Archive for the ‘இந்து விரோத திராவிட நாத்திகம்’ Category

எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள், எதிர்ப்பது, “நம்ம ஊர் பொங்கலா,” பிஜேபியா, முருகனையா? கலவரம் மூட்டும் திட்டத்தில் துலுக்கர் (2)

ஜனவரி 12, 2021

எஸ்.டி.பி.., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள், எதிர்ப்பது, நம்ம ஊர் பொங்கலா,  பிஜேபியா, முருகனையா? கலவரம் மூட்டும் திட்டத்தில் துலுக்கர் (2)

இப்பொழுது 2021ல் பாஜக புறநகர் மாவட்ட அலுவலகம் சூறையாடப்பட்டது (10-01-2021): இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மேலமடை போலீஸ் சிக்னல் அருகே உள்ள பாஜக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் 6 பேர் கொண்ட கும்பல் 10-01-2021, ஞாயிறு அன்று மாலை உள்ளே புகுந்து அங்குள்ள சேர், டேபிள்கள் மற்றும் பிரதமர் மோடி, மாநிலத் தலைவர் எல்.முருகன்ஆகியோரது புகைப் படங்களை அடித்து சேதப்படுத்தினர். மதுரை அண்ணா நகர் காவல்உதவி ஆணையர் லில்லி கிரேஸ், ஆய்வாளர் பூமிநாதன் நேரில் சென்று தாக்குதலின்போது அங்கிருந்த பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரனிடம் விசாரித்தனர். கட்சி அலுவலகம் மற்றும் சிவகங்கை சாலையில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை சேகரித்து போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி அக்கட்சியினர் கட்சி அலுவலகம் அருகே சாலை மறியல் செய்தனர். செய்தியாளர்களின் பலவேறு கேள்விகளுக்கு பதிலளித்த எல்.முருகன், ‘மதுரையில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதன் பின் சில விஷமிகள் உள்ளனர், பயங்கரவாதிகள் தேச விரோதிகள் கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்[1], இப்போதே அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்[2].

முருகனை, ஆதிதிராவிட ஆணையின் துணைத் தலைவராக இருந்தாலும், பிஜேபி தலைவராக இருப்பினும், துலுக்கர் எதிர்ப்பது ஏன்?: இப்பொழுதைய அரசியல் சூழ்நிலையில், இக்கேள்வி முக்கியமாகிறது. முருகன் ஒரு எஸ்.சி என்று யாரும் நினைப்பதாகத் தெரியவில்லை. திருமா வளவன் போன்ற பிம்பத்தை உருவாக்க முடியவில்லை. இந்துத்துவவாதியாக மாறிவிட்டதால், அந்த ஜாதிய அடையாளம் போய்விட்டது போன்ற நிலை ஏற்பட்டுள்லது. அதனால் தான், மற்ற கட்சிகள் முருகனை தைரியமாக எதிர்க்கின்றன கூட்டணி என்ற வலைமற்றும் வளையத்திலிருந்து, அதிமுக லாவகமாக தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது எனலாம். சசிகலா வைத்து, அரசியல் செய்யலாம், ஆனால், ஊழல் என்பதை மறந்து செய்ய வேண்டும். அரசியலில், இதெல்லாம் சகஜமப்பா என்றால், அதிமுக ஒன்றாகலாம், பிஜேபியுடன் கூட்டு வைக்கலாம். அப்பொழுது, ஒழுக்கம் சுத்தம், தர்மம், நியாயம் என்றெல்லாம் பிஜேபி பேச முடியாது. பிஜேபி தனித்து நின்றாலும் யாருக்கும் லாபமில்லை. பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் இரண்டு மத்திய மந்திரி பதவி கிடைக்கும். ஆக, பிஜேபியுடன் கூட்டு வைக்கும் திராவிட கட்சி அத்தகைய பேரத்தில் தான் ஈடுபடும். அந்நிலையில், திராவிட கட்சிகள் தங்கள் பலம் பெருகுவதாக நினைத்துக் கொண்டால், தகவல் கிடைத்தால், தனித்து நிற்க திட்டம் போடலாம். ஆனால், 2024 வரை பிரச்சினை வரக்கூடாது. நவீன் பட்நாயக், மம்தா போன்ற வலுவுள்ள தலைவராக மாறினால் (தேர்தலில் அதிக இடங்களில் ஜெயித்தால்), அவ்வாறு இருக்கலாம்.

பிஜேபியின் கண்டுகொள்ளா மனோபாவம்அரசியல் சமரசம்: பிஜேபி “வேல் யாத்திரை,” என்று ஆர்பாட்டம் செய்ததோடு சரி, பிறகு, அமைதியாகி விட்டார்கள். கிறிஸ்தவ பாதிரிகள், பிஜேபியில் சேர்ந்தார்கள் என்று ஆர்பாட்டம் செய்தார்கள். ஆனால், அடுத்த நாள், ஆளுக்கு ஆள், மறுப்புத் தெரிவித்து, விலகி விட்டார்கள். அதிமுகவுடன், கூட்டணி கலாட்டா நடந்து கொண்டிருக்கிறது. மத்திய ஆட்சி-அதிகாரத்தை வைத்து, அப்படியே அமுக்கி விடலாம், என்ற மமதை தான் வெளிப்படுகிறது. முறையாக, தமிழகத்தில் நிலையாக, இந்த்துத்துவ சித்தாந்தத்துடன் நிலைக்க வேண்டும், மக்களை கவர்ந்து, அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற போக்கே காணப்படுவதில்லை. அமீத் ஷா வருவார், எல்லாமே மாறிவிடும், இல்லை, சசிகலா வெளியே வந்தால், எல்லாம் சரியாகி விடும் போன்ற யேஷ்யங்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், இத்தகைய, கிறிஸ்தவ-துலுக்க திட்டங்கள் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் போலும்.. இவர்களால் அத்தகைய மேடைகள் போட்டு, இந்து ஆதரவையும் அல்லது நாத்திக-கிறிஸ்தவ-துலுக்க எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை, அரசியல், கூட்டணி, பதவி ஆசை போன்றவற்றால் அடங்கி, சுருங்கிக் கிடக்கின்றனர். இந்துத்துவம், இந்துத்த்வவாதங்கள், இந்துத்துவவாதிகள் வாய்சொற்களில், சமூக ஊடகங்களில் வீராப்பு காட்டுவதோடு சரி. உருப்படியாக எதையும் செய்வதில்லைமரசியல் சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

அரசியல் சூழலில் இத்தகைய நிகழ்வுகள் காட்டுவது என்ன?: பிஜேபி, தமிழகத்தில் நிலையான அரசியல் கட்சியாக மாற வேண்டும் என்றால், எல்லா விசயங்களையும் அலசிப் பார்க்க வேண்டும். இப்பிரச்சினையைப் பொறுத்த வரையில், “நம்ம ஊர் பொங்கல்”  விசயத்திலும், ஏன் பிஜேபிக்கு எதிராக இருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

 1. ஆக, எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கோஷங்கள் எழுப்பினர்[3] என்பதில், அரசியலையும் மீறிய செயல்திட்டம் இருப்பதை அறியலாம்.
 2. முஸ்லிம்கள் / துலுக்கர் எதிர்ப்பது வேறு, இவ்வாறு மற்ற கட்சிகளும் சேர்ந்து எதிர்ப்பது வேறு.
 3. மசூதி இருப்பதால், அத்தெரு வழியாகச் செல்லக் கூடாது என்பதும், துலுக்கரின் திட்டம் என்றே ஆகிறது.  கலவரம் உண்டாக்க போட்ட திட்டம் தான்.
 4. பொதுத் தெருக்களில் யாரும் நடக்கக் கூடாது, செல்லக் கூடாது என்பதே இருக்கும் பல சட்டப் பிரிவுகளை மீறும் குற்றமாகிறது. ஆனால், போலீஸார் அதனை கண்டுகொள்ளவில்லை. இங்கு போலீஸார் ஏற்கெனவே அனுமதி கொடுத்துள்ளனர்.[4]
 5. பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், பள்ளிப் பிள்ளைகள், ஒருவர் மீது ஒருவர் கோள் சொல்லும் வகையில் உள்ளது. ஏனெனில், துலுக்கரின் கலவர போக்கு தெரிந்த விசயமாகும்.
 6. பிஜேபியும் புதிய-புதிய விதங்களில் தேர்தல் நேரங்களில் செய்து வருகின்றது. குறிப்பிட்ட சித்தாந்தம் இல்லாமல், எல்லா முறைகளையும் பின்பற்றி வருகிறது. சில நேரங்களில் செக்யூலரிஸம், பல நேரங்களில் சமத்துவம், மறுபடியும் கம்யூனலிஸம், இந்துத்துவம், மற்ற மதத்தினருடம் சமரசம் என்ற குழப்பவாத போக்குடன் இருக்கிறது. இதனால், தேவையில்லாத விமர்சனங்களுக்கு உள்ளாகிறது.
 7. மற்ற திராவிட கட்சிகள், இதை விட மோசமான, குழப்பங்களை செய்தாலும், கண்டுகொள்வதில்லை, ஏனெனில், பார்ப்பனியம்-சமஸ்கிருதம்-இந்தி என்று எதர்க்கும் போது, எல்லா கட்சிகளும் ஒன்றாகி விடுகின்றன.
 8. இப்பொழுது, அதிமுகவே வேறு விதமாக பேசி வருகிறது. அமித் ஷா முன்பு பேசியது மறந்து விட்டது போலாகி விட்டது.
 9. இவையெல்லாம், பிஜேபிக்கு சாதகமாக இல்லை.  இதனால் தான், சிறிய கட்சிகள், திருமா வளவன் போன்ற தலைவர்கள் பிஜேபியை தாக்க, மற்ற முறைகளை கையாளுகிறார்கள். அவர்கள் விரிக்கும் வலையில் பிஜேபிகாரர்கள் விழுகிறார்கள்.
 10. தனித்துவத்தை நிலைநாட்டி, தனது பலத்தை மெய்ப்பித்தால் ஒழிய, மக்களின் நம்பிக்கையை எந்த கட்சியும் பெற முடியாது.

© வேதபிரகாஷ்

11-01-2021


[1] NEWS18 TAMIL, நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் ஜெ.பி. நட்டாஎல்.முருகன், LAST UPDATED: JANUARY 11, 2021, 2:23 PM IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/jp-nadda-attends-namma-ooru-pongal-sur-392479.html

[3] Times of India, Muslims object to BJP’s Namma Ooru Pongal campaign at Thirupalai in Madurai, Devanathan Veerappan | TNN | Updated: Jan 10, 2021, 17:59 IST.

Tension prevailed in Thirupalai in Madurai city as a few Muslims from the area objected to the procession carried out by BJP as part of the party’s Namma Ooru Pongal campaign on Sunday. A police officer said that the party organised the procession at Thirupalai Mandhai after obtaining permission from the city police. BJP state president L Murugan too participated. He was received by his partymen and was taken to the celebration venue in the morning. While crossing a mosque in Thirupalai, a few muslims gathered and objected to the loud music that was played during the procession. Tension escalated when someone threw footwear at the crowd. A car belonging to a BJP member was damaged. A team of policemen, who were posted for security reasons intervened and brought the situation under control.

[4] A police officer said that the party organised the procession at Thirupalai Mandhai after obtaining permission from the city police. BJP state president L Murugan too participated.

https://timesofindia.indiatimes.com/city/madurai/tamil-nadu-muslim-community-members-in-madurai-object-bjps-pongal-celebration-procession/articleshow/80199170.cms

இந்துக்களை சாதியாக பிரித்தவர் தான் கிருஷ்ண பகவான்: கிறிஸ்துமஸ் விழாவில் திருமாவளவன் பேச்சு, பா.ஜ., ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்!

திசெம்பர் 28, 2020

இந்துக்களை சாதியாக பிரித்தவர் தான் கிருஷ்ண பகவான்: கிறிஸ்துமஸ் விழாவில் திருமாவளவன்  பேச்சு, பா.., ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்!

கிறிஸ்துமஸ் மேடைகள் ஏன் இந்து துவேஷத்திற்கு, தூஷணங்களுக்கு உபயோகப் படுத்தப் படுகின்றன?: 2020 வருடத்தில், கிறிஸ்தமஸை சாக்காக வைத்துக் கொண்டு, கிறிஸ்தவ அமைப்புகள், கிறிஸ்தவ மதத்தலைவர்கள், அரசியல்வாதிகளுடன், இந்து மதம், இந்துக்கள் மற்றும் இந்து நம்பிக்கைகளை விமர்சிப்பது, துவேசிப்பது மற்றும் தூஷிப்பத்து அதிகமாகவே நடந்திருக்கின்றன. இதில், “கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்” முக்கிய பங்கு வகிக்கிறது. அதில், திருமாவளவன் அதிகமாகவே செய்துள்ளார். தொடர்ந்து விழாக்களை நடத்தில், அவ்வாறு செய்துள்ளார் என்பது, அவரது படிவுகளிலிருந்தே தெரிய வருகிறது. கிறிஸ்தவ மேடைகள், விழாக்கள் எப்படி, எவ்வாறு, ஏன் இவ்வாறு இந்துவிரோதமாக செயல்பட்டு வருகின்றன மற்றும் அதில் கலந்து கொள்ளும் பொறுப்புள்ள பிஷப்புகள், காஜிக்கள், எம்.பிக்கள் முதலியோர் எவ்வாறு ஊக்குவிக்கின்றனர், ஆதரிக்கின்றன்ர் மற்றும் போற்றுகின்றனர் என்பது செக்யூலரிஸ புதிர், சமதர்ம மர்மம் மற்றும் பகுத்தறிவு விடுகதையாக இருக்கின்றன. மதம், இறையியல், சித்தாந்தம், அரசியல், அதிகாரம், பணம் முதலியவை எவ்வாறு, இவ்வாறு உபயோகப் படுத்தப் படுகின்றன என்பதும் ஆச்சரியமான விசயம் தான்.

நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்..: இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்[1].. “நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்“.. என்றும் கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் திருமாவளவன் பேசி உள்ளார்[2]. விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று பேசினார்.. அதன் சுருக்கம் இதுதான். “உலகில் இந்தியாவில் மட்டுமே இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.. வெளிநாடுகளில் வசிக்கின்ற இந்துக்கள் இங்கிருந்து அங்கு இடம் பெயர்ந்தவர்கள்.. இந்தியாவில் உள்ள பிற மதத்தவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் கிடையாது…..இயேசு, புத்தர், அல்லா ஆகியோரைவிட பகவான் கிருஷ்ணன் 5 ஆயிரம் வருஷத்துக்கு முன்பு மனிதராக பிறந்து வாழ்ந்தவர் என்று இந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது[3].. ஆனால், கிறிஸ்துவம், இஸ்லாம், புத்தம் ஆகிய மதங்கள் மனிதர் அனைவரையும் சமமாக பாவிப்பதாகவும், கிருஷ்ண பகவானின் போதனைகள் என்று கூறப்படும் பகவத் கீதையில்தான், மனிதர்களிடையே ஏற்ற தாழ்வுகளை உண்டாக்கும் வகையில் நான்கு வித வர்ணங்கள் உள்ளன[4]……..நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்[5].. பெண்களை ஒடுக்குகளை போக்கு இருக்கிறது.. தீண்டாமை இருக்கிறது[6].. இதற்கெல்லாம் எது காரணமாக இருக்கும் என்று சமுதாய வல்லுநர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.. அந்த வகையில் இரண்டு பேர் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் பெரியாரும், அம்பேத்கரும்தான்”.

கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது.. இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது: திருமாவளவன் தொடர்ந்து பேசியது, “எந்த மதத்துக்கு எதிராகவும் நாம் பேசவில்லை……எந்த மதத்தை காயப்படுத்தும் நோக்கமும் நமக்கு இல்லை.. ஆனால் மதங்களின் கோட்பாடுகளை ஒப்பீடு செய்யும்போது, ஏன் கிறிஸ்தவத்தை விமர்சிக்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள்[7].. இஸ்லாத்தை ஏன் விமர்சிக்கவில்லை என்று கேட்கிறார்கள்[8].. கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது.. இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது[9].. அதனால் அந்த மதங்களை விமர்சிக்க வேண்டிய தேவையில்லை[10]. …..இன்னொரு காரணம் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.. இந்து அடையாளத்தோடு இருக்கிறேன், அந்த கொடுமைகளை அன்றாட வாழ்வில் சந்திக்கிறேன்.. எந்த ஒரு கோட்பாடாக இருந்தாலும், அந்த கோட்பாடு மனித குலத்தை மதிக்கக்கூடியதாகவும், மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதைதான் எதிர்பார்க்கிறோம்.. இந்த கிறிஸ்தவ திருவிழாவானது.. சமத்துவ திருவிழா என்பதாலும், சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தும் திருவிழா என்பதால்தான் இதை ஏற்கிறோம்,” என்றார்.

திருமாவளவன் பொய்களை அள்ளி வீசியது: மேடை பேச்சு என்பதால், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற போக்கு உள்ளது. திருமாவளவன் அவ்வாறு பேசிய சில விசயங்கள் அலசபப்படுகின்றன:

திருமாவளவன் பேசியதுஉண்மை நிலை
கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது.. இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது……. அதனால் அந்த மதங்களை விமர்சிக்க வேண்டிய தேவையில்லை…..கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் நிச்சயம் நம்பிக்கையாளர்களைப் பிரிக்கிறது. அவ்வுண்மையினை மறைத்து, பேசுவது, போலித் தனத்தைக் காட்டுகிறது.
நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்”..இது தப்பித்துக் கொள்வதற்கு சொல்லப் பட்ட, சப்பைக்கட்டு. எம்.பியாக இருக்கும் நிலையைக் காத்துக் கொள்ளக் கூறியது.
இன்னொரு காரணம் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.. இந்து அடையாளத்தோடு இருக்கிறேன்,அதாவது எஸ்.சியாக இருந்து, கிறிஸ்துவன் என்றெல்லாம் சொல்லிக் கொள்வது, இதில் அடங்கும்.
அந்த கொடுமைகளை அன்றாட வாழ்வில் சந்திக்கிறேன்….. எந்த ஒரு கோட்பாடாக இருந்தாலும், அந்த கோட்பாடு மனித குலத்தை மதிக்கக்கூடியதாகவும், மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதைதான் எதிர்பார்க்கிறோம்..இவர் எம்பியாக உயந்ர்துள்ளது எஸ்சி என்ற இந்து அடையாளம் தான். கிறிஸ்தவன் அல்லது துலுக்கன் என்ற முறையில் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து பதவிக்கு வந்து விடவில்லை. மேம்பட்டதால் தான், நல்ல வசதியுடன் இருந்து, அனுபவித்து கொண்டிருக்கிறார்.
இந்த கிறிஸ்தவ திருவிழாவானது.. சமத்துவ திருவிழா என்பதாலும், சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தும் திருவிழா என்பதால்தான் இதை ஏற்கிறோம்….இதுவும் அப்பட்டமான பொய்யாகும். லெபனான் மற்ற மத்தியத் தரைக் கடல் நாடுகளில் இன்றும் கிறிஸ்தவர்களும், துலுக்கரும் அடித்துக் கொண்டு சாகிறார்கள். சமத்துவம்-சகோதரத்துவம் இருந்தால், அவ்வாறு நடக்காது.

கிறிஸ்துவதுலுக்க மதங்களில் ஜாதி மற்றும் தீண்டாமை இருப்பது[11]: தெற்காப்ரிக்காவில், “அபாரிதைட்” என்ற நிறவெறித்துவத்தினால், கருப்பர்களைப் பிரித்து வைத்து வாழும் சித்தாந்தத்தை ஆய்ந்த ஐக்கிய நாடுகள் சபை குழு, பைபிளில் வரும் வசனங்கள் தான் காரணம் என்று எடுத்துக் காட்டியது. அது போலவே, கிறிஸ்தவர்களிடம் இனம், மொழி, சமூகக் கட்டமைப்பு, இறையியல் என்ற பற்பல காரணங்களால் 3000 பிரிவுகள், உலகநாடுகளில் இருப்பதும் தெரித விசயமாகிறது. இவர்களின் உறுப்பினர்கள், ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வது, பெண்கொடுப்பது-எடுப்பது, வேலைக்கு சமமான ஊதியம் கொடுப்பது, சர்ச்சுகளில் சமமாக நடத்துவது, இறந்த பின் தனித்தனி கல்லறைகளில் புதைப்பது போன்றவை, இந்தியாவிலேயே, ஏன் தமிழகத்திலேயே கடைபிடிக்கப் பட்டு வருகின்றன. அதையெல்லாம் மறைத்து தான், “கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது..”, கூசாமல் போய் பேசுகிறார். இதே நிலை தான் இச்லாத்திலும். அங்கும் அஸ்ரப்-லெப்பை போன்ற சமூக அடுக்குகள் இருக்கின்றன. மண்டல் தீர்ப்பிலேயே, இஸ்லாத்தில் எத்தனை ஜாதிகள் இருக்கின்றன என்று பட்டியல் போட்டுக் காட்டியது. ஆகவே, “இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது…….,” என்பதும் மிகப் பெரியப் பொய்யே.

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ இயக்கங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருப்பது[12]: பிஜேபிகாரர்கள் “கடும் கண்டனம்”, இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம், வெற்றுப் பேச்சுகளுடன் நின்று விடுகிறர்கள்[13]. ஏற்கெனவே, சீமான், கனிமொழி, கமல் ஹஸன் என்று பலரின் மீது “இந்துவிரோத” பேச்சுகளுக்கு புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன, வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, புகார் கொடுத்தோம் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம், ஆனால், ஒன்றும் நடக்காது என்பது தான் நிதர்சனம். மறுபடியும், அவர்கள் அத்தகைய பேச்சுகளைத் திரும்பத்திரும்ப பேசுவார்கள், பிறகு வாடிக்கையாகி விடும். கருணாநிதியின் மீது தொடுத்த வழக்குகளும் அவ்வாறே ஆகின. தேர்தலுக்கு நிற்கும் போது, தமது விண்ணப்பங்களில் எத்தனை கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதையும் காட்டத்தான் செய்கிறார்கள், எந்த அரசியல்வாதியும் வெட்கப் படுவதில்லை. இந்த்துத்துவ இயக்கங்களுக்கு ஆட்சி, அதிகாரம், பணம் எல்லாம் இருக்கின்றன, ஆனால், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்த்துத்துவ இயக்கங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருப்பது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

28-12-2020


[1] தமிழ்.ஒன்.இந்தியா, இந்துக்களை சாதியாக பிரித்தவர் கிருஷ்ண பகவான்“.. கிறிஸ்துமஸ் விழாவில் திருமா. சர்ச்சை பேச்சு, By Hemavandhana | Updated: Friday, December 25, 2020, 0:00 [IST].

[2] https://tamil.oneindia.com/news/chennai/thirumavalavan-christmas-day-speech-406839.html

[3] பாலிமர்.நியூஸ், இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார்….!  திருமாவளவன் சொல்கிறார், December 24, 2020, 02:19 AM [IST].

[4] https://www.polimernews.com/dnews/132066

[5] அதிபன் டிவி, இந்துக்களை சாதியாக பிரித்தவர் கிருஷ்ண பகவான்“.. கிறிஸ்துமஸ் விழாவில் இந்து மத துரோகி திருமா இழிவு பேச்சு.., Thursday, 24 December 2020, 7:58:00 pm.

[6] https://www.athibantv.com/2020/12/hindu-traitor-thiruma-insulting-speech.html

[7] செய்தி சுருள், இந்துக்களை சாதியாக பிரித்தவர்தான் கிருஷ்ண பகவான்: திருமா பேச்சு!, 24-12-2020.

[8] https://seithichurul.com/news/tamilnadu/krishna-divided-hindus-on-caste-basis-thirumavalavan/31172/

[9] நியூஸ்.ஏ.இஜெட், இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார்….!  திருமாவளவன் சொல்கிறார், December 24, 2020, http://newsaz.in/details.php?nid=18809

[10] http://newsaz.in/details.php?nid=18809

[11] Vedaprakash, Dalit – Precept, Problem and Politics ,  “Dimensions of Conversion”, the Vivekananda Kendra Patrika, Vol. 24, Feb. 1995, pp. 98-114. Can be read here:

https://indiainteracts.wordpress.com/dalit-%E2%80%93-precept-problem-and-politics/

[12] தினமலர், கிறிஸ்துமஸ் விழாவில் திருமாவளவன் பேச்சு; பா.., ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம், Updated : டிச 25, 2020 05:47 | Added : டிச 25, 2020 05:45.

[13] https://www.dinamalar.com/news_detail.asp?id=2677623

கிறிஸ்துமஸ் விழாவில், இந்து தூஷணம் அரங்கேறியது எப்படி? கிருத்துவ-துலுக்க-நாத்திகக் கூட்டணி ஏன் இந்து-விரோதமாகச் செயல்படுகிறது? (3)

திசெம்பர் 24, 2020

கிறிஸ்துமஸ் விழாவில், இந்து தூஷணம் அரங்கேறியது எப்படி? கிருத்துவதுலுக்கநாத்திகக் கூட்டணி ஏன் இந்துவிரோதமாகச் செயல்படுகிறது? (3)

தமிழ், தமிழன் ஆளவேண்டும், தமிழாட்சி மலர வேண்டும் என்றெல்லாம் பேசிய மேடையில், ஆங்கிலத்தில் பேசிய சென்னை காஜி!: தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி “அப்லளுள் உலமா” முப்தி  ஸலாஹுத்தீன் முஹம்மத் ஐயூப், தன்னுடைய இஸ்லாமிய நிலையை விட்டுக் கொடுக்காமல், ஆனால், ஆங்கிலத்தில் பேசியதும், அதைத் தமிழில் மொழிபெயர்த்ததும் வியப்பாகத் தான் இருந்தது. தமிநாட்டில் இத்தனை ஆண்டுகள் இருந்து, அவருக்கு தனிழ் தெரியாதா, தமிழில் ஏன் பேசவில்லை என்றெல்லாம்  யாரும் கேட்கவில்லை. ஊடகங்களில் விவாதப் பொருளாகவில்லை. ஒருவேளை, உருது மொழியில் பேசுவதற்குப் பதிலாக, ஆங்கிலத்தில் பேசினார் போலும். “மதத்தலைவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் சண்டையிட மாட்டார்கள், ஒரு நல்ல முஸ்லிம் எப்பொழுதும் அல்லாவைப் போற்றிக் கொண்டிருப்பான்….(அரேபிய மொழியில் குரான் வரிகளை ஓதுகிறார்………….…) உலகத்தில் அமைதி இல்லை, ஆனால், அமைதி வேண்டும்….ஆனால், அரசியல் தலைவர்கள் சில நேரங்களில் சண்டையிட்டுக் கொள்வார்கள். அரசியல் மேடைகளில் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் ஒன்றாக வரலாம், ஆனால், இத்தகைய மதநிகழ்சியில், பல மதத்தவர்கள் வந்திருப்பது ஒருங்கினைப்பாளரின் முயற்சியாகத் தெரிகிறது”, என்றார். இதை பீட்டர் அல்போன்ஸ் தமிழில் மொழிபெயர்த்ததில், வேறுபாடு இருந்தது.

கிருத்துவப் பிரசிங்கியாக மாறிய, ஸ்டாலின்![1]: அவரது பேச்சை உன்னிப்பாகக் கவனித்தால், நிச்சயமாக யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்தார் என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். இவரது பேச்சை பல நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன[2]. கிருத்துவ மதத்தைப் பற்றிக் குறிப்பிட்டது மட்டும் எடுத்துக் காட்டப் படுகிறது, “இந்த விழா ‘ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்’ விழாவாக எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது[3].

 • இயேசு பெருமான் அதிகம் வலியுறுத்தியது அன்பும் இரக்கமும் தான்!
 • கிறித்துவம் திரும்பத் திரும்பப் போதிப்பது அன்பைத் தான்! உண்மை எங்கே இருக்கிறதோ, அங்குதான் அன்பு இருக்கும்! அன்பு இருக்கும் இடத்தில்தான் உண்மை இருக்கும்! இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதைத்தான் இயேசு பெருமான் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
 • ஏங்கி நின்ற மனிதர்களுக்கு ஏணியாக இருந்தார். அபலைகளுக்கு ஆதரவாக இருந்தார். நோயாளிகளுக்கு ஒரு மருத்துவராக இருந்தார். அவரது வாழ்வைப் படிக்கிற போது இயேசு பெருமான் அவர்கள், பெரும்பாலும் ஏழைகள், கல்வி அறிவு இல்லாதவர்கள், நோயாளிகள், தொழு நோயாளிகள், பெண்கள், அடித்தட்டு மக்கள், புறக்கணிக்கப்பட்ட மக்கள் – ஆகியோருடன் தான் இருந்துள்ளார். வாழ்ந்து வந்துள்ளார்.
 • இயேசு பெருமான் அவர்கள் ஒரு சிறு கதை சொல்லி இருக்கிறார்………………………………
 • இயேசு பெருமான் விரும்பிய அன்பும், இரக்கமும், கருணையும் கொண்ட அரசைத்தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது சாதனைகளாகச் செய்து காட்டியது. குறிப்பாக, சிறுபான்மை சமூகத்துக்கு மட்டும் திமுக ஆட்சியில் செய்து தரப்பட்ட திட்டங்கள், சலுகைகள், சாதனைகளைச் சுருக்கமான குறிப்புகளாகக் குறிப்பிட விரும்புகிறேன்…..”

மற்றபடி வழக்கம் போல, அரசியல் பேசி, மோடியை, நடக்கும் ஆட்சியை விமர்சிப்பதாக இருந்தது[4].

கிருத்துவன், துலுக்கன் தனது மதங்களைப் போற்றும் போது, “சைவன்” என்று சொல்லிக் கொண்டு, எப்படி இந்து மதத்தை தூஷிப்பான்?: துலுக்கரும், கிருத்துவரும் எத்தனை கோவில்களை இடித்தனர் என்பது தெரிந்த விசயம்! திராவிட நாத்திக இந்து-விரோத ஆட்சியில் எத்தனை கோவில்கள் சிதிலமடைந்தன, சிலைகள்-விக்கிரங்கள் களவாடப் பட்டன என்பதும் தெரியும். பிறகு இந்த பட்டை-கொட்டை-காவிகள் ஏன் அத்தகைய விழாக்களில் கலந்து கொள்கின்றனர்?  இவர்கள் உண்மையில் இந்துக்களா, சைவர்களா, வேடதாரிகளா, யார்? இத்தகைய கேள்விகள் எழத்தான் செய்கின்றன. வேண்டுமென்றே, இத்தகையோரை ஏற்பாடு செய்து, கூட்டி வந்து, பேச வைத்துள்ளனர் என்று தெரிகிறது. கிருத்துவன் கிருத்துவனாக பேசி, தன் மதத்தைப் போற்றினான்/, துலுக்கனும் அவ்வாறே தனது மதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால், “சைவர்” என்று சொல்லிக் கொண்டு, சிலர் இவ்வாறு சரித்திரம், மதம், மற்றும் எந்த ஆதாரங்களும் இல்லாமல் பேசியிருப்பது, திட்டமிட்ட செயல் என்றேயாகிறது. ஒரு உண்மையான “சைவனாக,” இருந்தால் கூட, இவ்வாறு மானம்-ரோசம்-சூடு-சொரணை இல்லாமல் பேசியிருக்க மாட்டான். ஆக, இந்துக்கள் அடிமையாக இருக்கத் தயாராகிறான் என்றே, இதைக் காட்டுகிறது.

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் கெட்ட எண்ணங்கள் எதனைக் காட்டுகிறது?: “கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்,” என்ற பெயரை வைத்துக் கொண்டு, அநாகரிகமாக, கீழ்த்தரமாக, முறையற்ற விதங்களில் எப்படி கிருத்துவ-துலுக்க மதத் தலைவர்கள், இந்து விரோத பேச்சுகளை ஊக்குவித்தார்கள்? பொறுப்புள்ள தலைவராக இருந்திருந்தால், ஸ்டாலின், அவ்வாறு பொறுத்திருப்பாரா? பிறகு, செக்யூலரிஸ அளவுகோலை பயன்படுத்தினாலும், தமிழகத்தை ஆளத் தகுதியற்றவராகிறாரே?  சிறுபான்மையினருக்கு, இதெல்லாம் செய்யப் பட்டது, என்று பட்டியல் இடும் ஸ்டாலின், இந்துக்களுக்கு என்ன செய்யப் பட்டது என்று சொல்ல முடியவில்லையே. கடந்த 70 ஆண்டுகளில், கோவில்களைக் கொள்ளையடித்தது, சிலைகள்-விக்கிரங்களைத் திருடி விற்றது, மடங்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, பட்டா போட்டு சொந்தமாக்கிக் கொண்டது, விற்றது என்று தான் இன்று வரை நடந்து வருகிறது. அந்நிலையில், திராவிடக் கட்சிகளுக்கு, ஆட்சிக்கு வருவது அல்லது ஆசைப் படுவதே, கேடுகெட்ட செயலாகிறது.

பாரபட்சமிக்க, அரசியல் நிகழ்சியாக இருந்தது: இனிகோ இருதயராஜ் தனது பேஸ்புக்கில் இந்த விழாவைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளார். புகைப்படங்களையும் போட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் சென்று, பொன்னாடைப் போர்த்தி, அழப்பிதழ் கொடுதது, வரவேற்றப் புகைப்படங்களையும் போட்டுள்ளார். இந்த அளவுக்கு, விழா நடத்தவும், நிதி இருப்பதும் தெரிகிறது. கத்தோலிக்க சபையின் முழு ஆதரவுடன் நடைபெறுவதும் தெரிகிறது. ஆகவே, கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு, பண முடிப்பு, வந்து போக செலவு முதலியவை கொடுப்பதற்கு, எந்த பிரச்சினயும் இல்லை. உண்மையிலேயே, அவர்கள் “நல்லெண்ணத்துடன்” விழா நடத்தினால், மற்றவர்களையும் அழைத்திருலாம். ஆனால், ஒரே நாளில், அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் தனித்தனியாக, கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்து கொண்டதே, இது அரசியமாக்கப் பட்ட நிலையை வெளிக்காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

24-12-2020


[1] https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2020/12/20/dmk-chief-mk-stalin-speech-at-christmas-function

[2] கலைஞர்.டிவி, “தமிழ்ச் சமூகத்தின் அமைதியைக் குலைக்க முயலும் சக்திகளை முறியடிப்போம்!”- கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின், Vignesh Selvaraj, Updated on : 20 December 2020, 09:45 PM

[3] https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2020/12/20/dmk-chief-mk-stalin-speech-at-christmas-function

[4] தினகரன், தமிழ் சமுதாயத்தின் அமைதியை குலைக்கும் சக்திகளை முறியடிக்க உறுதியேற்போம்: கிறிஸ்துமஸ் விழாவில் மு..ஸ்டாலின் பேச்சு, 2020-12-21@ 00:52:58.

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=640416

கிறிஸ்துமஸ் விழாவில், இந்து தூஷணம் அரங்கேறியது எப்படி? கிருத்துவ-துலுக்க-நாத்திகக் கூட்டணி ஏன் இந்து-விரோதமாகச் செயல்படுகிறது? (2)

திசெம்பர் 24, 2020

கிறிஸ்துமஸ் விழாவில், இந்து தூஷணம் அரங்கேறியது எப்படி? கிருத்துவதுலுக்கநாத்திகக் கூட்டணி ஏன் இந்துவிரோதமாகச் செயல்படுகிறது? (2)

கலையரசி நடராஜனின் மற்ற பேச்சுகள்: “ஆன்மீக அரசியல் தமிழகத்தில் எடுபடாது ஆன்மீக அரசியல் நடத்தி, மக்களை ஏமாற்றியவர்களை மக்கள் அடையாளம் கண்டு வருகிறார்கள்……தமிழரிடத்தில் சில பலவீனங்கள் உண்டு, ……..சில படங்களில் நடித்தால் முதலமைச்சர் ஆகி விடலாம் என்று கணக்குப் போடுகிறார்கள்………., தமிழருக்கு மதம் கிடையாது,………… கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தொப்புள் கொடி உறவுகள், எங்கள் உடன் பிறப்புகள்……, தமிழ் பேசுபர்கள் சைவர்களே (இந்துக்கள் அல்ல),…… இந்துமதம் என்று இனிக்கோ குறிப்பிட்டார், எனக்கு வருத்தமாக இருந்தது, இந்துமதம் என்ற சொல்லையே  சொல்லாதீர்கள், அப்படி ஒரு மதமே கிடையாது, அது உருவாகி 200 ஆண்டுகள் தான் ஆகிறது.  நாங்கள் எல்லாம் சைவர்கள் (அதாவது இந்துக்கள் கிடையாது). எப்படி, கல் தோன்றி. மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி……..,  இந்து என்று சொல்வதே பலவீனம்….ஆரிய பாபாவிகள்…..எல்லாவற்றையும் அழிக்கிறார்கள்…..இந்து என்ற வார்த்தை கேட்டாலே உடம்பெல்லாம் எரியுது…,” இக்கருத்துகளை திரும்பத் திரும்பச் சொன்னது தமாசாக இருந்தது.

சமஸ்கிருதம் தெரியாது என்று, சமஸ்கிருத சுலோகத்திற்கு விளக்கம் கொடுத்தது: ஜார்கென்டில் உள்ள வளங்களை அதானிக்கு வார்த்துக் கொடுத்து விட்டு, ஒரு தமிழரை ஸ்டேன்சாமியை வதைக்கிறார்கள் என்று பேசியதும் வேடிக்கை தான். சீசன் பால்க், பெஸ்கி, எல்லீஸ், ஜி.யூ.போப், கால்ட்வெல், போன்றோர், தமிழகத்தில் மறைத்து வைக்கப் பட்ட தமிழ்-செல்வங்களை மீட்டுத் தந்தார்கள்………..என்றும் பேசினார், சமஸ்கிருதம் தெரியாது என்று கூறி, ..சமஸ்கிருதத்தில், “உபர்னா திராவிடம்,  பக்தி விருத்தம் கர்நாடகம், பிரளய கூர்ஜரம்,” என்று சொல்லி, தப்பு-தப்பாக விளக்கம் கொடுத்ததும் தமாசாக இருந்தது. இறுதியில், ஸ்டாலினுகுத் தான் முதல்வர் ஆகும் தகுதியுள்ளது என்று முடித்தார். தமிழகத்தில் கோடானு கோடிகள் சொத்திருந்தும், எத்தனையோ மடாதிபதிகள் வாடுகிறார்கள், கஷ்டப் படுகிறார்கள், அவற்றைப் பற்றி, பேசவில்லை……………இந்த பட்டை-கொட்டை-நாரிமணிக்குத் தெரியவில்லை போலும். ஆகவே, இவ்வாறெல்லாம் பேசிய இந்த பெண்மணி, ஒரு பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும் இல்லை கிருத்துவர்களின் அடிமையாக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி.அல்ஹாஜ் P.A. காஜா முயீன்னுத்தீன் பாகவி[1]: ஒரு முஸ்லிம், முஸ்லிமாகத் தான் பேசுவார், என்பதற்கு இவர் சான்றாக இருந்தார். இஸ்லாமை புகழ்ந்து பேசி, விசயத்திற்கு வந்தார். எப்படி, குரானில், ஏசுநாதர், மேரி முதலியோர் குறிப்பிடப் பட்டுள்ளார்கள் என்று எடுத்துக் காட்டினார். அவர் ஒரு நபிதான் என்று விளக்கினார். ஈஸாவின் உருவம் விவரிக்கப் பட்டுள்ளது[2]. சிலுவையில் மரிக்கவில்லை என்ற குரான் செய்தியைக் குறிப்பிடவில்லை. ஆனால், அவர் நீட்டி விளக்கியது, அதனைத் தான் சுட்டுவதாக இருந்தது. “குரான் மூன்று கூட்டத்தாரைப் பற்றி பேசும்: –

 1. இறை நம்பிக்கை உள்ளவர்கள் (மோமின்கள் என்று பேச்சாளர் சொல்லவில்லை).
 2. இறை மறுப்பாளர்கள் (காபிர்………..).
 3. வெளியில் மதநம்பிக்கையாளர் போலக்காட்டிக் கொண்டு, உள்ளே நயவஞ்சகத்தை வைத்திருக்கக் கூடியவர்கள் (ஜிம்மி………..).

இக்கால ஆட்சியாளர்கள் எல்லா கொடுமைகளையும் செய்து விட்டு, நியாயம் கற்பிக்கிறார்கள். போராடுபவர்களை மதிக்கவில்லை……நாமெல்லோரும் அபிரஹாம் வழிவந்தவர்கள் என்றெல்லாம் விளக்கினார். ……அரசியல் காரணங்களை விட, சமூக காரணங்களுக்காக நாம் ஒன்று படுவது நல்லது……..” பிறகு, கிருத்துவர்களும், துலுக்கரும் ஏன் ஒருவரையொருவர் இன்றும் கொன்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கவில்லை. மோடியை, ஆட்சியை அதிகமாகவே விமர்சித்தார். ஆக, அரசியலையும் இதில் கலப்பதை, திட்டமிட்டே செய்துள்ளார் என்று தெரிகிறது,

தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் முன்னாள் பேராயர் தேவசகாயம்: பைபிள் வசனங்களை வைத்து, இவர் பேசியதும், ஒரு கிருத்துவ பிரங்கம் போலத்தான் இருந்தது, “…மனுகுலத்தை இணைக்க வந்த ஆண்டவர் ஏசுகிறிஸ்து…சமயத்தை தமது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்…..ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்………என்று வேலை செய்கிறார்கள்…அது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கவே ஆரம்பிக்கப் பட்டது….இந்துத்துவா என்பது பிற்படுத்தப் பட்டவர்களுக்கு எதிரானது…..ஒளியூட்டுகின்ற உதய சூரியன்…..அது நம்மைத் தேடி வருகிறது……விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது………அவர்கள் சந்தோசமாகத் திரும்புவார்கள்………அறிவுஜீவிகள் அரசுக்குப் பணிய மறுக்கிறார்கள்……..விடியலை நோக்கிப் பயணம்…..நம்முடையது…….வருங்கால முதல்வருக்கு வணக்கம்………….” இவை ஒவ்வொன்றிற்கும், பைபிள் வசங்களை மேற்கோள் காட்டி, பிரசிங்கித்தார்.

பிறகு ஸ்டாலின் கிறிஸ்தமஸ் குடிலைத் திறந்து வைத்து, கேக் வெட்டி, விழா கொண்டாடினார். கேக் சாப்பிட்டது……முதலியவற்றை வீடியோவில் காட்டப் படவில்லை.

பாலயோகி தம்பிரான் – யார் இந்த தம்பிரான்?: மேலமங்களம் பாலயோகி மடத்தின் தலைவராக இருக்கும் இந்த பாலயோகி தம்பிரான் உபந்யாசம் செய்து வருகிறார். ஒரு யு-டியூப்பில், சமஸ்கிருத சுலோகங்கள் எல்லாம் சொல்லி விளக்கியுள்ளது நோக்கத்தக்கது[3]. விசயங்களை அறிந்தே இரட்டை வேடம் போடுவது தெரிகிறது. இனிகோ இவரை சந்தித்து, அழைத்திருக்கிறார். இப்படித்தான் பேச வேண்டும் என்று சொல்லிருப்பார் போலும். அறிந்தறிந்து, இந்து-விரோத மேடையில் உரையாற்ற முடிந்தது எப்படி, என்றால் இதுதான் பின்னணி என்று தெரிகிறது.  அதனால் தான், சைவசித்தாந்த கண்டனங்களில் திசைமாறிய வேடதாரி போல, ஏசு கட்டுக்கதைகளை கிருத்துவரை விட நன்றாகப் பேசியது திகைப்பாக இருந்தது! ஈவேராவைப் புகழ்ந்தது, அதை விட ஆச்சரியமான விசயம். ஏனெனில், அங்கிருந்த கிருத்துவனோ, துலுக்கனோ அவ்வாறு இங்கர்சால், பெட்ரென்ட் ரஸல், தாமஸ் பெயின் போன்றோரைக் குறிப்பிட்டு பேசவில்லை. அவ்வாறு, பேச, இவருக்கு என்ன சன்மானம் கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை! மேலும், ஸ்டாலினை புகழ்ந்துப் பேசியது எல்லாம், ஒரு திட்டமிட்ட அரங்கேற்றம் என்றே தெரிகிறது.

பீட்டர் அல்போன்ஸ் பேசியது: தனக்கேயுரிய பாணியில், “கலைஞரையே நினைத்துக் கொண்டிருந்தேன்……..அவர் சென்ற முறை கடைசியாக கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டார்..உங்களை எல்லாம் வந்து பார்க்கவில்லை என்றால், நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?” என்று கேட்டார்….மதம் மாறாலாம், ஆனால், அடையாளம் தமிழன் தான்…யார் வேண்டுமான்னாலும் மதம் மாறலாம்…அம்மையார், அடிகளார் போன்று என்னால் பேச முடியாது……ஏனெனில் நம்முடைய எதிரிகள் நேர்மையானவர்கள் அல்ல……நாளைக்கே, சமூக ஊடகங்களில் பரப்புவார்கள்…………தளபதியை இந்துவிரோதி என்கிறார்கள். அதே போல, ஏசுவையும், யூத விரோதி என்றார்கள். இது 2,000 வருட வரலாறு…….விவசாயிகள் குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் போராடுகிறார்கள்…..அதில் முதியோர் சிலர் மடிந்துள்ளனர்…ஆனால் அவர்களைப் பார்த்து இதயம் துடிக்கவில்லை என்றால், நீ என்ன ஆன்மீகவாதி?…..இதென்ன ஆன்மீக அரசியல்……இது தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பேரழிவு…….. “இனிகோ ஒரு சொம்புத் தூக்கி,” (திமுகவுக்கு) என்று ஒரு பாதிரியார் கூறியுள்ளார்..……, இருப்பினும் அது போற்றதலுக்குரியது, காலம் பதில் சொல்லும்……..கலைஞர் சொன்னது போல, “வீழ்வது நானாக இருந்தாலும், வாழ்வது தமிழனாக இருக்க வேண்டும், என்ற ரீதியில் தேர்தலை அணுக வேண்டும்……இவர் (ஸ்டாலின்) தான் தகுதியானவர்………அடுத்த விழாவில், “முதலமைச்சரே,” என்று விளிக்க வேண்டும், என்று இறைவனை வேண்டி அமைகிறேன்,.” என்று முடித்தார்.

கத்தோலிக்க சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி: இவரும், பிரங்கம் போலத்தான், பேசினார், “…முன்னால் பேசியவர்கள் ….சமயம், அரசியல், மொழி – இந்த மூன்றை வைத்துப் பேசினார்கள்……அதிகாரம், ஆணவம்…தலைவிரித்தாடும் போது, கடவுள் அவதாரம் எடுப்பார்……..,மக்களுக்காக இறப்பதற்காகத் தான் பிறந்தார்… இன்றும் ஆதிக்க அரசியலுக்கும், மற்றதற்கும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது…….அதிகாரம்-ஆணவம் கொண்டவர்களின் ஆட்சி நெடுங்காலம் நிலைக்காது….….முன்னர் பேராயர், பீட்டர் அல்போன்ஸ் சொன்னதும் அதுவே…..ஒரு நல்லத் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் விளக்குகிறார்….அரசியல் என்பது வியாபாரம், தொழில் அல்ல, ஆனால், சேவையாக அமைய வேண்டும்……….அரசியல் ஆன்மீகம் எங்கு இருக்கும் என்று விளக்குகிறார்……இன்று தமிழகத்தில் நம்மைச் சுற்றி அச்சப்படுகின்ற நிலையுள்ளது…….அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள உரிமைகள் பறிக்கப் படுகின்றன……,” ஆனால், இப்பொழுது நடக்கும் பிஜேபி ஆட்சி மற்றும் மோடியை விமர்சித்ததைப் புரிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

24-12-2020


[1] https://www.youtube.com/watch?v=ys0P0IBxhCs&t=11378s

[2]  உருவம் கூடாது, உருவ வழிபாடு கூடாது, என்கின்ற முஸ்லிம்கள் எப்படி இவ்வாறு விவரிக்கின்றனர் என்று தெரியவில்லை. கிருத்துவர்களில் கூட உருவ வழிபாட்டை எதிர்க்கும் பிரிவுகள் உள்ளன.

[3] https://www.youtube.com/watch?v=i9an_dxXad8,

கிறிஸ்துமஸ் விழாவில், இந்து தூஷணம் அரங்கேறியது எப்படி? கிருத்துவ-துலுக்க-நாத்திகக் கூட்டணி ஏன் இந்து-விரோதமாகச் செயல்படுகிறது? (1)

திசெம்பர் 24, 2020

கிறிஸ்துமஸ் விழாவில், இந்து தூஷணம் அரங்கேறியது எப்படி? கிருத்துவதுலுக்கநாத்திகக் கூட்டணி ஏன் இந்துவிரோதமாகச் செயல்படுகிறது? (1)

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா (20-12-020): சென்னை மயிலாப்பூரில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து மதத் தலைவர்களும் கலந்துகொண்ட ‘ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்’ நிகழ்ச்சி 20.12.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30p.m மணிக்கு சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில், நடைப்பெற்றது,[1]என்று செய்திகள் வெளிவந்தன. இதைப்பற்றி, முன்னமே ஊடகங்கள் “விளம்பரம்” போன்று செய்திகளை வெளியிட்டது[2]. இனிக்கோ இருதயராஜ் இந்த அமைப்பை நடத்தி வருகிறார்[3]. ஒவ்வொரு வருடமும், இவ்விழாவை நடத்தி வருகிறார்[4], என்ற விவரங்களையும் வெளியிட்டன. கீழ்கண்டவர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து, வரவேற்றிருக்கிறார், என்பது, அவரது பேஸ்புக் பதிவுகளிலிருந்து தெரிகிறது[5].

 1. கத்தோலிக்க சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி
 2. தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் முன்னாள் பேராயர் தேவசகாயம்
 3. சென்னை மயிலை உயர்மறைமாட்ட முன்னாள் பேராயர் A.M. சின்னப்பா
 4. பேந்தகோஸ்தே திருச்சபை மாமன்ற பிரதம பேராயர் சார்லஸ் பின்னி ஜோசப்
 5. மு.க. ஸ்டாலின், திமுக தலைவர்
 6. சற்குரு பாலயோகி சுவாமிகள் திருமடம், தவத்திரு.குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள்
 7. தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி “அப்லளுள் உலமா” முப்தி  ஸலாஹுத்தீன் முஹம்மத் ஐயூப்.
 8. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி.அல்ஹாஜ் P.A. காஜா முயீன்னுத்தீன் பாகவி
 9. கே.என்.நேரு.

இவ்வாறு , லட்சக் கணக்கில் செலவழித்து, ஒரு விழா நடத்தப் பட்டிருக்கிறது. ஆனால், விளைவுகள் எப்படியிருக்கும் என்று பார்க்க வேண்டும்.

இனிக்கோ இருதயராஜ் கத்தோலிக்கப் பாதிரியின் மகன்: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள இடைக்காட்டூர் என்ற கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் இனிகோ இருதயராஜ்[6]. சிறுவயதிலேயே திருச்சி ஜோசப் கல்லூரியில் உள்ள பேராலயத்திற்கு அவருடைய தந்தை உபதேசியார் பணியமர்த்தப் பட்டதால் சொந்த ஊரைவிட்டு திருச்சி மேலசிந்தாமணி பகுதிக்கு குடிபெயர்ந்தார்கள்.  பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்த இனிகோ இருதயராஜ், கார்மெண்ட்ஸ் தொழிலில் நுழைந்து இன்றுவரை கார்மெண்ட்ஸ் தொழிலில் ஏற்றுமதி – இறக்குமதி செய்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை மயிலை உயர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா என்பவரின் ஆலோசனைக்கு இணங்க கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்[7]. அதன் தலைவராக இருக்கக்கூடிய இனிகோ இருதயராஜ், தற்போது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினுடைய கிளைகளை துவங்கி செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு வருடமும் கிறிஸ்து பிறப்பு விழாவை மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து, அதில் முதல் 8 ஆண்டுகள் தி.மு.க. தலைவர் கலைஞரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து அவரை கௌரவப்படுத்தி கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்கள். அடுத்த மூன்று வருடங்கள் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை அழைத்து இந்த கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றார்கள். 

இனிகோ வீடு, கம்பெனிகளில் ஒழிப்புத் துறையினர்ரெய்டு‘ (2011)[8]: நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் இனிகோ இருதயராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான இவர், 2011களில், முன்னாள் அமைச்சர் அன்பரசனுடன் நிகழ்ச்சிகளில் அடிக்கடி காணப்பட்டார். ஸ்டாலினுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கடந்த டிசம்பர் மாதம் 2019 கிறிஸ்துமசை ஒட்டி, அப்போதைய முதல்வர் கருணாநிதியை வைத்து பெரிய விழா ஒன்றையும் நடத்தினார். அன்பரசன் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அப்போது, இனிகோ இருதயராஜ் தொடர்பான சில ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, திடீரென நீலாங்கரையில் உள்ள இனிகோ இருதயராஜ் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., திருநாவுக்கரசு தலைமையில் போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையின் போது, தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவிற்கான நிதி எங்கிருந்து வந்தது, யாரிடம் இருந்து பெறப்பட்டது, தி.மு.க.,வில் யாராவது இதற்கு பணம் கொடுத்தார்களா? என்ற கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கான ஆவணங்கள் பெற்றதாக கூறப்படுகிறது[9]. அங்கு சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றிய பின், தொடர்ந்து நந்தம்பாக்கம், டிபென்ஸ் காலனியில் உள்ள இருதயராஜின், ஏற்றுமதி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நுழைந்தனர். அங்கு, சோதனை நீடித்தது. சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையின் காரணமாக, தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இப்பொழுது 2020ல் இது மறக்கப் பட்டது போலும்.

இனிகோ 20-12-2020 அன்று வரவேற்று பேசியது: நீ என்று ஒருமையில் இனிகோ பேசியது திகைப்பாக இருந்தது. “நீ என்னவேண்டுமானாலும் பேசு (இந்துவிரோதி என்றெல்லாம்), ஆனால், நாங்கள் எல்லோரும் ஒன்றாகத் தான் வருவோம். ……..மூன்று மதத்தினரும் ஒன்றாக திரள்வோம்…….உங்கள் விழாவுக்கு எங்களை அழையுங்கள், நாங்கள் வருவோம். எங்கள் விழாவுக்கு நீங்கள் வாருங்கள்…வரும் தேர்தலில் நமக்கான தலைவரைத் தேர்ந்தெடுப்பொம்….தளபதியைத் தேர்ந்தெடுக்கும் தருணம். எத்தனை நடிகர்கள் வேண்டுமானாலும் வரலாம், எப்படிப் பட்ட நடிகர்கள் வேண்டுமானாலும் வரலாம், மிகப் பெரிய நடிகராகக் கூட இருக்கலாம்.பல கட்சி வகை என்று சொல்லி வரலாம். ஆன்மீக அரசியல் எங்கேயிருக்கிறது? ….. ,,,,,,.”. இப்படி காரசாரமாகப் பேசியது, அரசியல் மேடை போன்ற நிலையை ஏற்படுத்தியது.

பேந்தகோஸ்தே திருச்சபை மாமன்ற பிரதம பேராயர் சார்லஸ் பின்னி ஜோசப்: “கர்த்தர் இந்த தேசத்தை ஆசிர்வாதிப்பார்….விரைவில் இங்கு வருவார்…..,” என்ற ரீதியில் ஒரு கிருத்துவப் பிரங்கத்தையே செய்தார். இவரது பேச்சில் வேறெந்த விசேசமும் தெரியவில்லை, ஒருவேளை, கத்தோலிக்கக் கூட்டத்தில், அவ்வாறு, அளவோடு, வாசித்தார் போலும்.

ஒன்றிணைக்கும் கிருஷ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பங்குபெற்று பேசியது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது..: தமிழகத்தில், தொடர்ந்து, இந்துவிரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன:

 • தமிழ் கடவுள் முருகப்பெருமானை கறுப்பர் கூட்டம் இழிவுப்படுத்தியது,
 • ஹிந்து பெண்களை விபச்சாரிகள் என்று திருமாவளவன் பேசியது,
 • தி.மு.க தலைவர் ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரை அவமதித்தது,
 • உதயநிதி ஸ்டாலின் பூர்ணகும்ப மரியாதையை ஏற்க மறுத்தது –

போன்ற சம்பவங்கள் ஹிந்துக்களை புண்படுத்தும் வகையில் இருந்தது. தீபாவளிக்கு தி.மு.க வாழ்த்து கூட கூறவில்லை என்ற விமர்சனம் இருக்கும் நிலையில் ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் என்ற நிகழ்ச்சி சென்னை சாந்தோமில் நடைபெற்றது. ஒன்றிணைக்கும் கிருஷ்துமஸ் என்கிற இந்த விழாவில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் பங்குபெற்று பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.. “தமிழ்.ஏசியாநெட்.நியூஸ்,” என்ற ஒரே ஊடகம் தான், இவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளது.

இனிகோ இந்துவிரோத பேச்சுகளைக் கண்டிக்காதது, ஊக்குவித்தது: இந்த நிகழ்ச்சியில் தி.மு.க ஆதரவாளரான கலையரசி திருநீறு அணிந்து ஸ்டாலின் முன்னிலையில் கிறிஸ்துமஸ் விழா மேடையில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “ஹிந்து என்ற மதமே கிடையாது. அனைவரும் சைவர்கள் தான். சைவர்கள் தான் தமிழர்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள். ஹிந்து என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவதே நமக்கெல்லாம் பலவீனம். ஹிந்து என்ற வார்த்தையை கேட்டாலே உடம்பெல்லாம் எரியுது“, என்று ஹிந்து மதத்தின் மீது வன்மத்தை கக்கியுள்ளார்[10]. அப்போது மேடையில் இருந்த கிறிஸ்தவ தலைவர்கள் சிரித்துக் கொண்டே கை தட்டினர். இது அவர்களின் குரூர மனங்களை வெளிப்படுத்துகிறது. மு.க. ஸ்டாலினும் அவரின் பேச்சை ரசித்தபடி கேட்டுக்கொண்டிருந்தார். மத நல்லிணக்கத்தை வளர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு அனைத்து மதத்தினரையும் அழைத்து கிறிஸ்துவர்கள் ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் விழாவில் ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை விதைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் மேடைகளில் மற்றவர்கள் இந்துக்களைப்பற்றி திமுக ஆதரவாளர்கள் பேசி வருவது அக்கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது[11], தமிழ்.ஏசியாநெட்.நியூஸ் கூறுகிறது. உண்மையில் திமுககாரர்கள் சளைத்தவர்களா என்ன?

© வேதபிரகாஷ்

24-12-2020


[1] மாலைமுரசு, சென்னையில் 20-ந்தேதி மு..ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் விழா, பதிவு: டிசம்பர் 13, 2020 13:10 IST

[2] https://www.maalaimalar.com/news/district/2020/12/13131056/2158544/Tamil-News-Christmas-festival-celebration-on-20th.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழ்ச் சமுதாயத்தின் அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடிப்போம்: மு.. ஸ்டாலின், By Mathivanan Maran, Published: Sunday, December 20, 2020, 23:02 [IST].

[4] https://tamil.oneindia.com/we-will-defeat-divisive-force-in-tamilnadu-says-mk-stalin-cs-406419.html

[5] https://www.facebook.com/cnimedia2018/

[6] நக்கீரன், அமைச்சரை வீழ்த்த தயாராகும் இனிகோ இருதயராஜ்!, மகேஷ்

, Published on 22/12/2020 (12:37) | Edited on 22/12/2020 (15:36).

[7] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/who-inigo-iruthayaraj-dmks-trichy-constituency-candidate

[8] தினமலர், ஸ்டாலின் நண்பர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்ரெய்டு, Added : அக் 12, 2011 22:44

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=330219

[10] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கிறிஸ்துமஸ் விழாவில் இந்து மதத்தை பற்றி இழிவுப்பேச்சுமீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் மு..ஸ்டாலின்!, Thiraviaraj RM, , First Published 21, Dec 2020, 5:25 PM.

[11] https://tamil.asianetnews.com/politics/blasphemy-about-hinduism-at-christmas-mk-stalin-in-controversy-again-and-again-qlougi

குன்றக்குடி அடிகள்-ஈவேரா பெரியார்: ஆத்திக-நாத்திக கூட்டா, இந்து-இந்துவிரோத மோதலா, அரசியல் சமரசமா? (3)

ஒக்ரோபர் 6, 2020

குன்றக்குடி அடிகள்-ஈவேரா பெரியார்: ஆத்திக-நாத்திக கூட்டா, இந்து-இந்துவிரோத மோதலா, அரசியல் சமரசமா? (3)

ஈவேரா கருணாநிதிக்கு சிலை வைக்க விரும்பியது, குன்றக்குடி ஒப்புக் கொண்டது (1971), 1975ல் தானே திறந்து வைத்தது: அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. 24-01-1971 அன்று சேலம் மூடநம்பிக்கை ஊர்வலத்தில் ஈவேரா பவனி வந்தார். திகவினர் ராமர், சீதை, சிவன், பார்வதி, முருகன் என்று எல்லா கடவுளர்களின் சித்தரன்களும் ஆபாசமாக வரையப் பட்டு ஊர்வலத்தில் எடுத்துச் சென்றனர். அடிகள் என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார். அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர்.

விநாயகர் சிலை உடைத்தவன் ஆணைக்குக் கட்டுப் பட்டு, இந்துவிரோதிக்கு, உயிருள்ள போதே சிலை வைத்து, திறந்து வைத்த சைவ மடாதிபதி: சிலை உடைத்தவனுக்கு அடிகள் மரியாதை செய்வது, ஆதரவு தெரிவிப்பது முதலியன முரண்பாடுள்ள காரியங்கள் தாம். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார்.  1971ம் ஆண்டு ஈவேரா  கலைஞருக்கான சிலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கினார். சிலை அமைக்கும் குழுவின் புரவலராக அவர் இருந்தார். தலைவராக குன்றக்குடி அடிகளார் இருந்தார். இதுவும் சைவ மடாதிபதிக்கு உகந்தது அல்ல. துணைத் தலைவராக இன்றைய திக தலைவர் வீரமணி. 1975ல் கருணாநிதியின் சிலை மசூதிக்கு முன்பாக, அவர் ஆட்சியில் இருக்கும் போதே, ஜெனரல் பாட்டர்ஸன் – மவுண்ட் ரோடு சந்திப்பில் வைக்கப் பட்டது. அப்பொழுதே “உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பதா, விக்கிரங்களை / சிலைகளை எதிர்ப்பவர், தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதா, இதனால், தீமை ஏற்படும்……….,” போன்ற பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப் பட்டன. ஆத்திகரான, கடவுளை நம்பிய குன்றக்குடி அடிகள், நாத்திகரான-இந்துவிரோதியான, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்! இதிலிருந்தே, அவரது இந்துத் தன்மை கேள்விக்குறியானது.

அடிகளின் காமகோடி மடாதிபதி பற்றிய குழப்பம்: அனைவரும் அர்ச்சகராகலாம் மற்றும் தெய்வீகப் பேரவை விசயங்களில், காஞ்சி காமகோடி என்று குறிப்பிடும் போது, குழப்பத்துடன் இருந்த நிலை வெளிப்படுகிறது. அடிகளாரின் காலம் (1925-1995), ஆகவே இவர் காமகோடி மடாதிபதிகள் பற்றி குழம்பி இருக்கிறார் அல்லது நூல்களைத் தொகுத்தவர் குழம்பி இருக்கிறார் என்று தெரிகிறது. இல்லை பிரச்சினையை திசைத் திருப்ப விரும்புகின்றனர் போலும். 1940-1970 காலங்களில் ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி மிகவும் மதிப்புக்குரிய மடாதிபதியாக இருந்தார். பல அயல்நாட்டு அரசர்கள், அரசிகள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள் என்று வந்து பேட்டி கண்டு சென்றனர்.  “புதியவர்” வந்த பிறகு இடைவெளி அதிகமாகியது, என்று குறிப்பிடும் போது அந்த குழப்பம், முரண்பாடு வெளிப்படுகிறது. ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி (1894-1994) மற்றும் ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி (1935-2018) காமகோடி மடாதிபதிகளாக இருந்தனர். முன்னர் ஶ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி-V, 1907ல் மடாதிபதி ஆனாலும், ஏழு நாட்களில் காலமானதால், ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி பட்டத்திற்கு வருகிறர். 1907லிருந்து 1994 வரை ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி மடாதிபதியாக இருந்தார். 1994ல் தான் ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி மடாதிபதி ஆனார். ஆகவே, “புதியவர்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. இவர்களுக்குள் இருக்கும் குழப்பம் அடிகளின் எழுத்துகளில் தெரிகிறது.  ஆக மொத்தம் பார்ப்பன-எதிர்ப்பு, இவ்வாறு வேலை செய்தது திண்ணம்.

சுவதேசி விஞ்ஞான இயக்கத்தையும் திராவிடத்துவம் பாதித்தது: அடிகளே குறிப்பிட்டுள்ளது, “கை.இ.வாசு என்ற சிறந்த விஞ்ஞானி; காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் அவர் இயக்குநராகப் பணி செய்யும்போது சுதேசி விஞ்ஞான இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தில் நமக்குப் பொறுப்பு ஏற்படுத்தித் தந்தார்,” என்று கே.ஐ.வாசுவைக் குறிப்பிட்டுள்ளார். குன்றக்குடி தொகுப்பு நூலில்[1], “குன்றக்குடிக்கு அருகிலுள்ள காரைக்குடியில் மத்திய அரசின் மின்வேதியியல் ஆய்வுநிறுவனம் ஒன்று உள்ளது. அந்நிறுவனத்தை அடிகளார் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டார். அடிகளாரை அந்நிறுவனம் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டது. அந்நிறுவனத்தின் அறிவியல் உதவியைக் கொண்டு சுதேசி அறிவியல் இயக்கம் (சுதேசி விஞ்ஞான இயக்கம்[2] என்று ஒரு இயக்கத்தையே தோற்றுவித்தார் அடிகளார். அவ்வியக்கத்தைப் பல்கலைக்கழகங்களின் அரங்குவரை கொண்டு சென்றார் அடிகளார்.” சுவதேசி விஞ்ஞானத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றத்தில், ஒரு மாத இதழையும் ஆரம்பித்தார். அப்பொழுது பாரத விஞ்ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. ஆனால், நாட்கள் செல்ல-செல்ல அதன் போக்கும் மாறியது. அதாவது, திக-திமுக உறவுகளினால், அத்தகைய பழங்கால விஞ்ஞான போற்றுதல் போன்றவை நிறுத்தப் பட்டன. இதனால், கே.ஐ.வாசு போன்ற விஞ்ஞானிகள் காரைக்குடியை விட்டு, பெங்களுருக்குச் சென்று, அங்கு, “சுவதேசி விஞ்ஞான அந்தோலன்,” என்று ஆரம்பித்து, இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் பற்றிய மாநாடுகளை நடத்தி வருகின்றனர்[3]. அடிகளார் ஏப்ரல் 15, 1995ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

மூலங்கள், இரண்டாம் தர-மூலங்கள், சரிபார்க்க முடியாத ஆவணகள் முதலியவை அடிகள்-பெரியார் பற்றி உண்மை அறிய முடியவில்லை: சமீப கால தலைவர்களை 60-90 வயதானவர்கள் நன்றாகவே கவனித்துள்ளனர், அவர்களது பேச்சுக்களைக் கேட்டுள்ளனர்,  செய்திகளை வாசித்துள்ளனர், எழுத்துகளைப் படித்துள்ளனர். ஆனால், இப்பொழுது, அவர்களைப் பற்றிய  உண்மைகளை சொல்லாமல், ஏதோ மாயாஜால கதைகள் போன்று, போற்றி பாராட்டி, புதிய வர்ணனைகளை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  10-20 படங்களை சேர்த்து, வீடியோ எடுத்து, புதிய கதைகளை உருவாக்குகின்றனர். இதனால், உண்மைகளை மறைத்து விடலாம் அல்லது அத்தகைய புதிய புனைவுகளினால், புதிய கட்டுக்கதைகளை உருவாக்கலாம், ஆனால், சுலபமாக அவற்றின் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளலாம். இப்பொழுது, எழுதுகின்ற சரித்திரம், கதைகள் எல்லாமே ஒரு தரப்புடையதாக இருக்கிறது. திராவிடத்துவ தலைவர்களைப் பற்றி, அவர்களே எழுதுவது, புத்தகங்களாகப் போட்டு சுற்றில் விட்டுள்ளது என்றுதான் உள்ளனவே தவிர, அவர்களது டைரிகள், எழுத்துகள், ஆவணங்கள் முதலியவற்றை பொது மக்களுக்கு, குறிப்பாக ஆய்ச்சியாளர்களுக்குக்கூட, முழுமையாகக் காட்டப் படுவதில்லை. இரண்டாம் தர-மூலங்களை விட தாழ்ந்த, சர்பார்க்க முடியாத, ஆவணங்கள், ஆவண நகல்கள் முதலியவை காட்டப் படுகின்றன. எழுத்தாளர்-ஆராய்ச்சியாளர்களும் மறுபக்கம் உள்ள ஆவணங்களை பார்ப்பது, சரி பார்ப்பது, விசாரிப்பது கிடையாது. இன்று இருக்கும் திராவிடத்துவ தலைவர்களின் மகன், மகள், மறுமகன், மறுமகள், பேரன், பேத்தி மற்ற உறவினர்கள் கூட உண்மையினைக் கூரத் தயங்குகின்றனர், ஏன் அஞ்சுகின்றனர், அதனால், உண்மையினை மறைக்கவே செய்கின்றனர். அவ்வாறு மற்ற மூலங்களை சரிபார்க்கும் போது, உண்மை தெரிய வருகின்றது.  இதனால் தான், இன்று ஈவேரா-பெரியார் பற்றி ஆராய்ச்சிகள் அவரது நடவடிக்கைகள், சித்தாந்தம் உதலியவற்றைக் கேள்விக் குறிகளாக்குகின்றன.

அடிகளாரால் திராவிட நாத்திகத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை, மாறாக அவர்களுடன் ஒத்துழைத்தார்: ரங்கநாதன், ரங்கநாத பிள்ளை, கந்தசாமி தம்பிரான், “ஶ்ரீலஶ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,” குன்றக்குடி அடிகள், குன்றக்குடி அடிகளார் அவர்களின் எழுத்துகள் 16 புத்தகங்களாகத் தொகுக்கப் பட்டுள்ளன. பெரியாரின் எழுதுகள், பேச்சுகள் முதலியனவும் தொகுக்கப் பட்டுள்ளன. ஆனால், இரண்டையும் குறிப்பிட்ட ஆண்டு நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, முரண்பாடுகள் காணப்படுகின்றன. அதிலும் இந்த அடிகள்-பெரியார் விவரிப்புகளில், ஏதோ இருவரும் ஒன்றாக செயல்பட்டனர் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கினாலும், பொது மக்களுக்கு அறியப்பட்ட நிகழ்வுகள் ராமசாமி நாயக்கர் ஈவேராக இருந்த போதிலும், பெரியாக மாறியபோதும், இந்து-எதிர்ப்பு, இந்த்-காழ்ப்பு, இந்து-துவேசம் முதலியவை மாறவில்லை. அடிகளாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அண்ணாவிடம் எவ்வளவு கெஞ்சினாலும், அப்பர் சிலை வைக்க முடியவில்லை. கருணாநிதி காலத்திலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால், பள்ளிகள் என்று உருவாக்கி, வேறு வழியில் திரும்பினார். இருப்பினும், அவர்களுடைய சகவாசத்தினால், இந்துமதம் தாக்கப் படாமல் இருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அருள் நெறித் திருக்கூட்டம், தெய்வீகப் பேரவை என்றெல்லாம் துவக்கப் பட்டாலும், திராவிட நாத்திகத்தை எதிர்க்காமல், அதனுடன் சேர்ந்து போனதால், மற்றவர்கள் நம்பவில்லை. அதனால், அவை செயலிழந்தன.

© வேதபிரகாஷ்

05-10-2020


[1]  குன்றக்குடி அடிகள், குன்றக்குடி அடிகளார் நூல்வரிசைபொது, தொகுதி.13, பக்கம்.17

[2] அறிவியல் தமிழை வளர்க்கும் விதத்திலும், நவீன விஞ்ஞான ஆய்வுகளை தமிழுக்கு கொண்டு வரும் வகையில், சுதேசி விஞ்ஞான இயக்கம் தமிழகத்தில் செயல்படுகிறது.குன்றக்குடி அடிகளார் இதனை தொடங்கினார். காரைக்குடியில் மைய மின் வேதியியல் ஆய்வகத்தில் இதன் அலுவலகம் உள்ளது. “அறிக அறிவியல்’ என்னும் பத்திரிகையையும் “சுதேசி விஞ்ஞான இயக்கம்’ செயல்படுத்துகிறது.அறிவியல் தொடர்பான கருத்தரங்குகளையும் சுதேசி விஞ்ஞான இயக்கம் நடத்துகிறது.

[3]  கே.வி.ராமகிருஷ்ண ராவ், கே.ஐ.வாசுவிடமிருந்து பெற்ற விவரங்களிலிருந்து, அந்நிலை அறியப்படுகிறது. சித்தாந்தம் எவ்வாறு எல்லாவற்றையும் பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

துர்கா ஸ்டாலின் அங்காளம்மன் கோயிலை புதுப்பிக்கும் நோக்கம் என்ன? 2021ல் கும்பாபிஷேகம் செய்தால், இந்துவிரோத ஸ்டாலின் வெற்றிப் பெற முடியுமா?

செப்ரெம்பர் 3, 2020

துர்கா ஸ்டாலின் அங்காளம்மன் கோயிலை புதுப்பிக்கும் நோக்கம் என்ன? 2021ல் கும்பாபிஷேகம் செய்தால், இந்துவிரோத ஸ்டாலின் வெற்றிப் பெற முடியுமா?

துர்கா ஸ்டாலின் தன் குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பிக்கும் நிலை: மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என தனது குலதெய்வம் கோயிலை புனரமைத்து வருகிறார் துர்கா ஸ்டாலின், இப்படி சில செய்திகள் வந்துள்ளன[1]. திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தன் குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பித்து கட்டி வருகிறார். இந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது[2]. துர்கா ஸ்டாலின், தனது கடவுள் நம்பிக்கையை மறைத்து வைக்கிறவர் அல்ல. வெளிப்படையாக கோவில்களுக்கு சென்று வழிபாடுகளை நடத்துகிறவர் அவர். அண்மையில் நாகை மாவட்டத்தில் தனது சொந்த ஊரில் குல தெய்வமான அங்காளம்மன் கோவிலை அவர் புதுப்பித்துக் கட்ட உதவியிருக்கிறார்.  கொரோனா காலகட்டம் என்பதால் முக கவசம் அணிந்தபடி அவர் அந்தக் கோவிலுக்கு சென்ற காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. கோவிலின் வெளிப் பிரகாரத்தில் நின்றபடி துர்கா பார்வையிடும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகியிருக்கிறது[3]. திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் குலதெய்வக் கடவுளான அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு, கருணநிதி செல்வது, வணங்குவது முதலியன நடந்து வந்தன. ஆனால், ஊடகங்களுக்குத் தெரியாமல் அல்லது அடக்கி, அவை அரங்கேறின. இருப்பினும், “சாமி கும்பிட்டார்,”  என்ற அளவில் செய்திகள் வந்துள்ளன.

கருணாநிதியின் குலதெய்வக் கடவுளான அங்காள பரமேஸ்வரி கோவிலை விடுத்து, அங்காளம்மன் கோவிலைப் புதுப்பிப்பது ஏன்?: இப்பொழுது, துர்கா அக்கோவிலை விடுத்து, இன்னொரு கோவிலை புதிப்பிக்கிறார் போலும். அதுதான், வீடியோவாக வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில் துர்காவிடம் கட்சி பிரமுகர் ஒருவர் ‘கோயில் பணிகளை நீங்கள் வந்து பார்வையிட்டது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் சிறியதாக ஆரம்பித்த கோயில் பணி ஆலமரமாக வளர்ந்து வருகிறது[4]. கட்டுமான வேலை துவங்கி அஸ்திவாரம் துாண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன’ என்கிறார்[5]. இது பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியிருக்கிறது. துர்காவின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் எதிராக இன்னொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது ஒரு திட்டத்துடன், அரசியல் நோக்கத்துடன் செய்யப் படுகிறது எனலாம். ஏற்கெனவே, ஸ்டாலின் இந்துவிரோத கருத்துக்களைத் தெரிவித்து, இந்துவிரோதி என்ற நிலைக்கு வந்து விட்டது. கருணாநிதி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அவர் காலமாகி விட்டார். சமீபத்தை உதயநிதி, “வினாயகர் விக்கிரகம்” கூத்தையும் கவனிக்க வேண்டும். அதற்கு பெரிய விளக்கமும் கொடுக்கப் பட்டது. பால், காபிப்பவுடர், சக்கரை இவைத் தான் பிடிக்காது, ஆனால், காபியாகக் கொடுத்தால் சாப்பிடுவேன் என்ற கதைதான். திருட்டுத் தனமாக சாமி கும்பிடும் குடும்பம் அதே வேலையை செய்து வருகிறது. பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடுவது என்பதும் தெரிந்த விசயமே.

1991க்குப் பிறகு 2006, அதற்குப் பிறகு 2021 என்று பொருந்தி வருவது எப்படி?: கருணாநிதி குடும்பம் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில் கோயில், குளம் என பக்திமயமாக கடவுள் பற்றுதலோடு வலம் வருகிறார் ஸ்டாலின் மனைவி துர்கா. இவர் இவ்வாறெல்லாம் செய்வது புதியதல்ல. காசிக்கு எல்லாம் கூட சென்று வந்தார். ஆனால், புடவை வாங்கினேன் என்ற ரீதியில் பேசியது, தமாஷாக இருந்தது. ஆனால், நிச்சயமாக மாமனாரான நாத்திகரின் ஆன்மா சாந்தியடைவே சென்றது வெளிப்படையான உண்மை. பாவம் இல்லாத ஆன்மா எப்படி சாந்தி அடைந்தது என்பதை இல்லாத கடவுளைத் தான் கேட்க வேண்டும். 1991ல் திருக்குவளைக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து, மறுபடியும் 15 ஆண்டுகள் கழித்து, 2006ல் ஒரு வாரம் விமர்சியையாக மகா கணபதி ஹோமம், 04-07-2006 அன்று நடந்தது. கணபதி ஹோமத்தை யார் செய்தார்கள் என்று ஈவேரா, அண்ணா அல்லது கருணாநிதி சமாதியில் தான் சென்ற் கேட்க வேண்டும். பிறகு 08-07-2006 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. பூசாரி கலிய பெருமாள் மற்றும் ஊரார் எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். ஸ்டாலின் தவிர எல்லா குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதேப் போல, செய்திகளும் வெளி வந்தன. ஆக, மறுபடியும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆண்டு வருகிறது. அது அடுத்த ஆண்டுதான், ஆனால், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்கப் போகின்ற வருடம்.  ஆனால், கோவில் மாறிவிட்டது போலும்!

துர்கா ஸ்டாலின் பிரச்சாரம் செய்தால் என்னாகும்?: ஜெயலலிதா-கருணாநிதி இல்லாத நிலையில் நடக்கும் தேர்தலில், ஸ்டாலின் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும், என்று தீவிரமான வேலைகள் நடந்து வருகின்றன. பிரஷாந்த் கிஷோர் என்ற தேர்தல் ஆலோசகர் நியமிக்கப் பட்டப் பிறகு, ஒரு புறம், திமுக அதே திராவிடத்துவ-இந்துவிரோத நாத்திகத்தைப் பின்பற்றினாலும், இன்னொரு பக்கம், மென்மையான இந்துத்துவத்தை, ஆன்மீகப் போர்வையில் நடத்தத் திட்டமிட்டதாகத் தெரிகிறது, இதற்கு, துர்கா நன்றாகப் பயன் படுத்தப் படுகிறார் என்று தெரிகிறது. இல்லையென்றால், வீடியோ வெளிவர அவசியம் இல்லைதிப்பொழுது கூட தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி, அதனை எடுத்து விடலாம். நாளைக்கு, ஸ்டாலினுக்கு ஆதரவாக துர்கா பிரச்சாரத்தில் இறங்கினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. விஜயகாந்தின் மனைவி, பிரேமலதா வெற்றிகரமான பெண்-பிரச்சாரகர் என்று தயாராகியதைப் போல, துர்கா ஸ்டாலின் பிரச்சாரத்தில், வெற்றிப் பெற்றால், கணிசமான பெண்கள் ஓட்டுகள் திமுகவிற்குச் செல்லலாம். ஜெயலலிதா இல்லாத நிலையில், இதைக் கவனிக்க வேண்டும்.

2021ல் கும்பாபிஷேகம் நடந்தால் ஸ்டாலின் வெற்றிப் பெற முடியுமா?: வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதற்காக நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் தனது குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பித்து மிகப்பெரிய அளவில் கட்டி வருகிறார்[6]. இந்தக் கோயிலின் பரிவார மூர்த்திகளை புனரமைத்து பிரகார மண்டபங்கள் கட்டும் பணிகளை சமீபத்தில் நேரில் சென்று துர்கா பார்வையிட்டார்[7]. கோயில் புனரமைக்கப்பட்டு வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பே கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளார்[8]. கோயில் கட்டுமான பணிகளை பார்வையிட வந்த துர்காவின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. குடும்ப ஜோதிடரின் ஆலோசனைப்படியே குல தெய்வம் கோயிலை புனரமைக்கும் பணிகளை துர்கா துவக்கி உள்ளதாக கூறுகின்றனர். முன்பு, ரங்கராஜபுரம் அ.கணேசன் இருந்தார். இப்பொழுது யார் என்று தெரியவில்லை. அதனை தொடர்ந்து பழநி, திருச்செந்துார் முருகன் கோயில்களில் பவுர்ணமி தினத்தில் வழிபாடு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதேவேளை இந்த வீடியோ திட்டமிட்டு திமுகவினரே வெளியிட்டதாகவும் கூறுகின்றனர். காரணம், இந்து கடவுள் எதிர்ப்பை கடைபிடித்து வந்த திமுக, சமீபகாலமாக இந்துமத கடவுள் மீது நாட்டம் கொண்ட கட்சியாக காட்டிக் கொள்ள முனைகிறது. ஆகையால் இந்த வீடியோவை திமுகவினரே வெளியிட்டதாக கூறுகிறார்கள்.

அதிமுக, பிஜேபி என்ன செய்யப் போகின்றன?: ஜெயலலிதா இல்லாத நிலையில், அதிமுகவிற்கு அவரைப் போன்ற ஓட்டுக்களைக் குவிக்கும் தலைவர் இல்லை. அதனால் தான், இன்று வரை “அம்மாவின் ஆட்சி” என்றே பேசி வருகின்றனர். பிஜேபியைப் பொறுத்த வரையில், இது அவர்களுக்குப் பெருத்த இடி என்றே சொல்லலாம். ஏனெனில், அத்தகைய, “திராவிடத்துவ ஆன்மீகம்,” அல்லது “போலி ஆன்மீகம்” என்று, திமுக எப்படி பயன்படுத்தினாலும், அது அவர்களுக்கு சாதகமாகவே போகும்.  தேர்தல் பிரச்சாரத்தினால், மேடைப் பேச்சுகளால் பிஜேபிக்கு ஓட்டு கிடைக்காது. ஆக, திமுக

 1. திராவிடத்துவ மென்மையான இந்துத்துவம்
 2. இந்துத்துவ மென்மையான திராவிடத்துவம்
 3. திராவிடத்துவ நாத்திகம்
 4. திராவித்துவ இந்துவிரோத நாத்திகம்.

என்று எதைப் பின்பற்றினாலும், ஒவ்வொரு வகையிலும் ஓட்டு கிடைக்கும். ஆனால், மற்ற கட்சிகளுக்கு என்ன கிடைக்கும்?

© வேதபிரகாஷ்

03-09-2020


[1] தமிழ்.ஆசியாநெட்.நியூஸ், மு..ஸ்டாலின் முதல்வராக கோயில் கட்டும் துர்காமுருகனிடம் தஞ்சம் கேட்கவும் ஏற்பாடு..!,

By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 2, Sep 2020, 12:01 PM.

[2] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், குல தெய்வம் கோவில் புனரமைப்பு பணியில் துர்கா ஸ்டாலின்: வைரல் வீடியோ, Updated: September 2, 2020, 01:29:09 PM

[3] https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-stalin-2021-assembly-election-chief-minister-durga-stalin-pooja-temple-renovation-video-218850/

[4] தினமலர், ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல்: குலதெய்வ கோயிலை புனரமைத்து வரும் துர்கா, Updated : செப் 02, 2020 07:14 | Added : செப் 02, 2020 07:01

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=2606030

[6] https://tamil.asianetnews.com/politics/durga-to-build-temple-as-mk-stalins-chief-arrange-to-seek-refuge-with-murugan–qg0q4h

[7] தமிழ்.ஒன்.இந்தியா, கோயிலைகையில் எடுத்த துர்கா.. புதுப்பித்து கட்டுகிறார்.. ஸ்டாலினுக்குமுதல்வர்பதவி வந்து சேருமா, By Hemavandhana, | Updated: Tuesday, September 1, 2020, 11:47 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/durga-stalin-visits-her-kuladeivam-temple-in-mayiladuthurai-district-396286.html

கோவில்கள்-அவற்றின் நிலை, கொள்ளை-சிலைகடத்தல்: அந்நிலைகளில் அர்ச்சகர் வேலை-பெரியாருக்கு மாலை, வேலை கேட்கும் உரிமை-இந்துமதத்தின் நிலை!

ஓகஸ்ட் 1, 2020

கோவில்கள்அவற்றின் நிலை, கொள்ளைசிலைகடத்தல்: அந்நிலைகளில் அர்ச்சகர் வேலைபெரியாருக்கு மாலை, வேலை கேட்கும் உரிமைஇந்துமதத்தின் நிலை!

Anti-Hindu, Stalin acts in a different way-3

2006-2015 – அரசியலாக்கப் பட்ட அர்ச்சகர் பயிற்சி, நியமனம் முதலியன: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது[1]. அதன்படி, கோயில் அர்ச்சகராக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன[2]. அதில் 206 பேர் பயிற்சி பெற்றார்கள். இதனிடையே அந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, படித்து முடித்த மாணவர்களை அர்ச்சகராகப் பணியமர்த்த முடியாத சூழல் ஏற்பட்டது[3]. 2015-ம் ஆண்டு இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. அந்த அரசு ஆணை செல்லும் என்று உத்தரவு வந்தாலும்கூட பயிற்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்குவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை[4]. திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத கட்சிகள், அமைப்புகள் முதலியவை, இப்பிரச்சினையில் நுழைந்து, அரசியலாக்கின. கம்யூனிஸ, முஸ்லிம், கிருத்துவ அமைப்புகளும் இதில் மூக்கை நுழைத்துக் குழப்பின. போதாகுறைக்கு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள், பெரியார் சிலைக்கு மாலை போடுதல் போன்ற காரியங்களையும் செய்தனர்.

Marisami appointed temple priest, August 2018

ஜூலை 2018ல் முதல் அர்ச்சகர் நியமனம்: 2018ல் இந்த உத்தரவு மெய்ப்பிக்கும் வகையில், மதுரையில் பிராமணர் அல்லாத ஒருவர் -மாரிச்சாமி என்பவர், அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்[5]. அழகர்கோவிலின் உப-கோவிலான தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில், அர்ச்சகராக அவர் பணி அமர்த்தப்பட்டுள்ளார். நேர்முகத் தேர்வின் போது, மந்திரங்களை மிகச் சரியாக உச்சரித்ததால், அவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது[6].  அதாவது, எந்த மந்திரங்கள், மொழி எல்லாம் சொல்லப் படவில்லை. ஆனால் இத்தகைய நடைமுறை பிரச்சினைகள் எழும் என்று தெரிகிறது. பயிற்சி எனும் போது, படிப்பதால் மட்டும் எல்லா கிரியைகள், முறைகள் எல்லாம் அத்துப்படியாக வந்துவிடுமா என்று தெரியவில்லை. மேலும் பிராமணர் அல்லாதவர் என்ற பிரச்சினை ஏன் வருகிறது என்று தெரியவில்லை. சிவாச்சாரியார்கள் எல்லொரும் பிராமணர்களா என்று சொல்ல முடியாது[7]. ஆகவே, இவ்விசயங்களில் ஊடகங்கள் அரசியல் செய்யாமல் இருந்தால் நல்லது[8].

Any caste can become archakas, Vikatan, August 2020-1

ஜூலை 2020ல் இரண்டாவது அர்ச்சகர் நியமனம்: இந்த நிலையில் மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிள்ளையார் கோயில் அர்ச்சகராக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற, மதுரை அர்ச்சகர் பாடசாலை மாணவர் தியாகராஜன் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்[9]. இதனை தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் வரவேற்றுள்ளது[10]. பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டார் என்று செய்திகள் வந்துள்ளன[11]. “தமிழகத்தில் மேலும் ஒரு பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம், என்ற தலைப்பில் செய்திகள்[12]. உண்மையில் அவ்வாறில்லை. ஏற்கெனவே பல கோவில்களில் பிராமணர் அல்லாதவர் பூஜாரியாக இருந்து வருகின்றனர்.  தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இத்தகைய நியமனங்கள் நடப்பது போலிருக்கிறது. கருணாநிதியே, இப்பிரச்சினையை தேர்தலுக்காக ஆரம்பித்தார். 2018, 2020 ஜூலை-ஆகஸ்ட் தேர்தல் காலங்களுக்கு நெருங்கியுள்ளதை கவனிக்கலாம்.

Any caste can become archakas, Vikatan, August 2020-2

Any caste can become archakas, Vikatan, August 2020-3

Any caste can become archakas, Vikatan, August 2020-4

அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும்: இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறியதாவது: “பயிற்சி பெற்ற மாணவர் தியாகராஜன் உரிய கல்வித் தகுதி, முறையான நேர்முகத் தேர்வு மூலம் அர்ச்சகராகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை புதூர் அய்யப்பன் கோயிலில் மாரிச்சாமி என்ற இளைஞருக்குப் பணி வழங்கப்பட்டது. இப்படி இதுவரையில் பயிற்சி பெற்றவர்களில் மொத்தமே 2 பேருக்குத்தான் பணி கிடைத்திருக்கிறது. இவர்களைப் போன்றே திறன்படைத்த மற்ற மாணவர்களுக்கு இதுவரையில் ஆகமக் கோயில்களில் பணி நியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக, மதுரை மீனாட்சியம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மயிலை கபாலீஸ்வரர் உள்ளிட்ட முக்கியக் கோயில்களில் பணி நியமன முறை ரகசியமாகவே இருக்கிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும். ஆனால், அரசியல் அமைப்புச் சட்டமும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் செல்லாத இடமாக நம்முடைய ஆகமக் கோயில்கள் இருக்கின்றன. இந்து மதத்தில் அனைவரும் சமம். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. அதையும் மீறிக் கோயில் கருவறையில் நுழைவதற்குத் தடை இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை நியாயமானதே என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் கூட, பிராமணர் அல்லாத இளைஞர்களைப் பணியமர்த்த அரசு தயங்குகிறது.

Any caste can become archakas, Vikatan, August 2020-6இது வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சினை மட்டுமல்ல. சமத்துவம், சம வாய்ப்பு, சமூக நீதி, மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினை: பயிற்சி முடித்த 206 பேரில் வெறும் 2 பேரை மட்டும், அய்யப்பன், பிள்ளையார் போன்ற சிறு கோயில்களுக்கு அர்ச்சகர்களாக அரசு நியமித்திருக்கிறது. இது வெறுமனே வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சினை மட்டுமல்ல. இது அரசியல் அமைப்புச் சட்டம் தந்துள்ள, குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சம வாய்ப்பு, சமூக நீதி, மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினை. எனவே, எஞ்சியுள்ள 204 மாணவர்களுக்கும் அரசு உடனடியாகப் பணி வழங்க வேண்டும். மூடப்பட்ட சைவ, வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். பெண்களையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்,” இவ்வாறு அவர்கள் கூறினர். இத்தகைய பேச்சு, தோரணை எல்லாம், ஏதோ, இவர்கள் எல்லோரும், இந்துமதத்திற்கு தொண்டு செய்ததது போலவும், கோவில்களைக் காத்தது போலவும், கோவில் சொத்துகள், சிலைகள் முதலிய கொள்ளைகளைத் தடுதத்து போலவும், இருக்கிறது. திராவிடத்துவ வாதிகள், அத்தனை அக்கரையுடன் செயல் பட்டிருந்தால், இத்தனை கோவில் சொத்துகள், சிலைகள் முதலிய கொள்ளைகள், வழக்குகள் முதலியவை ஏற்பட்டிருக்காதே? நாளைக்கு, நாத்திகன், இந்துவிரோதி, ஏன் இந்து-அல்லாதவன் பயிற்சி பெற்று, பரீட்சை பாஸாகி, சான்றிதழ் பெற்றால், வேலை என்று வந்துவிட முடியுமா? இப்பொழுது, பிஜேபியினால், இந்துத்துவ அரசியலுக்கும் திராவிடக் கட்சிகள் தயாராகி வருகின்றன. ராகுல் காந்தி மாதிரி, ஸ்டாலின் குங்குமம் வைத்துக் கொண்டால் கதை முடிந்தது. ஏற்கெனவே ஆயிரம் விளக்குத் தொகுதியில் அதையெல்லாம் செய்தவர் தான். இப்பொழுது மறைத்து விட்டார்கள். துர்காவை வைத்து பிரச்சாரமும் செய்யலாம்!

 

© வேதபிரகாஷ்

01-08-2020

Any caste can become archakas, Vikatan, August 2020-5

[1] விகடன், பயிற்சி முடித்து 14 ஆண்டுகள்… 2 பேருக்கு மட்டுமே பணி! – கொந்தளிக்கும் அர்ச்சகர்கள் , செ.சல்மான் பாரிஸ், ஜெ.முருகன், என்.ஜி.மணிகண்டன், Published:Today at 8 AM; Updated:Today at 8 AM.

[2] https://www.vikatan.com/news/general-news/priest-course-completed-people-not-appointment-in-temple

[3] இந்தியன்.எக்ஸ்பிரஸ்.தமிழ், தமிழகத்தில் 2வது பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம் , By: WebDesk, Published: July 15, 2020, 7:30:10 PM

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-second-non-brahmin-priest-appointed-at-hr-nc-temple-in-madurai-nagalamalai-pudukkottai-207480/

[5] தினத்தந்தி, தமிழகத்தில் முதல் முறையாக பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம், பதிவு : ஜூலை 31, 2018, 07:38 PM

[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/31193853/1004951/First-NonBrahmin-Appointed-as-Priest-in-Tamil-Nadu.vpf

[7] தினமலர், பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம், Added : ஜூலை 31, 2018 00:53.

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2071925

[9] தமிழ்.இந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு அர்ச்சகருக்குப் பணி நியமனம், கே.கே.மகேஷ், Published : 14 Jul 2020 19:21 pm, Updated : 14 Jul 2020 19:26 pm.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/564441-everyone-can-become-priest.html

[11] NEWS18 TAMIL, தமிழகத்தில் மேலும் ஒரு பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம், LAST UPDATED: JULY 15, 2020, 12:51 PM IST.

[12] https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-another-non-brahmin-appointed-as-priest-in-madurai-riz-316901.html

Atheists exploiting Krishna etc

1960களில் திராவிடத்துவ பக்தர்கள் சுவரொட்டிகளுக்கு மாலைகள் அணிவித்தனர், பூசொரிந்தனர், இப்பொழுதும் முடிந்த அளவில் கிடைத்ததைக் கொண்டு பூஜிக்கின்றனர்! இதில் என்ன பிரச்சினை?

ஜூலை 31, 2020

1960களில் திராவிடத்துவ பக்தர்கள் சுவரொட்டிகளுக்கு மாலைகள் அணிவித்தனர், பூசொரிந்தனர், இப்பொழுதும் முடிந்த அளவில் கிடைத்ததைக் கொண்டு பூஜிக்கின்றனர்! இதில் என்ன பிரச்சினை?

How Anna statue garlanded, decorated 30-07-2020

1960களிலிருந்து தலைவர்களைப் போற்றும் திராவிடத்துவ பக்தர்களின் நிலை: 1960களிலிருந்து, சுவரொட்டிகளுக்கே மாலை போடுவது, பூசூடுவது, துணி/துண்டு அணிவிப்பது, அலங்காரம் செய்வது போன்றவை சாதாரணமான விசயங்களாக இருந்தது. குடித்து கலாட்டா செய்பவர்கள் அவ்வாறு செய்வர். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். தமாஷாகப் பார்ப்பர், ரசிப்பர், சென்றுவிடுவர். பூ விற்பவர்கள், விற்காமல் மீந்து போன, வாடிப்போன, கட்டியப் பூக்களை, வால்போஸ்டர்களுக்கு அணிவித்து செல்வர். பெரும் பாலும் ரிக்சாகாரர்களும் அவ்வாறு செய்வது உண்டு. அப்பொழுதெல்லாம், படங்களுக்கு மாலை போடுவது, பூசூடுவது, சொரிவது என்றால், இறந்தவர்களுக்குத் தான் செய்வது வழக்கம். ஆனால், அவர்களுக்கு ஈவேரா, அண்ணா என்றால் கடவுள் போன்றது தான். அந்த அளவுக்கு பக்தி, கும்பிடவும் செய்தார்கள். கற்பூரம் கொளுத்தி, தேங்காய் உடைத்ததும் உண்டு. அதனால், உயிரோடு இருப்பவர்களுக்கு செய்யாதே என்று கூட சொல்வது உண்டு. ஆனால் குடிகாரர்கள், ரிக்சாகாரர்களிடம் அந்த அறிவுரை செல்லாது. “டேய், சோமாறி, என் தலவனுக்கு போடுறேன், கஸ்மாலம், நீ யாரு என்ன கேட்க……..”, என்று, அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்! இப்பொழுது, 2020களில் சிலைக்களுக்கு அவ்வாறு மரியாதை செய்வதில், திராவிடத்துவ ரீதியில், எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை,

Saffron flag on Anna stature, OPS condemns, Media News, 31-07-2020

29-07-2020 – அண்ணாசிலைக்கு அவமதிப்பு செய்தது: “கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு அருகே அண்ணா சிலை உள்ளது. இந்த சிலை உள்ள பீடத்தின் மீது நள்ளிரவில் யாரோ காவித் துணியைப் போட்டுச் சென்றுள்ளனர்[1]. மேலும், அருகே குப்பைகளும் கொட்டப்பட்டிருந்தன[2]. மர்ம நபர்கள் சிலர் காவி கொடி கட்டிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்”, என்று எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்து விட்டன. ஆனால், யாரும் காரணம் என்ன என்று அலசிப் பார்க்கவில்லை. காவி என்றதும் குதிக்கின்றனர் என்பது தான் தெரிகிறது. அதாவது, இவர்களே, அந்நிறத்தைக் கண்டு திகைக்கின்றனர் அல்லது முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்று தெரிகிறது. இதுவரை பார்த்ததில், குடித்தவன், மனநிலை சரியில்லாதவன் போன்றோர் தான் அவ்வாறு செய்துள்ளனர். ஒரு சம்பவத்தில் திமுகக்காரனே செய்துள்ளான். இப்பொழுது கூட, பிரச்சினை செய்ய, வேண்டுமென்றே, அத்தகைய ஆட்களைத் தூண்டி விட்டு செய்திருக்கலாம் என்றும் விளக்கம் கொடுக்கலாம்.  ஏனெனில், உண்மையான இந்து, இந்துத்துவவாதி அவ்வாறு எல்லாம் செய்து இழிவு படுத்த மாட்டான்.

Saffron flag on Anna stature, Stalin for arresting him, 31-07-2020

சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்[3]. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது[4];-“…… சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்[5].……மேலும் பொதுவாழ்வில் ஈடுபட்டு சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை எடுக்கும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்[6]. இப்படி அறிக்கை விடுவதற்கு என்றே தயாராக இருப்பது போல, அரசியல் தலைவர்கள் அதிரடியாக அறிக்கைகள் விட்டுள்ளனர்[7]. “சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” எனும்போது[8], அந்த அளவுக்கு என்னவாகி விட்டது என்று தெரியவில்லை. இந்துக்களை, இந்து கடவுளர்களை தினம்-தினம் திகவினர், திராவிடத்துவப் போர்வையில் பலர் சமூக ஊடகங்களில் செய்து வருவது தெரிந்த விசயமாகி விட்டது. வீரமணி, “விடுதலையில்” செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் மீது, கடந்த 70 ஆண்டுகளாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தான், அத்த்கைய குற்றங்கள், சட்டமீறல்கள் மறுமடி-மறுபடி நடந்து கொண்டிருக்கின்றன.

Saffron flag on Anna stature, unstablized person did, Tamil one India, 31-07-2020

திமுக போராட்டம், போலீஸார் சமரசம்: தி.மு.க.வினர் திரளாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, அண்ணா சிலையை அவமதித்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது[9]. உடனே போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வினர் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். இதுதொடர்பாக குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் பொன்.ஆசைதம்பி களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையே போலீசார், காவி கொடி, பல்பு மாலையை அகற்றினர்[10]. சிசிடிவி மூலம் அவ்வாறு செய்தவர் யார் என்று கண்டறிந்தனர், விசாரித்ததில், அவர் ஒரு மனநோயாளி என்று தெரிய வந்தது[11]. கன்னியாகுமரி குழித்துறையில் அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளி என்றும் எந்த உள்நோக்கத்துடனும் இந்த நிகழ்வு நடைபெறவில்லை என்றும் மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்[12].

Saffron flower garland to EVR stature by girls-1

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இப்பொழுது, மனநிலை சரியில்லாதவர்கள், கிருக்குகள், பைத்தியங்கள் முதலிவர்களின் மீது என்ன கடும் நடவடிக்கை எடுக்க முடியும்? குண்டர்கள், தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்து, சிறைகளில் அடைப்பார்களா?  செக்யூலரிஸத் தனமாக, ஒரு சித்தாந்தவாதியைக் கைது செய்ய வேண்டும் என்றால், மாற்று சித்தாந்தவாதி ஒருவனை கைது செய்யவேண்டும் என்ற ரீதியில் தான் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. “அடுத்தவர்களின் மனம் புண்படுவது,” என்றால், திராவிடத்துவவாதிகளுக்கு, பெரியாரிஸ்டுகளுக்கு, நாத்திகர்களுக்கு, இந்துவிரோதிகளுக்குத் தெரியாதா என்ன? பிறகு எதற்கு எந்த ஆர்பாட்டம் எல்லாம்? திராவிட நாத்திகம், திராவிடத்துவ இந்துவிரோதத் தனம், செக்யூலரிஸ இந்து தூஷணம் முதலியவற்றை வைத்துக் கொண்டு இந்துக்களை ஏமாற்ற முடியாது.

Saffron flower garland to EVR stature by girls-4

கருப்பா, சிவப்பா, காவியா, என்ற அலர்ஜி ஏன் வந்தது?: இதுவரை 60-40 ஆண்டுகளாப் பார்க்கும் பொழுது, ஈவேரா-அண்ணா சிலைகளுக்கு அமோகமாக மாலைகள் போட்டு, மலர் தூவி, படங்களை அலங்கரித்து, பூஜை நடத்துவது போன்றே பெரிய-அரசியல்வாதிகள், பகுத்தறிவு பகலவர்கள், நத்திக சிரோமணிகள், திராவிடத்துவ வித்தகர்கள் செய்து வந்துள்ளனர். அம்மாலைகளில் லபலவித நிறங்கள் இருந்துள்ளன, இருக்கின்றன. அங்கு, “கருப்பு தான் எனக்குப் பிடித்த கலர்”, என்றெல்லாம் சொல்லவில்லை. ஆரஞ்சு / காவி நிற சாமந்தி பூமாலைகள் எல்லாம் போட்டு பூஜித்துள்ளனர்.  மக்களும் நேரிலும், டிவியிலும், இப்பொழுது மொபைல் போனிலும் நன்றாகவே பார்த்து வருகின்றனர். ஆகவே, திராவிடத்துவ அடிபொடிகள், பெரியாரிஸ பக்தர்கள், அவரவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப, என்ன கிடைக்கிறதோ, அவற்றை வைத்துக் கொண்டு, பக்தியுடன், சிரத்தையுடன், மாலையாகக் கட்டி, மாலை போடுகிறார்கள் போலும். இதில், இப்பொழுதுள்ள நான்காம்-ஐந்தாம் சந்ததியினர் கோபித்துக் கொளவது வேடிக்கையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

29-07-2020

Is it OK for Anna, MGR, EVR - saffron garland-Namakkal March 2018

[1] தமிழ்.இந்து, அண்ணா சிலை மீது காவித்துணி: தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்; தலைவர்கள் கண்டனம் , Published : 30 Jul 2020 02:50 PM, Last Updated : 30 Jul 2020 02:51 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/567261-leaders-condemns-on-anna-staute-issue-5.html

[3] தினத்தந்தி, அண்ணா சிலை மீது காவிக் கொடி கட்டிய சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் கண்டனம், பதிவு: ஜூலை 30, 2020 15:03 PM.

[4] https://www.dailythanthi.com/News/State/2020/07/30150349/Deputy-Chief-Minister-O-Panneerselvam-condemned-the.vpf

[5] மாலை மலர், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை.பன்னீர்செல்வம், பதிவு: ஜூலை 30, 2020 15:18 IST

[6] https://www.maalaimalar.com/news/topnews/2020/07/30151837/1747152/OPS-condemned-tying-of-saffron-flag-to-Anna-statue.vpf

[7] தினமணி, கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக்கொடி: ஓபிஎஸ், ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம், By DIN | Published on : 30th July 2020 04:38 PM |

[8] https://www.dinamani.com/tamilnadu/2020/jul/30/saffron-flag-on-anna-statue-in-kanyakumari-3443381.html

[9] தினத்தந்தி, உடைந்த பல்புகளை மாலையாக அணிவித்து அவமதிப்பு; அண்ணா சிலையில் காவி கொடி கட்டியதால் பரபரப்பு: தி.மு..வினர் போராட்டம், பதிவு: ஜூலை 31, 2020 01:48 AM

[10] https://www.dailythanthi.com/News/State/2020/07/31014814/Insult-by-wearing-broken-bulbs-Saffron-flag-hoisted.vpf

[11] தமிழ்.ஒன்.இந்தியா, கன்னியாகுமரி அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளிகாவல்துறை, By Mathivanan Maran | Updated: Thursday, July 30, 2020, 16:50 [IST].

[12] https://tamil.oneindia.com/news/kanyakumari/anna-statue-dishonoured-with-saffron-flag-in-kanyakumari-392841.html

தேவையில்லாமல், திராவிடத்துவம் மற்றும் இந்துத்துவம் இடையில் சிக்கிக் கொண்ட பார்ப்பனியம்!

ஜூலை 13, 2020

தேவையில்லாமல், திராவிடத்துவம் மற்றும் இந்துத்துவம் இடையில் சிக்கிக் கொண்ட பார்ப்பனியம்!

Parppaniyam caught between dravidatvam and hindutwam-Ahmed Bakrudheen VCK

மாரிதாஸின் பதிவுகளை ஆதரிக்க வேண்டும் என்று ஒரே நச்சரிப்பு. கேட்டுப் பாருங்கள் என்று இன்-பாக்ஸில் தொந்தரவு, சரி என்று மிக கவனமாக பார்க்க / கேட்க ஆரம்பித்தேன். முன்பே, தவறுகள் இருந்தபோது சுட்டிக் காட்டி இருக்கிறேன், ஆனால், எந்த பதிலும் இல்லை. ஒரு வழி பாதைப் போன்று சென்று கொண்டிருந்தது. அதனால், கீழ் கண்ட படிவு செய்தேன்:

 1. மாரிதாஸின் மாணவர்கள் புரிந்து கொள்வது எப்படி என்று வீடியோ போடும் யுக்தி, ஏன் இந்துத்துவ வாதிகளுக்கு என்று போடக் கூடாது?
 2. இவர் செய்யும், எதிர் ஆலோசனை [Negative suggestion], எதிர்வினை பிரச்சாரம் [negative propaganda] முறைகள் மாணவர்களுக்குத் தேவையில்லை!
 3. டெலி-சீரியல்கள் பார்க்கும் ரீடியில் உள்ள இவை நிச்சயமாக மாணவர்களுக்குத் தேவையில்லை! அந்நேரத்தில் உருப்படியாக படிக்கலாம்!
 4. அக்டோபர் 2017ல் ஆரம்பித்ததால் மாணவர்களுக்கு என்ன பலன் இந்துத்துவ வாதிகளுக்கு அல்லது பிஜேபிக்கு என்ன பலன் ஏற்பட்டது?
 5. ஏற்கெனவே உள்ள விசயங்களைத் தொகுத்து வீடியோ போடுவதால் இந்த்துத்துவ வாதிகள், திராவிடத்துவ வாதிகளை விட சிறந்து விட்டார்களா?
 6. தமிழகத்தில் அத்தகைய பிரச்சாரம் எடுபடவில்லை, சட்டரீதியிலும் சிறக்கவில்லை, மாறாக வைகோ எம்பி ஆனது தான் நிதர்சனம்!
 7. இப்பொழுது மாணவர்களுக்குத் தேவை படிப்பு, படிப்பில் தேர்ச்சி, தேர்ச்சியில் அதிக மதிப்பெண், வேலை, திருமணம், வாழ்க்கையில் செட்டில் ஆவது!
 8. சித்தாந்தம், சித்தாந்த மறுப்பு, சிந்தாந்த கண்டனம் முதலியன பிஜேபி-கார்ட் ஹோல்டர்களுக்குத் தேவை, மாணவர்களுக்கு அல்ல!
 9. தமிழகத்தைப் பொறுத்த வரையில், புரையோடியிருக்கும் ஊழலை ஒழிக்க வேண்டும், அதுதான், எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறது!
 10. ஊழலை எதிர்த்து பிரச்சாரம் செய்யாமல், சமசரம் செய்து கொண்டு, மாணவர்களை குறி வைப்பது வியாபாரமே தவிர, அவர்களுக்கு நல்லது செய்வதல்ல!

          வேதபிரகாஷ்
13-07-2019

Suki sivam, Nellai kannan, vairamuthu, kamal etc-Parppaniyam

வேண்டிய நண்பர்கள் இப்படி கருத்தைத் தெரிவித்தனர்: என்னுடைய கருத்திற்கு, ஆதரித்தும், எதிரித்தும் இவ்வாறு பதில்கள் வந்தன:

 • பிரச்சாரம் செய்வது அனைவருக்காகவும் தான். குறிப்பாக இளைய சமுதாயமான இளைஞர்கள் தெரிந்து கொள்வதில் நீண்டகால பயனளிக்கும் திட்டம். இதில் என்ன தவறு? யாராவது பூனைக்கு மணிகட்ட வேண்டும். தைரியமாக மாரிதாஸ் கட்டுகிறார். இதையும் குறை கூறினால் என்ன செய்வது?
 • மாணவர்களை தவறாக வழிநடத்த ஒரு வெறிநாய் கூட்டம் அலையும் போது நல்வழிகாட்டுவது தவறில்லை என்பது மட்டுமல்ல தற்போதைய தேவையும் என்பதே என் கருத்து. மேலும் மாரிதாஸ் கூறுவது அனைவருக்குமே தான்.
 • மாணவ பருவத்தில் அரசியலில் ஈடுபடுவதே தவறு. அவர்கள் பாட சிலபஸ்ஸில் ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு பிறகு அரசியலை ஒரு பாடமாக வைக்கலாம். கல்வி கூடங்களில் மாணவர் சங்கம் என்பதை தவிர்க்க வேண்டும். காரணம் அதில் அரசியல் கட்சிகள் தலையீடு இருக்கிறது. பெற்றோர் – ஆசிரியர் சங்கம் இருப்பதுபோல் மாணவர் – ஆசிரியர் சங்கம் இருக்கலாம். அதில் மாணவர்களின் representatives இருக்கலாமே தவிர தலைவர் என்றும் செயலர் என்றும் இருக்ககூடாது. இது ரவுடி மாணவர்கள் உருவாவது தடுக்கப் படும் மற்றும் ஒழுக்கம் இருக்கும்.
 • நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் உறுப்பினராகி தீவிரமாக ஈடுபடுதல் தேவையில்லை.

ஒரு பெண்மணி கூட தினமும், எல்லா விவகாரங்கள் பற்றி வீடியோ போட்டு வருகிறார். ஆனால், அவர் தா பிஜேபி என்று ஒப்புக் கொண்டார். அதோடு, அதை விட்டு விட்டேன். ஏனெனில், அரசியல் ரீதியில் செல்லும் போது, இவ்விவகாரங்களில் நுழைய எனக்கு விருப்பமில்லை.

Suba.veerapandian reaction to Parppaniyam

மாரிதாஸ் தாக்குதலுக்கும், திதிமுககம்யூனிஸ்டுகள் தாக்குதல்களுக்கும் என்ன சம்பந்தம்?: இப்பொழுது, மாரிதாஸ் வீடியோக்களை மையமாக வைத்துக் கொண்டு, திக-திமுக-கம்யூனிஸ்ட் மற்ற உதிரிகள், இந்துமதத்தை தாக்க ஆரம்பித்துள்ளனர். அது அப்படியே பார்ப்பன எதிர்ப்பு என்ற ரீதியில் திரும்பியுள்ளது. “இந்து மக்கள் எங்கள் மக்கள் அதில் எந்த சிக்கலும் இல்லை, திராவிடம் என்ற போர்வாளை எடுப்போம்,  பார்ப்பனீயத்தை வேருடன் அறுப்போம்,” என்று சுப.வீரப் பாண்டியன் சொல்லும் போது, தாக்கப் பாடுவது, தாக்கப் படப் போவது எது? பார்ப்பனீயம், பிராமணியம் ஒன்றா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

 1. பார்ப்பனியம் என்றால் என்ன? என்று அகமது பக்ரூதீன், மாநில அமைப்புச் செயலாளர் விசிக! விளக்க வேண்டிய அவசியம் என்ன?
 2. அப்படியென்றால், ஏதோ ஒரு பார்ப்பான் அல்லது பிராமணன், இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமா?
 3. இந்துக்கள், இந்துக்களின் உரிமைகளை பார்பனீயம் பறித்துள்ளது என்ற சுப.வீரபாண்டியனின் கண்டிபிடிப்பு!
 4. இதற்கு, இந்துத்துவம் பார்ப்பனீயர்களின் உரிமைகளை பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா இல்லை, பார்பனீயத்தின் உரிமைகளை இந்துத்துவம் பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா?
 5. சம்பூகன் கட்டுக்கதையை இந்துத்துவ வாதிகள் உண்மை என்று வாதிக்கின்றனர், தீனிப் போட்டு வருகின்றனர்! எச்சரித்தும் கேட்கவில்லை! சுப.வீரப்பாண்டியன் போன்ற
 6. பஸ்மாசுரர்கள் கைவைத்துள்ளனர்! ஆக சூட்டை உணர்வது இந்துக்களா, இந்துத்துவ வாதிகளா, பார்ப்பனர்களா, பிராமணர்களா? யார் யார்?

Suba.veerapandian reaction to Parppaniyam with Sambuka episode

மாரிதாஸ் தாக்குதலுக்கும், பார்ப்பன்பிராமண தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம்?: அரசியல் ரீதியாக, மாரிதாஸுக்கும் திக-திமுக-கம்யூனிஸ்டுகள்-பெரியாரிஸ்டுகள்-அம்பேத்கரைட்டுகள் முதலியோருக்கும் சச்சரவு என்றால், அதில் பார்ப்பனர்-பிராமணர் என்று சொல்லிக் கொண்டு அவர்களது தலைகளை உருட்டுவதேன்?

 • 1930களில் பிரமாணர் அல்லாத இயக்கம்,
 • 1940களில் பிராமண எதிர்ப்பாகி,
 • 1950களில் பார்ப்பன துவேசமாகி,
 • 1960களில் பூணூல்கள் அறுக்கப் பட்டு,
 • 1970களில் வார்த்தைத் தீவிரவாதங்களில் வறுக்கப் பட்டு,
 • 1980களில் அடிக்கப் பட்டு
 • 1990களில் வெட்டப் பட்டு,
 • 2000களில் அசிங்கப் படுத்தப் பட்டு.
 • 2010களில் பன்றிக்கு பூணூல், பூணூல் அறுப்பு முதலியவையாகி
 • 2020களில், மறுபடியும் வேரறுப்போம் என்று முடிந்துள்ளது.

Why Brahmins are targeted for all debates, issues etc, pande

பிராமணர்களுக்கு எச்சரிக்கை: இப்படி பேசப்படும்போது, பிராமணர்கள் தாக்கப்படுவது நோக்கத்தக்கது.

 1. ஆகவே, முன்பே குறிப்பிட்டபடி, இதனால் மறுபடியும் சில குடுமிகள், பூணூல்கள் அறுக்கப்படலாம்.
 2. அயோத்யா மண்டபத்தின் பிராமணர்கள் தாக்கப்படலாம் அல்லது மீது பெட்ரோல் குண்டு எரியப்படலாம்.
 3. ராகவேந்திர மடங்களில் விக்கிரங்கள் உடைக்கப் படலாம்.
 4. அவர்களும் பேச்சிற்கு திகவினருக்குப் பதிலாக பெரியார்-திக என்று யாரையாவது கைது செய்து விஷயத்தை அமுக்கிவிடலாம்.

Brahmins disparaged as dogs by DMK Bharathy and others

ஆனால், உலகத்தில், இப்படி பிராமணர்கள், “பிராமணர்கள்” என்ற ஒரே காரணத்திற்காக திட்டப்படுவது, அவமானம் செய்யப்படுவது, தாக்கப் படுவது, பெண்கள் இழிவுப் படுத்தபடுவது, ஊடகங்கள் கேவலப்படுத்துவது, ஆட்சியளர்கள், அதுவும் முதல் மந்திரி, மற்றவர்கள் அவதூறு பேசுவது போன்றவை, வேறெங்கும் நடக்காது என்பது நிச்சயமே. ஆகவே, ஏன் பிராமணர்கள் இவ்வாறுத் தாக்கபடுகிறர்கள்? அவ்வாறு தாக்குபவர்களின் மனோநிலை என்ன? மனோதத்துவம் என்ன? இல்லையென்ற பிறகும், இருக்கிறது என்று இனவெறியை மனத்தில் ஏற்றிக் கொண்டு, “பார்ப்பனீயத்தை எதிர்ப்போம்” என்ற சித்தாந்தத்தின் முகமூடியில் ஜாதிவெறியை வைத்துக் கொண்டு இவ்வாறு உலா வருவது ஏன்?

© வேதபிரகாஷ்

13-07-2010

Parppaniyam caught between dravidatvam and hindutwam-suba veerapandian