Archive for the ‘எதிர்ப்பு’ Category
ஏப்ரல் 16, 2019
அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்! [4]

‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்‘ என்று கனிமொழி[1]: தினமலர் தொடர்ந்து சொல்வது, “துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவரது தங்கை கனிமொழி, ‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்’ என, பேசுகிறார். தி.மு.க.,வுக்கு எதிராக, இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அகோபில மடம் சார்பில் நடத்தப்படும், ‘நரசிம்மப்ரியா’ என்ற ஆன்மிக பத்திரிகையின் ஆசிரியர் அனந்த பத்மனாபாச்சாரியாருடன் பேசினோம். “இந்து மத சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துவது, ‘இந்து என்றால் திருடன்’ என, விளக்கம் கூறுவது, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசுவது, கிருஷ்ணரை அவதூறாக பேசுவது, நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டவர்களை கேலி பேசுவது, கோவிலில் திருநீறு பூசினால் அதை அழிப்பது என, ஸ்டாலினும் அவரது அடிப்பொடிகளும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல் படுகின்றனர்.”பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா? இந்துக்கள் இப்போது பொங்கி எழுகின்றனர். இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விட, யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதை இந்துக்களிடம் எடுத்துச் சொல்ல, தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தி.மு.க.,வை எதிர்ப்பதால், வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், எந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.”என்ன பேசினாலும், அந்த பொருளில் பேசவில்லை என்று கடைசி நேரத்தில், ஒரு விளக்கம் கொடுத்து விட்டால், இந்துக்கள் அதை நம்பி நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இருந்தது. அதை, அவர் பல தேர்தல்களில் பயன்படுத்தி விட்டார். ஸ்டாலினால் அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை. ஒரு கண்டன அறிக்கையைக்கூட, மக்கள் நம்பும் வகையில் எழுதிக் கொடுக்க அவரிடம் ஆட்கள் இல்லை.”இனியும், இளிச்ச வாயர்களாக இருந்து ஏமாற, இந்துக்கள் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வரும் போது, எங்கள் முயற்சியின் சக்தி உலகத்துக்கு தெரியும்,” என்றார் ஆச்சாரியார்.

இந்துக்கள் அனைவரும், திமுகவிற்கு எதிராக ஓட்டுப் போடுவார்களா?[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்? இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு.க.வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது? தி.மு.க., அமோக வெற்றி பெற்று, 184 தொகுதிகளை பிடித்து ஆட்சிக்கு வந்தது. இப்போதும் அப்படிதான் நடக்கும்,” என்கிறார் பாரதி. இந்துக்கள், ஒரே மாதிரி ஓட்டு போடுவார்களா என்பது மே, 23ம் தேதி தெரியும்”. – வி

திராவிட தீவிரவாதம் வளர்த்து வரும் வெறுப்புப் பேச்சு: வெறுப்புப் பேச்சு (Hate Speech[4]) என்பது ஒரு இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, பரம்பரை, உடல் குறைகள், பேசும் மொழி, அரசியல் ஈடுபாடு, சமுதாயப் பின்னணி, குறிப்பிட்ட குழுவினரின் வெளித்தோற்றம் (உயரம், அகலம், எடை, தோலின் நிறம் ஆகிய குறிப்பிட்ட அடையாளம்) கொண்டோரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அந்த அடையாளங்களைப் பழித்துப் பேசி மற்றவர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுவதும் பரப்புரை செய்வதும் வெறுப்புப் பேச்சு ஆகும். இதை சினிமா, வசனங்கள், ஜோக்குகள் என்ற போர்வையில் செய்யப் பட்டு வருகின்றன. சொற்களால் குறிப்பிட்ட நபர் அல்லது சாராரின் மனம் புண்படுவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் இவ் வெறுப்பை வெளிப்படுத்தும் காரியங்களை திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இவ்வகையான நடவடிக்கைகளை பல நாடுகளிலும் அரசுகள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன, ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆள்வதாலும், 1970லிருந்து திராவிடத்துவ ஆதரவு அதிகாரிகள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் இருப்பதனால், முறையாக சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை. “காலை கைது, மாலை விடுதலை” என்ற கொள்கையில் நிறைவேறி வருகிறது.. அதே குற்றத்தை ஆயிரக் கணக்காணோர் 50 ஆண்டுகளாக திரும்பி-திரும்பி செய்து வருகின்றனர். சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும் இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக இருக்கின்றது எனவும் சில சாரார் வாதிடுகின்றனர்.

கருத்துச் சுதந்திரமும், அரசிலல் போலித் தனமும்: இப்படியும் குற்றங்கள் வளர்ந்து வருகின்றன, வளர்க்கப் பட்டு வருகின்றன. அதே நேரத்தில் “கருத்துச் சுதந்திரம்” என்பதற்கு, விள்க்கம் இல்லை, இப்பொழுது, திராவிடத்துவ கருத்துச் சுதந்திரம், இந்துக்களைத் தாக்கியுள்ளது, பிறகு ஏன் மற்ற நம்பிக்கையாளர்களை அவர்களது கருத்துச் சுதந்திரம் மண்டியிடுகிறது என்று தெரியவில்லை. ஆகவே, இது போலித் தனமானது என்று தெரிகிறது. இந்துக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது, அவர்கள் பதிலுக்கு எதையும் சொல்ல 1950களிலிருந்து, அனுமதிக்கப் படவில்லையே? இதுவரை “பார்ப்பன எதிர்ப்பு” போர்வையில் இருந்ததால், அமைதியாக இருந்தனர் போலும். இப்பொழுது, அதிகாரம் தேவை எனும் போது, இந்து உணர்வு மற்றவர்களுக்கும் வந்து விட்டதால், அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர். இதனை 14-04-2019 அன்று நியூஸ்-எக்ஸில் அதிமுக [கிஷோர்] மற்றும் திமுக [இளங்கோவன்] பேச்சாளர்களிடமிருந்து நன்றாகவே வெளிப்பட்டது.

திராவிட தீவிரவாதம், மோடி துவேசமாகி, கொலையில் முடிந்துள்ளது: வெறுப்புப் பேச்சு [Hate speech] என்று இன்று பரவலாக பேசப்பட்டு, கண்டிக்கப் படுகிறது, ஆனால், திராவிடத்துவ அரசியல் மேடை பேச்சுகளே அதில் தான் வளர்ந்தது, திறமையை வளர்த்தது, அத்தகையெ துவேச கக்கல்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் கொடுக்கப் பட்டன. இன்றும் ஸ்டாலின் அதில் சளைத்தவராக இல்லை. மோடி எதிர்ப்பு துவேசம் எதற்கு? முதலில் திமுக என்.டி.ஏவோடு கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தது. மோடி கருணாநிதி வீட்டிற்கு எல்லாம் சென்று குசலம் விசாரித்தார். ஸ்டாலினும், கனிமொழியும் பூரித்து விட்டனர். ஆனால், திடீரென்று திமுக மோடிவிரோதியாகியது. சகிப்புத் தன்மை [Tolerance] எப்படி சகிப்புத் தன்மையற்றதாகி [Intolerance] துவேசத்தில் முடிந்தது என்பது அரசியல் ரகசியம் என்று சொல்ல வேண்டும். காங்கிரஸ் கூட்டு உண்டாகியவுடன், ஸ்டாலின், மோடியை திருடன், களவாணி என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். மோடி தமிழக விரோதி போல சித்தரித்து, அதில் வெற்றியும் கண்டனர். ஈவேராவின் “பார்ப்பானைக் கொல்” போன்ற திராவிட தீவிரவாதம், கொலைவெறி முதலியன எப்படி இன்று வரை, பூணூல் / தாலி அறுப்புகளில் நடந்து வருகின்றனவோ, அதுபோல, ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்ட மோடி துவேசம், கருப்பு பலூன்கள் விட்டு, இன்று கொலையில் முடிந்துள்ளது.

தாலி கட்ட ஸ்டாலின் ஐயர், தாலி அறுக்க வீரசமணி ஐயர்: நாங்களும் “ஐயர்” தான் இந்த திருமணத்தை செய்து விட்டு, இன்னும் இரண்டு திருமணங்க்களுக்கு செல்ல வேண்டியுள்ளது, என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு ஸ்டாலின் வந்தாகி விட்டது[5]. நாளைக்கு தாலி அறுக்க, அந்த வீரமணி ஐயர் வரலா.ஆனால், இத்திருமணங்கள் எல்லாம், இத்தகைய இந்து விரோதிகள், இந்துமத துவேசிகள் முதலியோர் நடத்தி வைப்பதால், திருமணங்கள் மங்கலமாக இருக்குமா, இல்வாழ்க்கை சிறக்குமா, நாளைக்கு தாலி அறுப்பில் முடியுமா போன்ற பிரச்சினைகளை ந்ன்றாக கவனித்து தீர்மானம் செய்ய வேண்டும். ஈவேரா நடத்தி வைத்த திருமணங்கள் அசிங்கப்பட்டதை ஸ்டாலினே, இந்த வீடியோவில் ஒப்புக் கொண்டு சொல்லியாகி விட்டது. ஆகவே, சட்டப்படி, மரியாதை, நோக்கியதை பெற்ற பிறகு, இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் செய்து வைக்கும் திருமணங்கள் எங்கு போய் முடியும் என்று யோசிக்க வேண்டும். சட்டப்புறம்பாக இருப்படை, சட்டத்தில் கொண்டு வந்து, மரியாதை கொள்ளலாம். ஆனால், இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் உண்டாகும் அநாச்சாரங்களை, குழப்பங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அனுபவிக்க வேண்டியது தான்.
வேதபிரகாஷ்
14-04-2019

[1] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[2] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,
Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .
[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579
[4] speech that attacks, threatens, or insults a person or group on the basis of national origin, ethnicity, color, religion, gender, gender identity, sexual orientation, or disability
[5] https://www.youtube.com/watch?v=Declz2hIXIA
குறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கனிமொழி, கருணாநிதி, குருட்டு கருணாநிதி, சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், பச்சை. வைரஸ், பொறுமை, மோடி, மோடி எதிர்ப்பு, வன்முறை, வீரமணி, வெறுப்புப் பேச்சு, வெறுப்புப்பேச்சு, ஸ்டாலின்
இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, கருணாநிதி, கருத்து, கழகம், கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, சுடாலின், திக, திராவிட தீவிரவாதம், துர்கா, துவேசப் பேச்சு, தூத்துக்குடி, நச்சு பாம்பு, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, பகுத்தறவி, பகுத்தறிவு, பயங்கரவாதம், பலி, பிஜேபி, பெதும்பை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பேதை, பொய், பொறுமை, மதம், மாயாவதி, மோடி, மோடி துவேசம், யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், வன்முறை, வாக்காளர், விருது, வெறி, வெறுப்பு, வெறுப்புப் பேச்சு, ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 27, 2018
லிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – மற்ற மதகுருமார்களின் குற்றங்களை மறைக்கவா அல்லது 2019 தேர்தல் பிரச்சார ஒத்திகையா? (3)

சட்டங்களை மதிக்காமல் குற்றங்கள் செய்வது யார்?: இந்நாட்டு சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக, விசாரணை இன்றி குற்றங்கள் நடப்பது போன்று, இப்பொழுது ஏன் சித்தரிக்கப் பட வேண்டும். சமீப காலத்தில்,தொடர்ச்சியாக, இந்தியாவில், கிருத்துவ மததலைவர்கள், கார்டினல், பிஷப் முதல் சாதாரண பாஸ்டர் வரை, பற்பல குற்றங்களில் ஈடுபட்டு, விவரங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன, போதாகுறைக்கு, பாதிக்கப் பட்ட கிருத்துவர்களை போலீஸாருக்கு செல்ல விடாமல், நீதிமன்றங்களை அணுகாமல் தடுத்து, சர்ச்சுகளில் கட்டப் பஞ்சாயத்து போல நடத்தி, எல்லாவற்றையும் மறைத்து, அமுக்கி விடுகிறார்கள். அத்தகைய, இந்நாட்டின் சட்டதிட்டங்களை மீறிய குற்றங்கள் அதிகமாகி வருகின்ற வேலையில், சிலர் போலீஸாரிடமும் புகார் கொடுத்ததன் மூலம், பாலியல் குற்றவாளிகள் பற்ரிய விவரங்கள் அதிகமாகவே வந்துள்ளன. இதனால், அதிர்ந்து போன சர்ச்சுகள், தங்களுக்குள்ள அதிகாரம், பணம் முதலியவற்றை பயன்படுத்தி, ஊடகங்களில் அவற்றைப் பற்றிய விவரங்கள் வராமல் தடுக்க முயற்ச்சித்து வருகின்றன. இவை, கன்னியாஸ்திரிக்கள் மற்றும் கிருத்துவ பெண்கள் கற்பழிப்பு விவகாரங்கள் மூலம் வெளிவந்து விட்டன. வாடிகன், சிபிசிஐ போன்றவை உண்மைகளை மறைக்க ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளன. ஆகவே, லிஞ்சிங் விசயத்தை வைத்துக் கொண்டு, அனைத்துல ரீதியில் இந்தியாவைப் பற்றி அவதூறை ஏற்படுத்த முயன்று வருவது கவனிக்கத் தக்கது.

அமெரிக்க ஊடகத்தின் ஒப்பாரி – ஜூலை 2018[1]: அன்னி கோவன் என்ற அமெரிக்கப் பெண்மணி, இவ்வாறு விவரித்துள்ளார், “இவ்வருடத்தில், ஒரு தீவிரவாத இந்து சாமியார் தனது கருத்தை வெளிப்படுத்தியதிலிருந்து, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றி வாழும் முஸ்லிம்கள் கனவில் கூட காணாத வாழ்வினை வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முதலில், விழிப்புடன் இருக்கும் இந்துக்கள், எருமைகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். சட்டத்திற்குப் புறம்பாக, பசுக்களைக் கடத்துகிறார்களா என்று தேட ஆரம்பித்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு பசு புனிதமானது, கடத்திச் செல்பவர்களிடமிருந்து காக்கப்பட வேண்டியது. சில முஸ்லிம்கள் இவ்விசயத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிறகு டஜன் கணக்கில் கசாப்புக் கடைகள் மற்றும் 50,000 மாமிசக் கடைகள் மூடப்பட்டன; இதனால் சிகப்பு மாமிசத்தையே உணவாகக் கொண்டு வாழும் முஸ்லிம்களுக்கு உணவு அரிதானது. இந்த மாமிச வியாபரத்தையே தொழிலாகக் கொண்ட குரேஷி என்கின்ற முஸ்லிம்கள், தங்களது வேலையை இழக்க வேண்டியதாயிற்று…….”

இந்துக்களில் சிலரும் பசு மாமிசம் சாப்பிடும் போது, முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படுவதேம்?: இதில்[மேற்குறிப்பிடப் பட்ட வாஷிங்டன் போஸ்ட் செய்தியில்] –
- ஒரு தீவிரவாத இந்து சாமியார்,
- சட்டத்திற்குப் புறம்பாக, பசுக்களைக் கடத்துகிறார்களா,
- பசு புனிதமானது,
- சிகப்பு மாமிசத்தையே உணவாகக் கொண்டு வாழும் முஸ்லிம்களுக்கு உணவு அரிதானது,
- முஸ்லிம்கள், தங்களது வேலையை இழக்க வேண்டியதாயிற்று.
போன்ற சோற்றொடர்கள், விசமத் தனமானது என்பதை கவனிக்கலாம். உண்மையில் நடப்பதை விவரிப்பதை விட, சில விவரங்களை வைத்துக் கொண்டு, இந்துமுஸ்லிம் பிரச்சினையாக இதனை மாற்றும் முயற்சியை சுலபமாக கண்டறியலாம்[2]. மேலும் எவ்வாறு பல துறை அதிகாரிகள், ஏனென்டுகள் முதலியோர் வழியில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, வண்டிகளை அனுப்பி வைக்கிறார்கள் என்பதையும் விவரிக்கிறார். அதாவது, இது சட்டத்தை மீறிய வியாபாரம், அதில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று இரு கூட்டத்தினரும் சம்பந்தப் பட்டுள்ளனர். ஆகவே, வியாபார ஒற்றுமையை மறைத்து, மேலாக நடக்கும், பசு விவகாரத்தை பெரிது படுத்த வேண்டிய நோக்கம் ஏன் என்ற கேள்வி தான் எழுகின்றது. ஏனெனில், இந்துக்களில் சிலரும் பசுமாமிசம் சாப்பிடுகிறார்கள் என்பது தெரிந்த விசயமே. ஆனால், அதை ஊடகக் காரர்கள் பெரிது படுத்துவதில்லை. அவர்களுக்கு பசு மாமிசம் கிடைக்காமல் போகிறது என்று அழவில்லை. ஆக, இதெல்லாம், ஊடகக் காரர்களின் மிக்க பாரபட்சத்தினை, மதரீதியிலான சிந்தனையை மற்ரும் அவர்களது கலவரமூட்டும் போக்கினை எடுத்துக் காட்டுகிறது. உண்மையில், இதுதான், அபாயகரமானது எனலாம்.

1984 சீக்கியகளுக்கு எதிராக நடந்த கலவரம், கூட்டுக் கொலைகள்: 1984ல் இந்திரா காந்தி கொலை செய்யப் பட்டபோது, சீக்கியர்கள் தாக்கப் பட்டனர். அதில் 2,800 சீக்கியர்கள் [தில்லியில் மட்டும் 2,100] கொல்லப்பட்டனர் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், 8,800 [தில்லியில் மட்டும் 3,000] கொல்லப்பட்டனர் என்று தெரிகிறது. இதெல்லாம் கூட்டுக் கொலையில் தான் வரும், அது மட்டுமல்லாது, சீக்கியர்களை குறிவைத்து நடத்தப் பட்ட கலவரக் கொலைகள் ஆகும். அதற்கு, ராஜிவ் காந்தியும், “ஒரு பெரிய மரம், வேர்களுடன் விழுந்தால், சுற்றியிருக்கும் பூமி பாதிக்கப் படத்தான் செய்யும்,” என்ற்ற விதத்தில் பேசியது நினைவில் இருக்கலாம். அக்டோபர் 31 முதல் நவம்பர் 3ம் தேதி வரை, தொடர்ந்து கலவரம், கொலை, கொள்ளை, சூரையாடல் நடந்ததன. இப்படி பல்லாயிரக் கணக்கான நடந்த கூட்டுக் கொலையினை மறந்து, ஏதோ 2014லிருந்து தான் நடக்கின்றன என்று ஊடகத்தினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதுதான்ன் திகைப்பாக இருக்கிறது. எந்த கொலையும் நியாயப்படுத்தப் படவில்லை, ஆனால், அதேபோல, நடக்கும் குற்றங்களும் ஒரே மாதிரியாக அலசப்பட வேண்டும். அதற்கு ஊடகக் காரர்களின் தார்மீகம் பதில் சொல்லியாக வேண்டும்.

ஊடகங்கள் பொறுப்புடன், உண்மை தகவல்களை கொண்டு, இந்த விசங்களை அணுக வேண்டும்: மேலே குறிப்பிட்ட விவரங்கள் மூலம், கீழே சில விவரங்கள் சுருக்கமாகக் கொடுக்கப்படுகின்றன.
- லிஞ்சிங் என்று வர்ணிக்கப்படுகின்ற கூட்டுக்கொலை, பல இடங்களில் தன்னிச்சையாக, பொது மக்கள் வெகுண்டெழுந்ததால் நடைபெறுகிறது, இது யூத-கிருத்துவ-முகமதிய மததண்டனை போல, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடப்பதில்லை.
- எந்த மதகுருவும் விசாரித்து, தண்டனை அறிவித்து, நிறைவேற்றப்படும் தண்டனையும் அன்று.
- கசாப்புக் கடைகளில் மாடுகளைக் கொன்பது, விற்பது, வாங்குவது, மாட்டுக்கறி சமைத்து தின்பது, ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்து வருகின்றன. கடந்த காலத்தில், ஏற்றுமதி செய்வதும் நடந்து வருகின்றது. அப்பொழுதெல்லாம், இப்பிரச்சினையை எழுப்பப்படவில்லை.
- கோஷாலைகள் வைத்து, பசுக்கள்-மாடுகள் கொல்லப்படக் கூடாது போன்ற இயக்கங்களும் ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்து வருகின்றன. இன்றும், அரசியல் நிர்ணய சட்டத்தில் “பசுவதை கூடாது” என்றுள்ளது.
- பசுவதை விசயங்களில், பிரச்சினைகள், கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. அப்பொழுதும் மதசாயம் பூசப்பட்டாலும், இத்தகைய அதிரடி பிரச்சாரங்கள், ஊடகங்கள் மூலம் நடத்தப்படவில்லை.
- 2014-18 ஆண்டுகளில் தான் எல்லாமே நடந்தன, நடக்கின்றன, திட்டமிட்டு நடத்தப் படுகின்றன. அதற்கு இந்துமத தலைவர், ஆர்.எஸ்.எஸ், பிஜேபி மற்றைந்துத்துவக் காரர்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்று முடிச்சுப் போடுவதும் நடக்கிறது.
- மேலும்,அவர்களின் மொத்த உரையாடலை வெளியிடாமல், ஒரே வார்த்தை, வரி அல்லது வரியின் பகுதியை, இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்க்காமலும், அத்தகைய பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
- ஜைன மதகுருமார்கள், ஜீவகாருண்ய கூட்டத்தினர், புலால் உண்ணாதே என்பதால் எல்லோருமே உண்ணாமல் நிறுத்தி விடவில்லை.
- கசாப்புக் கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. போதாகுறைக்கு, அந்நிய கடைகளும், நவநாகரிக தோற்றத்துடன் போட்டிப் போடுகின்றன. அக்கடைகளை மூடு என்று யாரும் போராட்டம் நடத்தவில்லை. அவர்களும் எதிர்ப்பவர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை.
- ஆகவே, ஊடகங்கள் பொறுப்புடன், உண்மை தகவல்களை கொண்டு, இந்த விசங்களை அணுக வேண்டும். ஏதோ 2019-தேர்தல் பிரச்சாரத்தை செய்யும் பாணியில் ஈடுபடக் கூடாது.
© வேதபிரகாஷ்
27-07-2018

[1] Washington Post, Cows are sacred to India’s Hindu majority. For Muslims who trade cattle, that means growing trouble. By Annie Gowen July 16, 2018.
[2] India — In the year since an extremist Hindu monk was tapped to lead one of India’s biggest states, the country’s Muslim cattle traders have seen their lives change in ways they could not have imagined. First, mobs of Hindu vigilantes emboldened by the monk’s victory began swarming buffalo trucks on the road, intent on finding smugglers illegally transporting cows, which are sacred to the Hindu faith and protected from slaughter in many places in India. Some Muslim men have been killed by lynch mobs. Then dozens of slaughterhouses and 50,000 meat shops were closed, severely limiting access to red meat, a staple of the Muslim community’s diet. Hundreds from the Qureshi clan, Muslims in the meat trade for centuries, lost their jobs.
https://www.washingtonpost.com/world/asia_pacific/cows-are-sacred-to-indias-hindu-majority-for-muslims-who-trade-cattle-that-means-growing-trouble/2018/07/15/9e4d7a50-591a-11e8-9889-07bcc1327f4b_story.html?noredirect=on&utm_term=.82c263eb8d92
குறிச்சொற்கள்:1984 கலவரம், அரசியல், இந்திய-எதிர்ப்பு, எதிர்-இந்து, எரித்துக் கொலை, கல்லடி கொலை, கூட்டுக் கொலை, கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சீக்கிய கொலை, சூன்னியகாரி கொலை, படுகொலை, பொது கொலை, மோடி, மோடி எதிர்ப்பு, லிஞ்சிங், வெட்டிக் கொலை
1984 கலவரம், இந்து விரோதி, இந்து-விரோதம், இறைச்சி, எதிர்ப்பு, எரித்துக் கொலை, கலவரம், கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சீக்கிய கொலை, சூன்னியகாரி கொலை, தில்லி கொலை, பசு, பசு மாமிசம், படுகொலை, பயங்கரவாதம், பயம், பாஜப, பாதுகாப்பு, பிஜேபி, பிள்ளைக் கடத்தல், பொது கொலை, மாட்டிறைச்சி, வெறி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 19, 2018
லக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]

விகடன் வர்ணனை அகம்பாவம் பிடித்த ஊடகக்காரகளின் நிலையை எடுத்துக் காட்டியது[1]: நிர்மலா தேவியின் ஆடியோ சுற்றில் வந்ததும், திராவிட அரசியல்வாதிகள் துடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அரசியல்வாதிகளுக்கு கோடிகள் கொடுத்து, துணைவேந்தர்கள் புள்ளிகளும் தவித்தனர். இந்நிலையில், நிர்மலா தேவி கவர்னர் என்ற வார்த்தை சொன்னதை வைத்துக் கொண்டு, திராவிட அரசியல்வாதிகள் பிரச்சினையை திசைத் திருப்ப முயன்றனர். அதற்குக் கிடைத்தது பன்வாரிலால் புரோஹித்.
- `தமிழக ஆளுநர், பத்திரிகையாளர்களை மாலை 6 மணிக்குச் சந்திக்க இருக்கிறார்’ என்று உறுதி செய்யப்பட்டவுடனே ஆளுநர் மாளிகையில் இரண்டாவது நுழைவாயில் பத்திரிகையாளர்களும் கேமராமேன்களும் குவிய ஆரம்பித்தனர்.
- `பத்திரிகையாளர் சந்திப்பு, தர்பார் ஹாலில் நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஹாலில் பதவி ஏற்பு, நூல் வெளியிட்டு விழா என கவர்னர் பங்குபெறும் விழாக்கள் மட்டுமே நடைபெறுவது வழக்கம்.
- முதல்முறையாகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வு தர்பார் ஹாலில்நடப்பதால், நிருபர்களும் கேமராமேன்களும் முண்டியடித்து இடம் பிடித்தனர்.
- எல்லாரும் டீ குடிக்க வாங்க” என்று ஆளுநர் மாளிகை அதிகாரி 5:30 மணிக்கு பத்திரிகையாளர்களை அழைத்தபோது, பத்திரிகையாளர்கள் யாரும் இருக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை.
- சரியாக 6 மணிக்குதர்பார் ஹாலுக்குள் நுழைந்தார் ஆளுநர். “வணக்கம்” என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சொன்ன கவர்னருக்கு, யாரும் பதில் வணக்கம் தெரிவிக்காமல் உட்கார்ந்தே இருந்தனர்.
இப்படி பெருமையாக விவரித்தது, நாகரிகமாக இருந்தது போலும்[2]. கவர்னரின் வலதுபக்கம் ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலும், இடதுபக்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செல்லதுரை, பதிவாளர் சின்னையாவும் அமர்ந்திருந்தனர்.

கவர்னர் ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டமும், கொடுத்த விளக்கமும்: நிருபர்கள் கேட்ட கேள்விகள்:
- “உங்கள் மீதே குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இந்த விசாரணைக் கமிஷன் உங்களையும் விசாரிக்குமா?”
- “சிபிஐ விசாரிக்குமா?”
- “இது பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை. நீங்கள் விசாரணைக் கமிஷனில் ஒரு பெண் அதிகாரியை நியமித்திருக்கலாமே. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது?” என்று பெண் நிருபர், கேள்வி எழுப்பினர்.
- “சந்தானம் ஐ.ஏ.எஸ். கமிஷனின் வரைமுறைகள் என்னென்ன?”
- “நீங்கள் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும்போது நிர்மலாவும் கலந்துகொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே?’
- “நிர்மலா விவகாரம் தொடர்பாக உங்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுமா?”
- “கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படுமா?”
இத்தகைய கேள்விகளை வாழ்க்கையில் முன்னர் யாரிடமாவது கேட்டிருக்கிறார்களா? என்று இவர்கள் தெரியப் படுத்த வேண்டும்.

இருப்பினும் பொறுமையாக பதில் அளித்த கவர்னர்: “நிர்மலா தேவிஎன்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது; அவர் முகத்தைக்கூட நான் பார்த்தது இல்லை[3]. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு இப்போது எந்தத் தேவையும் இல்லை. நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்[4]. விசாரணைக் குழுவுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணைக்கு பெண் உறுப்பினர்கள் தேவையென்றால், விசாரணைக் குழு நியமித்துக் கொள்ளலாம். இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலமாகியும் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தாது தாமதித்து குறித்தும் சந்தானம் குழு விசாரணை நடத்தும். சந்தானம் தலைமையிலான விசாரணை கமிஷனுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. தேவைப்படும் யாரிடமும் அவர் உதவி கோரலாம். தேவைப்படும் இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்ளலாம். தமிழகத்தில் ஒருசில பல்கலைக்கழகங்களைத் தவிர மற்றவைகளின் செயல்பாடுகள் எனக்கு திருப்தி அளிக்கின்றன.”

கவர்னர் தொடர்ந்து கொடுத்த விளக்கம்: “நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கம் கொடுப்பதற்காக நான் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. ஆளுநராகப் பதவியேற்று 6 மாத காலமானதால் நான் உங்களைச் சந்தித்தேன். அடுத்த 6 மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் நான் உங்களைச் சந்திப்பேன். ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எனக்கு 78 வயது பிறந்துவிட்டது. கொள்ளுப்பேரன் எடுத்துவிட்டேன். நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இணைத்துப் பேசுவது அடிப்படை ஆதாரமற்றது; அபத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்தித்து வருகிறேன். நான், மாவட்டங்களில் ஆய்வு செய்யவில்லை. சாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது அரசியலமைப்பு. அரசியலமைப்பின்படியே நான் செயல்படுகிறேன். என் வேலைக்கு நான் உண்மையாகவுள்ளேன். குற்றச்சாட்டு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து எனது பணியை மேற்கொள்வேன். என்னைப் பற்றி நீங்கள் விசாரிக்கலாம். என் வாழ்க்கை வெளிப்படையானதே’’ என்றார். தொடர்ந்து ஆடியோ விவகாரம் தொடர்பாக பல்வெறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன்வைத்தபோது[5], திரும்ப-திரும்ப- நிர்மலா தேவியை தெரியுமா, பார்த்ததுண்டா போன்ற கேள்விகளை கேட்டதால், ஒருகட்டத்தில் பொறுமையிழந்த கவர்னர், “முதலில் கவர்னர் பதவிக்கு மரியாதைக் கொடுத்து கேள்வி கேளுங்கள்”, எனச் சீறினார்[6].

கவர்னர் பத்திரிக்கையாளர் கூட்டம் முடிந்த பிறகு ஒரு பெண் நிருபர் பிடிவாதமாக கேள்வி கேட்டது, கவர்னர் கன்னத்தில் செல்லமாக தட்டியது: “லக்ஷ்மி சுப்ரமணியன்” இது வரை யார் என்று தெரியாது, தெரிய வேண்டிய அவசியமும் சாதாரண பொது மக்களுக்கு இல்லை. ஆனால், மூன்று நாட்களில், இந்த அம்மணி ஊடகங்களில் காணப்பட்டு வருகிறார். பிரச்சினை நிர்மலாதேவியிலிருந்து தான் ஆரம்பித்துள்ளது[7]. பேட்டி முடிந்து விட்டது என்று அறிவித்தப் பிறகும், சிலர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். அந்நிலையில், ஒரு பெண் நிருபர், கேட்டதையே திரும்ப கேட்டார். ஒரு கேள்வி என்று விரலை நீட்டிக் கொண்டு கேட்டபோது, தான் கவர்னர், கைகளை உயர தூக்கி கேட்டதையே கேட்கிறீர்களே என்று அருகில் வந்து செல்லமாக அன்னத்தில் தட்டினார். உடனே சொல்லி வைத்தால் போன்று பிளாஷ் வெளிச்சம் வந்ததயும் வீடியோவில் காணமுடிகிறது[8]. இதை வைத்துக் கொண்டு தான், இப்பொழுது பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது. “தமிழக கவர்னரிடம் பேட்டியின் போது நான் கேள்வி கேட்டேன். அவர் பதிலாக என் அனுமதி இல்லாமல் என் கன்னத்தை தட்டினார் என்று அந்த பெண் நிருபர் ட்வீட்டியுள்ளார்”. அதிலிருந்து, இது ஏதோ உலகத்திலேயே பெரிய பிரச்சினை போல ஊடகத்தினர் ஆரம்பித்தனர்.
© வேதபிரகாஷ்
19-04-2018

[1] விகடன், தேநீர் முதல் கன்னம் தட்டல் வரை… கவர்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன?, ஞா. சக்திவேல் முருகன், Posted Date : 17:18 (18/04/2018) Last updated : 11:03 (19/04/2018)
[2] https://www.vikatan.com/news/miscellaneous/122567-tamilnadu-governor-banwarilal-purohit-press-meet-details.html
[3] விகடன், `நிர்மலா தேவியைப் பார்த்ததே இல்லை; காவிரிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்!’ – ஆளுநரின் முதல் செய்தியாளர் சந்திப்பு, MUTHUKRISHNAN S Posted Date : 18:18 (17/04/2018) Last updated : 19:41 (17/04/2018)
[4] https://www.vikatan.com/news/tamilnadu/122485-anyone-who-is-guilty-will-be-punished-says-banwarilal.html
[5] விகடன், “கவர்னர் பதவிக்கு மரியாதை கொடுத்து கேள்வி கேளுங்கள்..!” சீறிய பன்வாரிலால் புரோஹித், கா . புவனேஸ்வரி கா . புவனேஸ்வரி வி.ஶ்ரீனிவாசுலு, Posted Date : 20:28 (17/04/2018) Last updated : 20:28 (17/04/2018)
[6] https://www.vikatan.com/news/coverstory/122491-give-respect-to-my-post-and-shoot-your-questions-slams-banwarilal-purohit.html
[7] இங்கு தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கப் படவில்லை, அச்சின்னங்கள் எவ்வாறு ஊடகங்களில் பிரதிபலிக்கின்றன, பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டுள்ளன, சித்தாந்த ரீதியில் வெளிப்படுகின்றன என்பது கூர்மையாக அலசப்படுகிறது.
[8] https://m.youtube.com/watch?v=BJVCHzERpMM&feature=youtu.be
குறிச்சொற்கள்:அரசியல், கன்னம், கவர்னர், காமராஜ், கிள்ளு, செக்யூலரிஸம், செக்ஸ், செய்தி, செல்போன், தடவு, தட்டு, தேவாங்கர், நிர்மலா, நிர்மலா தேவி, பன்வாரிலால், பல்கலைக் கழக துணை வேந்தர், பாலியல், புரோஹித், பெண், பெண்கள், மதுரை, மதுரை காமராஜ், லக்ஷ்மி, லக்ஷ்மி சுப்ரமணியன், லட்சுமி, லட்சுமி சுபரமணியன்
அசிங்கம், அதிமுக, அரசியல், ஆபாசம், ஆர்.எஸ்.எஸ், எதிர்ப்பு, கன்னம், கவர்னர், காமராஜ், கிள்ளு, செக்யூலரிஸம், செக்ஸ், தடவு, தட்டு, திமுக, திராவிடம், தொடு, நிர்மலா, நிர்மலா தேவி, பன்வாரிலால், பன்வாரிலால் புரோஹித், பல்கலைக் கழக துணை வேந்தர், புகார், புரோஹித், மதுரை காமராஜ், லக்ஷ்மி, லக்ஷ்மி சுப்ரமணியன், லட்சுமி, லட்சுமி சுப்ரமணியன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 10, 2018
தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஊடகங்கள் மோடிக்கு எதிராகத்தான், செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எந்த சந்தர்பதையும், “தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி” என்று தான் வர்ணித்து முடிக்கும் போக்கு, சம்பிரதாயமாக உள்ளது. விடுதலை சிறுத்தை, ரவிக்குமாரின் கருத்து[1], “தனித் தொகுதியில், வெற்றியை தலித் வாக்குகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்பது உண்மைதான் ஆனால், 2014 ல் பாஜகவுக்கு சுமார் 24 சதவீத தலித் வாக்குகள் கிடைத்தன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2009 தேர்தலின்போது அது 12% தலித் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. தலித்துகளின் ஆதரவால்தான் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்க முடிந்தது என்பதால், தலித் மக்களிடம் பாஜக நன்றியோடு நடந்துகொள்ளும், அவர்களது மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக சுதந்திர இந்திய வரலாற்றில் தலித் மக்கள் மிக அதிகமான இன்னல்களை சந்திக்கும் ஆட்சியாக பாஜக ஆட்சி உருவெடுத்துள்ளது.” தமிழ்.பிபிசி.யின் நிலையே இப்படி என்றால், செக்யூலரிஸ, கம்யூனிஸ வகையறாக்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[2]. பாகுபாடற்ற, நடுநிலையான, கருத்துகள், அலசல்களுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற போக்கே இல்லாத முறை கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் எப்படியும் வென்று விடுவது என்ற வெறியில் உள்ளது: மே 12, 2018 – தேர்தலை வைத்து, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கம்யூனலிஸ அரசியலை வெளிப்படையாகவே நடத்தி வருகிறார். லிங்காயத்துகளை இந்துக்கள் அல்ல, மைனாரிட்டி என்று அறிவிக்க ஏற்பாடு செய்து வருகிறார். எஸ்.சிக்களை கவர சென்ற ஜூலை 2017ல், ரூ 4 கோடி செலவழித்து, அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். அது முழுக்க-முழுக்க காங்கிரஸ் மாநாடாகவே நடத்தப் பட்டது. காங்கிரசில், சோனியாவைத் தவிர அனைவரும் கலந்து கொண்டனர். மார்ச் மாதத்தில், அமித் ஷா, சித்தராமையா “அஹிந்தா” தலைவர் [a Kannada acronym for minorities, backward classes and Dalits] இல்லை, “அஹிந்து,” [anti-Hindu] தலைவர் என்று விமர்சித்த போது, பதிலுக்கு அவர் அமித் ஷாவை இந்துவா, அஹிந்துவா என்று கேட்டார்[3]. “அமித் ஷா ஒரு ஜெயின். ஆகையால் முதலில் அவர் தான் இந்துவா, அஹிந்துவா என்பதை தெரியப் படுத்த வேண்டும். அதை விட்டு, என்னைப் பற்றி ஏன் பேச வேண்டும்?…..” என்று வினவினார்[4]. இதற்கு, அமித் ஷா, தான் இந்து, வைஷ்ணவர் என்று விளக்கம் அளித்தார்[5]. அது மட்டுமல்லாது, சித்தராமையா தான், லிங்காயத்துகளை தனி மதம் என்று இந்துக்களை பிரிக்க முயல்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்[6]. இவ்வாறான, கம்யூனலிஸ பேச்சுகள் ஆரம்பித்து விட்டன.

எஸ்.சிக்களை பிரிக்க சதி: இந்துக்களைப் பிரிப்பது என்ற திட்டத்தில், இனி அடுத்தது தலித்துகளை பிஜேபியிலிருந்து விலக்குவதுதான். அதற்கான யுக்திதான், எஸ்.சி-எஸ்.டி சட்டத்தைப் பற்றிய துர்பிரச்சாரம். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை திட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்பினர் கடந்த 02-04-2018 அன்று நாடு தழுவிய பந்த் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக புகார் இருந்தது[7]. இதனை உறுதிப்படுத்தி சென்னையில் பேட்டியளித்துள்ள பாஜக எம்.பி உதித்ராஜ் தலித் மக்கள் பழிவாங்கப்படுகின்றனர் என்று கூறினார். அவர் பேசியதை திரித்து செய்தியாக வெளியிடப்பட்டது. அதை அவரே எடுத்துக் காட்டினார்[8]. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலித் எம்.பி.க்கள் மூன்று பேர் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு எந்த நன்மையையும் செய்யவில்லை என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்[9]. பிரதமர் மோடிக்கு எதிராக பாரதிய ஜனதா தலித் எம்.பி.க்கள் திடீரென போர் கொடி தூங்கியதால் அக்கட்சியின் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது[10]. இதனிடைய டெல்லியில் பேட்டியளித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடந்த வாரம் நடைபெற்ற பாரத் பந்த் போராட்டம் வெற்றிபெற்றதால் நாடு முழுவதும் இருக்கின்ற தலித் மக்கள் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அகிலேஷ் யாதவும், த்மது 21 ஆண்டுகள் பகைமையை மறந்து, மாயாவதி கூட தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள சம்மதத்தைத் தெரிவித்தார்[11]. சமஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்[12].

ராகுலின் பேச்சு ஒரே மாதிரியாக இருப்பது[13]: ராகுல் காந்தி 03-04-2018 அன்று தாவணகெரேவில் பேசியதாவது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பற்றி ஒரு வார்த்தை கூட நல்லவிதமாக பேச முடியாது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. வளர்ச்சி குன்றிவிட்டது. வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. விவசாயம் அழியும் நிலையில் உள்ளது. விலைவாசி உயர்வால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அவதிப்படுகின்றனர். சிறுபான்மையினர் எந்த உரிமையும் இல்லாமல் தவிக்கின்றனர். மோடி ஆட்சியில் தலித் மக்கள் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால் மத்திய அரசு எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்திருக்கிறது. ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலா கொல்லப்பட்டார். குஜராத் மாநிலம் உனாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் தலித் மக்கள் கொல்லப்பட்டனர். இதனைப் பற்றியெல்லாம் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜக அரசு, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்து, தலித் மக்களை ஒடுக்கி வருகிறது. இதனை கண்டித்து வீதிக்கு வந்து போராடும் தலித் மக்களை பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதற்கெல்லாம் வருகிற மக்களவை தேர்தலில் தலித் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். கர்நாடக தேர்தலிலும் தலித் விரோத கட்சியான பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலித் மக்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்படும்,” இவ்வாறு ராகுல் பேசினார்[14].

பிஜேபி தலித்–விரோத அரசு, கட்சி – காங்கிரஸ் பிரச்சாரம்: மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தலித் இன மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. 09-04-2018 அன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டது. இதில் சம்பந்தம் இல்லாத, வேறுபட்ட கருத்து கொண்ட கட்சிகள் தங்களது பதாகைகளுடன் நின்றது வேடிக்கையாக இருந்தது. சமீபத்தில் எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு செய்த திருத்தம் தலித் இன மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக வடமாநிலங்களில் நடந்த வன்முறையில் 9 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் டாக்டர் அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பா.ஜ.க. அரசுக்கு எதிராக தலித் இன மக்களை திருப்பிவிட காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதை அறிந்த பா.ஜ.க., அந்த திட்டத்தை முறியடிக் கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
© வேதபிரகாஷ்
09-04-2018

[1] பிபிசி.தமிழ், மோதி அரசின் மூன்றாண்டுகள் : ‘தலித் வாக்குகளுக்கு மோதி போடும் வாய்ப்பந்தல், ‘ரவிக்குமார் துரை, எழுத்தாளர், கவிஞர், 1 ஜூன் 2017
http://www.bbc.com/tamil/india-40105698
[2] வினவு, தீக்கதி, விடுதலை முதலியவற்றைப் படித்துத் ந்தெரிந்து கொள்ளல்லாம்.
[3] News.18, Siddaramaiah Asks Amit Shah to Clarify if He’s a Hindu or Jain, PTI, Updated:March 30, 2018, 7:32 AM IST
[4] https://www.news18.com/news/india/siddaramaiah-asks-amit-shah-to-clarify-if-hes-a-hindu-or-jain-1703477.html
[5] NDTV, “I Am A Hindu Vaishnav, Not Jain”: Amit Shah, All India | Press Trust of India | Updated: April 06, 2018 22:48 IST.
[6] https://www.ndtv.com/india-news/i-am-a-hindu-vaishnav-not-jain-amit-shah-1833945
[7] Hindustan Times, BJP to convince Dalits to remain with party, says Udit Raj after ‘torture’ claim, Updated: Apr 08, 2018 18:26 IST.
[8] “My tweets r (are) misconstrued that its harming BJP rather it strengthens that at least there r people like me in BJP who r concerned with Dalit atrocities after 2 April agitation. It will convince Dalits & they will remain with party. Govt will check anti-dalit officer/ people (sic),” Udit Raj said on Twitter.
https://www.hindustantimes.com/india-news/bjp-to-convince-dalits-to-remain-with-party-says-udit-raj-after-torture-claim/story-4mH32TO02jTaz2qO2uRBIL.html
[9] தினகரன், பிரதமர் மோடிக்கு எதிராக பாஜக தலித் எம்.பி.க்கள் திடீரென போர் கொடி, 2018-04-08@ 19:43:28
[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=391696
[11] Financial Express, Akhilesh Yadav on pact with Mayawati: SP-BSP alliance will knock the daylight off BJP in 2019, By: FE Online | Published: April 8, 2018 2:22 PM.
[12] http://www.financialexpress.com/india-news/akhilesh-yadav-on-pact-with-mayawati-sp-bsp-alliance-will-knock-the-daylight-off-bjp-in-2019/1125566/
[13] இரா.வினோத், தலித் மக்களை மத்திய அரசு ஒடுக்குகிறது: கர்நாடகாவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு, Published : 04 Apr 2018 08:20 IST, Updated : 04 Apr 2018 08:20 IST.
[14] http://tamil.thehindu.com/india/article23430610.ece
குறிச்சொற்கள்:அமித், அமித் ஷா, அம்பேத்கர், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துத்துவம், எதிர்-இந்து, எஸ்.சி, எஸ்.டி, கர்நாடகா, காங்கிரஸ், சங்கம், சட்டம், சித்தராமையா, சோனியா, தலித், தலித் அரசியல், தலித் விரோதம், தலித்துவம், மைனாரிடி, மோடி, மோடி எதிர்ப்பு, லிங்காயத்
இந்து, இந்து விரோதி, இந்து-விரோதம், எதிர்ப்பு, சோனியா, தலித், திமுக, தேர்தல், தேர்தல் பிரச்சாரங்கள், நாயுடு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பரிவார், பாஜப, பிஜேபி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஒக்ரோபர் 26, 2017
“ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ் சேவ்ஸ்”ம் இப்பொழுதையதல்ல, ஜி.எஸ்.டி பற்றிய தவறான சித்தரிப்பு கண்டிக்கத் தக்கது, இதில் பிஜேபி–எதிர்ப்பு வந்துள்ளது மர்மமானது! (1)

மெர்சல் பட வசனங்களும் பிஜேபி எதிர்ப்பும்: ஏற்கனவே இந்த மெர்சல் படம், தலைப்பை எதிர்த்து வழக்கு, விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு, தணிக்கை சான்று வழங்குவதில் இழுபறி என்று பல்வேறு சர்ச்சைகள் மற்றும் தடைகளை கடந்தே திரைக்கு வந்தது. தடைகளைத் தாண்டி ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று தமிழகத்தில் வெளியானதும், அதில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதால், அதைப் பற்றி பிரச்சினை பெரிதானது. அந்தப்படம் அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி விவாதத்தை ஏற்படுத்தியது. அந்தத் திரைப்படத்தில், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப்பற்றியும் நடிகர் விஜய் வசனம் பேசியுள்ள காட்சிகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவிர மருத்துவமனை, மருத்துவ முறை முதலியவற்றைப் பற்றிய வசங்கள் அந்த தொழிலையே இழிவாகச் சித்தரிப்பது போல உள்ளது. இதோ, சில வசனங்களைப் பார்ப்பொம் [இவையெல்லாம் ஊடகங்களில் வெளிவந்துள்ளவை]:
- 7 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற சிங்கப்பூர், மக்களுக்கு மருத்துவத்தை இலவசமா தர்றப்போ, 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமா தர முடியலை?
- மெடிக்கலுக்கு 12 பெர்சன்டாம்… ஆனா தாய்மாருங்க தாலிய அறுக்கிற சாராயத்துக்கு ஜி.எஸ்.டி கிடையாது.
- இன்னொரு கவர்மென்ட் ஆஸ்பிட்டல் டையாலிசிஸ் பன்றப்ப கரென்ட் கட் ஆகி 4 பேர் செத்தே போயிட்டாங்க. ஒரு பவர் பேக்கப் கூட இல்லை. இன்குபேட்டரில் இருந்த குழந்தை பெரிச்சாலி கடிச்சு இறந்தத நம்ம ஊர்ல மட்டும்தான்யா பாக்க முடியும்.
- ஜனங்க நோயைப் பார்த்து பயப்படுறதைவிட, கவர்மென்ட் ஹாஸ்பிட்டலைப் பார்த்து பயப்படுறதுதான் அதிகம். அந்தபயம்தான்… பிரைவேட் ஹாஸ்பிட்டல்ஸோட இன்வெஸ்ட்மென்ட்!”
- நம்ம நாட்டோட நம்பர் 1 மருத்துவமனையில ஆக்சிஜன் சிலிண்டரே இல்லை. என்னடா காரணம் கேட்டா, ஆக்சிஜன் சப்ளை பன்ற நிறுவனத்துக்கு 2 வருஷமா பணம் பாக்கியாம்.
- அப்ப உங்க கொலையை நியாயப்படுத்த பாக்கிறீங்களா? என படத்தில் செய்தியாளர் ஒருவர் விஜய்யிடம் கேள்வி எழுப்புகையில், நான் செஞ்சது கொலையே இல்ல. எவன் சொன்னான். செல்லரிச்சு போன மெடிக்கல் சிஸ்டதோட கிளீனிங் பிராசஸ்” என்ற விஜய்.
- கோவில் கட்டறதுக்கு பதிலாக, ஆஸ்பிடல் கட்டலாம்.
- “நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்” என்ற வசனத்தை முன்னோட்டத்தின் தொடக்கத்திலேயே விஜய் பேசுவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

பிஜேபியை எதிர்ப்பு, மோடியை தாக்குதல், ஏன்?: சினிமாவில் வசனங்கள் கற்பனையாக இருக்கலாம், கதை அல்லது சித்தரிப்பு வரலாறு மற்றும் சமீபத்தைய கால நிகழ்வுகளைப் பற்றியதாக இருந்தால், அவ்வசனங்கள் தவறாக, உண்மைக்குப் புறம்பாக இருக்க முடியாது[1]. அதே நேரத்தில், 120 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் நடக்கும் சமூக நிகழ்வுகளை விமர்சிக்கும் போது, சமூக பிரஞை அதிகமாகவே இருக்க வேண்டும். ஏதோ குறை கூற வேண்டும் என்ற ரீதியில் இருக்கக் கூடாது. நாட்டின் பொருளாதார, சமூக-பொருளாதார, நிதி, மருத்துவம் போன்ற விசயங்கள், நடைப்படுத்தும் திட்டங்கள், செயல்பாடு, அவற்றின் பலன் முதலியவற்றை ஒரு கோணத்தில் மட்டும் கவனித்து விமர்சிக்கவோ, முடிவுக்கு வரவோ முடியாது. மேலும், செக்யூலிரஸ என்ற போர்வையில் ஒரு குறிப்பிட்ட மதத்தையே விமர்சிப்பது, குறை கூறுவது, கேலி பேசுவது முறையாகாது. அதேபோல, சித்தாந்த ரீதியில் இப்பொழுது, பிஜேபியை எதிர்ப்பது, மோடியை தாக்குவது, இப்பொழுதைய அரசின் திட்டங்கள் அனைவற்றையும் குறை கூறுவது முதலியவை பாரபட்சமானது என்பது தெரிந்த விசயமே. முன்பு சகிப்புத் தன்மை என்ற போர்வையில் கலாட்டா செய்தனர், பிறகு, மாட்டிறைச்சி என்று திசைமாறியது. இப்பொழுது அமைதியாக இருக்கும் வேலையில், மறுபடியும், குறைகூறும் படலம் இப்பொழுது, மெர்சல் வடிவத்தில் வந்துள்ளது. மறுபதியும் ஒட்டு மொத்தமான பிஜேபியை எதிர்ப்பு, மோடியை தாக்குதல், என்றுதான் உள்ளது. வழக்கம் போல காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள் என்று எதிர்ப்பில் சேர்ந்துள்ளனர்.

பொய்யான ஜி.எஸ்.டி– சிங்கப்பூர் வசனங்கள் அரசியல் ரீதியிலானது: விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவை, அறிவுபூர்வமாக, உண்மையாக இல்லை. ஜி.எஸ்.டி. சட்டமுறையினை தெரிந்து கொள்ளாமல் எழுதியது அல்லது விசமத் தனமாக சேர்த்தது தான் தெரிகிறது. சினிமா என்ற போர்வையில் பொய்களை சொல்வதில் பரப்புவதில் சினிமாக்காரர்கள் ஈடுபட முடியாது. மேலும், இவர்கள் முன்னர் சேவை வரியை எதிர்த்தவர்கள், இப்பொழுது, ஜி.எஸ்.டி.யை எதிர்க்கின்றனர். மேலும் வரியேப்பதில், சின்மா உலகத்தினர் உள்ளனர் என்பதும் தெரிந்த விசயமாக இருக்கிறது. இதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது போன்ற விமர்சனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் கோரினர்[2]. ஆனால், அந்தக் காட்சிகள் நீக்கப்படவில்லை[3]. தவிர, திரையுலகைச் சேர்ந்தவர்களும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்தத் திரைப்படம் குறித்து தொடர்ந்து கடுமையாகப் பேசிவந்த பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, விஜய்யைக் குறிப்பிடும்போது அவரது மதத்தை சுட்டிக்காட்டும் வகையில் அவரை ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

மகனுக்காக தந்தை வாதிட்டது செக்யூலரிஸமாக இல்லை: மதத்தை வைத்து, விஜயை இருத்துவன் என்று சொல்லலாமா என்று வாதிட்டது, சந்திரசேகர் கொடுத்த விளக்கம் பொதுப்படையாக, செக்யூலரிஸ ரீதியில் இருந்தது[4]. கமல் ஹஸன் முஸ்லீமா போன்ற வாதங்கள் வேடிக்கையாக இருந்தது[5]. ஜோசப் விஜய் என்று விகிபீடியா போன்றவை ஏற்கெனவே பதிவு செய்துள்ளன. அவர் சொல்வது போல, இவர்கள் கிருத்துவர்கள் என்று ஒருசிலருக்கே தெரியும். சினிமா உலகத்தில் மதம் ஒரு பிரச்சினை கிடையாது. ஆனால், அதை வைத்து வியாபாரம் செய்ய முற்படும் போது, பொதுப் பிரச்சினையாகும் போது மற்றவர்கள் கவனிக்க ஆரம்பிக்கின்றனர். இப்பொழுது, ஜி.எஸ்.டி யை எதிர்த்தது, சிங்கப்பூர் உதாரணம் காட்டியது, டாக்டர்களை கேவலமாக சித்தரித்தது முதலியன பொதுப் பிரச்சினைகள் ஆகின்றன. தந்தை, மகன் அரசியலுக்கு வருவான் என்று பேசிய போக்கு, முதலமைச்சரைப் பார்த்தப் பிறகு, படம் வெளியானது, பொய்யான ஜி.எஸ்.டி- சிங்கப்பூர் வசனங்களை நீக்குகிறோம் என்றது, பிறகு முடியாது என்றது, அதற்குள் இவற்றை வைத்துக் கொண்டு, ஒட்டு மொத்தமாக பிஜேபியை, மோடியை தாக்க ஆரம்பித்தது, ராஹுல் காந்தி, சிதம்பரம் முதலியோர் ஆதரித்தது முதலிய அரசியல் ஆக்கிவிட்டது. அந்நிலையில் அனைவராலும் தாக்கப் படும் பிஜேபிகாரர்கள் பதிலுக்கு பேசியதில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க முடியாது. ஆனால், ஒட்டு மொத்தமாக வரம்பு மீறிய விமர்சனங்களை வைத்துள்ளது பொது மக்களிடையும் சந்தேகத்தை எழுப்பியது.
© வேதபிரகாஷ்
26-10-2017

[1] ஹாலிவுட் சினிமாக்கள், ஓரு கருத்தைப் பற்றி படமெடுப்பதாக இருந்தால் அந்தந்த துறைகளில் உள்ளவர்களை கலந்தாலோசித்து, உண்மைகளை அறிந்து, படங்கள் எடுப்பர். உத்தேசமாகவோ, கற்பனையிலேயோ இருந்து கொண்டு, பொய்களை பரப்ப மாட்டார்கள்.
[2] பிபிசி.தமிழ், மெர்சல் பட வெற்றிக்கு ஜோசப் விஜய் நன்றி, 25 அக்டோபர் 2017.
[3] http://www.bbc.com/tamil/india-41752132
[4] News7Tamil, ஜோசப் விஜய் தொடர்பான சர்ச்சைக்கு விஜயின் தந்தை SAC விளக்கம்,
23 அக்., 2017.
[5] https://www.youtube.com/watch?v=iONiCGIGKm4
குறிச்சொற்கள்:அரசியல், இலவசம், ஊடகம், எச். ராஜா, ஏசு, ஏசுகிருஸ்து, சந்திரசேகர், சிங்கப்பூர், சினிமா, செய்தி, ஜி.எஸ்.டி, ஜீசஸ், ஜோசப் விஜய், தீபாவளி, மதமாற்றம், மதம், மருத்துவம், மெர்சல், ராஜா, விஜய்
அதிமுக, அரசியல், ஆட்சி, இந்து தூஷிப்பு, இந்து விரோதி, எச். ராஜா, எதிர்ப்பு, எஸ். வி. சேகர், கமல் ஹஸன், காங்கிரஸ், காவி, கிறிஸ்தவன், கிறிஸ்தவம், கிறிஸ்தவர், சந்திரசேகர், சிதம்பரம், செக்யூலரிஸம், ஜோசப் விஜய், தமிழிசை, திமுக, தீபாவளி, பிஜேபி, பொய், மெர்சல், ரஜினி, ராகுல் காந்தி, விஜய், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
மே 26, 2016
ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை!

வழக்கம் போல இந்த ஆண்டும் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனைக்குப் புறப்பட்டோம். வல்லளார் மன்றத்தில் தங்கினோம். நெரூர் அக்ரரஹார வீதியில் மாற்றம் எதுவும் இல்லை. நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் சபாவுக்கு செல்லும் வழியில் சிலதூரத்திற்கு கான்கிரீட் சாலை அமைத்துள்ளனர். திருமதி ஈஸ்வரி சங்கர், ஒன்றிய கவுன்சிலர் என்று கான்கிரீட் அறிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மண்தெரு இருந்ததால், நான்கு வரிசைகளில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட வசதியாக இருந்தது. நடுவில் காவிரி ஆற்று நீர் ஓடுகிறது, இரு பக்கமும் மண் தெரு, பழைய ஓடு வீடுகள். சில வீடுகள் கூரை விழுந்து, இடிபாடுகளுடன் கிடக்கின்றன. 15-05-2016 அன்று அங்கடைந்தபோது, தெரு இப்படித்தான் இருந்தது. வழக்கம் போல இருக்கும் கூட்டம் இல்லை. வீதி காலியாக இருந்தது. அடுத்த நாள் (16-05-2016) தேர்தல் என்ற காரணம் இருந்தாலும், வழக்கம் போல அங்கபிரத்க்ஷ்ணம் நடக்காது என்பதால் கூட்டம் குறைந்து விட்டது என்று தெரிகிறது.

ரஜினி வந்து விட்டுப் போன சித்தர் கோவில்: கரூர் அருகே நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனையின் போது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்தர் சமாதி, ரஜினி முதலியோர் வந்து போகின்றனர் என்ற செய்திகளால் பிரபலமாகி வருகின்றது[1]. சினிமாகாரர்கள் வந்து போகிறார்கள் என்றால் பக்தி கூடுகிறதா, பக்தர்கள் கூடுகிறார்களா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்களும் நெரூர் கோவிலுக்கு வருகின்றனர். மற்ற நேரங்களில் இவ்வூருக்கு வர்பவர்கள் யாரும் இல்லை எனலாம். அதனால், இவ்விழா நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவ்வூர் மக்கள் ஆர்பாட்டம் செய்வதுண்டு. நூறு ஆண்டுகளாக இவ்விழா நடந்து கொண்டிருக்கும் போது, ஏன் வருடாவருடம், இதில்லை-அதில்லை என்று உள்ளூர் மக்கள் புகார் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனையின் போது கோவிலுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்: அவ்வாறு ஒவ்வொரு வருடமும், ஏதாவது கோரிக்கை வைத்து புகார் கொடுப்பர். 2016லும் அதேபோன்ற புகார்களை வைத்தனர். நெரூர் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாலும், குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து தண்ணீர் தேங்கி நிற்பதாலும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது[2]. டூவீலர்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், குண்டும், குழியுமான சாலையில் செல்லும் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, நெரூரில் சதாசிவம் பிரமேந்திரர் கோவிலுக்கு செல்லும் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று தினமலர் செய்தி வெளியிட்டது[3]. நெரூர் சதாசிவ கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்[4]. சுகாதார வளாகம் இல்லாமல் இருப்பதால், திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிட வசதி, இருக்கை வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றெல்லாம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன[5]. ஆனால், 101 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த அங்கப் பிரதிக்ஷணம் நின்று விட்டதால், இவ்வருடம் கூட்டம் வரவில்லை என்பதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம்: நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம் 16-05-2016 அன்று நடைபெற்றது[6]. கரூர் அருகே உள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் 102வது ஆராதனை விழா கடந்த 11ம்தேதி துவங்கியது. வைசாக சுத்த பஞ்சமி சங்கரஜெயந்தி அன்று உற்சவம் ஆரம்பித்து தினமும் பாகவத கோஷ்டியுடன் உஞ்சவிருத்தி, கிராம பிரதட்சணம், மஹன்யாசபூர்வ அபிஷேகம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் நடைபெற்றது[7]. வழக்கம் போல, அலங்கரிக்கப்பட்ட சதாசிவ பிரமேந்திராளின் உருவப் படத்தினை மடத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இசை கச்சேரியை ரசித்ததுடன், சதாசிவ பிரமேந்திராளின் அருளும், ஆசியும் பெற்றனர்[8]. 16-05-2016 அன்று (திங்கள்) வைசாக சுத்த தசமி தினத்தில் பிரம்மேந்திரசரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்சவம் நடைபெற்றது. லட்சார்ச்சனை பூர்த்தியும், ஸந்தர்ப்பனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நெருர் சதாசிவபிரம்மேந்திர சபா, நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சேவா டிரஸ்ட், நிர்வாக அங்கத்தினர் பக்தர்கள் செய்திருந்தனர். 25-05-2016, புதன்கிழமை அன்று நிகழ்ச்சிகள் முழுமை அடைந்தன[9].

102வது ஆராதனையின் போது அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை: 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அங்கபிரதிக்சணம் இவ்வருடம் நடைபெறவில்லை. சென்ற வருடம் தடை விதித்தது என்றால், ஒரு வருட காலமாக, நெரூர் சதாசிவ பிரும்மேந்திரர் சபை மற்றும் இதை ஆதரிக்கும் பல பிரபலங்கள், பக்தர்கள், சித்தர்-விரும்பிகள் மற்றும் அவரை ஆராதித்தித்தால் பலன் அடைந்தவர்கள் ஏன் மௌனமாக இருந்தார்கள் என்று தெரியவில்லை. பல நீதிபதிகள், வக்கீல்கள் எல்லோருமே வந்து சென்றுள்ளனர். பிறகு, அவர்களுக்குக் கூட ஒன்றும் தோன்றவில்லையா என்று புரியவில்லை. இதுவிசயமாக 15-05-2016 அன்று ஹனுமந்தராவ் என்பவருடன் பேசி, விசாரித்தபோது, வழக்கைப் பற்றிய விவரங்கள், திருச்சியில் உள்ள வக்கீலுக்குத் தான் தெரியும் என்றும், இவ்வருடம் அங்கப்பிரதிக்சணம் நடைபெறாது என்றும் தெரிவித்தார். 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அங்கபிரதிக்சணம் நிறுத்தப்பட்டால், அதை ஏற்கக்கூடிய மக்களின் நம்பிக்கைப் புண்படாதா, அவர்களது உரிமைகள் பாதிக்கப்படாதா என்பதெல்லாம் ஆராயவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்ததில், இதுவரை அசுத்தத்தால் இலைகளில் புரண்டவர்களுக்கு நோய் ஏற்பட்டது போன்ற எந்த புகாரும் இல்லை. மாறாக தனது நோய் போய் விட்டது என்று சிலர் கூறிக் கொண்டுள்ளனர். ஆகவே, அந்த தலித் பாண்டியன் வேண்டுமென்றே விளம்பரத்திற்காக இவ்வழக்கைப் போட்டிருப்பதும், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் பக்தர்கள் பயந்து அமைதியாக இருப்பதும் தெரிகிறது. உதாரணத்திற்கு ஏப்ரல் 2016ல் நடந்த ஒரு நிகழ்ச்சி குறிப்பிட்டப்படுகிறது. ஏனெனில், கரூர் அருகே அது நடந்துள்ளது.

ஏப்ரல் 2016 திருவிழாவில் சுத்தமற்ற உணவு உண்டதால் வாந்தி, மயக்கம்: கரூர் அருகே கோவில் திருவிழாவில் சுகாதாரமற்ற நீரினை சமைத்து சாப்பிட்ட 10 குழந்தைகள் உள்ளிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம் ஏறபட்டது[10]. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா பகுதியை சார்ந்த நெரூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10,11,12 2016 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் திருவிழாவின் இறுதி நாளான 12 ஆம் தேதி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு கிடா வெட்டி கறி இன்று வரை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த கிடா வெட்டிற்கு சமையல் செய்வதற்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து உபயோகபடுத்தியுள்ளனர் ஆனால் அந்த நீர் மிகவும் கலங்கலாகவும் செந்நிறமாகவும், மாசுபடித்திருந்த நிலையிலும் இருந்து வந்துள்ளது. ஆனால் அதை அறியாத மக்கள் அந்த தண்ணீரை உணவு சமைப்பதற்கு பயன்படுத்தி சாப்பிட்டுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து இன்று பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம், வயிற்றுவலி போன்ற இன்னல்களுக்கு ஆளாகினர், சம்பவம் அறிந்த சுகாதார துறை மருத்துவர்கள், செவிலியர்கள் முகாம் அமைத்து பாதிக்கபட்டவர்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது[11]. ஆனால், அந்த தலித் பாண்டியன் இதற்காக ஒன்றும் செய்யவில்லை. அதாவது, அசுத்தத்தினால் இம்மாதிரி பிரச்சினை ஏற்படலாம், ஆனால், நெரூரில் அத்தகைய பிரச்சினை இல்லை. இருப்பினும் வழக்கு, தடை எல்லாம் நடந்தேறியுள்ளன.

யார் இந்த தலித் பாண்டியன்?: இவர் தலித் விடுதலை இயக்கம், தேசிய அம்மைப்பாளர். ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் போட வேண்டும் என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்பவர்[12]. சென்ற ஆண்டு 2015ல், 101ஆம் ஆண்டு விழாவாக நடைபெற இருந்த இந்த மனிதத் தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.தலித் பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக விழாவிற்குத் தடை விதித்தனர்[13]. இவர் வேலாயுதபாளையத்தில், அண்ணாநகர், ஆதிதிராவிட காலனியில் வைத்து வருபவர்[14]. இவருக்கு பகவதி அம்மன் கோவில் திருவிழா சமாசாரம் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஒன்றும் செய்யவில்லை. எனவே, நெரூர் விசயத்தில், ஏதோ உள்நோக்கத்துடன், யாரோ தூண்டுதலின் மீது வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று தெரிகிறது. இந்து அமைப்புகள் இதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை அவர்களுக்குத் தெரியாது என்று கூட சொல்லலாம்.
© வேதபிரகாஷ்
26-05-2016
[1] http://www.astrosuper.com/2011/10/blog-post_8478.html
[2] தினமலர், சதாசிவ பிரமேந்திரர் கோவில் சாலையை சீரமைக்க கோரிக்கை, மார்ச்.55,, 20166.007.14
[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1472127
[4] தினமலர், புக்கார்பெட்ட்டி-கரூர், மே22.2016, 11.22.
[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1527014
[6] தினகரன், நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம், பதிவு செய்த நேரம்:2016-05-17 10:18:43
[7] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=573606&cat=504
[8] ஈநாடு.இந்தியா, சதாசிவ பிரமேந்திராள் கோயிலில் 102-வது ஆராதனை விழா, Published 11-May-2016 19:45 IST
[9] http://tamil.eenaduindia.com/Rainbow/SoulSpace/2016/05/11194604/Sri-Sadasiva-Piramentiral-Temple-festival-in-karur.vpf
[10]
தமிழ்.வெப்துனிய்யா, சுகாதாரமற்ற நீரில் சமைத்து சாப்பிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம்: கரூரில் பரபரப்பு, வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (15:19 IST)
[11] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/75-peopls-vomiting-fainting-in-karur-116041500032_1.html
[12] http://www.dinamani.com/edition_trichy/karur/article1399470.ece
[13] http://www.unmaionline.com/new/2587-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html
[14] DALIT PANDIYAN.V. Age:: 30, Category:SC. Sex:Male. Address: S/O. VELLAIYAN, 10/46, ADIDRAVIDA COLONY, ANNA. NAGAR, VELAYUTHAMPALAYAM …
குறிச்சொற்கள்:இந்து, இந்து மதம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, எச்சில் இலை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சேவை, தடை, தலித், தலித் பாண்டியன், நெரூர், புரண்டு, புரள், வழக்கு
அங்கப்பிரதசிணம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், உருளல், உருளுதல், உருள், எச்சில் இலை, எதிர்ப்பு, கரூர், சங்கரச்சாரி, சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சதாவிசம், ஜாதி, தலித், தலித் பாண்டியன், நெரூர், பாப்பான், பார்ப்பான், பிராமணாள், பிரும்மேந்திரர், புகார், வேண்டுதல், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
திசெம்பர் 12, 2015
எருமேலியை வளைத்து, கிருத்துவ நிறுவனங்கள் சதியில் ஈடுபடுகின்ற முறைகள் – ரப்பர் தோட்டங்களில் விளைவதென்ன, சபரிமலைக்கு எதிராக நடப்பதென்ன?

கிருத்துவ நிறுவனம் ரப்பர் தோட்டத்தை வாங்கியது: 2005ல் “கோஸ்பல் பார் ஏசியா” [ஆசியாவுக்கு நற்செய்தி, அதாவது ஆசிய நாடுகளுக்கு பைபிளை போதிப்பது] என்ற கிருத்துவ நிறுவனம் [Gospel for Asia (GFA), இனி “ஜிஎப்ஏ” என்று குறிப்பிடப்படும்], ஹாரிஸன் மலையாளம் லிமிடெட் [the Harrisons Malayalam Limited (HML)] என்ற கம்பெனியிடமிருந்து, எருமேலியில் இருக்கும் 2,300 ஏக்கர் நிலபரப்புக் கொண்ட ரப்பர் எஸ்டேட்டை ரூ. 63 கோடிகளுக்கு வாங்கியது பல கேள்விகளை எழுப்பியதுஏனெனில், இக்கம்பெனி ரப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு தொழிற்நிறுவனமாகும். திருவல்லா, பஞ்சடியில் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் “கோஸ்பல் பார் ஏசியா”, ஒரு எவாஞ்சிலைசேஷன் நிறுவனம், அதாவது மதம் மாற்றும் கிருத்துவ அமைப்பு என்பது தெரிந்த விசயம் தான். ஆனால், ரப்பருக்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால், ஒன்றுமில்லை என்றுதான் தெரிகிறது. ஆனால், 500 ஏக்கர் நிலத்தில், ஏழைகள் மற்றும் வனவாசிகளுக்காக வசதிகளை செய்து தருகிறோம் என்ற திட்டங்களை வைத்துக் கொண்டு, மத்திய அரசிடம் அனுமதி பெற திட்டமிட்டுள்ளதாக தெரிந்தது. உண்மையில், அரசு சார்பில் இக்கிருத்துவ நிறுவனம் இவ்வாறு சேவை செய்ய முன்வந்திருப்பதே, மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், அரசு செய்யாததை, இது எப்படி செய்ய முடியும் என்பதுதான். மேலும், இதை சாக்காக வைத்துக் கொண்டு அயல்நாடுகளிலிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு, ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று ஒட்டு மொத்தமாக, மதமாற்ற திட்டத்தில் ஈடுபட்டால் ஒன்றும் சொல்ல முடியாது.

சுனாமி மதம் மாற்ற தகுந்த சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளார்: “கடவுள் சுனாமி மூலம் மதம் மாற்ற தகுந்த சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளார்” என்று தனது திருவாயால் மலர்ந்தருளியவர் இந்நிருவனத்தின் தலைவரான கே.பி. யோஹனன் [K. P. Yohannan]. இவர் மதம் மாற்றத்தில் வெளிப்படையாகவே ஈடுபட்டது, கடந்த சுனாமி உதவி திட்டங்களில் தெரிய வந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் செக்யூலரிஸம் என்ற போர்வையில், இவ்வாறு சிறுபான்மையினருக்கு சார்பாக இருப்பதினால், அவர்கள் சேவை போர்வையில் பலவேலைகளில் இறங்கியுள்ளார்கள். ஆனால், இது “கார்பரேட்” முறையில் மதமாற்றத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது போல தெரிகிறது. ஆகஸ்ட்.19, 2013 அன்று ஹோகனின் சகோதரர் மற்றும் காங்கிரஸ் கட்சி உள்ளூர் தலைவர் கே.பி.புண்ணோஸ் என்பவர் செல்லாத கரன்ஸி நோட்டுகளை வைத்து வியாபாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்[1]. 1990லிருந்து ரூ.1,040 கோடிகள் பணத்தை அயல்நாடுகளிலிருந்து பெற்றுள்ளார்[2]. ஆனால், 144 கோடிகள் தான் செலவழித்திருக்கிறார்[3]. அப்படியென்றால், சுமார் 900 கோடிகள் என்னவாயிற்று என்ற கேள்வி எழுகிறது. 900 கோடிகள் அப்படியே காற்றில் கரைந்து மறைந்து விட்டிருக்க முடியாது.

ஹோகனனது திட்டம் சபரிமலை கோவில் மற்றும் பக்தர்களுக்கு எதிரானதா?: எருமேலியில் இருக்கும் நிலத்தை வாங்கியது, அங்கு சர்ச் கட்டிக் கொண்டது, மேலும் நிலத்தை வாங்கியது போன்ற செயல்கள் தான் பிரச்சினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த எருமேலி நிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ளது என்பதும் தெரிந்த விசயமே. அதனால், இவர்களது திட்டங்களில், ஐயப்ப பக்தர்களுக்கு இடைஞ்சல் செய்யும் வகையில், ஏதாவது முயற்சிகள் இருந்தாலும், அதனை தடுக்க முடியாது. மேலும் பதனம்திட்ட மாவட்டத்தில் உள்ள “லாஹா எஸ்டேட்டையும்” [“the Laha estate” in Pathanamthitta district] வாங்க திட்டமிட்டது தெரியவந்தது. பம்பா வழியாக சபரிமலைக்கு செல்லும் பாதை, இது வழியாகத்தான் இருக்கிறது. இதனால், “ஜிஎப்ஏ” இதனை வாங்கும் பட்சத்தில், அதற்கு சொந்தமாகி விடுகிறது. பிறகு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு, இவர்கள் எத்தகைய விதிமுறைகளை வைப்பார்கள் என்று தெரியவில்லை[4]. இந்நிலங்கள் எல்லாமே, சபரிமலைக்கு செல்லும் வழியில், அருகில் மற்றும் சுற்றியிருப்பதால், அத்தனை பணபலம் கொண்ட கிருத்துவ அமைப்பு ஏன் வாங்க வேண்டும் என்ற எண்ணம், ஒரு சாதாரண கேரள குடிமனுக்கு ஏற்பாட்டது இயல்பானதாகும். மேலும், கேரள இந்துக்களுக்கு 1949 முதல், கிருத்துவர்கள் சபரிமலை கோவிலுக்கு எதிராக செய்து வரும் நாசவேலைகளை நன்றாகவே அறிவர். சபரி மலையின் நீலி மலை அடிவாரத்தில் நிலக் கல்லில் உள்ள பம்பாநதிக் கரையில் இருந்துதான் கடைசி 6 மைல் பயணம் ஆரம்பிக்கிறது. அந்த இடத்தில் இடத்தை வளைத்துப் போட்டு ஒரு பிரமாண்ட சர்ச்சைக் கட்டியுள்ளனர்.

ஹோகனனது அரசியல் செல்வாக்கு: “எங்களது நம்பிக்கையின் அறிப்பு” என்றதன் கீழ், கிருத்துவ மதத்தைப் பரப்புவதான் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது[5]. சுனாமி பெயரில் கூட நிதியை தவறான முறையில் உபயோகித்தது மற்றும் அந்நியபோக்குவரத்துகளில் முறைகேடுகளில் தெரியவந்தது. இருப்பினும் தன்னுடைய அரசியல் செல்வாக்கினால் தான் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக் கொள்கிறார் என்று கூறப்பட்டது[6]. இவரது சகோதரர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். தான் ஏற்படுத்தியிருக்கும் நிறுவனங்களில் தனது மனைவி, மகன், மகள் என்றுதான் உள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, 2012ல் ஹாரிஸன் மலையாளம் லிமிடெட் தனது 13 எஸ்டேட்டுகளை புதியதாக உண்டாக்கிய ஹாரிஸன் பிளான்டேஷன் லிமிடெட் [Harmony Plantations Limited] என்ற கம்பெனிக்கு விற்க முயற்சித்தபோது, தடுக்கப்பட்டது[7]. இதெல்லாம், செய்கின்ற காரியங்கள் மிகவும் திட்டமிட்டு, ஜாக்கிரதையாக செய்வது தெரிகிறது.

வழக்குகள் 2005 முதல் 2015 வரை நடந்துள்ளது: பி.ஆர். ஹரிகுமார் என்ற வழக்கறிஞர் ஹாரிஸன் மலையாளம் லிமிடெட் மேற்குறிப்பிட்ட நிலத்தை “ஜிஎப்ஏ”க்கு விற்றதை எதிர்த்து 2006ல் வழக்கு தொடர்ந்தார். அக்டோபர்.18, 2007 அன்று “ஜிஎப்ஏ” டிரஸ்ட் அந்த எஸ்டேட்டிலிருந்து ரப்பர் மரங்களை வெட்டக் கூடாது என்று கிராம அதிகாரி ஆணையிட்டார். ஆனால், ஏப்ரல்.10, 2008 அன்று கேரள நீதிமன்றம் ஏற்கெனவே வெட்டிய மரங்களுக்கு பணம் செல்லுத்து விட்டு எடுத்துச் செல்லலாம் என்று ஆணையிட்டது. மேலும் டிசம்பர்.11, 2008 அன்று, கிராம அதிகாரியின் ஆணை செல்லாது என்று கஞ்சிரப்பள்ளி தாசில்தார் ஆணையிட்டார். ஜூன்.19, 2009 அன்று இந்த ஆணையை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது. இதனால், கஞ்சிரப்பள்ளி தாசில்தார் மே.29, 2010 அன்று அந்த டிரஸ்டை அவ்விடத்திலிருந்து ஏன் வெளியேற்றக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்பினார். உடனே டிரஸ்ட் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு போட்டது. 2011ல் டிரஸ்ட் பைன் ஆப்பிள் சாகுபடி செய்ததைத் தடுக்க ஆணையிட்டது. நீதிமன்றம் இதை விசாரித்து நடவரிக்கை எடுக்குமாறு ஜூன்.30, 2011 மற்றும் பிப்ரவரி 28, 2013 அன்று ஆணையிட்டது[8]. இதெல்லாம் சட்டங்களிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு காலம் கடத்துவது, இழுத்தடிப்பது, திசைத்திருப்புவது முதலியவற்றை எடுத்துக் காட்டுகிறது. மேலும், வெவ்வேறான நிலைகளில் அவ்வாறு, ஒருவர் ஆணையை அடுத்தவர் மறுப்பது, மாற்றுவது முதலியவை, சட்டங்களூக்கு மீறிய தாக்கங்களுடன், சம்பந்தப்பட்டவர்கள் செயல்பட்டதும் தெரிகிறது.

பாஸ்டர் ஹோகன்னான் பிஷப் ஆனது முறைப்படியில்லை எனும் கிருத்துவர்கள் (2013): ஜனவரி 2013ல் பெந்தேகோஸ்தே சபையான பிலிவர்ஸ் சர்ச் என்ற சபைகளின் பாஸ்டர். கே.பி.யோகன்னான் (ஆத்மீக யாத்திரை ரேடியோ நிகழ்ச்சி மூலம் பிரபலமனாவர்). மார்தோமா சபையிலும், CSI சபையிலும், Jacobite சபையிலும் உள்ள அங்கத்தினரில் நூற்றுக்கணக்கான நபர்களை பிரிந்து வரசெய்து அவர்களுக்கு முழுகி ஞானஸ்நானம் கொடுத்து தன் சபையில் சேர்த்துக்கொண்டார் அப்படிப்பட்ட மற்றும் அந்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டரை நமது CSI மாடரேட்டரும், அதே கிழக்கு கேரளா டையோசிஸ் பிஷப்புமான கே.ஜே.சாமுவேல் [Most Rev.K.J.SAMUEL] அவர்களும், Rt.Rev.கிளாக்ஸ்டன் (South Kerala டையோசிஸ்) அவர்களும், இப்போது நமது CSI மாடரேட்டராகவும், கன்னியாகுமரி டையோசிஸ்ஸின் பிஷப்பாகவும் இருக்கும் Most.Rev.தேவகடாட்சம் அவர்களும், CNI (Church of North India) வட இந்திய திருச்சபை பிஷப்மார் இரண்டு பேர்களும் [Bishops P.M. Dhotekar of Nagpur and Bancha Nidhi Nayak of Phulbani], ஆக ஒரு CSI மாடரேட்டர் இரண்டு CSI பிஷப்மார்கள், இரண்டு CNI பிஷப்மார்கள் ஆகியவர்கள் தங்கள் செங்கோல்களை பிடித்து குறிப்பிட்ட இந்த 5 பிஷப்புகளும், கே.பி.யோகன்னான் அவர்கள் மீது கைகளை வைத்து அவரை பிஷப்பாக CSI முறைப்படி அபிஷேகம் செய்தார்களே அது எந்த விதத்தில் நியாயமாகும்?, என்று ஜாமக்காரன் கேட்டாலும்[9], ஆறு பிஷப்புகளை ஏற்படுத்தி, தான் பிப்ரவரி.10, 2013 அன்று ஆர்ச்–பிஷப்பாக மாறிவிட்டது, அதைவிட, தமாசான விசயம் தான்[10].
© வேதபிரகாஷ்
12-12-2015
[1] http://www.ucanews.com/news/police-arrest-brother-of-asias-richest-evangelizer/69053
[2] http://archive.indianexpress.com/news/an-archbishop-s-spiritual-factory/323561/
[3] http://archive.tehelka.com/story_main39.asp?filename=Ne050708devil%27sworkingodname.asp
[4] http://indiafacts.org/gospel-for-asia-and-its-indian-connections/
[5] http://www.believerschurch.com/about/statement-of-faith/
[6] In the past, he was also caught in the vigilance net over the alleged misuse of tsunami funds, and other dubious foreign transactions. However, each time he either escaped or evaded the investigation, apparently using the political or financial influence that he has managed to accumulate over years.
http://www.tehelka.com/2015/06/kerala-gospel-of-asia-believers-church-k-p-yohannan-govt-takes-over-land/?singlepage=1
[7] Earlier in 2012, when HML tried to transfer 13 estates to a Chennai-based newly-for med company Harmony Plantations Limited, the government had alerted the registrar of companies and SEBI and asked them not to authenticate the move.The then ACS (revenue) Nivedita P Haran had written to registrar of companies in Chennai and Kochi, chairmen of Sebi and BSE, rubber board, tea board, spices board, State Bank of India and HSBC in this regard. http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/Special-cell-warned-government-about-Harrisons-Malayalam-Limiteds-fraud/articleshow/45358463.cms
[8] http://indiankanoon.org/doc/41704114/
[9] http://jamakaran.com/tam/2013/december/csi_kallarai.htm
[10] But Yohannan’s real tryst with controversy began after he set up Believers’ Church about eight years ago at Thiruvalla, the NRI town in Pathanamthitta district. It was then that this preacher decided he was cut for higher things in life. He voluntarily donned the garb of a bishop and hired the service of K.J. Samuel, a bishop of a sister church. In normal course, only a priest can become a bishop and his action stunned his community. Both the Church of South India and the Church of North India pulled up their bishops for conducting the installation ceremony, the nature of which had been unprecedented in Christian circles. But Yohannan wouldn’t stop at that. He later upgraded his post to that of an archbishop and appointed six other junior bishops.
http://archive.indianexpress.com/news/an-archbishops-spiritual-factory/323561/
குறிச்சொற்கள்:ஆக்கிரமிப்பு, எரிமேலி, எருமேலி, எறுமை, கோஸ்பல் பார் ஏசியா, சபரிமலை,, சாஸ்தா, ஜோகனன், ஜோகன்னன், ஜோஹனன், தோட்டம், நிலம், நிலம் வாங்குதல், ரப்பர், ரப்பர் தோட்டம், ஹாரிஸன், ஹாரிஸன் மலையாளம்
அரசியல், ஆர்ச்-பிஷப், எதிர்ப்பு, எரிமேலி, எருமேலி, எறிமேலி, எறுமை, ஏசு, காவி உடை, கோஸ்பல், தாமஸ், நிலம், நிலம் வாங்குதல், வாபர், வாவர், வாவர் பள்ளி, ஹாரிஸன், ஹாரிஸன் மலையாளம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 10, 2015
சபரிமலை மீது, பக்தர்கள் மீது ஏன் தாக்குதல்கள் நடக்கின்றன – ஐயப்ப பக்தர்களை தொந்தரவு செய்வது, மிரட்டுவது, சாகடிப்பது ஏன்?

எருமேலி பெண்தெய்வத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால், முஸ்லிம்களும் அத்தகைய கதையை வளர்க்க விரும்புகிறார்களா?: எருமேலிக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. வாவர் எருமேலியில் கொல்லப்பட்டான் என்ற கதையைத் தவிர, வெறெந்த விசயமும் இல்லை. இதுவும் கட்டுக்கதையில், சமீபத்தில் உருவாக்கப்பட்ட மாயை. மொஹம்மது நபி, “வீனஸ்” என்ற கிரகத்தை வழிபட்டு வந்தார் என்ற கதைகள் இஸ்லாத்தில் உள்ளன[1]. காபாவில் உள்ள கல் கூட, வீனஸின் வால், ஒரு பகுதி என்று கருதப்பட்டு, முன்னிருந்த வழிபாடு தொடர்ந்து நடைபெறுகிறது[2]. இதனால், வாவரை இப்பகுதியுடன் சம்பந்தப்படுத்தி, வாவர், வாவ்-விண்டவர் = வாவு – விண்டவர் = சந்திரனைப் பிளந்தவர் என்ற பொருள் படும் எனப்படுகிறது, என்ற விகிபிடியாவின் விளக்கத்தையும்[3] சேர்த்து, புதிய புராணத்தை உருவாக்க முடியாது. ஹுபல் [Hubal] என்ற சந்திர தேவதையை அரேபியர் வணங்கி வந்ததால், அதனை இங்கு கொண்டுவர முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை. பிறகு அல்லாவின் புத்திரிகளான, அல்-லத், அல்-மனத், அல்-உஜ்ஜா முதலியவை பாடுபடுத்த ஆரம்பித்து விடும். பிறகு எதற்காக, வாவர் பெயரை வைத்துக் கொண்டு எருமேலியில் தொடர்ந்து அநாசார வேலைகளை செய்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் “ஷிர்க்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஆர்பாட்டம் செய்கிறார்களே, பிறகு, அங்கெப்படி, இத்தகைய வேலைகளை ஒப்புக்கொண்டு ஆதரித்து வருகிறார்கள்?

எருமேலியை கிருத்துவர்கள் கொண்டாடும் திட்டங்கள்: எருமேலி அருகில் ஒரு இடத்தில், மேரி காணப்பட்டாள் என்று திடீரென்று கிருத்துவர்கள் 2008 வாக்கில் புரளியைக் கிளப்பினார்கள். பிப்ரவரி.13, 2008 அன்று எருமேலி அருகில் மஞ்சளருவி என்ற இடத்தில் மேரியைப் பார்த்ததாக சிலர் சொல்லிக் கொண்டனர். சலோமி மற்றும் அவரது கணவர் சோஜன் கிருத்துவ தம்பதியர் வீட்டில் இருக்கும் மேரியின் படத்திலிருந்து ரத்தம் மற்றும் தேன் வழிகிறது என்று இன்னொரு புரளியையும் பரப்பி விட்டனர்[4]. பிறகு மேரி காணப்பட்ட இடத்திற்கு ரோஸா மிஸ்டிக் மவுண்ட் [Rosa Mystique Mount] என்ற பெயரையும் வைத்து பிரச்சாரம் செய்தனர். இதனை உலக அளவில் பிரபலம் செய்து ஆர்பாட்டம் செய்தனர். ஆனால், இதெல்லாம் பார்த்தது என்பது ஒரு சிலர் சொல்வது மீது ஆதாரமாக உள்ளதே தவிர, வேறெந்த ஆதாரமும் இல்லை. கிருத்துவத்தில், இத்தகைய புரளிகளை அடிக்கடி கிளப்புவார்கள் என்பதால், அது அத்துடன் அடங்கி விட்டது. இருப்பினும், ஒரு பெண் தெய்வம் அந்த இடத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதை அறிந்து தான், மாற்று மதத்தினர், இத்தகைய பிரச்சார மற்றும் ஆக்கிரமிப்பு வேலைகளை செய்து வருகின்றனர் என்று தெரிகிறது. முன்பு 1983ல் சபரிமலைக்கு அருகில் நிலாக்கல் என்ற இடத்தில், சிலுவை வைத்து, அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்றனர்.

சபரிமலை கோவில் தீவைப்பால் பாதிக்கப்பட்டது, தீக்கிறையானது: சபரிமலை வழிபாடு, யாத்திரை ஆண்டாண்டுக்கு அதிகமாகி வந்தது, 1950களிலேயே உணரப்பட்டது. ஆனால், அப்பொழுது, பக்தர்களின் கூட்டத்தினால், சமூக விரோதிகளுக்குத்தான் பிரச்சினை ஏற்பட்டது. குறிப்பாக ரப்பர் தோட்டங்களை வைத்து, தொழிற்சாலைகளை நடத்தும் தொழிலதிபர்கள்[5], வியாபாரிகளுக்கு பக்தர்களது போக்குவரத்து பெருத்த இடைஞ்சலாக பாவித்தனர். அவர்களில் பெரும்பாலோர் கிருத்துவ பணமுதலைகள், அவர்கள். காட்டில் மரங்களை வெட்டி, கஞ்சா பயிரை வளர்த்து, அட்டகாசம் செய்தும் வந்தன. 1949லிருந்தே, கிருத்துவர்கள் சபரிமலைக் கோவிலைத் தாக்க திட்டமிட்டு வந்துள்ளனர். 1950ல் கோவிலுக்கு நெருப்பு வைத்து, பக்தர்களை பயமுருத்த முயன்றனர்[6]. ஐயப்ப பக்தர்கள் அங்கு வந்து செல்வதால், அவர்களது சட்டவிரோத செயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது, வருமானமும் குறைந்தது. இதனால், அவ்வழியாக செல்லும் பகதர்களை மிரட்டவும், கோவிலைத் தாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டனர். 1950 முதல் 1955 வரை மூன்று முறை கோவிலுக்கு தீ வைத்தனர். பக்தர்களையும் தாக்கினர். ஆனால், அவற்றைப் பற்றிய செய்திகள் கூட இப்பொழுது மறைக்கப்படுகின்றன. கேரளாவில் மெத்தப் படித்தவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர் எனும்போது, உண்மைகளை மறைக்க அவர்களும் துணைபோவது போலிருக்கிறது. ஏதோ விபத்து நடந்தது போல குறிப்பிடுகின்றன அல்லது தீவிபத்து ஏற்பட்டது, கோவில் மறுபடியும் கட்டப்பட்டது என்று தான் உள்ளது.

சபரிமலைத் தாக்கி வரும் கிருத்துவர்கள்[7]: 1952, 1999 மற்றும் 2011 ஆண்டுகளில் நடந்த நெரிசல்கள் மற்றும் இறப்புகளுக்கும் பின்னால், இவர்களது சதி இருப்பது யூகிக்கப்பட்டது. ஆனால், அரசியல்வாதிகள் தமது அதிகாரங்களினால் அவற்றை அமுக்கின. கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டு, அவை பரிந்துரைகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவை அமூல் படுத்தப்படவில்லை. கோடிக் கணக்கில் பணம் வந்தாலும், தாசம் போர்டின் கான்ட்ராக்டர்கள் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் அரசியல்வாதிகளின் கையாட்களாக இருப்பதனால், வசதிகளை செய்து கொடுக்கும் சாக்கில் கொள்ளையடுத்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் அரசுகள், கிருத்துவர்களுக்கு சாதகமாக வேலை செய்து கொண்டிருப்பதால், பக்தர்களுக்கு இடையுறுகள் ஏற்பட்டு வருகின்றன. 1983ல் மஹாதேவர் என்கின்ற சிவன் கோவில் வளாகத்தில் சபரிமலைக்கு அருகில் நிலாக்கல் என்ற இடத்தில், சிலுவை வைத்து அந்த இடத்தில் சர்ச்சைக் கட்ட முயன்றனர். ஆனால், அது ஒரு பெரிய விசயமாகியதால், கிருத்துவர்கள், சர்ச் கட்டும் வேலையை விட்டுவிட்டனர்[8]. உண்மையில் தாமஸ் கட்டுக்கதை வளர்க்க வேண்டும் என்ற திட்டம் தான், இதன் பின்னணியில் உள்ளது. நிலாக்கலை அடுத்து, எருமேலியின் மீதும் அவர்களது கண்கள் உள்ளன என்று தெரிகிறது.

எருமேலி, எறுமை வேலி, மஹிஷம், மஹிஷ அரக்கி, மஹிஷாசுர மர்த்தனி: எருமேலி = எருமை வேலி, அதாவது எறுமைகளால் ஆன வேலி, அதாவது எறுமைகளின் உதவியால் கட்டப்பட்ட வேலி என்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், “மஹிஷி” என்ற எறுமை வடிவத்தில் இருந்த அரக்கியைக் கொன்றதால், ஒருவேளை, அதன் எலும்புகளை வைத்து கட்டப்பட்ட வேலியாக இருக்கலாம். அதாவது அந்த மஹிஷி இறந்த இடத்தைக் குறிக்க எலும்புகளால் வலையம் போன்று வைத்து, நாளடைவில் எருமேலி என்ற பெயரைப் பெற்றிருக்கலாம். என்பது ஐயப்பன் கோவிலுக்குப் போகும் வழியில் உள்ளது. இங்கு, “பேட்டைத் துள்ளல்” என்ற நடனம் ஐயப்பன் பக்தர்களால், ஒரு சடங்கு போல மேற்கொள்ளப்படுகிறது. இது “மஹிஷி” என்ற அரக்கியைக் கொன்றதற்கான, வெற்றி நடனமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த அரக்கியை வதம் செய்வதற்காகத்தான், விஷ்ணு மற்றும் சிவன், ஐயப்பனாக அவதாரம் எடுத்ததாகவும் ஐயப்பன் புராணம் கூறுகிறது. கருப்பு வேஷ்டி, உடல் முழுவதும் வண்ணங்கள் பூசிக்கொள்ளுதல், பூக்கள், இலைகள் முதலியவற்றை கிளைகளோடு சூடிக்கொள்ளுதல், வில்-அம்புகளோடு, “ஐயப்ப தின் தகத்தோம், ஸ்வாமி தின் தகத்தோம்” என்று கூவிக்கொண்டே ஆடுவது, ஏதோ மலைச்சாதியினர் ஆடுகின்ற ஆட்டத்தை நினைவுகூர வைக்கிறது. எருமேலியை கிருத்துவர்களும் விடுவதாக இல்லை. அங்கிருக்கும் மேரி சிலையிலிருந்து பால் வடிந்தது, தேன் வடிந்தது என்றேல்லாம் கதைவிட்டனர்[9]. ஆக, ஒரு பாரம்பரிய புண்ணியஸ்தலத்தை எவ்வாறு முஸ்லிம்கள், கிருத்துவர்கள் ஆக்கிரமித்துக் கொள்ள திட்டம் போட்டு வேலை செய்கின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும். கர்நாடகத்தில் “மஹிஷாசுரமர்த்தினி” கதை வேறுவிதமாக உள்ளது.
© வேதபிரகாஷ்
10-12-2015
[1] Farrington, Oliver C. “The worship and folk-lore of meteorites.” The Journal of American Folklore 13.50 (1900): 199-208.
[2] King, David A. “Faces of the Kaaba.” The Sciences 22.5 (1982): 16-20.
[3] Vavar (pronounced Vaa-var= “vav-vindavar”) meaning vavu = “moon” vindavar= “who splits”, also known asVavaraswami. https://en.wikipedia.org/wiki/Vavar
[4] http://www.fpchurch.org.uk/wp-content/uploads/2014/07/SYNOD-REPORTS-2010.pdf
[5] ரப்பர் மற்றும் டயர்-டியூப் மற்ற பொருட்கள் உற்பத்தியில், வரியேப்பு அதிகம் நடக்கின்றது, என்பது அரசுக்கே தெரிந்த விசயமாக இருந்தது. இதனால் 1980கள் வரை, நேரிடை கண்காணிப்பில் இருந்து வந்தன. ஆனால், பிறகு, அரசியல் சம்பந்தங்களினால் விடுபட்டு, சுதந்திரமாக ஏய்க்க ஆரம்பித்தன. அவ்வாறான, வரியேப்பு பணம் தான் கருப்புப் பணத்திற்கு மூலமாகிறது. அதை வைத்துக் கொண்டுதான் மற்ற சட்டவிரோத, தேசவிரோத செயல்களும் நடக்கின்றன என்பதனை கவனிக்க வேண்டும்.
[6] The temple was burned a few times. In the last century, damage was caused to the temple due to fire in 1902 and 1950. A fire broke-out in January 1902, (ME 1079 Dhanu 30th) causing damage to the temple. Reconstruction of temple was completed by 25th March 1910 (ME 1085 Meenam 12). There was another major fire in 1950 causing damage to temple and deity. The reconstruction was completed and the new deity was made by the Thanthri, Kandararu Shankararu of Thazhaman illam on 18th May 1951 (ME, 1126 Edavam 4th).
http://www.sabarimalaaccomodation.com/?page_id=1226#
[7]http://organiser.org/archives/historic/dynamic/modules4338.html?name=Content&pa=showpage&pid=143&page=35
[8] http://indiatoday.intoday.in/story/nilakkal-in-kerala-set-for-a-hindu-christian-confrontation/1/371657.html
[9] http://www.fpchurch.org.uk/wp-content/uploads/2014/07/SYNOD-REPORTS-2010.pdf
குறிச்சொற்கள்:அய்யப்பன், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, இந்து விரோதி, இந்து-விரோதம், எருமேலி, ஐயப்பன், ஐய்யப்பன், சபரிமலை,, தாமஸ், தீ, தீக்கிறை, தீவைத்தல், நிலாக்கல், மேரி, ரத்தம், வாபர், வாவர்
அல்லா, இந்துக்கள், எதிர்ப்பு, எரிமேலி, எருமேலி, எறிமேலி, எறுமை, காபிர், கிறிஸ்தவன், கிறிஸ்தவம், சபரி, சபரி மலை, நிலாக்கல், மேரி, ரத்தம், வாபர், வாவர், வாவர் பள்ளி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
நவம்பர் 8, 2015
தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (4)?

நரகாசுரனுக்கு வீர வணக்கம் – 2015
இணைப்பு (அதியமான் அறிக்கை)[1]: அதியமான் அறிக்கை தொடர்கிறது, “மதசார்பற்ற இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் இட்லர், முசோலினி வாரிசுகளான ஆர்.எஸ்.எஸ்., –பா.ஜ.க., சங்பரிவாரங் களின் நடவடிக்கைகளில் சில:
- பகவத்கீதையை தேசியநூலாக அறிவிக்கத் துடிப்பது.
- ஆசிரியர் தினத்தை குருஉத்சவ் என்று அறிவித்தது[2].
- சமஸ்கிருதத்தை உலக மொழிக்கு இணையாக உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்வது.
- பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சி.
- கர்வாப்சி என்ற பெயரில் வறுமையில் வாடும் இசுலாமியருக்கு ரூ.5 லட்சமும், கிறித்துவருக்கு ரூ.2 லட்சமும் கொடுத்து ஆசைகாட்டி கட்டாயத்தின் பெயரில் இந்து மதத்திற்கு மாற்றும் முயற்சிகள்.
- இசுலாமிய, கிறித்துவ தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள்.
- பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து விநாயகர் ஊர்வலத்தின் போது, மசூதிகளின் மீது வெடிகுண்டுகளை வீசுவது, இசுலாமிய வரலாற்றுச் சின்னங்கள் இருக்குமிடத்தில் இந்துக் கடவுள்கள் பிறந்ததாக கட்டுக் கதைகளைக் கட்டவிழ்த்து விடுவது.
- கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் மட்டும் 38 கிறிஸ்துவ ஆலயங்கள் மீதும், 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மீதும் தாக்குதல்[3],
- கருத்துரிமைக்கு எதிரான படு கொலைகள்
- பகுத்தறிவு கருத்தாளர்கள் புனேயை சேர்ந்த நரேந்திர தபோல்கர், பேராசிரியர் கோவிந் பன்சாரே, கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் துணை வேந்தர் கல்புர்கி, ஆகியோரைப் படுகொலை செய்தது[4].
- ஆசிரியர் சுசீந்திரகுல்கர்னி முகத்தில் மை பூசி தாக்குதல் நடத்தியது.
- பசுவதை எதிர்ப்பு என்ற பெயரில் நடத்தப்படும் மனிதப் படுகொலைகள்.
- உத்தரப்பிரதேசம், தாத்ரியில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக வதந்தியைப் பரப்பி முகமது அக்லாக் என்பவரைப் படுகொலை செய்தது.
- அடிமாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வழிமறித்து அதில் வருவோரை படுகொலை செய்வது,
- மாட்டுக்கறி விருந்து கொடுத்ததாக கூறி காஷ்மீர் சுயேச்சை எம்.எல்.ஏ. ரஷித் என்பவர் முகத்தில் மை பூசி தாக்குதல் நடத்தியது,
- இடஒதுக்கீட்டிற்கு எதிரான சதிகள்
- மருத்துவக் கல்விக்கான இடஒதுக் கீட்டை ரத்து செய்து ஒரே மாதிரி யான நுழைவுத்தேர்வு முறையை கொண்டு வருவதற்கான முயற்சி.
- தமிழகத்தில் தேவேந்திரர் குலம் என்று கூறிக் கொண்டு ஒரு சிலரை அழைத்து இடஒதுக்கீடே வேண் டாம் என்று வாக்குமூலம் கொடுக்க வைப்பது[5],
- இடஒதுக்கீட்டிற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் ஜாதி இந்துக்களை தூண்டிவிடுவது.
- தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான படுகொலைகள்.
- அரியானா மாநிலம், சன்பேத் கிரா மத்தில் இரண்டு குழந்தைகளைப் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து படுகொலை.
- அதே போன்று கோவிந்த் என்ற சிறுவன் படுகொலை,
- 2014இல் 2249 தாழ்த்தப்பட்ட பெண் கள் மீது பாலியல் வன்கொடுமைகள்[6].
- 500-க்கும் மேற்பட்ட ஜாதியப் படுகொலைகள்.
- கவுரவக் கொலை என்ற பெயரில் 15க்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள்,
- தருமபுரி மாவட்டம் சேஷசமுத்திரத்தில் தேர் எரிப்பு.
- பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில்பேர் படுகொலை.”

gandhiji-statue-broken-salem
தேசத் தலைவர்கள் அவமதிப்பு[7]: அதியமான் அறிக்கை தொடர்கிறது, “இந்திய நாட்டின் தேசப்பிதா என்றழைக்கப்படும்[8] காந்தியாரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு சிலைகளை எழுப்புவது, சமூகநீதிக்காக போராடிய தலைவர்கள் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பது[9]. தமிழகத்தில் வேளாண்துறை அதிகாரி முத்துகுமாரசாமி, திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணங்கள். இப்படி தொடரும் எண்ணற்ற ஜாதிவெறி, மதவெறி, பாலியல் கொடுமைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைத்தும் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதே! அவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும். தீபாவளியைப் புறக்கணிப்போம் இந்துத்துவாவை எதிர்க்கும் குறியீடாகவே அது இருக்கும்”[10].

Karu temple – later removed
அதியமான் என்ன சொல்ல வருகிறார்?: அதியமான் தொகுத்துக் கூறியுள்ளதில் புதியதான விசயம் எதுவும் இல்லை. இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்ற, “மோடி-எதிர்ப்பு” பிரச்சாரத்தில், மிக்கப்படித்த மேதைகள், அதிமேதாவிகள், அறிவுஜீவிகள், பெரிய-பெரிய விருதுகளைப் பெற்றவர்கள், அவ்விருதுகளைத் திரும்பக் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள், அவர்கள் கூறுவதையெல்லாம் தினம்-தினம் நாளிதழ்களில் போட்டு, டிவி-செனல்களில் விவாதம் செய்து கொண்டிருக்கும் விசயங்கள் தாம் இந்த தொகுப்பு. தீபாவளி எதிர்ப்பு, இப்படி புது-புது கூட்டத்தினரால் எல்லாம் உபயோகப்படுத்தும் போலிருக்கிறது! இதனால், இவற்றிற்கு என்ன லாபம் என்று தெரியவில்லை! முதலில் இந்த “ஆதித் தமிழர் பேரவை” பற்றி தமிழகத்திலேயே எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. அறிக்கையை படித்துப் பார்க்கும் போது, இருக்கின்ற திராவிட சிந்தாந்திகளைப் போன்றுதான் கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. இந்துத்துவாவை எதிர்க்கும் குறியீடு எனும் போது, அதேபோல, மற்ற தத்துவங்களையும், அவற்றின் குறியீடுகளையும் இவர்கள் எதிர்க்காததும், அவற்றிற்கு வக்காலத்து வாங்குவதிலிருந்தும், இவர்களும், அவர்களின் ஆதரவாளர்களா இருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

மாவீரன் நரகாசுரன்
இந்தியாவைத் தூற்றும்போக்கு ஏன்?: உலகத்திலேயே, சொந்த நாட்டை இவ்வாறு கேவலப்படுத்தும் மக்கள் இந்தியாவில் தான் இருக்கக்கூடும். “மோடி-எதிர்ப்பு” என்று சொல்லிக் கொண்டு, தேசத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள், கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவனமானப்படுத்தி, தூஷித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே இந்தியா என்றாலே, மற்ற நாடுகளுக்கு இளக்காரமாகத்தான். பாகிஸ்தான், போன்ற எதிரி நாடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இஸ்லாமிய-ஜிஹாதி நாடுகளான ஆப்கானிஸ்தான், சிரியா போன்றவையோ, இந்தியர்களை வைத்தே தீவிரவாத செயல்களை நடத்தி வருகின்றன. அல்-கொய்தாவை ஆதரித்ததாக இரண்டு இந்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது[11]. கடந்த ஓராண்டில் இந்தியாவில் சிரியா சென்று ஐ.எஸ். அமைப்பில் சேர திட்டமிட்ட 19 இந்தியர்களில் 16 பேர் தெலுங்கானா போலீஸாரால் அடையாளம் காணப்பட்டவர்கள். அதுதவிர ஐ.எஸ். அனுதாபிகள் 60 பேரை அடையாளம் கண்ட தெலுங்கானா போலீஸார் அத்தகவலை உளவு நிறுவனங்கள் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது[12]. அவர்கள் முஸ்லிம்கள் என்றதால், இவர்கள் அதைப் பற்றியெல்லாம் விவாதிப்பதில்லை[13]. அந்நிலையில் தான், இந்திய குடிமகன்களிடமிருந்து இத்தகைய அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இங்கும், மேலே பட்டியலிட்டுக் காணும் திறமைக் கொண்டவர்கள், கடந்த 60 ஆண்டுகாலத்தில், இந்தியா எப்படி வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்பதையும் கவனித்துப் பார்த்திருக்க வேண்டும். உண்மையில் இந்தியா ஏதாவது வளர்ச்சியடைந்துள்ளதா, முன்னேறியுள்ளதா, 1947க்குப் பிறகு, எதையாவது சாதித்துள்ளாதா என்று சீர்துக்கிப் பார்க்க வேண்டும். ஊடகங்கள் தாம், இத்தகைய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து 24 x 7, செய்திகளை தயாரித்து, அவற்றைப் பற்றிய வாதம்-விவாதங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதால் மட்டும் எதை சாதித்து விடப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

டாஸ்மாக் ஊழியருக்கு இரட்டிப்பு சம்பளம் – கரு, ஸ்டாலின்
மதுவை எதிப்பவர்கள் கீழ்கண்டவற்றிற்கு பதிலளிப்பார்களா?:
- திராவிட சித்தாந்திகளுக்கு மகாத்மா காந்தி மீது எந்த கரிசனமும் இல்லை. காந்தி சிலைகள் உடைபடுவது தமிழகத்தில் தான். அச்சிலைகள் உடையாமல் ஏன் தடுக்கவில்லை?
- குடிப்பது என்பது தவறு என்றால், அதனுடன் தொடர்புடையவைகளும் தவறு என்று சுட்டிக் காட்ட மறுப்பது போலித்தனத்தைக் காட்டுகிறது.
- திராவிட ஆட்சியில் சாராயம், கள்ளாசாராயம், மதுக்கடைகள், அவற்றின் உற்பத்தி, ஏலம், முதலியவற்றை செய்து வருவது திராவிடர்களே, திராவிட சிந்தாந்திகளே.
- பிறகு அவற்றை வெளிப்படுத்திக் காட்டுவதில் ஏன் தயக்கம்?
- மதுவால் ஏற்படும் பிரச்னைகளால் “தலித்” மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், என்றால் அவர்களை திருத்தலாமே?
- அவர்கள் “அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும்” நிலைக்கு யார் வைத்திருக்கிறார்கள்? குடிப்பவர்களா, குடிக்காதவர்களா?
- இக்குடியை எதிர்ப்பவர்கள் “பப்-குடியை” ஆதரிப்பதேன்?
- தமிழ், தமிழன், ஆதித் தமிழன்……..என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்கள், திருவள்ளுவர் சொல்லியபடி கடைப்பிடித்து வாழ்வது தானே?
- மதுவை நிறுத்தினால் தீபாவளி நின்று விடுமா? இல்லை அவர்களால் மது விற்பனை நின்று விடுமா? பிறகு எதற்கு, இத்தகைய விளம்பர அறிக்கைகள்?
- தீபாவளிக்கு வெடிக்கக் கூடாது என்று மூன்று குழந்தைகள் வழக்குப் போட்டனவே? அதேப்போல இந்த வீரர்களும் வழக்குப் போட வேண்டியதுதானே?

திராவிடர்களின் மது சாம்ராஜ்யம்- எதிர்ப்பது யார்
© வேதபிரகாஷ்
08-11-2015
[1] http://www.inneram.com/news/tamilnadu/4987-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF,-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html
[2] ஆசிரியர்களை மதிக்க வேண்டாமா, வெறுக்க வேண்டுமா? ஆசிரியர்களை மதிக்காமல் தான், தமிழகம் இந்நிலையில் வந்துள்ளது.
[3] இதில் ஈடுப்பட்டவர்கள், சாதாரண திருடர்கள் என்றும், அந்நிகழ்ச்சிகளும் திருட்டுவேலைகளுடன் சம்பந்தப்பட்டது என்று தில்லி போலீஸார் எடுத்துக் காட்டியதும், கிருத்டுவர்கள் அமைதியாகிவிட்டனர்.
[4] கொலைகள் நடந்தது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதுதான், கொலையாளிகளை கண்டுபிடிக்காமல் இருப்பது காங்கிரஸ் அரசுதான்.
[5] யார் எந்த ஜாதி என்பதெல்லாம் தீர்மானிக்கும் உரிமை இவர்களுக்கா அல்லது அவர்களுக்கா? இவரே தீர்மானித்து விட்டால், பிறகு மறவர்களின் உரிமை, சுதந்திரம் பற்றியெல்லாம் ஏன் பேசவேண்டும்.
[6] இப்படி நடக்கின்ற குற்றங்களை, இப்பட்டியிலில் சேத்து சொல்லும் அவசியம் என்ன? 2014க்கு முன்னர் கொலைகளே நடக்கவில்லையா அல்லது வெறெந்த குற்றங்களே நிகழவில்லையா?
[7] இந்நேரம்.காம், மதுவெறி, மதவெறி சாதிவெறிக்கு எதிராக தீபாவளி புறக்கணிப்பு!, திங்கட்கிழமை, 02 November 2015 10:36.
[8] ஆக இவரோ, இவரது இயக்கமோ அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை போலும்! “மகாத்மா” என்று குறிப்பிடாதத்தும் கவனிக்கத்தக்கது. கருணாநிதியின், “உத்தமர் காந்தி”யையும் விடுத்து “காந்தியார்” என்று கூறுகிறார் அதியமான்!
[9] சகிப்புத்தன்மை அப்படியென்றால், யாரிடம் இல்லை என்று கவனிக்க வேண்டும். சிலைகளை மோதவிட்டது யார் என்று எடுத்துக் காட்ட வேண்டும். சாமிசிலைகளை உடைப்பவர்கள் யார், இச்சிலைகளை அவமதிப்பது யார் என்று கவனிக்க வேண்டும்.
[10] http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/29511-2015-11-02-05-30-33
[11]http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article7850869.ece
[12]http://tamil.thehindu.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7832565.ece
[13] http://www.dinamani.com/world/2015/11/07/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/article3117037.ece
குறிச்சொற்கள்:அதியமான், இறைச்சி, கமல் ஹஸன், சாராயம், சிலை, தடை, தமிழர் பேரவை, தீபவலி, தீபாவளி, பட்டாசு, பிராந்தி, போத்தீஸ், மது, மாட்டிறைச்சி, மாது, வழக்கு, வியாபாரம், விஸ்கி, வெடி
அதியமான், அரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, உலகமயமாக்கல், எதிர்ப்பு, தடை, தீபவலி, தீபாவளி, பட்டாசு, வெடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 8, 2015
தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (3)?

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே
தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: இதைப்பற்றி முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. இனி தமிழகத்து கோணத்தில் பார்ப்போம். தமிழகத்தைப் பொருத்த வரையிலும், திராவிட சித்தாந்தம் பேசிக்கொண்டு, இந்து பண்டிகைகள் என்று வரும் போதெல்லாம் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு, கடந்த 60-100 ஆண்டுகளாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முகமதிய, கிருத்துவ பண்டிகைகள் வரும் போது, போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பதும், இப்தர் பார்ட்டிகளில் முக்காடு-தொப்பிப் போட்டுக் கொண்டு கஞ்சிக் குடிப்பதும், போட்டோ எடுத்துக் கொள்வதும், ஊடகங்களில் வெளியிட வைத்து, தாங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்து பண்டிகைகள் வரும் போது, கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். அதிலும், கருணாநிதி போன்ற இந்து-விரோதிகள், அங்கு கஞ்சி குடிக்கச் செல்லும் போது, இங்கும் விரதங்களைக் கொண்டாடுகிறார்கள், ஆனால், நன்றாக சாப்பிடுகிறார்கள்; ஏகாதசி போன்ற நாட்களில் உபவாசம் என்று சொல்லிக் கொண்டாலும், வகை-வகையாக சிற்றுண்டிகள் செய்து சாப்பிடுவார்கள் என்றெல்லாம் நக்கல்-கிண்டல் அடித்துள்ளார்கள். தீபாவளி வந்துவிட்டால், அவர்களுக்கு, “தீபவலி”யே வந்துவிடும். வீரமணிலிருந்து கமல்ஹஸன் வரை கிளம்பிவிடுவார்கள்[1]. வீரமணி கோஷ்டிகள் விளாசித் தள்ளி விடுவார்கள். இம்முறை, அது “விடுதலையில்” ஆதித்தமிழர் பேரவை உருவத்தில் ஆரம்பித்துள்ளது.

போத்தீஸ், கமல், தீபாவளி
மது வெறி, மத வெறி, சாதி வெறி ஆகிய மூன்றையும் கண்டித்து தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க முடிவு: தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க ஆதித் தமிழர் பேரவை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனத் தலைவர் அதியமான் திருச்சியில் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி[2]: “மது வெறி, மத வெறி, சாதி வெறி ஆகிய மூன்றையும் கண்டித்து தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளியன்று மட்டும் டாஸ்மாக்கில் ரூ.350 முதல் 400 கோடி வரை விற்பனை செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மதுவால் ஏற்படும் பிரச்னைகளால் தலித் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இதை முறியடிக்கும் வகையில் அன்றைய தினம் நாங்கள் வீடுவீடாகச் சென்றும், டாஸ்மாக் கடைகள் முன்பாக நின்றும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பிரசாரம் செய்வோம். நாட்டில், கருத்து சொல்வது கூட தவறு என்பது போல், சங்பரிவார் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன[3]. சிறுபான்மை மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யாமல், இந்த அரசு செயல்பட்டு வருகிறது[4]. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் போக்கு அதிகரித்துள்ளது”, என்றார். அப்போது பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்டச் செயலாளர் குயிலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்[5]. இப்படி தினகரன், தினமலர், நக்கீரன் முதலியவை சுருக்கமாகக் கொடுத்துள்ளது. மற்ற குறிப்பிட்ட இணைதளங்கள் அதியமானின் அறிக்கை என்று கீழ்கண்டவாறு முழுவதுமாக வெளியிட்டுள்ளன.

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- அறிக்கை. கீற்று.காம்
மாட்டிறைச்சித் தின்பது உரிமை என்றால், குடிப்பதும் உரிமைதானே, பிறகு ஏன் அதை எதிர்க்கிறார்கள்?: தெரிந்தோ, தெரியாமலோ, நன்னத்தை, ஒழுக்கம், பண்பு, கட்டுப்பாடு, தூய்மை என்றெல்லாம் பேசும் போது, பலவித நற்குணங்கள் என்றெல்லாம் பரிந்துரைக்கப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில் பதிஎன்கீழ்கணக்கில், “நீதி நூல்கள்” அதிகமாகவே உள்ளன. 19-20ம் நூற்றாண்டுகள் வரை தமிழச்சிகள், தமிழச்சன்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள, இங்கிலீஷ் படிச்சாலும் இன்ப தமிழ் நாட்டிலே” என்றேல்லாம் பாடல்கள் எழுதப்பட்டு, பட்டி-தொட்டில்களில் எல்லாம் ஒலித்தன. ஆனால், இன்றோ, நிலைமை வேறுமாதிரி இருக்கிறது:
- பப்புக்கு போவது என்னுடைய உரிமை!
- குடித்து ஆடுவது என்னுடைய உரிமை!!
- குடித்து மற்ற ஆணோடு அல்லது பெண்ணோடு சேர்ந்து ஆடுவது என்னுடைய உரிமை!!
- திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், சேர்ந்து வாழ்வது என்னுடைய உரிமை.
- தாலி கட்டினாலும், கழட்டிப் போடுவது, வெட்டுவது முதலியனவும் என்னுடைய உரிமை.
- நான் ஆணாக இருந்தாலும், ஆணை திருமணம் செய்து கொள்வது என்னுடைய உரிமை!!
- நான் பெண்ணாக இருந்தாலும், பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்னுடைய உரிமை!!
- என்னுடைய உரிமையில் யாரும் தலையிட முடியாது!!
- என்னை இதை சாப்பிடு, அதை சாப்பிடு அல்லது சாப்பிடாதே என்று சொல்லமுடியாது!!!
- அதேபோலத்தான் இவையெல்லாம்!!!!!!!!!
பிறகு குடிப்பதைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும். சங்கத்தமிழ் சமூகத்தில் குடியும், கூத்தியும் விலக்கப்பட்டதல்ல[6]. ஆகவே, அவற்றை சமூகத்தில் இருக்கக்கூடாது என்று ஏன் விலக்க வேண்டும். மேலும் இதற்கெல்லாம், வெறெதையோ ஏன் குற்றஞ்சாட்ட வேண்டும்?

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- அறிக்கை.இந்நேரம்.காம்
பாரதீய ஜனதாவின் மோடி இந்துத்துவ அரசுதான்[7]: அதியமான் சொல்கிறார், “அரசு இந்தியா என்பது பலதரப்பட்ட மொழியை பேசக்கூடியவர்களும், பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் வாழக்கூடிய, வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதச்சார்பற்ற மாபெரும் ஜனநாயக நாடு. இங்கு வாழுகின்ற மக்கள் அனை வரும் இனத்தாலும் மொழியாலும் கலாச்சார பண்பாட்டாலும் மாறுபாடு கொள்ளாமல் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதே! இந்திய அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள நீதி. அந்த நீதியின் அடிப்படையில் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள், அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள சட்ட நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து தரத்து மக்களையும் பாகுபாடின்றி, அவர்களின் உரிமைகளை நிலை நாட்டிட ஆட்சிபுரிய வேண்டும் என்பதே! அதனுடைய விதி[8]. ஆனால்! அந்த விதிகள் எவற்றையும் பின்பற்றாமல் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதாவின் மோடி அரசு. இசுலாமிய, கிறித்துவ சிறுபான்மை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட பழங் குடியின மக்களுக்கும் உரிய பாது காப்பை உறுதி செய்யாமல் இந்துமத வெறியர்களுக்கும், ஜாதி வெறியர்களுக்கும் துணைபோவது என்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை மறைமுகமாக தூண்டி விட்டு தாழ்த்தப்பட்ட, இசுலாமிய மக்களை அச்சுறுத்தி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதைப் பார்க்கின்ற போது, இது ஓர் இந்துத்துவ அரசுதான்! என்பதை வெளிப் படையாகவே உறுதிசெய்கிறது”.

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- காரணங்கள்
மத்திய–மாநில அரசுகளை எதிர்க்க தீபாவளியை எதிர்ப்போம்[9]: அதியமான் அறிக்கை தொடர்கிறது, “பகவத்கீதையை தேசிய நூல் என்பது, சமஸ்கிருதத்தை உலக மொழி தகுதிக்கு உயர்த்த எடுக்கும் முயற்சிகள், கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவங்கள், மாட்டுக்கறி உண்டதற்காக நடத்திக்காட்டிய கோரப்படுகொலைகள் என நீளும் இந்த அராஜகங்களின் விளைவாக மதுவெறி, மதவெறி, ஜாதி வெறிகளைத் தூண்டி நாட்டை அமைதியிழக்கச் செய்யும் மத்திய அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க. தமிழக ‘ஜெ‘ அரசோ! பி.ஜே.பி.க்கு முட்டுக்கொடுக்கின்ற வகையில் மத வெறியர்களுக்கும், ஜாதி வெறியர்களுக்கும் சாதகமான சூழ்நிலையையே உருவாக்கி வருகிறது. மக்களை மரணக்குழிக்கு அனுப்பும் மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்தாமல், மக்கள் விரோத போக்கையே கடைபிடித்து வருகிறது[10]. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாமல் செயலற்ற மக்கள் விரோத அரசாக இருந்து வருவது மேலும் வேதனை அளிக்கின்றது. இப்படி வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதசார்பற்ற இந்தியாவை மதுவெறி, மதவெறி, ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு நாட்டை துண்டாடும் மதவாத, ஜாதியவாத சக்திகளின் செயல்களுக்கு துணைபோகும் மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி, “தீபாவளியை புறக்கணிப்பது” என்று ஆதித்தமிழர் பேரவை முடிவு செய்து, மக்களை விழிப்பூட்டி ஒன்றுபடுத்தும் வேலையில் ஈடுபடுகின்றது”.
© வேதபிரகாஷ்
08-11-2015
[1] http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/111650-2015-11-08-09-47-13.html
[2] தினகரன், தீபாவளியை புறக்கணிக்க ஆதி தமிழர் பேரவை முடிவு, பதிவு செய்த நேரம்:2015-11-02 13:03:45.
[3] தினமலர், தீபாவளி புறக்கணிப்பு போராட்டம்: ஆதி தமிழர் பேரவை அறிவிப்பு, நவம்பர்.2, 2015.06.50.
[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1378107
[5] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=504517&cat=504
[6] பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைப் படித்துப் பார்க்கவும். இன்றைய தமிழர்கள் அவற்றையெல்லாம் படிப்பார்களா என்று தெரியவில்லை.
[7] அதியமான், மதுவெறி, மதவெறி ஜாதி வெறியை எதிர்த்து தீபாவளியைப் புறக்கணிப்போம்!, விடுதலை, நவம்பர்.7, 2015, பக்கம்.3.
[8] நக்கீரன், மதவெறி, சாதிவெறியை எதிர்த்து தீபாவளி புறக்கணிப்பு: ஆதித்தமிழர் பேரவை முடிவு, பதிவு செய்த நாள் : 1, நவம்பர் 2015 (0:54 IST) ; மாற்றம் செய்த நாள் :2, நவம்பர் 2015 (8:39 IST).
[9] http://www.viduthalai.in/page3/111562.html
[10] மது உற்பத்தி, விநியோகம், விற்பனை, அவற்றிலிருந்து வரும் லாபக்கொள்ளை, இவற்றில் மிதப்பவர்கள் யார் என்று இப்போராளிகள் எடுத்துக் காட்டுவார்களா?
குறிச்சொற்கள்:அதியமான், ஆதித் தமிழர், ஆதித் தமிழர் பேரவை, இந்து, இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, இறைச்சி, கஞ்சி, கமல் ஹாஸன், கழகம், கோப்பை, சங்கம், சாராயம், டாஸ்மார்க், தீ, தீபவலி, தீபாவளி, பட்டாசு, பிராந்தி, போதை, மது, மாட்டிறைச்சி, மாமிசம், ரம்ஜான், வியாபாரம், விஸ்கி, வீரமணி, வெடி
அதியமான், ஆதித் தமிழர், ஆதித் தமிழர் பேரவை, எதிர்ப்பு, கழகம், கோப்பை, சங்கம், சாராயம், டாஸ்மார்க், தடை, தமிழர் பேரவை, தலித், தீபவலி, தீபாவளி, பிராந்தி, போதை, மதவெறி, மது, விஸ்கி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »