Archive for the ‘ஐம்பொன்’ Category

இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, ஜாமீனில் வெளியே, ஆனால், தெய்வக்குற்றத்தை மறைக்க முடியுமா? [3]

ஓகஸ்ட் 11, 2018

இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, ஜாமீனில் வெளியே, ஆனால், தெய்வக்குற்றத்தை மறைக்க முடியுமா? [3]

Tirumagal, Kavitha HR-CE

கவிதாவை அடுத்து, திருமகள்: சிலைகடத்தல் தடுப்பு பிரிவு தொடர்ந்தவழக்கில், அறநிலையத் துறை பெண் அதிகாரியை, கைது செய்ய மாட்டோம் என, உயர் நீதிமன்றத்தில், தனிப்பிரிவு போலீஸ் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, முன்ஜாமின் விசாரணையை, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்ட பிறகு, இன்னொரு அதிகாரி கைது செய்யப்படுவதாக இருந்தது. கவிதாவுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்[1]. இந்நிலையில், அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக உள்ள, திருமகள் என்பவர், முன்ஜாமின் கோரி, தாக்கல் செய்த மனு, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது[2]. போலீஸ் தரப்பில் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. அதுவரை, கைது செய்ய தடை விதிக்கும்படி, திருமகள் சார்பில் ஆஜரானவழக்கறிஞர் கோரினார்[3]. இதையடுத்து, ‘தற்போது, பெண் அதிகாரியை கைது செய்ய மாட்டோம்’ என, தனிப்பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை, ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்[4].

Thirumagalbail granted 10-08-2018

பக்தியுள்ள பெண்கள் இவ்வாறு மோசடிகளில்,. கொள்ளைகளில் ஈடுபடுவார்களா?: இப்பெண்களை பார்த்தால், குங்குமம், சந்தனம் ….என்றெல்லாம் நெற்றியில் வைத்துக் கொண்டு, மங்கலமாகக் காட்சியளிக்கின்றனர்.. கோவில் நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு, சகல மரியாதைகளையும் பெறுகின்றனர். அதற்கான செலவெல்லாம் துறையின் கணக்கில் தான் எழுதப் படுகிறது. மக்களின், அதாவது, இந்துக்களின் பணம் தான் செலவாகிறது. ஆனால், இத்தகைய தெய்வக் குற்றங்கள் செய்யும் முறையில், எப்படி அவர்களால் முடிந்தது, முடிகிறது? படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற ரீதியில் எப்படி இருந்திருக்க முடியும்? எப்பொழுதாவது, ஒருமுறையாவது சிந்தித்துப் பார்த்திருப்பார்கள் இல்லையா? ஆனால், அதையும் மீறி செய்துள்ளனர் எனும் போது, அத்தகைய உணர்வு போய் விட்டது என்றாகிறது. நாத்திகத்தில் ஊறி, கடவுள் இல்லை, ஒன்று செய்யது, செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் என்றாகிறது. இதை முழுவதுமாக ஆராய வேண்டியுள்ளது. உண்மையில், மனோதத்துவ மருத்துவர்கள், வல்லுனர்கள், இத்தகைய மனப்பாங்கை ஆராய்ந்தால், பல உண்மைகள் வெளிவரும்.

Viktan, RSS blamed 06-08-2018

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ் என்று அறநிலையத்துறை சங்கங்களின் அமைப்புகள் குற்றம்சாட்டியது: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்று அறநிலையத்துறை சங்கங்களின் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளது, அவற்றின் நிலையை வெளிப்படுத்தியுள்ளது. விகடன் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ் என்று குறிப்பிட்டுள்ளது. குற்றவாளிகளை ஆதரிக்கும் அவர்கள் அறநிலையத்துறையில் வேலைப் பார்க்கவே யோக்கியதை அற்றவர்கள் என்று வெளிப்படுத்திக் காட்டுகிறது. “இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு குற்றவாளிகளைக் காப்பாற்ற நடத்தப்படவில்லை. ‘குற்றம் செய்தால் தூக்கில் கூட போடுங்கள்’ என்பது நாடகம் போல தெரரிகிறது. ஏனெனில், அவர்களரந்ஹ அளவுக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை. “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரீதியில் உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளது வெளிப்படுகிறது. சிலைகள் குறித்த புள்ளி விவரங்களை பொன். மாணிக்கவேல் கேட்டார். ஆனால், பாதுகாப்புக் கருதி தனபால் அந்தத் தகவலை கொடுக்கவில்லை என்று ஒப்புக் கொண்டது, துறைகளில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக் காட்டுகிறது. பாதுகாப்பின் மீது அந்த அளவுக்கு அக்கரை இருந்திருப்பின் இந்த அளவுக்கு கொள்ளைகள் அதிகரித்திருக்காது. அதாவது, துறைக்குள் இருக்கும் கருப்பு ஆடுகளை அப்பட்டமாகவே காட்டுகிறது.

Manickavel vs Kavita

புள்ளி விவரங்கள் தெரிந்த தலைவருக்கு, குற்றம் புரிபவர்களை கண்டுபிடிக்கத் தெரியாதா, கட்டுப் படுத்தக் கூடாதா?: சிலைக் களவு குறித்துக் கேட்டால், அந்தச் சிலைகள் குறித்த விவரத்தை மட்டும் தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களை மனதில் வைத்து பழிவாங்கும் நோக்கத்தோடு தனபாலை கைது செய்திருக்கிறார் பொன்.மாணிக்கவேல்.  சிலைக் களவு குறித்துக் கேட்டால், அந்தச் சிலைகள் குறித்த விவரத்தை மட்டும் தருவதாக தெரிவிக்கப்பட்டது. தனபால் அதனால் கைது,  கவிதா கொடுத்த ஒப்புதலின் அடிப்படையில்தான் தங்கம் வசூலிக்கப்பட்டதாக சொல்லச் சொல்லி முத்தையா ஸ்தபதியைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள், என்பதெல்லாம் ஆலோசகர் கூறும் பதில்கள் போல இருக்கின்றன. ஏனென்றால், அவரே, அறநிலையத்துறை அலுவலக ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன, இதில் 56 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு 18 சிலைகள் மட்டும் கோயிலில் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்கிறது அதாவது விவரங்கள் இல்லை, 33 கோயில்களில் நடைபெற்ற களவுகளில் காணாமல் போன  385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க இயலவில்லை என்று காவல்துறையால் முடிக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் விளக்கம் கொடுக்கிறார். அதாவது போலீஸ் துறையின் மீது, அறநிலையத் துறை குற்றஞ்சாட்டுகிறது! இவ்வாறான பரஸ்பர குற்றச்சாட்டு, நாத்திகத்தை வெளிப்படுத்துகிறது.

Pon Manickavel IG

நூறாண்டு கொள்ளையை மறைக்க முடியாது: உயர்நீதிமன்ற உத்தரவுபடி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த சிலைகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை, ஆனால், புதிது புதிதாக வழக்குகளை அறநிலையத்துறை அலுவலர்கள் மீது வேண்டுமென்றே போலீஸ் பதிவு செய்து வருகிறது என்றெல்லாம் தொடர்ந்து அடுக்குகிறார். பக்தர்களுக்கு இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகள் முதலியவை தேவையில்லையே, ஏன், எவ்வாறு, எப்படி திருடப்பட்டன என்பதற்கு பதில் இல்லையே? 1920 முதல் 2017 வரை திருட்டு என்றால் நீதிக்கட்சி முதல் திக, திமுக, அதிமுக வரை ஆட்சி செய்த இந்து-விரோத நாத்திகர்ளின் பங்கு வெளிப்படுகிறது. மேலும், “அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம். அதற்காக தமிழகத்தில் பலரும் வேலை செய்து வருகிறார்கள். அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வேண்டும் என்றே பொய் வழக்குகளைப் போடவைத்து பொன்.மாணிக்கவேலை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இயக்குகிறது,” என்பது, உண்மை நிலையை மாற்றாது. அறநிலையத்துறை அதிகாரிகள், இவ்வாறாக சிலைக் கடத்தல் பிரிவு ஐ.ஜி, ஆர்.எஸ்.எஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள், என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால், 1920-2018 என்ற காலகட்டத்தைப் பற்றி ஆய்ந்து பார்க்கவில்லை.

Panthanallur Pasupatheswarar temple idols theft 2017

திராவிட நாத்திகமும், இந்துவிரோததும், நோயும்-மருந்தும்: “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்,” என்பது இத்துறைக்குப் பொறுந்தும். நூறாண்டுகளாக திராவிட சித்தாந்தத்தின் இந்துதூஷணம், அரசியல்வாதிகளின் இந்துவிரோதம், முதலியவற்றில் ஊரிக் கிடந்ததால், இவகளுக்கு எல்லாமே மரத்து விட்டது. தினம்-தினம் உண்டியல் உடைப்பு, சிலை திருட்டு, கோவில் சொத்து அபகரித்தல் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பக்தியும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. பிறகு, கோவில் திருட்டு, கொள்ளை, அபகரிப்பு முதலியனவும் எப்படி அதிகமாகும், தொடரும்?  கூட்டுக் கொள்ளை திட்டமிட்டு நடப்பதால் தான் ஏதுவாகிறது. பலநிலைகளில் அவை மறைக்கப் படுகின்றன. இத்துறைகளின் திருட்டு வேலைகள் இவ்வாறாக வெளிப்படுகிறன. மக்கள் சேவையே மகேசன் சேவை என்று ஊளையிட்ட திராவிடத்தின் ஊழல் அவர்களின் தோட்டத்திலேயே மணக்கவில்லை, நாறுகின்றது. தமிழ், தமிழர், தமிழர் தெய்வம்… என்றெல்லாம் ஊளையிடும் வீரர்களும் இதைப் பற்றி பேசாமல் இருப்பது அத்தகைய பிரிவினை சித்தாந்தம், இந்துவிரோதமாக செயல்படுவதைக் காட்டுகிறது. ஆக நோய் முதல் திராவிட நாத்திகம், நோய்நாடினால் அது இந்து தூஷணம் என்றெல்லாம் இருப்பதை கவனிக்கலாம். இனி அது தணிக்க வேண்டுமானால், வாய்நாடி வாய்ப்பச் செய்ய வேண்டியதுள்ளது.

வேதபிரகாஷ்

08-08-2018

Umaithurai, Annathurai arrested April 2017

[1] தினமலர், பெண் அதிகாரி கைது இல்லை ஐகோர்ட்டில் தனிப்பிரிவு தகவல், Added : ஆக 10, 2018 01:34

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=2077746

[3] மாலைமுரசு, சாமி சிலை வழக்குகூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை, பதிவு: ஆகஸ்ட் 09, 2018 15:10

[4] https://www.maalaimalar.com/News/District/2018/08/09151028/1182697/Swamy-idol-case-HC-Bans-arrest-Additional-commissioner.vpf

Advertisements

இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, பரஸ்பர குற்றச்சாட்டுகள், துறைகள் மோதும் பின்னணி என்ன? [2]

ஓகஸ்ட் 11, 2018

இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, பரஸ்பர குற்றச்சாட்டுகள், துறைகள் மோதும் பின்னணி என்ன? [2]

Idols stolen from temples

பொதுமக்களிடம் தங்கம் வாங்கிய விவகாரம்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “சிலைகள் செய்யப்பட்டதற்காக பொதுமக்களிடம் தங்கம் வாங்கியதாக யூகத்தின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து தங்கம் வழங்கியதாக இதுவரை ஒரு புகார்கூட வரவில்லை. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி காதர்பாட்சா கைப்பற்றப்பட்ட சிலைகளை விற்பனை செய்து கைதானபோது சிலைத் திருட்டில் நேரடியாக ஈடுபட்ட அவரது ஜாமீன் மனுவில் ஆட்சேபனை செய்யவில்லை. ஆனால் சிலை கடத்தலுக்கு தொடர்பில்லாத அறநிலையத்துறை அதிகாரிகளை உள்நோக்கத்துடன் கைது செய்து மனு விசாரணையின்போது சர்வதேசக் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபிக்கின்றனர்”.

Idols stolen from temples- unsafe

ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, இந்து சமய அறநிலையத்துறை அலுவலக ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன. இதில் 56 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு, 18 சிலைகள் மட்டும் கோயில்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன[1]. கோயில்களில் நடைபெற்ற திருட்டுகளில் 385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க இயலவில்லை என காவல்துறையால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவற்றைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. மாறாக பொய்யாக புனையப்பட்ட விவகாரம் மூலம் கைது செய்வது நடக்கிறது. பழனி, காஞ்சிபுரம் கோயில் வழக்குகளில் சிலைகள் எதுவும் காணாமல் போகவில்லை. துறை அலுவலர்களை தேவையற்ற முறையில் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டுவதால் தங்களை வேறு துறைக்கு மாற்றுங்கள் அல்லது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம் என மாநிலம் முழுவதுமிருந்து கடிதம் வருகிறது[2]. விசாரணை குறித்து எவ்விதமான அச்சமும் துறை அலுவலர்களுக்கு இல்லை. நியாயமான பாரபட்சமற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார். மேற்கண்ட வழக்குகளில் காவல்துறை தரப்பில் கோரப்பட்ட ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் துறை அலுவலர்கள் தவறு செய்திருந்தால் சட்டத்தின் முன் நிறுத்த கூட்டமைப்பு தயாராக உள்ளது[3]. குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது, அதே நேரம் தவறேதும் செய்யாத நிரபராதிகள் கைதுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கையாகும்.” இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்ரீதரன் பதிலளித்தார்.

 Vijakamuar senteced 3 yaers. Dinakaran

கேள்விபதில்கள் ழுப்பும் பல கேள்விகள்: கேள்விகளுக்கு பதில் அளித்ததாக இவ்வாறு இருந்தாலும், அவற்றில் உள்ள சட்டமீறல்கள் அறியப் படுகின்றன.

பொன் மாணிக்கவேல் மீது என்ன தவறு உள்ளது?

அவர் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறார். சிலை கடத்தல் மாஃபியா சுபாஷ் கபூர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. தீனதயாளன் வீட்டில் நூற்றுக்கணக்கான சிலைகள் கைப்பற்றப்பட்டாலும் எப்.ஐ.ஆர் மட்டுமே போட்டுள்ளனர். சார்ஜ் ஷீட் போடவில்லை. ஜாமீனில் விடுவதிலும் ஆட்சேபிக்கவில்லை.

அறநிலையத்துறை அக்கறை இல்லாமல் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

செக்‌ஷன் 29 –ன்படி சொத்துப்பதிவேடு பராமரிக்கவேண்டும். தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. ஆனால் 400 அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். இதுதான் எங்கள் நிலை.

இணையதள முன்பதிவில் பலகோடி முறைகேடு என்கிறார்களே?

இது திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான செய்தி. இன்று பரிமாற்றம் எல்லாம் ஆன்லைனில் நடக்கிறது. இதில் ஒரு ரூபாய்கூட இழப்பு கிடையாது.

இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு கவிதா கைது என்றவுடன் செய்தியாளர்களைச் சந்திப்பது ஏன்?

கைது நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளோம், ஒரு கட்டத்தில் நாங்கள் அமைதியாக இருந்தால் மக்களுக்கு அறநிலையத்துறை மீதே தவறான நம்பிக்கை ஏற்பட்டு விடும் என்பதால் தற்சமயம் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலை தொடர்ந்தால் கூடிய விரைவில் எங்கள் நிலையை விளக்கி சென்னையில் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.

சிபிஐ வசம் வழக்கு மாற்றப்படுவதை வரவேற்கிறீர்களா?

சிபிஐ வசம் வழக்கு மாற்றப்பட்டால் நேர்மையான முறையில் விசாரணை நடக்கும் என்று நம்புகிறோம்.

ஏன் அறநிலையத்துறை மீது இவ்வளவு பிரச்சனைகள்?

இந்தத் துறை அரசின் கைகளிலிருந்து சில தனியார் அமைப்புகளின் கைகளுக்கு மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகள் மூலம் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார்.

Dispute over Pazhani idol

பழநி தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் முருகன் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்ததில் ஐந்து பேர் கைது, பிணையில் வெளியே: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் முருகன் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்தது.  சேதமடைந்த நவபாஷாண சிலை, கடந்த 2004ம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி முத்தையா என்பவரால் புதிதாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதில் பழுது ஏற்பட்டு இருந்ததால், சில மாதங்களிலேயே அந்த சிலை அகற்றப்பட்டது. மேலும், இந்தச் சிலையை வடிவமைத்ததில் 42 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டிருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது[4]. இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில் ஒரு கோடியே 31 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது[5]. ஜுலை 2018ல் இதுதொடர்பாக,

  1. கோயிலின் முன்னாள் இணை ஆணையர் ராஜா (66),
  2. கோயிலின் முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி (60),
  3. சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா (77),
  4. நகைகள் சரிபார்ப்பு முன்னாள் அலுவலர் தேவேந்திரன் (67) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது நான்கு பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்[6]. இதைதொடர்ந்து, வழக்கின் மூன்றாவது குற்றவாளியான அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை போலீசார் தேடி வந்தனர். 06-07-2018 அன்று கும்பக்கோணம் கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்யப் பட்டு ஆஜர் ஆனார். பிணையில் வெளியே வந்தார்[7]. அவர் சிரித்துக் கொண்டே, பந்தாவாக வெளியே வந்தது, திகைப்பாக இருந்தது.  இப்படி பெரிய அதிகாரிகள், ஸ்தபதி முதலியோர் குற்றங்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாதது. கோவில்களில், தெவத்தின் பெயரில் நடக்கும் காரியங்களில் இத்தகையோர், துரோகம், மோசடி, கொள்ளை முதலியவற்றில் ஈடுபடுவது மிகக்கேவலமான குணத்தை எடுத்துக் காட்டுகிறது. இவர்கள் எல்லோருமே, ஏதோ சாதித்தது போலவும், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், இருப்பதும், நிச்சயமாக, கடவுள் ஒன்றும் செய்யாது, என்னை யாரும் ஒன்றுன் செய்து விடமுடியாது என்ற ஆணவம், அகம்பாவம் முதலியவைத் தான் வெளிப்படுகின்றன.  அதாவது, நாத்திகம், திராவிட நாத்திகம், இந்துவிரோத நாத்திகம் முதலியவை நன்றாகவே மெய்யாகிறது.

வேதபிரகாஷ்

08-08-2018

Dhanapal coming out after bail 06-07-2018.Dinakaran cutting

[1] விகடன், பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.!” – அறநிலையத்துறை சங்கங்கள் குற்றச்சாட்டு, இ.லோகேஷ்வரி, கே.ஜெரோம்,  Posted Date : 21:39 (06/08/2018); Last updated : 21:50 (06/08/2018).

DT.Next, HR and CE officials claim religious outfits backing IG Pon Manickavel, Published: Aug 07,201804:54 AM.

https://www.dtnext.in/News/TamilNadu/2018/08/07045432/1083250/HR-and-CE-officials-claim-religious-outfits-backing-.vpf

The Hindu, We are being targeted, allege HR&CE staff, STAFF REPORTER, CHENNAI, AUGUST 07, 2018 01:50 IST; UPDATED: AUGUST 07, 2018 01:50 IST

https://www.thehindu.com/news/national/tamil-nadu/we-are-being-targeted-allege-hrce-staff/article24618548.ece

[2] தமிழ்.ஒன்.இந்தியா, பொன் மாணிக்கவேல் மீது புகார் கூறும் அறநிலைய துறை, ஊழியர்கள்- வீடியோ, ஆகஸ்ட் 6. 2018.

[3] https://tamil.oneindia.com/news/tamilnadu/ig-ponmanikkavel-not-identify-the-black-sheep-the-department-endowment-employees/articlecontent-pf318885-326698.html

[4] ஈநாடு.தமிழ், நவபாஷாண சிலை முறைக்கேடு: முன்னாள் ஆணையரிடம் விசாரணை, Published 31-Jul-2018 19:20 IST.

[5] http://tamil.eenaduindia.com/State/Central/Trichy/TrichyCity/2018/07/31192203/Murugan-temple-statue-Navapashan-issue-Investigation.vpf

[6] தினகரன், சிலைமுறைக்கேடு வழக்கு: குடந்தை கோர்ட்டில் அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபால் ஆஜர், ஜூலை 07-07-2018, 01.52.57.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=418088

இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், கவிதா கைது, துறைகள் மோதும் பின்னணி என்ன? [1]

ஓகஸ்ட் 11, 2018

இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், கவிதா கைது, துறைகள் மோதும் பின்னணி என்ன? [1]

HR and CE website

அறநிலையத் துறை ஊழலுக்குத் திரும்பியது: தமிழக அரசுத் துறைகள் 1970களிலிருந்து ஓருமித்த கொள்கையுடன் செயல் பட்டு வருகின்றன. திராவிட அரசியல், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழியர்கள் என்று எல்லோருமே ஒன்றுபட்டு வேலை செய்து வருகிறனர். “முகமது பின் துக்ளக்” நாடகத்தில் சோ வசனம் போல லஞ்சம் மேலிருந்து, கீழ்வரை பட்டுவாடா செய்யப்பட்டது. சர்க்காரியா கமிஷனிடம் கூட அவர்கள் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று அறிவுருத்தப் பட்டனர். பிறகு, சர்க்காரியா கமிஷனே அசந்து விட்டது. எல்லாமே விஞ்ஞான ரீதியில் நடைப் பெற்று வருகிறது என்று சொல்லி விட்டது. இந்து அறநிலையைத் துறையினைப் பொறுத்த வரையில், அண்ணா இருந்த வரை, அப்படியும்-இப்படியுமாக ஊழலோடுத்தான் இயங்கி வந்தது. ஆனால், கருணாநிதி ஆட்சியிலிருந்து, அது நிலைநிறுத்தப் பட்டு, நிறுவனப்படுத்தப் பட்ட முறையானது. அமைதியாக கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். முதலமைச்சர்கள் நாத்திகர்களாக இருந்தது பிரச்சினை இல்லை, ஆனால், அந்த சித்தாந்தத்தினால் ஊக்குவித்து வளர்க்கப் பட்ட ஊழியர், அதிகாரிகள் தாம், இப்பொழுது, பெரிய குற்றவாளிகளாக மாறியுள்ளனர்.

Stapati Muthaiah, Dhanapal, Veerashanmugamoni

கோவில்களில் வியபாரம் பெருக ஊழலோடு, மாற்றுமதத்தினர் நுழைந்தனர்: கோவில்களில், கோவில்களைச் சுற்றி கடைகள் அதிகமாகின. வியாபாரம் பெருக-பெருக போட்டி அதிகமாகியது. கட்சிக்காரர்கள் தக்கார் என்று எல்லாவற்றிலும் நுழைந்து ஊழலைப் பெருக்கினர். சொத்துக்களை குத்தகை விடும் நிலையில், அந்நிய மதத்தினரும் நுழைந்தனர். இப்படியாக 1970-2018 ஆண்டுகளில் பல வழக்குகளில் விவரங்கள் வெளியானாலும், மறைக்கப்பட்டன. பொங்கல் கண்காட்சியில், பக்தி கமழும் வகையில், பிரம்மாண்டமாக ஸ்டால் வைத்து, மக்களை மயக்கினர். அடடா, நாத்திக அரசின் கீழுள்ள அறத்துறை இப்படியா நடக்கிறது என்று “திராவிட மாயையில்” சிக்கி ஏமாந்தனர். ஆனால், அந்த கவர்ச்சியை வைத்துக் கொண்டு தான் கொள்ளையே அடிக்கப் பட்டு வருகிறது. ஸ்டால் அமைப்பதிலேயே கோடிகள் கணக்கில் கான்ட்ராக்ட் மற்றமதத்தினருக்குச் சென்றது. கும்பாபிஷேகம், கோவில் புனரமைப்பு, போன்ற விவகாரங்களில் லட்சங்கள் பெறப்படுகிறன. ஆக, இத்துறை “தெய்வீக ஊழல் துறையாக” திராவிட ஆட்சியில் இருந்து வருகிறது. இதனால், சங்கங்கள் அமைக்கப் பட்டு, ஊழலே வியாபாரமாக்கப் பட்டது. இதனால் தான் இப்பொழுது சங்கங்கள் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவதூற்றைப் பூசப்பார்க்கின்றன.

Kavita arrested, on bail released

கவிதா கைது, சங்கம் அறிக்கை, துறைகள்ஃ மோதும் பின்னணி: காவல்துறை அதிகாரியாக முறையான விசாரணை நடத்தாமல் தனிப்பட்ட விளம்பரத்திற்காக வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி ஐஜி பொன் மாணிக்கவேல் அத்துமீறி நடப்பதாக அறநிலையத்துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது[1]. ஐஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக உயர் நீதிமன்றத்தால் சிறப்பாக நியமிக்கப்பட்டார்[2]. சிலை கடத்தல் பிரிவில் ஐஜி பொன் மாணிக்கவேலின் செயல்கள் காவல்துறை அதிகாரிகளே விமர்சிக்கும் வண்ணம் தனி நபர் விளம்பர வேலைகளாக அமைகிறது என்ற பிரச்சாரம் எழுந்தது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் உண்மைகளைவிட கூடுதல் தகவல் என்ற பெயரில் பல தகவல்கள் பரப்பப்பட்டன. சமீபத்தில் தமிழக அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா திடீரென கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்தது எந்த அடிப்படையில், அவருக்கு முறையாக சம்மன் அனுப்பினீர்களா? விசாரணைக்கு அழைத்தீர்களா என்று உயர் நீதீமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்ட விதம் குறித்த விமர்சனம் வைத்த அறநிலையத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்[3].

HR and CE press club meet briefing

சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீதரன் [the State president of the Federation of All HR&CE Associations N.L. Sridharan] செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிலை கடத்தல் குறித்த வழக்குகளின் விசாரணையில் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதும், அதே சமயத்தில் தவறேதும் செய்யாத நிரபராதிகள் யாரும் கைதுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதும் கூட்டமைப்பின் கோரிக்கையாகும். இத்துறையில் நேர்மையாக தன் கடமையைச் சட்ட விதிகளின்படி நிறைவேற்றும்பொழுது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு நிலைகளில் துறை அலுவலர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கிறார்கள். கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் அடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளிப்பேன் என்று மிரட்டுகிறார்கள். இதனால் அதிகாரிகளுக்கு வேலை செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது”.

HR and CE press club meet briefing-2

ஐஜி பொன் மாணிக்கவேல் கேட்ட தகவல்களை அறநிலையத் துறை கொடுக்க மறுத்தது: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “அறநிலையத்துறையில் நேர்மையாக செயல்பட்ட கூடுதல் ஆணையர் கவிதா மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், எந்தவித முகாந்திரமுமின்றி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைப்பற்றியும், அறநிலையத் துறைப்பற்றியும் உண்மைக்கு மாறான தகவல்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களிடையே இத்துறை மற்றும் துறை அலுவலர்கள் மீது சிலை கடத்தலுக்கு உடந்தை என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஐஜி பொன் மாணிக்கவேல் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் கோயில்களுக்கு சொந்தமான சிலைகள் குறித்த விவரங்களை புகைப்படத்துடன் அளிக்கும்படி கோரியிருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி அத்தகைய விளம்பரங்களை வழங்க இயலாது எனவும், சிலை களவு குறித்து குறிப்பான விவரங்கள் கோரப்பட்டால் அந்தச் சிலைகள் குறித்து மட்டும் விவரங்கள் வழங்கப்படும் என்று முன்னாள் ஆளுநர் தனபால் தெரிவித்தார்”.

Pon Manickavel IG

வெளிநாட்டு மியூசியங்கள் தாங்களாகவே திரும்பிக் கொடுத்ததை, மீட்டதாக பொன் மாணிக்கவேல் கூறிக்கொண்டார்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “அதன் பின்னர் வெளிநாடுகளில் உள்ள மியூசியங்களில் கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள் தவறான தகவல் அடிப்படையில் தங்களுக்கு விற்கப்பட்டதை அறிந்து அந்த நிறுவனங்கள் தாங்களாகவே சிலைகளை ஒப்படைக்க முன் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தானே கண்டுபிடித்ததாக பொன் மாணிக்கவேல் தவறான தகவல்களை ஊடகங்களில் பரப்பினார்[4]. இதுகுறித்து பொன் மாணிக்கவேல் மீது அப்போதைய ஆளுநர் தனபால் புகார் அளித்தார். இதனால் பொன் மாணிக்கவேலுக்கு தனபால் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உருவானது[5]. இதையடுத்து பழனி தண்டாயுதபாணி கோயில் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக தனபால் மீது வழக்குப் பதிவு செய்தார். மேற்கண்ட வழக்குக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்ட அனைத்து அலுவலர்களிடமும் தனபால் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்க பொன் மாணிக்கவேல் முனைந்தார்”.

Somaskanda Idol

முத்தையா ஸ்தபதி விவகாரம்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “இதே போன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமஸ்கந்தர் சிலை விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முத்தையா ஸ்தபதியிடம் கூடுதல் ஆணையர் கவிதா கூறியதன் அடிப்படையில் தங்கம் வசூலிக்கப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்[6]. அப்படி அளிக்காவிட்டால், ஸ்தபதியின் மகனை விசாரணை அழைக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள்ளனர். காஞ்சிபுரம் கோயில் திருப்பணி வழக்கில் தடையாணை பெற்றதால் அவர் மீது கோபமாக இருந்த பொன் மாணிக்கவேல், உள் நோக்கத்துடம் சோமஸ்கந்தர் சிலை வழக்கில் செயல் அலுவலர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் கைது செய்துள்ளார்[7]. ஆனால் குற்றத்தை ஒப்புக்கொண்ட செயல் அலுவலரைக் கைது செய்யவில்லை”.

வேதபிரகாஷ்

08-08-2018

Somaskanda Idol. Muthaiah Stapathi

[1] தி.இந்து, மீறுகிறார் பொன் மாணிக்கவேல்: அறநிலையத்துறை ஊழியர்கள் புகார், Published : 06 Aug 2018 18:22 IST; Updated : 06 Aug 2018 18:22 IST.

[2] https://tamil.thehindu.com/tamilnadu/article24616050.ece

[3] தினகரன், அறநிலையத்துறை அதிகாரிகள் மீதான கைது நடவடிக்கை தொடர்ந்தால் போராட்டம் : அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை, 2018-08-07@ 02:40:22

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426302

[4] தினமணி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் எங்களை களங்கப்படுத்துகின்றனர்: இந்து சமய அறநிலைய பணியாளர்கள் குற்றச்சாட்டு, By DIN | Published on : 07th August 2018 01:29 AM |

[5]http://www.dinamani.com/tamilnadu/2018/aug/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A-2975648.html

[6] விகடன், பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.!” – அறநிலையத்துறை சங்கங்கள் குற்றச்சாட்டு, இ.லோகேஷ்வரி, கே.ஜெரோம்,  Posted Date : 21:39 (06/08/2018); Last updated : 21:50 (06/08/2018).

[7] https://www.vikatan.com/news/tamilnadu/133239-ponmanikavel-is-directed-by-rss-charitable-associations.html