சுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து–தூஷணம்!
அத்தி வரதப்பா… புத்தி வராதப்பா... [1]: சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுகி சிவம் அத்தி வரதரின் திடீர் பிரபலம் குறித்துப் பேசியபோது, “இவ்வளவு நாட்களாக நம் ஊரில் உள்ள பெருமாளுக்கு வராத ‘பவர்’ 40 வருடம் தண்ணீருக்குள் இருந்து வந்திருப்பவருக்கு இருக்கும் என்று நினைத்தால்… இதை நான் எங்கோ போய் சொல்வது? அத்தி வரதப்பா… புத்தி வராதப்பா… இன்றைக்கு இது எவ்வளவு பெரிய சூதாட்டமாக மாறுகிறது. வயதானவர்கள் சென்று நசுங்கி, செத்து, கர்ப்பிணி பெண்கள் சென்று நசுங்கி துன்பப்படுகிறார்கள்.நான் நிஜமாகவே கேட்கிறேன். நாம் கஷ்டப்பட வேண்டும் என்று கடவுள் நினைப்பாரா? நாம் கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்தால் அவர் கடவுளா? ஒரு நாளும் கடவுள் அப்படி நினைக்க மாட்டார். இந்த ஊரில் உள்ள சாமிக்கு இல்லாத சக்தி, அந்த ஊரில் உள்ள சாமிக்கு இல்லாத சக்தி, இதுவரை நாம் கும்பிட்ட எந்த சாமிக்கும் இல்லாத சக்தி, இப்போது புதிதாக கிடைத்திருக்கிற இவருக்கு மட்டுமே இருக்கிறது என்று நினைக்கிறோம்.நீங்கள் இருக்கிறபடி இருந்தால் கடவுள் உங்கள் வீடு தேடி வந்து அருள் செய்யத் தயாராக இருக்கிறார்’என்று பேசினார்[2].
04-08-2019 அன்று மதுரையில் நடந்த கூட்டம், ஆர்பாட்டம்: இதையடுத்து மதுரை முத்தையா மன்றத்தில் சவுராஷ்டிரா தொழில் வர்த்தக கருத்தரங்கு நடந்தது. இதில் சொற்பொழிவாளர் சுகி சிவம் பங்கேற்றார். அங்கு செல்ல முயன்ற அவரை ஹிந்து கடவுளை அவமதித்து பேசியதாக கூறி ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சுகு சிவத்தை அவர்கள் மிகவும் மட்டமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்தனர்.அத்து மீறியவர்களில் பத்து பேரை தல்லாகுளம் போலீசார் போலீசார் கைது செய்தனர். ஆக, சுகியின் கூட்டம் இனிதே நடந்தது. ஏற்பாடு செய்தவர்கள், வந்தவர்கள், கேட்டு ரசித்தவர்கள் தைப் பற்றிக் கவலைப்ப்டவில்லை போலும்! இல்லை, கொடுத்த காசுக்கு, சினிமா பார்ப்பது போல, சுகியின் பேச்சை ரசித்தனர் போலும்!
அத்தி வரதர் தரிசனம் பற்றி நக்கலடித்தது: 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதர் தற்போது குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு முதலில் சயன கோலத்திலும், தற்போது நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 40 நாட்கள் மட்டுமே அத்தி வரதரை காண முடியும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை காண காஞ்சிபுரத்திற்கு குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்மீக பேச்சாளர் சுகிசிவம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விழாவில் பேசும்போது, அவரது பாணியில் அத்தி வரதர் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதில், “அத்திவரதரை தரிசிக்க பலர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். அப்படி ஏன் கடவுளை காண வேண்டும்? உங்களை கஷ்டப்படுத்த நினைப்பாரா கடவுள்? நீங்கள் ஏன் உங்கள் வீட்டில் இருக்கும் கடவுளை காண வேண்டும்? இவ்வளவு இடிபாடுகளுடன் சென்று பல துன்பங்களை அனுபவித்து கடவுளை காணாவிட்டால்தான் என்ன,” என்று பேசியிருந்தார்[3]. இவரின் இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளப்பியது[4]. சுகிசிவம் தனது கருத்துக்களை திருப்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு விளக்கமளித்து வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர் அத்தி வரதர் மீதோ இந்து மதத்தின் மீதோ எதிர் கருத்துக்களை வீச வேண்டும் என்பது என் நோக்கமல்ல. மக்கள் படும் கஷ்டங்களை பார்த்த பின்பு இந்த கருத்தை தெரிவித்தேன். என்னை பொறுத்தவரை கடவுளை வெளியில் தேடுவதை விட நமக்குள் தேட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். சுகியின் 05-08-2019 தேதியிட்ட கடிதம் வருத்தம் தெரிவிக்கிறேன் என்பதை விட, அகம்பாவம், குசும்புத் தனம் மற்றும் தூண்டிவிடும் போக்கு தான் அதிகமாக இருக்கிறது!
எங்கள் நம்பிக்கையை இந்து மத உணர்வை வழிபாட்டுநெறியை இந்த வாடகை வியாபாரிகள் விமர்சிக்க வேண்டாம்[5]: இந்து தமிழர் கட்சி இரவிக்குமார் கூறியது, “இவர் உண்மையிலேயே தத்துவார்த்த பொருளை பேசக்கூடிய ஒரு நபராக இருந்தால் “கன்னி மரியாளுக்கு எப்படியடா இயேசு பிறந்தார்?என்று ஒரு கூட்டத்தில் இவர் கேட்பாரா? அப்படி அவர் கேட்பாரேயானால் அவருக்கானமேடை இந்து தமிழர் கட்சி அமைத்துக் கொடுக்கும். ( பிற மதத்தை விமர்சிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல கருத்து சுதந்திரம்) பிற மத நம்பிக்கைகளைக் கேள்வி கேட்க திராணியற்ற, இந்த பேடி இந்துமத தெய்வங்களை நிந்தனை செய்து இருக்கிறார். கங்கை போல் வரும் பேச்சில் கூவத்தை கலக்க வேண்டாம். படைப்புக் கடவுள் பிரம்மனே அடுத்த பிறவியில் சுகி.சிவத்தை ஊமையாக படைத்திடு! இதற்கு இந்த சுகிசிவம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் பொதுவெளியில் பேசுகின்ற பொழுது இந்துக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்,”. இராம. இரவிக்குமார்[6] இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் 86430-81430, 96553-65696.
நாத்திகன் வைரமுத்துவை கேள்வி கேட்ட ஆத்திகன்[7]: ஆண்டாள் விசயத்தில், வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- வைர முத்துவை சுகி சிவம் கேட்ட 11 கேள்விகள்! அவற்றை இங்கே படிக்கலாம். உதாரணத்திற்கு சில கொடுக்கப் படுகின்றன[8]:
- ஆண்டாள் தமிழ் பதிமூன்று நூற்றாண்டுகளைக் கடந்தும் உயிர் வாழ்கிறது. ஆனால், அடுத்த நூற்றாண்டு வரை உங்கள் கவிதைகள் தாக்குப் பிடித்தால், அதுவே பெரிய விஷயம் என்பது புரிய வேண்டாமா?
- நீங்கள் நாத்திகராக அறியப்பட்டவர். அப்படி இருக்க, காயப்படுத்தும் வார்த்தைகளில் கவனம் காட்ட தவறியது ஏன்?
- அத்துமீறலில் இத்தனை அத்துமீறலா? நாத்திகர்களை திருப்திசெய்ய, ஆத்திகர்களை வலிக்கச்செய்வது விவேகமா கவிஞரே?
ஆனால், சுகி அதே குற்றத்தைத் தான் செய்திருப்பது புலனாகிறது. பிறகு இவர்களிடம் என்ன தகுதி இருக்கிறது, மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு.
ஒரு தடவை ரெயிலில் பிரயாணம் செய்தபோது, யாரோ இருவர் எப்படி டீ.ஏ பில் போடும் போது, அதிகமாக பணம் பெற என்ன செய்ய வேண்டும் என்று பேசியதை ஒட்டுக் கேட்டு வந்தாராம்! அவர்கள் அவ்விசயத்தில் பி.எச்டி செய்த நிலையில் துணுக்கங்களை விவரித்தனராம்! சரி, போவதற்கு-திரும்பி வருவதற்கு, பேசுவதற்கு என்று மொத்தமாக லட்சக் கணக்கில் பணம் வாங்கும் இவர், வருமான வரியை ஒழுங்காகக் கட்டுகிறாரா? இதயத்தின் மீது, கைவைத்து, மனசாட்சியுடன் கட்டுகிறேன் என்பாரா? தவறு, குற்றம் என்றால், யார் செய்தாகும் ஒன்றுதான்.
சரித்திரம், காலம், இடம், பொருள் –கவலைப் படாமல் பேசும் பேச்சு: பக்தி இலக்கியங்கள், புராணக் கதைகளை அங்கும்-இங்குமாக, உதாரணம் காட்டி, ஏளனப் படுத்துவது, இவரது பழக்கமாக உள்ளது. பக்தி இலக்கியம், இடைக்காலத்தில், துலுக்கர், ஜைனர், பௌத்தர் மற்ற நாத்திகள் இவர்களை மறுத்து, மக்களிடம் சிரத்தை உண்டாக்குவதற்குத் தான் உருவாக்கப் பட்டவை. நாவிதன் தன் வேலையை செய்யாமல், விட்டல-விட்டல பாடினால், விட்டல் வந்து சிறைத்து விட்டு போவாவானா என்று கேட்டது, அகம்பாவமும், சரித்திர சூன்யமும் தான்! பெரிய அறிவிஜீவித்தனம் அல்ல. போவதற்கு-திரும்பி வருவதற்கு, பேசுவதற்கு என்று மொத்தமாக லட்சக் கணக்கில் பணம் வாங்கும் இவர், வருமான வரியை ஒழுங்காகக் கட்டுகிறாரா?
- பேச்சு வியாபாரி / வியாபாரம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது, அப்படியென்றால், நுகர்வோர் விருப்ப-வெறுப்புகளும் வரும்.
- காசு, புகழ் , மேடை கிடைத்தால் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், பேசுவேன் என்பது, பேச்சு தர்மம் கிடையாது.
- இந்துக்களின் முன்னால், அத்தி வரதரைப் பற்றி விமர்சித்து கைத்தட்டுகள் வாங்கலாம், அல்லாவை விமர்சித்து துலுக்கன்கள் முன்னால் பேச முடியுமா?
- புத்தன், ஏசு, மேரி பற்றி விமர்சித்து கைத்தட்டுகள் வாங்க முடியுமா? உதை தான் கிடைக்கும் என்று தெரியுமே?
- திராவிடத்துவ வாதிகள் அத்தகைய பேச்சுக் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தார்கள், கேட்டுக் கொண்டே நாகரிகம், முதலியவற்றை மறந்தார்கள்!
- ராமசாமி நாயக்கர், அண்ணா, கருணாநிதி, போன்றோரும், அணுகுண்டு, குத்தூசி, முதலிய வகையறாக்களும் இலக்கணம் ஆனார்கள்!
- பட்டி மன்றம் வைத்து, வெட்டிக்கி பேசி, கொட்டமடித்து, அதனையே பொழுது போக்காக்ககினர். அதனால், பேச்சாளர்கள் உருவானார்கள்!
- பொருளைப் பற்றியோ, சரித்திர உண்மை, நியாயம்-தர்மம், ஒழுங்குமுறை முதலியவற்றைப் பற்றியோ கவலைப்படவில்லை.
- குத்தாட்ட குலுக்கல்களில் ஆடைப்பற்றி கவலை படாததது போல அடுக்கு மொழி பேசவேண்டும் என்றால், எல்லைகளையும் கடக்கலாம்!
- சரித்திரம், காலம், இடம், பொருள் –கவலைப் படாமல் பேசும் பேச்சு, பயனற்ற பேச்சாயாகும்.
© வேதபிரகாஷ்
06-08-2019
[1] ஏசியா.நெட்.நியூஸ், ’காஞ்சிபுரம் அத்திவரதரை வைத்து பெரிய சூதாட்டமே நடக்கிறது’…சுகி சிவம் சுளீர்…., By Muthurama Lingam, Chennai, Tamil Nadu, India, First Published 5, Aug 2019, 9:21 AM IST; Last Updated 5, Aug 2019, 9:21 AM IST
[2] https://tamil.asianetnews.com/cinema/popular-sugi-sivam-speaks-against-the-lord-athivarathar-pvqw1g
[3] நக்கீரன், ‘அத்திவரதர் குறித்து விமர்சனம்‘ சுகிசிவம் விளக்கம்..!, Published on 06/08/2019 (17:26) | Edited on 06/08/2019 (17:37).
[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/suki-sivam-explain-athivarathar-issue
[5] magaram.in, “வாடகை வாய் வியாபாரி” சுகிசிவம் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு!, August 4, 2019
[6] https://magaram.in/tamilnadu-government-should-be-take-action-to-suki-sivam/
[7] நக்கீரன், வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!, Wednesday, 17 Jan, 3.27 am.
[8]https://m.dailyhunt.in/news/india/tamil/nakkheeran-epaper-nakkh/vairamuthuvin+varthaikalil+vanmam+kurooram+melliya+vanjchakam+suki+sivam+kattam-newsid-80048222