Archive for the ‘ஆன்மிக மக்கள்’ Category

இந்துத்துவம் பிணைக்கும் போது பிஜேபிகாரன், ஆர்.எஸ்.எஸ்.முதியவரைக் கொலை செய்ய முடியுமா? குற்ற மனப்பாங்கு எப்படி வந்தது – சுயபரிசோதனை செய்யவேண்டும்!  

ஜூலை 3, 2020

இந்துத்துவம் பிணைக்கும் போது பிஜேபிகாரன், ஆர்.எஸ்.எஸ்.முதியவரைக் கொலை செய்ய முடியுமா? குற்ற மனப்பாங்கு எப்படி வந்ததுசுயபரிசோதனை செய்யவேண்டும்!

Self-introspection required to check-power struggle or ideology failure

கருடா சௌக்கியமா? பரசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கேட்டது!: அதிகாரம் ஊழலை உண்டாக்கும், சிதைக்கும், அதுபோல, அளவுக்கு அதிகமான அதிகாரம், எதேச்சாதிகாரம் அதிக அளவில் ஊழலை, நாசத்தை, சேதத்தை உண்டாக்கும் (Power corrupts, absolute power corrupts absolutely). ஒரு சாதாரண மனிதன் கூட, அதிகாரத்தைக் கொடுத்தால், கொஞ்சம் கொஞ்சமாக அகம்பாவம், ஆணவம், திமிர், மமதை, இருமாப்பு என்று ஆட ஆரம்பித்து விடுவான். “யாரும் இருக்கும் இடத்தில் இருது கொண்டால், எல்லாம் சௌக்கியமே,” கருடன் சொன்னது. இந்துத்துவ வாதிகளுக்கு, இதெல்லாம் தெரியாது என்று சொல்ல முடியாது. தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகளால், முதலில் சுய-பரிசோதனை செய்து கொண்டு, என்ன பிரச்சினை என்று அறிந்து, அதனை தீர்க்க முயற்சிக்க வேண்டும். பிரம்மாவை ஒதுக்கி, சிவனைப் போல வரம் கொடுத்துக் கொண்டே இருந்தால், பஸ்மாசுரர்கள் அதிகமாகிக் கொண்டே இருப்பார்கள். கட்டுப் படுத்த வேண்டும். லெட்டர்பேட், விசிடிங் கார்டுகள் அதிகமாகின்றன எனும்போதே, செக் வைக்க வேண்டும்.

Shri Vijayendra Swamigal Mutt, Kumbakonam HO - Temples in Kumbakonam

அபினவ் தீர்த்தசுவாமி சொத்துக்களும், ஆக்கிரமித்த பிஜேபி தலைவரும்: மடத்தின் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் வடக்கு மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலன் (68), (வயது 80) என்கிறது மாலைமுரசு, 65 என்கிறது இன்னொரு ஊடகம்[1]. ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மகன் வாசுதேவன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மண்டல பொறுப்பாளர்[2]. அப்பகுதியில் உள்ள அபினவ் தீர்த்தசுவாமி மடத்தின் பொறுப்பாளராக கோபாலன் இருந்துவந்தார்[3]. இந்த மடத்துக்கு கும்பகோணம், நாச்சியார்கோவில் பகுதியில் நிறைய சொத்துக்கள் உள்ளதால், இதை கோபாலன்தான் நிர்வகித்து வந்துள்ளார். இந்த மடத்துக்கு சொந்தமான 13 கடைகள் அப்பகுதியில் உள்ளன. இங்கு கடை நடத்தியவர்களில் பலர் வாடகை செலுத்தாமல் இழுத்தடித்ததால், மடத்தின் நிர்வாகத்தினர் கூறியதன்பேரில், அனைவரும் கடைகளை காலி செய்துவிட்டனர். ஆனால், அங்கு டெய்லர் கடை நடத்திவந்த பாஜகவின் நாச்சியார்கோவில் நகரத் தலைவரான சரவணன் (48) மட்டும், கடையை காலி செய்ய மறுத்துவிட்டார்.

BJP person kills RSS worker, Velli Idazh, 02-07-2020

நீதி மன்றத்திற்குச் சென்றது, காலிசெய்யச் சொன்னது:  இதையடுத்து, நீதிமன்றத்தில் கோபாலன் தொடர்ந்த வழக்கில், கடையை காலிசெய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதால், கடை காலி செய்யப்பட்டது. இதுதான் இவர்களுக்கு இடையே பிரச்சனையாக இருந்தது[4]. முதலில் 2 லட்சம் வாடகை பணத்தை தருகிறேன் என்றவர் நாளடைவில், “இது என் அப்பா வெச்ச கடை, ரொம்ப வருஷமா கடை வெச்சிருக்கோம். நீ கோர்ட்டுக்கு போனால்கூட கடை எங்களுக்குதான்,” என்று சொல்லி உள்ளார். சரவணன் இப்படி சொல்லிவிட்டதால், கோபாலன் வேறு வழி தெரியாமல் கோர்ட் உதவியை நாடினார்.. கடைசியில் சரவணனை கடையை காலி செய்ய கோர்ட் சொல்லிவிட்டது. இந்த உத்தரவையடுத்து, “கடையை காலி செய்தால் ரூ.2 லட்சம் தரேன்னு சொன்னீங்களே அந்த பணம் எங்கே,” என்று கோபாலன் கேட்டார்.. அதற்கு சரவணன், “அது கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி சொன்னது, இப்பதான் தீர்ப்பு வந்துடுச்சே” என்று வாக்குவாதம் செய்து வந்துள்ளார்[5].

How BJP Saravanan could kill RSS old man-news

முதியவர் கோபாலன் 30-06-2020 அன்று கொலை செய்யப் பட்டார் – 01-07-2020 மாலை செய்தி: 30-06-2020 செவ்வாய் கிழமை, இரவு தனது வீட்டின் திண்ணையில் கோபாலன் அமர்ந்து இருந்தார்[6]. முதலில் வாக்குவாதம் நடந்துள்ளது[7]. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கோபாலனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்[8]. இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கோபாலன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்[9]. இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மடத்தின் பொறுப்பாளராக பதவி வகித்து வந்த கோபாலன், மடத்துக்கு சொந்தமான சில கடைகளை பல மாதங்களாக போராடி காலி செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

BJP person kills RSS worker, Tamil Hindu, 02-07-2020

பிஜேபி நகரத்தலைவர் கொன்றதை ஒப்புக் கொண்டது, 02-07-2020 மாலை செய்தி இதனால், கோபத்தில் இருந்துவந்த சரவணன் 30-06-2020 இரவு மதுபோதையில் சென்று, தன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த கோபாலனை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில், கோபாலன் உயிரிழந்தார். நாச்சியார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர்[10]. விசாரணையில் உண்மையினை ஒப்புக் கொண்டார் என்று போலீஸார் கூறுகின்றனர்[11]. இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம்[12]. “கடையை காலி செய்யச் சொன்னதால் கோபாலன் மீது கோபத்தில் இருந்துள்ளார் சரவணன். இவர் பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ளார். இந்நிலையில் கொரோனாவால் டெய்லர் கடை வருமானமும் போய்விட்டதால், பணரீதியாக கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் கோபாலன் மீதான ஆத்திரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த சரவணன் மாம்பழம் வெட்டுவதற்கு எனக் கூறி புதிய கத்தி ஒன்றை வாங்கி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு முன் நின்றுகொண்டிந்த கோபாலனிடம், ` என் கடையைக் காலி செய்ய வைத்துவிட்டாயே.. உன்னை சும்மாவிடமாட்டேன்’ எனக் கூறி கத்தியைக் கொண்டு முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிக் கொலை செய்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சரவணனைக் கைது செய்துவிட்டோம்” என்றனர்[13].

BJP person kills RSS worker, Tamil One India, 02-07-2020

இது என் அப்பா வெச்ச கடை, ரொம்ப வருஷமா கடை வெச்சிருக்கோம். நீ கோர்ட்டுக்கு போனால்கூட கடை எங்களுக்குதான்,”: பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ள சரவணன் இவ்வாறு சொன்னதில் பல திடுக்கிடும் விவரங்கள் வெளி வருகின்றன:

 1. கோவில்-மடத்து சொத்து என்று சரவணனுக்குத் தெரிந்திருக்கிறது.
 2. பிஜேபி கோவில்-மடத்து சொத்துக்களை அரசிடமிருந்தே மீட்க போராடி வருவது தெரிந்த விசயமே.
 3. “உழுதவனுக்குத் தான் நிலம்,” என்பது போல, “ஆக்கிரமிப்புக் காரனுக்குத் தான் சொத்து சொந்தம்,” என்ற தத்துவத்தை யார் சொல்லிக் கொடுத்தது?
 4. அந்நிலையில் பிஜெபி தலைவரே, அவ்வாறு மடத்து சொத்தினை அபகரித்து, தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
 5. பிஜேபிகாரர்களுக்கு அவ்வாறு தான் பயிற்சி அளிக்கப் படுகிறதா? சரவணனுக்கு அத்தகைய எண்ணன் வந்தபோதே, அவன் தடுக்கப் பட்டிருந்தால், இத்தகைய ஆக்கிரமிப்பு நடந்திருக்காது.
 6. கோவில்-மடத்து சொத்துக்கள் ஆக்கிரமிப்பு என்றால், சமூகவளைதளங்களில் இந்துத்துவவாதிகள் பிண்ணி எடுத்து விடுகிறார்கள்.
 7. ஆனால், இதை எப்படி கண்டு கொள்ளாமல் விட்டர்கள் என்று தெரியவில்லை.
 8. ஆகவே, சட்டப் படியான நடவடிக்கை, போராட்டம், மீட்பு எனும்போது, சம்பந்தப் பட்டவர்கள் கொள்கைகளுடன் செயல்பட வேண்டும்.
 9. நானும் மற்றவர்களைப் போல [திக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் ஆக்கிரமிப்புக் காரர்கள்] ஆக்கிரமித்துக் கொள்வேன், தனதாக்கிக் கொள்வேன் என்ற மனப்பாங்கில் இருந்தால், பிஜேபியில் இருக்க வேண்டிய அவசியமே இல்லையே?
 10. அதிகாரம், பணம் எல்லாம் வந்தால், அகம்பாவம், ஆணவம், திமிர் எல்லாம் வரலாம், ஆனால், இந்து என்ற உணர்வு இருக்க வேண்டும். அது இல்லாமல், இவ்வாறு செயல்பட்டதால் தான், இந்த ஆள் கொலையும் செய்திருக்கிறான்.

இந்துத்துவவாதிகள், இந்துத்துவ அரசியல்வாதிகள், இந்துத்துவ சிந்தனையாளர்கள், இந்துத்துவ அபிமானிகள் …இவற்றைப் பற்றி பொறுமயாக ஆராய வேண்டும், மாற்றிக் கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

02-07-2020

BJP person kills RSS worker, Tanjai Malar, 02-07-2020

[1] ஊடகங்கள் எப்படி விவரங்களை சேகரிக்கின்றன, செய்திகளாகப் போடுகின்றன, செய்திகளாக்குகின்றன, அவற்றின் தரம் எப்படியுள்ளது என்பதனை, இது போன்று என்னுடைய பல பதிவுகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

[2] தமிழ்.இந்து, ஆர்எஸ்எஸ் பிரமுகரின் தந்தை கொலை; நாச்சியார்கோவில் நகர பாஜக தலைவர் கைது, Published : 02 Jul 2020 07:33 AM; Last Updated : 02 Jul 2020 07:37 AM

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/562225-bjp-leader-arrested-for-rss-cadre-murder.html

[4] தமிழ்.ஒன்.இந்தியா, 65 வயது ஆர்எஸ்எஸ் பிரமுகரை.. கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற.. பாஜக நிர்வாகி.. ஷாக்கில் கும்பகோணம்! By Hemavandhana | Updated: Wednesday, July 1, 2020, 17:44 [IST]

[5] https://tamil.oneindia.com/news/thanjavur/kumbakonam-mattam-incharge-murder-by-bjp-cadre-390012.html

[6] தினமணி, கும்பகோணம் அருகே அபிநவதீர்த்தர் மடத்தின் பொறுப்பாளர் கொலை, By DIN | Published on : 30th June 2020 10:36 PM.

[7] https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jun/30/uttaradi-mutt-incharge-killed-near-kumbakonam-3431524.html

[8] மாலைமலர், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் தந்தை கொலைமர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு, பதிவு: ஜூலை 01, 2020 13:23 IST

[9] https://www.maalaimalar.com/news/district/2020/07/01132323/1661015/RSS-Administrator-father-murdered-police-investigation.vpf

[10] NEWS18, தஞ்சையில் 87 வயது முதியவர் கொலையில் சிக்கிய பாஜக முன்னாள் நிர்வாகி, LAST UPDATED: JULY 2, 2020, 8:59 PM IST.

[11] https://tamil.news18.com/news/live-updates/tanjore-rss-man-murder-ex-bjp-man-arrested-san-312139.html

[12] விகடன், `வருமானமும் போச்சு.. கடையும் போச்சு!’ –மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.. நிர்வாகி, கே.குணசீலன், Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM.

[13] https://www.vikatan.com/news/crime/old-man-murdered-by-bjp-cadre-in-kumbakonam?artfrm=v4

How BJP Saravanan could kill RSS old man-Vikatan

சித்தர்கள் உண்ணாவிரதம் – தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்?

ஜனவரி 13, 2020

சித்தர்கள் உண்ணாவிரதம் – தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்?

Siddhar fasting-1

ஆழ்வார்கள்நாயன்மார்களை விட தமிழுக்கு இக்கால சித்தாந்திகள் செய்திருக்கிறார்களா?: மக்களுக்கு விளம்பரம் வேண்டும் என்றால், என்னவேண்டுமானாலும் செய்வார்கள் போலும். தமிழ்-சமஸ்கிருதம் பிரச்சினைகளைக் கிளப்ப, இப்படி, “சித்தர்” வேடத்தில், கிளம்பி விட்டார்கள் போலும். உண்மையில், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், இத்தகைய போலித்தனமான உள்கோக்கம் கொண்ட செயல்களுக்கு “சித்தர்” வேடத்தை உபயோகித்து இருக்க மாட்டார்கள். ஆழ்வார்கள்-நாயன்மர்கள் செய்ததை விட இத்தகைய வேடதாரிகள் ஒன்றும் செய்து விடவில்லை. உண்மையில் அவர்கள் தான் தமிழின் மூலம், மக்களுக்கு வேதக் கருத்துகளை, அடிப்படைகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார்கள். அப்பொழுது, மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. மொழிவெறி, மொழி-காழ்ப்பு, மொழி-துவேசம் போன்ற நிலைகளில் யாரும் செயல்படவில்லை. ராஜராஜன் மற்றும் ராஜேந்திரன் காலத்தில், தமிழ்நாட்டின் புகழை உலகம் முழுவதும் பரவும் முறையில் தங்களது வீரத்தினால், பராக்கிரமத்தால், நியாய-தர்மங்களினால் நடந்து கொண்டு, வெற்றிக் கொண்டு, மக்களுக்கு உகந்த முறையில் ஆட்சி செய்தனர். அதனால் தான் 950-1250 BCE காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

Siddhar fasting-2

ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழர்களை எதிர்க்கும் மர்மம் என்ன?: ஆனால், இப்பொழுதோ, சோழர்களை இழித்துப் பழித்துப் பேசி, எழுதி, பொய்மை மூலம், மக்களை ஏமாற்ற, போலிகள் நிறைய பேர் கிளம்பியுள்ளனர். முன்பு, திராவிடத்துவ, கம்யூனிஸ, இந்துவிரோத கோஷ்டிகள், சோழர்கள் கோவில்களைக் கட்டியதற்கே, பிரச்சாரம் செய்தனர். அவர்கள் பிராமண அடிவருடிகள், பார்ப்பனியத்தை வளர்த்தவர்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தனர். ரஞ்சித் போன்ற கூத்தாடிகளும் இந்த பொய்மை-மாய்மாலங்களில் இறங்கி  பிரச்சாரம் செய்தனர். அயல்நாட்டு அறிவிஜீவிகளை வைத்தும், இந்த்தகைய பிரச்சாரங்களை அதிகப் படுத்தினர். தஞ்சை கோவிலில், இந்தி கல்வெட்டுகளை வைத்தனர் என்றும் புளுகினர். இப்பொழுது, இந்த போலி சித்தர்கள் கிளம்பியுள்ளனர். கோவில்களை இடித்த துலுக்கர்களை எதிர்ப்பதில்லை. விக்கிரங்களைத் திருடிய திராவிடத்துவ கும்பல்களைக் கண்டிக்க வில்லை. கோவில்களில்  கொள்ளை அடிக்கும், அறநிலையத் திருடர்களையும் தண்டிக்கவில்லை. மாறாக, இவ்விசத்தில் இறங்கியுள்ளனர்.

Siddhar fasting-3
குடமுழக்கு விழாவுக்கு குந்தகம் இழைக்கும் குழப்பவாதிகள்: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் பிப்ரவரி 5- ந் தேதி நடைபெறுகிறது[1]. இவ்விழாவை தமிழில் திருமறைகள் ஓதி நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்[2]. அப்படியென்றால், சீமான் போன்ற கோஷ்டிகள், இதற்கு உதவுவது போலத் தெரிகிறது. தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆன்மிக மக்களும் தமிழார்வளர்களும் எழுப்பி வருகிறார்கள்[3]. இந்த நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட சித்தர் அடியார்கள் மதுரையில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில் மந்தையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தி வருகிறார்கள்[4]. சத்யபாமா அறக்கட்டளை நிறுவனர் சத்யபாமா முன்னிலை வகித்தார்[5]. ஐகோர்ட் வழக்கறிஞர் பாபுஜெகநாத், அறக்கட்டளை நிர்வாகிகள் பாண்டியராஜ், வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தஞ்சை கோயிலில், செந்தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென வலியுறுத்திப் பேசினர்[6]. இதில் 98 பெண் சித்தர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Siddhar fasting-4

குடமுழுக்கு நடத்த போலிகள் குறுக்கிடுவது விந்தைதான்: சித்தர் அடியார்கள் கூறும்போது, ”1,000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு தமிழ் மொழி வழியிலேயே நடத்தப்பட்டுள்ளது. ஆனால், சமீபகாலமாக குடமுழுக்கு விழாவை சமம்ஸ்கிருத மொழியில் மாற்றி நடத்துவதால் கோயிலின் ஆகம விதிகளுக்கு முரணாக உள்ளது. தமிழ்மொழியில் குடமுழுக்கு விழா நடத்தக் கோரி பன்னிரண்டாவது சித்தர் சார்பாக இந்து அறநிலையத்துறைக்கும் முதலமைச்சருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் செவி சாய்க்காமல் சம்ஸ்கிருதத்திலேயே நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழ்மொழி வழியில் தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்த உத்தரவிட வேண்டும்,” என்றனர்[7]. தமிழார்வளர்கள் மட்டும் வலியுறுத்தி வந்த இக்கோரிக்கையை ஆன்மிக சான்றோர்களும் முன்வைத்து வருகிறார்கள்[8]. மதுரை வண்டியூர் வீரராகப் பெருமாள் மந்தையில், சித்தர் பீடாதிபதி ஞாலகுருசித்தர் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட சித்தர் அடியார்கள் உண்ணாவிரதம் இருந்து வருவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Siddhar fasting-5

தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்களின் பின்னணி என்ன?: தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்? இதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவர்களது விவரங்கள் என்ன? இவர்களது தமிழார்வம், ஆன்மீகம், சித்தம் முதலியவை என்ன? இவர்களது பின்னணி என்ன? உண்ணாவிரதம் அடையாளமா, நாள் முழுவதுமா, இரண்டு நாட்களா, சாகும் வரையிலா? இல்லை சித்த்ர்கள் போல சாகாமலேயே, செய்து கொண்டிருப்பார்களா? ஒரு நாள் நடத்த வேண்டும் என்றால், சாமியானா, நாற்காலிகள் முதலியவற்றிற்கு யார் வாடகைக் கொடுத்தது? சித்தர்கள் என்பதால், காற்றிலிருந்து வந்து, காற்றிலேயே மறைந்து விடுமா? இவர்களுக்கு, வழக்கறிஞர் துணை, ஆலோசனை எல்லாம் எதற்கு? அரசியல் தொடர்புகள் உள்ளனவா? இவர்கள் இந்துக்களா, இல்லை, நாங்கள் தமிழர்கள் என்பார்களா, சைவர்கள், இந்துக்கள் அல்ல என்பார்களா? ஆக, பின்னணி விவரங்கள் தெரியாமல், சொல்லாமல், திடீரென்று தோன்றியுள்ள இவர்கள் சித்தகள் தாம்!

Siddhar fasting-6

 1. கோயில் குடமுழுக்கு தமிழ்மொழியில் நடத்த வேண்டும்! – உண்ணாவிரதம் இருக்கும் சித்தர்கள், இது பெரிய ஜோக் என்றே சொல்ல வேண்டும்!
 2. சித்தர்கள் எல்லாவற்றையும் கடந்தவர்கள் ஆயிற்றே, பிறகு, ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்? அப்படியென்றால் சாப்பிடும் சித்தர்களா?
 3. திராவிடக் கட்சிகள் உண்ணும் விரதம் மேற்கொள்ளும் பாணியில் தான், இவர்களின் செயல்பாடு உள்ளது. சமீபத்தில் கூட சூரிய கிரகணத்தின் போது, உண்பேன் என்று வேடிக்கைக் காட்டினார்கள்!
 4. அதே போல சித்தர்களுக்கு எல்லா மொழிகளையும் அறிந்தவர்கள் ஆயிற்றே? பிறகு என்ன தமிழ் என்றெல்லாம் கேட்பது?
 5. இந்த காலத்தில் 2020ல் “சித்தர்கள்” என்று யார் சான்றிதழ் கொடுப்பது, கல்லூரி உள்ளதா? அவ்வாறு சித்தர் ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்?
 6. கருப்பு, சிகப்பு, பச்சை சர்ட்டுகள், மூக்குக் கண்ணாடி சகிதம் அணிந்த ஆண்கள், புடவை கட்டிய பெண்கள் என்றெல்லாம் இருப்பார்களா?
 7. இந்த சித்தர்களை, காஷ்மீர், ஜே.என்.யூ, பாகி-பங்களா எல்லை பகுதிகள் என்று அனுப்பி வைத்தால், எல்லா பிரச்சினைகளும் தீர்ந்திருக்குமே?
 8. ராஜராஜசோழன் காலத்தில் இருந்த கருவூர் சித்தரை விட இந்த சித்தர் பெரிய சித்தர்களா? அப்பொழுது இல்லாத மொழி பிரச்சினை இப்பொழுது எப்படி?
 9. செல்போன், செருப்பு, கடிகாரம் எல்லாம் போட்டிருக்கும், இந்த சித்தர்கள், இன்னொரு கோவிலையே கட்டி, அங்கு புரட்சியை செய்யலாமே?
 10. சித்தர்கள் பெயரில், இத்தகைய கேலிக் கூத்து ஆடுவதை விட்டு, உண்மையான பக்தி, சிரத்தை முதலியவற்றுடன், மக்களுக்கு உபயோகமான சேவைகளை செய்தான், நல்ல பெயர் கிடைக்கும்.

© வேதபிரகாஷ்

13-01-2020

Siddhar fasting-7

[1] தமிழ்.ஒன்.இந்தியா, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்குதமிழில் நடத்த கோரி சித்தர்கள் உண்ணாவிரதம், By Mathivanan Maran | Published: Sunday, January 12, 2020, 19:36 [IST]

[2] http://tamil.oneindia.com/news/madurai/siddhars-hold-protest-on-thanjavur-temple-s-consecration-should-be-done-with-tamil-373945.html

[3] நியூஸ்.7.டிவி, மதுரையில் சித்தர்கள் உண்ணாவிரத போராட்டம்!, January 12, 2020, Posted By : Nandhakumar.

[4] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/12/1/2020/monk-protest-against-sanskrit-language-pooja-tanjore-temple

[5] தினகரன், பிப்.5ம் தேதி சமஸ்கிருதத்தில் நடத்த எதிர்ப்பு தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு விழா: மதுரை உண்ணாவிரதத்தில் சித்தர்கள் வலியுறுத்தல், 2020-01-13@ 00:29:04

[6] http://dinakaran.com/News_Detail.asp?Nid=555941

[7] விகடன், பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ்மொழியில் நடத்த வேண்டும்! – உண்ணாவிரதம் இருக்கும் சித்தர்கள், செ.சல்மான் பாரிஸ், ஈ.ஜெ.நந்தகுமார், Published:Yesterday at 6 PM; Updated:Yesterday at 6 PM

[8] https://www.vikatan.com/news/protest/thanjavur-periya-koil-kumbabhisekam-issue