Archive for the ‘இந்து அவமதிப்பு’ Category

குன்றக்குடி அடிகள்-ஈவேரா பெரியார்: ஆத்திக-நாத்திக கூட்டா, இந்து-இந்துவிரோத மோதலா, அரசியல் சமரசமா? (3)

ஒக்ரோபர் 6, 2020

குன்றக்குடி அடிகள்-ஈவேரா பெரியார்: ஆத்திக-நாத்திக கூட்டா, இந்து-இந்துவிரோத மோதலா, அரசியல் சமரசமா? (3)

ஈவேரா கருணாநிதிக்கு சிலை வைக்க விரும்பியது, குன்றக்குடி ஒப்புக் கொண்டது (1971), 1975ல் தானே திறந்து வைத்தது: அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. 24-01-1971 அன்று சேலம் மூடநம்பிக்கை ஊர்வலத்தில் ஈவேரா பவனி வந்தார். திகவினர் ராமர், சீதை, சிவன், பார்வதி, முருகன் என்று எல்லா கடவுளர்களின் சித்தரன்களும் ஆபாசமாக வரையப் பட்டு ஊர்வலத்தில் எடுத்துச் சென்றனர். அடிகள் என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார். அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர்.

விநாயகர் சிலை உடைத்தவன் ஆணைக்குக் கட்டுப் பட்டு, இந்துவிரோதிக்கு, உயிருள்ள போதே சிலை வைத்து, திறந்து வைத்த சைவ மடாதிபதி: சிலை உடைத்தவனுக்கு அடிகள் மரியாதை செய்வது, ஆதரவு தெரிவிப்பது முதலியன முரண்பாடுள்ள காரியங்கள் தாம். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார்.  1971ம் ஆண்டு ஈவேரா  கலைஞருக்கான சிலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கினார். சிலை அமைக்கும் குழுவின் புரவலராக அவர் இருந்தார். தலைவராக குன்றக்குடி அடிகளார் இருந்தார். இதுவும் சைவ மடாதிபதிக்கு உகந்தது அல்ல. துணைத் தலைவராக இன்றைய திக தலைவர் வீரமணி. 1975ல் கருணாநிதியின் சிலை மசூதிக்கு முன்பாக, அவர் ஆட்சியில் இருக்கும் போதே, ஜெனரல் பாட்டர்ஸன் – மவுண்ட் ரோடு சந்திப்பில் வைக்கப் பட்டது. அப்பொழுதே “உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பதா, விக்கிரங்களை / சிலைகளை எதிர்ப்பவர், தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதா, இதனால், தீமை ஏற்படும்……….,” போன்ற பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப் பட்டன. ஆத்திகரான, கடவுளை நம்பிய குன்றக்குடி அடிகள், நாத்திகரான-இந்துவிரோதியான, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்! இதிலிருந்தே, அவரது இந்துத் தன்மை கேள்விக்குறியானது.

அடிகளின் காமகோடி மடாதிபதி பற்றிய குழப்பம்: அனைவரும் அர்ச்சகராகலாம் மற்றும் தெய்வீகப் பேரவை விசயங்களில், காஞ்சி காமகோடி என்று குறிப்பிடும் போது, குழப்பத்துடன் இருந்த நிலை வெளிப்படுகிறது. அடிகளாரின் காலம் (1925-1995), ஆகவே இவர் காமகோடி மடாதிபதிகள் பற்றி குழம்பி இருக்கிறார் அல்லது நூல்களைத் தொகுத்தவர் குழம்பி இருக்கிறார் என்று தெரிகிறது. இல்லை பிரச்சினையை திசைத் திருப்ப விரும்புகின்றனர் போலும். 1940-1970 காலங்களில் ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி மிகவும் மதிப்புக்குரிய மடாதிபதியாக இருந்தார். பல அயல்நாட்டு அரசர்கள், அரசிகள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள் என்று வந்து பேட்டி கண்டு சென்றனர்.  “புதியவர்” வந்த பிறகு இடைவெளி அதிகமாகியது, என்று குறிப்பிடும் போது அந்த குழப்பம், முரண்பாடு வெளிப்படுகிறது. ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி (1894-1994) மற்றும் ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி (1935-2018) காமகோடி மடாதிபதிகளாக இருந்தனர். முன்னர் ஶ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி-V, 1907ல் மடாதிபதி ஆனாலும், ஏழு நாட்களில் காலமானதால், ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி பட்டத்திற்கு வருகிறர். 1907லிருந்து 1994 வரை ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி மடாதிபதியாக இருந்தார். 1994ல் தான் ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி மடாதிபதி ஆனார். ஆகவே, “புதியவர்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. இவர்களுக்குள் இருக்கும் குழப்பம் அடிகளின் எழுத்துகளில் தெரிகிறது.  ஆக மொத்தம் பார்ப்பன-எதிர்ப்பு, இவ்வாறு வேலை செய்தது திண்ணம்.

சுவதேசி விஞ்ஞான இயக்கத்தையும் திராவிடத்துவம் பாதித்தது: அடிகளே குறிப்பிட்டுள்ளது, “கை.இ.வாசு என்ற சிறந்த விஞ்ஞானி; காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் அவர் இயக்குநராகப் பணி செய்யும்போது சுதேசி விஞ்ஞான இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தில் நமக்குப் பொறுப்பு ஏற்படுத்தித் தந்தார்,” என்று கே.ஐ.வாசுவைக் குறிப்பிட்டுள்ளார். குன்றக்குடி தொகுப்பு நூலில்[1], “குன்றக்குடிக்கு அருகிலுள்ள காரைக்குடியில் மத்திய அரசின் மின்வேதியியல் ஆய்வுநிறுவனம் ஒன்று உள்ளது. அந்நிறுவனத்தை அடிகளார் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டார். அடிகளாரை அந்நிறுவனம் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டது. அந்நிறுவனத்தின் அறிவியல் உதவியைக் கொண்டு சுதேசி அறிவியல் இயக்கம் (சுதேசி விஞ்ஞான இயக்கம்[2] என்று ஒரு இயக்கத்தையே தோற்றுவித்தார் அடிகளார். அவ்வியக்கத்தைப் பல்கலைக்கழகங்களின் அரங்குவரை கொண்டு சென்றார் அடிகளார்.” சுவதேசி விஞ்ஞானத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றத்தில், ஒரு மாத இதழையும் ஆரம்பித்தார். அப்பொழுது பாரத விஞ்ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. ஆனால், நாட்கள் செல்ல-செல்ல அதன் போக்கும் மாறியது. அதாவது, திக-திமுக உறவுகளினால், அத்தகைய பழங்கால விஞ்ஞான போற்றுதல் போன்றவை நிறுத்தப் பட்டன. இதனால், கே.ஐ.வாசு போன்ற விஞ்ஞானிகள் காரைக்குடியை விட்டு, பெங்களுருக்குச் சென்று, அங்கு, “சுவதேசி விஞ்ஞான அந்தோலன்,” என்று ஆரம்பித்து, இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் பற்றிய மாநாடுகளை நடத்தி வருகின்றனர்[3]. அடிகளார் ஏப்ரல் 15, 1995ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

மூலங்கள், இரண்டாம் தர-மூலங்கள், சரிபார்க்க முடியாத ஆவணகள் முதலியவை அடிகள்-பெரியார் பற்றி உண்மை அறிய முடியவில்லை: சமீப கால தலைவர்களை 60-90 வயதானவர்கள் நன்றாகவே கவனித்துள்ளனர், அவர்களது பேச்சுக்களைக் கேட்டுள்ளனர்,  செய்திகளை வாசித்துள்ளனர், எழுத்துகளைப் படித்துள்ளனர். ஆனால், இப்பொழுது, அவர்களைப் பற்றிய  உண்மைகளை சொல்லாமல், ஏதோ மாயாஜால கதைகள் போன்று, போற்றி பாராட்டி, புதிய வர்ணனைகளை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  10-20 படங்களை சேர்த்து, வீடியோ எடுத்து, புதிய கதைகளை உருவாக்குகின்றனர். இதனால், உண்மைகளை மறைத்து விடலாம் அல்லது அத்தகைய புதிய புனைவுகளினால், புதிய கட்டுக்கதைகளை உருவாக்கலாம், ஆனால், சுலபமாக அவற்றின் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளலாம். இப்பொழுது, எழுதுகின்ற சரித்திரம், கதைகள் எல்லாமே ஒரு தரப்புடையதாக இருக்கிறது. திராவிடத்துவ தலைவர்களைப் பற்றி, அவர்களே எழுதுவது, புத்தகங்களாகப் போட்டு சுற்றில் விட்டுள்ளது என்றுதான் உள்ளனவே தவிர, அவர்களது டைரிகள், எழுத்துகள், ஆவணங்கள் முதலியவற்றை பொது மக்களுக்கு, குறிப்பாக ஆய்ச்சியாளர்களுக்குக்கூட, முழுமையாகக் காட்டப் படுவதில்லை. இரண்டாம் தர-மூலங்களை விட தாழ்ந்த, சர்பார்க்க முடியாத, ஆவணங்கள், ஆவண நகல்கள் முதலியவை காட்டப் படுகின்றன. எழுத்தாளர்-ஆராய்ச்சியாளர்களும் மறுபக்கம் உள்ள ஆவணங்களை பார்ப்பது, சரி பார்ப்பது, விசாரிப்பது கிடையாது. இன்று இருக்கும் திராவிடத்துவ தலைவர்களின் மகன், மகள், மறுமகன், மறுமகள், பேரன், பேத்தி மற்ற உறவினர்கள் கூட உண்மையினைக் கூரத் தயங்குகின்றனர், ஏன் அஞ்சுகின்றனர், அதனால், உண்மையினை மறைக்கவே செய்கின்றனர். அவ்வாறு மற்ற மூலங்களை சரிபார்க்கும் போது, உண்மை தெரிய வருகின்றது.  இதனால் தான், இன்று ஈவேரா-பெரியார் பற்றி ஆராய்ச்சிகள் அவரது நடவடிக்கைகள், சித்தாந்தம் உதலியவற்றைக் கேள்விக் குறிகளாக்குகின்றன.

அடிகளாரால் திராவிட நாத்திகத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை, மாறாக அவர்களுடன் ஒத்துழைத்தார்: ரங்கநாதன், ரங்கநாத பிள்ளை, கந்தசாமி தம்பிரான், “ஶ்ரீலஶ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,” குன்றக்குடி அடிகள், குன்றக்குடி அடிகளார் அவர்களின் எழுத்துகள் 16 புத்தகங்களாகத் தொகுக்கப் பட்டுள்ளன. பெரியாரின் எழுதுகள், பேச்சுகள் முதலியனவும் தொகுக்கப் பட்டுள்ளன. ஆனால், இரண்டையும் குறிப்பிட்ட ஆண்டு நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, முரண்பாடுகள் காணப்படுகின்றன. அதிலும் இந்த அடிகள்-பெரியார் விவரிப்புகளில், ஏதோ இருவரும் ஒன்றாக செயல்பட்டனர் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கினாலும், பொது மக்களுக்கு அறியப்பட்ட நிகழ்வுகள் ராமசாமி நாயக்கர் ஈவேராக இருந்த போதிலும், பெரியாக மாறியபோதும், இந்து-எதிர்ப்பு, இந்த்-காழ்ப்பு, இந்து-துவேசம் முதலியவை மாறவில்லை. அடிகளாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அண்ணாவிடம் எவ்வளவு கெஞ்சினாலும், அப்பர் சிலை வைக்க முடியவில்லை. கருணாநிதி காலத்திலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால், பள்ளிகள் என்று உருவாக்கி, வேறு வழியில் திரும்பினார். இருப்பினும், அவர்களுடைய சகவாசத்தினால், இந்துமதம் தாக்கப் படாமல் இருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அருள் நெறித் திருக்கூட்டம், தெய்வீகப் பேரவை என்றெல்லாம் துவக்கப் பட்டாலும், திராவிட நாத்திகத்தை எதிர்க்காமல், அதனுடன் சேர்ந்து போனதால், மற்றவர்கள் நம்பவில்லை. அதனால், அவை செயலிழந்தன.

© வேதபிரகாஷ்

05-10-2020


[1]  குன்றக்குடி அடிகள், குன்றக்குடி அடிகளார் நூல்வரிசைபொது, தொகுதி.13, பக்கம்.17

[2] அறிவியல் தமிழை வளர்க்கும் விதத்திலும், நவீன விஞ்ஞான ஆய்வுகளை தமிழுக்கு கொண்டு வரும் வகையில், சுதேசி விஞ்ஞான இயக்கம் தமிழகத்தில் செயல்படுகிறது.குன்றக்குடி அடிகளார் இதனை தொடங்கினார். காரைக்குடியில் மைய மின் வேதியியல் ஆய்வகத்தில் இதன் அலுவலகம் உள்ளது. “அறிக அறிவியல்’ என்னும் பத்திரிகையையும் “சுதேசி விஞ்ஞான இயக்கம்’ செயல்படுத்துகிறது.அறிவியல் தொடர்பான கருத்தரங்குகளையும் சுதேசி விஞ்ஞான இயக்கம் நடத்துகிறது.

[3]  கே.வி.ராமகிருஷ்ண ராவ், கே.ஐ.வாசுவிடமிருந்து பெற்ற விவரங்களிலிருந்து, அந்நிலை அறியப்படுகிறது. சித்தாந்தம் எவ்வாறு எல்லாவற்றையும் பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மஹாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு தேவை, ஆனால், தமிழக-விசுவாசிகளுக்கு வேண்டாம்! (1)

ஒக்ரோபர் 3, 2020

மஹாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு தேவை, ஆனால், தமிழக-விசுவாசிகளுக்கு வேண்டாம்! (1)

This photo is of an Australian artist who dressed up as Gandhi in 2012 for charity show in Sydney.

காந்தி பிறந்த நாள் அன்று காந்தி தூஷணங்கள்: வழக்கம் போல, அக்டோபர் 2, 2020 மஹாத்மா காந்தி ஜெயந்தி என்றதும், சமூகவலைதளங்களில், காவிகள், இந்து போராளிகள், இந்துத்துவ வாதிகள், கோட்சே பக்தர்கள் என்று கூறிக் கொண்டு, பிரகடனப் படுத்திக் கொண்டு, பலவித வகையறாக்கள், தூஷணத்தை ஆரம்பித்து விட்டன. வழக்கம் போல, பொய்யான, போடோ-ஷாப் செய்த புகைப்படங்களை வைத்து, அத்தகைய வெறுப்புப் பிரச்சாரம் துவங்கியது. “காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள்,” என்று ஒருவர் ஆரம்பித்தார்[1]. உடனே அதை வைத்துக் கொண்டே, ஒரே கலாட்டா செய்தனர்[2]. “தலைப்பே விஷமத் தனமானது. இதெல்லாம் தெரிந்த விசயங்கள் தான். காந்தியின் அதிகார வெப்சைட்டிலேயே அத்தகைய புத்தகங்கள் உள்ளன, டவுன்லோன் செய்து கொள்ளலாம். அதை தமிழில் போட்டதனால், ஏதோ கண்டு பிடித்து விட்டது போல பிரமிப்பை ஏற்படுத்துவது முட்டாள் தனம். மேலும், மற்ற தலைவர்கள் காந்தி போல இவ்வாறு பதிவு செய்ய தைரியம் உள்ளதா? விவரங்கள் தாராளமாக உள்ளன. ஆகவே, ஒருவரை தூஷிக்க வேண்டும் என்று தலைப்பிட்டு எழுதுவது சரியில்லை!,” இப்படி நான் பதில் பதிவு செய்த போது, அந்த கோஷ்டிகள் என் மீது பாய்ந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், எதிரும்-புதிருமாக இருக்கும் கோஷ்டிகள் தான், இவ்விசயத்தில் ஒரே மாதிரி தூஷிக்கின்றன[3]. இவை இந்து-ஆதரவு மற்றும் இந்து-விரோத கும்பல்களாகவும் இருக்கின்றன[4]. இனி, வீ.சண்முகநாதன், முன்னாள் மேகாலயா கவர்னர், ஆர்.எஸ்.எஸ் தலைவர் அவர்களின் கட்டுரையைப் பார்ப்போம்.

இப்போதும் தேவை காந்தி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன், “இப்போதும் தேவை காந்தி,” என்ற தலைப்பில், இவ்வாறு எழுதியுள்ளார்[5], ‘மஹாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு, 1915ம் ஆண்டு திரும்பினார். குஜராத்தில், சபர்மதி என்ற இடத்தில் ஆசிரமத்தை நிறுவினார். எளிய இயற்கை வாழ்வை மேற்கொண்டார். மானுடர்களுக்குள் பேதம் இல்லாத வாழ்வை நடைமுறைப்படுத்த முயன்றார். கடுமையான விரதங்கள் மூலம் சுய கட்டுப்பாடுடன் வாழ்ந்தார். பெருந்தன்மையுடனும், பொறுமையுடனும், அர்ப்பணிப்பு மனத்துடனும், தொலைநோக்குப் பார்வையுடனும், கருணையுடனும், அன்புடனும், எளிமையுடனும் மக்களை அணுகினார்.


சத்யாகிரஹம், சம்பாரண் இயக்கம்[6]: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், கடந்த, 1917ம் ஆண்டு, பீஹாரில் சம்பராண் மாவட்ட விவசாயிகளின் நிலை, காந்தியின் கவனத்துக்கு வந்தது. அவுரியில் துவங்கிய அறப்போர் – சம்பராண் மாவட்டத்தில், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான, அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பயிர்களைப் பயிரிட முடியவில்லை. பிரிட்டிஷ் அரசால் அவுரி முதலான பணப்பயிர்களை பயிரிடக் கட்டாயப் படுத்தப்பட்டனர். இதனால் அவர்களுக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை; பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மேலும் அவுரிப் பயிரை மிகக் குறைந்த விலையில் அரசு ஆதரவு பெற்ற பண்ணையாளர்களுக்கு விற்க, விவசாயிகள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர். விவசாயிகளின் துன்பங்களை பொருட்படுத்தாத காலனி அரசு, அவர்கள் விற்கும் அவுரி மீது மேலும் பல வரிகளை விதித்தது. விவசாயிகள் மனம் உடைந்து காணப்பட்டனர்.இதை அறிந்த உடனே, ராஜேந்திர பிரசாத், பிரஜ் கிஷோர், நாராயண சின்ஹா போன்ற வழக்கறிஞர்களுடன் சம்பராண் சென்ற காந்தி, சம்பராண் போராட்டத்தை, வரி கொடா இயக்கமாக மாற்றி அமைத்தார். சம்பராணில் ஆசிரமம் ஒன்றை நிறுவிய காந்தி, அப்பகுதியில் இருந்த கிராமங்களுக்கு சென்று, மக்களின் குறைகளைக் கேட்டார்.


பஞ்சமும், வரிகொடா இயக்கமும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், அப்பகுதி மக்களை, அரசுக்கு வரி கொடுக்காமல், தங்கள் எதிர்ப்பை அறவழியில் காட்டுமாறு ஊக்குவித்தார். மேலும் அவ்வூரின் பள்ளிக் கூடங்களையும், மருத்துவமனைகளையும், சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார். இதனால் காந்தி மீது நம்பிக்கை கொண்ட மக்கள், அவர் வழிகாட்டுதலின்படி, வரி கொடுக்க மறுத்தனர். மக்களிடையே கலகத்தைத் துாண்டினார் என்று குற்றம் சாட்டி, காந்தியை சிறையில் அடைத்தது, பிரிட்டீஷ் அரசு. ஆனால், வரி கொடாப் போராட்டம் மேலும் வலுப் பெற்றதால், அவர் விடுவிக்கப்பட்டார். போராட்டக்காரர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பண்ணையாளர்கள், விவசாயிகளுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி, பஞ்ச காலம் முடியும் வரை வரி வசூல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின் வெற்றியின் போது தான், காந்தி முதன் முதலில், ‘பாபு’ என்று அழைக்கப்பட்டார். சம்பராண் போராட்டத்தில் இருந்த நேர்மையும், துணிவும், எளிமையும் அவரை தேசம் முழுதும் ஒரு புதிய சக்தியாக அறிமுகப்படுத்தியது. இந்தியா முழுதும் ரயிலில், அதுவும் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், மெலிந்த உடலுடன் வெளியே வந்து வாசலில் நிற்பார். கருணை மிக்க கண்கள். ஒரு பாவமும் அரியாத, கள்ளங் கபடமற்ற சிரிப்பு. மக்களை நோக்கிக் கும்பிடுவார்.இந்தத் தோற்றமே இந்தியா முழுதும் பரவியது.


காந்தி ஏழைகளுக்காக வாழ்ந்தார்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், காந்தி, வசதிகளை எல்லாம் துறந்தார். ஏழைகளின் நலனுக்காகவே வாழ்ந்தார். அந்தக் கருத்தே இந்தியாவை, காந்த சக்தி போல் கவர்ந்து இழுத்தது. காந்தியின் போராட்டம், ஒரே சமயம் சத்யாகிரஹமாகவும், சுய சீர்திருத்தமாகவும் அமைந்திருந்தது.காந்தியப் போராட்டங்கள், கோடான கோடி மக்களை ஒரு பொது இடத்துக்கு கொண்டு வந்தது. ஜாதி, மொழி, மதப் பாகுபாடுகள் கொண்ட மக்களிடையே பரஸ்பர புரிதலும், அறிமுகமும், நட்பும் மலர்ந்தது. காந்தி, வேறுபாடுகளைப் போக்கி, அனைவரிடமும் சமரசப் போக்கை ஏற்படுத்தினார். ஓரளவு இளமையில் ஆடம்பர வாழ்க்கை முறையில் வளர்ந்திருந்தாலும், பிரிட்டிஷ் சட்டம் பயின்றிருந்தாலும், அவர் தன்னை, ஏழை மக்களோடு அடையாளப்படுத்திக் கொண்டார்; அவர்களிடம் இரக்கம் கொண்டார். அவர்களைப் போலவே ஆடை அணிந்தார். 1917க்குப் பின், மண் குடிசையில் வாழ்ந்தார். ஒடுக்கப்பட்ட, வறுமையில் வாடும் மக்கள் மீது, காந்தி கருணை காட்டி வந்தார். மிகச் சிறிய பொருட்களை, மிகப்பெரிய அரசியலுக்கு காந்தி பயன்படுத்தினார். சிறிய கைராட்டை மூலம் சுதந்திரம் அடைய முடியும் என்றார். அதில் சுயசார்பு, கூட்டுச் செயல்பாடு, தேசிய எழுச்சி அடங்கியுள்ளது என்று கூறினார்.ரவுலட் சட்டம் மற்றும் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு எதிராக, ஒத்துழையாமை இயக்கத்தை, 1922ல், காந்தி துவக்கினார். அன்னியத் துணிகளை பகிஷ்கரிக்கும் போராட்டமும் காட்டுத் தீ போல பரவியது. காந்தி நடத்திய இந்தப் போராட்டம், ஆங்கில அரசுக்கு எதிராக மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.கடந்த, 1930ல், பிரிட்டிஷ் அரசு, மக்கள் உபயோகிக்கும் உப்புக்கும் வரி விதித்தது. இதை ஏற்க மறுத்த காந்தி, ‘எங்கள் சொந்த பூமியில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா…’ என்று கூறி, சத்யாகிரஹ முறையில் எதிர்த்துப் போராட அறைகூவல் விடுத்தார்.

உப்பு சத்யாகிரஹம்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், அதன்படி, 1930 மார்ச், 2ல், ஆமதாபாதிலிருந்து, 300 கி.மீ.,யில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். 23 நாள் பயணத்திற்குப் பின் தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்புக் காய்ச்சி, ஆங்கில சட்டத்திற்கு எதிராக வினியோகித்தார். இந்த நிகழ்வு, தமிழகத்தின் வேதாரண்யம் உட்பட, இந்தியா எங்கும் பல இடங்களில் பரவியது; போராட்டம் தீவிரம் அடைந்தது. காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை ஆங்கில அரசு கைது செய்து, சிறையில் அடைத்தது. ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல், காந்தியுடன் பேச்சு நடத்தி, உப்பு வரியை நீக்கியது.கடந்த, 1942 ஆகஸ்ட், 8ல், ஆங்கில அரசுக்கு எதிராக, ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி அறிவித்தார். ஆங்கில ஆட்சிக்கு எதிராக, நம் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அன்னியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்யாகிரஹம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என, பல போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தினார். எல்லாப் போராட்டங்களிலும் அஹிம்சை எனும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தைக் கடைப்பிடித்தார்.


சிறையில் பெண்கள்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், காந்தியை நம்பி லட்சக்கணக்கில் எளிய நடுத்தர வர்க்க மக்கள், அலை அலையாக ஆர்த்தெழுந்தனர். லட்சக்கணக்கான பெண்கள் சிறைக்குச் சென்றனர். வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த பெண்கள், காந்தியின் அழைப்பிற்காக வீதிக்கு வந்து போராடினர். உயர்ந்த ஜாதி உணர்வுடன் வாழ்ந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்களின் சேரிகளுக்குச் சென்று வாழ்ந்தனர்; அவர்கள் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய முன்வந்தனர்.காந்தியின் மன உறுதியையும், அஹிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆகஸ்ட், 15ல், இந்தியா சுதந்திரம் பெற்றது. நம் நாட்டிற்காக தன் உயிரையும் காணிக்கையாக்கிய காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள், உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியாச் சுவடுகள்.நம் தமிழகத்து பெருந்தலைவர் காமராஜர், காந்தியத்தைக் கடைப்பிடித்தவர். எளிமையாக, நேர்மையாக, தன்னலமற்ற தியாக உணர்வோடு கடைசி வரை வாழ்ந்தவர். அவர், காந்தி பிறந்த நாளில் கண் மூடினார். காந்தி, காமராஜருக்கு வழிகாட்டிய பெருந்தகை.


© வேதபிரகாஷ்

02-10-2020


[1]  பத்ரி சேஷாத்ரி, காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள், FRIDAY, AUGUST 29, 2008,

[2] http://www.badriseshadri.in/2008/08/blog-post_29.html

[3] விதை.2.விருக்ஷம், காந்தியின் மிரள வைக்கும் செக்ஸ் பரிசோதனைகள்!

August 2, 2014 by V2V Admin.

[4]https://www.vidhai2virutcham.com/2014/08/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/

[5] தினமலர், இப்போதும் தேவை காந்தி!, வீ.சண்முகநாதன், Updated : அக் 01, 2020 23:29 | Added : அக் 01, 2020 23:07. https://www.dinamalar.com/news_detail.asp?id=2624829.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2624829.

எனக்கு இந்தி தெரியாது போடா – பிஜேபி-இந்துத்துவ வாதிகள், திராவிடத்துவ வாதிகள் வீசிய வலையில் சிக்கிக் கொண்டது!

செப்ரெம்பர் 7, 2020

எனக்கு இந்தி தெரியாது போடா –  பிஜேபி-இந்துத்துவ வாதிகள், திராவிடத்துவ வாதிகள் வீசிய வலையில் சிக்கிக் கொண்டது!

 

வன்முறையாளர் போல வள்ளுவர் சித்தரிக்கப் படுவது: வள்ளுவர், திருவள்ளுவர், வள்ளுவப் பறையர் என்றெல்லாம் அழைக்கப் படுகின்றவர் இன்று தமிழ் தீவிரவாதி ஆகி விட்டார். எழுத்தாணியை, கத்தி மாதிரி பிடிக்கிறார். கண்கள் விரிய, கோரம் மிகுந்து, யாரையோ கொன்று விடுவேன் பாணியில் மிரட்டுகிறார்.  ஏ.கே.47ஐ கைகளில் திணிப்பது தான் பாக்கி. இத்தகைய வன்மத்துடன், இதுவரை வள்ளுவரை சித்தரித்த படத்தைக் கண்டிருக்க முடியாது. ஆனால், இந்து-எதிரிகள், இந்தி-எதிர்ப்புப் ஓர்வையில் இத்தகைய படங்கள் மற்றும் டி-சர்ட்டுகளை வெளியிட்டுள்ளனர். இந்துத்துவ வாதிகளுக்கு இந்நுணுக்கங்கள் புரியாது, ஏனெனில், இந்துத்துவ வாதிளே இதை பேஸ்புக் புரோபைலாக வைத்துள்ளனர்.  தாவள்ளுவர்ங்கள் வள்ளுவத்தையே கரைத்துக் குடித்து விட்டோம் என்ற மமதை வேறு.காவிக்குப் பதிலாக, கருப்பு வந்துள்ளது. ஆனால், விளம்பர  உபயம் செய்வது அவர்கள் தாம்! ஒன்றும் இல்லா விசயத்தை, பிஜேபியே அல்லது இந்த்துவ வாதிகளே ஊதி பெரிதாக்கி விட்டனர், இதனால், ஆதாயம், இந்தி-இந்து-இந்திய விரோதிகளுக்குத் தான்.  அவர்கள் விரித்த வலையில் வீழ்ந்தாகி விட்டது.

 

சித்தாந்த ரீதியாக எதிர்க்கத் தெரியாத பிஜேபி, இந்த்துவ வாதிகள்: பா.ஜ.க அரசு நாடு முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கை உள்பட அரசின் அறிவிப்புகள் ஒவ்வொன்றிலும் இந்தி – சமஸ்கிருத மொழித் திணிப்பை கையாண்டு வருகிறது. அதுமட்டுமல்லாது, இந்தியாவில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் மத்தியில் இந்தி பேசுபவர்களே இந்தியர்கள் என்கிற ரீதியில் தவறான கருத்தையும் பா.ஜ.க ஆதரவாளர்கள் விதைத்து வருகின்றனர். இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அவ்வப்போது தகுந்த பதிலடிகள் வழங்கப்பட்டு வருகின்றன, என்று இடதுசாரி சார்புடைய தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. பிஜேபி இதை சரியாக எதிர்கொள்ளாவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. ஆட்சி-அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற வகையில் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். 70 ஆண்டு கம்யூனிஸ, போலி சோசியலிஸங்களை சரிசெய்கிறோம் என்று கூட சொல்வதில்லை. அதாவது சோசியலிஸம் என்று கம்யூனிஸம் பாராட்டுவதை, பிஜேபிகாரர்களுக்குத் தெரியவில்லை.


இந்த ஒரு சிறிய விசயம் மேலிடம் வரும் செல்ல வேண்டிய அவசியம் என்ன?: இந்நிலையில், சமீபத்தில் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்ற தி.மு.க எம்.பி கனிமொழி இந்தி தெரியாது எனக் கூறியதற்காக “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது[1]. இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினரிடம் இந்தி ஆதிக்க எண்ணத்தை வெளிப்படுத்திய அதிகாரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்தனர்[2]. பலரும் தாங்களும் இதுபோல அவதிக்கப்பட்டதாக தங்கள் அனுபவங்களை கூறி வந்தனர். அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவங்களுக்கு விமானநிலையத்தில் நடந்ததைப் போன்ற அவமதிப்பு தனக்கும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தேசிய அளவில் பூதாகரமாக எதிரொலித்த நிலையில், அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை போலீசாருக்கு , இந்தி மொழி தெரியாதா ? என யாரிடமும் கேள்வி எழுப்பப் கூடாது என அழுத்தமான உத்தரவுகளைப் பிறப்பித்தது மத்திய மோடி அரசு. குறிப்பாக, பிரதமர் மோடியின் அலுவலக அதிகாரிகள் இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தனர். இதனையடுத்து அந்த விவகாரம் அமைதியானது என்று பிரச்சாரம் செய்கின்றன தமிழ் ஊடகங்கள். இதற்கே, பிஜேபி அரசு அக்கரையுடன் செயல்படுகிறது என்றால், ஒன்று திமுகவுடன் கூட்டு வைக்க திட்டம் இருக்க வேண்டும், இல்லை திமுகவைக் கண்டு பயப்படுகிறது என்றாகிறது.  இந்த அரசியல் நிதர்சனத்தை மறைக்க முடியாது.


சினிமாகாரர்கள், கூத்தாடிகளின் படத்திற்கு ஏன் பயப்பட வேண்டும், எதிர்-பிரச்சாரத்தில் இறங்க வேண்டும்?: இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ‘மெட்ரோ’ திரைபட கதாநாயகன் ஷிரிஷ் ஆகியோரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை யுவன் வெளியிட்டிருந்தார்[3]. அந்த புகைப்படத்தில், யுவன் அனிந்திருந்த டி-சர்ட்டில், I am a தமிழ் பேசும் indian என்றும் ஷிரிஷ் அனிந்திருந்த டிசர்ட்டில், ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகமும் அமைந்திருந்தது[4]. அவர்களைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் I am a தமிழ் பேசும் indian, இந்தி தெரியாது poda என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்தபடி புகைப்படத்தை பகிரத்துவங்கினர். பாக்கியராஜின் மகன் சாந்தனு, இவரது மனைவி கீர்த்தி உள்ளிடோர், இந்தி தெரியாது போடா , நான் தமிழ்ப் பேசும் இந்தியன் என்கிற வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ-சர்ட்டுகள் அணிந்து போஸ் கொடுத்து வருவதுடன் அதே டீ-சர்ட்டுகளை அணிந்து வலம் வரவும் செய்கிறார்கள்[5]. இதற்கிடையே , திரைப்பிரபலங்களின் இந்த பிரச்சாரத்தைக் கண்டு , இண்டர்ஸ்டிங் என ட்வீட் செய்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார் கனிமொழி[6]. இதனைப் பொறுத்துக்கொள்ளமுடியாத பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட மற்றும் இந்துத்வா கும்பல் இந்த கருத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யத் துவங்கினர். இதுவே தேவையில்லாதது . சினிமாகாரர்கள், கூத்தாடிகளின் படத்திற்கு ஏன் பயப்பட தேவையில்லை, முக்கியத்துவம் கொடுத்து  எதிர்-பிரச்சாரத்தில் இறங்க வேண்டிய அவசியமும் இல்லை.


ஹேஷ்டேக், ஹேஷ்டேக் ட்ரெண்ட் – இதை வைத்தா மக்க்கள் ஓட்டுப் போடப் போகிறார்கள்?: இதனால், ஆத்திரமடைந்த ட்விட்டர்வாசிகள் பாஜ.கவின் இந்தி திணிப்புக்கு பாடம் புகட்டும் வகையில், #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்[7]. இதனால் இந்திய அளவில் #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது[8]. அதேபோல், #TamilSpeakingIndian #HindiTheriyathuPoda #StopHindiImposition #Imaதமிழ்SpeakingIndian என்ற ஹேஷ்டேக்களும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன[9]. ஆக, தமிழ் அமைப்புகள் ஒரு திட்டத்துடன் செயல் படுவது தெரிகிறது. சமுகவளைதள நுணுக்கங்கள், கூட்டமாக உட்கார்ந்து கொண்டு வேலைசெய்யும் ஆட்கள், ஆலோசனை கூறும் நிபுணர்கள் எல்லோருமே, ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். அனைத்து இந்திய அளவில் டிரென்டைக் காட்டுகிறார்கள். ஆனால், பிஜேபி ஆட்கள் 500-1000 ஆட்கள் தான்,  இன்னும் பழைய எண்ணகளை வைத்துக் கொண்டு செயல் படுகின்றன. ஆளுக்கு ஆள் தான் பிரஷாந்த் கிஷோரரை விட பெரிய பிஸ்தா, நிபுணன் போல திட்டுவது, வசை பாடுவது முதலியவற்றை செய்து வருகிறார்கள்.

கனிமொழி மகிழ்ந்தது, உதயநிதி சேர்ந்து கொண்டது[10]: கனிமொழிக்கு இதில் சந்தோசமோ சந்தோசம். டுவிட்டரில், தீப்பொறி இப்ப காட்டுத் தீயாகி இருக்கிறது! என்று மகிழ்ச்சியில் தெரிவித்துள்ளது, உதயநிதி அதே டி-சர்ட்டைப் போட்டுக் கொண்டு படத்தை வெளியிட்டது முதலியவை பிரமாதமாக சுற்றில் உள்ளன[11]. ஆனால், பிஜேபியின் எதிர்-பிரச்சாரத்தை அவர்கள் பொருட்படுத்தவில்லை, யாரும் கண்டுகொள்ளவில்லை. மோசமாகத் திட்டுபவர்கள் திட்டாமல், தொழிற்நுட்பத்தை உபயோகித்து, மடக்குகிறார்கள்[12]. தினகரனின் சுருக்கமான செய்தி அதனைக் காட்டுகிறது[13]. அவர்களால் எல்லாமே முடிந்தும், மற்ற வழிகளில் மோதுகிறார்கள். “தமிழகத்தில் நாங்கள் இந்தியை கொண்டு வருவோம்,” என்று தள்ளப்படும் அளவிற்கு நிலையை உண்டாக்கியுள்ளனர். வானதி சீனிவாசனின் பேட்டி அதனைக் காட்டுகிறது, “மொழி திணிப்பு என்பதனை பாஜவும் எதிர்க்கத்தான் செய்கிறது,” என்றது வியப்பாக உள்ளது. அதற்கேற்றப் படி தான் பிஜேபி-இந்துத்துவ வாதிகளின் எதிர்-பதிவுகள், பிரச்சாரங்கள் உள்ளன. இது போன்ற விசயங்கள் வந்தால், ஏன் எல்லோரும் பிஜேபிக்கு எதிராகப் போகிறார்கள் என்பதை இந்துத்துவ வாதிகள் ஆராய்ச்சி செய்ய வேண்டும், எதிராளிகளைத் திட்டிக் கொண்டிருந்தால் ஒன்றும் பலனில்லை.

© வேதபிரகாஷ்

07-09-2020


[1] ஏசியா.நெட்.நியூஸ், இந்தி தெரியாது போடாட்விட்டரில் தெறிக்கவிடும் வைரல்பிரபலங்களும் களம் இறங்கியதால் பரபரப்பு..!…, By Asianet TamilChennai, First Published 6, Sep 2020, 9:00 AM…

[2] https://tamil.asianetnews.com/politics/i-dont-konw-hindi-hastag-viral-in-india-qg7wei

[3] கலைஞர் செய்திகள், இந்தி திணிப்பு : பா..கவுக்கு பாடம் புகட்ட ஹிந்தி_தெரியாது_போடா  ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்த தமிழர்கள்!, Premkumar, Updated on : 6 September 2020, 01:51 PM

[4] https://www.kalaignarseithigal.com/india/2020/09/06/twitter-trending-hashtag-hindi-theriyathu-poda-against-hindi-imposition-has-topped-the-list-in-india

[5] நக்கீரன், எனக்கு இந்தி தெரியாது போடா! “-தமிழ்த் திரை பிரபலங்களின் டீசர்ட் புரட்சி!, இரா.கலைச்செல்வன், Published on 06/09/2020 (22:48) | Edited on 06/09/2020 (23:00).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/i-dont-know-hindi-tamil-screen-celebrities-t-shirt-revolution

[7] பிபிசி.தமிழ், இந்தித் திணிப்புக்கு எதிராக இந்திய அளவில் டிரண்டாகும் ஹேஷ்டாக்யுவன்சங்கர் ராஜா படத்தால் தொடங்கியது, 6 செப்டெம்பர் 2020.

[8] https://www.bbc.com/tamil/india-54045906

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், தமிழ் பேசும் இந்தியன்.. இந்தி தெரியாது போடா” – இசையமைப்பாளர் யுவனின் வைரல் புகைப்படம், Anitha S, September 6, 2020

[10] செய்திபுனல், தீப்பொறி இப்ப காட்டுத் தீயாகி இருக்கிறது! மகிழ்ச்சியில் கனிமொழி, மதுவீரா, 07-09-2020, 10.34. AM.

[11] https://www.seithipunal.com/politics/mp-kanimozhi-tweet-about-hindi-theriyathu-poda

[12] தினகரன், டிவிட்டரில் டிரெண்டானஹிந்தி தெரியாது போடா, 2020-09-07@ 02:41:50

[13] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=615276

1960களில் திராவிடத்துவ பக்தர்கள் சுவரொட்டிகளுக்கு மாலைகள் அணிவித்தனர், பூசொரிந்தனர், இப்பொழுதும் முடிந்த அளவில் கிடைத்ததைக் கொண்டு பூஜிக்கின்றனர்! இதில் என்ன பிரச்சினை?

ஜூலை 31, 2020

1960களில் திராவிடத்துவ பக்தர்கள் சுவரொட்டிகளுக்கு மாலைகள் அணிவித்தனர், பூசொரிந்தனர், இப்பொழுதும் முடிந்த அளவில் கிடைத்ததைக் கொண்டு பூஜிக்கின்றனர்! இதில் என்ன பிரச்சினை?

How Anna statue garlanded, decorated 30-07-2020

1960களிலிருந்து தலைவர்களைப் போற்றும் திராவிடத்துவ பக்தர்களின் நிலை: 1960களிலிருந்து, சுவரொட்டிகளுக்கே மாலை போடுவது, பூசூடுவது, துணி/துண்டு அணிவிப்பது, அலங்காரம் செய்வது போன்றவை சாதாரணமான விசயங்களாக இருந்தது. குடித்து கலாட்டா செய்பவர்கள் அவ்வாறு செய்வர். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். தமாஷாகப் பார்ப்பர், ரசிப்பர், சென்றுவிடுவர். பூ விற்பவர்கள், விற்காமல் மீந்து போன, வாடிப்போன, கட்டியப் பூக்களை, வால்போஸ்டர்களுக்கு அணிவித்து செல்வர். பெரும் பாலும் ரிக்சாகாரர்களும் அவ்வாறு செய்வது உண்டு. அப்பொழுதெல்லாம், படங்களுக்கு மாலை போடுவது, பூசூடுவது, சொரிவது என்றால், இறந்தவர்களுக்குத் தான் செய்வது வழக்கம். ஆனால், அவர்களுக்கு ஈவேரா, அண்ணா என்றால் கடவுள் போன்றது தான். அந்த அளவுக்கு பக்தி, கும்பிடவும் செய்தார்கள். கற்பூரம் கொளுத்தி, தேங்காய் உடைத்ததும் உண்டு. அதனால், உயிரோடு இருப்பவர்களுக்கு செய்யாதே என்று கூட சொல்வது உண்டு. ஆனால் குடிகாரர்கள், ரிக்சாகாரர்களிடம் அந்த அறிவுரை செல்லாது. “டேய், சோமாறி, என் தலவனுக்கு போடுறேன், கஸ்மாலம், நீ யாரு என்ன கேட்க……..”, என்று, அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்! இப்பொழுது, 2020களில் சிலைக்களுக்கு அவ்வாறு மரியாதை செய்வதில், திராவிடத்துவ ரீதியில், எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை,

Saffron flag on Anna stature, OPS condemns, Media News, 31-07-2020

29-07-2020 – அண்ணாசிலைக்கு அவமதிப்பு செய்தது: “கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு அருகே அண்ணா சிலை உள்ளது. இந்த சிலை உள்ள பீடத்தின் மீது நள்ளிரவில் யாரோ காவித் துணியைப் போட்டுச் சென்றுள்ளனர்[1]. மேலும், அருகே குப்பைகளும் கொட்டப்பட்டிருந்தன[2]. மர்ம நபர்கள் சிலர் காவி கொடி கட்டிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்”, என்று எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்து விட்டன. ஆனால், யாரும் காரணம் என்ன என்று அலசிப் பார்க்கவில்லை. காவி என்றதும் குதிக்கின்றனர் என்பது தான் தெரிகிறது. அதாவது, இவர்களே, அந்நிறத்தைக் கண்டு திகைக்கின்றனர் அல்லது முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்று தெரிகிறது. இதுவரை பார்த்ததில், குடித்தவன், மனநிலை சரியில்லாதவன் போன்றோர் தான் அவ்வாறு செய்துள்ளனர். ஒரு சம்பவத்தில் திமுகக்காரனே செய்துள்ளான். இப்பொழுது கூட, பிரச்சினை செய்ய, வேண்டுமென்றே, அத்தகைய ஆட்களைத் தூண்டி விட்டு செய்திருக்கலாம் என்றும் விளக்கம் கொடுக்கலாம்.  ஏனெனில், உண்மையான இந்து, இந்துத்துவவாதி அவ்வாறு எல்லாம் செய்து இழிவு படுத்த மாட்டான்.

Saffron flag on Anna stature, Stalin for arresting him, 31-07-2020

சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்[3]. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது[4];-“…… சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்[5].……மேலும் பொதுவாழ்வில் ஈடுபட்டு சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை எடுக்கும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்[6]. இப்படி அறிக்கை விடுவதற்கு என்றே தயாராக இருப்பது போல, அரசியல் தலைவர்கள் அதிரடியாக அறிக்கைகள் விட்டுள்ளனர்[7]. “சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” எனும்போது[8], அந்த அளவுக்கு என்னவாகி விட்டது என்று தெரியவில்லை. இந்துக்களை, இந்து கடவுளர்களை தினம்-தினம் திகவினர், திராவிடத்துவப் போர்வையில் பலர் சமூக ஊடகங்களில் செய்து வருவது தெரிந்த விசயமாகி விட்டது. வீரமணி, “விடுதலையில்” செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் மீது, கடந்த 70 ஆண்டுகளாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தான், அத்த்கைய குற்றங்கள், சட்டமீறல்கள் மறுமடி-மறுபடி நடந்து கொண்டிருக்கின்றன.

Saffron flag on Anna stature, unstablized person did, Tamil one India, 31-07-2020

திமுக போராட்டம், போலீஸார் சமரசம்: தி.மு.க.வினர் திரளாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, அண்ணா சிலையை அவமதித்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது[9]. உடனே போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வினர் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். இதுதொடர்பாக குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் பொன்.ஆசைதம்பி களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையே போலீசார், காவி கொடி, பல்பு மாலையை அகற்றினர்[10]. சிசிடிவி மூலம் அவ்வாறு செய்தவர் யார் என்று கண்டறிந்தனர், விசாரித்ததில், அவர் ஒரு மனநோயாளி என்று தெரிய வந்தது[11]. கன்னியாகுமரி குழித்துறையில் அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளி என்றும் எந்த உள்நோக்கத்துடனும் இந்த நிகழ்வு நடைபெறவில்லை என்றும் மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்[12].

Saffron flower garland to EVR stature by girls-1

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இப்பொழுது, மனநிலை சரியில்லாதவர்கள், கிருக்குகள், பைத்தியங்கள் முதலிவர்களின் மீது என்ன கடும் நடவடிக்கை எடுக்க முடியும்? குண்டர்கள், தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்து, சிறைகளில் அடைப்பார்களா?  செக்யூலரிஸத் தனமாக, ஒரு சித்தாந்தவாதியைக் கைது செய்ய வேண்டும் என்றால், மாற்று சித்தாந்தவாதி ஒருவனை கைது செய்யவேண்டும் என்ற ரீதியில் தான் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. “அடுத்தவர்களின் மனம் புண்படுவது,” என்றால், திராவிடத்துவவாதிகளுக்கு, பெரியாரிஸ்டுகளுக்கு, நாத்திகர்களுக்கு, இந்துவிரோதிகளுக்குத் தெரியாதா என்ன? பிறகு எதற்கு எந்த ஆர்பாட்டம் எல்லாம்? திராவிட நாத்திகம், திராவிடத்துவ இந்துவிரோதத் தனம், செக்யூலரிஸ இந்து தூஷணம் முதலியவற்றை வைத்துக் கொண்டு இந்துக்களை ஏமாற்ற முடியாது.

Saffron flower garland to EVR stature by girls-4

கருப்பா, சிவப்பா, காவியா, என்ற அலர்ஜி ஏன் வந்தது?: இதுவரை 60-40 ஆண்டுகளாப் பார்க்கும் பொழுது, ஈவேரா-அண்ணா சிலைகளுக்கு அமோகமாக மாலைகள் போட்டு, மலர் தூவி, படங்களை அலங்கரித்து, பூஜை நடத்துவது போன்றே பெரிய-அரசியல்வாதிகள், பகுத்தறிவு பகலவர்கள், நத்திக சிரோமணிகள், திராவிடத்துவ வித்தகர்கள் செய்து வந்துள்ளனர். அம்மாலைகளில் லபலவித நிறங்கள் இருந்துள்ளன, இருக்கின்றன. அங்கு, “கருப்பு தான் எனக்குப் பிடித்த கலர்”, என்றெல்லாம் சொல்லவில்லை. ஆரஞ்சு / காவி நிற சாமந்தி பூமாலைகள் எல்லாம் போட்டு பூஜித்துள்ளனர்.  மக்களும் நேரிலும், டிவியிலும், இப்பொழுது மொபைல் போனிலும் நன்றாகவே பார்த்து வருகின்றனர். ஆகவே, திராவிடத்துவ அடிபொடிகள், பெரியாரிஸ பக்தர்கள், அவரவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப, என்ன கிடைக்கிறதோ, அவற்றை வைத்துக் கொண்டு, பக்தியுடன், சிரத்தையுடன், மாலையாகக் கட்டி, மாலை போடுகிறார்கள் போலும். இதில், இப்பொழுதுள்ள நான்காம்-ஐந்தாம் சந்ததியினர் கோபித்துக் கொளவது வேடிக்கையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

29-07-2020

Is it OK for Anna, MGR, EVR - saffron garland-Namakkal March 2018

[1] தமிழ்.இந்து, அண்ணா சிலை மீது காவித்துணி: தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்; தலைவர்கள் கண்டனம் , Published : 30 Jul 2020 02:50 PM, Last Updated : 30 Jul 2020 02:51 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/567261-leaders-condemns-on-anna-staute-issue-5.html

[3] தினத்தந்தி, அண்ணா சிலை மீது காவிக் கொடி கட்டிய சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் கண்டனம், பதிவு: ஜூலை 30, 2020 15:03 PM.

[4] https://www.dailythanthi.com/News/State/2020/07/30150349/Deputy-Chief-Minister-O-Panneerselvam-condemned-the.vpf

[5] மாலை மலர், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை.பன்னீர்செல்வம், பதிவு: ஜூலை 30, 2020 15:18 IST

[6] https://www.maalaimalar.com/news/topnews/2020/07/30151837/1747152/OPS-condemned-tying-of-saffron-flag-to-Anna-statue.vpf

[7] தினமணி, கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக்கொடி: ஓபிஎஸ், ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம், By DIN | Published on : 30th July 2020 04:38 PM |

[8] https://www.dinamani.com/tamilnadu/2020/jul/30/saffron-flag-on-anna-statue-in-kanyakumari-3443381.html

[9] தினத்தந்தி, உடைந்த பல்புகளை மாலையாக அணிவித்து அவமதிப்பு; அண்ணா சிலையில் காவி கொடி கட்டியதால் பரபரப்பு: தி.மு..வினர் போராட்டம், பதிவு: ஜூலை 31, 2020 01:48 AM

[10] https://www.dailythanthi.com/News/State/2020/07/31014814/Insult-by-wearing-broken-bulbs-Saffron-flag-hoisted.vpf

[11] தமிழ்.ஒன்.இந்தியா, கன்னியாகுமரி அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளிகாவல்துறை, By Mathivanan Maran | Updated: Thursday, July 30, 2020, 16:50 [IST].

[12] https://tamil.oneindia.com/news/kanyakumari/anna-statue-dishonoured-with-saffron-flag-in-kanyakumari-392841.html

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? [2]

ஜூலை 27, 2020

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? [2]

Puri, Sringeri, Dwaraka and Kanchi mutts-LR

காங்கிரஸ்பிஜேபி மடாதிபதிகள் மீது ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்தது: தேர்தல் நேரங்களில் சந்நியாசிகள், மடாதிபதிகள் முதலியோர் அரசியல் தலைவர்களுக்கு ஆசி கூறுதல், வாழ்த்துப் பெறுதல், ஏன் சிலர் பிரச்சாரம் செய்தல் போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கின்றன[1]. 1990களில் இவை அதிகமாகின. காங்கிரஸ், பிஜேபி, சமஜ்வாடி என்று எல்லா கட்சிகளும் இந்த யுக்தியைக் கையாண்டன[2]. காங்கிரஸ் தலைவர்கள் சங்கராச்சாரியார்களிடமே சென்று ஆசி பெறுவதும் நடந்தது. காங்கிரஸ் குறிப்பாக வடவிந்தியாவில் உள்ள முக்கியமான கோவில்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த மஹந்துகள், மடாதிபதிகளை, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கட்டுக்குள் வைத்திருந்தது. குறிப்பாக “சார் தாம் யாத்திரை[3],” வைஷ்ணவதேவி, மானசரோவர்-கைலாஷ் போன்ற யாத்திரைகளுக்கு, அரசு, போலீஸ், பாதுகாப்புப் படை, ஏன் ராணுவம் முதலிவற்றின் உதவி தேவை. இங்கும், “சார் தாம் யாத்திரை” என்பது ஆதிசங்கரர் எவ்வாறு பாரதம் முழுவதும் சென்று வந்தாரோ [பூரி, ராமேஸ்வரம், துவாரகை மற்றும் பத்ரிநாத்] அதைப் போன்றது. ஆனால், இப்பொழுது, வடநாட்டிலேயே, உத்தரக்காண்ட் மாநிலத்திலேயெ [யமோனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்] சுருங்கி விட்டது. இவற்றை வைத்தும், அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. பிஜேபி அரசியல் ஆதிக்கம் பெற்றும், மத்திய மாநிலங்களில் ஆட்சி ஏற்ற நிலையில், அந்த அதிகார-தாக்கம், முதலியவை இருகட்சிகளுக்கும் இடையே பிரச்சினை ஆகியது. இதனால், மஹந்துகள், சந்நியாசிகள், மடாதிபதிகள் முதலியோரிடம் வெறுபாடு தோன்றும் நிலை உருவாகியது.

Sankaracharaya, Mutts, not-clear photo

சங்கராச்சாரியார்கள் விமர்சிக்கப்பட்டது: குறிப்பிட்டவர்கள் காங்கிரஸுக்கு, பிஜேபிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று ஊடகங்கள் ஊதி பெரிதாக்கின. அதற்கேற்றார் போல மஹந்துகள், சந்நியாசிகள், மடாதிபதிகள் சம்பந்தப் பட்ட தீர்ப்புகளில் அத்தகைய தாக்கம் இருந்ததை கவனிக்க முடிந்தது. அந்நிலையில் தான், துவாரகா மடாதிபதி ஶ்ரீ ஸ்வரூபானந்தர் காங்கிரஸுக்கு வேண்டியவர், பூரி சங்கராச்சாரியார் பழமைவாதி, சிருங்கேரி மடாதிபதி காங்கிரஸுக்கு மிக-மிக நெருக்கமானவர், காஞ்சி மடம் பிஜேபிக்கு சார்புடையது, போன்ற பிம்பங்கள், மாயைகள் உருவாக்கப் பட்டன. காங்கிரஸின் ஊடக பீரங்கி, “நேரஷனல் ஹெரால்ட்,” எப்பொழுதும், இந்துக்களுக்கு எதிரான கட்டுரைகளை பிரசுரித்து வருகின்றது. அவ்வப்போது மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறது. இதனால், அது இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றும் பிரச்சாரம் செய்யப் படுகிறது. 2013ல் பெருவெள்ளம் உண்டானபோது, கேதார்நாத்தில் உள்ள ஆதிசங்கரர் சமாதியும் பாதிப்புக்கு உள்ளானது[4]. அதனால், அதனை, மறுபடியும் புனர்-நிர்மாணம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன[5]. அப்பணிகள் இன்றும் நடந்து வருகின்றன. அப்பொழுதும், ஊடகங்கள் பிரிவினை உண்டாக்கும் முறையில் செய்திகளை (கேதார்நாத் பூஜாரி மற்றும் ஸ்வரூபானந்தர் சாஸ்திர ரீதியிலான கருத்துக்களை) வெளியிட்டன[6]. ஸ்வரூபானந்தர் முறையாக (பூஜாரிக்கு என்ன தகுதிகள் வேண்டும், வேதங்கள் முதலியவை படித்திருக்க வேண்டும் போன்ற விசயங்கள்) விளக்கியதைத் திரித்து வெளியிட்டன[7]. 2017ல் ராகுல் காந்தி, அஹமது படேலுடன், சோமநாத் கோவிலுக்குச் சென்றபோது, அவர்கள், “இந்துக்கள் அல்லாதவர்,” என்று கோவில்-நுழைவு ரிஜிஸ்டரில் குறிப்பிடப் பட்டது[8]. அதாவது கூட வந்தவர் முஸ்லிம் என்பதால், இவரும் கிருத்துவர் என்று நினைத்து அவ்வாறு எழுதப் பட்டிருக்கலாம். ஆட்சி மாற்றங்கள் நடக்கும் போது, இந்துக்கள் தான் கஷ்டப்படவேண்டும், அரசியல்வாதிகள் அல்ல. அதாவது, அத்தகைய அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் சித்தாந்த மோதல், இந்துக்களைப் பாதிக்கின்றது என்ற விசயம் எடுத்துக் காட்டப் படுகிறது.

Four Sankara mutts

ஆதிசங்கரர் (507-477 BCE) ஏற்படுத்திய மடங்கள்: ஆதிசங்கரரின் தேதியைக் குறிப்பிடுவதிலேயே அரசியல் ஆரம்பிக்கிறது எனலாம். ஆங்கிலேயர் ஆரம்பித்து வைத்த அந்த பிரச்சினை இன்றும் முடியவில்லை. ஆதிசங்கரரின் காலம் 507-477 BCE என்று சிருங்கேரி மடம் தவிர மற்ற மடங்கள் ஏற்றுக் கொள்கின்றன. சிருங்கேரி 788-820 CE என்று கொள்கிறது. ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடங்கள், விவரங்கள், கீழ் வருமாறு:

  மடத்தின் பெயர் திசை பெயர் தற்போதைய மடாதிபதி
1 உத்தராண்ய மட் வடக்கு ஜோதிர் மடம்,

உத்தரகாண்ட்

நியமிக்கப் படவில்லை
2 தக்ஷிணாயன் மட் தெற்கு துவாரகா மடம்,

குஜராத்

ஶ்ரீஸ்வரூபானந்த சரச்வதி
3 பூர்வம்ன்ய மட் கிழக்கு பூரி, ஒரிஸா நிஸ்சலாநந்த சரஸ்வதி
4 பஸ்சிம்ன்ய மட் மேற்கு சிருங்கேரி, கர்நாடகா பாரதி தீர்த்த மஹாஸ்வாமி
5 காஞ்சி காமகோடி தெற்கு காஞ்சி, தமிழ் நாடு. விஜயேந்திர சரஸ்வதி

இந்தியாவில் உள்ள இந்துக்கள், நிச்சயமாக இவர்களை பக்தியுடன், மரியாதையுடன், சிறப்புடன் பின்பற்றி வருகிறார்கள். அந்நிலையில், அரசியலை காரணமாக வைத்துக் கொண்டு, ஊடகக்காரர்கள், நிருபர்கள், பேட்டி கண்பவர்கள், எழுத்தாளர்கள் என்றெல்லாம் இருப்பவர்கள், இவர்களைப் பற்றி தாறுமாறாக செய்திகளை வெளியிடுவது, விமர்சிப்பது என்று செய்து வருகிறார்கள். Hon’ble, Mr, His Holiness, Rev., மௌலி, முல்லா, சாஹிப், ஹாஜி என்றெல்லாம் மற்ற மதத்தலைவர்களை குறுப்பிடும் போது, இவர்களை அப்படியே குறிப்பிடுவது முதலியன நடந்து வருகிறது. மேலும் துவாரகா, பூரி மற்றும் காஞ்சி மடங்கள், மடாதிபதிகள் என்று வரும் போது, கிண்டலாக, கேலியாக, நக்கலாக தலைப்பிட்டு செய்திகள் போடுவது என்பன தொடர்ந்து நடந்து வருகிறது.

Christians take advantage of the disunity among Hindus -Puri Sankaracharya

பூரி சங்கரச்சாரியாரை விமர்சிப்பது ஏன்?: பூரி சங்கராச்சாரியார், பல பாரம்பரிய விசயங்களை சாஸ்திரங்களின் படி விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார். இக்காலத்திற்கு ஏற்ப விளக்கங்களையும் கொடுக்கிறார். ஆனால், ஊடகங்கள், இந்தியிலிருந்து மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்று முழுப்பேச்சையும் குறிப்பிடாமல், ஒரே வரியில் அவர் வர்ணாஷ்ரமத்தை ஆதரிக்கிறார் என்று செய்திகள்ளை போடுகின்றனர்.

  1. முசல்மான்கள், கிருத்துவர் எப்படி தங்களது மதங்களை வேகமாக வளர்த்துக் கொள்கிறார்கள்? இந்துக்களால் ஏன் முடியவில்லை?
  2. இந்துக்களின் சோம்பேறித்தனம், கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வரமாகிறது!
  3. முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களின் மதம் மாற்றும் முறைகளை
    எப்படிக் கட்டுப்படுத்துவது?
  4. இந்து ஒற்றுமையின்மையை கிருத்துவம் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறது!

போன்ற வீடியோ சொற்பொழிவுகளில், பிரச்சினையை நேரிடையாக விளக்குகிறார். இதுவரை மற்றவர்களின் கருத்துகள் இவ்வாறு வெளிப்படையாக, வெளியிடப் படவில்லை. மேலும், இந்திய அரசியல் சாசனத்தின் 25வது பிரிவைப் பற்றி கொடுக்கும் விளக்கம் சட்டப்படி அருமையாக இருக்கிறது. இவரைப் போலத்தான், ஶ்ரீ ஸ்வரூபானந்தரும், “கோவில் என்ற அமைப்பில் எல்லோருடைய பங்கும் இருக்கிறது. பிராமணர்களுக்கு மட்டும் உரிமை இல்லை[9]. செருப்பு தைப்பவன், துணி துவைப்பவன், பொற்கொல்லன், நாவிதன் என்று எல்லொருக்குமே கோவிலை பராமரிக்க உரிமைகள் இருந்தன. ஆனால், இவர்கள் எல்லோரும் கோவிலை விட்டு, வேறு வேலை செய்யச் சென்று விட்டனர். இத்தகையோ ஒருவர் இல்லாவிட்டாலும், முன்பெல்லாம், கோவில் இயங்க முடியாது. அதனால், இப்பொழுது ஏதோ பிராமணர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்பது போலிருக்கிறது. அதனால், அனைத்து ஜாதியினரும் மறுப்டியும் கோவில்களுக்கு வரவேண்டும். அரசாங்கள் அவரவர்களுக்கு உரிய நிதியுதவி செய்ய வேண்டும். 21,000 ஏக்கர் கோவில் நிலங்களைக் கோவில்களுக்குத் திரும்ப அளிக்க வேண்டும்,” என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், ஊடகங்கள் இதை செய்தியாக போடவில்லை. விவாதிக்கவில்லை. ஆக, ஒரு இது மடாதிபதி, இந்துக்களின் உரிமைகளைப் பற்றி கவனம் கொள்வது, பேசுவது, விளக்குவது எப்படி கேலிக்கு, விமர்சனத்திற்கு உள்ளாக்க முடியும் என்று தெரியவில்லை. இப்பொழுது சமூக ஊடகங்களில், stooge, agent, criminal அதாவது கைக்கூலி, கையாள், கிரிமினல் போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப் பட்டுள்ளன.

© வேதபிரகாஷ்

27-07-2020

How lethargy of Hindus help musalmans and christians -Puri Sankaracharya

[1] Hinduism Today, Swamis Campaign In India Elections, Sinha, B.N., Magazine Web Edition, July 1991,

[2] https://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=837

[3]  முதலில் ஆதிசங்கரர் சென்று வந்த பூரி, ராமேஸ்வரம், துவாரகை மற்றும் பத்ரிநாத் என்று இருந்தது. இப்பொழுது, யமோனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் புண்ணியஸ்தலங்களுக்கு செல்லும் யாத்திரை என்றாகியது.

[4] Times of India, Shankaracharya samadhi swept away, TNN | Updated: Jun 22, 2013, 06:31 IST.

[5] https://timesofindia.indiatimes.com/india/Shankaracharya-samadhi-swept-away/articleshow/20709897.cms

[6] The Hindu, On a mission to rebuild the Shankara Samadhi Sthal, C. S. Narayanan Kutty, KANHANGAD, FEBRUARY 20, 2014 10:07 IST, UPDATED: MAY 18, 2016 09:39 IST.

[7] https://www.thehindu.com/news/national/kerala/on-a-mission-to-rebuild-the-shankara-samadhi-sthal/article5708821.ece

[8] Times of India, Somnath temple visit: Rahul Gandhi listed as ‘non-Hindu’, Devika Bhattacharya | TIMESOFINDIA.COM | Updated: Nov 29, 2017, 21:54

https://timesofindia.indiatimes.com/india/somnath-temple-visit-rahul-gandhi-listed-as-non-hindu/articleshow/61849303.cms

[9] The Hindu, Temples never belonged to Brahmins alone: Sharada Peetham seer, SPECIAL CORRESPONDENT WARANGAL:, OCTOBER 30, 2014 00:01 IST;

UPDATED: MAY 23, 2016 16:37 IST.

Temples were not the sole property of Brahmins alone but of 21 other castes involved in their set-up and maintenance, observed Sharada Peetham pontiff Swami Swaroopananda. The pontiff, who was here to deliver a discourse, told reporters that the temple system was sabotaged by vested interests who drove away the people and left it with only Brahmins. “The cobbler, washerman, goldsmith, barber all are involved in the maintenance of the temple. Every caste is important and without a single person, the temple will not function,” he pointed out. Swami Swaroopananda said he would soon meet Chief Minister K. Chandrasekhar Rao and urge him to restore 21,000 acres of endowment lands which were occupied by individuals. The priests should be paid a pension like other government employees. He said he would visit all the abandoned temples in Andhra Pradesh from December 11 to January 11, spend a night at each temple and organise a meeting with local people to revive them. In February, he would visit similar temples in Telangana. “Telangana has very old and popular temples that are in dire straits due to dwindling patronage and indifference of authorities. On behalf of Sharada Peetham, we will make efforts to mobilise people of all castes and motivate them to restore those temples,” he said. Captain V. Laxmikantha Rao, MLA V. Satish, Archaka Samakhya leader Gangu Upendra Sharma, Brahmana Samakhya leader I. Satyamohan and others were present.

[10] https://www.thehindu.com/news/national/telangana/temples-never-belonged-to-brahmins-alone-sharada-peetham-seer/article6544987.ece

Indira Gandhi, Kanchi Acharya, Jeyendra Saraswati

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? (1)

ஜூலை 25, 2020

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? (1)

Four Sankaracharyas-Black and white-cropped

ஆகஸ்ட் 5, 2020 அயோத்தியாவில் கோவில் அடிக்கல் நாட்டு பூமி பூஜை விழா: ஆகஸ்ட் 5, 2020 அயோத்தியாவில், ஶ்ரீராமர் கோவில் கட்டுவதற்கு, பூமி பூஜை செய்வதற்கான “முஹூர்த்தம்” நல்ல நேரம் குறிக்கப் பட்டது[1]. ஆனால், அது இந்து நாட்காட்டியின் படி, “உத்தம காலம்” இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.  இதனால், பிஜேபி-ஆர்எஸ்எஸ்-காரர்கள் அவரை தூஷிக்க ஆரம்பித்துள்ளனர்[2]. ஆகஸ்ட் 5, தக்ஷிணாயன, பாத்ரபத மாதம், கிருஷ்ண பக்ஷத்தில் வருகிறது. பாத்ரமாத மாதத்தில், வீடு / கோவிலைக் கட்டும் வேலையை ஆரம்பிப்பது இல்லை என்றார். தவிர சென்ற வருடம் 2019 பிப்ரவரி 21ம் தேதியே, கோவிலுக்கு அடிக்கல் நடும் பூஜையை, இவர் வாரணாசியில், தன்னுடைய ஆசிரமத்தில் செய்தார்[3]. ஒரு யாத்திரைக்குக் கூட ஏற்பாடு செய்தார், ஆனால், இவரது, உடல் அசௌகிரயத்தினால் கைவிடப் பட்டது[4]. மற்றவர்களும் கண்டுகொள்ளவில்லை. தேவையில்லாமல், ஒரு பழைய புகைப்படத்தைப் போட்டு, ,பிஜேபி-ஆர்எஸ்எஸ்-காரர்கள் அவரை சமூக ஊடகங்களில் தாக்க ஆரம்பித்துள்ளனர். ஆகவே, இதன் பின்னணியை எடுத்துக் காட்ட வேண்டியதுள்ளது.

Sankaracharaya, Mutts, graphics, TOI

காங்கிரஸ்பிஜேபிகாரர்கள் அரசியல் செய்து வந்தது: காங்கிரஸ் மற்றும் பிஜேபி சங்காரச்சாரியார்களை, ராமஜென்மபூமி விசயத்தில், வைத்து, அரசியல் செய்து வருகின்றன. ராஜிவ் காந்தி, வி,பி.சிங் காலம் தொடர்ந்து, ராமஜென்பமபூமி கோவில் விவகாரத்திற்கு இடைஞ்சலாக, ஷாபானு, மண்டல் கமிஷன் போன்ற பிரச்சினைகளைக் கொண்டு வந்து காலங்கடத்தினர். 1992க்குப் பிறகும், “கோவில் கட்டுவோம்” என்று சொல்லிக் கொண்டு காங்கிரஸ்-பிஜேபிகாரர்கள் அரசியல் செய்து வந்தனர். இப்படியாக தேர்தல் நேரத்தில் “ராமர் கோவில்” என்றும் மற்ற நேரங்களில், கோர்ட் சொன்னதை கேட்போம் என்றும் கூறிக் கொண்டு காலத்தைக் கழித்தனர். இந்தியாவில், செக்யூலரிஸம் என்ற கொள்கை வந்த பிறகு, இந்து மடாதிபதிகளின் முக்கியத்துவம் குறைந்து விட்டது போன்ற தோற்றத்தை உண்டாக்கின. ஏனெனில், தேவையில்லாமல், கோவில் வழிபாடு, மடங்கள், மடங்களின் நிர்வாகம், சொத்து, முதலியவைப் பற்றிய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் நுழைந்து, மடாதிபதிகள் நீதிமன்றங்களிக்கு செல்லுமாறு செய்து, மறைமுகமாக, அதிக அளவிற்கு அவற்றை அரசியல் கட்டுப் பாட்டில் வைக்க முயன்றன.

K.A.Paul with Swaroopananda Sankaracharya-2

சாதுக்கள், சந்நியாசிகள், மஹந்துகள், மடாதிபதிகள் ஒற்றுமையை சீர்குலைக்க செய்த வேலைகள்: ஆனால், ராமஜென்ம பூமி விசயத்தில், ஆரம்பத்தில் அரசியல் கலப்பில்லாமல், அவ்வியக்கம் சென்று கொண்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வந்தது. அகில இந்திய மடாதிபதிகளின் சபை கூட்டம், சாது-சந்நியாசிகள் கூட்டம் போன்றவற்றை நடத்தி, விஎச்பி சாதுக்கள், சந்நியாசிகள், மஹந்துகள், மடாதிபதிகள் என்று வரவழைத்து, அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. பெரிய கூட்டங்கள், ஊர்வலங்கள் முதலியன நடத்தப் பட்டன. பக்தர்கள், பின்பற்றுபவர்கள் முதலியோரும் கலந்து கொண்டனர். முதன் முதலாக, இவ்வாறு சாது-சந்நியாசிகள் கூட்டம் ஒரே இடத்தில் வருவது, பெரிய விசயமாகியது. உலக அளவில், ஊடகங்களில் பெரிய தாக்கம் ஏற்பட்டது. மேலை நாடுகள், இந்தியாவில். இத்தனை, சாது-சந்நியாசிகள், மஹந்துகள், மடாதிபதிகள் இருக்கிறார்களா என்று ஆச்சரியப் பட்டனர். அரசியல் கட்சிகள் கதி கலங்கன. தமக்குப் போட்டியாக வந்து விடுவார்களோ என்று கூட அஞ்சினர். முலாயம் சிங் யாதவ், முதலியோர் திகைத்தனர்.  அந்நிலையில் தான் அவர்களது ஒற்றுமையை சீர்குலைக்க, அரசியல் கட்சிகள் திட்டமிட்டன. மாநில அளவில், மடாதிபதிகளுக்கு பிரச்சினைகளை உண்டாக்கினர். மடாதிபதிகளே, ஒருவர் மீது, ஒருவர் வழக்குகள் போட்டார்கள். இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்காரர்கள், எதிர்கட்சிகள் ஒருபக்கம், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் போன்றவை இன்னொரு பக்கம் என்று நின்று மோத ஆரம்பித்தன.  1992 நிகழ்வுக்குப் பின்னர், அரசியல் கட்சி மோதல்கள் அதிகமாகின.

K.A.Paul with Swaroopananda Sankaracharya-1

தொடர்ந்து சங்கர மடங்கள் தாக்கப் படுவது (1987 முதல் இன்று வரை): சங்கரமடங்களைத் தாக்குவது என்று தொடர்ந்து நடந்து வருகிறது. ஊடகக் காரர்கள், சங்கராச்சாரியார்களிடம், அரைகுறையாக எதையாவது கேட்டுக் கொண்டு, அவற்றை ஊடகங்களில் செய்திகளாகப் போட்டு, பிரச்சினைகளை உண்டாக்கியுள்ளனர். 1987ல் காஞ்சி சங்கராச்சாரியார், மடத்தை விட்டுச் சென்ற போது, அத்தகைய வேலையை செய்தனர். 1990களில் பூரி சங்கராச்சாரியார்களின் கருத்துகளைத் திரித்து, சதி, பசு-கொல்லாமை, பெண்கள்வேதங்கள் படிப்பது போன்றவற்றைப் பிரச்சினை ஆக்கினர். 2004லிருந்து, மறுபடொயும், காஞ்சி சங்கராச்சாரியாரை பிரச்சினைக்குட்படுத்தப் பட்டது. இந்த தடவை கொலைக்குற்றம். 2013ல் விடுவிக்கப் பட்டாலும், 2004லிருந்து, காஞ்சி மடம் மட்டுமல்லாது, மற்ற மடங்களின் மீதும், அவதூறாக, அசிங்கமாக பேசுவது, எழுதுவது புத்தகங்கள் போடுவது என்று தொடர்ந்தன.  2018ல் ஜெயேந்திரர் காலமாகி, சமாதியானார். ஆனால், துவாரகா சங்கராச்சாரியாரின் மீதான தக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

K.A.Paul - Sampurnananda refutal letter

மடத்தின் தரப்பில் கொடுக்கப் பட்ட விளக்கம்…

K.A.Paul with Modi, Amit Sha

K.A.Paul with Modi, Amit Sha

கொலைக் குற்றம் சாட்டப் பட்ட பாதிரியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் போட்டுத் தாக்குவது: கே.ஏ.பால் என்ற பாதிரியுடன் இருப்பது போன்ற புகைப்படம் போட்டு, இப்பொழுது தூஷணத்தை மறுபடியும் ஆரம்பித்துள்ளனர். 2005லேயே, மடம் தரப்பில், மறுப்பு தெரிவிக்கப் பட்டு, கண்டனம் தெரிவிக்கப் பட்டது. ஒரு சாதாரண பக்தனோ அல்லது ரொம்ப வேண்டப் பட்ட பக்தனோ, எந்த சங்கராச்சாரியாரையும் தொட முடியாது. இங்கோ, இந்த பாதிரி, தோளின் மீது கை போட்டது மாதிரியும், தலைமீது கை வைப்பது போலவும் புகைப்படங்களில் தெரிகிறது. ஆகவே, இது நிச்சயமாக நம்புகிறபடி இல்லை. மேலும், மேனாட்டுப் பத்திரிக்கைகளே, இப்பாதிரியைப் பற்றி தமாஷாக எழுதியுள்ளன. அந்நிலையில், அவனது சகோதரனையே கொன்றுவிட்டார் என்ற செய்திகள் வருகின்றன[5]. இவனை கைது செய்து, சிறையில் அடைக்கப் படுகிறான்[6]. ஆனால், பிறகு, போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப் படுகிறான்[7]. அப்பொழுது, ராஜசேகர ரெட்டியின் பேரில் தான், கைது செய்யப் பட்டதாக, பேட்டி எல்லாம் கொடுத்து இருக்கிறான்[8]. போதா குறைக்கு, பிறகு, ஒரு கட்சி ஆரம்பித்து, ரெட்டியை எதிர்க்கிறேன் என்று ஓட்டைப் பிரித்து, அவரையே ஆட்சிக்கு வரும்படி ஆகி விட்டது. இதெல்லாம், கிருத்துவர்கள் சேர்ந்து நடத்திய நாடகமா என்றெல்லாம், நாயுடு தான் ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். ஏனெனில் தோல்வியடைதது சந்திரபாபு நாயுடு தான். ஆனால், அந்த பாலை வைத்து, சங்கரச்சாரியாரைத் தாக்குவதில் தான், விசமம் வெளிப்படுகிறது.

P.A.Paul arrested for murdering his brother, India Today-1

K.A.Paul involved in financial irregularites, phedophile issues- Washington post 10-10-2006

K.A.Paul murder case on him dropped

இந்துக்கள் மாற்று மதத்தினர் போல, சங்கராச்சாரியர்களை வசைப்பாடி தூஷிப்பது ஏன்?: ஒரு போட்டோவில் தோளின் மீது கை வைப்பது போலவும், இன்னொரு புகைப்படத்தில், தலையின் மீது கைவைப்பது போல உள்ளது. இவ்வாறு ஒரு போப்பின் மீது, ஒரு பூஜாரி இவ்வாறு கை வைக்க முடியுமா? முதலில், இவ்வாறு அருகில் விடுவார்களா? ஆகவே, இந்த ஆள் எதற்காக, அவ்வாறு செய்தான் என்று ஆராய வேண்டியுள்ளது. கிருத்துவர்கள் தான் இவ்வாறு சங்கரமடத்தை, சங்கராச்சாரியாரைத் தாக்குகிறர்கள் என்றால், அதே படங்களை வைத்துக் கொண்டு இந்துத்துவ வாதிகள் தாக்குவது திகைப்பாக இருக்கிறது. இதை ஆரம்பித்து வைத்து, வாத-விவாதங்களில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களை கூர்ந்து கவனித்தால், ஒட்டு மொத்தமாக, சங்கர மடங்களை ஒழித்டு விட வேண்டும் என்ற போக்கில் உள்ளது போலிருக்கிறது.இந்துக்களே, சங்கராச்சாரிகளை வசைப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு, இவர்களே, அவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதமும் பெறுவார்கள். ஏதாவது பலனைக் கேட்டும் அனுபவிப்பார்கள். இந்த அசிங்கத்தை எல்லாம் தொகுத்து வைத்துக் கொண்ட இந்துஎதிரிகள் நாளைக்கு புத்தகங்களில் குறிப்பிடுவர், இல்லை, சங்கரமடத்து ரகசியங்கள் என்று புத்தகங்களே எழுதுவர்.

Swarupananda attacked by FB-1

 

Swarupananda attacked by FB-3

முடிவுரையாக சில குறிப்புகள்: மேலேயுள்ள விவரங்களைத் தவிர, பல உள்ளன, ஆனால், அவற்றையெல்லாம், இங்கு விவாதிக்க முடியாது. இந்துத்துவ வாதிகளே, பலவற்றை தமது மனங்களில் வைத்துக் கொண்டு, சமூக ஊடகங்களில் கொட்டி வருகின்றன. அவையெல்லாம் நல்லதற்கு அல்ல.

  1. சங்கர மடங்கள், 2500ற்கும் மேலான ஆண்டுகளாக, பாரதத்தில், ஆன்மீக, சமய, இறையியல் ரீதிகளில் இந்தியர்களை வழிநடத்தி வருகின்றன!
  2. அவற்றின் பீடாதிபதிகளான சங்கராச்சாரியார்களும், அவ்வாறே மதிக்கப் பட்டு, பாரதம் முழுவதும் சென்று வந்து மக்களுக்கு ஆசிவழங்கியுள்ளனர்.
  3. ஆங்கிலேயர் காலங்களில், சங்காராச்சாரியார்கள், மடங்கள், மடங்களின் இறையியல் நூல்கள் இவற்றைக் கண்டு அதிசயித்தனர்.
  4. அத்தகைய தத்துவார்த்த, கிரியை, சம்பிரதாயங்கள், சடங்குகள் முதலியவற்றிற்கு வழிகாட்டியாக இருந்தவர்களை வேறெங்கும் காணமுடியவில்லை.
  5. இந்தியாவில் மதரீதியில் ஒருத்துவ அதிகாரம் கொண்ட மதத்தலைவர், தத்துவ குரு, இறையியல் பீடம் இல்லை என்றே அவர்கள் கருதினர்.
  6. நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி, மக்கள் குழுமம், இனம், வர்க்கம் போன்ற காரணிகளில் மற்ற மதங்கள் பிரிந்து கிடந்தன, மோதின.
  7. ஆனால், பாரதத்தில் அத்தகைய காரணிகள் இருந்தாலும், ஒன்றாக இருந்தனர்; நான்கு திசைகளில் உள்ள புண்ணியக்ஷேத்திரங்களுக்கு தீர்த்தயாத்திரை சென்றுவந்தனர்.
  8. அந்நிலையில் தான், மடங்களுக்குள் வேறுபாடுகளை உண்டாக்க விரும்பினர், புதிய மடங்கள், மடாதிபதிகள் உருவாக ஊக்குவித்தனர்.
  9. ஆதிசங்கரருடைய நூல்கள் திரிபு விளக்கங்களுக்கு உட்படுத்தப் பட்டு, ஜாதிய, மாநில, திசை போன்ற திரிபுகளுக்குத் திருப்பினர்.
  10. ஆதிசங்கரரின் தேதியைக் குறைக்க, சங்கர மடங்கள் ஐந்தல்ல, நான்கு தான், அத்வைதம் துலுக்கர்களின் ஒருத்துவத்திலிருந்து பெறப்பட்டது போன்ற கருதுகோள்களை உண்டக்கினர்.
  11. சங்கர-சிருங்கேரி நீதிமன்ற வழக்குகளை ஊக்குவித்தனர், அவை இன்றும் தொடர்கின்றன, இந்துவிரோதிகளுக்குத் தீனி போடுகின்றன.
  12. எனவே, அந்நிலையில், சங்கரமடங்களை, சங்கராச்சாரியார்களை வைத்து, அரசியல் செய்ய வேண்டாம், இந்து-ஒற்றுமையைக் குலைக்க வேண்டாம்.

© வேதபிரகாஷ்

24-07-2020

[1] Daijiworld, Shankaracharya objects to ‘Bhoomi Pujan Mahurat’, Thu, Jul 23 2020 01:22:59 PM

[2] http://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=733362

[3] Times of India, Varanasi: Swami Swaroopanand Saraswati symbolically lays down foundation stone of Ayodhya’s Ram Mandir, Feb 22, 2019, 07:00AM ISTSource: TNN

[4] https://timesofindia.indiatimes.com/videos/city/lucknow/varanasi-swami-swaroopanand-saraswati-symbolically-lays-down-foundation-stone-of-ayodhyas-ram-mandir/videoshow/68098454.cms

[5] Times of India, Evangelist K A Paul arrested in murder conspiracy case, PTI | Updated: May 21, 2012, 16:43 IST.

[6] https://timesofindia.indiatimes.com/city/hyderabad/Evangelist-K-A-Paul-arrested-in-murder-conspiracy-case/articleshow/13355388.cms

[7] Economic Times, Evangelist KA Paul arrested for murder conspiracy by Andhra Pradesh police, By CR Sukumar, Last Updated: May 22, 2012, 02:36 AM IST

[8] https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/evangelist-ka-paul-arrested-for-murder-conspiracy-by-andhra-pradesh-police/articleshow/13367273.cms

 

K.A.Paul with Modi, Mukherjee, Gowda

தேவையில்லாமல், திராவிடத்துவம் மற்றும் இந்துத்துவம் இடையில் சிக்கிக் கொண்ட பார்ப்பனியம்!

ஜூலை 13, 2020

தேவையில்லாமல், திராவிடத்துவம் மற்றும் இந்துத்துவம் இடையில் சிக்கிக் கொண்ட பார்ப்பனியம்!

Parppaniyam caught between dravidatvam and hindutwam-Ahmed Bakrudheen VCK

மாரிதாஸின் பதிவுகளை ஆதரிக்க வேண்டும் என்று ஒரே நச்சரிப்பு. கேட்டுப் பாருங்கள் என்று இன்-பாக்ஸில் தொந்தரவு, சரி என்று மிக கவனமாக பார்க்க / கேட்க ஆரம்பித்தேன். முன்பே, தவறுகள் இருந்தபோது சுட்டிக் காட்டி இருக்கிறேன், ஆனால், எந்த பதிலும் இல்லை. ஒரு வழி பாதைப் போன்று சென்று கொண்டிருந்தது. அதனால், கீழ் கண்ட படிவு செய்தேன்:

  1. மாரிதாஸின் மாணவர்கள் புரிந்து கொள்வது எப்படி என்று வீடியோ போடும் யுக்தி, ஏன் இந்துத்துவ வாதிகளுக்கு என்று போடக் கூடாது?
  2. இவர் செய்யும், எதிர் ஆலோசனை [Negative suggestion], எதிர்வினை பிரச்சாரம் [negative propaganda] முறைகள் மாணவர்களுக்குத் தேவையில்லை!
  3. டெலி-சீரியல்கள் பார்க்கும் ரீடியில் உள்ள இவை நிச்சயமாக மாணவர்களுக்குத் தேவையில்லை! அந்நேரத்தில் உருப்படியாக படிக்கலாம்!
  4. அக்டோபர் 2017ல் ஆரம்பித்ததால் மாணவர்களுக்கு என்ன பலன் இந்துத்துவ வாதிகளுக்கு அல்லது பிஜேபிக்கு என்ன பலன் ஏற்பட்டது?
  5. ஏற்கெனவே உள்ள விசயங்களைத் தொகுத்து வீடியோ போடுவதால் இந்த்துத்துவ வாதிகள், திராவிடத்துவ வாதிகளை விட சிறந்து விட்டார்களா?
  6. தமிழகத்தில் அத்தகைய பிரச்சாரம் எடுபடவில்லை, சட்டரீதியிலும் சிறக்கவில்லை, மாறாக வைகோ எம்பி ஆனது தான் நிதர்சனம்!
  7. இப்பொழுது மாணவர்களுக்குத் தேவை படிப்பு, படிப்பில் தேர்ச்சி, தேர்ச்சியில் அதிக மதிப்பெண், வேலை, திருமணம், வாழ்க்கையில் செட்டில் ஆவது!
  8. சித்தாந்தம், சித்தாந்த மறுப்பு, சிந்தாந்த கண்டனம் முதலியன பிஜேபி-கார்ட் ஹோல்டர்களுக்குத் தேவை, மாணவர்களுக்கு அல்ல!
  9. தமிழகத்தைப் பொறுத்த வரையில், புரையோடியிருக்கும் ஊழலை ஒழிக்க வேண்டும், அதுதான், எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறது!
  10. ஊழலை எதிர்த்து பிரச்சாரம் செய்யாமல், சமசரம் செய்து கொண்டு, மாணவர்களை குறி வைப்பது வியாபாரமே தவிர, அவர்களுக்கு நல்லது செய்வதல்ல!

          வேதபிரகாஷ்
13-07-2019

Suki sivam, Nellai kannan, vairamuthu, kamal etc-Parppaniyam

வேண்டிய நண்பர்கள் இப்படி கருத்தைத் தெரிவித்தனர்: என்னுடைய கருத்திற்கு, ஆதரித்தும், எதிரித்தும் இவ்வாறு பதில்கள் வந்தன:

  • பிரச்சாரம் செய்வது அனைவருக்காகவும் தான். குறிப்பாக இளைய சமுதாயமான இளைஞர்கள் தெரிந்து கொள்வதில் நீண்டகால பயனளிக்கும் திட்டம். இதில் என்ன தவறு? யாராவது பூனைக்கு மணிகட்ட வேண்டும். தைரியமாக மாரிதாஸ் கட்டுகிறார். இதையும் குறை கூறினால் என்ன செய்வது?
  • மாணவர்களை தவறாக வழிநடத்த ஒரு வெறிநாய் கூட்டம் அலையும் போது நல்வழிகாட்டுவது தவறில்லை என்பது மட்டுமல்ல தற்போதைய தேவையும் என்பதே என் கருத்து. மேலும் மாரிதாஸ் கூறுவது அனைவருக்குமே தான்.
  • மாணவ பருவத்தில் அரசியலில் ஈடுபடுவதே தவறு. அவர்கள் பாட சிலபஸ்ஸில் ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு பிறகு அரசியலை ஒரு பாடமாக வைக்கலாம். கல்வி கூடங்களில் மாணவர் சங்கம் என்பதை தவிர்க்க வேண்டும். காரணம் அதில் அரசியல் கட்சிகள் தலையீடு இருக்கிறது. பெற்றோர் – ஆசிரியர் சங்கம் இருப்பதுபோல் மாணவர் – ஆசிரியர் சங்கம் இருக்கலாம். அதில் மாணவர்களின் representatives இருக்கலாமே தவிர தலைவர் என்றும் செயலர் என்றும் இருக்ககூடாது. இது ரவுடி மாணவர்கள் உருவாவது தடுக்கப் படும் மற்றும் ஒழுக்கம் இருக்கும்.
  • நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் உறுப்பினராகி தீவிரமாக ஈடுபடுதல் தேவையில்லை.

ஒரு பெண்மணி கூட தினமும், எல்லா விவகாரங்கள் பற்றி வீடியோ போட்டு வருகிறார். ஆனால், அவர் தா பிஜேபி என்று ஒப்புக் கொண்டார். அதோடு, அதை விட்டு விட்டேன். ஏனெனில், அரசியல் ரீதியில் செல்லும் போது, இவ்விவகாரங்களில் நுழைய எனக்கு விருப்பமில்லை.

Suba.veerapandian reaction to Parppaniyam

மாரிதாஸ் தாக்குதலுக்கும், திதிமுககம்யூனிஸ்டுகள் தாக்குதல்களுக்கும் என்ன சம்பந்தம்?: இப்பொழுது, மாரிதாஸ் வீடியோக்களை மையமாக வைத்துக் கொண்டு, திக-திமுக-கம்யூனிஸ்ட் மற்ற உதிரிகள், இந்துமதத்தை தாக்க ஆரம்பித்துள்ளனர். அது அப்படியே பார்ப்பன எதிர்ப்பு என்ற ரீதியில் திரும்பியுள்ளது. “இந்து மக்கள் எங்கள் மக்கள் அதில் எந்த சிக்கலும் இல்லை, திராவிடம் என்ற போர்வாளை எடுப்போம்,  பார்ப்பனீயத்தை வேருடன் அறுப்போம்,” என்று சுப.வீரப் பாண்டியன் சொல்லும் போது, தாக்கப் பாடுவது, தாக்கப் படப் போவது எது? பார்ப்பனீயம், பிராமணியம் ஒன்றா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

  1. பார்ப்பனியம் என்றால் என்ன? என்று அகமது பக்ரூதீன், மாநில அமைப்புச் செயலாளர் விசிக! விளக்க வேண்டிய அவசியம் என்ன?
  2. அப்படியென்றால், ஏதோ ஒரு பார்ப்பான் அல்லது பிராமணன், இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமா?
  3. இந்துக்கள், இந்துக்களின் உரிமைகளை பார்பனீயம் பறித்துள்ளது என்ற சுப.வீரபாண்டியனின் கண்டிபிடிப்பு!
  4. இதற்கு, இந்துத்துவம் பார்ப்பனீயர்களின் உரிமைகளை பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா இல்லை, பார்பனீயத்தின் உரிமைகளை இந்துத்துவம் பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா?
  5. சம்பூகன் கட்டுக்கதையை இந்துத்துவ வாதிகள் உண்மை என்று வாதிக்கின்றனர், தீனிப் போட்டு வருகின்றனர்! எச்சரித்தும் கேட்கவில்லை! சுப.வீரப்பாண்டியன் போன்ற
  6. பஸ்மாசுரர்கள் கைவைத்துள்ளனர்! ஆக சூட்டை உணர்வது இந்துக்களா, இந்துத்துவ வாதிகளா, பார்ப்பனர்களா, பிராமணர்களா? யார் யார்?

Suba.veerapandian reaction to Parppaniyam with Sambuka episode

மாரிதாஸ் தாக்குதலுக்கும், பார்ப்பன்பிராமண தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம்?: அரசியல் ரீதியாக, மாரிதாஸுக்கும் திக-திமுக-கம்யூனிஸ்டுகள்-பெரியாரிஸ்டுகள்-அம்பேத்கரைட்டுகள் முதலியோருக்கும் சச்சரவு என்றால், அதில் பார்ப்பனர்-பிராமணர் என்று சொல்லிக் கொண்டு அவர்களது தலைகளை உருட்டுவதேன்?

  • 1930களில் பிரமாணர் அல்லாத இயக்கம்,
  • 1940களில் பிராமண எதிர்ப்பாகி,
  • 1950களில் பார்ப்பன துவேசமாகி,
  • 1960களில் பூணூல்கள் அறுக்கப் பட்டு,
  • 1970களில் வார்த்தைத் தீவிரவாதங்களில் வறுக்கப் பட்டு,
  • 1980களில் அடிக்கப் பட்டு
  • 1990களில் வெட்டப் பட்டு,
  • 2000களில் அசிங்கப் படுத்தப் பட்டு.
  • 2010களில் பன்றிக்கு பூணூல், பூணூல் அறுப்பு முதலியவையாகி
  • 2020களில், மறுபடியும் வேரறுப்போம் என்று முடிந்துள்ளது.

Why Brahmins are targeted for all debates, issues etc, pande

பிராமணர்களுக்கு எச்சரிக்கை: இப்படி பேசப்படும்போது, பிராமணர்கள் தாக்கப்படுவது நோக்கத்தக்கது.

  1. ஆகவே, முன்பே குறிப்பிட்டபடி, இதனால் மறுபடியும் சில குடுமிகள், பூணூல்கள் அறுக்கப்படலாம்.
  2. அயோத்யா மண்டபத்தின் பிராமணர்கள் தாக்கப்படலாம் அல்லது மீது பெட்ரோல் குண்டு எரியப்படலாம்.
  3. ராகவேந்திர மடங்களில் விக்கிரங்கள் உடைக்கப் படலாம்.
  4. அவர்களும் பேச்சிற்கு திகவினருக்குப் பதிலாக பெரியார்-திக என்று யாரையாவது கைது செய்து விஷயத்தை அமுக்கிவிடலாம்.

Brahmins disparaged as dogs by DMK Bharathy and others

ஆனால், உலகத்தில், இப்படி பிராமணர்கள், “பிராமணர்கள்” என்ற ஒரே காரணத்திற்காக திட்டப்படுவது, அவமானம் செய்யப்படுவது, தாக்கப் படுவது, பெண்கள் இழிவுப் படுத்தபடுவது, ஊடகங்கள் கேவலப்படுத்துவது, ஆட்சியளர்கள், அதுவும் முதல் மந்திரி, மற்றவர்கள் அவதூறு பேசுவது போன்றவை, வேறெங்கும் நடக்காது என்பது நிச்சயமே. ஆகவே, ஏன் பிராமணர்கள் இவ்வாறுத் தாக்கபடுகிறர்கள்? அவ்வாறு தாக்குபவர்களின் மனோநிலை என்ன? மனோதத்துவம் என்ன? இல்லையென்ற பிறகும், இருக்கிறது என்று இனவெறியை மனத்தில் ஏற்றிக் கொண்டு, “பார்ப்பனீயத்தை எதிர்ப்போம்” என்ற சித்தாந்தத்தின் முகமூடியில் ஜாதிவெறியை வைத்துக் கொண்டு இவ்வாறு உலா வருவது ஏன்?

© வேதபிரகாஷ்

13-07-2010

Parppaniyam caught between dravidatvam and hindutwam-suba veerapandian

இந்துத்துவம் பிணைக்கும் போது பிஜேபிகாரன், ஆர்.எஸ்.எஸ்.முதியவரைக் கொலை செய்ய முடியுமா? குற்ற மனப்பாங்கு எப்படி வந்தது – சுயபரிசோதனை செய்யவேண்டும்!  

ஜூலை 3, 2020

இந்துத்துவம் பிணைக்கும் போது பிஜேபிகாரன், ஆர்.எஸ்.எஸ்.முதியவரைக் கொலை செய்ய முடியுமா? குற்ற மனப்பாங்கு எப்படி வந்ததுசுயபரிசோதனை செய்யவேண்டும்!

Self-introspection required to check-power struggle or ideology failure

கருடா சௌக்கியமா? பரசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கேட்டது!: அதிகாரம் ஊழலை உண்டாக்கும், சிதைக்கும், அதுபோல, அளவுக்கு அதிகமான அதிகாரம், எதேச்சாதிகாரம் அதிக அளவில் ஊழலை, நாசத்தை, சேதத்தை உண்டாக்கும் (Power corrupts, absolute power corrupts absolutely). ஒரு சாதாரண மனிதன் கூட, அதிகாரத்தைக் கொடுத்தால், கொஞ்சம் கொஞ்சமாக அகம்பாவம், ஆணவம், திமிர், மமதை, இருமாப்பு என்று ஆட ஆரம்பித்து விடுவான். “யாரும் இருக்கும் இடத்தில் இருது கொண்டால், எல்லாம் சௌக்கியமே,” கருடன் சொன்னது. இந்துத்துவ வாதிகளுக்கு, இதெல்லாம் தெரியாது என்று சொல்ல முடியாது. தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகளால், முதலில் சுய-பரிசோதனை செய்து கொண்டு, என்ன பிரச்சினை என்று அறிந்து, அதனை தீர்க்க முயற்சிக்க வேண்டும். பிரம்மாவை ஒதுக்கி, சிவனைப் போல வரம் கொடுத்துக் கொண்டே இருந்தால், பஸ்மாசுரர்கள் அதிகமாகிக் கொண்டே இருப்பார்கள். கட்டுப் படுத்த வேண்டும். லெட்டர்பேட், விசிடிங் கார்டுகள் அதிகமாகின்றன எனும்போதே, செக் வைக்க வேண்டும்.

Shri Vijayendra Swamigal Mutt, Kumbakonam HO - Temples in Kumbakonam

அபினவ் தீர்த்தசுவாமி சொத்துக்களும், ஆக்கிரமித்த பிஜேபி தலைவரும்: மடத்தின் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் வடக்கு மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலன் (68), (வயது 80) என்கிறது மாலைமுரசு, 65 என்கிறது இன்னொரு ஊடகம்[1]. ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மகன் வாசுதேவன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மண்டல பொறுப்பாளர்[2]. அப்பகுதியில் உள்ள அபினவ் தீர்த்தசுவாமி மடத்தின் பொறுப்பாளராக கோபாலன் இருந்துவந்தார்[3]. இந்த மடத்துக்கு கும்பகோணம், நாச்சியார்கோவில் பகுதியில் நிறைய சொத்துக்கள் உள்ளதால், இதை கோபாலன்தான் நிர்வகித்து வந்துள்ளார். இந்த மடத்துக்கு சொந்தமான 13 கடைகள் அப்பகுதியில் உள்ளன. இங்கு கடை நடத்தியவர்களில் பலர் வாடகை செலுத்தாமல் இழுத்தடித்ததால், மடத்தின் நிர்வாகத்தினர் கூறியதன்பேரில், அனைவரும் கடைகளை காலி செய்துவிட்டனர். ஆனால், அங்கு டெய்லர் கடை நடத்திவந்த பாஜகவின் நாச்சியார்கோவில் நகரத் தலைவரான சரவணன் (48) மட்டும், கடையை காலி செய்ய மறுத்துவிட்டார்.

BJP person kills RSS worker, Velli Idazh, 02-07-2020

நீதி மன்றத்திற்குச் சென்றது, காலிசெய்யச் சொன்னது:  இதையடுத்து, நீதிமன்றத்தில் கோபாலன் தொடர்ந்த வழக்கில், கடையை காலிசெய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதால், கடை காலி செய்யப்பட்டது. இதுதான் இவர்களுக்கு இடையே பிரச்சனையாக இருந்தது[4]. முதலில் 2 லட்சம் வாடகை பணத்தை தருகிறேன் என்றவர் நாளடைவில், “இது என் அப்பா வெச்ச கடை, ரொம்ப வருஷமா கடை வெச்சிருக்கோம். நீ கோர்ட்டுக்கு போனால்கூட கடை எங்களுக்குதான்,” என்று சொல்லி உள்ளார். சரவணன் இப்படி சொல்லிவிட்டதால், கோபாலன் வேறு வழி தெரியாமல் கோர்ட் உதவியை நாடினார்.. கடைசியில் சரவணனை கடையை காலி செய்ய கோர்ட் சொல்லிவிட்டது. இந்த உத்தரவையடுத்து, “கடையை காலி செய்தால் ரூ.2 லட்சம் தரேன்னு சொன்னீங்களே அந்த பணம் எங்கே,” என்று கோபாலன் கேட்டார்.. அதற்கு சரவணன், “அது கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி சொன்னது, இப்பதான் தீர்ப்பு வந்துடுச்சே” என்று வாக்குவாதம் செய்து வந்துள்ளார்[5].

How BJP Saravanan could kill RSS old man-news

முதியவர் கோபாலன் 30-06-2020 அன்று கொலை செய்யப் பட்டார் – 01-07-2020 மாலை செய்தி: 30-06-2020 செவ்வாய் கிழமை, இரவு தனது வீட்டின் திண்ணையில் கோபாலன் அமர்ந்து இருந்தார்[6]. முதலில் வாக்குவாதம் நடந்துள்ளது[7]. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கோபாலனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்[8]. இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கோபாலன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்[9]. இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மடத்தின் பொறுப்பாளராக பதவி வகித்து வந்த கோபாலன், மடத்துக்கு சொந்தமான சில கடைகளை பல மாதங்களாக போராடி காலி செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

BJP person kills RSS worker, Tamil Hindu, 02-07-2020

பிஜேபி நகரத்தலைவர் கொன்றதை ஒப்புக் கொண்டது, 02-07-2020 மாலை செய்தி இதனால், கோபத்தில் இருந்துவந்த சரவணன் 30-06-2020 இரவு மதுபோதையில் சென்று, தன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த கோபாலனை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில், கோபாலன் உயிரிழந்தார். நாச்சியார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர்[10]. விசாரணையில் உண்மையினை ஒப்புக் கொண்டார் என்று போலீஸார் கூறுகின்றனர்[11]. இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம்[12]. “கடையை காலி செய்யச் சொன்னதால் கோபாலன் மீது கோபத்தில் இருந்துள்ளார் சரவணன். இவர் பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ளார். இந்நிலையில் கொரோனாவால் டெய்லர் கடை வருமானமும் போய்விட்டதால், பணரீதியாக கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் கோபாலன் மீதான ஆத்திரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த சரவணன் மாம்பழம் வெட்டுவதற்கு எனக் கூறி புதிய கத்தி ஒன்றை வாங்கி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு முன் நின்றுகொண்டிந்த கோபாலனிடம், ` என் கடையைக் காலி செய்ய வைத்துவிட்டாயே.. உன்னை சும்மாவிடமாட்டேன்’ எனக் கூறி கத்தியைக் கொண்டு முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிக் கொலை செய்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சரவணனைக் கைது செய்துவிட்டோம்” என்றனர்[13].

BJP person kills RSS worker, Tamil One India, 02-07-2020

இது என் அப்பா வெச்ச கடை, ரொம்ப வருஷமா கடை வெச்சிருக்கோம். நீ கோர்ட்டுக்கு போனால்கூட கடை எங்களுக்குதான்,”: பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ள சரவணன் இவ்வாறு சொன்னதில் பல திடுக்கிடும் விவரங்கள் வெளி வருகின்றன:

  1. கோவில்-மடத்து சொத்து என்று சரவணனுக்குத் தெரிந்திருக்கிறது.
  2. பிஜேபி கோவில்-மடத்து சொத்துக்களை அரசிடமிருந்தே மீட்க போராடி வருவது தெரிந்த விசயமே.
  3. “உழுதவனுக்குத் தான் நிலம்,” என்பது போல, “ஆக்கிரமிப்புக் காரனுக்குத் தான் சொத்து சொந்தம்,” என்ற தத்துவத்தை யார் சொல்லிக் கொடுத்தது?
  4. அந்நிலையில் பிஜெபி தலைவரே, அவ்வாறு மடத்து சொத்தினை அபகரித்து, தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
  5. பிஜேபிகாரர்களுக்கு அவ்வாறு தான் பயிற்சி அளிக்கப் படுகிறதா? சரவணனுக்கு அத்தகைய எண்ணன் வந்தபோதே, அவன் தடுக்கப் பட்டிருந்தால், இத்தகைய ஆக்கிரமிப்பு நடந்திருக்காது.
  6. கோவில்-மடத்து சொத்துக்கள் ஆக்கிரமிப்பு என்றால், சமூகவளைதளங்களில் இந்துத்துவவாதிகள் பிண்ணி எடுத்து விடுகிறார்கள்.
  7. ஆனால், இதை எப்படி கண்டு கொள்ளாமல் விட்டர்கள் என்று தெரியவில்லை.
  8. ஆகவே, சட்டப் படியான நடவடிக்கை, போராட்டம், மீட்பு எனும்போது, சம்பந்தப் பட்டவர்கள் கொள்கைகளுடன் செயல்பட வேண்டும்.
  9. நானும் மற்றவர்களைப் போல [திக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் ஆக்கிரமிப்புக் காரர்கள்] ஆக்கிரமித்துக் கொள்வேன், தனதாக்கிக் கொள்வேன் என்ற மனப்பாங்கில் இருந்தால், பிஜேபியில் இருக்க வேண்டிய அவசியமே இல்லையே?
  10. அதிகாரம், பணம் எல்லாம் வந்தால், அகம்பாவம், ஆணவம், திமிர் எல்லாம் வரலாம், ஆனால், இந்து என்ற உணர்வு இருக்க வேண்டும். அது இல்லாமல், இவ்வாறு செயல்பட்டதால் தான், இந்த ஆள் கொலையும் செய்திருக்கிறான்.

இந்துத்துவவாதிகள், இந்துத்துவ அரசியல்வாதிகள், இந்துத்துவ சிந்தனையாளர்கள், இந்துத்துவ அபிமானிகள் …இவற்றைப் பற்றி பொறுமயாக ஆராய வேண்டும், மாற்றிக் கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

02-07-2020

BJP person kills RSS worker, Tanjai Malar, 02-07-2020

[1] ஊடகங்கள் எப்படி விவரங்களை சேகரிக்கின்றன, செய்திகளாகப் போடுகின்றன, செய்திகளாக்குகின்றன, அவற்றின் தரம் எப்படியுள்ளது என்பதனை, இது போன்று என்னுடைய பல பதிவுகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

[2] தமிழ்.இந்து, ஆர்எஸ்எஸ் பிரமுகரின் தந்தை கொலை; நாச்சியார்கோவில் நகர பாஜக தலைவர் கைது, Published : 02 Jul 2020 07:33 AM; Last Updated : 02 Jul 2020 07:37 AM

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/562225-bjp-leader-arrested-for-rss-cadre-murder.html

[4] தமிழ்.ஒன்.இந்தியா, 65 வயது ஆர்எஸ்எஸ் பிரமுகரை.. கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற.. பாஜக நிர்வாகி.. ஷாக்கில் கும்பகோணம்! By Hemavandhana | Updated: Wednesday, July 1, 2020, 17:44 [IST]

[5] https://tamil.oneindia.com/news/thanjavur/kumbakonam-mattam-incharge-murder-by-bjp-cadre-390012.html

[6] தினமணி, கும்பகோணம் அருகே அபிநவதீர்த்தர் மடத்தின் பொறுப்பாளர் கொலை, By DIN | Published on : 30th June 2020 10:36 PM.

[7] https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jun/30/uttaradi-mutt-incharge-killed-near-kumbakonam-3431524.html

[8] மாலைமலர், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் தந்தை கொலைமர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு, பதிவு: ஜூலை 01, 2020 13:23 IST

[9] https://www.maalaimalar.com/news/district/2020/07/01132323/1661015/RSS-Administrator-father-murdered-police-investigation.vpf

[10] NEWS18, தஞ்சையில் 87 வயது முதியவர் கொலையில் சிக்கிய பாஜக முன்னாள் நிர்வாகி, LAST UPDATED: JULY 2, 2020, 8:59 PM IST.

[11] https://tamil.news18.com/news/live-updates/tanjore-rss-man-murder-ex-bjp-man-arrested-san-312139.html

[12] விகடன், `வருமானமும் போச்சு.. கடையும் போச்சு!’ –மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.. நிர்வாகி, கே.குணசீலன், Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM.

[13] https://www.vikatan.com/news/crime/old-man-murdered-by-bjp-cadre-in-kumbakonam?artfrm=v4

How BJP Saravanan could kill RSS old man-Vikatan

ராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன்? இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன? [2]

ஜூன் 30, 2020

ராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன்? இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன? [2]

Vrksasana, Satapathy B, Sahay GS. A brief introduction of Yogāsana - Jaina-An unpublished yoga manuscript.

ஜைனபௌத்த ராமாயணங்கள் மற்றும் சூப்பனகையின் மகன் சம்புகன்: ஜைன ராமாயணங்களில் மூன்று வகைகள் / புரட்டி மாற்றிய வடிவங்களில் உள்ளன[1].

  1. விமலசூரி (3rd century BCE and 4th century CE).
  2. குணபத்ரன் (fl. fourth century CE)
  3. சம்கதாசன் (fl. fifth century CE)

 என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, ராமாயணங்களை பாலி, சமஸ்கிருதம், அப்பிரம்ஸா மொழிகளில் எழுதி வைத்தனர். இவையெல்லாமே, “விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா” பாணியில் எழுதப் பட்டவை. ராமனுடைய எதிரிகளான ராவணன், வாலி எல்லோருமே ஜைனர்கள். லக்ஷ்மணன் தான் ஹீரோ, ராமனின் சகோதரி சீதை என்றுதான் உள்ளன. இன்னொரு ஜைன ராமாயணத்தில், ராவணனின் மகள் சீதை என்ற கதையும் எழுதி வைத்தனர். கௌசிக ராமாயணத்தில் வரும் சம்புகனை, லக்ஷ்மணன் கொல்கிறான். அவன் சூப்பணகையின் மகனாக சித்தரிக்கப் படுகிறான். அவன், ஒரு சக்தி வாய்ந்த கத்தியைப் பெற, தலைகீழாகத் தொங்கி தவம் செய்வது போல சித்தரிக்கப் படுகிறான்[2]. இங்கு, இந்த சம்புகனைக் கொல்வது லக்ஷ்மணன், ராமன் இல்லை. ஏனெனில், ஜைன ராமாயணத்தில், ஹீரோ லக்ஷ்மணன் தான். சீதை ராமனுக்கு சகோதரி. ஆக இப்படி 300[3], 3000 ராமாயணங்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். ஆக, ஒன்றொன்றிற்கும், விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. இந்துக்கள் இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அதனால் தான் “சம்புக வதம்” என்று நாடகங்கள்[4], நடத்தினாலும், வெகுஜன மக்களின் மீது எந்த தாக்கமும் இல்லை. அதாவது, அவை பொய் என்பதால், கண்டு கொள்வதில்லை. 1987க்குப் பிறகு, இப்பொழுது 2020ல் ராமாயணத்தை மறுபடியும் தொலைக்காட்சியில் காட்டினால், கோடிக்கணக்கில் மக்கள் குடும்பத்துடன் கண்டு களிக்கின்றனர். அமெரிக்க பல்கலைக் கழகங்களில் இருந்து, ஆராய்ச்சி செய்கிறேன் என்று, புத்தகங்களை வெளியிட்டுபவர்கள், முதலில், இவ்வுண்மையினை அறியவேண்டும்..

Rama beheading Shambuka -vedaprakash

பிராமண, ஜைன, பௌத்த மடாலயங்கள்-ஆஸ்ரமங்களின் வேறுபாடு: ஜைன-பௌத்தர்கள் உடலுடன் நிர்வாணம் / நிரியாணம் அடைய முயன்றுள்ளனர். அதற்க்காக, மந்திர-தந்திர-யந்திர முறைகளில், “வஜ்ராயன தந்திரம்”, “வாமாசாரம்” போன்ற யுக்திகளைக் கையாண்டுள்ளனர். அவற்றில் தான், இவ்வாறாக, தலைகீழாகத் தொங்கி தவம் செய்தல், யாகம் செய்தல், தலையை அறுத்து பலி கொடுத்தல், போன்றவை விளக்கப் படுகின்றன. விக்கிரமாதித்தியன் போன்ற கதைகளில் காளிக்கு பலி கொடுக்கும் மந்திரவாதியைக் கவனித்திருக்கலாம். ஜைன ஓலைச்சுவடிகள், சித்திரங்கள் மற்றும் புத்தகங்களில் இத்தகைய “தலைக்கீழ் முறை” யுக்திகள் விளக்கப் பட்டிருக்கின்றன. “விருக்ஷாஸன” என்று ஜைனத்தில் ஒரு ஆசனம் உள்ளது. ஆனால், வேதங்களில் அத்தகைய முறைகள் இல்லை. பிராமணர்களின் தொழில் படிப்பது-படிக்கவிப்பது என்றிருந்ததால், நூல்கள், பள்ளிகள் / ஆஸ்ரமங்க்கள் முதலியவற்றை அவர்கள் நடத்தி வந்தார்கள். பிராமணர்களிடம் சத்திரியர்கள் கல்வி கற்க அனுப்பப் படுவதை இதிகாசம்-புராணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், ஜைன-பௌத்த கல்விகூடங்கள், மடங்கள், விஹாரங்கள் தோன்றியபோது, அவை தொலைவில், மலைப்பகுதிகளில் செயல்பட்டன. திகம்பர ஜைனர்கள் தனியாக வாழ்ந்தனர். பௌத்தர்களின் மடாலயங்களும் அவ்வாறே செயல்பட்டன. மந்த்ரகா த போஸ் என்ற ஆராய்ச்சியாளர், தான் இதுவரை, ராமன் வாலி மற்றும் சம்புகனைக் கொன்றது போன்ற சித்திரம் / ஓவியத்தை பார்க்கவில்லை என்கிறார். 17ம் நூற்றாண்டு பாரசீக ஓவியத்தில்காணப்படுவதால், அத்தகைய பிரதிபலிப்பு பிறகு உண்டாகியிருக்க வேண்டும்.

Rama killing Sambuka paintings-no

சம்புகனை ராமர் கொன்றார்கட்டுக்கதை, பரப்பும் விதம்: ஆனால், இவற்றையெல்லாம் விடுத்து, மறைத்து இன்றும் கீழ்கண்டவை நடந்து வருகின்றன:

  1. கட்டுக்கதை என்று தெரிந்தும், “ராமன் சம்புகனைக் கொன்றான்” கதையை, இந்துவிரோதிகள் அவ்வப்போது, அவிழ்த்து விடுவர், விடுகின்றனர்!
  1. வால்மீகி ராமாயணத்தில், இல்லை, அது இடைச்செருகல் என்று பற்பல சரித்திராசிரியர்கள், பண்டிதர்கள் எடுத்துக் காட்டினாலும் அது தொடர்கிறது.
  1. சம்புகன் தலைகீழாகத் தொங்கி கொண்டு தவம் செய்தான், யாகம் செய்தான், வித்தைக் காட்டினான் என்றெல்லாம் புனைவுகள்!
  1. அதுமட்டுமல்ல, அப்படியே அதே தேகத்துடன் சுவர்க்கத்திற்கு போக வேண்டும் என்று தவத்தை / யாகத்தை ஆரம்பித்தான், என்று சொல்லிக் கொள்கிறான்!
  1. அப்படியெல்லாம் செய்யப் படும் தவங்கள் வேதங்களில் இல்லையே, எந்த பிராம்மணனும் பார்ப்பானும் செய்ததில்லை, இன்றும் செய்வதில்லையே?
  1. பிறகு சம்புகன் அதை யாரிடமிருந்துக் கற்றுக் கொண்டான்? ஜைன-பௌத்த தந்திரங்களில் அத்தகைய கடின யுக்திகள் உள்ளன!
  1. ஆக, ஜைனர்கள் எப்படி ராமாயாணத்தை தலைகிழாக்கி “ஜைன ராமாயணத்தைப்” புனைந்தனறோ, அதே போல பௌத்தர்கள் செய்த வினைதான் இது!
  1. விஸ்வாமித்திரர் அவ்வாறு பிடிவாதமாக முயற்சித்தது, க்ஷத்திரிய-பிரமாண மோதலை, வெறுப்பை வெளிப்படுத்த புனைந்தது.
  1. சம்புகன் ராமன் புனைவு க்ஷத்திரிய-சூத்திர மோதலில் வெளிப்பாடாக்கியது, விக்ரம்-வேதாளக் கதைகளில் சுருண்டது!
  1. ஏனெனில் ராமர்- குஹன், சபரி, அனுமன், விபீஷணன் என்று எல்லோரிடத்திலும் அன்பாக இருந்தார். அதாவது, எஸ்.டி மற்று எஸ்.சிக்களின் விடுதலை வீரர்!
  1. ஆக, சம்புகனை ராமன் ஏற்கவில்லை என்பது ஒவ்வாதது, பௌத்தர்கள் விஷமத் தனம் – இடைசெருகல் செய்தும் மாட்டிக் கொண்டனர்!
  1. விஸ்வாமித்திரர்-சம்புகன்-விக்கிரமதி்த்தன் கதைகள், தலைகீழாக தொங்கும் விவகாரங்கள் தான். “தலைகீழ் தொங்கல்” வேலை தொடர்கிறது!

© வேதபிரகாஷ்

29-06-2020

Vikram-vetal-not clear picture

[1] The story of Rama in Jainism can be broadly classified into three groups; Samghadasa’s version, Vimalsuri’s version and Gunabhadra’s version.

Vimalsuri’s version

Author                        Language                        Work

Vimalsuri Prakrit Paumchariya
Shilankacharya Prakrit Chaupannamahapurusa Chariyam
Haribhadra Prakrit Dhurtakhyana
Bhadreshvara Prakrit Khavali
Shilankacharya Prakrit Chaupannamahapurusa Chariyam
Ravishena Sanskrit Padmapurana
Yogashastra Vritti Sanskrit Hemachandra
Hemchandra Sanskrit Trishashtisalakapurusha Charitra
Dhaneshvara Sanskrit Shatrunjaya Mahatma
Svayambhu Apbhramsha Paumchariyu
Gunabhadra’s Version

Author                      Language           Work

Gunabhadra Sanskrit Uttarpurana
Krishna Sanskrit Punyachandrodaya
Pushpadanta Apbhramsha Mahapurana

Samghadasa’s version

Author Language Work

Samghadasa Gani Prakrit Vasudevahindi
Harisena Prakrit Kathakosha

[2] John Brockington, Mary Brockington, The Other Ramayana Women: Regional Rejection and Response, Routledge, New York, 2016

[3] Ramanujan, A.K. 1992. Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translation, in Many Ramayanas: The Diversity of a Narrative Tradition in South Asia in (Paula Richman ed.) pp. 22-49. Delhi: Oxford University Press.

[4] Richman, Paula. Why Can’ta Shudra Perform Asceticism? Sambuka in Three Modern South Indian Plays.” The Ramayana Revisited (2004): pp.125-148.

Between 1920 and 1954, in sharp contrast, three influential south Indian playwrights analyzed below responded to Sambuka’s beheading not with approval but with horror. Juxtaposing plays in Telugu, Tamil, and Kannada suggests how troubling Rama’s beheading of a shudra proved in twentieth-century south India. The earliest of the three plays examined in this essay was written in Telugu by Tripuraneni Ramasvami Chaudari (1887–1943).

A more extreme attack on Rama’s treatment of S ambuka appears in the 1954 play titled Ramayana Natakam [Ramayana drama] by Thiruvarur K. Thangaraju, a Tamil journalist, playwright, and actor.

In the mid-1940s, Sudra Tapasvi  [The Shudra ascetic] was published in Kannada. Its author, K. V. “Kuvempu” Puttappa (1904–1994) enjoyed an extraordinarily successful career as a writer and public intellectual in Karnataka.

Tozy turvy punishment

ராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன்? அதன் பின்னணி என்ன? [1]

ஜூன் 30, 2020

ராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன்? அதன் பின்னணி என்ன? [1]

Sambuka episode.sketch, muslim

ஷம்பூகன் (शंबूक) என்ற பெயரும், புனையப்பட்டக் கட்டுக் கதையும்: சம்புகன் என்று தமிழில் உபயோகப் படுத்தினாலும், அவனது பெயர் ஷம்பூக / ஷம்பூகன் (शंबूक) என்று குறிப்பிட வேண்டும். ஆனால், இது கூட தெரியாமல், வாத-விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வால்மீகி ராமாயணம், ஜைன ராமாயணம், பௌத்தக் கதைகள் முதலியவற்றைப் படிக்காமல், பக்கம்-பக்கமாக எழுதிக் கொண்டிருப்பார்கள், இருக்கிறார்கள். இதில் திகைப்படைய வேண்டிய விசயம் என்னவென்றால், பல்கலக் கழகங்களில் பேராசிரியர், ஆராய்ச்சியாளர், சரித்திராசியர், தமிழில் பெரிய புலவர் என்றெல்லாம் இருப்பவர்கள் தான், மூலங்களைப் படிக்காமல், சரி பார்க்காமல், இரண்டாம் மூலங்களை (secondary sources), இரண்டாம் தர எழுத்துக்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு, ஒருத்தர் குறிப்பிட்டதை-இன்னொருவர் குறிப்பிடுவது என்ற முறையில் (quoted-quoted methodology), பொய்களை வளர்த்து, போலித்தனத்துடன் கட்டுக்கதைகளைப் புனைத்து பரப்பி வருகின்றனர். ஜாதியத்தையும் சேர்த்தால், உணர்ச்சிகளைத் தூண்டும் வகையாகி விடும். பிறகு, அவ்வழியில் வாத-விவாதங்கள் செல்லும் போது, உண்மைப் பற்றிக் கவலைப் படுவதே இல்லை. இதைத்தான் திட்டமிட்டு செய்து வருகின்றனர்.

Rama serching for Shambuka-2

சம்புகன்[1] கொலைசெய்யப் பட்ட கதை: ராமர் ஆண்ட காலத்தில், ஒரு பிராமணனின் குழந்தை அகால மரணம் அடைந்து விடுகிறது. அப்பொழுது, அந்த பிராமணன், அரசவைக்கு வந்து, “ராம ராஜ்யம்” நடக்கிறது என்றால், இப்படி நடக்குமா என்று முறையிடுகிறான். சூத்திரன் யாகம் செய்வதால் அவ்வாறு நடக்கிறது என தெரிந்ததால், ராமன் தேடிப் போகிறான். ஒரு துறவி, தலைகீழாக நின்று உக்கிர தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு , “ துறவியே, மங்களம் உண்டாவதாக, நீர் பிராமணரா, வெற்றிக் கொள்ள முடியாத க்ஷத்திரியரா, வைசியரா அல்லது சூத்திரரா?,” என்று கேட்டபோது, “நான் சூத்திரனாகத் தான் பிறந்தேன். நான் இந்த உடலோடு சுவர்க்கம் செல்வதற்காகத் தான், இக்ககடினமான தபசை செய்கிறேன். எனக்குத் தெரியும் நான் சூத்திரன் தான், நான் சம்புகன்,” என்று பதில் கொடுக்கிறான். இதனால், ராமன் அது ஒவ்வாதது என்று, அவனை கத்தியால் வெட்டி கொலைசெய்கிறான். அதே நேரத்தில், அந்த பிராமணக் குழந்தை உயிரோடு எழுகிறது. இக்கதை வால்மீகி ராமாயணத்தில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். பிறகு, எழுதி சேர்க்கப் பட்ட “உத்தர காண்டத்தில்” உள்ளது.  இருப்பினும், இதைத்தான் ஆதாரமாக வைத்துக் கொண்டு 2020லு வாதித்துக் கொண்டிருக்கின்றனர். ராமன் மனுதருமத்தை நிலைநிறுத்த, பார்ப்பன வருணாஷ்ரமத்தைக் காக்க சூத்திரனைக் கொன்றான். அதே போல, இப்பொழுது “ராம ராஜ்யத்தை” உண்டாக்கினால், சூத்திரர்கள் கொலை செய்யப் படுவர் என்பது போல, பேச்சுகளும், எழுத்துகளும் அதிரடி பிரச்சாரங்களாகத் தொடர்கின்றன.

Sambuka episode. N.L. Gupta, An Introduction to Eastern Ways of Thinking, Concept Publications P.Ltd., New delhi, 2003

எஸ்.டி, எஸ்.சிக்கள் வனவாசி, மலைவாசி, சூத்திரர்கள் உதவியுடன் தான் ராமன் போரிட்டு வென்றிருக்கிறான்: ராமன் சூத்திரர்களின் உதவியால் தான், போராடி வெற்றிப் பெற்றிருக்கிறான். சரயூ நதியைக் கடக்க உதவிய படகோட்டி குகன் சூத்திரன் / நிஷாதன் தான். வேடனாக இருந்த குகனை ராமன் கட்டித் தழுவுகிறான் பிறகு சபரி கொடுத்த உணவைப் புசிக்கிறான். அப்பெண்ணும் சூத்திரப் பெண்தான், ஆனால், அவள் கொடுத்த உணவை ராமன் உண்டது உணர வேண்டும். பிறகு, அனுமன், சுக்ரீவன், ஜடாயு, ஜாம்பவான்…. போன்றவர்கள் வனவாசிகள். விபீஷ்ணன் அரக்கன் / ராக்ஷசன்.  ஜடாயுக்கு மகனைப் போல இறுதி சடங்குகளை செய்கிறான். அங்கு, ஜடாயு உண்மையில் பறவையா அல்லது காட்டுவாசியா என்று ஆய்ந்தால் கூட, பறவைகளைக் கூட மதிப்பவனாக சேவை செய்யும் மனிதனாக இருந்தான். பிறகு வானரங்கள், கரடிகள், அணில் என்று எல்லா விலங்குகளிடமும் பிரியமான நண்பனாக இருக்கிறான். எல்லாவற்றையும் விட, ராமனே க்ஷத்திரியன் தான். ஆக எஸ்.டி, எஸ்.சிக்கள் தான் ராமனுக்கு உற்ற தோழர்களாக இருந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து இருந்து, ராவணுடன் போரிட்டிருக்கிறான். தான் பட்டம் சூட்டிக் கொள்ளும் போதும், அனைவரையும் வரவழைத்துப் பாராட்டியிருக்கிறான். தசரதன் பிள்ளைக் கொன்ற பாவமும் அவரை விடவில்லை. ராமன் வாலியைக் கொன்ற பாவமும் விடவில்லை. இதெல்லாம் நம்புகிறவர்கள் ரசிப்பர். இப்படி வேறுபாடு பார்க்காமல், எல்லோருக்கும் நண்பனாக, சகோதரனாக, அவர்களது மேன்மைக்கு பாடுபட்ட, ராமனை இவர்கள் ஏன் தூஷிக்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். ஆக, வால்மீகி ராமயணத்தின் படி, இக்காலத்தில் சொல்லபடும் எதுவும் இல்லை. எனவே பொய் சொல்கிறார்கள் என்று தெரிகிறது.

Uttrarakandam interpolated-1

க்ஷத்திரிய-பிராமண போராட்டமும், ஜைன-பௌத்த இடைசெருகல்களும்: வசிஷ்டர்-விஸ்வாமித்திரர் கதைகள், பிராமண-க்ஷத்திரிய போராட்டங்களை எடுத்துக் காட்டுகின்றன. அது பசு விவகாரத்தில் தான் ஆரம்பிக்கிறது. காமதேனு என்ற பசுவால் விஸ்வாமித்திரர் படைவீரர்கள் கொல்லப் பட்டனவோ, இல்லையோ, பசுக்கள் கொல்லப் பட்டன. போர்களில், “ஆநிரைகள்” கவரப் பட்டன. அந்நேரத்தில் எத்தனை ஆநிரைகள் பாதிக்க-காயப் பட்டு தவித்தன, என்பதை யோசிக்க வேண்டும். விஸ்வாமித்திரரும் அந்த வேலையை செய்யும் போது தான் மோதல் ஆரம்பிக்கிறது. திரிசங்குவும், தன்னுடைய சுவர்க்கத்திற்கு போக முயல்கிறான், முடியவில்லை. விஸ்வாமித்திரர் யாகம் செய்து அனுப்பி வைக்கிறார். ஆனால், இந்திரன், அவரை ஏற்காமல், தள்ளி விடும் போது, தலைகீழாக விழுகிறான். விஸ்வாமித்திரர் தடுத்துக் காப்பாற்றுகிறார். ஆக, இந்த உடலோடு சுவர்க்கம் போகும் கதைகள் இருந்துள்ளன. ஜைனர்கள் “சல்லேகன” என்று உண்ணாவிரதம் இருந்து இறந்திருக்கின்றனர். ஆனால், சுவர்க்கம் கிடைத்ததா என்று தெரியவில்லை. புத்தரும் “நிரியாணம்” கிடைக்க பாடுபட்டாலும், பன்றி கறி சாப்பிட்டு இறந்ததாகத் தெரிகிறது. அந்நிலையில் தான், ஜைன-பௌத்தர்கள் இடைச்செருகல்களை ஆரம்பித்தனர்.  ஆக, கடவுள் கொள்கையை மறுத்த சத்திரியர்களான, மகாவிரரும், புத்தரும் சுவர்க்கத்திற்கு சென்றார்களா என்று தெரியவில்லை.

Uttrarakandam interpolated-2

சம்புகன், ராமன், க்ஷத்திரியன், அம்பேத்கர்: ராமன் க்ஷத்திரியன், சம்புகன் சூத்திரன் என்றால், க்ஷத்திரியன் சூத்திரனைக் கொன்றான் என்றாகிறது. அம்பேத்கரின் ஆராய்ச்சியின் படி, சூத்திரர்கள் தரமிழந்த, தாழ்ந்த க்ஷத்திரியர்கள் (degraded Khatriyas) தான்[2]. அப்படியென்றால், ஒரு க்ஷத்திரியன், இன்னொரு க்ஷத்திரியனக் கொன்றிருக்கிறான். அதனால், தான், அம்பேத்கர், சம்புகன் கதையை பெரிது படுத்தவில்லை[3]. “முன்னரே குறிப்பிட்டப் படி, ராமன் ஒன்றும் பொதுப்பணி செய்யவில்லை….ஒரே ஒரு தடவை மக்கள் குறை கேட்க வெஇயே சென்றான். அதுவே பெரிய குற்றமாகி விட்டது,” என்று ஆரம்பித்து, சம்புகன் கதையை விவரித்து, “இது தான் ராமன்,” என்று முடித்து விட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம். பிறகு, “விக்கிரமாதித்தியனும், வேதாளமும்” கதைகளில், வேதாளம், மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். அதனால், விக்கிரமதித்தன் அதனை தோளில் சுமந்து, கதை கேட்பான். “கதாசரித் சாகர” போன்ற பௌத்தர்களின் கதைப் புத்தகம் போல, “விக்கிரமாதித்தியனும், வேதாளமும்” கதைகள் இடைகாலத்தில் தோன்றின. க்ஷத்திரியன் விக்கிரமாதித்யன், வேதாளத்தின் கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னதால், மண்டை உடையவில்லை, ஆனால், வேதாளம் மரத்தில் ஏறிக் கொண்டது. இங்கும் க்ஷத்திரிய-க்ஷத்திரியன்-அல்லாத மோதல் தான் வெளிப்படுகிறது. எனவே, அம்பேத்கர்வாதிகள், அம்பேத்கர் புத்தகங்களையே ஒழுங்காகப் படிக்காமல், திரித்து, பொய்மையுடன் வாதிட்டு வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

29-06-2020

Shuras, degraded Khatriyas, Ambedkar

[1] வசதிக்காகவும், புழக்கத்தில் உள்ளது என்ற காரணத்திற்காகவும் இவ்வார்த்தை உபயோகப் படுத்தப் படுகிறது.

[2]  B. R. Ambedkar, Who were Shudras?, pp.11-12.

(1) The Shudras were one of the Aryan communities of the Solar race.

(2) There was a time when the Aryan society recognized only three Varnas, namely, Brahmins, Kshatriyas and Vaishyas.

(3) The Shudras did not form a separate Varna. They ranked as part of the Kshatriya Varna in the Indo-Aryan society.

(4) There was a continuous feud between the Shudra kings and the Brahmins in which the Brahmins were subjected to many tyrannies and indignities.

(5) As a result of the hatred towards the Shudras generated by their tyrannies and oppressions, the Brahmins refused to perform the Upanayana of the Shudras.

(6) Owing to the denial of Upanayana, the Shudras who were Kshatriyas became socially degraded, fell below the rank of the Vaishyas and thus came to form the fourth Varna.

[3]  B. R. Ambedkar, Riddles of Rama and Krishna, Vol.4, pp.331-332.

“As has already been said Rama never attended to public business. He never observed the ancient rule of Indian kings of hearing the wrongs of his subjects and attempting to redress them. Only one occasion has been recorded by Valmiki when he personally heard the grievance of his subjects. But unfortunately, the occasion turned out to be a tragic one. He took upon himself to redress the wrong but. in doing so committed the worst crime that history has ever recorded. The incident is known as the murder of Sambuka the Shudra…… Rama thence proceeded to the Ashrama which was nearby of the sage Agastya, who commended the step he had taken with Sambuka, and presented him with a divine bracelet. Rama then returned to his capital. Such is Rama”.

John Brockington, Mary Brockington, The Other Ramayana Women- Regional Rejection and Response, Routledge, New York, 2016