Archive for the ‘உருத்தும் ஜாக்கெட்’ Category

பெண்களின் மார்புடை சர்ச்சை!

திசெம்பர் 18, 2009

பெண்களின் மார்புடை சர்ச்சை!

ஜாக்கெட்‘: அரசின் கட்டுப்பாடுஆசிரியைகள் கடும் அதிருப்தி

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2009, 11:04[IST]

http://www.deccanchronicle.com/chennai/dress-code-teachers-tn-871

பெற்றோர்களிடமிருந்து புகார்கள்: நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு[1] உத்தரவிட்டிருப்பது குறித்து ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடை அணிவது குறித்து அரசு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆசிரியைகள் கண்டிப்பாக புடவையில்தான் வர வேண்டும். ஆசிரியர்கள் டீ சர்ட் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது. நாகரீகமான முறையில் உடையணிய வேண்டும் என இந்த கட்டுப்பாடு கூறுகிறது. இருப்பினும் சில பள்ளிக்கூட ஆசிரியைகள் குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியைகள் விதம் விதமான டிசைன்களில் ஜாக்கெட் அணிந்து வருவதாக பெற்றோர்கள் தரப்பில் அரசுக்கு தொடர்ந்தது பெற்றோர்களிடமிருந்து புகார்கள் போய்க் கொண்டிருந்ததால், உடைக் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தி சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கை விடுத்திருந்தது.

ஜாக்கெட்டுகளின் அசிங்கமான-ஆபாசமான அமைப்பு: நாகரிகம் மாறுகிறது, ஆனால் அடிப்படை மனித உணர்வுகள் மாறவில்லை. அவையும் மாறுகின்றன என்றால் மேனாட்டு கோளாறுகள் மூலம்தான். காமத்திற்கும்-காதலுக்கும், நாகரிகத்திற்கும்-ஒழுக்கத்த்ற்கும் இலக்கணம் கேட்டு வாதிப்பதில் கற்போ, பெண்களின் ஐங்குணங்களையோப் போற்றிக் காக்க முடியாது[2]. முன்னும் பின்னும் வேண்டுமென்றே வடிவமைப்பு என்ற “போர்வையில்” உடலை அதிகமாக வெளிக்காட்டவேண்டும், அதிலும் குறிப்பாக கவன ஈர்ப்பு செய்யவேண்டும் என்ற முறையில் அவை இருக்கின்றன (vulgar design cuts of Blouse ). இதில் ஜன்னல் வகைமாடல் (Window type designer blouses) மிகவும் பிரசித்தம், இதை .டிஸைனர் பளவுஸ் என்றும் கூறுகிறார்கள். குஷ்பு இதைதான் அணிந்து பிரபலமாக்கி வருகிறார். அதற்காக அவர் பணமும் பெறுகிறார். ஆண்கள் டி-சர்ட்டுகள், வெளிர்க்கப்பட்ட உடலை ஒட்டிய இருக்கமான ஜீன்ஸ் (bleached and skin-tight jeans) முதலியவை அணிந்து வரக்கூடாது.

நாகரிகமான முறையில் உடை அணிதல்! இதற்கு ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒரு அரசு ஆசிரியை கூறுகையில், “எங்களது ஆசிரியப் பணி குறித்து அரசு தீவிரமாக கண்காணிப்பதையும், அதுதொடர்பான நடவடிக்கைகளையும் நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். அதை விடுத்து, நாங்கள் எப்படி ஜாக்கெட் போட வேண்டும் என்று அரசு கூறுவது நல்ல டேஸ்ட்டில் இருப்பதாக தெரியவில்லை. பள்ளிக்கு வரும்போது சேலைதான் அணிய வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்த நாள் முதலே இதை நாங்கள் பழக்கப்படுத்திக் கொண்டு விடுகிறோம். ஆனால் நாகரீகமான முறையில் என்ற வார்த்தையை அரசு பயன்படுத்துவது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்போது நாங்கள் அநாகரீகமான முறையில் வருவது போல மக்களுக்கு தோற்றத்தை ஏற்படுத்துகிறது அரசின் சர்க்குலர்”. நிச்சயமாக, மக்கள் ஆசிரியர்களிடமிருந்து ஆரோக்யமான கட்டுப்பாடை, பின்பற்ற வேண்டிய ஒழுங்கை, ஏற்றுக் கொள்ளப்பட்ட நாகரிகத்தை எதிர்பார்க்கிறார்கள்.

நல்ல டேஸ்ட் / கெட்ட டேஸ்ட் / கேட்ட டேஸ்ட்: இத்தகைய விளக்கங்கள், இலக்கணங்கள், மரபுகள், விவாதங்கள் தேவையா? பிரச்சினையே “விருப்பத்திலானால்” வந்த வினைதானே? மார்பாடைகளுக்கும் பிரச்சினையை உருவாக்கியதால் தானே, இத்தகைய கட்டுப்பாடு வந்திருக்கிறது. நிச்சயமாக ஒரு பெண்ணிற்கு தன் உடல் மீது அவளுக்குத் தான் முழு உரிமை! அவள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அவள் சமூகத்தில், அத்லிம் அறிந்து-தெரிந்திருக்கும் சமூகத்தில் இருக்கும்போது, நான் வேறுவிதமாக இருப்பேன் எனும்போது தான் வருகிறது விவகாரம்.

நடிகைகள் செய்வதை எல்லாம் ஆரிசியைகள் செய்வதை எந்த பெற்றொர்களும் விரும்ப மாட்டார்கள்: ஆசிரியைகளின் பெற்றோர்களோ, கணவன்மார்களோ, அவர்களது பிள்ளைகளே விரும்ப மட்டார்கள். எப்படி பெண்கள் வேலை செய்யும் இடங்களுக்கு வரும் முன்னர், வர்ம் போது, வந்த பின்னர், தமது கைப் பைகளிலிருந்து நடமாடும் அலங்காரப் பொருட்கள் வைத்துக் கொண்டு அலங்காரப் படுத்த்க் கொண்டு உள்ளே நுழைகிறர்கள் என்பது அறிந்ததே. அதுபொலத் தான் ஆடை அலங்காரமும். ஏதாவது “ஃபங்ஸன்” / விழாக்களுக்கு செல்கிறர்கள் என்றால் தனியாக அத்ற்கு ஆடைகளையே எடுத்து வந்து விடுவார்கள். வீட்டில் திட்டுவார்கள், ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அங்லிருந்து அணிந்து சென்று, பிறகு மறுபடியும் மாற்றி வீட்டிற்கு செல்வார்கள்! இத்தகைய “ஆடை மாற்றங்கள்” / போலித்தனங்கள் பெண்களுக்குத் தேவையில்லையே!

கண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட்: குறிப்பிட்ட ஆசிரியைகள் கண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட் அணிந்து வருவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஒட்டு மொத்த ஆசிரியைகளுக்கும் நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணியுங்கள் என்று சொல்வது எங்களை அவமானப்படுத்துவது போல உள்ளது என்றார். ஆனால் உடைக் கட்டுப்பாட்டு உத்தரவு புதிதாக பிறப்பிக்கப்பட்டதல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே இது அமலுக்கு வந்து விட்டது என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. “கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்” என்று குறிப்பிடும்போதே ஆசிரியைகள் வெட்கப் படவேண்டும், ஆத்திரமோ, கோபமோ படக்கூடாது. இங்கு கூட “கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்” எனும்போது “கண்ணை உருத்தாத / உருத்தாமலிருக்கும் விதமான ஜாக்கெட்” எது என்றெல்லாம் கேள்வி கேட்பார்களா, ஆராச்ச்சி செய்வார்களா?

“உன்னழகைக் கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்” சமாச்சாரம் அல்ல: இன்று பெண்ணுரிமை என்று அதற்கும் உரிமைகள் கேட்டு கொடி பிடிக்கிறார்கள் பெண்கள், பெண்ணூர்மை சங்கங்கள் முதலியன! சரி, அப்பெண்களே தமது மகள்களை அவ்வாறு அனுப்புவார்களா? ஆகவே உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும். தெரிந்தும், தெரியாத மாதிரி நடிப்பது, விதண்டாவாதம் செய்வது முதலியனத் தான் பொறுப்பற்ற செயல்கள். அவர்கள் அசிங்கமான-ஆபாசமான ஜாக்கெட் அணியும் ஆசிரியைகளைவிட மோசமானவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடை: ஆசிரியக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடையே உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. பல பள்ளிகளில் ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் சீருடைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த இயக்குநரகத்தில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் பெண்களைத் தனித்துக் காட்டுவதற்காக அவர்களுக்கென்று தனி சீருடையும் கடந்த 70களில் அமல்படுத்தப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. அங்கும் அவ்வாதைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று உள்ளது.
பெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும்: அரசு நாகரீகம் என்ற வார்த்தையை எந்த அர்த்தத்தில் சொல்ல வருகிறது, அதுகுறித்து விளக்க வேண்டும் என் மகளிர் உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியு்ளனர். இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொருளாளர் ஜான்சிராணி கூறுகையில், ஒரு பெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும். அவரால் எந்த உடையை வாங்க முடியுமோ அதைத்தான் வாங்கி அவர் அணிய முடியும். தனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது. எது நாகரீகமான உடை என்பது பெண்களுக்கு தெரியாதா? என்கிறார் அவர். சௌகரியம் என்று வேற்விதமாக வந்தால் என்னாவது, அதைத்தான் யயசிக்க வேண்டியுள்ளது.

தனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது.: உண்மை, ஆனால் விதண்டாவாதிகள் உடனே எது தனது கலாச்சாரம், யாருடைய கலாச்சாரம், எது பாரம்பரியம், யாருடைய பாரம்பரியம், என்றெல்லாம் வாதிடுவார்கள். மற்றவர்களுடன் ஒப்பிடுவார்கள். சங்க காலத்தில் பெண்கள் மார்பு கச்சை அணிந்தார்கள், கேரளாவில் சில பெண்கள் ஜாக்கெட்டே போடவில்லை, கோவில் சிலைகளே நிர்வாணமாகத் தானே உள்ளன என்ற வாதங்கள் எல்லாம் வரும். ஆனால், உண்மை என்னவென்றால் ஒரு மனிதன் – ஆணோ, பெண்ணோ – தனது தாய், மனைவி, சகோதரி, மகள் இவர்களை அத்தகைய நிலைக்குட்படுத்துவார்களா? அதேப் போல தனது தந்தை, கணவன், சகோதரன், மகன் இவர்களை எந்த பெண்ணும் புதிய கலாச்சாரம் / மேனாட்டு இலக்கண வர்க்க விதிகள் / பாலியல் சுதந்திரங்கள் என்ற நோக்கில் அனுமதிப்பார்களா அல்லது  கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்று விரும்புவார்களா?

ஆசிரியைகளைப் பற்றி வரும் செய்திகள்: ஊடகங்களில் ஆசிரியைகளைப் பற்றி வரும் செய்திகள் நாகரிகமாகவா உள்ளன? இதோ உதாரணத்திற்கு சில – இவை ஆசிரியைகள் ஆடை, அலங்காரம், அழகு காட்டுதல், காதல், கள்ளக் காதல் முதலியவற்றை சம்பந்தப்பட்டது:

  • ஆசிரியை கொலையில் துப்பு துலங்கியது : கணவர், கள்ளக்காதலி மீது போலீஸ் சந்தேகம்http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=7592
  • பள்ளி சுவர் ஏறி குதித்து காதலை சொன்ன மாணவன் ஆகஸ்ட் 30,2008,00:00  IST http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=4374
  • கள்ளத்தொடர்பு ஆசிரியை மீது நடவடிக்கை : ஐகோர்ட் கிளை உத்தரவு மே 06,2009,00:00  IST http://www.dinamalar.com/court_detail.asp?news_id=3030
  • பள்ளி மாணவி படுகொலை : ‘கல்நெஞ்ச’ ஆசிரியர் கைது நவம்பர் 09,2008,00:00  ISTதரணிசெல்வனுக்கும், அவர் வேலை பார்த்த பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. தரணிசெல்வனின் மனைவி ராதிகாவை பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து, கள்ளத்தொடர்பு குறித்து தெரிவித்து கண்டித்துள்ளனர் http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=6115
  • கள்ளக்காதலால் ஆசிரியை குத்திக்கொலை : செஞ்சி அருகே கணவன் போலீசில் சரண் நவம்பர் 04,2008,00:00  IST http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=5972

இவையெல்லாம் தமிழக சினிமாக்களில் தமிழ் பேசி வரும் தமிழச்சி நடிகைகளின் விவகாரங்கள் அல்ல. தமிழச்சி ஆசிரியைகளின் அலங்கோலங்கள் தாம். சமூகத்தில் அக்கரைக் கொண்டவர்கள், பெண்ணுரிமை, தனிப்பட்ட நபரின் சுதந்திரம் என்றெல்லாம் நியயப் படுத்துவார்களா? பாடம் சொல்லிக் கொடுக்குக் ஆசிரியைகள் இவ்வாறு இருந்தால், அவர்களிடம் படிக்கும் மாணவர்கள் என்னாவார்கள்?

பெண்களிடம்தான் உலகமே இருக்கிறது: இது ஏதோ சித்தாந்தம் அல்ல. அதனால்தான் எல்லா பிரச்சினைகள், விவாதங்கள், சர்ச்சைகள் சம்பாந்தப்பட்ட விவகாரங்கள் எல்லாமே பெண்களுடன் சம்பந்தப் பட்டுள்ளது. ஒரு ஆண்-பெண் சேரும் நிலை, சேர்ந்திருக்கும் அமைப்பு, குடும்பம், சமூகம், குமுக்கம், குழு, என்று எப்படி சொன்னாலும், மனிதர்கள் நாய், பன்றிகள் போன்று தமது நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களை மாற்றிக் கொள்ளமுடியாது. விதண்டாவாதங்கள் அல்லது தெரிந்தே தெரியாத மாதிரி செய்யும் வாதங்களினால் எந்த பலனும் இல்லை. ஆகவே இன்றைய சூழ்நிலைகளில் பெண்களே அறிந்து செயல்படவேண்டியுள்ளது,

வேதபிரகாஷ்

18-12-2009 ©


[1] மற்ற விஷயங்களில் – அரசு விழாக்களில் பெண்கள் எப்படி ஆடை அணிந்து வரவேண்டும்………..இத்யாதி………….இவ்வாறு ஆணைகள் பிறப்பிக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்!

[2] அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு பெண்களின் ஐங்குணங்கள் என்பர். இவையெல்லாம் பெண்களுக்கு இப்பொழுது வேண்டுமா, வேண்க்டாமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டுமானால் குஷ்பு, நமிதா, ஸ்ரேயா, மல்லிகா, ஸ்னேஹா முதலிய தமிழச்சிகளிடம் சென்று தான் விவரங்களை சேகரித்து வரவேண்டும்.