Archive for the ‘எண்ணம்’ Category

குடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (1)!

மார்ச் 15, 2018

குடித்துகும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (1)!

Amnesia, the lounge, Mangalore

பப்புகளில் நடந்தவை வீடியோ படம் பிடிக்கப் பட்டது: மங்களூர் பப்பில் குடித்து கும்மாளம் போட்ட பள்ளி-கல்லூரி மாணவிகளை, ஶ்ரீராம் சேனா 24-01-2009 அன்று தட்டிக் கேட்டு, அடித்ததாக செய்திகள் வந்தன. ஶ்ரீராம் சேனா மற்றும் பஜ்ரங்தள் ஆட்கள் பல்மடா ரோட்டில் [Balmatta Road] உள்ள ஒரு பப்பில் நுழைந்து, அங்கிருந்த வாடிக்கையாளர்களை, சுமார் 40 பேர் தாக்கியதாக தெரிகிறது என்று “டைம்ஸ்-நௌ” டிவி அறிவித்தது[1]. வீடியோக்களில் எம்னீஸியா – த லுங் [Amnesia – The Lounge] மற்றும் உட் சைட் [Woodside] என்ற இரண்டு கட்டிடங்களைக் காட்டப்பட்டன. அவற்றில் ஆட்கள் நுழைவது, பெண்களிடம் விசாரிப்பது, அவர்களை விரட்டுவது, இரண்டு பெண்கள் கீழே விழுவது, ஒரு பையனை அடிப்பது, பெண்கள் ஓடிப் போய் காரில் ஏறுவது என்று காட்சிகள் இருந்தது. இவற்றையெல்லாமே, பலர் வீடியோ கேமராவுடன், வீடியோ எடுப்பதும் தெரிந்தது. அதாவது, ரகசியமாக செய்யப் பட்ட காரியம் அல்ல என்று தெரிகிறது. அவ்வாறு வீடியோ எடுத்தவர்களை விரட்டியவர்கள் ஹடுத்ததாகவும் இல்லை. ஆகவே, திட்டம் போட்டு வந்தது போலவும் தெரியவில்லை.

Mangalore-pub attack- boys also attacked

பெண்கள் மற்றும் பையன்களும் தாக்கப்பட்டிருக்கின்றனர்: முதலில் அக்குழு “உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்,” என்று உள்ளே செல்ல அனுமதி கேட்டது. உள்ளே சென்ற பிறகு, சில பெண்கள் குடித்த நிலையில் காணப் பட்டபோது, விசாரித்தனர். அவர்கள் தங்களுடைய “பாய் பிரென்ட்ஸ்” உடன் வந்ததாக கூறினர். இதனால், அவர்களை, வீட்டிற்கு செல்லும் படி பணித்தனர். அதற்கு, அவர்கள், “எங்கள் பணத்தில், நாங்கள் வாங்குகிறோம், குடிக்கிறோம், உங்களுக்கு என்ன?” என்று எதிர்த்துப் பேசியுள்ளனர். அதற்கு பையன்களும் ஆதரவாக கத்திப் பேசி, வாதிட்ட போது, கைகலப்பு ஏற்பட்டது. பெண்கள் எல்லோரையும் வெளியே போகும் படி கத்தினர். மறுத்தவர்களை, அடித்து துரத்தவும் செய்தனர். தடுத்த பையன்கள், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதெல்லாம், வீடியோவில் பதிவாகின[2]. ஶ்ரீராம் சேனையின் துணைத் தலைவர் பிரஷாத் அவதார், “தொடர்ந்து பெண்கள் பாரம்பரிய மரியாதைக்குரிய கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால், இது ஒரு உடனடியாக பீரிட்டெழுந்த உணர்வு பூர்வமான எதிர்வினை ஆகும். இந்த பெண்கள் எல்லோரும் இந்துக்கள், ஆனால், இவ்வாறு முஸ்லிம் பையன்களுடன் இருப்பதற்கு வழிவகுக்கிறார்கள்,” என்று விளக்கம் அளித்தார்.

Amnesia Pub- some of the girls drunken

பெண்கள் பிரச்சினை மென்மையாக கவனத்துடன் அணுக வேண்டிய தேவை, கவனம்: பெண்கள் அடிக்கப்பட்டனர், தலிபான் போன்ற தன்மை இந்துத்துவாதிகளிடம் காணப்பட்டது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது, வாத-விவாதங்கள் நடந்தன. செக்யூலரிஸ ஊடகங்கள் இதனைப் பெரிது படுத்தினாலும், பெண்களின் பெற்றோர், உற்றோர், மற்றோர் கவனமாக கையாள வேண்டியதை உணர்ந்தனர். பெண்கள் உரிமைகள் என்று பேசப் படுகின்றோர் உண்மையில் எதற்காக அக்கோஷத்தை முன் வைக்கின்றனர் என்பதும் அக்கறாஇயாக நோக்கப் பட்டது. பொதுவாக, இத்தகைய மென்மையான பிரச்சினைகளை, எழுப்பி, உசுப்பி விட்டு பெண்கள் உரிமைவாதிகள் அடங்கி விடுவர் அல்லது காணாமல் போய் விடுவர். ஆனால், எப்பொழுதும் அவரவர் இடங்களில், பாதிக்கப் பட்டவர் மற்றும் இதர மக்கள், வாழ வேண்டும், தொடர்ந்து தங்களது கடமைகளை ஆற்ற வேண்டியுள்ளது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால், தான், தேசிய பெண்கள் கமிஷன் சார்பாக விசாரணைக்கு வந்தவர், மிக்க அக்கரையுடன் பிரச்சினையை அணுகியுள்ளனர். ஆனால், அரசியலாக்க வேண்டும் என்ற போது, அதில் ஈடுபட்ட பெண்களே மாறியுள்ளனர், மாற்றப்பட்டுள்ளனர்.

Mangalore-pub attack- Nirmala Venkatesh removed from NCW

தேசிய பெண்கள் கமிஷன் சார்பாக முரண்பட்ட விசாரணை, அறிக்கைகள்:

24-01-2009 அன்று தாக்குதல் நடந்திருக்கிறது.

27-01-2009 அன்று தேசிய பெண்கள் கமிஷன் சார்பாக, நிர்மலா சீனிவாசன் தலைமையில், மூன்று பேர் நேரிடையாக வந்து விசாரித்தனர்.

30-01-2009 அன்று பப் சொந்தக்காரர்கள் மற்றும் பொய்யான காரணங்கள் சொல்லி அந்த இடத்திற்குள் நுழைந்துள்ளதாக கூறினார். பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப் படவில்லை என்று குற்றம் சாட்டி, பப் லைசென்ஸ் நீக்க பரிந்துரைத்தார்[3].

02-02-2009 அன்று அரைகுறை உடைகளுடன் ஆடிக்கொண்டிருந்த பெண்களால் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் அவர்கள் தாக்கியுள்ளனர். பெண்கள் எப்பொழுதும் தங்களை காத்துக் கொள்ள முயல வேண்டும். என்றார்.

06-02-2009 அன்று தேசிய பெண்கள் கமிஷன் அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை.

26-06-2018 அன்று பிரமோத் முத்தாலிக் கைது செய்யப் பட்டார்.

28-06-2018 அன்று தேசிய பெண்கள் கமிஷன் இரண்டாவது முறையாக, கிரண் சத்தா என்றவர் கீழ் அனுப்பியது[4]. உயிருக்கு பயந்து பெண்கள் ஓடியதாக அக்குழு கூறியது.

06-03-2009 அன்று நிர்மலா வெங்கடேஷ் பிஜேபியில் சேர்ந்தார்.

09-03—2009 அன்று பிரமோத் முத்தாலிக், தெற்கு கன்னட பகுதிற்குள்நுழைய தடை விதிக்கப் பட்டது.

Amnesia, the lounge, Mangalore-pub attack

சங்கப்பரிவார் குற்றஞ்சாட்டப்பட்டது: அன்றிலிருந்து, அது தேசிய செய்தியாகி, குறிப்பாக, ஆங்கில ஊடகங்கள் அதிகமாகவே வரிந்து கட்டிக் கொண்டு, நாள் முழுவதும் அதையே, திரும்ப-திரும்ப காட்டிக் கொண்டிருந்தது. “மாரல் போலீஸிங்” அதாவது, தார்மீகப் பெயரில் போலீஸ் போல தட்டிக் கேட்கிறார்கள், அடாவடித் தனம் செய்கிறார்கள் என்றா முறையில், வாத-விவாதங்கள் நடத்தப் பட்டன. பெண்கள் பப்புக்கு போகலாம், குடிக்கலாம், ஆடலாம், இதெல்லாம் அவர்களுடைய உரிமைகள் என்று தான் வாதிக்கப் பட்டது. ஆனால், சம்பந்த பெண்கள் அல்லது அவர்களது பெற்றோர் கலது கொள்ளவில்லை. நவநாகரிகமான பெண்கள் கலந்து கொண்டு அதிரடியாக பேசினர். டேடிங் வைப்போம், சேர்ந்து வாழ்வோம், கருத்தடை மாத்திரைகள் கூட உபயோகிப்போம் என்றெல்லாம் பேசியது திகைக்க வைத்தது. அப்பொழுதைய மத்திய அமைச்சர் ரேணுகா சௌத்ரி இதனை ஆர்பாட்டமாக ஆதரித்தார். ஆஹா, சங்கப் பரிவார் எங்களை போலீஸ் போல நடத்துகிறது, எங்களுக்கு குடிக்க, கூத்தடிக்க எல்லாம் உரிமைகளும் உள்ளன என்று பயங்கர போராட்டம் வெடித்தது! “பப் பரோ”, பப்புகளை எல்லாம் நிரப்புங்கள் என்று அம்மையார் ரேணுகா சௌத்ரி, இளசுகளை உசுப்பி விட்டு, போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார்! இப்பொழுது கூட, ஶ்ரீராம் சேனா, முன்பு ஆர்.எஸ்.எஸ் அங்கமாக இருந்தது என்று குறிப்பிடுகின்றது[5].

Mangalore-pub attack- charge sheeted

தற்கொலை செய்து கொண்ட பையன்களுக்கு இருக்கின்ற ஈரம், துக்கம், மானம், குடித்து கலாட்டா செய்த பெண்களிஅம் இல்லாதது: பெண்களின் பெற்றோர், உற்றோர் இப்பிரச்சினையின் தீவிரம், முக்கியத்துவம், பெண்களின் எதிர்காலம் முதலியவற்றை அறிந்து, அடக்கி வாசிக்க முடிவு செய்தனர். ஶ்ரீராம் சேனை நல்லது தான் செய்தது என்றனர். அதற்குள், புகார் கொடுக்கப்பட்டு, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்ட்டு, சுமார் 40 பேர் கைது செய்யப் பட்டனர்[6]. மங்களூர் பப் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட இளைஞர்களுள் இருவர் அஸ்வின் மற்றும் பிரவீன் அக்ஷபவன் [Ashwin and Praveen Akashbhavan], கைது, ஜெயில் என்று மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்டனர்![7] ஆனால், குடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் வருத்தப் பட்டனரா என்று தெரியவில்லை. இருவர், வெளிநாட்டிற்கு சென்று விட்டனர். அதாவது, சம்பந்தப் பட்டோர், இப்பிரச்சினையை சுமூகமாக முடித்து விட பார்த்தனர். இந்தியாவை தாலிபன் போன்று பெண்களை அடக்கியாள போகின்றனர் என்ற பிரச்சாரத்தை மங்களூர் மக்கள் விரும்பவில்லை. ரேணுகா சௌத்ரி, அவ்வாறு சொன்னதை உள்ளூர் மக்கள் எதிர்த்து ஆர்பாட்டம் செய்தனர். மேலும், இதில் ஈடுபட்ட பெண்ளில் சிலர் பணக்காரர்கள் மற்றும் பப்புகளை வைத்திருப்பவர்கள் அரசியல்வாதிகளுக்கு வேண்டப்பட்டவர்கள்.

© வேதபிரகாஷ்

13-03-2018

Amnesia Pub- some of the girls drunken-2

[1] Girls assaulted in Mangalore pub by Sri Ram Sena and Bajrang Dal activists

https://www.youtube.com/watch?v=l7yg-bdlmko

[2] tv daijiworld, Mangalore’s first internet tv. Owned by Daijiworld Media Pvt Ltd, https://www.youtube.com/watch?v=lEbD2aXs-XU

[3] The Hindu, Another official in Mangalore to investigate pub attack, March 2 2009. 00:00 IST; March 31 2010 17:26 IST.

[4]  Union Minister of Women and Child Development Renuka Chowdhury has sent Kiran Chadha, Joint Secretary (Women Bureau), Union Ministry of Women and Child Development, to Mangalore to inquire into the attack on January 24 against women guests at a local pub by Sri Rama Sene activists. Ms. Venkatesh’s statements in Mangalore had stirred a hornet’s nest as she blamed the pub owner for failing to provide proper security to the women and recommended cancelling of its licence.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Another-official-in-Mangalore-to-investigate-pub-attack/article16653223.ece

[5] Indian Express, 26 accused acquitted in Mangalore pub attack, Published: 13th March 2018 03:18 AM; Last Updated: 13th March 2018 03:18 AM.

[6] Deccan Herald, Amnesia: Freedom for Mangaluru pub attackers,, Published: Mar 13, 2018, 3:03 am IST; UpdatedMar 13, 2018, 3:03 am IST

[7] https://www.deccanchronicle.com/nation/crime/130318/amnesia-freedom-for-mangaluru-pub-attackers.html

Advertisements

இரண்டு உடை – ஆபாச-அசிங்க நடனத்தை நடத்த அனுமதி மறுத்து, முன்னர் அனுமதி கொடுத்தற்கு வருந்தி தீர்ப்பளித்த நீதிபதி

நவம்பர் 26, 2016

இரண்டு உடை – ஆபாச-அசிங்க நடனத்தை நடத்த அனுமதி மறுத்து, முன்னர் அனுமதி கொடுத்தற்கு வருந்தி தீர்ப்பளித்த நீதிபதி

adal-padal-dance-court-denied-permission-26_11_2016_007_014

நாமக்கல் மாவட்டத்தில் என்னத்தான் நடக்கிறது? என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிபதி உத்தரவு: நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள சில கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்குமாறு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனு அளித்தனர்[1]. ஆபாச நடனங்கள் நடைபெறுவதாலும், அதற்கு தடை இருப்பதாலும், காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. போலீஸ் அனுமதி வழங்காததால், நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கும்படி உத்தரவிடக் கோரி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த மணி, ராமசாமி உட்பட 6 பேர் தனித்தனியாக, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்[2]. அதில், ‘தங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர். “பாதுகாப்பும் வழங்கும்படியும்” என்றதே, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற கதையாக இருக்கிறது.

obscene-and-vulgar-dances-at-temples-judge-misled-by-the-advocateவழக்குக் கோப்புகளைப் பார்த்த்போது நீதிபதிக்கு சந்தேகம் வந்தது: இந்த வழக்கு வெள்ளிக்கிழமை 24-11-2016 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ் [Justice P N Prakash] விசாரித்தார். அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அடிக்கடி அனுமதிக் கேட்டு வழக்கு தொடர்வதை கண்டு சந்தேகம் கொண்டார்[3]. மேலும் “சுயவிளக்க” முனுவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் முரண்பாடுகள் இருந்தன. ஒரே வழக்கறிஞர் வேறுபட்ட ஆறு குழுக்களுக்கு ஆஜராவது முதலியனவும் சந்தேகங்களைக் கிளப்பின. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் என்னத்தான் நடக்கிறது? என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அம்மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்[4].

court-declines-permission-for-dance-programmes-at-temple-the-hindu-26-11-2016-1

போலீஸ் அனைத்து விவரங்களையும், ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்தது[5]: இதன்படி, போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மகேஸ்வரன் ஆஜராகி அனைத்து விவரங்களையும், ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்தார்[6]. அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பலர் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். அந்த வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட்டும், மனுதாரரின் கோரிக்கை சட்டப்படி பரிசீலிக்கும்படி போலீசுக்கு உத்தரவிடுகிறது. இந்த உத்தரவை எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வக்கீல்களுடன், கிராமத்தினர் பலர் கூட்டமாக வந்து விடுகின்றனர். ஐகோர்ட்டே உத்தரவிட்டுள்ளது, அதனால் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று பிரச்சினை செய்து, ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றனர்.”

court-declines-permission-for-dance-programmes-at-temple-the-hindu-26-11-2016-2சாதி ரீதியாக மனு, ஆனால், ஆஜராகுவது ஒரே வக்கீல்: போலீஸ் சூப்பிரண்டு தொடர்கிறார், “ஒரு கிராமத்தில் உள்ள பொது கோவிலின் திருவிழாவுக்கு, அந்த கிராமத்தை சேர்ந்த பல்வேறு சாதியினர் தனித்தனியாக இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதற்காக ஒவ்வொரு சாதியினரும், தனித்தனியாக இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உத்தரவினை பெறுகின்றனர். அந்த உத்தரவின் அடிப்படையில் கிராமத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி, தாங்கள் பெரியவர்கள் என்று காட்டிக் கொள்கின்றனர். சந்தைபேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த 6 பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து, கடந்த 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தனித்தனியாக உத்தரவுகளையும் பெற்றுள்ளனர். அதேநேரம், இந்த 6 மனுதாரருக்கும் ஆஜரானவர் ஒரே வக்கீல் தான்,” இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. ஆக, கோவில் திருவிழா நடத்துவதை விட, மற்ற விவாகரங்கள் தான், அதிகமாக இருக்கின்றன. ஜாதி-கட்சி-பணம் வசூல் போன்ற விவகாரங்கள் பின்னணியில் இருக்கும் போது, கடவுள், கடவுள் நம்பிக்கை, கோவில்…….முதலியவற்றாஇப் பற்றி இவர்கள் எப்படி கவை கொள்வார்கள்?

obscene-and-vulgar-dances-at-templesநல்ல அனுபவம்பெண்கள் இரண்டு ஆடைகளை மட்டும் உடலில் போட்டுக் கொண்டு, ஆபாசமாக ஆடுகின்றனர். ஆண்கள் குடிபோதையில் ஆடுகின்றனர்: இந்த அறிக்கையை படித்து பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஆடல் பாடல் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியையும் போலீசாரிடம் இருந்து வாங்கி பார்த்தார். இதன்பின்னர் நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட மனுக்களை சட்டப்படி பரிசீலிக்கும்படி போலீசாருக்கு நான் தான் பல்வேறு தேதிகளில் உத்தரவிட்டேன். அந்த உத்தரவுகள் எல்லாம், வக்கீல்கள் மீது வைத்துள்ள நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பிறப்பித்தேன். கோயில்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கும்படி, ஏற்கெனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். இதற்காக ஆழ்ந்த வேதனை, வருத்தத்தைத் தெரிவிக்கிறேன். கடந்த காலத்தில் நடந்த கெட்ட சம்பவங்கள் எல்லாம் ஒரு மனிதனுக்கு நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும். அதில் நீதிபதியான நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. எனக்கும் இது ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது.”

 obscene-and-vulgar-dances-at-temples-judge-p-n-prakash

நடக்கும் நடனங்கள் சட்டத்தில் உள்ள விளக்கங்களையும் மீறுயுள்ளன: நீதிபதி தொடர்கிறார், நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியை பார்த்தோம்[7]. பெண்கள் இரண்டு ஆடைகளை மட்டும் உடலில் போட்டுக் கொண்டு, ஆபாசமாக ஆடுகின்றனர்[8]. ஆண்கள் குடிபோதையில் ஆடுகின்றனர். அது நிச்சயமாக அபாசம் மற்றும் அசிங்கம் என்ற வார்த்தைகளின் [ surpassed the very definition of the words “obscenity” and “vulgarity”] விளக்கத்தையும் மீறுகின்றன[9]. குழந்தைகள், மாணவர், முதியோர், பெண்கள் இதனால் பாதிக்கப்படுவது நிச்சயம்[10]. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு சாதியினரும், இதுபோன்ற நிகழ்ச்சியை தனித்தனியாக நடத்துவதால், இதில் ஏற்படும் சிறு பிரச்சினைகள் கூட மிகப்பெரிய சாதி கலவரமாக மாறி விடுகிறது என்று போலீசார் தன் அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், சேலத்தை சேர்ந்த தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக்கலைஞர்கள் நலச்சங்கம், இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தன்னிடம் மனு கொடுத்துள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்”.

© வேதபிரகாஷ்

26-11-2016

temple-dance-acceotable-form

[1] தினமணி, கோயில் விழாக்களில் ஆபாச நடனம் நடத்த எந்த உரிமையும் கிடையாது: உயர்நீதிமன்றம் உத்தரவு, Published on : 26th November 2016 02:55 AM .

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/nov/26/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2605107.html

[3] தினகரன், கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு, Date: 2016-11-25 19:57:45.

[4] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=261508

[5] லைவ்டே, கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு !!, ஜூலை.2, 2013.

[6] http://liveday.in/chennai-online-tamil-news/hc-refused-to-allow-archestra/

[7] The Times of India, HC says no for two piece dance at temple festivals, TNN | Updated: Nov 26, 2016, 02.14 AM IST.

[8] http://timesofindia.indiatimes.com/city/chennai/HC-says-no-for-two-piece-dance-at-temple-festivals/articleshow/55628876.cms

[9] Indian Express, Judge regrets grant of permission for ‘adal-padal’, By Siva Sekaran  |  Express News Service  |   Published: 26th November 2016 04:00 AM, Last Updated: 26th November 2016 04:00 AM.

[10] http://www.newindianexpress.com/states/tamil-nadu/2016/nov/26/judge-regrets-grant-of-permission-for-adal-padal-1542780.html

எஸ். வி. சேகர், “இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா?

செப்ரெம்பர் 3, 2013

எஸ். வி. சேகர், “இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா?

எல்லோருடனும் எஸ். வி. சேகர்

எல்லோருடனும் எஸ். வி. சேகர்

இந்துமகாசபா”, வீரசவர்கர், தமிழகம்: “இந்து மகா சபா” என்று ஒன்று உள்ளதா என்ற கேள்வி முதலில் எழுகிறது. வீரச்சவர்கரால் உண்டாக்கப் பட்ட “இந்து மகா சபா” காங்கிரஸ்காரர்கள் மற்றும் இதர இந்து அமைப்புகளாலுமே மூடுவிழா செய்யும் அளவிற்கு கொண்டு விட்டன. அனதால், அது மறைந்து விட்டது. இவர்களுக்கும் வீரசவர்க்கும், அவரது கொள்கைகளுக்கும் யாதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் அவரைபற்றியாவது ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவர் எப்பொழுதும் தூஷிக்கப்பட்டு வருகிறார்[1]. நீதிமன்றத்தில் தீர்வானப் பிறகும் அத்தகைய பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது[2]. ஆனால், இவர்கள் ஏதாவது செய்தார்களா என்றும் தெரியவில்லை. ஆனால், இப்பொழுது தமிழகத்தில் பல குழுக்கள்[3]  “இந்து மகா சபா” என்ற பெயரில் கிளம்பியிருக்கிறார்கள்[4]. அகில பாரத இந்து மகாசபா தனக்கு தமிழகத்தில் கிளையில்லை என்கிறது[5]. “அம்பேத்கரை” உபயோகிப்பது போல, “சவர்கரை” இக்குழுக்கள் உபயோகப்படுத்துகினவா என்று கவனிக்க வேண்டும்.

அதிமுகவால் ஒதுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

அதிமுகவால் ஒதுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

எஸ். வி. சேகர்நடிகர், பிராமணர், அரசியல்வாதி: எஸ். வி. சேகர் விசயத்தில் வரும்போது, அவரும் தன்னை இந்து என்று சொல்லிக் கொண்டோ அல்லது பிராமணர் என்ற நிலையிலோ ஒன்றும் செய்து விடவில்லை. குறிப்பிட்ட விசயங்களில் இந்துக்களுக்கு எதிராக வேலை செய்துள்ளார். செப்டம்பர் 2008ல் அதிமுக கூட்டம் நடந்தபோது, இவருக்கு அழைப்பிதழ் கூட அனுப்பப்படவில்லை[6]. அதிமுகவிலிருந்து ஓரங்கட்டி, வெளியேற்றிய பிறகு[7], இவர் அரசியல் ஆதாயங்களுக்காக, ஏதேதோ செய்து வருகிறார். திமுக பொதுக்குழுவில் கூட உட்கார்ந்து பார்த்தார். ஆனால், “பார்ப்பனனை” எந்த “திராவிடனும்” கண்டுகொள்ளவில்லை.

கருணாநிதியுடன் சேகர் - அதாவது திராவிடனும், ஆரியனும் சேர்ந்திருப்பது!

கருணாநிதியுடன் சேகர் – அதாவது திராவிடனும், ஆரியனும் சேர்ந்திருப்பது!

பிராமணர்சங்கம், பிஜேபி, அதிமுக, திமுக, காங்கிரஸ்என்றுமாறும்நடிகர்: எஸ்.வி.சேகர் பிஜேபிகாரர் என்ற கருத்தை ஏற்படுத்தியிருந்தார். கடந்த 2009ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்து அக்கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார்[8]. அதன் பிறகு கட்சி விரோத செயலுக்காக அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் (30 July 2009). வெளிப்படையாக திமுகவைப் போற்றிப் பேசியதால் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்[9]. பின்னர் பிராமணர்கள் சங்கத்தை துவங்கிய அவர் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்தார். பிராமணர்களுக்கு இடவொதிக்கீடு வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதையடுத்து திடீரென காங்கிரஸில் சேர்ந்தார். அங்கும் 2011ல் கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று நீக்கப்பட்ட[10] அவர், தற்போது மீண்டும் அதிமுகவுக்கு போக விரும்புகிறார்[11]. “மீண்டும் அதிமுகவில் சேர விருப்பம் தெரிவித்து கட்சித் தலைமைக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு கடிதம் அளித்தேன். விரைவில் நல்ல பதில் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த என்னை மே மாதம் தங்கபாலு நீக்கினார். பின்னர் அவரையே நீக்கிவிட்டனர். இது தான் காங்கிரஸ் கட்சி. தமிழகத்தில் காங்கிரஸ் ஒருபோதும் தலை தூக்கவே முடியாது என்று முதல்வர் கூறியிருப்பது 100 சதவீதம் உண்மை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் முஸ்லிம்கள் தான் அவரை தேர்வு செய்து பதவியில் உட்கார வைத்துள்ளனர். அம்மாநிலத்தில் அரசு சார்பில் இலவசம் எல்லாம் தேவையில்லை என்று மக்கள் கூறிவிட்டனர். அதனால் அங்கு மின்சாரத் தட்டுப்பாடு இல்லை. அரசு மதுபானம் விற்பனை செய்யவில்லை. தமிழக மக்களும் இலவசங்கள் வேண்டாம் என்று கூறினால் மதுபானம் இல்லாமல் போகலாம்”, என்றார்[12].

திராவிடர்கள் கூட்டத்தில் ஆரியன் அல்லது பார்ப்பனன்!

திராவிடர்கள் கூட்டத்தில் ஆரியன் அல்லது பார்ப்பனன்!

பிஜேபியேசெய்யாதத்தைஇவர்கள் / இவைசெய்யப்போகின்றனவா?: ஆக மொத்தத்தில், இப்பிரச்சினையில் உள்ள இரண்டு கூட்டங்களுமே சந்தர்ப்பவாதிகள் தாம். தேர்தல் வருகின்ற நேரத்தில் ஏதோ பிரபலம் அடையலாம் என்ற நோக்கத்தில் வேலை செய்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. இவர்களால், இந்துக்களுக்கு ஒன்றும் ஆதாயம் வரப்போவதில்லை. ஏனெனில், ஒரு சீட்டுக் கூடக் கிடைக்காது. மாறாக ஓட்டுகள் சிதற உதவுவார்கள். ஆனானப்பட்ட பிஜேபிகாரர்களே 100-500-1000 என்று ஓட்டுகள் வாங்கிக் கொண்ட்டு, டிபாசிட்டையும் இழந்து வருகின்றனர். இந்து என்று பேப்பரில், படிவத்தில், விண்ணப்பத்தில் மட்டும் போட்டுக் கொண்டால் போதாது, உண்மையிலேயே இந்துவாக இருந்து, தைரியமாக இந்துக்களுக்காக உழைக்க வேண்டும்.

அரசியல் மங்காத்தா ஆடும் மனிதர்கள்

அரசியல் மங்காத்தா ஆடும் மனிதர்கள்

தமிழகத்தில்இந்துக்கள்எங்கே?: முஸ்லிம்கள், கிருத்துவர்கள் மற்றவர்கள் தம்மை அப்படியே அடையாளம் காட்டிக் கொண்டு மற்றும் அத்தகைய மதவாத கட்சிகளை வைத்துக் கொண்டே, எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்ற பதவிகளுக்கு வருகிறார்கள். தமது நமொஇக்கையாளர்களுக்கு ஏதோ செய்து வருகின்றார்கள். ஆனால், “இந்து” என்று வெளிப்படையாக, தைரியமாக தம்மை அப்படியே அடையாளம் காட்டிக் கொண்டோ மற்றும் அத்தகைய மதவாத கட்சிகளை வைத்துக் கொண்டோ, இதுவரை ஒருவரும் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் ஆகவில்லை. இனியும் வருவார்களா என்பது சந்தேகமே. ஆகவே, இவர்களது நாடகங்களினால், இந்துக்களுக்கு ஒன்றும் நன்மையில்லை.

இதெல்லாம் கூட்டணியா, சந்தர்ப்பவாதமா, எதிர்ப்பா, ஊடலா, கூடலா?

இதெல்லாம் கூட்டணியா, சந்தர்ப்பவாதமா, எதிர்ப்பா, ஊடலா, கூடலா?

மங்காத்தாவிளையாட்டுஆடும்எஸ். வி. சேகர், “இந்துமகாசபா: தன்னைப் பற்றி அவதூறாக சுவரொட்டிகளை ஒட்டிய இந்து மகாசபா அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் எஸ்.வி.சேகர் சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் செய்தார்[13]. இது குறித்து அவர் கொடுத்த புகார் மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது[14]: மகாபாரதத்தில் மங்காத்தாஎன்ற என்னுடைய நாடகம் 1980ஆம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டு, இன்று வரை 1000 காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நகைச்சுவை நாடகத்துக்கு எதிராக இந்து மகாசபா என்ற அமைப்பினர் சென்னை முழுவதும் எனது புகைப்படத்துடன் மிக தரக்குறைவாக விமர்சித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடக்கும் என்னை இது மிகவும் புண்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அமைப்பின் மீதும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அவர் மனுவில் கூறியுள்ளார்[15]. இந்த புகார் மனுவை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் வி.வரதராஜுவிடம் எஸ்.வி.சேகர் வழங்கினார்[16].

Karu-as-nataraja

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கருணா!

பிராமணர்களைத்தாக்குவதால்இந்துமதம்தாக்கப்படுவதாகாது: ஆங்கிலேய அடிவருடி சித்தாந்திகள், இந்தியர்களை தொடர்ந்து ஏமாற்றி வர, பிராமணிஸம் தான் இந்துயிஸாம் என்ரு பிதற்றி வருகிண்ரனர். அதனால், பிராமணர்களைத் தாக்குவதால் இந்துமதம் தாக்கப்படுவது போல என்ரு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல. இந்துக்கள், இந்துக்களாலேயே அழித்துக் கொள்ளவேண்டும் என்ற சதிதிட்டம் அது. அதில் திகவினர் மாட்டிக் கொண்டு, சுயமரியாதை திருமணத்தில் கேவலப்பட்டு, “இந்துக்களாகி” மரியாதையும், அந்தஸ்தையும் பெற்றனர். இருப்பினும் சொத்து, காசு, அரசியல் என்ற காரணங்களுகாக இன்னும் அத்தகைய பொய்களை, மாயைகளை சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களும், அதாவது இந்த எஸ். வி. சேகர், “இந்து மகா சபா”-வினரும் ஆதே வேலையை செய்து வருவதைக் காணலாம்.

© வேதபிரகாஷ்

03-09-2013


[6] AIADMK legislator S.Ve. Sekar, representing the Mylapore Assembly constituency, and former MP T.T. Dinakar did not attend the meeting as they were not invited. http://www.hindu.com/2008/09/20/stories/2008092059901000.htm

[13] Actor, S.Ve Sekar, went to the Chennai City Commissioner’s office, requesting to take action to take action against people who had displayed defaming posters of him. S.Ve Sekar is running a play named Mahabarathathil Mangathaa. Reports claim, members of the Maha Subha organization have alleged that Sekar is desecrating the Mahabaratha and have printed and published defamatory posters of the actor. Following this, he went to the Chennai City Commissioner’s office and filed a petition in request to take action against the people who made the defamatory posters.

http://sathiyam.tv/english/general/s-ve-sekar-furious-about-defaming-poster-registers-complaint