இந்துவிரோத திக-திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்- இது தேர்தல் நேரம்! [1]

இந்துவிரோத திகதிமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்இது தேர்தல் நேரம்! [1]

DK Veeramani hate speech 23-03-2019-1

வீரமணி ஶ்ரீகிருஷ்ணரைப் பற்றி பேசியது என்ன? (23-03-2019)[1]: 23.3.2019 மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அவசர சிறப்புக் கூடத்தில் வீராணி பேசியது[2], “……… எடுத்துக்காட்டாகக் கிருஷ்ணன் என்ற கடவுளை எடுத்துக் கொள்ளலாம். குளிக்கும் பெண்களின் ஆடை களைத் திருடிச் சென்று அவர்களை நிர்வாணமாக இரசித்த கயவாளிதானே இந்தக் கிருஷ்ணன்! வெட்கமில்லாமல் இந்தக் கேடு கெட்ட இந்தக் காட்சியை கண்ணாடி சட்டம் போட்டு அப்பொழுதெல்லாம் வீட்டிலும் மாட்டி வைத்துப் பூசை செய்ததுண்டே! இத்தகைய கடவுளைக் கும்பிடுபவன், நம்புபவன் எப்படி ஒழுக்கவானாக இருக்க முடியும்? ஈவ் டீசிங் என்ற பிரிவின்கீழ் கைது செய்யப்பட வேண்டிய ஒரு குற்றவாளி உண்டு என்று சொன்னால், அவன் இந்தப் பகவான்கிருஷ்ணனாகவேதான் …ஒழுக்கமுள்ள, யோக்கியமுள்ள ஒரு கடவுளைக் கூடக் கற்பிக்க முடியாத ஒரு மதம்தான் இந்து மதம் என்பதை மறுக்க முடியுமா? இந்த ஒழுக்கம் கெட்டவனையும் கடவுளாகக் கும்பிடும் கூட்டம் யோக்கியமானதாம்இந்த ஒழுக்கக் கேட்டை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டி, மக்களை நல்வழிக்குக் கொண்டுவரப் பாடுபட்ட தந்தை பெரியாரால்தான் ஒழுக்கம் கெட்டுவிட்டதாம்!…….” இப்படி உளறிக் கொட்டி வருவது அந்த ஆளின் மடத்தனம் என்று தான் சொல்ல வேண்டும். நான்கு சுவர்களுக்கு மத்தியில், தன்னுடைய கூட்டத்டை வைத்துக் கொண்டு, இவ்வாறு பேடித் தனமாகப் பிதற்றி வருவது அவர்களது தொழிலாக உள்ளது.

DK Veeramani hate speech 23-03-2019-2

வீரமணியின் மீது புகார் (31-03-2019): இந்து கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் 31-03-2919, ஞாயிற்றுக்கிழமை புகார் மனு அளித்தனர்[3].சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது இந்து கடவுள் கிருஷ்ணரின் அவதாரத்தையும், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தையும் தொடர்புபடுத்தி அவர் இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட இந்து அமைப்பினர் கி.வீரமணியை கைது செய்யக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பக்தி என்பது தனிநபரின் நம்பிக்கை, அந்த நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் வீரமணி பேசியுள்ளார். இது இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளதாக தெரிகிறது. மேலும் அவரது பேச்சு மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது[4].

DK Veeramani hate speech 23-03-2019-3

திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை (27-03-2019): ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது[5]: “18 சட்டசபை தொகுதியில் தி.மு.., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார். பின் விவசாய கடன், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்திலும் .தி.மு.., வினர் கொள்ளை அடித்து வருகின்றனர். தி.மு.., கூட்டணியில் உள்ள இந்துக்களை விட சிறுபான்மையாக உள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தான் மோடியை விரட்டும் பொறுப்பு அதிகம் உள்ளது. நாங்கள் திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம். மோடியை விரட்ட இப்படிதான் வேஷம் அணிந்து செயல்பட வேண்டும்,” என்றார். இந்துக்களை ஏமாளிகள் போல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது[6]. அதாவது, இந்துக்கள் அந்த அளவிற்கு ஏமாளிகள் என்பது போல பேசியிருக்கிறார். இப்பொழுது கூட, விபூதி வைத்த யாருக்கும் கோபம் வரவில்லை போலும்!

DK Veeramani hate speech 24-03-2019

ஓட்டு வங்கி என்ற ரீதியில் செய்திகள் வெளியிடப் படுவது: ஹிந்து மதக் கடவுள் கிருஷ்ணர் குறித்து, திராவிடர் கழக தலைவர் வீரமணி, தரக்குறைவாக விமர்சித்த வீடியோ, வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ, தங்களின் ஓட்டு வங்கியை பாதித்து, ஹிந்துக்களின் ஓட்டுக்கள் கிடைக்காமல் செய்து, அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு சாதகமாகி விடுமோ என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலைமையை சமாளிக்க, வீரமணி பேச்சுக்கு, ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., கூட்டணிகள் இடையே, நேரடி போட்டி நிலவுகிறது. 2014 லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தி.மு.க., இந்த முறை, அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற, துடிப்புடன் தேர்தல் பணியாற்றி வருகிறது. இம்முறை, எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளான, துரைமுருகன், பொன்முடி போன்றோர், தங்கள் வாரிசுகளையும் களம் இறக்கி உள்ளனர். அனைவரும் பணத்தை வாரி இறைத்து, வெற்றிக்கு கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

DK meeting 23-03-2019-2

இந்துமதத்தைத் தூஷிக்கும் பரம்பரை: கருணாநிதி இருக்கும் வரை, இந்துமதத்தைத் தூஷித்துக் கொண்டுதான் இருந்தார். அபானின் பிள்ளை என்ற விதத்தில் யதப்பாமல் அதனை ஸ்டாலின் மற்றும் கனிமொழி செய்டு வருகின்றனர். திருப்பதி பெருமாளை கிண்டலடித்த கனிமொழி, அடக்கி வாசிக்கிறார். அவரது தாயார் ராஜாத்தி அம்மாள், திருச்செந்துார் முருகன் கோவிலுக்குசென்று, மகளின் வெற்றிக்காக சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்நிலையில், தி.மு.க.,விற்கு ஆதரவு அளிக்கும், வீரமணி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹிந்துக்களிடம், குறிப்பாக கிருஷ்ணரை வழிபடுவோரிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ என்று குறிப்பிடுவதால், இவர்கள் விடுதலையைப் படிக்கவில்லை என்று தெரிகிறது.

Media DC mischief on Brahmins

தமிழகத்தில் வீரமணியின் பேச்சு கண்டனத்திற்கு உண்டானது: சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், கிருஷ்ணரை வழிபடும் ஹிந்து அமைப்பினர், தி.மு.க.,வுக்கு எதிராகவும், வீரமணிக்கு எதிராகவும், போராட்டங்களை துவக்கி உள்ளனர். எனவே, ‘வீரமணி பேச்சுக்கு, கண்டனம் தெரிவியுங்கள்; அவர் பேச தடை விதியுங்கள். கூட்டணியில் இருந்து அவரை ஓரங்கட்டுங்கள்’ என, ஸ்டாலினிடம், மாவட்ட செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்[7]. தி.மு.க.,வினர் மத்தியில் மட்டுமின்றி, கூட்டணி கட்சியினர் மத்தியிலும், கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், ஸ்டாலின் செய்வதறியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. ‘தன் தந்தை காலத்தில் இருந்து, தி.மு.க.,வுடன் நட்பு பாராட்டும் வீரமணியை, எப்படி எடுத்தெறிந்து பேச முடியும்’ என்ற, தர்ம சங்கடமான நிலை, அவருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இது தேர்தல் நேரம் என்பதால், ஸ்டாலின் தயக்கமின்றி, முக்கிய முடிவை எடுப்பார் என, அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்[8].

© வேதபிரகாஷ்

02-04-2019

June 2018, SriRangam temple, Stalin, priest apply paste-Stalin removed

[1] விடுதலை, பொள்ளாச்சிஓர் எச்சரிக்கைஒழுக்கத்தை ஓம்பிய பெரியார் எங்கே, ஒழுக்கக்கேடன் கிருஷ்ண பக்தர்கள் கூட்டம் எங்கே?, 24-03-2019

[2] https://www.viduthalai.in/page1/178638.html

[3] தினமணி, கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் இந்து அமைப்பினர் மனு, By DIN | Published on : 01st April 2019 06:15 AM

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/apr/01/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3124739.html

[5] தினமலர், திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை, Added : மார் 27, 2019 23:14

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2242814

[7] தினமலர், அம்போ? தி.மு..,வுக்கு ஹிந்துக்கள் ஓட்டு கிடைக்காது? கிருஷ்ணர் பற்றி வீரமணி அவதூறால் சிக்கல், பதிவு செய்த நாள் : மார்ச் 30,2019,20:03 IST

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2244948

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: