் தொடர்ந்தன. அதாவது, திமுக, காங்கிரஸ், மார்க்ஸிய கட்சிக்காரர்கள் ஆதரவு தெர்வித்தனர். லக்ஷ்மியிடம் வெளிப்படுவது தேர்ந்தெடுத்த மோடி-எதிர்ப்பு, காங்கிரஸ்-ஆதரவு, மார்க்ஸிய சித்தாந்த ஒப்புதல் முதலியவையே. இவற்றை அவரது டுவிட்டர், பேஸ்புக் மற்றும் ஊடக எழுத்துகளில் பதிவாகியுள்ளன. அவற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

லக்ஷ்மி அம்மணிக்கு என்னத்தான் வேண்டும்?: கழுவலுக்குப் பிறகும், உடனே 200 ஊடகக்காரர்கள் கவர்னரை மன்னிப்புக் கேட்கும் படி கடிதம் எழுதி இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளனர். 200 பேர் யார், அவர்களுடைய பின்னணி என்ன, எப்படி அவர்கள் உடனடியாக கையெழுத்திட்டு அனுப்பினர், என்ற விவரங்கள் தெரியவில்லை. “நானே 40 வருட பத்திரிக்கைக் காரன் தான், ஊடகத்தில் உமக்குள்ளத் திறமையினை மெச்சி, தாத்தா போல, தட்டி பாராட்டினேன்,” என்ற பிறகும் ஊடகக்காரர்களின் அடாவடித் தனமான கேள்விகளை கவனிக்க வேண்டும். பிடிக்கவில்லை என்றால் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கலாமே, கையை நீட்டித் தடுத்திருக்கலாமே, “தாத்தா, இது சரியில்லை,” என்று சொல்லியிருக்கலாமே, கண்ணை மூடிக் கொண்டு அனுபவித்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே? “உமது மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன், இருப்பினும் எனது கேள்வியைப் பாராட்டித் தான் அவ்வாறு செய்தேன் என்பதை ஏற்கவில்லை,” என்றெல்லாம் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இதற்கும் மேலாக அந்த அம்மணி எதை எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. இதனை அரசியலாக்கும் போக்கு ஏன் என்றும் தெரியவில்லை. “அதற்கு பதில் சொல்லாமல் என் அனுமதியின்றி எனது கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார்”, என்பது பொய், ஏனெனில் அந்த வீடியோ அவர் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தது போல இருந்தது. தன்னுடைய சக-ஆண்-ஊடகக்காரரிடமும் ஏதோ தமாஷாக பேசியதும் தெரிகிறது!

தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்ற அறிக்கையும் தொடர்ந்த பிரச்சாரமும்[13]: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும் விசாரணை முடியும் வரையில் இந்த ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களையும் உயர் கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளையும் பணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டுமெனவும் தமிழகத்தையே உலுக்கியுள்ள கல்லூரி மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கும் இத்தகைய அநாகரிகமான போக்கை எதிர்த்து முறியடித்திட தமிழகத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளும் போர்க்குரல் எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது’ தேசிய அளவில் எந்த ஆதரவும் இல்லாத, தமிழகத்தில் பெயருக்கு இருக்கின்ற, இக்கட்சி இவ்வாறு தம்பட்டம் அடிப்பதும், அதை வைத்துக் கொண்டு, விகடன் போன்ற ஊடகங்கள் பிரச்சாரம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது[14].

லக்ஷ்மி சுப்ரமணியன் மூலம் வெளிப்படுவது பத்திரிக்கா–அகங்காரம், பின்னணியில் உள்ள அரசியல் செல்வாக்கு, குறியிட்ட நபரைத் தாக்கும் திட்டம்[15]: நிர்மலா தேவி மூலம் வெளிப்படுவது, திராவிடத்துவம் எவ்வாறு பெண்மையினை சதாய்த்துள்ளது, அடிமையாக்கி வைத்துள்ளது போன்றவை…லக்ஷ்மி சுப்ரமணியனுக்கு ஜெயா-டிவியில் வேலை செய்து, விசுவாசத்தை மறந்து மாறியதால், ஸ்டாலின் கனிமொழி ஆதரவு கிடைக்கிறதா? வாசுகி உமாநாத் [சிபிஎம்], ஜோதிமணி [காங்கிரஸ்] ஆதரவு, லக்ஷ்மி சுப்ரமணியனின் பத்திரிக்கா / அரசியல் கூட்டணியைக் காட்டுகிறதா? பரிதாபகரமான கவர்னரும், சண்டைப் போட்டுக் கொள்ளும் தமிழ பிஜேபியும், முட்டாள் இந்துத்துவவாதிகளும் – கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது போலும்! நிர்மலா தேவியை வைத்துக் கொண்டு தான், லக்ஷ்மி சுப்ரமணியன் விளையாடுகிறார் என்று தெரிகிறது, பிறகு, இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்? இதே பல்கலையில் முன்னர் பாலியல் புகார் வந்தபோது, லக்ஷ்மி சுப்ரமணியன் என்ன செய்து கொண்டிருந்தார்? ஜெயலலிதாவுக்குக் கட்டுப் பட்டு கிடந்தாரா? பாலியல் நிறங்காட்டி, கொச்சைப்படுத்தி, ஒரே நாளில் பிரபலம் அடையும் போக்கு, அந்த சீமான் போன்ற வகையறாக்களைத்தான் காட்டுகிறது.
© வேதபிரகாஷ்
19-04-2018

[1] தி.இந்து, பெண் பத்திரிக்கையாளரை தொடுவது கண்ணியமானதல்ல: ஆளுநர் செயல் குறித்து கனிமொழி ட்வீட், Published : 18 Apr 2018 12:27 IST; Updated : 18 Apr 2018.
[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23582832.ece
[3] https://www.ietamil.com/tamilnadu/banwarilal-purohit-mk-stalin-kanimozhi-condemns/
[4] https://tamil.news18.com/news/tamil-nadu/tngovernor-banwarilal-purohit-pat-journalist-on-the-cheek-without-her-consent-agitations-erupts-over-governors-gesture-15965.html
[5] http://www.newstm.in/Tamilnadu/1524034806108?-
[6] https://tamil.samayam.com/news-video/news/tamil-nadu-governor-pats-journalist-on-cheek-sparks-controversy/videoshow/63809405.cms
[7] https://nakkheeran.in/24-by-7-news/head-line-news/female-reporter-stronger-condemnation
[8] Republic World, Journalist Lakshmi Subramanian Speaks To Republic TV | TN Governor Controversy, 17 ஏப்., 2018 அன்று வெளியிடப்பட்டது.
[9] https://www.youtube.com/watch?v=Y6rOW1qnPFY
[10] விகடன், “சிரித்துக்கொண்டே கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார்!” – கவர்னரின் செயலை விவரிக்கும் `தி வீக்’ நிருபர், ஐஷ்வர்யா, Posted Date : 09:58 (18/04/2018) Last updated : 10:49 (18/04/2018).
https://www.vikatan.com/news/tamilnadu/122521-journalist-lakshmi-subramanian-of-the-week-magazine-takes-twitter-to-storm-against-tamilnadu-governor.html
[11] https://t.co/rjywYVXQQ9 — M.K.Stalin (@mkstalin) 17 April 2018
[12] Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) 17 April 2018
[13] விகடன், `தமிழக ஆளுநரை திரும்ப பெறுக!’ – மாணவிகள் புகார் விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.எம், தினேஷ் ராமையா, Posted Date : 18:47 (16/04/2018) Last updated : 18:47 (16/04/2018)
[14] https://www.vikatan.com/news/tamilnadu/122371-cpm-urges-fair-trail-on-aruppukkottai-college-issue.html?artfrm=related_article
[15] Lakshmi Subramanian, principal correspondent, is a hardcore political journo. She has 15 years of extensive experience in writing about politics in Tamil Nadu. She is interested in political gossips and writing investigative stories.
குறிச்சொற்கள்:கனிமொழி, கன்னம், கிள்ளு, தடவு, தட்டு, நிர்மலா, நிர்மலா தேவி, பன்வாரிலால், பல்கலைக் கழக துணை வேந்தர், புரோஹித், மதுரை, மதுரை காமராஜ், லக்ஷ்மி, லக்ஷ்மி சுப்ரமணியன், லட்சுமி, லட்சுமி சுபரமணியன், ஸ்டாலின்
அசிங்கம், அரசியல், ஆபாசம், ஆர்.எஸ்.எஸ், கம்யூனிஸ்ட், கவர்னர், செக்யூலரிஸம், செக்ஸ், திராவிடம், நிர்மலா, நிர்மலா தேவி, பன்வாரிலால், பன்வாரிலால் புரோஹித், பல்கலைக் கழக துணை வேந்தர், பாஜப, பாலியல், பிஜேபி, புரோஹித், மார்க்ஸ், லக்ஷ்மி, லக்ஷ்மி சுப்ரமணியன், லட்சுமி, லட்சுமி சுப்ரமணியன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 10, 2018
தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன? (2)

மோடி தெளிவாக பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசியது: பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முடிந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது[1]: “தலித் இன மக்களுக்காக பா.ஜ.க. அரசு ஏழு முக்கிய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் தலித் இன மக்களுக்கு அதுபற்றி தெரியவில்லை. பா.ஜ.க. எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி தலித் இன மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்தியாவில் எஸ்.சி. எஸ்.டி. இன மக்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் 20 ஆயிரத்து 844 உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் பா.ஜ.க. எம்.பி.க்கள் செல்ல வேண்டும். ஒரு நாள் இரவு அந்த கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும்[2]. மறுநாள் பா.ஜ.க. அரசின் தலித் நலத்திட்டங்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி.க்கள் மக்களிடம் விரிவாக பேச வேண்டும். இதன் மூலம் நாடுமுழுவதும் உள்ள தலித் இன மக்களுக்கு பா.ஜ.க. செய்து வரும் நல்லப்பணிகள் தெரியவரும். வருகிற 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்த தினமாகும். அன்றைய தினம் பா.ஜ.க. எம்.பி.க்கள் இந்த பணியை தொடங்க வேண்டும். மே மாதம் 5-ந்தேதி வரை தலித் மக்களை சந்திக்கும் பணியில் பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். பா.ஜ.க. மந்திரிகள் மூத்த நிர்வாகிகளும் இந்த பணியில் இணைய வேண்டும்.” மோடி அளவுக்கு, பிஜேபியில் இருக்கும் மற்றவர்களுக்கு அரசியல் சாணக்கியத்தனம், மேக்வில்லியன் சாதுர்யம், முதலிய இல்லை என்பதால், தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு, கட்சியின் பெயரைக் கெடுத்து வருகிறார்கள் எனலாம்.

மோடி தெளிவாக சதியை–பிரச்சாரத்தை வெளிப்படுத்தியது: பாஜக தொடங்கப்பட்ட 38-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தில்லியில் கட்சித் தலைவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது[3]:
- “ஏழைத் தாய்க்கு பிறந்தவர் (நான்) பிரதமர் பதவியை அடைந்துள்ளதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த யாரும் நாட்டின் உயர் பதவியை எட்டினால் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
- பாஜக என்பது பிராமணர்கள் மற்றும் பனியா (வட மாநில வணிக சமூகத்தினர்) கட்சியாகவே நீண்டகாலமாக கருத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளோம்.
- ஏழை, எளிய மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது எதிர்க்கட்சிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாஜகவின் செல்வாக்கை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
- பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என நாட்டின் அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களும் பாஜக சார்பில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களாக உள்ளனர். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம்தான் பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.பி.க்களைப் பெற முடிந்தது.
- பாஜகவின் இந்த வளர்ச்சியை சிதைக்கும் நோக்கில் இப்போது எதிர்க்கட்சிகள் வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். மக்கள் மத்தியில் தவறான தகவல்களையும் பரப்பும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு எதிராக, நமது கட்சியினர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்காகவும் நாம் உழைக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் தூண்டுதல்களால் நாம் பொறுமை இழந்துவிடக் கூடாது.
- இது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்ததுவிட்ட நவீன உலகம். நமது கொள்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் மத்தியில் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். கட்சி தொடங்கிய 38 ஆண்டுகளில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம்.
- காங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.
- பாஜகவுக்கு கிடைத்த சிறந்த தலைவர்களும், தன்னலம் கருதாத தொண்டர்களும்தான் நமது சாதனைகளுக்கு காரணம்”என்றார் அவர்[4].
மோடி-ரசிகர்கள், மோடி-தாசர்கள், பிஜேபிகாரர்கள் மோடி சொன்னதை கவனித்து செயல்பட்டாலே, 2019 தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.

காங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல: இப்படி மோடி சொன்னதை கவனிக்க வேண்டும். மைனாரிட்டி, பின்தங்கிய வகுப்பினர், எஸ்.சி மற்றும் எஸ்.டி என்ற கூட்டமைப்பில் மக்களைப் பிரித்து, அவர்களை இந்துக்களுக்கு எதிராக்கி, அதாவது பிஜேபிக்கு எதிராக்கி, வெற்றி பெறலாம் என்ற திட்டத்தில் தான், காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கவும் தயாகி விட்டது. 60-70 ஆட்சி காலத்தில், காங்கிரஸ் விசுவாசிகள் பற்பல துறைகளில், பதவிகளில் இருப்பதால், அவர்களின் ஆதரவால், தமக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திட்டத்தில் செயல்படுவதும் தெரிகிறது. உச்சநீதி மன்றங்களில் மாறுபட்ட தீர்ப்புகள் வருவது, அவைப் பற்றி ஊடகங்களில் தவறான செய்திகள் வருவது, விவாதங்களில் திரிபு வாதங்கள் கொடுப்பது, சமூக ஊடகங்களில், வலைதளங்களில், பொய்யான விவரங்களைப் பரப்புவது போன்றவை, பிஜேபிக்கு எதிராக இல்லாமல், நாட்டிற்கே எதிராக இருப்பதையும் கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினையை உண்டாக்கி, அதன் மூலம் ஆதாயம் கிட்ட பார்க்கிறது. இவற்றையெல்லாம் பிஜேபி கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஆக பிஜேபி–காரர்கள் கவனிக்க வேண்டியது: பிஜேபி ஆதரவாளர்கள், மோடி பிரியர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள் இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்று தெரியவில்லை.
- எஸ்.சிக்களை ஒதுக்கினால், பிஜேபிக்கு இழப்பு ஏற்படும், இது வரை நான்கு பிஜேபி எம்பிக்கள்[5], மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
- மோடி, இவ்விசயத்தில் [எஸ்.சி விவகாரம்] அமீத் ஷாவிடம் அதிருப்தியைத் தெரிவித்துள்ளாதாக தெரிகிறது.
- உபியில், மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் உடன்படிக்கை [யாதவ் + எஸ்.சி ஓட்டு%] ஏற்பட்டால், பிஜேபிக்கு பாதிப்பு ஏற்படும்.
- எதிர்கட்சிகள் எஸ்.சி விவகாரத்தை வைத்துக் கொண்டு, குழப்பத்தை ஏற்படுத்தி, தேர்தல் பிரச்சாரமாக்க திட்டமாகி விட்டது[6].
- லிங்காயத்து தனி மதம், ஜைனர்களுக்கு அவ்வாறான ஆசை காட்டுவது, ஆந்திராவுக்கு, சிறப்பு அந்தஸ்து காவிரி பிரச்சினை..இப்படி பிஜேபிக்கு எதிராக….பிரச்சினைகள் உருவாக்கப்பட்டது.
- ஜி.எஸ்.டி அமூல் தாமதத்தால், அமெரிக்க முதலீடு தேக்கம், அமூலுக்குப் பிறகு உண்டான தயக்கம், வேலைகள் உருவாக்குவதில் தாக்கம், பிஜேபிக்கு பாதிப்பு.
- “தலித்-முக்த்” பாரத்[7] என்று [“காங்கிரஸ்-முக்த் பாரத்”எதிராக] காங்கிரஸ் விசமத் தனமான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது! ஒவைஸி பேசியதை ராகுல் பேசியயுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது[8].
- மேற்கு வங்காளம், ஒரிஸா, ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா என்று பிஜேபி இல்லாத மாநிலங்கள் மீது குறி வைத்துள்ளது காங்கிரஸ்.
- பிரிவினைவாதம், திராவிட நாடு, கம்யூனிஸம் முதலியவை மறுபடியும் பழைய பாட்டை பாட ஆரம்பித்துள்ளதை கவனிக்கலாம்!
- மோடியின் ஆளுமைத் தன்மையினை உபயோகப் படுத்திக் கொள்வதில், இவை தடங்களாக இருக்கும் பொய் பிரச்சாரத்திற்கு உதவும்.
© வேதபிரகாஷ்
09-04-2018

[1] மாலைமலர், தலித் கிராமங்களுக்கு சென்று தங்கி இருந்து பேசுங்கள் – பாஜக எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு, பதிவு: ஏப்ரல் 07, 2018 16:20
[2] https://www.maalaimalar.com/News/National/2018/04/07162004/1155690/Narendra-Modi-asks-BJP-MPs-to-spend-two-nights-in.vpf
[3] தினமணி, எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளன: மோடி குற்றச்சாட்டு, By DIN | Published on : 07th April 2018 01:08 AM .
[4]http://www.dinamani.com/india/2018/apr/07/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2894948.html
[5] Bahraich MP Savitri Bai Phule, Robertsganj MP Chhote Lal Kharwar and Etawah MP Ashok Kumar Dohre. Nagina constituency, Yashwant Singh
[6] Pioneer, Modi working to make India Dalit-mukt: Cong, Monday, 09 April 2018 | PNS | New Delhi
[7] http://www.dailypioneer.com/nation/modi-working-to-make-india-dalit-mukt-cong.html
[8] News.18, BJP Wants a Muslim-mukt, Dalit-mukt Bharat: Asaduddin Owaisi, Sakshi Khanna | CNN-News18Updated:January 23, 2018, 12:11 PM IST
https://www.news18.com/news/politics/bjp-wants-a-muslim-mukt-dalit-mukt-bharat-asaduddin-owaisi-1639413.html
குறிச்சொற்கள்:அமித், அமித் ஷா, அம்பேத்கர், கம்யூனிசம், காங்கிரஸ், சோனியா, தலித், தலித் அரசியல், தலித் விரோதம், தலித்துவம், திராவிட நாடு, பாஜக, பிஜேபி, பிரிவினைவாதம், மோடி, மோடி எதிர்ப்பு
ஆட்சி, ஆர்.எஸ்.எஸ், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உத்தரபிரதேசம், உரிமை, கம்யூனிஸ்ட், கர்நாடகா, சம உரிமை, சிறுபான்மை, சோனியா, தெலிங்கானா, தெலுங்கானா, பசு, பசு மாமிசம், பரிவார், பாஜப, பிஜேபி, பிரச்சாரம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி 24, 2017
பொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்?

பாரதிராஜா, பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் முதலியோர் அரசியல் பேசவில்லையாம்: விழாவில் கவிஞர் வைரமுத்து ஒளிப்பதிவாளர் சங்க இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ‘‘நான் எழுதும் பாடல்கள் ஒளிப்பதிவாளர்களால்தான் வண்ணம் பெறுகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா பாடும் பாடலை சிறிய அறைக்குள் கேமராவை வைத்து படமாக்கியது போல் மேதைகள் பலர் இருந்து இருக்கிறார்கள். பாரதிராஜா படத்தில் எழுதிய பாடலுக்காக முதல் முறை நான் தேசிய விருது பெற்றது, முதல் காதலை போல் மறக்க முடியாதது. நன்னிலத்தில் டைரக்டர் பாலசந்தர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. அந்த பள்ளியில் பாலசந்தரின் சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளேன். சிலை திறப்பு விழாவுக்கு கமல்ஹாசனும், பாரதிராஜாவும் வரவேண்டும்.’’ இவ்வாறு வைரமுத்து பேசினார். டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். நல்லவேளை இவர்கள் எல்லாம், “நாங்களும் தமிழ் பொறுக்கிகள் தாம்”, என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை.

Kamal pretending as a Hindu – frustrated on all accounts
சுப்ரமணிய சாமியை எதிர்ப்பது யார், ஏன்?: தமிழ் ஊடகங்களுக்கும் சரி, தமிழர்களுக்கும் சரி சு.சாமியை வசைபாடாமல் இருக்க முடியாது. பார்ப்பன விரோதம், இந்து துவேசம் என்று எதுவாக இருந்தாலும், எளிதில் கிடைப்பது சுசாதான். சுனாசானா என்று வறுத்தெடுத்து இடுவார்கள். அதில் இந்துத்துவவாதிகளூம், மோடி ஆதரவாளர்களும் உண்டு என்றால் தமாஷாகத்தான் இருக்கும், ஆனால், உண்மை. தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொறுக்கிகள் என்று எழுதி வருகிறார் சுப்பிரமணியம் சாமி[1], அதேபோல அறப்போராட்டத்தை ராதா ராஜன் இழிவுபடுத்தினார். எச். ராஜாவும் மத வெறியை விதைக்கத் துணிந்தார். இதனால்தான் பாஜகவை குறி வைத்து போராட்டத்தில் தாக்குகின்றனர். இதில் என்ன தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேட்டுள்ளார்[2]. அதாவது, ஒரு முஸ்லிம், முஸ்லீமாக இப்பிரச்சினையில் குழப்ப வந்துள்ளது தெரிகிறது. ஜல்லிகட்டு விசயத்தில் மாட்டு கறி தின்கும் முஸ்லிம்கள் வக்காலத்து வாங்கி வருவது கொச்சைத்தனமானது. ஷாநவாஸ் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சில கேள்விகளை முன்வைத்தார்[3]. மெரினா போராட்டத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், இதைப்பற்றி, விமர்சித்ததை, இந்த வீடியோவில் காணலாம்[4]. இப்பெண்ணின் பேச்சு, அரசியல் ரீதியில், நிச்சயமாக பயிற்சியுடன், பேசிய விதமாகத் தெரிகிறது[5]. ஆக, சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக இவர்கள் விமர்சனம் செய்தாலும், அவையெல்லாம், அவரது பார்வைக்குச் செல்லுமா-செல்லாதா என்று தெரியவில்லை. இவர்கள் டுவிட்டரிலோ, வேறுமுறையிலோ சாமிக்கு தெரிவிக்கவில்லை.

“ஆமா நான் பொறுக்கிதான்” – சினிமாவின் பெயராகி விட்டது: இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி ஆமா நான் பொறுக்கிதான் என்று தன்னுடைய படத்துக்கு டைட்டில் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர்[6]. ஆக, தமிழனுடைய ரசனை இப்படியும் இருக்கிறது. இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன்? சினிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது. இதற்கு உதாரணமாக பிச்சைக்காரன் நானும் ரௌடிதான் போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படத்தின் கதைக்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த தலைப்பை சூட்டியுள்ளோம் என்கிறார் ஜெய் ஆகாஷ்[7]. சில வருடங்களுக்கு முன் சுந்தர்.சி நடிப்பில் பொறுக்கி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. தணிக்கைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடத்தப் போகிறவர் சாமிதான்[8]: தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்பிரமணியன் சாமி ஆஜராக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாரம்பரிய வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அழிந்து வரும் நாட்டு காளை இனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வழக்கை, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் நலச் சங்கம் கூர்ந்து கவனித்து வருகிறது. சமீபத்தில், ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில், நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அரசு வழக்கறிஞர்கள் திணறினர். இதையடுத்து, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்க பொருளாளர் கார்த்திகேயன், காளைகள் நலச் சங்க தலைவர் மோகன் சாமிக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியை சந்தித்தனர். உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடும் படி கோரினர். அதை, அவர் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம்: இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நாட்டு காளைகள் தான், ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படுகின்றன. அவை, இயற்கையில் மூர்க்க குணத்துடன் இருக்கும்; பழக்கப்படுத்த வேண்டியதில்லை. அழிந்து வரும் இனமாகவும் அது உள்ளது. ஜல்லிக்கட்டை தடை செய்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த காளைகள், தற்போது அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், அந்த இனமே முற்றிலும் அழியும் வாய்ப்புள்ளது. இதற்காக தான், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என, பாடுபடுகிறோம். ஜல்லிக்கட்டு வழக்கில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு, தமிழக கலாசாரம், ஜல்லிக்கட்டு பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால், நீதிபதி கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களால் முடிய வில்லை. எனவே, தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம். ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே, பெங்களூரில் அவரை சந்திந்து பேசினோம். அதன் காரணமாக, அவரும் இவ்வழக்கில் ஆஜராக ஒப்புக் கொண்டதோடு, மத்திய அரசு தரப்பிலும், ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதிஅளித்தார். இதன் மூலம் எங்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது, இவ்வாறு அவர்கள் கூறினர்[9]. ஆனால், அதே விசயத்தில், சாமியை திட்டுவதிலும், இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம்!
© வேதபிரகாஷ்
24-01-2017

[1] http://tamil.oneindia.com/amphtml/news/tamilnadu/threatening-violence-on-twitter-nia-inspection-says-subramanian-swamy-272037.html
[2] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை பொறுக்கி என்று சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை?.. வி.சி.க கேள்வி , By: Sutha, Published: Sunday, January 22, 2017, 18:08 [IST]
[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/vck-questions-hiphop-tamizha-aadhi-s-sudden-poser-272383.html
[4] ஜன்னல், போராட்டம் செய்பவர்கள் பொறுக்கிகள் தான் சு.சாமி நீ தமிழ்நாட்டு பக்கம் வா வீர தமிழச்சி, Published on Jan 20, 2017
https://www.youtube.com/watch?v=UweVv9u7YHE
[5] https://www.youtube.com/watch?v=UweVv9u7YHE
[6] செய்தி.காம், ‘ஆமா நான் பொறுக்கிதான்‘ ஜெய் ஆகாஷ் இன் புதிய படத்தின் பெயர் , Tuesday 2017-01-24 08:00.
[7]http://www.seithy.com/breifNews.php?newsID=174645&category=EntertainmentNews&language=tamil
[8] தினமலர், ஜல்லிக்கட்டு: களம் இறங்குகிறார் சாமி!, பதிவு செய்த நாள். டிசம்பர்.3, 2016.20.43.
[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1662531
குறிச்சொற்கள்:உச்சநீதி மன்றம், ஊடகம், எருது, கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கலாச்சாரம், காளை, சாதி, சென்னை, செய்தி, ஜல்லி கட்டு, ஜல்லிக்கட்டு, திருநங்கை, நம்பிக்கை, பசு, பசுக்களை வணங்குவது, பசுவதை தடை சட்டம், பெண், பொங்கல். விழா, பொது சிவில் சட்டம், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மதம், மாடு
அதிமுக, அரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், இறைச்சி, கடவுள் மறுப்பு, கமக் ஹஸன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், சாதி, சுனாசானா, சுப்ரமணியன், சுப்ரீம் கோர்ட் விளக்கம், சுவாமி, செக்யூலரிஸம், தமிழச்சி, தமிழர் பேரவை, தமிழிசை, தலித், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், தீவிரவாதம், துவேசம், தூஷணம், தேர்தல், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், நாயுடு, பகுத்தறிவு, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பயங்கரவாதம், பாதுகாப்பு, பிரச்சாரம், பிராமணாள், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி 24, 2017
பொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா–எதிர்ப்பா?

நான் பொறுக்கி தான்: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின[1]. பொதுவாக சாமி ஆங்கிலத்தில் ஸ்லாங் போன்ற விதத்தில் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது உண்டு. அதனை புரிந்து கொள்வது கண்டனம். அவ்விதத்தில் “பொறுக்கி” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. இதைப்பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன் தாக்கம் மற்றவர்களிடையே ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சுப. வீரபாண்டியன், “பொறுக்கி சாமி” என்றார். மெரினாவில் ஒரு பெண் அவரை கிண்டலடித்து பேசிய வீடியோவும் சுற்றில் உள்ளது. அந்நிலையில், அமல் ஹஸன், “யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[2]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்,” என்று பேசியதை, சினி உலகம் என்ற தளம் கமல்ஹாசன் பேசியதை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது. எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அதற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்[3] என்றெல்லாம் விளக்கியது.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் கமல்ஹாசன் பேசியது: இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ‘‘இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம்[4]. இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளிப்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது”[5].

என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம், கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்: “நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[6]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்[7]. திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம்[8]. இது தன்மானம். அரசியல் இல்லை[9]. குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம்[10]. கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்[11]. அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

ஜல்லிகட்டும், கமல் ஹஸனும்: கமல் ஹஸனும் எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதால், விரக்தியினால் கோபம் அதிகமாகியுள்ளது தெரிகிறது. போதாகுறைக்கு, கௌதமியும் தனியாக சென்று விட்டார். அடங்காப்பிடாரி மகள்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றே தெரிகிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிலையில், ஆரம்பித்திலிருந்தே தோல்விடைந்த மனிதராகத்தான் இருந்தார். நல்ல நடிகன் என்ற நிலைமை எல்லாவற்றிற்கும் எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. வியாபாரம் என்றால் லாபம் வர வேண்டும், அப்பொழுது தான், ஷோவைத் தொடர்ந்து நடத்த முடியும். பணம் இல்லாததால், பொத்தீஸ் போன்ற விளம்பரங்களில் நடித்ததும் தெரிய வந்தது. எது எப்படியாகிலும், வெள்ளநிவாரண தொகையிலும் சர்ச்சை ஏற்பட்டது. இவரது நாத்திகம், இவரை மக்களிடத்திலிருந்து பிரித்து வைக்கின்றது என்பது தெரிந்த விசயாமாக இருக்கிறது. ஏனெனில், 23-01-2017 அன்று, ஜல்லிக்கட்டு கடவுள் சம்பதப்பட்ட அடங்காக உள்ளதே என்று என்.டி.டி.வி வி நிருபர் கேட்டதற்கு, இவர் சரியாக பதில் சொல்லாமல், மழுப்பியது. அந்த நிருபருக்கே தமாஷாக இருந்தது.
© வேதபிரகாஷ்
24-01-2017

[1] சினி-உலகம், நான் டெல்லி பொறுக்கி இல்லை– கமல்ஹாசன் பதிலடி, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017..
[2] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.
[3] http://www.cineulagam.com/actors/06/135686
[4] தினமணி, நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி, By DIN, Published on : 23rd January 2017 10:36 AM
[5] http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jan/23/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-2636435.html
[6] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.
[7] http://www.dailythanthi.com/News/CinemaNews/2017/01/23012840/I-porukkitan-Tamil-Delhi-will-not-tolerate–Actor.vpf
[8] தினமலர், நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017.. 13.47. IST.
[9] http://cinema.dinamalar.com/tamil-news/55426/cinema/Kollywood/Yes-I-am-Tamil-Porukki-kamal-slams-Subramaniya-Swamy.htm
[10] தமிழ்.இந்து, ஆம், நான் தமிழ் பொறுக்கிதான்: கமல்ஹாசன், Published: January 22, 2017 17:29 ISTUpdated: January 22, 2017 18:45 IST
[11] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article9496139.ece
குறிச்சொற்கள்:அடலேறு, அரசியல், எருது, ஏறு, ஏறுதழுவதல், கலாச்சாரம், சல்லிக்கட்டு, சாதி, சென்னை, செய்தி, ஜல்லிக்கட்டு, தமிழச்சி, தமிழன், தமிழ் பொறுக்கி, தலித், நம்பிக்கை, பொங்கல். விழா, பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மடலேறு, மதம், மாடு
அசிங்கம், அதிமுக, அரசியல், அவதூறு செயல்கள், ஆதித் தமிழர், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்துக்கள், இனம், உரிமை, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருத்து, கலவரம், காங்கிரஸ், கிறிஸ்தவன், சாமி, சுனாசானா, சுப்ரமணியன், சுவாமி, செக்யூலரிஸம், ஜாதி, ஜெயலலிதா, தமிழச்சி, தமிழிசை, தமிழ் பொறுக்கி, தலித், திக, திட்டம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பக்தி, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பாப்பான், பார்ப்பான், பிஜேபி, பெதிக, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போட்டி, போதை, மதுரை, மெரினா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்ரெம்பர் 2, 2015
கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்துள்ளதாக சொல்லிக் கொண்ட யு.ஆர்.அனந்தமூர்த்தியும், அதனை திரும்பச் சொன்ன கல்பர்கியும்: உண்மையான நாத்திகமா, மரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா – கொலைகளில் முடியும் நிலைகள் (2)

dhabolkar-pansare-kalburgi
பசவேஸ்வரைப் பற்றி அவதூறாக எழுதிய கல்பர்கி: பவவேஸ்வரைப் பற்றியும் அவதூறாக எழுதியதால், அந்த சமூகத்தினர் இவர் மீது கோபம் கொண்டனர். பசவேஸ்வரர் அவரது சகோதரிக்கும், ஒரு செக்கிலியனுக்கும் பிறந்தவர் என்று எழுதினார். இன்னொருஇடத்தில், பசவேஸ்வரர் மற்றும் அவருடைய மனைவி இருவரிடையே இருந்த உறவுமுறையப் பற்றி கேள்விகளை எழுப்பினார்[1]. இதனால் எதிர்ப்பு கிளம்பியதால், அத்தகைய வரிகளை தனது புத்தகத்திலிருந்து நீக்கியதோடு, இனிமேல் லிங்காயத் கலச்சாரத்தை பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும் எழுதமாட்டேன் என்று தீர்மானித்துக் கொண்டார். 2014ல் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதா கொண்டுவரவது பற்றிய விவாதத்தின் போது, கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வது சரிதான், ஏனெனில், அதற்கு எந்த தண்டனையும் கிடைக்காது. யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதியதைக் குறிப்பிட்டு, அவர் சிறுவயதில் தான் அவ்வாறு கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டதை எடுத்துக் காட்டினார்[2]. இதனால் அவ்விருவர் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டது (The police filed cases under sections 295A and 298 of the Indian Penal Code against both writers). அவ்வாறு அவர் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசினார்[3]. கல்புர்கியின் கொலை தொடர்பாக அவரது மகள் ரூபா தர்ஷி குற்றம் சாட்டுகிறாரே, தனது தந்தை இவ்வாறெல்லாம் எழுதுவது, பேசுவது நாகரிகமாக இருந்ததா, இல்லையா என்று யோசித்துப் பார்க்கவில்லையா?

Basava – honoured and defamed
அவதூறாக எழுதியதால் முன்னர் சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே மற்றும் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டது: பிப்ரவரி மாதம் 2015ல் சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே என்பவர், “சிவாஜி கோன் ஹோதா” என்ற தலைப்பில், மஹாராஷ்ட்ர வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் அவதூறாக எழுதியதால், அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்[4]. ஆகஸ்ட்.2013ல் மஹாராஷ்ட்ராவின் “அந்தசிரத்த நிர்மூலன் சமிதி” என்ற மூடநம்பிக்கை அழிப்பு சமிதி என்ற இயக்கத்தைத் துவக்கியவரான நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார்[5]. சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே மற்றும் நரேந்திர தபோல்கர் முதலியோரும், அவதூறான விசயங்களை பேசியதற்காகவும், எழுதியதற்ற்காகவும் கொல்லப்பட்டனர் என்று ஊடகங்கள் கூறின. ஆனால், அவர்கள் ஏன் செக்யூலரிஸ ரீதியில் நடந்து கொள்ளவில்லை என்பதுதான் வியப்பாக உள்ளது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு, ஆனால், ஒருவரது கருத்து சுதந்திரம், இன்னொருவரது கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடாது என்றும் உள்ளது. ஆனால், நாத்திகம், பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பழமைவாத-எதிர்ப்பு, முதலியவற்றையெல்லாம் எதிர்க்கிறேன் என்று கருத்து சுதந்திர சித்தாந்தவாதிகள் ஏன் செக்யூலரிஸத்தை தமது அறிவிவெளிப்படலுக்கு, ஞானப்பீறிடலுக்கு, அந்தரந்தங்களுக்கு உபயோகிக்கவில்லை?

Pansare defaming Sivaji with ideology
யு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி விக்கிரங்களின் மீது, படங்களின் மீது மூத்திரம் பெய்தால், பெய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா?: யு.ஆர்.அனந்தமூர்த்தி கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டபோது, இந்துக்கள் அல்லாதவர்கள் கோபப்படவில்லை. அவரது கிறிஸ்தவ மனைவி எஸ்தரும் கண்டுகொள்ளவில்லை. கிருத்துவத்திலும் விக்கிரகங்கள் உள்ளனவே, அவர்கள் வருத்தப்படுவார்கள், கோபப்படுவார்கள் என்று எச்சரிக்கவில்லை, கண்டிக்கவில்லை. கல்பர்கி அதனை திரும்பச் சொன்ன போது, அவரது மனைவி மற்றும் மகளுக்கு செக்யூலரிஸ ரீதியில் பேசுங்களேன் என்று சொல்லவில்லை. ஒருவேளை யு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி விக்கிரங்களின் மீது, படங்களின் மீது மூத்திரம் பெய்தால், பெய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏன் சொல்லவில்லை என்று தெரியவில்லை. அதாவது, இதெல்லாம் இந்துமத நம்பிக்கைக்களுக்கு எதிரானது, என்று செக்யூலரிஸ பழங்கள் அமைதியாக மூடிக்கொண்டிருந்தன என்றாகிறது. அப்படியென்றால், சர்ச்சுகளில் விக்கிரங்கள் உடைக்கப் பட்டன என்று ஊளையிட்டனவே ஏன்? அப்பொழுது, அந்த விக்கிரங்களும் எந்த தண்டனையும் கொடுக்கவில்லையே? ஏசு, சோசப், மேரி என்று எல்லா கடவுளர்களும் காப்பாற்றுவார்கள் என்றால், ஏன் ஊளையிட்டு வழக்கு தொடர்ந்தார்கள்? உண்மையான நாத்திகமா, மரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா என்று யாரும் அலசிப்பார்க்கவில்லை? அப்படி நடுநிலையோடு, உண்மையான அறிவிஜீவித்தனத்துடன் சீர்தூக்கிப் பார்த்திருந்தால், கொலைகளில் முடிந்துள்ள நிலைகள் உருவாகிருக்காது, உயிர்களும் எடுக்கப்பட்டிருக்க மாட்டாது.

End of reason – Kalburgi, Dabholkar and Pansare
மரணதண்டனை கூடாது என்று வாதிடுபவர்கள், மரணத்தை ஏற்படுத்தவர்களால் மரணித்தவர்களப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அதாவது உயிர் எடுப்பவர்களைப் பற்றி ஆதரித்து பேசுவர்கள், அவர்களால் உயிர் எடுக்கப்பட்டவர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. இங்கும், கருத்தைச் சொல்லியவர்களுக்கு எதிராக கருத்தைச் சொல்லலாமே என்று கூட யாடும் வாதத்தை வைக்கவில்லை. ஆனால், ஒருவேளை அவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தால், அது தனிமனிதர்களின் மீது துவேசத்தை வெளிக்காட்டிய நிலையாக, அவதூறு பேசிய-உண்டாக்கிய நிலையாகத்தான் மாறியிருக்கும். பிள்ளையார் சிலைகளை உடைத்த பெரியாரின் சிலையை உடைக்கிறேன் என்றால், அது பெரியப் பிரச்சினையாகிறது. இதில் என்ன தத்துவ கோளாறு, சித்தாந்த வேற்றுமை, தர்க்க-முரண்பாடு உள்ளது என்று தெரியவில்லை. அதுபோலவே, விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதால், அவைகளால் எந்த தண்டனையும் கொடுக்க முடியாது என்று ஆர்பரித்தவர்கள், தங்களைக் காத்துக் கொள்ள போலீஸாரைத்தான் தேடியுள்ளனர். அவதூறாக பேசியதைக் கண்டித்தவர்களும் போலீஸாரிடம் தான் சென்ருள்ளனர். புகார் கொடுத்தனர். பிறகு போலீஸார் தான் எல்லோரையும் விட பெரியவர்களா? இந்த நாத்திகர்களை, பகுத்தறிவாளிகளை, மூடநம்பிக்கை எதிர்ப்பாளிகளை ஏம் அவர்களாளேயோ அல்லது அவர்களது சித்தாந்த நாயகர்களாலேயோ காப்பாற்ற முடியவில்லை?
© வேதபிரகாஷ்
02-09-2015
[1] According to The Indian Express, “(h)is exploration of the life and relationships of patron saint of the Lingayat community Basavanna had attracted the ire of radicals in the community”.
The report goes on to quote senior journalist Subash Hugar who highlighted that “(in)one of the articles, he wrote that Channabasava, who is also a Lingayat seer, was born from a relationship between Basavanna’s sister and a cobbler. In another, he raised questions over Basavanna’s relationship with his wife”.
http://indianexpress.com/article/india/india-others/ex-vc-m-m-kalaburgi-who-had-run-ins-with-hardliners-shot/
[2] More recently, in 2014, Dr Kalburgi walked into a controversy while speaking on a proposed anti-superstition bill in Bengaluru where he claimed that it is alright to urinate on the idols of gods and that there would be no retribution. He referred to a piece of work by Kannada Jnanpith award-winning writer U R Ananthamurthy, who claimed to have urinated on idols of gods as a child. The police filed cases under sections 295A and 298 of the Indian Penal Code against both writers.
http://indianexpress.com/article/india/india-others/ex-vc-m-m-kalaburgi-who-had-run-ins-with-hardliners-shot/
[3] http://www.firstpost.com/india/heres-what-we-know-about-slain-rationalist-mm-kalburgi-2414654.html
[4] In February this year, CPI leader Govind Pansare — whose biography of Shivaji titled Shivaji Kon Hota riled a handful of groups in Maharashtra — was killed after two unknown assailants fired at him and his wife in front of their house in Kolhapur district.
http://www.firstpost.com/india/heres-what-we-know-about-slain-rationalist-mm-kalburgi-2414654.html
[5] Narendra Dabholkar, the founder-president of Maharashtra-based Andhashraddha Nirmoolan Samiti — an organisation set up to eradicate superstition, was killed in August 2013, but his killers remain at large.
http://www.firstpost.com/india/heres-what-we-know-about-slain-rationalist-mm-kalburgi-2414654.html
குறிச்சொற்கள்:அனந்தமூர்த்தி, ஆராய்ச்சியாளர்கள், இந்திய நாகரிகம், இந்தியவியல், இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து முன்னணி, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, ஊடகக்காரர்கள், கல்பர்கி, கோவிந்த பன்ஸரே, திராவிட நாத்திகம், நரேந்திர தபோல்கர், நாத்திகம், பகுத்தறிவு
அனந்தமூர்த்தி, அவதூறு செயல்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, கம்யூனிஸ்ட், கருணாநிதி, கல்பர்கி, காங்கிரஸ், கோவிந்த பன்ஸரே, நரேந்திர தபோல்கர், நாத்திகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »