இந்துக்களை சாதியாக பிரித்தவர் தான் கிருஷ்ண பகவான்: கிறிஸ்துமஸ் விழாவில் திருமாவளவன் பேச்சு, பா.ஜ., ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்!

கிறிஸ்துமஸ் மேடைகள் ஏன் இந்து துவேஷத்திற்கு, தூஷணங்களுக்கு உபயோகப் படுத்தப் படுகின்றன?: 2020 வருடத்தில், கிறிஸ்தமஸை சாக்காக வைத்துக் கொண்டு, கிறிஸ்தவ அமைப்புகள், கிறிஸ்தவ மதத்தலைவர்கள், அரசியல்வாதிகளுடன், இந்து மதம், இந்துக்கள் மற்றும் இந்து நம்பிக்கைகளை விமர்சிப்பது, துவேசிப்பது மற்றும் தூஷிப்பத்து அதிகமாகவே நடந்திருக்கின்றன. இதில், “கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்” முக்கிய பங்கு வகிக்கிறது. அதில், திருமாவளவன் அதிகமாகவே செய்துள்ளார். தொடர்ந்து விழாக்களை நடத்தில், அவ்வாறு செய்துள்ளார் என்பது, அவரது படிவுகளிலிருந்தே தெரிய வருகிறது. கிறிஸ்தவ மேடைகள், விழாக்கள் எப்படி, எவ்வாறு, ஏன் இவ்வாறு இந்துவிரோதமாக செயல்பட்டு வருகின்றன மற்றும் அதில் கலந்து கொள்ளும் பொறுப்புள்ள பிஷப்புகள், காஜிக்கள், எம்.பிக்கள் முதலியோர் எவ்வாறு ஊக்குவிக்கின்றனர், ஆதரிக்கின்றன்ர் மற்றும் போற்றுகின்றனர் என்பது செக்யூலரிஸ புதிர், சமதர்ம மர்மம் மற்றும் பகுத்தறிவு விடுகதையாக இருக்கின்றன. மதம், இறையியல், சித்தாந்தம், அரசியல், அதிகாரம், பணம் முதலியவை எவ்வாறு, இவ்வாறு உபயோகப் படுத்தப் படுகின்றன என்பதும் ஆச்சரியமான விசயம் தான்.

நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்..: இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்[1].. “நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்“.. என்றும் கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் திருமாவளவன் பேசி உள்ளார்[2]. விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று பேசினார்.. அதன் சுருக்கம் இதுதான். “உலகில் இந்தியாவில் மட்டுமே இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.. வெளிநாடுகளில் வசிக்கின்ற இந்துக்கள் இங்கிருந்து அங்கு இடம் பெயர்ந்தவர்கள்.. இந்தியாவில் உள்ள பிற மதத்தவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் கிடையாது…..இயேசு, புத்தர், அல்லா ஆகியோரைவிட பகவான் கிருஷ்ணன் 5 ஆயிரம் வருஷத்துக்கு முன்பு மனிதராக பிறந்து வாழ்ந்தவர் என்று இந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது[3].. ஆனால், கிறிஸ்துவம், இஸ்லாம், புத்தம் ஆகிய மதங்கள் மனிதர் அனைவரையும் சமமாக பாவிப்பதாகவும், கிருஷ்ண பகவானின் போதனைகள் என்று கூறப்படும் பகவத் கீதையில்தான், மனிதர்களிடையே ஏற்ற தாழ்வுகளை உண்டாக்கும் வகையில் நான்கு வித வர்ணங்கள் உள்ளன[4]……..நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்[5].. பெண்களை ஒடுக்குகளை போக்கு இருக்கிறது.. தீண்டாமை இருக்கிறது[6].. இதற்கெல்லாம் எது காரணமாக இருக்கும் என்று சமுதாய வல்லுநர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.. அந்த வகையில் இரண்டு பேர் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் பெரியாரும், அம்பேத்கரும்தான்”.

கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது.. இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது: திருமாவளவன் தொடர்ந்து பேசியது, “எந்த மதத்துக்கு எதிராகவும் நாம் பேசவில்லை……எந்த மதத்தை காயப்படுத்தும் நோக்கமும் நமக்கு இல்லை.. ஆனால் மதங்களின் கோட்பாடுகளை ஒப்பீடு செய்யும்போது, ஏன் கிறிஸ்தவத்தை விமர்சிக்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள்[7].. இஸ்லாத்தை ஏன் விமர்சிக்கவில்லை என்று கேட்கிறார்கள்[8].. கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது.. இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது[9].. அதனால் அந்த மதங்களை விமர்சிக்க வேண்டிய தேவையில்லை[10]. …..இன்னொரு காரணம் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.. இந்து அடையாளத்தோடு இருக்கிறேன், அந்த கொடுமைகளை அன்றாட வாழ்வில் சந்திக்கிறேன்.. எந்த ஒரு கோட்பாடாக இருந்தாலும், அந்த கோட்பாடு மனித குலத்தை மதிக்கக்கூடியதாகவும், மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதைதான் எதிர்பார்க்கிறோம்.. இந்த கிறிஸ்தவ திருவிழாவானது.. சமத்துவ திருவிழா என்பதாலும், சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தும் திருவிழா என்பதால்தான் இதை ஏற்கிறோம்,” என்றார்.

திருமாவளவன் பொய்களை அள்ளி வீசியது: மேடை பேச்சு என்பதால், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற போக்கு உள்ளது. திருமாவளவன் அவ்வாறு பேசிய சில விசயங்கள் அலசபப்படுகின்றன:
திருமாவளவன் பேசியது | உண்மை நிலை |
கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது.. இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது……. அதனால் அந்த மதங்களை விமர்சிக்க வேண்டிய தேவையில்லை….. | கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் நிச்சயம் நம்பிக்கையாளர்களைப் பிரிக்கிறது. அவ்வுண்மையினை மறைத்து, பேசுவது, போலித் தனத்தைக் காட்டுகிறது. |
நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்”.. | இது தப்பித்துக் கொள்வதற்கு சொல்லப் பட்ட, சப்பைக்கட்டு. எம்.பியாக இருக்கும் நிலையைக் காத்துக் கொள்ளக் கூறியது. |
இன்னொரு காரணம் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.. இந்து அடையாளத்தோடு இருக்கிறேன், | அதாவது எஸ்.சியாக இருந்து, கிறிஸ்துவன் என்றெல்லாம் சொல்லிக் கொள்வது, இதில் அடங்கும். |
அந்த கொடுமைகளை அன்றாட வாழ்வில் சந்திக்கிறேன்….. எந்த ஒரு கோட்பாடாக இருந்தாலும், அந்த கோட்பாடு மனித குலத்தை மதிக்கக்கூடியதாகவும், மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதைதான் எதிர்பார்க்கிறோம்.. | இவர் எம்பியாக உயந்ர்துள்ளது எஸ்சி என்ற இந்து அடையாளம் தான். கிறிஸ்தவன் அல்லது துலுக்கன் என்ற முறையில் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து பதவிக்கு வந்து விடவில்லை. மேம்பட்டதால் தான், நல்ல வசதியுடன் இருந்து, அனுபவித்து கொண்டிருக்கிறார். |
இந்த கிறிஸ்தவ திருவிழாவானது.. சமத்துவ திருவிழா என்பதாலும், சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தும் திருவிழா என்பதால்தான் இதை ஏற்கிறோம்…. | இதுவும் அப்பட்டமான பொய்யாகும். லெபனான் மற்ற மத்தியத் தரைக் கடல் நாடுகளில் இன்றும் கிறிஸ்தவர்களும், துலுக்கரும் அடித்துக் கொண்டு சாகிறார்கள். சமத்துவம்-சகோதரத்துவம் இருந்தால், அவ்வாறு நடக்காது. |

கிறிஸ்துவ–துலுக்க மதங்களில் ஜாதி மற்றும் தீண்டாமை இருப்பது[11]: தெற்காப்ரிக்காவில், “அபாரிதைட்” என்ற நிறவெறித்துவத்தினால், கருப்பர்களைப் பிரித்து வைத்து வாழும் சித்தாந்தத்தை ஆய்ந்த ஐக்கிய நாடுகள் சபை குழு, பைபிளில் வரும் வசனங்கள் தான் காரணம் என்று எடுத்துக் காட்டியது. அது போலவே, கிறிஸ்தவர்களிடம் இனம், மொழி, சமூகக் கட்டமைப்பு, இறையியல் என்ற பற்பல காரணங்களால் 3000 பிரிவுகள், உலகநாடுகளில் இருப்பதும் தெரித விசயமாகிறது. இவர்களின் உறுப்பினர்கள், ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வது, பெண்கொடுப்பது-எடுப்பது, வேலைக்கு சமமான ஊதியம் கொடுப்பது, சர்ச்சுகளில் சமமாக நடத்துவது, இறந்த பின் தனித்தனி கல்லறைகளில் புதைப்பது போன்றவை, இந்தியாவிலேயே, ஏன் தமிழகத்திலேயே கடைபிடிக்கப் பட்டு வருகின்றன. அதையெல்லாம் மறைத்து தான், “கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது..”, கூசாமல் போய் பேசுகிறார். இதே நிலை தான் இச்லாத்திலும். அங்கும் அஸ்ரப்-லெப்பை போன்ற சமூக அடுக்குகள் இருக்கின்றன. மண்டல் தீர்ப்பிலேயே, இஸ்லாத்தில் எத்தனை ஜாதிகள் இருக்கின்றன என்று பட்டியல் போட்டுக் காட்டியது. ஆகவே, “இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது…….,” என்பதும் மிகப் பெரியப் பொய்யே.

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ இயக்கங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருப்பது[12]: பிஜேபிகாரர்கள் “கடும் கண்டனம்”, இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம், வெற்றுப் பேச்சுகளுடன் நின்று விடுகிறர்கள்[13]. ஏற்கெனவே, சீமான், கனிமொழி, கமல் ஹஸன் என்று பலரின் மீது “இந்துவிரோத” பேச்சுகளுக்கு புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன, வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, புகார் கொடுத்தோம் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம், ஆனால், ஒன்றும் நடக்காது என்பது தான் நிதர்சனம். மறுபடியும், அவர்கள் அத்தகைய பேச்சுகளைத் திரும்பத்திரும்ப பேசுவார்கள், பிறகு வாடிக்கையாகி விடும். கருணாநிதியின் மீது தொடுத்த வழக்குகளும் அவ்வாறே ஆகின. தேர்தலுக்கு நிற்கும் போது, தமது விண்ணப்பங்களில் எத்தனை கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதையும் காட்டத்தான் செய்கிறார்கள், எந்த அரசியல்வாதியும் வெட்கப் படுவதில்லை. இந்த்துத்துவ இயக்கங்களுக்கு ஆட்சி, அதிகாரம், பணம் எல்லாம் இருக்கின்றன, ஆனால், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்த்துத்துவ இயக்கங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருப்பது தெரிகிறது.
© வேதபிரகாஷ்
28-12-2020

[1] தமிழ்.ஒன்.இந்தியா, “இந்துக்களை சாதியாக பிரித்தவர் கிருஷ்ண பகவான்“.. கிறிஸ்துமஸ் விழாவில் திருமா. சர்ச்சை பேச்சு, By Hemavandhana | Updated: Friday, December 25, 2020, 0:00 [IST].
[2] https://tamil.oneindia.com/news/chennai/thirumavalavan-christmas-day-speech-406839.html
[3] பாலிமர்.நியூஸ், இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார்….! திருமாவளவன் சொல்கிறார், December 24, 2020, 02:19 AM [IST].
[4] https://www.polimernews.com/dnews/132066
[5] அதிபன் டிவி, “இந்துக்களை சாதியாக பிரித்தவர் கிருஷ்ண பகவான்“.. கிறிஸ்துமஸ் விழாவில் இந்து மத துரோகி திருமா இழிவு பேச்சு.., Thursday, 24 December 2020, 7:58:00 pm.
[6] https://www.athibantv.com/2020/12/hindu-traitor-thiruma-insulting-speech.html
[7] செய்தி சுருள், இந்துக்களை சாதியாக பிரித்தவர்தான் கிருஷ்ண பகவான்: திருமா பேச்சு!, 24-12-2020.
[8] https://seithichurul.com/news/tamilnadu/krishna-divided-hindus-on-caste-basis-thirumavalavan/31172/
[9] நியூஸ்.ஏ.இஜெட், இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார்….! திருமாவளவன் சொல்கிறார், December 24, 2020, http://newsaz.in/details.php?nid=18809
[10] http://newsaz.in/details.php?nid=18809
[11] Vedaprakash, Dalit – Precept, Problem and Politics , “Dimensions of Conversion”, the Vivekananda Kendra Patrika, Vol. 24, Feb. 1995, pp. 98-114. Can be read here:
https://indiainteracts.wordpress.com/dalit-%E2%80%93-precept-problem-and-politics/
[12] தினமலர், கிறிஸ்துமஸ் விழாவில் திருமாவளவன் பேச்சு; பா.ஜ., ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம், Updated : டிச 25, 2020 05:47 | Added : டிச 25, 2020 05:45.