மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? கோவில் மற்றும் பங்காரு அடிகளார் கிருஸ்துவ சார்பு நோக்கி சாய்வதேன்? [2]

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? கோவில் மற்றும் பங்காரு அடிகளார் கிருஸ்துவ சார்பு நோக்கி சாய்வதேன்? [2]

Kick for Mariyatha- EVR

திராவிடம் கோவிலில் புகுந்த கதை: பெரியார்-ஈவேரா 1973 வரை உயிரோடு இருந்திருக்கிறார். 1960-1973 காலகட்டத்தில் பங்காரு அடிகளின் குறி சொல்லுதல் போன்ற விவகாரங்கள், செய்திகள் எல்லாம் ஈவேரா நாயக்கருக்குத் தெரிந்திருக்கும். “சித்தர்காடு மாரியாத்தாளுக்கு உதை” என்று கட்டுரை எழுதிய ஈவேரா இந்த பங்காரு பூசாரியையும், ஆதிபராசக்தியையும் எப்படி விட்டு வைத்தார் என்பது அதிசயம் தான்[1]. பூசாரியின் போக்கிரித் தனத்தால் அவ்வாறு செய்தான் என்று எழுதிய நாயக்கர் அமைதியாக ரசித்தார் போலும்[2]. வீரமணியும் கண்டுகொள்ளவில்லை. இதை அலசி எழுதிய என்னுடைய கட்டுரைகளை இங்கு படிக்கலாம்[3]. பங்காருக்கு 32 வயது என்பதால், அவருக்கும் திராவிட அரசியல், நாத்திகம் மற்றும் சிலையுடைப்பு இந்துவிரோதம் முதலியன தெரிந்திருக்கும். அரசியலும் இக்கோவில் வளர்ச்சியுடன் சேர்ந்தே இருந்துள்ளது. விசாலாக்ஷி நெடுஞ்செழியன், இக்கோவிலில் அதிக ஈடுபாடு, அக்கரைக் கொண்டிருந்தார். நாத்திகம் பேசும் நெடுஞ்செழியனின் மனைவி எப்படி, கோவிலுடன் சம்பந்தப் பட்டுள்ளார் என்ற கேள்விகள் எழுந்தன. ஒருவேளை, ஈவேரா நாயக்கர் நாத்திகராக இருந்தார்,ஐந்த பங்காரு நாயக்கார் ஆத்திராக இருந்தார் என்பதனால், விசாலாக்ஷிக்கு பக்தி வந்ததா அல்லது திராவிட நாத்திகர்கள் எப்பொழுதுமே தமது மனைவி, துணைவி, சகோதரி, மகள் போன்றோரை வைத்து சாமி கும்பிட வைத்து பலன் பெறுவர் என்ற “பிராக்ஷி” [proxy] யுக்தி முறையில் நடந்ததா என்பதனை ஆதிபராசக்தி அல்லது அம்மா தான் சொல்ல வேண்டும்!

Bangaru with MGR, RM Veerappan, Zail Singh etc

விசாலாக்ஷி நெடுன்செழியன் பக்தை ஆனது, எம்ஜிஆரின் ஆதாவு: பங்காரு ஆரம்பகாலங்களில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தார் என்று முன்னமே சொல்லப்பட்டது. கோவில் கட்டி உண்டியல் வைத்து சம்பாதிக்கலாம், என்று மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலை அருகில் ஒருவிக்கிரகத்தை வைத்து, குறி சொல்ல ஆரம்பித்தார். வந்த பணத்தில் சிறு கோவில் போல அமைத்தார். பகல் நேர ஆசிரிய பணியோடு மாலை நேரம் பூஜைகளையும் நடத்தினார். ஒருநாள் காவல்துறை அந்த கோவிலுக்குள் நுழைந்து, பங்காருவை கைது செய்தது. கள்ள நோட்டு அடிப்பதாக புகார். இதனால் வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு, பல லட்சம் ரூபாய் பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது[4]. இந்த இடைப்பட்ட காலத்துக்குள், எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த பகுத்தறிவு நெடுஞ்சழியனின் மனைவி விசாலாட்சி பங்காருவின் தீவிர பக்தையாக இருந்ததால், பங்காரு அடிகள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்[5].

May 10, 1986 - Melmaruvattur function at Marina - Zail Singh, MGR etc.

1966 முதல் 1977 வரை ஏற்பட்ட மாற்றங்கள்: பழைய கோவில் வேப்பமரத்தின் கீழ் இருந்தது, 1966 புயலில் அந்த வேப்ப மரம் விழுந்தது, அங்கிருந்து சுயம்பு விக்கிரகம் கிடைத்தது என்றெல்லாம் சொல்லப் பட்டது. அது மட்டுமல்லாது, அச்சரப்பாக்கத்திலிருந்து, ஒரு ஒளி வந்து, இங்கு மறைந்தது  என்றும் சொல்லப் பட்டது. அங்கிருந்து ஒளி வந்த்தோ இல்லையோ, அம்மலையை ஆக்கிரமித்துக் கொண்டு, கிருத்துவர்கள், ஒரு பெரிய சர்ச்சைக் கட்டி விட்டனர். இருப்பினும், புற்று 1974ல் வைக்கப்பட்டது. அதே ஆண்டில் குறி சொல்லும் மேடை, மண்டபம் எல்லாம் கட்டப்பட்டன. நிதியுதவி, வரும்படி அதிகமானது. கூட்டம் அதிகமானதால், 1977 கோவில் விரிவாக்கப்பட்டது. 19-01-1977 அன்று கருவறை கட்டும் வேலை ஆரம்பிக்கப் பட்டது. 25-11-1997 அன்று புதிய விக்கிரகம் கர்ப்பகிருகத்தில் வைக்கப் பட்டது.  கரிக்கோல் பவனி 01-05-1977 அன்று ஆரம்பித்து, 05-06-1977 அன்று முடிந்தது.

May 10, 1986 - Spiritual Yagna for world Peace inaugurated by Zail Singh

2007ல் துவக்கப் பட்ட ஆன்மீக இயக்கம்: செப்டம்பர் 9, 2007ல் “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம்” [Melmaruvathur Adiparasakti Spiritual Movement (MASM)] ஆரம்பிக்கப் பட்டதாக சொல்லப் படுகிறது, ஆனால், அது, டிசம்பர் 13, 2007ல் பதிவாகியுள்ளது. தரும மற்றும் மத டிரஸ்ட் [charitable and religious trust] என்ற நிலையில், பங்காரு நாயக்கர், அவரது மனைவி வி.லக்ஷ்மி, மகன்கள் ஜி.பி.அன்பழகன், ஜி.பி.செந்தில்குமார், ஏ.கே.வேன்கடசாமி, பி.ஶ்ரீதேவி. பி.உமாதேவி, எஸ்.கோபிநாத், எஸ்.மாரிமுத்து, மற்றும் நெருங்கியவர் என்று 9 டிரஸ்டிகள் கொண்ட அமைப்பாக பதிவு செய்யப் பட்டது. அதில் தைபூசம் என்றெல்லாம் கொண்டாடுவோம் என்றுள்ளது, கிருஸ்துமஸ் கொண்டாடுவோம் என்றெல்லாம் இல்லை. ஆகவே, அத்தகைய மாற்றம் எப்படி, ஏன், யாரால் அறிமுகப்படுத்தப் பட்டது என்பதனை ஆராய வேண்டியுள்ளது. வீடியோக்கள் செக்யூலரிஸ பாணியில் கிருத்துவர், முஸ்லிம்கள் எல்லோரும் மேல்மருவத்தூருக்கு செல்வது போல காட்டுகின்றன[6].

May 10, 1986 - Melmaruvattur function at Marina - Zail Singh, MGR etc.2

1985ல் நடந்த கோவில் விரிவாக்கம்: 1985ல் சித்தர் பீடத்தின் கட்டிட வளர்ச்சிப் பணிக்குழு தொடங்கப்பட்டது. ராஜகோபுரம், பெரிய மண்டபம், புற்று மண்டபம், அங்கப் பிரதக்ஷிண மண்டபம், எண்கோண மண்டபம், முதலியவை கட்டுவதற்கு தீர்மானிக்கப் பட்டது. சங்கர்-கணேஷ் குழுவினர் மூலம் இசைக்கச்சேரி பல இடங்களில் ஏற்பாடு செய்யப் பட்டு பணம் / நன்கொடை பெறப்பட்டது. இக்கால கட்டத்தில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தார், நெடுஞ்செழியன் நிதியமைச்சராக இருந்தார். எம்ஜிஆரே விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதனால், அரசியல் செல்வாக்கு அதிகமாகவே சேர்ந்து விட்டது என்றாகிறது. ஆனால், திராவிடத்தால் ஆன்மீகம் நீர்த்ததா, பணம், அதிகாரம்,மமதை இவற்றால் சீரழிந்ததா என்பதை அம்மாவின் பக்தர்கள் தான் சொல்ல வேண்டும்.

May 10, 1986 - Book release by Zail Singh

May 10, 1986 அன்று மெரினாவில் நடந்த விழா: மே மாதம் 10, 1986ல், மெரினா கடற்கரையில், ஆதிபராசக்தி டிரஸ்டின் சார்பாக முப்பெரும் விழா நடத்தப் பட்டது. உலக அமைதிற்காக மாநாடு [Conference for World Peace],  உலக அமைதிற்காக ஆன்மீக வேள்வி [Spiritual Yagna for World Peace] மற்றும் புத்தகம் வெளியிடப் பட்டது. பாரத ஜனாதிபதி ஜெயில் சிங் யாகத்தை ஆரம்பித்து வைத்தார். எம்ஜிஆர் பங்காரு அடிகளுக்கு சால்வை போத்தி பாராட்டினார். புத்தகத்தை ஜனாதிபதி வெளியிட அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் பெற்றுக் கொண்டார். அவ்வாறு திராவிட கட்சி, திராவிட ஆன்மீக போர்வையில் இந்நிகழ்சி அரங்கேறியது. அடுத்த ஆண்டே- 1987, இவரது பதவி காலம் முடிந்தது, எம்ஜிஆருக்கும் சுகவீனம் ஏற்பட்டு 24-12-1987ல் காலமானார்.  கிருத்துவர்கள் அந்த ழாண்டு கிருஸ்துமஸ் கொண்டாட வேண்டாம் என்று அறிவித்ததும் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். இதனாலேயே, பங்காரு அடிகள் கொண்டாட ஆரம்பித்தாரா? அல்லது கிருத்துவர்கள் வற்புருத்தினரா?

Melmaruvattur raid July 2010

பங்காரு அடிகளார் வீட்டின் முன் சோதனை நடத்துவதற்காக குழுமியிருந்த வருமான வரித் துறையினர் (ஜூலை 2010)[7]: மதுராந்தகம்,ஜூலை 3: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பொறியியல்,மருத்துவக் கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை தொடங்கி 17 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். அறநிலைய நிறுவனர் பங்காரு அடிகளார், அவரது மூத்த மகன் அன்பழகன், அவரது மகள் ஸ்ரீதேவி ஆகியோரது வீடுகளிலும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 6 மணி வரை வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். 2010ல் சிபிஐ ரெயிட் நடந்தது, அதிலிருந்து, கோவிலில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. மேனாட்டு பக்தர்கள் என்று வர ஆரம்பித்தனர். இதனால், திடீரென்று, கிருஸ்துமஸ் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப் பட்டது. அதுதான், பிறகு, அம்மனையே மேரியாக அலங்கரித்து, கொண்டாடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. முன்பு, இதை சுட்டிக் காட்டியபோது, “அம்மா பக்தர்கள்” என்னை வசை பாடினர்! இங்கு விசயம் பக்தியைப் பற்றியதல்ல. மதம், நம்பிக்கை பெயரில், கிருத்துவத்தை நுழைக்கும் போக்கு தான் எடுத்துக் காட்டப் படுகிறது. அருகில், அச்சரபாக்க மலை கிருத்துவர்களால் வலைக்கப் பட்ட போது, பங்காரு அடிகள் தமது அதிகாரத்தால் தடுத்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை.

வேதபிரகாஷ்

26-12-2018

Christian pstor with Bangaru

[1] உண்மையில் ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து பிஎச்.டிகளை சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில், செக்யூலரிஸ நாட்டில் நாத்திகம் கூட பாரபட்சமாக வெலை செய்கிறது, மதம்-ஜாதி பார்த்து தான் முடிக்கி விடப்படுகிறது என்று தெரிகிறது.

[2] https://dravidianatheism.wordpress.com/2016/03/20/priest-kicked-goddess-the-perverted-writing-of-evr-periyar-exposed/

[3] https://dravidianatheism.wordpress.com/2016/03/20/evr-periyar-perversion-and-characteristics-were-due-to-failures-in-his-personal-life/

[4] இதற்கான இணைதள பதிவுகள் மறை ஆரம்பித்து விட்டன.

[5] http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_38.html

[6] https://www.youtube.com/watch?v=EvJvdTZjg08

[7] தினமணி, மேல்மருவத்தூர் அடிகளார் வீட்டில் சோதனை, First Published : 04 Jul 2010 02:28:15 AM IST

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: