Archive for the ‘ஆபாசம்’ Category
செப்ரெம்பர் 7, 2018
ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]

நிர்வாணமும் நாத்திக மதங்களும், இந்துவிரோத நாத்திகமும்: ஜைனமும்-பௌத்தமும் தம்மை நாத்திக மதங்களாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. ஜைனம் நிர்வாணத்தைப் பின்பற்றியது. இன்றும் திகம்பர சைன சந்நியசிகள் நிர்வாணமாகவே உலா வருகிறார்கள். ஆயிரம்-லட்சக்கணக்கான மக்கள் முன்பாக வந்து, அமர்ந்து, சொற்பொழிவாற்றுகின்றனர். பகுத்தறிவுவாதிகள், இந்துவிரோதிகள் இதனையும் எடுத்துக் காட்டி விம்ர்சனம் செய்து வருகின்றனர். புத்தர் “நிர்வாணம்” அடைந்தார் என்கின்றனர், ஆனால், அப்படி என்ன “நிர்வாணத்தை” அடைந்தார் என்பதை சொல்வதில்லை. எல்லாவற்றையும் துறந்தார் என்றால், ஆடையை அணிந்து கொண்டுதான் இருந்தார், நன்றாக சாப்பிட்டார், பன்றுகறி சாப்பிட்டு 81 வயதில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார் என்று பௌத்தர்களே எழுதி வைத்துள்ளனர். ஆகவே, “நிர்வாணம்” என்பது இவ்விரு மதங்களில் இவ்வாறாக உள்ளது. வளைகுடா நாடுகளில் ஜைன நிர்வாணம், கிரேக்க மத நமொஇக்கையாளர்களிடம் இருந்தது. துலுக்க மதத்தில் கூட இருந்ததை, “ஹஜ்” உதாரணத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

நிர்வாணமும், நிரியாணமும்: உண்மையில் “நிரியாணம்” என்றால் முடிவு, இறப்பு என்று பொருள். “நிரியாணம் அடைந்தார்” என்றால், இறந்தார் என்று பொருள். ஆனால், அதை சிறப்பிக்க, “நிர்வாணம்” அடைந்தார் என்று சொல்கின்றனர். ஆனால், திராவிட நாத்திகத்தில் அவ்வாறில்லை. ஈவேரா “நிர்வாண கிளப்பில்” உறுப்பினர் ஆனால், நிர்வாண போட்டோ எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் பீழ்த்திக் கொண்டாலும், அத்தகைய போட்டோவை வெளியிட தைரியமில்லை. அத்தகைய நிர்வாணத்தைப் பின்பற்ற அடிப்பொடிகளுக்கும், தடிகளுக்கும், பிஞ்சுசுகளுக்கும், குஞ்சுகளுக்கும், வெங்காயங்களுக்கும் வீரமில்லை. நாத்திக-பெரியரிஸ பெண்கள் தாலியறுக்கவும், தீச்சட்டி தூகுவதற்கும் “போஸ்” கொடுத்தார்கள். அதேபோல, தைரியமாக, இனமான திராவிடப் பெரியரைப் பின்பற்றி, நிர்வாணபுகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, புரட்சி செய்யவில்லை. நிரியாணம் அடைந்த திராவிட வீரர்கள், தலைவர்கள் பற்றியும் கவலைப்படவில்லை. ஆனால், ஐந்து வயது குழந்தையின் அம்மணம் இன்றும் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.

சித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் பிரச்சினைகள்: “அதிகமாகப் படித்த” அம்பேத்கர் போன்றோரும் அரைகுறையாக படித்து, கிருஷ்ணர் நிர்வாண கதையைக் கொச்சைப் படுத்தினார். ஏனெனில், நிர்வாணம் எனும்போது, அவருக்கு அத்தகைய சரித்திரம் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ராமர்-கிருஷ்ணர்களை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியிருப்பது, அவரது வக்கிரத்தைக் காட்டுகிறது. அதை வைத்தும், இந்து விரோதிகள் பிழைப்பு நடத்துகின்றனர்[1]. ஒரு ரசிகர் கேட்டதால், “கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா?”, ஜெயமோகன் போன்றோர் அதிகமாக விவரித்தாலும், நேரிடையான பதிலை மறைத்து, நடுநிலைக்காரர் போன்று காட்டிக் கொள்வர்[2]. அத்தன்மையினை இவ்விசயத்திலும் காணலாம்[3]. இவர்களிடம் பிரச்சினை என்னவென்றால், இவர்களுக்கு சரித்திரம், காலம், முதலியவை தெரியாது, தேவையில்லை என்றும் வாதிடுவார்கள். அதனால், குறிப்பாக விசயத்திற்கு வராமல், சுற்றி வளைத்துக் கொண்டிருப்பர்.

முடிவுரை: ஶ்ரீகிருஷ்ண எதிர்ப்பு பலகாலங்களில் எழுந்துள்ளன. சிசுபாலன் செய்த அவதூறை இங்கு விவைக்க வேண்டிய அவசியம் இல்லை. பவுண்டரகன் / பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன், கிருஷ்ணர் போலவே வேடமிட்டு எதிர்த்து வந்தான் என்று சில புராணங்களில் காணப்படுகின்றன. அவன் நான்தான் உண்மையான கிருஷ்ணர் என்று சொல்லிக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணருக்கு செய்தி அனுப்பினானாம். போரில், ஶ்ரீகிருஷ்ணர், இந்த போலி பௌண்ட்ரக வாசுதேவனைக் கொன்றார் என்றுள்ளது.
- ஶ்ரீகிருஷ்ணர் அந்த அளவுக்கு பிரபலமான அரசராக இருந்தார் என்று தெரிகிறது. ஜைனர்-பௌத்தர்கள் தங்களது பிரச்சாரங்களில், இதனால் ஶ்ரீகிருஷ்ணரை எதிர்க்க வேண்டியதாயிற்று.
- ஶ்ரீகிருஷ்ணர், இந்துக்களை போராட சொல்கிறார். தனது வாழ்நாட்களிலும், அயோக்கியர்களை, சமூகவிரோதிகளை எதிர்த்துக் கொல்கிறார். ஆனால், ஶ்ரீகிருஷ்ணர், ஒரு மாடு மேய்க்கும், குலத்தைச் சேர்ந்தவர், கருப்பு-நீலநிறத்தவர், பிராமணர் அல்லாதவர்.
- அதனால் தான், துலுக்கரும் அவரது இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு, கோவில்களை இடித்தனர். ஆனால், பக்தி வளர்த்தவர்கள், ராதாராணி, ராதா சக்தி, குழந்தை தெய்வம் போன்ற தத்துவங்களை உண்டாக்கி அவர்களைக் கட்டுப்படுத்தினர்.
- ஐரோப்பிய அறிஞர்களோ, ஶ்ரீகிருஷ்ணர் விவரங்கள், சரித்திர ஆதாரங்கள் முதலியவற்றைக் கண்டு திகைத்து விட்டனர்.
- இதனால், பலபுராணங்களை வைத்துக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணர் ஒரு கட்டுக்கதை, உருவாக்கப் பட்ட பாத்திரம், என்றெல்லாம் எழுத ஆரம்பித்தனர்.
- சி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டினார்.
- “எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று ஐரோப்பியரே எழுதினர்.
- புத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர்.
- அதாவது, ஜைன-பௌத்த இடைசெருகல்கள் இதன் மூலமாகவும் அறியப்படுகிறது. ஏனெனில், இதையெல்லாம் படித்து, எதிர்த்தது ஶ்ரீகிருஷ்ணரைத் தான்!
- கிருத்துவ மிஷினர்களும் எதிர்த்தது தெரிந்த விசயம், பலமுறை எடுத்துக் கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது, நாத்திகர், இந்துவிரோத நாத்திகர், துலுக்கர், கிருத்துவர், பெரியாரிஸ அறிவுஜீவிகள், செக்யூலரிஸ இந்துத்துவவாதிகள், முதலியோரும் எதிர்க்கின்றனர். இதிலிருந்து, அவர்களது முகமூடி கிழிந்துள்ளது. இந்துக்கள் அவர்களை தாராளமாக அடையாளம்ம் கண்டுகொள்ளலாம்.
வேதபிரகாஷ்
08-09-2018

[1] அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 4 https://www.vinavu.com/2014/11/27/riddles-of-rama-krishna-ambedkar-4/
[2] ஜெயமோகன், கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா?, ஆகஸ்ட்.29, 2016.
[3] https://www.jeyamohan.in/90241 – .W48_MiQzZdg
குறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், சங்கர தேவர், சைத்தன்யர், ஜெயமோகன், ஜெயமோஹன், ராசலீலா, ராசலீலை, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராஸலீலா, ராஸலீலை
அசிங்க நடனம், அசிங்கம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், காமம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கீதகோவிந்தம், கோபிகா, கோபிகை, சங்கரதேவர், ஜெயதேவர், ஜெயமோகன், ஜெயமோஹன், தூஷணம், நிம்பர்க்கர், நிரியாணம், நிர்வாணம், பக்தி, பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பொறுக்கி, ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராதேமா, ராஸலீலா, ராஸலீலை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
செப்ரெம்பர் 7, 2018
ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? [3]

ஶ்ரீமத் பாகவதத்தில் இருப்பதும், இல்லாததும்: ஶ்ரீமத் பாகவதத்தில் “வஸ்த்ர ஹரன” பற்றிய விவரங்களை ஆய்வோம்.
- திருமணம் ஆகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவன் வேண்டி, ஹேமந்த ருதுவின் முதல் மாதத்தில் [கார்த்திகை], காத்தியாயனி தேவியை வணங்கி விரதம் மேற்கொள்வர் [ஶ்ரீமத் பாகவதம்.ஸ்கந்தம்.10, அத்தியாயம்.22-1].
- யமுனைநதிக் கரைக்கு, அதிகாலையில் சென்று, மண்ணால் தேவியின் உருவத்தை செய்து, சகல பூஜைகளையும் செய்து வணங்குவர் [2-4].
- ஒரு காலத்தில், கன்னிகள் நிர்வாணமாக வழிபாடு செய்தனர் போலும். அதனால், அத்தகைய முறையும் இருந்தது போலும். கிருஷ்ணர் அதனைத் தடுக்க முயற்சிக்கிறார். தொடர்ந்து வரும் வழிபாட்டு முறையை தடுப்பது பிரச்சினையை உண்டாக்கும், அதனால், கிருஷ்ணர் தந்திரமாக அதனைத் தடுக்க திட்டமிட்டார். ஆகவே, அவர்கள் சிரத்தையாக நிர்வாணமாக காத்தியாயனி பூஜை செய்து கொண்டிருந்த போது, ஆடைகளை கொண்டுவந்து, மரத்தின் மீது உட்கார்ந்து விட்டார் [8-9].
- நீராடி, கரைக்கு உடையணிய பார்த்த போது, உடைகள் இல்லை என்பதனை அறிந்தனர். அப்பொழுது தான், கிருஷ்ணர் எடுத்துச் சென்று விட்டார் என்று தெரிந்தது [14]. அப்பொழுது, கிருஷ்ணர் அவர்களுக்கு, அவரவர் உடைகளைக் கொடுத்து [21], இத்தகைய முறைகள் விடுத்து, சிரத்தையாக காத்தியாயனி விரதத்தைப் பின்பற்றுமாறு அறிவுருத்தினார் [27].
- தன்னை அர்ச்சனை செய்ததால் அவர்களது சங்கல்பத்தை அறிந்து கொண்டதாக கூறினார் [24-25].
மேலும் குறிப்பிட்ட சுலோகங்கள் எல்லா சுவடிகளிலும் காணப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[1]. மேலும், ஹோனியைப் பற்றிய விவரங்கள் சக்தி மற்றும் தந்த்ர வழிபாட்டைக் காட்டுகிறது. இது ஜைன-பௌத்த இடைச்செருகல்களைக் காட்டுகிறது.

ஶ்ரீசைத்தன்யரின் முடிவு பற்றிய மர்மம்: ஶ்ரீசைதன்யர் [1486-1534] இடைகாலத்தில் இத்தத்துவத்தை தனது கவித்துவத்தில் வெளிப்படுத்தினார். பக்தி மார்க்கத்தில் நுழைத்ததால், பாடல்கல் மூலம் துரிதமாக மக்களிடம் பரவியது. மேலும், கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சேர்ந்து பாடுவது, ஆடுவது, தெரு-தெருக்களாக, ஊர்-ஊர்களாக செல்வது, மக்களின் விழிப்புணர்வினை ஏற்படுத்தி, வளர்த்தது. துலுக்கர் தமது அடவடித் தனங்களை எல்லோர் முன்னால், அதாவது கூட்டத்தின் முன்னால் செய்ய முடியாமல் போயிற்று. இதனால், ஶ்ரீசைத்தன்யரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்த துலுக்க அரசாங்க திட்டமிட்டது. அவரை மடக்க, துலுக்கர் பக்தர்கள் போலவே, ஆடிப்பாடி அவரைச் சுற்றி வளைத்தனர் – அவரது முடிவு மர்மமாகத் தான் இருக்கிறது. ஶ்ரீ கிருஷ்ணருடன் ஐக்கியம் ஆனாரா, ஜீவசமாதியானரா, பக்தி-கடல் சமாதியில் மூழ்கினாரா…தெரியவில்லை!

சக்தி, கிருஷ்ணர், தீர்த்தங்கரர், புத்தர் – யார் பெரியவர், கடவுள்: ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீதேவி பாகவதம் என்ற இரண்டு நூல்களில், எது உண்மை-பொய், தொன்மையானது-தொன்மையற்றது, சாக்தமா-வைணவமா என்ற சண்டை-பிரச்சினை பக்தகளிடம் உள்ளது. இது சாக்த-விஷ்ணு பக்தர்களின் சண்டையைக் காட்டுகிறது. மேலும், பாகவத புராணத்தில் ஜைன-பௌத்த இடைச்செருகல்கள் மற்றும் தாக்கமும் இருக்கின்றன. ஐந்தாவது ஸ்கந்தத்தில் தீர்த்தங்கர்கள் பற்றிய கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன[2]. அதே போல புத்தரைப் புகழ்ந்ந்து போற்றுவதுடன், விஷ்ணுவின் அவதாரமாகவும் குறிப்பிடுகின்றது. இந்து புராணங்களில் இத்தகைய விவரங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீதேவி பாகவதம் தனியாக இருக்கும் பட்சத்தில், ஜைன புராணம், பௌத்த புராணம் எனு கூட தனியாக எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்து புராணங்களில் காணப்படுவதால், இடைச்செருகல் என்று தாராளமாகவே புலப்படுகிறது.

புராணங்களில் எப்படி அதிகமான ஆபாசங்கள் புகுந்தன?[3]: இந்துப்புராணங்கள் திருத்தப்பட்ட நிலையில், கிருஷ்ணர் மட்டுமல்ல, மற்ற இந்துக்கடவுளர்களும் தூஷிக்கப்பட்டனர். அதாவது, சிவா, விஷ்ணு மற்ற புராணங்களிலும் அக்காலத்தில் இடைசெருகல்கள் செய்யப்பட்டன. 18 புராணங்கள் தவிர மற்ற புராணங்கள் உருவாக்கப்பட்டது, ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டது. ஷட்மத ஒற்றுமை பேணப்பட்டு, ஒழுங்குப்படுத்தும் நிலை தாண்டிய பிறகு, ஜைனம்-பௌத்தம் தேய்ந்து, முகமதியம் வந்த பிறகு இத்தகைய பிறழ்சிகள் தோன்றின என்பது கவனிக்கத் தக்கது. முகமதியம் வளர்க்கப்பட்ட போது, இடைக்காலத்தில் தான் மறுபடியும் பௌத்த-ஜைனர்களால் புது திரிபுகள், பிறழ்சிகள், ஓவ்வாமைகள் உருவாக்கப்பட்டு, சேர்க்கப்பட்டன[4]. அக்பர் அவர்களுடன் உரையாடல் நடத்தினார் என்பதும் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டது. அதனால் தான், புராணங்களைப் படிக்கும் போது, சம்பந்தமே இல்லாத அத்தகைய கொக்கோக, ஆபசமான விவரங்கள் அங்கங்கு காணப்படுகின்றன. அதை வைத்துக் கொண்டுதான், இந்து-எதிரிகள், குறிப்பாக அடிப்படைவாத கிருத்துவர்கள், முஸ்லிம்கள், போலி நாத்திகர்கள், இக்கால செக்யூலரிஸ்டுகள் முதலியோர் அத்தகைய இடைசெருகல் விவரங்களை வைத்துக் கொண்டு கேலி செய்து வருகின்றனர். ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் செய்ததை, முகமதியர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் இடைச்செருகல்கள் செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், சரித்திரத்தன்மை மற்றும் காலத்தொன்மையினை குறைத்தல் என்ற திட்டத்தில் செயல்பட்டதால், அவர்களும் தங்களுடைய பாணியில் செயல்பட்டனர்.

எதிர்மறைத்துவம், வில்லன்–வில்லித்துவம், பொது மக்களால் விரும்பப் படுவதில்லை: இன்று கூட நாத்திகர், இந்துவிரோதிகள் தாம், இந்துகடவுளர்கள் போன்று சித்தரிக்கப் பட்டு “கட்-அவுட் / பேனர்” வைத்துக் கொள்கின்றனர். இந்துக்கள் யாரும் தமது நம்பிக்கை-எதிர்ப்பாளர்களுடன் சம்பந்தப் படுத்தி பார்க்கவோ, விரும்புவதோ இல்லை. இந்து நம்பிக்கையாளர்கள் யாரும், தாங்கள் ராவணன், கும்பகர்ணன், சகுனி, துரியோதனன், துச்சாதனன், என்றெல்லாம் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. அதாவது, மனோதத்துவ ரீதியில் கவனித்தால் கூட அத்தகைய எதிர்மறை குணாதிசய பாத்திரங்களை பொது மக்கள் விரும்புவதில்லை என்று தெரிகிறது. அதே போல பெண்களும் கூனி, சூர்ப்பனகை, மண்டோதரி, போன்ற பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. அதாவது, சமூகத்தில் “நல்லது-கெட்டது” எது என்பது தெரிந்தே இருக்கிறது. இல்லையென்றால், சமூகத்தில் எந்த ஒழுக்கமோ, கட்டுப்பாடோ இருக்காது. இன்றைக்கு சட்டங்கள், நெறிமுறை அமூல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் அவற்றை நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன.

ஜைன-பௌத்த அரசாதிக்கம் இருந்த காலத்தில், இடைச்செருகல்கள், போலி புராணங்கள் உருவாகின: ஆகவே, ஜைன-பௌத்தர் சாக்த வழிபாட்டினை ஏற்றுக் கொண்டு, சமரசம் செய்து கொண்டதால், இக்குழுக்கள் கிருஷ்ணரை எதிர்ப்பது சுலபமாகி விட்டது. அவர்கள் [ஜைன-பௌத்தர்கள்] ஆட்சியாளர்கள் ஆதிக்கத்தில் இருந்தபோது, பாடசாலைகளும் அவர்கள் கைகளில் இருந்ததால், ஓலைச்சுவடிகளில் மாற்றங்களை செய்தனர். ராமாயணத்தை மாற்றி புது ராமாயணங்கள் உருவாக்கப் பட்டன. ஜைன-பௌத்த புராணங்கள் உருவாகின. இதனால், சுலோகங்களின் எண்ணிக்கை அதிகமானதுடன், இத்தகைய குழப்பங்களும் ஏற்பட்டன. பாகவத புராணத்தின் காலம் 4-6ம் நூற்றாண்டுகள் என்று குறிக்கப் படுகின்றன. ஆகவே, ஜைன-பௌத்தர் ஒரு பக்கம், சாக்தர் இன்னொரு பக்கம், கிருஷ்ண வழிபாட்டை எதிர்த்துள்ளனர், பிரச்சாரம் செய்துள்ளனர் என்று தெருகிறது. இப்பொழுது கூட, ஶ்ரீமத் பாகவதம், ஒரு போலிநூல் என்று வாதிடும் ஆட்களும் உள்ளனர். போலி நூல் என்றால், நாத்திக-இந்துவிரோதிகளுக்கு பிரச்சினையே இல்லாமல் போய்விடும். இருப்பினும், அத்தகையய அவதூறு வாதங்கள் தொடர்கின்றன.
© வேதபிரகாஷ்
08-09-2018

[1] ஶ்ரீதரர் போன்ற சமஸ்கிருத பண்டிதர்கள் அவ்வாறு எடுத்துக் காட்டுகின்றனர். மேலும் 19வது சுலோகத்திற்குப் பிறகும், 19-38 சுலோகங்கள் மற்ற ஓலைச்சுவடி கட்டுகளில் காணப்படவில்லை என்று எடுத்துக் காட்டுகின்றனர்.
- M. Sanyal, The Srimad Bhagavatam of Krishna-Dwaipayana Vyasa, Munshiram Manohrlal Publishers, New Delhi, Vol.II, Chapt.XXII, pp. 90-94
[2] Ravi Gupta and Kenneth Valpey (2013), The Bhagavata Purana, Columbia University Press, , pp. 151-155.
[3] வேதபிரகாஷ், குடும்ப உறவுகள் ஆண்–பெண் உறவு, பாச–பந்தங்களை பேணுதல் – அவற்றிற்கேற்றபடி நூல்கள் வெளிப்படுத்துகின்றனவா, இல்லையா?, [அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (14)].
[4] https://indianhistoriography.wordpress.com/2015/06/29/hindu-society-depicted-by-the-religious-books-and-hindus-cannot-contradict/
குறிச்சொற்கள்:அக்ரம் ஹுஸைன், இடைசெருகல், உடை, உடை அபகரிப்பு, காமம், காமுகன், கிருஷ்ணர், குழந்தை, குழந்தை தெய்வம், சைதன்யர், ஜைனர், நிரியாணம், நிர்வாணம், னஹாவீரர், பக்தி, பாபி அடித்தல், புத்தர், பௌத்தர், யமுனை, ராசலீலா, ராசலீலை, ராஸலீலா, ராஸலீலை, வல்லபாச்சார்யர், விஷ்ணு, ஶ்ரீமத் சங்கர தேவர்
அக்ரம் ஹுஸைன், அசிங்கம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கிருஷ்ண ஜெயந்தி, கீதகோவிந்தம், கோபி, கோபிகா, கோபிகை, சங்கரதேவர், சமணம், சைத்தன்யர், ஜெயதேவர், தூஷணம், நிம்பர்க்கர், நிரியாணம், நிர்வாணம், நீராடுவது, பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பெண் தெய்வம், பெரியாரிஸம், ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராதேமா, ராஸலீலா, ராஸலீலை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஏப்ரல் 19, 2018
லக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [2]

ஒரே படம், ஒரே சம்பவம், ஆனால், வக்கிரத்துடன் ஊடகங்கள் தலைப்பிட்டு போட்ட செய்திகளின் போக்கு: மேற்குறிப்பிட்ட வீடியோவைப் பார்த்தாலே, உண்மை விளங்கும், ஆனால், ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு, ஊடகங்கள் அநாகரிகமாக செய்துள்ள அவதூறு, அவற்றின், அவற்றின் பின்னால் இருக்கும் வக்கிர மனிதர்களின் பண்மை, கலாச்சாரத்தை, கண்ணியத்தை எடுத்துக் காட்டுகிறது.
- பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளரின் அனுமதியின்றி ஆளுநர் அவரை தொடுவது[1] கண்ணியமான செயலல்ல என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்[2].
- பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிய[3] விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கண்டனம் தெரிவித்தனர்[4].
- #கன்னம்கிள்ளிகவர்னர்; கலாய்க்கும் நெட்டிசன்கள்[5]
- Video: பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தடவிய கவர்னர்[6]
- கன்னத்தைத் தொட்ட ஆளுநர்… பதிலடி கொடுத்த நிருபர்…![7]
பெண் பத்திரிக்கையாளரைத் தொடுவது, கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார். கன்னம் கிள்ளிய / கன்னத்தை தட்டிய / தடவிய கவர்னர்….என்று பலவாறு வர்ணித்தது ஆபாசமாக, அருவருப்பாக இருந்தது[8]. ஆனால், அந்த அம்மணி அதைப் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை, சொன்னதையே திரும்ப-திரும்ப சொல்லி, கவர்னர் என்னை அப்படி செய்து விட்டார் என்று தான் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்[9].

ஆளுநர் எதனால் அப்படிச் செய்தார்? – அதாவது கன்னத்தைத் தட்டினார்?: விகடன் சொல்வதாவது[10] – செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம், “செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததும் கவர்னர் இருக்கையிலிருந்து எழுந்தார் அப்போது எங்கள் அருகில் இருந்த ரிப்போர்ட்டர் ஒருவர், `நீங்கள் தமிழ் கற்றுக்கொண்டிருப்பதாகச் சொன்னீர்கள் அது தற்போது எந்த அளவில் உள்ளது?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘தமிழ் ஒரு இனிமையான மொழி. நான் அதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்‘ என்றார். அந்த சமயம் கவர்னர் அருகில் இருந்த நானும் மற்றொரு ரிப்போர்ட்டரும் ‘உங்களது தமிழ் ஆசிரியர் யார்?’ என்று கேட்டோம். அதற்கு அவர் சிரித்தார். மேலும், ‘மாநில அரசின் ஆட்சிமுறை நிறைவாக உள்ளது என்கிறீர்களே அப்படியென்றால் மறைமுகமாக பல்கலைக்கழக நிர்வாகம்தான் தவறு என்கிறீர்களா?’ என்று நான் கேட்டேன். எனது அந்தக் கேள்வியை அவர் கேட்டுக் கொண்டாரா என்று கூடத் தெரியவில்லை. சட்டென எனது கன்னத்தை தட்டிக் கொடுத்தார்” என்று கூறியவர் மேற்படி எதுவும் பேச மறுத்துவிட்டார். ” ஆக, பொதுவில் செய்தியாக பரப்பும் இவற்றை, உண்மை என்ன என்பதை உறுதியாக சொல்லாமலே, பிரச்சாரம் செய்வது நோக்கத் தக்கது.

ஸ்டாலின், கனிமொழி, வாசுகி உமாநாத், ஜோதிமணி என்று டுவிட்டியது: அவரது “தட்டல்” எதிர்ப்பு வார்த்தை பதிவு ஏதோ தீண்டாமை வெளிப்படுத்தும் அறுவருப்பான விதமாக, ஆணவப்பிடிவாதமாக இருந்தது “என் முகத்தை பலதடவை கழுவினேன், இருப்பினும் அதிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை, அந்த அளவுக்கு கவர்னர் என்னை கொதிக்க மற்றும் கோபம் கொள்ள செய்தார். அது உம்மைப் பொறுத்த வரையில் பாராட்டு மற்றும் தாத்தாவின் அணுகுமுறையாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, நீர் செய்தது தவறு”. அவரது கழுவலுக்குப் பிறகு ஆதரவான பதிவுகள் ஸ்டாலின், கனிமொழி, போன்றவர்களிடமிருந்து தான் ஆரம்பித்தன. ஸ்டாலின் சொன்னது[11], “துரதிருஷ்டவசமானது மட்டும் அல்ல . அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்கு துளியும் ஏற்புடையது அல்ல! ”. கனிமொழி சொன்னது[12], “நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின்அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.” வாசுகி உமாநாத், ஜோதிமணி முதலியோரது பதிவுகள் தொடர்ந்தன. அதாவது, திமுக, காங்கிரஸ், மார்க்ஸிய கட்சிக்காரர்கள் ஆதரவு தெர்வித்தனர். லக்ஷ்மியிடம் வெளிப்படுவது தேர்ந்தெடுத்த மோடி-எதிர்ப்பு, காங்கிரஸ்-ஆதரவு, மார்க்ஸிய சித்தாந்த ஒப்புதல் முதலியவையே. இவற்றை அவரது டுவிட்டர், பேஸ்புக் மற்றும் ஊடக எழுத்துகளில் பதிவாகியுள்ளன. அவற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

லக்ஷ்மி அம்மணிக்கு என்னத்தான் வேண்டும்?: கழுவலுக்குப் பிறகும், உடனே 200 ஊடகக்காரர்கள் கவர்னரை மன்னிப்புக் கேட்கும் படி கடிதம் எழுதி இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளனர். 200 பேர் யார், அவர்களுடைய பின்னணி என்ன, எப்படி அவர்கள் உடனடியாக கையெழுத்திட்டு அனுப்பினர், என்ற விவரங்கள் தெரியவில்லை. “நானே 40 வருட பத்திரிக்கைக் காரன் தான், ஊடகத்தில் உமக்குள்ளத் திறமையினை மெச்சி, தாத்தா போல, தட்டி பாராட்டினேன்,” என்ற பிறகும் ஊடகக்காரர்களின் அடாவடித் தனமான கேள்விகளை கவனிக்க வேண்டும். பிடிக்கவில்லை என்றால் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கலாமே, கையை நீட்டித் தடுத்திருக்கலாமே, “தாத்தா, இது சரியில்லை,” என்று சொல்லியிருக்கலாமே, கண்ணை மூடிக் கொண்டு அனுபவித்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே? “உமது மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன், இருப்பினும் எனது கேள்வியைப் பாராட்டித் தான் அவ்வாறு செய்தேன் என்பதை ஏற்கவில்லை,” என்றெல்லாம் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இதற்கும் மேலாக அந்த அம்மணி எதை எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. இதனை அரசியலாக்கும் போக்கு ஏன் என்றும் தெரியவில்லை. “அதற்கு பதில் சொல்லாமல் என் அனுமதியின்றி எனது கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார்”, என்பது பொய், ஏனெனில் அந்த வீடியோ அவர் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தது போல இருந்தது. தன்னுடைய சக-ஆண்-ஊடகக்காரரிடமும் ஏதோ தமாஷாக பேசியதும் தெரிகிறது!

தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்ற அறிக்கையும் தொடர்ந்த பிரச்சாரமும்[13]: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும் விசாரணை முடியும் வரையில் இந்த ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களையும் உயர் கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளையும் பணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டுமெனவும் தமிழகத்தையே உலுக்கியுள்ள கல்லூரி மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கும் இத்தகைய அநாகரிகமான போக்கை எதிர்த்து முறியடித்திட தமிழகத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளும் போர்க்குரல் எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது’ தேசிய அளவில் எந்த ஆதரவும் இல்லாத, தமிழகத்தில் பெயருக்கு இருக்கின்ற, இக்கட்சி இவ்வாறு தம்பட்டம் அடிப்பதும், அதை வைத்துக் கொண்டு, விகடன் போன்ற ஊடகங்கள் பிரச்சாரம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது[14].

லக்ஷ்மி சுப்ரமணியன் மூலம் வெளிப்படுவது பத்திரிக்கா–அகங்காரம், பின்னணியில் உள்ள அரசியல் செல்வாக்கு, குறியிட்ட நபரைத் தாக்கும் திட்டம்[15]: நிர்மலா தேவி மூலம் வெளிப்படுவது, திராவிடத்துவம் எவ்வாறு பெண்மையினை சதாய்த்துள்ளது, அடிமையாக்கி வைத்துள்ளது போன்றவை…லக்ஷ்மி சுப்ரமணியனுக்கு ஜெயா-டிவியில் வேலை செய்து, விசுவாசத்தை மறந்து மாறியதால், ஸ்டாலின் கனிமொழி ஆதரவு கிடைக்கிறதா? வாசுகி உமாநாத் [சிபிஎம்], ஜோதிமணி [காங்கிரஸ்] ஆதரவு, லக்ஷ்மி சுப்ரமணியனின் பத்திரிக்கா / அரசியல் கூட்டணியைக் காட்டுகிறதா? பரிதாபகரமான கவர்னரும், சண்டைப் போட்டுக் கொள்ளும் தமிழ பிஜேபியும், முட்டாள் இந்துத்துவவாதிகளும் – கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது போலும்! நிர்மலா தேவியை வைத்துக் கொண்டு தான், லக்ஷ்மி சுப்ரமணியன் விளையாடுகிறார் என்று தெரிகிறது, பிறகு, இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்? இதே பல்கலையில் முன்னர் பாலியல் புகார் வந்தபோது, லக்ஷ்மி சுப்ரமணியன் என்ன செய்து கொண்டிருந்தார்? ஜெயலலிதாவுக்குக் கட்டுப் பட்டு கிடந்தாரா? பாலியல் நிறங்காட்டி, கொச்சைப்படுத்தி, ஒரே நாளில் பிரபலம் அடையும் போக்கு, அந்த சீமான் போன்ற வகையறாக்களைத்தான் காட்டுகிறது.
© வேதபிரகாஷ்
19-04-2018

[1] தி.இந்து, பெண் பத்திரிக்கையாளரை தொடுவது கண்ணியமானதல்ல: ஆளுநர் செயல் குறித்து கனிமொழி ட்வீட், Published : 18 Apr 2018 12:27 IST; Updated : 18 Apr 2018.
[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23582832.ece
[3] https://www.ietamil.com/tamilnadu/banwarilal-purohit-mk-stalin-kanimozhi-condemns/
[4] https://tamil.news18.com/news/tamil-nadu/tngovernor-banwarilal-purohit-pat-journalist-on-the-cheek-without-her-consent-agitations-erupts-over-governors-gesture-15965.html
[5] http://www.newstm.in/Tamilnadu/1524034806108?-
[6] https://tamil.samayam.com/news-video/news/tamil-nadu-governor-pats-journalist-on-cheek-sparks-controversy/videoshow/63809405.cms
[7] https://nakkheeran.in/24-by-7-news/head-line-news/female-reporter-stronger-condemnation
[8] Republic World, Journalist Lakshmi Subramanian Speaks To Republic TV | TN Governor Controversy, 17 ஏப்., 2018 அன்று வெளியிடப்பட்டது.
[9] https://www.youtube.com/watch?v=Y6rOW1qnPFY
[10] விகடன், “சிரித்துக்கொண்டே கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார்!” – கவர்னரின் செயலை விவரிக்கும் `தி வீக்’ நிருபர், ஐஷ்வர்யா, Posted Date : 09:58 (18/04/2018) Last updated : 10:49 (18/04/2018).
https://www.vikatan.com/news/tamilnadu/122521-journalist-lakshmi-subramanian-of-the-week-magazine-takes-twitter-to-storm-against-tamilnadu-governor.html
[11] https://t.co/rjywYVXQQ9 — M.K.Stalin (@mkstalin) 17 April 2018
[12] Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) 17 April 2018
[13] விகடன், `தமிழக ஆளுநரை திரும்ப பெறுக!’ – மாணவிகள் புகார் விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.எம், தினேஷ் ராமையா, Posted Date : 18:47 (16/04/2018) Last updated : 18:47 (16/04/2018)
[14] https://www.vikatan.com/news/tamilnadu/122371-cpm-urges-fair-trail-on-aruppukkottai-college-issue.html?artfrm=related_article
[15] Lakshmi Subramanian, principal correspondent, is a hardcore political journo. She has 15 years of extensive experience in writing about politics in Tamil Nadu. She is interested in political gossips and writing investigative stories.
குறிச்சொற்கள்:கனிமொழி, கன்னம், கிள்ளு, தடவு, தட்டு, நிர்மலா, நிர்மலா தேவி, பன்வாரிலால், பல்கலைக் கழக துணை வேந்தர், புரோஹித், மதுரை, மதுரை காமராஜ், லக்ஷ்மி, லக்ஷ்மி சுப்ரமணியன், லட்சுமி, லட்சுமி சுபரமணியன், ஸ்டாலின்
அசிங்கம், அரசியல், ஆபாசம், ஆர்.எஸ்.எஸ், கம்யூனிஸ்ட், கவர்னர், செக்யூலரிஸம், செக்ஸ், திராவிடம், நிர்மலா, நிர்மலா தேவி, பன்வாரிலால், பன்வாரிலால் புரோஹித், பல்கலைக் கழக துணை வேந்தர், பாஜப, பாலியல், பிஜேபி, புரோஹித், மார்க்ஸ், லக்ஷ்மி, லக்ஷ்மி சுப்ரமணியன், லட்சுமி, லட்சுமி சுப்ரமணியன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 19, 2018
லக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]

விகடன் வர்ணனை அகம்பாவம் பிடித்த ஊடகக்காரகளின் நிலையை எடுத்துக் காட்டியது[1]: நிர்மலா தேவியின் ஆடியோ சுற்றில் வந்ததும், திராவிட அரசியல்வாதிகள் துடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அரசியல்வாதிகளுக்கு கோடிகள் கொடுத்து, துணைவேந்தர்கள் புள்ளிகளும் தவித்தனர். இந்நிலையில், நிர்மலா தேவி கவர்னர் என்ற வார்த்தை சொன்னதை வைத்துக் கொண்டு, திராவிட அரசியல்வாதிகள் பிரச்சினையை திசைத் திருப்ப முயன்றனர். அதற்குக் கிடைத்தது பன்வாரிலால் புரோஹித்.
- `தமிழக ஆளுநர், பத்திரிகையாளர்களை மாலை 6 மணிக்குச் சந்திக்க இருக்கிறார்’ என்று உறுதி செய்யப்பட்டவுடனே ஆளுநர் மாளிகையில் இரண்டாவது நுழைவாயில் பத்திரிகையாளர்களும் கேமராமேன்களும் குவிய ஆரம்பித்தனர்.
- `பத்திரிகையாளர் சந்திப்பு, தர்பார் ஹாலில் நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஹாலில் பதவி ஏற்பு, நூல் வெளியிட்டு விழா என கவர்னர் பங்குபெறும் விழாக்கள் மட்டுமே நடைபெறுவது வழக்கம்.
- முதல்முறையாகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வு தர்பார் ஹாலில்நடப்பதால், நிருபர்களும் கேமராமேன்களும் முண்டியடித்து இடம் பிடித்தனர்.
- எல்லாரும் டீ குடிக்க வாங்க” என்று ஆளுநர் மாளிகை அதிகாரி 5:30 மணிக்கு பத்திரிகையாளர்களை அழைத்தபோது, பத்திரிகையாளர்கள் யாரும் இருக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை.
- சரியாக 6 மணிக்குதர்பார் ஹாலுக்குள் நுழைந்தார் ஆளுநர். “வணக்கம்” என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சொன்ன கவர்னருக்கு, யாரும் பதில் வணக்கம் தெரிவிக்காமல் உட்கார்ந்தே இருந்தனர்.
இப்படி பெருமையாக விவரித்தது, நாகரிகமாக இருந்தது போலும்[2]. கவர்னரின் வலதுபக்கம் ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலும், இடதுபக்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செல்லதுரை, பதிவாளர் சின்னையாவும் அமர்ந்திருந்தனர்.

கவர்னர் ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டமும், கொடுத்த விளக்கமும்: நிருபர்கள் கேட்ட கேள்விகள்:
- “உங்கள் மீதே குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இந்த விசாரணைக் கமிஷன் உங்களையும் விசாரிக்குமா?”
- “சிபிஐ விசாரிக்குமா?”
- “இது பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை. நீங்கள் விசாரணைக் கமிஷனில் ஒரு பெண் அதிகாரியை நியமித்திருக்கலாமே. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது?” என்று பெண் நிருபர், கேள்வி எழுப்பினர்.
- “சந்தானம் ஐ.ஏ.எஸ். கமிஷனின் வரைமுறைகள் என்னென்ன?”
- “நீங்கள் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும்போது நிர்மலாவும் கலந்துகொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே?’
- “நிர்மலா விவகாரம் தொடர்பாக உங்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுமா?”
- “கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படுமா?”
இத்தகைய கேள்விகளை வாழ்க்கையில் முன்னர் யாரிடமாவது கேட்டிருக்கிறார்களா? என்று இவர்கள் தெரியப் படுத்த வேண்டும்.

இருப்பினும் பொறுமையாக பதில் அளித்த கவர்னர்: “நிர்மலா தேவிஎன்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது; அவர் முகத்தைக்கூட நான் பார்த்தது இல்லை[3]. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு இப்போது எந்தத் தேவையும் இல்லை. நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்[4]. விசாரணைக் குழுவுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணைக்கு பெண் உறுப்பினர்கள் தேவையென்றால், விசாரணைக் குழு நியமித்துக் கொள்ளலாம். இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலமாகியும் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தாது தாமதித்து குறித்தும் சந்தானம் குழு விசாரணை நடத்தும். சந்தானம் தலைமையிலான விசாரணை கமிஷனுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. தேவைப்படும் யாரிடமும் அவர் உதவி கோரலாம். தேவைப்படும் இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்ளலாம். தமிழகத்தில் ஒருசில பல்கலைக்கழகங்களைத் தவிர மற்றவைகளின் செயல்பாடுகள் எனக்கு திருப்தி அளிக்கின்றன.”

கவர்னர் தொடர்ந்து கொடுத்த விளக்கம்: “நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கம் கொடுப்பதற்காக நான் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. ஆளுநராகப் பதவியேற்று 6 மாத காலமானதால் நான் உங்களைச் சந்தித்தேன். அடுத்த 6 மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் நான் உங்களைச் சந்திப்பேன். ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எனக்கு 78 வயது பிறந்துவிட்டது. கொள்ளுப்பேரன் எடுத்துவிட்டேன். நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இணைத்துப் பேசுவது அடிப்படை ஆதாரமற்றது; அபத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்தித்து வருகிறேன். நான், மாவட்டங்களில் ஆய்வு செய்யவில்லை. சாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது அரசியலமைப்பு. அரசியலமைப்பின்படியே நான் செயல்படுகிறேன். என் வேலைக்கு நான் உண்மையாகவுள்ளேன். குற்றச்சாட்டு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து எனது பணியை மேற்கொள்வேன். என்னைப் பற்றி நீங்கள் விசாரிக்கலாம். என் வாழ்க்கை வெளிப்படையானதே’’ என்றார். தொடர்ந்து ஆடியோ விவகாரம் தொடர்பாக பல்வெறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன்வைத்தபோது[5], திரும்ப-திரும்ப- நிர்மலா தேவியை தெரியுமா, பார்த்ததுண்டா போன்ற கேள்விகளை கேட்டதால், ஒருகட்டத்தில் பொறுமையிழந்த கவர்னர், “முதலில் கவர்னர் பதவிக்கு மரியாதைக் கொடுத்து கேள்வி கேளுங்கள்”, எனச் சீறினார்[6].

கவர்னர் பத்திரிக்கையாளர் கூட்டம் முடிந்த பிறகு ஒரு பெண் நிருபர் பிடிவாதமாக கேள்வி கேட்டது, கவர்னர் கன்னத்தில் செல்லமாக தட்டியது: “லக்ஷ்மி சுப்ரமணியன்” இது வரை யார் என்று தெரியாது, தெரிய வேண்டிய அவசியமும் சாதாரண பொது மக்களுக்கு இல்லை. ஆனால், மூன்று நாட்களில், இந்த அம்மணி ஊடகங்களில் காணப்பட்டு வருகிறார். பிரச்சினை நிர்மலாதேவியிலிருந்து தான் ஆரம்பித்துள்ளது[7]. பேட்டி முடிந்து விட்டது என்று அறிவித்தப் பிறகும், சிலர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். அந்நிலையில், ஒரு பெண் நிருபர், கேட்டதையே திரும்ப கேட்டார். ஒரு கேள்வி என்று விரலை நீட்டிக் கொண்டு கேட்டபோது, தான் கவர்னர், கைகளை உயர தூக்கி கேட்டதையே கேட்கிறீர்களே என்று அருகில் வந்து செல்லமாக அன்னத்தில் தட்டினார். உடனே சொல்லி வைத்தால் போன்று பிளாஷ் வெளிச்சம் வந்ததயும் வீடியோவில் காணமுடிகிறது[8]. இதை வைத்துக் கொண்டு தான், இப்பொழுது பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது. “தமிழக கவர்னரிடம் பேட்டியின் போது நான் கேள்வி கேட்டேன். அவர் பதிலாக என் அனுமதி இல்லாமல் என் கன்னத்தை தட்டினார் என்று அந்த பெண் நிருபர் ட்வீட்டியுள்ளார்”. அதிலிருந்து, இது ஏதோ உலகத்திலேயே பெரிய பிரச்சினை போல ஊடகத்தினர் ஆரம்பித்தனர்.
© வேதபிரகாஷ்
19-04-2018

[1] விகடன், தேநீர் முதல் கன்னம் தட்டல் வரை… கவர்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன?, ஞா. சக்திவேல் முருகன், Posted Date : 17:18 (18/04/2018) Last updated : 11:03 (19/04/2018)
[2] https://www.vikatan.com/news/miscellaneous/122567-tamilnadu-governor-banwarilal-purohit-press-meet-details.html
[3] விகடன், `நிர்மலா தேவியைப் பார்த்ததே இல்லை; காவிரிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்!’ – ஆளுநரின் முதல் செய்தியாளர் சந்திப்பு, MUTHUKRISHNAN S Posted Date : 18:18 (17/04/2018) Last updated : 19:41 (17/04/2018)
[4] https://www.vikatan.com/news/tamilnadu/122485-anyone-who-is-guilty-will-be-punished-says-banwarilal.html
[5] விகடன், “கவர்னர் பதவிக்கு மரியாதை கொடுத்து கேள்வி கேளுங்கள்..!” சீறிய பன்வாரிலால் புரோஹித், கா . புவனேஸ்வரி கா . புவனேஸ்வரி வி.ஶ்ரீனிவாசுலு, Posted Date : 20:28 (17/04/2018) Last updated : 20:28 (17/04/2018)
[6] https://www.vikatan.com/news/coverstory/122491-give-respect-to-my-post-and-shoot-your-questions-slams-banwarilal-purohit.html
[7] இங்கு தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கப் படவில்லை, அச்சின்னங்கள் எவ்வாறு ஊடகங்களில் பிரதிபலிக்கின்றன, பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டுள்ளன, சித்தாந்த ரீதியில் வெளிப்படுகின்றன என்பது கூர்மையாக அலசப்படுகிறது.
[8] https://m.youtube.com/watch?v=BJVCHzERpMM&feature=youtu.be
குறிச்சொற்கள்:அரசியல், கன்னம், கவர்னர், காமராஜ், கிள்ளு, செக்யூலரிஸம், செக்ஸ், செய்தி, செல்போன், தடவு, தட்டு, தேவாங்கர், நிர்மலா, நிர்மலா தேவி, பன்வாரிலால், பல்கலைக் கழக துணை வேந்தர், பாலியல், புரோஹித், பெண், பெண்கள், மதுரை, மதுரை காமராஜ், லக்ஷ்மி, லக்ஷ்மி சுப்ரமணியன், லட்சுமி, லட்சுமி சுபரமணியன்
அசிங்கம், அதிமுக, அரசியல், ஆபாசம், ஆர்.எஸ்.எஸ், எதிர்ப்பு, கன்னம், கவர்னர், காமராஜ், கிள்ளு, செக்யூலரிஸம், செக்ஸ், தடவு, தட்டு, திமுக, திராவிடம், தொடு, நிர்மலா, நிர்மலா தேவி, பன்வாரிலால், பன்வாரிலால் புரோஹித், பல்கலைக் கழக துணை வேந்தர், புகார், புரோஹித், மதுரை காமராஜ், லக்ஷ்மி, லக்ஷ்மி சுப்ரமணியன், லட்சுமி, லட்சுமி சுப்ரமணியன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி 24, 2017
பொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா–எதிர்ப்பா?

நான் பொறுக்கி தான்: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின[1]. பொதுவாக சாமி ஆங்கிலத்தில் ஸ்லாங் போன்ற விதத்தில் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது உண்டு. அதனை புரிந்து கொள்வது கண்டனம். அவ்விதத்தில் “பொறுக்கி” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. இதைப்பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன் தாக்கம் மற்றவர்களிடையே ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சுப. வீரபாண்டியன், “பொறுக்கி சாமி” என்றார். மெரினாவில் ஒரு பெண் அவரை கிண்டலடித்து பேசிய வீடியோவும் சுற்றில் உள்ளது. அந்நிலையில், அமல் ஹஸன், “யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[2]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்,” என்று பேசியதை, சினி உலகம் என்ற தளம் கமல்ஹாசன் பேசியதை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது. எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அதற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்[3] என்றெல்லாம் விளக்கியது.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் கமல்ஹாசன் பேசியது: இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ‘‘இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம்[4]. இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளிப்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது”[5].

என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம், கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்: “நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[6]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்[7]. திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம்[8]. இது தன்மானம். அரசியல் இல்லை[9]. குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம்[10]. கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்[11]. அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

ஜல்லிகட்டும், கமல் ஹஸனும்: கமல் ஹஸனும் எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதால், விரக்தியினால் கோபம் அதிகமாகியுள்ளது தெரிகிறது. போதாகுறைக்கு, கௌதமியும் தனியாக சென்று விட்டார். அடங்காப்பிடாரி மகள்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றே தெரிகிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிலையில், ஆரம்பித்திலிருந்தே தோல்விடைந்த மனிதராகத்தான் இருந்தார். நல்ல நடிகன் என்ற நிலைமை எல்லாவற்றிற்கும் எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. வியாபாரம் என்றால் லாபம் வர வேண்டும், அப்பொழுது தான், ஷோவைத் தொடர்ந்து நடத்த முடியும். பணம் இல்லாததால், பொத்தீஸ் போன்ற விளம்பரங்களில் நடித்ததும் தெரிய வந்தது. எது எப்படியாகிலும், வெள்ளநிவாரண தொகையிலும் சர்ச்சை ஏற்பட்டது. இவரது நாத்திகம், இவரை மக்களிடத்திலிருந்து பிரித்து வைக்கின்றது என்பது தெரிந்த விசயாமாக இருக்கிறது. ஏனெனில், 23-01-2017 அன்று, ஜல்லிக்கட்டு கடவுள் சம்பதப்பட்ட அடங்காக உள்ளதே என்று என்.டி.டி.வி வி நிருபர் கேட்டதற்கு, இவர் சரியாக பதில் சொல்லாமல், மழுப்பியது. அந்த நிருபருக்கே தமாஷாக இருந்தது.
© வேதபிரகாஷ்
24-01-2017

[1] சினி-உலகம், நான் டெல்லி பொறுக்கி இல்லை– கமல்ஹாசன் பதிலடி, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017..
[2] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.
[3] http://www.cineulagam.com/actors/06/135686
[4] தினமணி, நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி, By DIN, Published on : 23rd January 2017 10:36 AM
[5] http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jan/23/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-2636435.html
[6] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.
[7] http://www.dailythanthi.com/News/CinemaNews/2017/01/23012840/I-porukkitan-Tamil-Delhi-will-not-tolerate–Actor.vpf
[8] தினமலர், நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017.. 13.47. IST.
[9] http://cinema.dinamalar.com/tamil-news/55426/cinema/Kollywood/Yes-I-am-Tamil-Porukki-kamal-slams-Subramaniya-Swamy.htm
[10] தமிழ்.இந்து, ஆம், நான் தமிழ் பொறுக்கிதான்: கமல்ஹாசன், Published: January 22, 2017 17:29 ISTUpdated: January 22, 2017 18:45 IST
[11] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article9496139.ece
குறிச்சொற்கள்:அடலேறு, அரசியல், எருது, ஏறு, ஏறுதழுவதல், கலாச்சாரம், சல்லிக்கட்டு, சாதி, சென்னை, செய்தி, ஜல்லிக்கட்டு, தமிழச்சி, தமிழன், தமிழ் பொறுக்கி, தலித், நம்பிக்கை, பொங்கல். விழா, பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மடலேறு, மதம், மாடு
அசிங்கம், அதிமுக, அரசியல், அவதூறு செயல்கள், ஆதித் தமிழர், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்துக்கள், இனம், உரிமை, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருத்து, கலவரம், காங்கிரஸ், கிறிஸ்தவன், சாமி, சுனாசானா, சுப்ரமணியன், சுவாமி, செக்யூலரிஸம், ஜாதி, ஜெயலலிதா, தமிழச்சி, தமிழிசை, தமிழ் பொறுக்கி, தலித், திக, திட்டம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பக்தி, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பாப்பான், பார்ப்பான், பிஜேபி, பெதிக, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போட்டி, போதை, மதுரை, மெரினா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 27, 2016
கூத்து-ஆட்டம், குத்தாட்டம், டங்கா-மாரியா ஆபாச ஆட்டம், நங்கு-ஆட்டம், நிர்வாண ஆட்டம்: சீரழிவது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம், சமூகம்!

போலீஸாரைக் கண்டதும் துண்டை காணோம் – துணியைக் காணோம் என்று ஓடியது: போலீசாரை கண்ட நடன அழகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடினர்[1]. நிர்வாணமாக ஆடிக் கொண்டிருந்த பெண்களும் தங்களின் துணியைக் கூட எடுக்காமல், அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனர்[2]. இதைத்தான், ஒரு வேளை, “துண்டைக் காணோம், துணியைக்காணோம்,” என்று ஓடுவது என்கிறார்களோ? அப்படி ஓடிவிட்டால், யார் அடைக்கலம் கொடுத்துனர். அழைத்து வரப்பட்ட அந்த பெண்களின் விவரங்கள் இல்லாமலா-தெரியாமலா போய்விடும். என்ன செய்வதென்று தெரியாமல், போலீசார் அங்கிருந்த பொதுமக்களின் வீடுகளில் சோதனை செய்துள்ளனர். “அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனர்,” என்ற பிறகு, வீடுகளில் தேடினால் கிடைப்பார்களா? அப்போது சில இளைஞர்கள் போலீசாரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இருட்டாக இருந்ததால், அடையாளம் தெரியவில்லை. இதனால் போலீசார் அங்கிருந்த மைக்செட் மற்றும் நிர்வாண நடன ஆழகிகள் கழற்றிப் போட்ட ஆடைகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று போலீசார் விசாரணை: “ஆடல்-பாடல்” நிகழ்ச்சி போர்வையில் தான் ஆபாச நடனங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. ஆடை குறைப்பு என்ற போர்வையில் மறைப்பில்லாமல் இரவில் நேரம் போக-போக அது நடக்கிறது. ஆடலும் பாடலும் நிகழ்ச்சியே நடத்த கூடாது என கூறிவரும் போலீசார் இந்த நிர்வாண நடன நிகழ்ச்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே அழகிகளின் குத்தாட்டத்துக்கு மிகவும் பிரபலமாக திகழ்கிறது சேலம் மாவட்டம். இதையும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வீரங்கனைகள், சமூகத்தின் மீது அக்கரைக் கொண்டவர்கள் கவனிக்க வேண்டும்.

சேலம் மற்றும் சேலம் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஆபாச நடனம் நடைபெறுவது: சமீப காலமாக காணாமல் போய் இருந்த அழகிகளின் ஆபாச நடனம் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கி விட்டது. கடந்த சில நாட்களாக ஓமலூர், காடையாம்பட்டி, சுண்டகாபட்டி, காருவள்ளி, தும்பிபாடி, சிக்கனம்பட்டி, பச்சனம்பட்டி, காமலாபுரம் ஆகிய ஊர்களில் கோவில் திருவிழாக்கள் நடந்தது. இந்த விழாக்களில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்பதற்காக சென்னை, சேலம், கோவை போன்ற நிகரங்களில் இருந்து அழகிகள் வரவழைக்கப்பட்டு வருந்தனர். இரவு நேரம் குறைந்த மின் விளக்கு வெளிச்சத்தில் அரை, குறை ஆடையுடன் இரட்டை அர்த்த வசனத்துடன் கூடிய முக்கல், முனங்கல் பாடல்களுக்கு அவர்கள் மேடையில் போட்ட குத்தாட்டம் இளசுகளை மட்டுமல்ல, பெரிசுகளையும் இழுக்கிறது, தவறான வழிக்கு அழைக்கிறது. இவர்களிடமிருந்து வசூலும் நடத்தப்படுகிறது. ஆபாசத்தின் உச்சத்தை தொடும் வகையில் அழகிகள் ஜோடிகளுடன் நெருக்கமாக ஆடிய ஆபாச ஆட்டத்தை அவர்கள் பார்ப்பது மட்டுமல்ல தொடவும் முயல்கின்றனர். அதற்கேற்ப அழகிகளும் தங்கள் ஆடைகளில் தாராளத்தை காட்டி எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து எல்லோரையும் கவர்கின்றனர்.

சட்டத்தை மீறி நடத்தப்படும் நள்ளிரவு ஆபாச நடனங்கள்: பொதுவாக இரவு 11 மணி வரை தான் இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி அளிப்பது உண்டு. ஆனால் சில ஊர்களில் இந்த உத்தரவை மீறி நள்ளிரவை தாண்டியும் அழகிகள் குத்தாட்டம் போட்டு இளைஞர்களை `குஷி’ படுத்தினார்கள். போலீசாரின் கண் எதிரிலேயே இவையெல்லாம் அரங்கேறி வருகின்றன. சில இடங்களில் போலீஸாரும் கவனிக்கப்படுகின்றனர். ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஆபாச நடனத்தை அந்த ஊரைச் சேர்ந்த சில முக்கிய வி.ஐ.பி.க்கள் மேடையில் அமர்ந்து பார்த்து ரசித்துள்ளனர். ஊர் பெரியவர்களே இப்படி ஆபாச நடனத்தை ஆர்வத்துடன் பார்த்தால் இளைஞர்கள் எப்படி பார்க்காமல் இருப்பார்கள். கோவில் திருவிழா என்ற போர்வையில் தான் திராவிடக் கட்சிகாரர்கள் இத்தகைய நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

“குத்தாட்ட‘ அழகிகள் மீது போலீஸ் நடவடிக்கை – நடனகலைஞர்கள் சங்கம் பாராட்டு (பிரவரி 2011): சேலம், கொண்டலாம்பட்டியில் பிப்ரவரி 2011ல் குத்தாட்ட நடன நிகழ்ச்சி நடந்தது. ஓமலூர், வெள்ளாளப்பட்டியில் நடந்த குத்தாட்டத்தில் பெரும் ரகளை ஏற்பட்டு, வாலிபர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் உண்டானது[3]. குத்தாட்ட அழகிகள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்ய சென்ற கொண்டலாம்பட்டி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டது. குத்தாட்ட அழகிகள், புரோக்கர்கள், ரகளையில் ஈடுபட்டவர்கள் என, 46 பேரை, போலீஸார் கைது செய்துள்ளனர்[4]. இந்நிலையில், சேலம் மாவட்ட திரைப்பட மற்றும் மேடை நடன கலைஞர்கள் சங்க கூட்டம், தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது[5]. கூட்டத்தில், இடைத்தரகர்கள் நடன கலைஞர்கள் போர்வையில், ஆபாச நடன நிகழ்ச்சியை, பல்வேறு இடங்களில் போலீஸாருக்கு தெரியாமல் நடத்தி வருகின்றனர். இடைப்பாடி, இளம்பிள்ளை, திருச்செங்கோடு, ஓமலூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள புரோக்கர்கள், நடன குழுவின் பெயரை தவறான முறையில் பயன்படுத்தி, அழகிகளை அழைத்து வந்து, ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இவ்வாறு ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் புரோக்கர்களை, மாவட்ட போலீஸார் கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்ட திரைப்பட நடன கலைஞர்கள், 1,500 பேர் உள்ளனர். எங்கள் சங்கம் சார்பில், கோவில் விழாக்களில் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு, இரண்டு ஆண்டாக போராடி வருகிறோம். ஆனால், நடன குழுவின் பெயரில், புரோக்கர்கள் வெளி மாநிலங்களில் இருந்து அழகிகளை அழைத்து வந்து, கோவில் விழாக்களில் குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதுபோன்ற புரோக்கர்கள் மீது, போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், குத்தாட்ட அழகிகள், புரோக்கர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்ததற்கு, சேலம் மாவட்ட திரைப்பட மற்றும் மேடை நடன கலைஞர்கள் சங்க கூட்டத்தில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது[6].
© வேதபிரகாஷ்
27-11-2016

[1] தமிழ்.வெப்துனியா, ஒட்டுத்துணிகூட இல்லாமல் குத்துப்பாட்டுக்கு ஆடிய நடன அழகிகள், செவ்வாய், 14 ஜூன் 2016 (15:32 IST).
[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sex-dancing-in-festival-116061400056_1.html
[3] தினமலர், அழகிகளின் குத்தாட்டத்தில் ரகளை: போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு: 46 பேர் கைது, பதிவு செய்த நாள். பிப்ரவரி 04,2011 22:58; மாற்றம் செய்த நாள். பிப்ரவரி 04,2011, 00:44.
[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=180926
[5] தினமலர், “குத்தாட்ட‘ அழகிகள் மீது போலீஸ் நடவடிக்கை, பதிவு செய்த நாள். பிப்ரவரி 2011. 01:04.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=182586&Print=1
குறிச்சொற்கள்:அசிங்க ஆட்டம், அசிங்கமான நடனம், அசிங்கம், அரசியல், ஆபாச கரகம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், ஓமலூர், ஓமலூர் ஆட்டம், ஓமலூர் டான்ஸ், கலாச்சாரம், குத்தாட்டம், கோவில் குத்தாட்டம், செக்ஸ், நிர்வாண ஆட்டம், நிர்வாணம், பகுத்தறிவு, பெண், பெண்கள்
அசிங்க கரகாட்டம், அசிங்க நடனம், அசிங்கம், ஆபாச கரகாட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், கரகம், கரகாட்டம், கோவில் குத்தாட்டம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், சேலம், டாஸ்மார்க், தடை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், விழா நடனம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 27, 2016
ஓமலூர் செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த நிர்வாண நடத்தில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன!

ஆங்கிலேயர் ஆட்சி, திராவிடர் ஆட்சி – கோவில் சமந்தப்பட்ட விசயங்களில் தலையீடு, வழக்குகள் பெருகுவது: கோவில்களில் ஆகம சாத்திரங்கள் மற்றும் பாரம்பரியமாக நடந்து வரும் பூஜைகள், சடங்குகள், கிரியைகள், ஆடல்-பாடல்கள் எல்லாமே நடந்து வருகின்றன. அதற்கெல்லாம் யாரும் போலீஸ், நீதிமன்றம் என்று யாரும் போவதில்லை, தேவையுமில்லை. ஆனால், ஆங்கிலேயர்கள் காலத்தில் யானைக்கு வடகலை அல்லது தென்கலை நாமம் போட வேண்டும் என்று கோர்ட்டுக்குச் சென்றதாக உள்ளது. இதெல்லாம், பாரம்பரியத்தை சீரழிக்க செய்யும்கூட்டத்தினருடையது என்றறியப்பட்டது. இந்து அறநிலையத் துறையின் கீழ் கோவில்கள் வந்ததும் அத்தகைய வழக்குகள் அதிகமாகின. மேலும், “கடவுள் இல்லைளென்று இன்றும் பறைச்சாற்றி வரும் நாத்திக-திராவிட கட்சிகளின் ஆட்சியில், கோவில்கள் சீரழிய ஆரம்பித்தன. அத்தகைய சித்தாந்திகள் லட்சக்கணக்கில், இன்று இந்துஅறநிலையத் துறையில் புகுந்து, வேலை செய்து வருகின்றனர். அந்த அலங்கோலம் தான், ஒவ்வொரு சீரழிவிலும் வெளிப்படுகிறது. கோவில் திருவிழா நடத்தினால், பணம் கிடைக்கும் என்பதை மனத்தில் வைத்துக் கொண்டுதான், இத்தகைய ஆபாச நடனங்களை நடத்தி வருகிறார்கள்.

சரத்துகளை மீறியதால், போலீஸ் அனுமதி மறுத்தது, நீதிமன்றத்திற்கு சென்றது, நீதிமன்றம் உரிய சரத்துகளுடன் அனுமதி அளிக்க ஆணையிட்டது: 03-03-2016 அன்று ஶ்ரீ சக்தி குஞ்சு மாரியம்மன் திருக்கோவில் விழா, சங்கணுரில் நடத்த அனுமதி கேட்டு [Sri Sakthi Kunju Mariamman Thirukovil festival to be held at Senkanur, Pagalpatty village, Omalur Taluk, Salem] போலீஸ் மறுத்தபோது, விக்ரம் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்[1]. அதற்கு நீதிபதி, கீழ்கண்ட சரத்துகளுடன் கொண்டாட அனுமதியளித்து, போலீஸாருக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி ஆணையிட்டார்[2]:
- 03-03-2016 அன்று திருவிழா கலாச்சார நிகழ்சி மாலை30 முதல் 10.30 வரை நடத்தலாம்.
- நடன நிகழ்சியின் போது, பங்கு கொள்பவர் ஆபாச நடனம், ஆபாச – அசிங்மான உரையாடல் எதுவும் இருக்கக் கூடாது.
- மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனங்களைக் கெடுக்கும் வகையில் இருக்கும் இரட்டை அர்த்தம் கொண்ட எந்த பாடலும் ஒலிபரப்பக் கூடாது.
- பாடல், ஆடல் எந்த அரசியல் கட்சி, மதம், ஜாதி, சமூகம் போன்றவற்றைக் குறிப்பிடுவதாக இருக்கக் கூடாது.
- எந்த அரசியல் கட்சி, ஜாதி மற்றும் சமூதாயத் தலைவர் கட்-அவுட் வைக்கக் கூடாது.
- நிகழ்சி மதரீதியிலாகவோ, எந்த ஜாதியினரை வேற்றுமைப் படுத்திக் காட்டக் கூடியதாகவோ, அமைதியைக் குலைக்கும் முறையிலோ இருக்கக் கூடாது.
- இந்த சரத்துகளை மீறினால், போலீஸார் உரிய நடிவடிக்கை எடுக்கலாம்.
- அதே போல, குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி, நிகழ்சி நடத்தினால், போலீஸார் நிறுத்தலாம்.
- இதையெல்லாம் குறிப்பிட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமதி அளிக்கலாம்.
இதேபோல, கரையூரில் உள்ள ஶ்ரீ நாத காட்டு மாரியம்மன் கோவிலில்[3] [the Rangagoundapura Sri Nathdha Kattu Mariyamman Kovil, situated at Karaiyavur (Rangagoundapuram via), Aattukaraiyanoor Post, Omalur Taluk, Salem District] 05-02-2016 அன்று விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது[4]. 03-03-2016 அன்று குப்பலூரில் உள்ள ஶ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில்[5] [Sri Sakthi Mariamman Temple festival situated at Kuppalur, Omalur Taluk, Salem District] நடத்த அனுமதி கொடுக்க போலீஸாருக்கு கோர்ட் ஆணையிட்டது[6]. இவையெல்லாம் உதாரணத்திற்கு கொடுக்கப்படுகின்றன. இதிலிருந்தே, கோவில் திருவிழா பெயரில் எவ்வாறு ஆபாச நடனங்கள் முதலியவை நடந்து வருகின்றன, மாணவர்-இளைஞர்களைக் கெடுக்கிறது முதலியவற்றை கவனிக்கலாம். ஆனால், மீறி நடத்தப் படுவது, சமூகத்தைக் கெடுத்தாலும் பரவாயில்லை என்று நிகழ்சிகளை நடத்துவது, ஒரு திட்டமிட்ட சதியாகத்தான் தெரிகிறது.

திராவிட பிரச்சார கூட்ட பாணியில் இரவு நேரம் போக–போக நடனத்தில் ஆடை குறைந்தது: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் கடந்த வாரம் [ஜூன் 2016] திருவிழா நடைபெற்றது. திருவிழா முடிந்த பின், அந்த பகுதி இளைஞர்கள் ஏனாதி காலனி என்ற இடத்தில் ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதாவது, ஊரிலுள்ள முக்கியமானவர்களுக்குத் தெரிந்துதான் ஏற்பாடுகள் நடந்துள்ளன. அதற்கேற்றபடி, ஆட பெண்கள் கூட்டி வரப்பட்டனர், தங்க வைக்கப்பட்டனர், பிறகு அங்கு கூட்டி வரப்பட்டனர். இரவு 10 மணிக்கு மேல் தொடங்கிய அந்த நிகழ்ச்சியில் 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் நடனம் ஆடினர்[7]. நேரம் செல்ல செல்ல அந்த பெண்கள் தங்களை ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு நடனம் ஆடியுள்ளார்கள்[8]. 12 மணிக்கு மேல் எல்லா ஆடைகளையும் கழற்றிவிட்டு நிர்வாணமாக ஆடியுள்ளார்கள் என்று ஊடகங்கள் விளக்கியுள்ளன[9]. 1960களில் திராவிட பிரச்சாரக் கூட்டங்களில், பெரிய-பெரிய தலைவர்கள், பேச்சாளர்கள், நடிகர்கள் எல்லோருமே, இரவில் நேரம் ஆக-ஆக, இப்படித்தான் வாயினால் ஆபாசபேச்சு பேசி, மக்களை ஊக்குவிப்பர். அதே பாணியைத்தான், இந்த நடனத்திலும் பின்பற்றப்படுகிறது போலும்.

குடும்பத்துடன் நிர்வாண நடத்தை ரசித்த மக்கள்: அவ்வாறு கொஞ்சம்-கொஞ்சமாக அவிழ்த்து போட்டு ஆடிய நடனத்தை அங்கிருந்த இளைஞர்கள், பெண்கள் என எல்லோரும் கண்டு ரசித்துள்ளனர்[10]. அதாவது, அவர்களுக்கும் தெரிந்துள்ளது. சினிமாவில் பார்ப்பதை நேரில் பார்க்கும் அனுபவம் கிடைத்தது என்று பார்த்தார்களா அல்லது அதெல்லாம் தவறு என்று அறியாமல் பார்த்தார்களா என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும். இருப்பினும், மனசாட்சி இருந்த யாரோ சிலர் இதுபற்றி ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்[11]. வேறு வழியில்லை அல்லது நீதிமன்ற உத்தரவை மீறியதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலையில், அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு நிர்வாண நடனம் ஆடியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்[12]. அந்த பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் நிர்வான நடனம் பார்ப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் ஜீப் அங்கு வந்தததை கண்ட அனைவரும் ஆளுக்கு ஒரு பகுதியாக ஓடிவிட்டனர். அங்கிருந்த பெண்கள் வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டனர்.
© வேதபிரகாஷ்
27-11-2016

[1] Madras High Court – Viram vs The Inspector Of Police on 1 March, 2016 – IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED : 01.03.2016 – CORAM – THE HONOURABLE MR. JUSTICE R.SUBBIAH – W.P.No.7582 of 2016.
[2] https://indiankanoon.org/doc/138253317/
[3] Madras High Court, V.Rajendiran vs The Inspector Of Police on 4 February, 2016, IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 04.02.2016; CORAM: THE HONOURABLE MR.JUSTICE R.SUBBIAH, W.P.No.4252 of 2016.
[4] https://indiankanoon.org/doc/69166474/
[5] Madras High Court – C.Pachaimuthu vs The Inspector Of Police on 26 February, 2016; IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS – DATED : 26.02.2016; CORAM: THE HONOURABLE MR.JUSTICE R.SUBBIAH, W.P.No.7136 of 2016.
[6] https://indiankanoon.org/doc/186115943/
[7] மாலைமலர், ஓமலூர் அருகே நள்ளிரவில் ஆபாச நடனம்: போலீசாரை கண்டதும் 4 பெண்கள் ஓட்டம், பதிவு: ஜூன் 14, 2016 12:15.
[8] http://www.maalaimalar.com/News/State/2016/06/14121508/1018717/4-womens-running-for-when-obscene-dance-scared-by.vpf
[9] தமிழ்.வெப்துனியா, ஓமலூரில் நிர்வாண நடனம்; போலீசுக்கு மிஞ்சியது அவிழ்த்துப் போட்ட ஆடைதான், செவ்வாய், 14 ஜூன் 2016 (15:42 IST)
[10] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/nude-dance-show-in-salem-police-seized-dress-116061400058_1.html
[11] லைவ்டே, சேலம் அருகே நள்ளிரவில் நிர்வாண டான்ஸ் ஆடிய பெண்கள்!!, Jun 14, 2016 at 1:33 PM : By LIVEDAY.
[12] http://liveday.in/tamilnadu-live-headline-news/tamil-nadu-village-dance-program/
குறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அரசியல், ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச கரகம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஓமலூர், கரகம், கரகாட்டம், குத்தாட்டம், கூத்து, கோவில் குத்தாட்டம், கோவில் விழா, சினிமா, செக்ஸ் ஆட்டம், சேலம், நாமக்கல், பெண்
அசிங்க கரகாட்டம், அசிங்க நடனம், அசிங்கம், அரசியல், ஆகம விதி, ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கரகம், கரகாட்டம், கரூர், செக்ஸ், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், வருமானம், வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 26, 2016
இரட்டை உடை ஆபாச-அசிங்க-நடினமும், செக்யூலரிஸ குழப்பவாதமும், திராவிட சித்தாந்த ஆட்சியாளர்கள்-நிர்வாகிகளும்!

1960களிலிருந்து 2016 வரை திரைப்படங்கள் அவ்வாறு கேடுகெட்டது ஏன், அத்தகைய படங்களை எடுப்பது யார்?: திரைப்படங்கள் ஏற்கனவே நமது கோவிலை நல்ல விதமாக காண்பிக்கத் தவறி விட்டன.
இனி திரைப்படங்களில் கோவில்களில் காதல் பாடல்கள், நடனங்கள் இடம்பெறுவது போன்ற காட்சிகளை சென்சார் தடை செய்ய வேண்டும். ஒரு மதத்தை, ஜாதியை இழிவாக பேசுவதை ஏற்காத சென்சார் போர்டு, அந்த மதத்தின் புனிதமான கோவிலை மட்டும் காதலர்கள் மோசமான உடையில் ஆபாச நடனம் ஆடும் இடமாகவும், குத்துப்பாட்டு ஆடும் இடமாகவும் மக்களிடம் காண்பிக்க எப்படி அனுமதிக்கிறது? காளிக்கு ‘காதல் பாட்டு’, முனியாண்டிக்கு ‘முத்தப்பாட்டு’, அழகருக்கு ‘ஆபாசப் பாட்டு’ என எங்கும் சினிமா பாட்டு தான்.
|
ஏ. பி. நாகராஜன், குன்னக்குடி வைத்தியநாதன் முதலியோர் ஞாபகம் உள்ளதா? அத்தகையோர் இப்பொழுது தமிழகத்தில் ஏனில்லை? 1960களுக்குப் பிறகு என்ன நடந்தது? “கோவிகளில் டூயட்” போன்ற “ஐடியா” எப்படி, யாரிடத்திலிருந்து உருவானது? காளிக்கு ‘காதல் பாட்டு’, முனியாண்டிக்கு ‘முத்தப்பாட்டு’, அழகருக்கு ‘ஆபாசப் பாட்டு’ முதலியவற்றை இயற்றும் கவிகள், கவிக்கோக்கள், பெருங்கவிக்கோக்கள்…….யார், அவர்களுக்கு விருதுகள் கொடுத்து, கௌரவிப்பது யார்?
|
அதிலும் பள்ளி, கல்லூரி தேர்வுப்பருவத்தில் கோவில் திருவிழா என்ற பெயரில் காலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை ஆடல் பாடல் குத்தாட்ட நிகழ்ச்சியை கோவில் நிர்வாகமே செய்து கொடுப்பது தெய்வத்தை நினைக்காமல் தெருக்கூத்தையே நினைக்க வைக்கும்.

திராவிட நாத்திக அரசியலை அடையாளங்காணாமல், நடிகர்கள்–ஜாதி என்றெல்லாம் பேசுவது போலித்தனமே: முன்பெல்லாம் கோவில்களில் கட்டுப்பாடு இருந்தது [அப்படியென்றால், இப்பொழுது ஏனில்லை என்று கூறிவிட்டு தொடர வேண்டும், ஆனால், அவ்வாறு நோய் மூலம் அறியப்படவில்லை].
இன்று இருக்கும் இளைய தலைமுறை அஜித், விஜய், சூர்யா என பிரிவாக பிரிந்து தெருவுக்கு தெரு ஜாதி ரீதியில் நடிகர் பாடலும், ஜாதிப் பாடல்களும், ஜாதி தலைவருக்கு சுவரொட்டி ஓட்டுவதும், குடித்து விட்டு கோவில் திருவிழாவில் ஆடுவதை பெருமையாக நினைப்பதும் காளிக்கே பொறுக்குமா எனத் தெரியவில்லை. சிவராத்திரி அன்று கூட தெருவுக்குத் தெரு சினிமாப்பாடல்களை (பக்திப் பாடல்கள் அல்ல) ஒலிபரப்பி சிந்தனையில் சினிமாப் பாடல்கள் தான் நிற்கும் நிலை உள்ளது.
|
ஜாதிகளை ஒழிப்போம் என்று சொன்ன திராவிட சித்தாந்திகளால் ஏன் ஜாதிகளை அழிக்க முடியவில்லை? ஜாதிகளை, ஜாதி சங்கங்களைப் பெருக்கியதை அவர்கள் ஏன் தடுக்கவில்லை? “காளிக்குப் பொறுக்குமா” என்று கேட்பதை விட, அவ்வாறு ஆடும், ஆடுவதை பார்க்கும், அவர்களுக்கு காசு கொடுக்கும்….முதலியோரின் அம்மாக்கள், சகோதரிகள், மகள்கள், அத்தைகள், பெரியம்மாக்கள், பாட்டிகள் ……முதலியோர் எப்படி அமைதியாக இருக்கின்றனர்?
|

கண்ட கண்ட மேளமும் இசைப்பதை தடுக்க வேண்டும்: இதற்கும் மேலாக வாண வேடிக்கை என்று இதயம் பதற வைக்கும் வெடியுடன் திருவிழா நடத்துவார்கள். வெடி போட்டு விழா நடத்துகிறேன் என்று ஊரில் உள்ள வயதானவர்கள், பசு, நாய் விலங்கினங்கள் முடங்கும் அளவிற்கு வெடிச் சத்தமும், கண்ட கண்ட மேளமும் இசைப்பதை தடுக்க வேண்டும்.
நமது தமிழ் மண்ணுக்குரிய பாரம்பரிய இசை மட்டுமே உகந்தது. முன்பு வெடி போட்டு சாமி ஊர்வலமாக வருவதை சொன்னார்கள். இன்று சிங்கப்பூர் முருகனுக்கு விழா எடுப்பதை ஒரு நிமிட அலைபேசியில் தெரிவித்து விடுகின்றனர். பிறகு எதற்கு வீண் வெடிச்சத்தம், வெடிச் செலவு? அந்த வெடிச் செலவில் 10 மாணவர்களை படிக்க வைக்கலாமே அல்லது ஊருக்கு சுத்திகரிப்பு குடிநீர் சாதனம் அமைக்கலாமே?
|
“சப்த மாசு” விசயத்தில் இறங்கி, குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது. வெடி-வாணவேடிக்கைகள் எல்லாம் கோவில் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. உண்மையில், நீரை மாசு படுத்தியது யார் என்று தெரிந்து கொண்ட பிறகு, அதனை சுத்தக்ரிப்புப் பற்றி பேசலாம். சமூக சீரழிகளின் மூலங்களை வெளிப்படையாக சொல்லாமல், சுற்றி வளைக்கும் போக்குதான் தெரிகிறது.
|
இனி வரும் வெயில் காலத்தில் மக்களின் மன நிலையும் சூடாகவே இருக்கும். விவசாய வேலைகள் இல்லாததால் வீண் பிரச்னைகளும், மது போதைத் தகராறுகளும், சாதி ரீதியில் சண்டைகளும் அதிகமாக ஏற்படும். ஆகவே கோவில்கள் நமது ஒழுக்கத்தை மேம்படுத்தவே முன்னோர்கள் கோவிலை கொடுத்தார்கள் என்பதை மறந்து, கோவிலை பொழுது போக்கு இடமாக மாற்றியதை அரசும் வேடிக்கை பார்ப்பது கோவிலின் புனித தன்மையை அழிக்கிறது.

ஒரு மதத்தை அழிக்க மத மாற்றமோ, மத ரீதியில் பின்னடைவு நிகழ்வுகளோ தேவை இல்லை, அதிலுள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை அழித்தாலே போதும்[1]: பல ஆயிரம் வருடங்கள் புயல், மழை பார்த்த கோவில்கள், பல நூறு அந்நிய படை எடுப்பை மீறி வளர்ந்த கோவில்கள், குடி போதையால், சினிமாவால் வீழ்த்தப்படுகிறது.
ஒரு மதத்தை அழிக்க மத மாற்றமோ, மத ரீதியில் பின்னடைவு நிகழ்வுகளோ தேவை இல்லை. அந்த மதத்தில் உள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை அழித்தாலே போதும். தற்போது அந்தக் காரியம் கோவில் திருழா என்ற பெயரில் அடாவடியாக மது போதைக் கும்பலால் நடக்கிறது என்றால் மிகையாகது
|
இது வரை கொஞ்சம் பெரியாரிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் கலந்து கருத்துகளை சொல்லியப் பிறகு, இங்கு ஏதோ “ஒரு மதத்தை” ஆதரிப்பது போல எழுதுவது போலித்தனமே. முதலில், “மதத்தில் உள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை,” அழித்து வருவது யார் என்று வெளிப்படையாக சொல்லப்படவேண்டும்.
|

குழப்பவாதத்தில் வெளிப்பட்டுள்ள தீர்வு பரிந்துரைகள்: திருவிழாவில் தெய்வ அனுக்கிரகம் கூட,
1. சிறிய கோவில், பெரிய கோவில் என்றாலும் கடவுள் ஒன்றே என நினைத்து சினிமா பாடல், ஜாதிப்பாடல், ஜாதி ரீதியான சுவரொட்டிகள் இல்லாத கோவில் திருவிழா வேண்டும்.
2. அசைவ உணவு இல்லாமல் இருக்க வேண்டும்.
3. பொது இடங்களில் புகை பிடிக்க, மது அருந்த தடை இருப்பது போல, பொதுக்காரியங்களில் மது குடித்து விட்டு வருவோருக்கு கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதியில்லை என்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
4. திருவிழா நேரங்களில் உள்ளூர் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளித்து மக்களின் குடிபோதைக்கு விடுமுறை தர வேண்டும்.
5. வான வேடிக்கை, அதிக சத்தம் தரும் வெடிகள், காது கிழியும் கேரளா போன்ற மேளத்திற்கு தடை வேண்டும்.
|
1. கடவுளே இல்லை, இந்து கடவுளே இல்லை என்று அறிவித்து தானே, இவையெல்லாம் நடக்கின்றன. “பராசக்தி”யில் ஆரம்பித்தது, இவ்வாறு விரிந்துள்ளது.
2. பசுக்கறி சாப்பிடும் விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் போது, இது கிண்டலா, கேலியா என்று தெரியவில்லை!
3. அது தான், கோவில் “பொது இடம்” என்று அறிவித்து விட்டதால், கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்களே? அவர்கள் தானே இப்பொழுது தக்கார், தர்மகர்த்தா என்றெல்லாம் பதவிகளில் இருந்து கொண்டு, இத்தகைய “கொண்டாட்டங்களை” நடத்துகின்றனர்!
4. பாவம், உண்ணாவிரதத்திற்கு, எதிராக உண்ணும் விரதம் கொண்டாட்டம் நடத்தப்படும் தமிழக்த்தில், அப்படியே விடுமுறை அளித்தாலும், சரக்கடிக்காமலா இருப்பார்கள்?
5. இதெல்லாம், தீபாவளி வேண்டாம் போன்ற, போலித்தனமான வாதங்கள் தாம்.
|
‘டங்கா மாரி’ இனி அடங்கட்டும். …மாரியம்மன் மனம் குளிரட்டும்..![2], என்று முடித்திருக்கும் போது, இந்து மதம் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு வெளிப்படுகிறது. எஸ். அசோக் நல்ல கருத்துகளை பதிவு செய்ய ஆசைப்பட்டாலும், குழப்புவாதத்தால், “கிச்சடி” சித்தாந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
© வேதபிரகாஷ்
26-11-2016

[1] விகடன், மாரியம்மனுக்கும் ‘டங்கா மாரியா‘?, எஸ்.அசோக், Posted Date : 15:43 (06/04/2015), Last updated : 16:00 (06/04/2015)
http://www.vikatan.com/news/vasagar-pakkam/44753.art
[2] http://www.vikatan.com/news/vasagar-pakkam/44753.art
குறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அசிங்கம், அரசியல், ஆபாச கரகம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், கரகாட்டம், குத்தாட்டம், கோவில் நடனம், சினிமா, செக்ஸ் ஆட்டம், டங்கா மாரா, தப்பட்டை, தாரை, திருவிழா நடனம், நடனம், பெண்கள், மூட நம்பிக்கை
அசிங்க கரகாட்டம், அசிங்க நடனம், அசிங்கம், அதிமுக, அரசியல், ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, கரகம், கரகாட்டம், கருணாநிதி, குத்தாட்டம், கூத்து, கோவில் குத்தாட்டம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், செக்யூலரிஸம், செக்ஸ், டாஸ்மார்க், தடை, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், நடனம், பகுத்தறிவு, புகார், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 26, 2016
இரண்டு உடை – ஆபாச-அசிங்க நடனத்தை நடத்த அனுமதி மறுத்து, முன்னர் அனுமதி கொடுத்தற்கு வருந்தி தீர்ப்பளித்த நீதிபதி

நாமக்கல் மாவட்டத்தில் என்னத்தான் நடக்கிறது? என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிபதி உத்தரவு: நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள சில கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்குமாறு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனு அளித்தனர்[1]. ஆபாச நடனங்கள் நடைபெறுவதாலும், அதற்கு தடை இருப்பதாலும், காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. போலீஸ் அனுமதி வழங்காததால், நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கும்படி உத்தரவிடக் கோரி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த மணி, ராமசாமி உட்பட 6 பேர் தனித்தனியாக, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்[2]. அதில், ‘தங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர். “பாதுகாப்பும் வழங்கும்படியும்” என்றதே, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற கதையாக இருக்கிறது.
வழக்குக் கோப்புகளைப் பார்த்த்போது நீதிபதிக்கு சந்தேகம் வந்தது: இந்த வழக்கு வெள்ளிக்கிழமை 24-11-2016 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ் [Justice P N Prakash] விசாரித்தார். அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அடிக்கடி அனுமதிக் கேட்டு வழக்கு தொடர்வதை கண்டு சந்தேகம் கொண்டார்[3]. மேலும் “சுயவிளக்க” முனுவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் முரண்பாடுகள் இருந்தன. ஒரே வழக்கறிஞர் வேறுபட்ட ஆறு குழுக்களுக்கு ஆஜராவது முதலியனவும் சந்தேகங்களைக் கிளப்பின. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் என்னத்தான் நடக்கிறது? என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அம்மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்[4].

போலீஸ் அனைத்து விவரங்களையும், ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்தது[5]: இதன்படி, போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மகேஸ்வரன் ஆஜராகி அனைத்து விவரங்களையும், ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்தார்[6]. அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பலர் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். அந்த வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட்டும், மனுதாரரின் கோரிக்கை சட்டப்படி பரிசீலிக்கும்படி போலீசுக்கு உத்தரவிடுகிறது. இந்த உத்தரவை எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வக்கீல்களுடன், கிராமத்தினர் பலர் கூட்டமாக வந்து விடுகின்றனர். ஐகோர்ட்டே உத்தரவிட்டுள்ளது, அதனால் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று பிரச்சினை செய்து, ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றனர்.”
சாதி ரீதியாக மனு, ஆனால், ஆஜராகுவது ஒரே வக்கீல்: போலீஸ் சூப்பிரண்டு தொடர்கிறார், “ஒரு கிராமத்தில் உள்ள பொது கோவிலின் திருவிழாவுக்கு, அந்த கிராமத்தை சேர்ந்த பல்வேறு சாதியினர் தனித்தனியாக இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதற்காக ஒவ்வொரு சாதியினரும், தனித்தனியாக இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உத்தரவினை பெறுகின்றனர். அந்த உத்தரவின் அடிப்படையில் கிராமத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி, தாங்கள் பெரியவர்கள் என்று காட்டிக் கொள்கின்றனர். சந்தைபேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த 6 பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து, கடந்த 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தனித்தனியாக உத்தரவுகளையும் பெற்றுள்ளனர். அதேநேரம், இந்த 6 மனுதாரருக்கும் ஆஜரானவர் ஒரே வக்கீல் தான்,” இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. ஆக, கோவில் திருவிழா நடத்துவதை விட, மற்ற விவாகரங்கள் தான், அதிகமாக இருக்கின்றன. ஜாதி-கட்சி-பணம் வசூல் போன்ற விவகாரங்கள் பின்னணியில் இருக்கும் போது, கடவுள், கடவுள் நம்பிக்கை, கோவில்…….முதலியவற்றாஇப் பற்றி இவர்கள் எப்படி கவை கொள்வார்கள்?
நல்ல அனுபவம் – பெண்கள் இரண்டு ஆடைகளை மட்டும் உடலில் போட்டுக் கொண்டு, ஆபாசமாக ஆடுகின்றனர். ஆண்கள் குடிபோதையில் ஆடுகின்றனர்: இந்த அறிக்கையை படித்து பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஆடல் பாடல் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியையும் போலீசாரிடம் இருந்து வாங்கி பார்த்தார். இதன்பின்னர் நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட மனுக்களை சட்டப்படி பரிசீலிக்கும்படி போலீசாருக்கு நான் தான் பல்வேறு தேதிகளில் உத்தரவிட்டேன். அந்த உத்தரவுகள் எல்லாம், வக்கீல்கள் மீது வைத்துள்ள நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பிறப்பித்தேன். கோயில்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கும்படி, ஏற்கெனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். இதற்காக ஆழ்ந்த வேதனை, வருத்தத்தைத் தெரிவிக்கிறேன். கடந்த காலத்தில் நடந்த கெட்ட சம்பவங்கள் எல்லாம் ஒரு மனிதனுக்கு நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும். அதில் நீதிபதியான நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. எனக்கும் இது ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது.”

நடக்கும் நடனங்கள் சட்டத்தில் உள்ள விளக்கங்களையும் மீறுயுள்ளன: நீதிபதி தொடர்கிறார், “நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியை பார்த்தோம்[7]. பெண்கள் இரண்டு ஆடைகளை மட்டும் உடலில் போட்டுக் கொண்டு, ஆபாசமாக ஆடுகின்றனர்[8]. ஆண்கள் குடிபோதையில் ஆடுகின்றனர். அது நிச்சயமாக அபாசம் மற்றும் அசிங்கம் என்ற வார்த்தைகளின் [ surpassed the very definition of the words “obscenity” and “vulgarity”] விளக்கத்தையும் மீறுகின்றன[9]. குழந்தைகள், மாணவர், முதியோர், பெண்கள் இதனால் பாதிக்கப்படுவது நிச்சயம்[10]. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு சாதியினரும், இதுபோன்ற நிகழ்ச்சியை தனித்தனியாக நடத்துவதால், இதில் ஏற்படும் சிறு பிரச்சினைகள் கூட மிகப்பெரிய சாதி கலவரமாக மாறி விடுகிறது என்று போலீசார் தன் அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், சேலத்தை சேர்ந்த தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக்கலைஞர்கள் நலச்சங்கம், இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தன்னிடம் மனு கொடுத்துள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்”.
© வேதபிரகாஷ்
26-11-2016

[1] தினமணி, கோயில் விழாக்களில் ஆபாச நடனம் நடத்த எந்த உரிமையும் கிடையாது: உயர்நீதிமன்றம் உத்தரவு, Published on : 26th November 2016 02:55 AM .
[2]http://www.dinamani.com/tamilnadu/2016/nov/26/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2605107.html
[3] தினகரன், கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு, Date: 2016-11-25 19:57:45.
[4] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=261508
[5] லைவ்டே, கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு !!, ஜூலை.2, 2013.
[6] http://liveday.in/chennai-online-tamil-news/hc-refused-to-allow-archestra/
[7] The Times of India, HC says no for two piece dance at temple festivals, TNN | Updated: Nov 26, 2016, 02.14 AM IST.
[8] http://timesofindia.indiatimes.com/city/chennai/HC-says-no-for-two-piece-dance-at-temple-festivals/articleshow/55628876.cms
[9] Indian Express, Judge regrets grant of permission for ‘adal-padal’, By Siva Sekaran | Express News Service | Published: 26th November 2016 04:00 AM, Last Updated: 26th November 2016 04:00 AM.
[10] http://www.newindianexpress.com/states/tamil-nadu/2016/nov/26/judge-regrets-grant-of-permission-for-adal-padal-1542780.html
குறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அசிங்கள், ஆபாச நடனம், ஆபாசம், கரகம், கோவில் விழா, செக்ஸ், தப்பட்டை, தாரை, திருநங்கை, திருவிழா, திருவிழா நடனம், நடனம், நிர்வாணம், நொண்டி குதிரை, பறை, பாலியல், ரிகார்ட் டான்ஸ்
அசிங்க நடனம், அசிங்கம், ஆடல் பாடல், ஆபாச நடனம், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உரிமை, எண்ணம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், செக்யூலரிஸம், செக்ஸ், டாஸ்மார்க், தடை, தமிழர் பேரவை, திராவிட நாத்திகம், திராவிடம், திருவிழா நடனம், தூஷண வேலைகள், நடனம், பாலியல், ரிகார்ட் டான்ஸ், விழா நடனம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »