நெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது!

நெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது!

kasi-viswanatha-temple-and-sri-sadasiva-brimendra-adhistana-entrance

நெரூரில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை: சித்திரை மாதத்து தசமி திதியில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஜீவசமாதி அடைந்த நாளை, நினைவு நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது[1]. ஒவ்வொரு ஆண்டும், தமிழ் நாளிதழ்கள், சிறப்பாக தனிப்பதிவு [Special supplement] வெளியிட்டு வரும், ஆனால், இப்பொழுது, நிலைமை மாறிவிட்டது. சில தமிழ் நாளிதழ்கள் மட்டுமே, சிறியதாக செய்தியை வெளியிட்டன. தினமலர், “கரூர் அருகே நெரூரில், சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் வரும், 9ல், 105வது ஆராதனை விழா துவங்குகிறது[2]. அதை தொடர்ந்து தினமும், பாகவத கோஷ்டியுடன் உஞ்சவிருத்தி, அபிஷேகம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் நடக்கின்றன. வரும், 14 காலை, சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது[3]. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நெரூர் சதாசிவ பிரமேந்திர சபா, சத்குரு சதாசிவ பிரமேந்திரர் சேவா டிரஸ்டியை சேர்ந்த நிர்வாகிகள் செய்து வருகின்றனர்,” என்ற செய்தி.

Manamadurai Sadasiva function 14-05-2019

தினகரன் மானாமதுரை ஆராதனை பற்றிய செய்தி வெளியிட்டது [14-05-2019]: மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் உள்ள சோமநாதர் சன்னதியின் பின்புறம் சதாசிவ ப்ரம்மேந்திராள் விக்ரகம் வைக்கப்பட்டு வைக்கப்பட்டு பூஜை நடந்து வருகிறது[4]. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அவருக்கு கர்நாடக சங்கீத வித்வான்கள் ஆராதனை விழா நடத்துகின்றனர். ஆனந்தவல்லியம்மன்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கட்டுமானப்பணிகள் நடப்பதால் மதுரை ராமேஸ்வரம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மகாலில் 39 ஆராதனை விழா நேற்று முன்தினம் மாலை துவங்கியது[5].  இதில் தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் உள்ளிட்ட கர்நாடக சங்கீத கச்சேரிகளை நடத்தினர்.

nerur-2017-agraharam-ardhana-started-picture-taken-to-adhistana

 மானாமதுரையில் இசைக்கலைஞர்கள் விழா: மானாமதுரையில் கர்நாடக இசைக்கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் 39ம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் இசைக்கச்சேரி மே 13 அன்று துவங்கியது[6]. தொடர்ந்து இரண்டு நாள்கள் விழாவில் நுாற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். வேதபாராயணம், உஞ்சவ்ருத்தி, தீபாராதனை ஆகியவற்றுடன் நிகழ்ச்சி துவங்கியது, விழாவில் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை நடத்தினர். மாலை பாராட்டு விழா நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து பிரபல மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷ் பங்கேற்று இசை கச்சேரி நடத்தினார். இதனை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். மே 14. அன்று காலை7 மணிக்கு பூஜை உஞ்சவிருத்தியும், 9:00 மணிக்கு குரு அஞ்சலி, கோஷ்டி கானமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ்வரபூஜை, வடுகபூஜை, கன்யாபூஜை, வாசினிபூஜை, தம்பதிபூஜை, தீபஆராதனையும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்தனர்[7].

nerur-2017-close-to-sadasiva-adhistana

குறைந்து வரும் பக்தர்களின் கூட்டம்: நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில் 105ஆவது ஆராதனை விழா மே. 14, 2019 அன்று நடந்தேறியது. 100 ஆண்டுகளை தாண்டி தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த விழாவில் பங்கு கொள்ளும் பக்தர்கள், அடியார்கள், பின்பற்றுவோர் மற்றும் சேவகர்களின் எண்ணிக்கை, சமீப ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை கவனிக்க வேண்டியுள்ளது. 2017ல் எச்சில் இலைகளில் உருளும் சடங்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டதால் அது நிறுத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக ஆராதனை விழா முடிந்தவுடன், வந்திருக்கின்ற எல்லோருக்கும் சம பந்தி உணவு கொடுப்பது என்பது நடந்து வந்தது. இதில் மதம், ஜாதி, மொழி என்று, எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோரும் தரையிலேயே அமர்ந்து உணவு உண்ணும் நிகழ்ச்சிதான் பிரசித்தி பெற்றதாக இருந்தது. மூன்றாயிரம், ஐந்தாயிரம் என்றெல்லாம், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அடியவர்கள் மற்றவர் 2016-17 ஆண்டுகள் வரை வந்து கொண்டிருந்தனர். அப்போது பக்தர்கள் எண்ணிக்கை அவ்வாறு அதிகமாக, இருந்ததால், அக்ரஹார மண் தெருவில், சபையிலிருந்து இரு பக்கம் மற்றும் நடுவிலும் இலைகள் போடப்பட்ட உணவு பரிமாறப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை அதிகமான போது, பந்தி வரிசைகள் நீண்டு, கடைசி வரைக்கும் சென்று, பேருந்து நிலையம் உள்ள சாலை வரைக்கும் நீண்ட நிலைமையும் எழுந்துள்ளது

nerur-2017-kasi-viswanathar-temple-garba-gruha-near

நெரூர் அக்ராஹரத்தில் அக்ரஹாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்: இருக்கும் பழைய வீடுகளில் பாதிக்கு மேல் இடிந்த நிலையில் காணப்படுகின்றன. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில், சில பழைய வீடுகள் இடிக்கப்பட்டு, புதியதாக கட்டப்பட்டு வந்துள்ளன. இதனால், பழைய ஓடு வீடுகள் மறைந்து கான்கிரீட் வீடுகள் உருவாகி வருகின்றன. இவை குறிப்பாக ஆராதனை மற்றும் மற்ற காரியங்களுக்காக வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கட்டப்படுகின்றன. அக்ரஹாரம் என்றால், எதோ பிராமணர்கள் மட்டும் தான் வசிக்கும் இடம் என்று நினைக்க வேண்டிய தேவை இல்லை, ஏனெனில் இங்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பிராமணர் அல்லாதவர்கள் தான், வீட்டின் சொந்தக்காரர்களாக வசிக்கிறார்கள். அது மட்டுமல்லாது, ஒரு குறிப்பிட்ட வீட்டிலுள்ள ஒருவர், ஜோதிடம், வாஸ்து, எண்-சோதிடம் போன்றவற்றிலும் பலன் கூறுகிறேன் என்று அறிவிப்பு பலகையும் வைத்திருக்க வைத்திருப்பதைக் காணலாம். அதே போல, ஓரு நிலையில் பக்தர்களும் மாறியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் பெயரில், புதிதாக பல சங்கங்கள், டிரஸ்டுகள் முளைத்து வருகின்றன. இங்க இருந்து வரும் பக்தர்கள் மற்றும் தொடர்ந்து வரும் நம்பிக்கையார்களுக்கு தகுந்த முறையில் தங்குமிடம், குளிக்க வசதி, முதலியவை குறைவாகவே இருந்து வருகிறது வள்ளலார் சபை என்று நடத்து வரும் திரு ராமகிருஷ்ணன் அவர்கள், வருகின்ற எல்லோருக்கும் தங்க இடம் கொடுக்கிறார். பக்தர்கள் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன, வேண்டுதல் பூர்த்தியாகின்றன, என்ற  நம்பிக்கையில், குருவாக ஏற்றுக்கொண்டவர் விடாமல் இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

தலித் பாண்டியன், கரூர்

மே.2016லிருந்து இலையில் உருளும் நேர்த்திக் கடன் சடங்கு நடைபெறுவதில்லை: தலித் பாண்டியன் என்பவர், இச்சடங்கை நிறுத்த வழக்கு போட்டார். இவர் தலித் விடுதலை இயக்கம், தேசிய அம்மைப்பாளர். ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் போட வேண்டும் என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்பவர்[8]. சென்ற ஆண்டு 2015ல், 101ஆம் ஆண்டு விழாவாக நடைபெற இருந்த இந்த மனிதத் தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.தலித் பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக விழாவிற்குத் தடை விதித்தனர்[9]. இவர் வேலாயுதபாளையத்தில், அண்ணாநகர், ஆதிதிராவிட காலனியில் வைத்து வருபவர்[10]. இவருக்கு பகவதி அம்மன் கோவில் திருவிழா சமாசாரம் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஒன்றும் செய்யவில்லை. எனவே, நெரூர் விசயத்தில், ஏதோ உள்நோக்கத்துடன், யாரோ தூண்டுதலின் மீது வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று தெரிகிறது[11]. இந்து அமைப்புகள் இதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை அவர்களுக்குத் தெரியாது என்று கூட சொல்லலாம்[12].

© வேதபிரகாஷ்

14-05-2019

Sadasiva book- Vedaprakash

[1] முழு விவரங்கக்கு, என்னுடைய, புத்தகத்தை, பார்க்கவும்.

வேதபிரகாஷ், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர்வரலாற்றுப் பார்வையில் ஒரு ஆராய்ச்சி நூல், பாரதிய இதிகாஸ சங்கலன சமிதி, சென்னை, 2011.

[2] தினமலர், அதிஷ்டானத்தில் ஆராதனை , பதிவு செய்த நாள்: 02மே 2019 . 09:07

[3] https://www.dinamalar.com/district_detail.asp?id=2267906

[4] தினகரன், மானாமதுரையில் சதாசிவ ப்ரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம், 5/14/2019 2:49:02 AM

[5] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=933252

[6] தினமலர், மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் கோஷ்டி கானம் நிகழ்ச்சி, Added : மே 14, 2019 12:18

[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2276021

[8] தினமணி, கரூரில் தலித் விடுதலை இயக்கம் போராட்டம், By dn | Published on : 29th December 2012 12:19 PM.

https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2012/dec/29/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-608517.html

[9] http://www.unmaionline.com/new/2587-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html

[10] DALIT PANDIYAN.V. Age:: 30, Category:SC. Sex:Male. Address: S/O. VELLAIYAN, 10/46, ADIDRAVIDA COLONY, ANNA. NAGAR, VELAYUTHAMPALAYAM …

[11] வேதபிரகாஷ், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை!, மே.26, 2016.

[12] https://antihidnu.wordpress.com/2016/05/26/nerur-rolling-on-leaves-ceremony-not-held-as-ban-imposed-last-year-appeal-not-filed/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: