சித்தர்கள் உண்ணாவிரதம் – தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்?

சித்தர்கள் உண்ணாவிரதம் – தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்?

Siddhar fasting-1

ஆழ்வார்கள்நாயன்மார்களை விட தமிழுக்கு இக்கால சித்தாந்திகள் செய்திருக்கிறார்களா?: மக்களுக்கு விளம்பரம் வேண்டும் என்றால், என்னவேண்டுமானாலும் செய்வார்கள் போலும். தமிழ்-சமஸ்கிருதம் பிரச்சினைகளைக் கிளப்ப, இப்படி, “சித்தர்” வேடத்தில், கிளம்பி விட்டார்கள் போலும். உண்மையில், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், இத்தகைய போலித்தனமான உள்கோக்கம் கொண்ட செயல்களுக்கு “சித்தர்” வேடத்தை உபயோகித்து இருக்க மாட்டார்கள். ஆழ்வார்கள்-நாயன்மர்கள் செய்ததை விட இத்தகைய வேடதாரிகள் ஒன்றும் செய்து விடவில்லை. உண்மையில் அவர்கள் தான் தமிழின் மூலம், மக்களுக்கு வேதக் கருத்துகளை, அடிப்படைகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார்கள். அப்பொழுது, மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. மொழிவெறி, மொழி-காழ்ப்பு, மொழி-துவேசம் போன்ற நிலைகளில் யாரும் செயல்படவில்லை. ராஜராஜன் மற்றும் ராஜேந்திரன் காலத்தில், தமிழ்நாட்டின் புகழை உலகம் முழுவதும் பரவும் முறையில் தங்களது வீரத்தினால், பராக்கிரமத்தால், நியாய-தர்மங்களினால் நடந்து கொண்டு, வெற்றிக் கொண்டு, மக்களுக்கு உகந்த முறையில் ஆட்சி செய்தனர். அதனால் தான் 950-1250 BCE காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

Siddhar fasting-2

ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழர்களை எதிர்க்கும் மர்மம் என்ன?: ஆனால், இப்பொழுதோ, சோழர்களை இழித்துப் பழித்துப் பேசி, எழுதி, பொய்மை மூலம், மக்களை ஏமாற்ற, போலிகள் நிறைய பேர் கிளம்பியுள்ளனர். முன்பு, திராவிடத்துவ, கம்யூனிஸ, இந்துவிரோத கோஷ்டிகள், சோழர்கள் கோவில்களைக் கட்டியதற்கே, பிரச்சாரம் செய்தனர். அவர்கள் பிராமண அடிவருடிகள், பார்ப்பனியத்தை வளர்த்தவர்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தனர். ரஞ்சித் போன்ற கூத்தாடிகளும் இந்த பொய்மை-மாய்மாலங்களில் இறங்கி  பிரச்சாரம் செய்தனர். அயல்நாட்டு அறிவிஜீவிகளை வைத்தும், இந்த்தகைய பிரச்சாரங்களை அதிகப் படுத்தினர். தஞ்சை கோவிலில், இந்தி கல்வெட்டுகளை வைத்தனர் என்றும் புளுகினர். இப்பொழுது, இந்த போலி சித்தர்கள் கிளம்பியுள்ளனர். கோவில்களை இடித்த துலுக்கர்களை எதிர்ப்பதில்லை. விக்கிரங்களைத் திருடிய திராவிடத்துவ கும்பல்களைக் கண்டிக்க வில்லை. கோவில்களில்  கொள்ளை அடிக்கும், அறநிலையத் திருடர்களையும் தண்டிக்கவில்லை. மாறாக, இவ்விசத்தில் இறங்கியுள்ளனர்.

Siddhar fasting-3
குடமுழக்கு விழாவுக்கு குந்தகம் இழைக்கும் குழப்பவாதிகள்: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் பிப்ரவரி 5- ந் தேதி நடைபெறுகிறது[1]. இவ்விழாவை தமிழில் திருமறைகள் ஓதி நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்[2]. அப்படியென்றால், சீமான் போன்ற கோஷ்டிகள், இதற்கு உதவுவது போலத் தெரிகிறது. தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆன்மிக மக்களும் தமிழார்வளர்களும் எழுப்பி வருகிறார்கள்[3]. இந்த நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட சித்தர் அடியார்கள் மதுரையில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில் மந்தையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தி வருகிறார்கள்[4]. சத்யபாமா அறக்கட்டளை நிறுவனர் சத்யபாமா முன்னிலை வகித்தார்[5]. ஐகோர்ட் வழக்கறிஞர் பாபுஜெகநாத், அறக்கட்டளை நிர்வாகிகள் பாண்டியராஜ், வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தஞ்சை கோயிலில், செந்தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென வலியுறுத்திப் பேசினர்[6]. இதில் 98 பெண் சித்தர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Siddhar fasting-4

குடமுழுக்கு நடத்த போலிகள் குறுக்கிடுவது விந்தைதான்: சித்தர் அடியார்கள் கூறும்போது, ”1,000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு தமிழ் மொழி வழியிலேயே நடத்தப்பட்டுள்ளது. ஆனால், சமீபகாலமாக குடமுழுக்கு விழாவை சமம்ஸ்கிருத மொழியில் மாற்றி நடத்துவதால் கோயிலின் ஆகம விதிகளுக்கு முரணாக உள்ளது. தமிழ்மொழியில் குடமுழுக்கு விழா நடத்தக் கோரி பன்னிரண்டாவது சித்தர் சார்பாக இந்து அறநிலையத்துறைக்கும் முதலமைச்சருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் செவி சாய்க்காமல் சம்ஸ்கிருதத்திலேயே நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழ்மொழி வழியில் தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்த உத்தரவிட வேண்டும்,” என்றனர்[7]. தமிழார்வளர்கள் மட்டும் வலியுறுத்தி வந்த இக்கோரிக்கையை ஆன்மிக சான்றோர்களும் முன்வைத்து வருகிறார்கள்[8]. மதுரை வண்டியூர் வீரராகப் பெருமாள் மந்தையில், சித்தர் பீடாதிபதி ஞாலகுருசித்தர் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட சித்தர் அடியார்கள் உண்ணாவிரதம் இருந்து வருவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Siddhar fasting-5

தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்களின் பின்னணி என்ன?: தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்? இதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவர்களது விவரங்கள் என்ன? இவர்களது தமிழார்வம், ஆன்மீகம், சித்தம் முதலியவை என்ன? இவர்களது பின்னணி என்ன? உண்ணாவிரதம் அடையாளமா, நாள் முழுவதுமா, இரண்டு நாட்களா, சாகும் வரையிலா? இல்லை சித்த்ர்கள் போல சாகாமலேயே, செய்து கொண்டிருப்பார்களா? ஒரு நாள் நடத்த வேண்டும் என்றால், சாமியானா, நாற்காலிகள் முதலியவற்றிற்கு யார் வாடகைக் கொடுத்தது? சித்தர்கள் என்பதால், காற்றிலிருந்து வந்து, காற்றிலேயே மறைந்து விடுமா? இவர்களுக்கு, வழக்கறிஞர் துணை, ஆலோசனை எல்லாம் எதற்கு? அரசியல் தொடர்புகள் உள்ளனவா? இவர்கள் இந்துக்களா, இல்லை, நாங்கள் தமிழர்கள் என்பார்களா, சைவர்கள், இந்துக்கள் அல்ல என்பார்களா? ஆக, பின்னணி விவரங்கள் தெரியாமல், சொல்லாமல், திடீரென்று தோன்றியுள்ள இவர்கள் சித்தகள் தாம்!

Siddhar fasting-6

  1. கோயில் குடமுழுக்கு தமிழ்மொழியில் நடத்த வேண்டும்! – உண்ணாவிரதம் இருக்கும் சித்தர்கள், இது பெரிய ஜோக் என்றே சொல்ல வேண்டும்!
  2. சித்தர்கள் எல்லாவற்றையும் கடந்தவர்கள் ஆயிற்றே, பிறகு, ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்? அப்படியென்றால் சாப்பிடும் சித்தர்களா?
  3. திராவிடக் கட்சிகள் உண்ணும் விரதம் மேற்கொள்ளும் பாணியில் தான், இவர்களின் செயல்பாடு உள்ளது. சமீபத்தில் கூட சூரிய கிரகணத்தின் போது, உண்பேன் என்று வேடிக்கைக் காட்டினார்கள்!
  4. அதே போல சித்தர்களுக்கு எல்லா மொழிகளையும் அறிந்தவர்கள் ஆயிற்றே? பிறகு என்ன தமிழ் என்றெல்லாம் கேட்பது?
  5. இந்த காலத்தில் 2020ல் “சித்தர்கள்” என்று யார் சான்றிதழ் கொடுப்பது, கல்லூரி உள்ளதா? அவ்வாறு சித்தர் ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்?
  6. கருப்பு, சிகப்பு, பச்சை சர்ட்டுகள், மூக்குக் கண்ணாடி சகிதம் அணிந்த ஆண்கள், புடவை கட்டிய பெண்கள் என்றெல்லாம் இருப்பார்களா?
  7. இந்த சித்தர்களை, காஷ்மீர், ஜே.என்.யூ, பாகி-பங்களா எல்லை பகுதிகள் என்று அனுப்பி வைத்தால், எல்லா பிரச்சினைகளும் தீர்ந்திருக்குமே?
  8. ராஜராஜசோழன் காலத்தில் இருந்த கருவூர் சித்தரை விட இந்த சித்தர் பெரிய சித்தர்களா? அப்பொழுது இல்லாத மொழி பிரச்சினை இப்பொழுது எப்படி?
  9. செல்போன், செருப்பு, கடிகாரம் எல்லாம் போட்டிருக்கும், இந்த சித்தர்கள், இன்னொரு கோவிலையே கட்டி, அங்கு புரட்சியை செய்யலாமே?
  10. சித்தர்கள் பெயரில், இத்தகைய கேலிக் கூத்து ஆடுவதை விட்டு, உண்மையான பக்தி, சிரத்தை முதலியவற்றுடன், மக்களுக்கு உபயோகமான சேவைகளை செய்தான், நல்ல பெயர் கிடைக்கும்.

© வேதபிரகாஷ்

13-01-2020

Siddhar fasting-7

[1] தமிழ்.ஒன்.இந்தியா, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்குதமிழில் நடத்த கோரி சித்தர்கள் உண்ணாவிரதம், By Mathivanan Maran | Published: Sunday, January 12, 2020, 19:36 [IST]

[2] http://tamil.oneindia.com/news/madurai/siddhars-hold-protest-on-thanjavur-temple-s-consecration-should-be-done-with-tamil-373945.html

[3] நியூஸ்.7.டிவி, மதுரையில் சித்தர்கள் உண்ணாவிரத போராட்டம்!, January 12, 2020, Posted By : Nandhakumar.

[4] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/12/1/2020/monk-protest-against-sanskrit-language-pooja-tanjore-temple

[5] தினகரன், பிப்.5ம் தேதி சமஸ்கிருதத்தில் நடத்த எதிர்ப்பு தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு விழா: மதுரை உண்ணாவிரதத்தில் சித்தர்கள் வலியுறுத்தல், 2020-01-13@ 00:29:04

[6] http://dinakaran.com/News_Detail.asp?Nid=555941

[7] விகடன், பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ்மொழியில் நடத்த வேண்டும்! – உண்ணாவிரதம் இருக்கும் சித்தர்கள், செ.சல்மான் பாரிஸ், ஈ.ஜெ.நந்தகுமார், Published:Yesterday at 6 PM; Updated:Yesterday at 6 PM

[8] https://www.vikatan.com/news/protest/thanjavur-periya-koil-kumbabhisekam-issue

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: