கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: நாத்திக-அரசியல் மோதலில் முடிந்த விவகாரம்! [2]

கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும்வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: நாத்திக-அரசியல் மோதலில் முடிந்த விவகாரம்! [2]

Stalin defends DK Veeramani, strange logic

வைகோ கண்டனம் தெரிவித்தது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்[1], ‘‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து திருச்சியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் அண்ணன் கி.வீரமணி அவர்களின் வாகனம் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது….மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது தாக்குதல் நடத்த முனைந்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்……..மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இயக்கங்கள், கட்சிகள் குறிப்பிட்ட எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சமூக, மத நல்லிணக்கம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவை என்று வைகோ தெரிவித்துள்ளார்[2].

DK version of attack - Krishna issue

திகவினர் சொல்வது என்ன? விடுதலையில் வெளியானது[3]: திருச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்து முன்னணி காலிகள் கலவரத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். கூட்டம் முடிந்து கழகத் தலைவர் சென்ற வேனை  மறித்துத் தாக்குதலுக்குத் திட்டமிட்டனர். காவல்துறை கைகட்டி சேவகம் செய்வதுபோல நடந்துகொண்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நாடாளுமன்ற திமுக  – காங்கிரஸ் கூட் டணி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் 04.04.2019 அன்று மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்கூட்டியே முறைப்படி அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பீம நகர் பகுதியில் வேறு கூட்டம் இருப்பதாகக் கூறி, வேறு பகுதிக்கு கூட்டத்தை மாற்றச் சொல்லி காவல்துறை சார்பில் சொல்லப்படவே, காவல்துறையின் பரிந்துரைப்படியே தாராநல்லூர், கீரைக்கொல்லை பகுதிக்கு கூட்டம் மாற்றப்பட்டு, கடைசி நேரத்தில் அனுமதி பெறப்பட்டு கூட்டத்திற்கான பணிகள் வெகுவேகமாக நடை பெற்றன. ஆனால், நேற்று பீம நகர் பகுதியில் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது[4].

Veeramani taken in a van -Tamil news cutting

காவல்துறை ஏன் அப்படி நடந்துகொண்டது என்று தெரியவில்லை[5]: முதல் கூட்டம் பெரம்பலூரில் முடிந்து, அமைதியான முறையில் அடுத்த கூட்டம் திருச்சி கீரைக்கொல்லை பகுதியில் தொடங்கி, ஏராளமான பொதுமக்களின் வரவேற்போடு நடைபெற்று வந்த நிலையில், கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்து முன்னணியைச் சேர்ந்த 12 காலிகள் மேடையை நோக்கி செருப்பையும், கற்களையும் வீசி கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். தடுக்க வந்த தோழர்கள் மீது, நாற்காலிகளை விசிறியடித்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களை வளைத்துப் பிடித்த தோழர்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதில் மேலும் இருவரை கழகத் தோழர்கள் காவல்துறையிடம் அடையாளம் காட்டியபோதும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் காவல்துறை அனுமதித்துவந்தது. இந்நிலையில் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உரையாற்றினார். முதல் பிரச்சாரக் கூட்டத்தை பெரம்பலூரில் முடித்து மேடைக்கு வந்த தமிழர் தலைவருக்கு பெரும் கரவொலியுடன் வரவேற்பு வழங்கினர் பொது மக்கள். கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கவனித்துக் கொள்ளும். பொதுமக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என்று அமைதிப்படுத்தியபடி தன்னுடைய உரையைத் தொடங்கிய தமிழர் தலைவர், மோடி அரசின் மோசடிகளையும், அதிமுக அரசின் அடிமைத் தனத்தையும், காங்கிரஸ் – திமுக கூட்டணியின் செயல்திட்டங்கள் குறித்தும் ஆதாரங்களை எடுத்துவைத்து 40 நிமிடம் உரையாற்றினார். பேரார்வத்துடன் பொதுமக்கள் செவி மடுத்தனர்[6].

DK and Hidu Munnani clash in Veeramani meeting-vikatan

மோதல்  – பரஸ்பர குற்றச்சாட்டு[7]:சரியாக இரவு 10 மணிக்குள் அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்று முடிந்து, செய்தியாளர்களையும் சந்தித்துவிட்டு தமிழர் தலைவரின் வாகனம் கிளம்பிய சில நிமிடங்களில் அந்தச் சாலையின் முனையில் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த இந்து முன்னணி காலிகள் பலர், தமிழர் தலைவரைத் தாக்கும் நோக்கத்தோடு கையில் கற்களை ஏந்தியபடி தமிழர் தலைவரின் வாகனத்தை நோக்கி தாக்க முயற்சித்து, இரு சக்கர வாகனங்களிலும், ஓடியும் வந்தனர். பின்னால் வந்து கொண்டிருந்த தோழர்கள் மீதும் கல்வீசியும், மூர்க்கத்தனமாக மோதியும் தாக்குதல் நடத்தினர். இதில் திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் தாக்கப்பட்டு காயமேற்பட்டது. வன்முறைத் தாக்குதல் நடந்த பின்னரும், காவல்துறையினர் காவல் பணியில் முழு கவனத்துடன் இல்லாமல் இருந்ததே பிந்தைய நிகழ்ச்சிக்குக் காரணமாயிற்று. வழக்கமாக, தலைவர்கள் மீது இத்தகைய தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றால், பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, தலைவர்களின் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்புக்கென அணிவகுத்து வரும். ஆனால், அசாதாரண சூழல் நிலவியதோடு, வன்முறைத் தாக்குதல் ஒன்று நடந்து பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அப்படி எந்த பாதுகாப்பு முயற்சியிலும் காவல் துறை ஈடுபடவேயில்லை. கழகத் தோழர்கள் மட்டுமே தமிழர் தலைவரின் வாகனத்தின் முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக வாகனங்களில் வந்தனர்[8].

DK and Hidu Munnani clash in Veeramani meeting-Tamil news cutting.2

இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டது[9]:  கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு ஒரு மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் திடீரென காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ், செயலாளர் மோகன்தாஸ், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், பெல் ஆறுமுகம், செய்தியாளர் பாலு (எ) செந்தமிழினியன், கனகராஜ், ஆத்தூர் சுரேஷ் ஆகிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டுள்ளார்களோ அவர்கள் மீதே வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திராவிடர் கழகத் தலைவருக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் வகையில் தொடர்ந்து துக்ளக்’, தினமலர்’, விஜயபாரதம்’ உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன-இந்துத்துவ வாதிகளும் எழுதியும், பேசியும், தூண்டியும் வந்த சூழலில், அது மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை[10].

© வேதபிரகாஷ்

06-04-2019

Viduthalais blashphemous article against Krishna -13-08-2017

[1] news18,  தி.. கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: வைகோ கண்டனம்!, Updated: April 5, 2019, 1:29 PM IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/vaiko-condemns-hindu-munnani-cadres-who-stirred-violence-in-dravidar-kazhagam-meeting-presided-by-k-veeramani-vi-135687.html

[3] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.

[4]  https://www.viduthalai.in/e-paper/179293.html

[5] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.

[6]   https://www.viduthalai.in/e-paper/179293.html

[7] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.

[8]   https://www.viduthalai.in/e-paper/179293.html

[9] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.

[10]   https://www.viduthalai.in/e-paper/179293.html

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: