இந்துவிரோத திக-திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்- இது தேர்தல் நேரம்! [2]

இந்துவிரோத திகதிமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்இது தேர்தல் நேரம்! [2]

Veeramani condemned, M A Venkatakrishnan

வீரமணியைக் கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது: இந்துக்கள் வழிபடும் பகவத்கீதையின் நாயகன் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி, வழக்கம் போல இந்துக்கள் ஏதும் செய்ய மாட்டார்கள், கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் திராவிட கழகத்தின் வீரமணி, தனது அநாகரிக பேச்சை பரப்பியுள்ளார்[1]. பகவான் கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் திக தலைவர் வீரமணி பேசியதைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது[2]. இந்த கூட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணரை அவதூறாக பேசிய கி வீரமணியை கைது செய்யக்கோரி இந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்துக்கள் பாதுகாப்பு இயக்கம், அகில இந்திய யாதவ சபை மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், இயக்கங்கள் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.Veeramani condemned, ILA Ganesan

ஸ்ரீகிருஷ்ணர் பற்றி அவதூறு பேச்சு; கி.வீரமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தல்: ஆர்ப்பாட்டம் தொடர்பாக இல.கணேசன் கூறியதாவது[3]: “திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி புராணங்களை தெளிவாகப் படித்திருப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் எதையும் படிக்கவில்லை என்று தெரிகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் 11-வது வயதில் கம்சனைக் கொன்ற பிறகு குருகுலத்துக்குச் சென்றுவிட்டார். அதற்கு முந்தைய பருவத்தில் பாலகனாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் செய்த செயல்களை வக்கிரமான எண்ணத்துடன் செய்ததாக சொல்வது பொருத்தமற்றது. மக்கள் மனதை புண்படுத்திய கி.வீரமணி, தான் பேசியது தவறு என்று கூறி வருத்தம் தெரிவிப்பது நல்லது. தேர்தல் நேரத்தில் இதுபோல் பேசுவது திமுகவுக்கு எந்த அளவுக்கு வாக்குகள் பாதிக்கும் என்று தெரியாமல் பேசியிருக்கிறார். அதனால், வருத்தம் தெரிவிப்பது நல்லது,” இவ்வாறு அவர் கூறினார்[4]. அதாவது, அரசியல்வாதி, அரசியல்வாதி போன்றே பேசியுள்ளார்.

Media DC mischief on Brahmins

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்: இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்து மதத்தையும், இந்து மக்களின் தெய்வங்களை பற்றியும் அவதூறாக பேசிய திராவிடர் கழக  தலைவர் கி.வீரமணியை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி,  இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்[5]. இதனைத் தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்,  வீரமணி பேச்சு, உலகெங்கிலும் வாழும் இந்துக்களின் மத உணர்வையும், நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்தார்[6]. திண்டுக்கல் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா ஆகியோர் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் கூறியிருப்பதாவது[7]: “தி.. தலைவர் வீரமணி, இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையில் கிருஷ்ணரை தொடர்புப்படுத்தி பேசியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் மத கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி வருகிறார். எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனறு தெரிவித்துள்ளனர்[8].

DK- Jagatrakhagan DMK

ஜெகத்ரக்ஷகனின் ஆழ்வார்கள் ஆய்வுமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்[9]. அப்போது அவர் பேசியதாவது[10]: “நான் இந்துக்களுக்கு எதிரானது என்பது போல் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல. திமுக.,வும் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல. என் மனைவி கோவிலுக்கு செல்வதை நான் தடுக்கவில்லை. இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர்.”ஜெகத்ரக்ஷகன், “ஆழ்வார்கள் ஆய்வு மையம்” வைத்து நடத்துவதே, எத்தகைய போலித் தனமாகி விட்டது என்பதனை கவனிக்கலாம். ஆழ்வார்கள் எல்லோரும் என்ன கிருஷ்ணனை விடுத்து, வேறொருவரையா போற்றிப் பாடினர்?

Veeramani condemned, Charu Nivedita

சாரு நிவேதிதாவின் கட்டுரை[11]: தினமலரில், இவரது கட்டுரை வெளி வந்துள்ளது, அதில்[12], “மத சார்பின்மை என்றால், எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்க வேண்டும். ரம்ஜானின் போது, குல்லா அணிந்து, நோன்பு கஞ்சி குடித்து, புகைப்படத்துக்கு, ‘போஸ்கொடுக்கிறார் ஸ்டாலின். கோவிலில் திருநீறு வைத்தால் மட்டும், ஏன், ஏதோ நெருப்பை தொட்டது போல் பதறிப் போய் அழிக்கிறார்; விபூதி வைத்து விட்டாலே, பகுத்தறிவு பறந்து விடுமாஅவ்வளவு பலவீனமானதா உங்கள் பகுத்தறிவு? எதிராளியை மதிப்பது, அற்புதமான மானுடப் பண்பு. ஒரு சீக்கியரின் எதிரே, யாரும் புகைக்க மாட்டார்கள். ஏனென்றால், புகைப்பது அந்த மதத்தில் பாவம். அதைப் போலவே, மாட்டை தெய்வமாக வணங்குபவனின் எதிரே, மாட்டின் மாமிசத்தைப் புசிக்காதிருப்பதும், ஒரு நாகரிகம் தான். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான், உலகம் பல்வேறுபட்ட கலாச்சார வேறுபாடுகள் உடைய மனிதர்களும், வாழத் தகுதியான இடமாக இருக்கும். இதை, இத்தனை முதிர்ந்த வயதிலும் ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லை போல தெரிகிறது”.Veeramani condemned, Charu Nivedita-2

ஸ்டாலினின் இந்துவிரோத போக்கு[13]: சாருநிவேதிதா, எழுத்தாளர் தொடர்கிறார்[14], “முஸ்லிம் வீட்டு திருமணத்துக்கு போனவர், இந்துக்களின் திருமணங்களை திட்டுகிறார். ஹோம புகையில், அங்கே எல்லோரும் அழுகிறார்களாம். கட்சித் தொண்டர்களும், சமூக விரோத குண்டர்களும், டயரைப் போட்டு எரிப்பதால் வரும் புகையும், ஹோமத்தில் எழும்பும் புகையும் ஒன்று என, நினைத்து விட்டாரா ஸ்டாலின்? ஹோமப் புகை என்பது, அரிய வகை மூலிகைகளை தீமூட்டி, அதில் நெய் ஊற்றி வளர்க்கப்படும் அக்னியால் உண்டாவது. இதனால், சுற்றுப்புறச் சூழலில் உள்ள மாசு அகற்றப்படுகிறது. மத சார்பின்மை கட்சியை சேர்ந்தவர் என்பதால், ஸ்டாலின், தர்காவுக்குச் சென்றிருப்பார் என்று நம்புகிறேன். தர்காவில் அவர், சாம்பிராணி சட்டியை பார்த்திருக்கலாம். குங்கிலியம் என்ற மரப்பிசினும், படிகாரமும் சேர்ந்தது தான் சாம்பிராணி. அந்தப் புகை உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும், சாம்பிராணி போடும் பழக்கம் இருந்தது. ‘பகுத்தறிவால்காணாமல் போன பல விஷயங்களில், சாம்பிராணியும் ஒன்று.”

© வேதபிரகாஷ்

02-04-2019

blood-pongal-as-kru-compared-kumkum-with-blood

[1] தினமலர், வீரமணியின் அநாகரிக பேச்சு; இந்துக்கள் கொதிப்பு; சென்னையில் போராட்டம், Updated : மார் 30, 2019 15:26 | Added : மார் 30, 2019 10:16.

[2] https://www.dinamalar.com/News_Detail.asp?Id=2244849

[3] தி.இந்து, ஸ்ரீகிருஷ்ணர் பற்றி அவதூறு பேச்சு; கி.வீரமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தல், Published : 31 Mar 2019 06:24 IST, Updated : 31 Mar 2019 06:24 IST

[4] https://tamil.thehindu.com/tamilnadu/article26691030.ece

[5] தினத்தந்தி, கி.வீரமணி மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார், பதிவு : மார்ச் 29, 2019, 05:50 PM

[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/29175017/1030311/Veeramani-chennai-police-case.vpf

[7] மாலைமலர், பழனி போலீஸ் நிலையத்தில் வீரமணி மீது இந்து முன்னணி புகார்

பதிவு: ஏப்ரல் 01, 2019 15:19

[8] https://www.maalaimalar.com/News/State/2019/04/01151953/1235077/Hindu-munnani-complaint-against-Veeramani-in-palani.vpf

[9] தினத்தந்தி, இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் என்று மு..ஸ்டாலின் கூறியுள்ளார், பதிவு: ஏப்ரல் 01, 2019 13:05 PM

[10] https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/01130550/Some-have-created-the-image-of-a-DMK-opponent.vpf?fbclid=IwAR09Xqy4-YgZCkLl291-8CpJwG6t63Ddcfyk5LMZtUWH7BIswX-MpEFfSFE

[11] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38

[12] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922

[13] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38.

[14] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: