பொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா-எதிர்ப்பா?

பொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியனசுனாசானா ஆதரவாஎதிர்ப்பா?

porukki-twitter-swamy-used-frequently

நான் பொறுக்கி தான்: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின[1]. பொதுவாக சாமி ஆங்கிலத்தில் ஸ்லாங் போன்ற விதத்தில் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது உண்டு. அதனை புரிந்து கொள்வது கண்டனம். அவ்விதத்தில் “பொறுக்கி” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. இதைப்பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன் தாக்கம் மற்றவர்களிடையே ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சுப. வீரபாண்டியன், “பொறுக்கி சாமி” என்றார். மெரினாவில் ஒரு பெண் அவரை கிண்டலடித்து பேசிய வீடியோவும் சுற்றில் உள்ளது. அந்நிலையில், அமல் ஹஸன், “யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[2]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்,” என்று பேசியதை, சினி உலகம் என்ற தளம் கமல்ஹாசன் பேசியதை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது. எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அதற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்[3] என்றெல்லாம் விளக்கியது.

porukki-reality-at-marina-kamal-and-swamy

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் கமல்ஹாசன் பேசியது: இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ‘‘இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம்[4]. இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளிப்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது[5].

 porukki-twitter-subavira-pandian-and-swamy

என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம், கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்:நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[6]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்[7]. திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம்[8]. இது தன்மானம். அரசியல் இல்லை[9]. குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம்[10]. கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்[11]. அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’  இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

aloor-sha-nawas-questioning-swamy-for-his-remarks

ஜல்லிகட்டும், கமல் ஹஸனும்: கமல் ஹஸனும் எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதால், விரக்தியினால் கோபம் அதிகமாகியுள்ளது தெரிகிறது. போதாகுறைக்கு, கௌதமியும் தனியாக சென்று விட்டார். அடங்காப்பிடாரி மகள்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றே தெரிகிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிலையில், ஆரம்பித்திலிருந்தே தோல்விடைந்த மனிதராகத்தான் இருந்தார். நல்ல நடிகன் என்ற நிலைமை எல்லாவற்றிற்கும் எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. வியாபாரம் என்றால் லாபம் வர வேண்டும், அப்பொழுது தான், ஷோவைத் தொடர்ந்து நடத்த முடியும். பணம் இல்லாததால், பொத்தீஸ் போன்ற விளம்பரங்களில் நடித்ததும் தெரிய வந்தது. எது எப்படியாகிலும், வெள்ளநிவாரண தொகையிலும் சர்ச்சை ஏற்பட்டது. இவரது நாத்திகம், இவரை மக்களிடத்திலிருந்து பிரித்து வைக்கின்றது என்பது தெரிந்த விசயாமாக இருக்கிறது. ஏனெனில், 23-01-2017 அன்று, ஜல்லிக்கட்டு கடவுள் சம்பதப்பட்ட அடங்காக உள்ளதே என்று என்.டி.டி.வி வி நிருபர் கேட்டதற்கு, இவர் சரியாக பதில் சொல்லாமல், மழுப்பியது. அந்த நிருபருக்கே தமாஷாக இருந்தது.

© வேதபிரகாஷ்

24-01-2017

jallikattu-would-held-this-year-samy

[1] சினி-உலகம், நான் டெல்லி பொறுக்கி இல்லைகமல்ஹாசன் பதிலடி, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017..

[2] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.

[3] http://www.cineulagam.com/actors/06/135686

[4] தினமணி, நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி, By DIN,  Published on : 23rd January 2017 10:36 AM

[5] http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jan/23/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-2636435.html

[6] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.

[7] http://www.dailythanthi.com/News/CinemaNews/2017/01/23012840/I-porukkitan-Tamil-Delhi-will-not-tolerate–Actor.vpf

[8] தினமலர், நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017.. 13.47. IST.

[9] http://cinema.dinamalar.com/tamil-news/55426/cinema/Kollywood/Yes-I-am-Tamil-Porukki-kamal-slams-Subramaniya-Swamy.htm

[10] தமிழ்.இந்து, ஆம், நான் தமிழ் பொறுக்கிதான்: கமல்ஹாசன், Published: January 22, 2017 17:29 ISTUpdated: January 22, 2017 18:45 IST

[11] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article9496139.ece

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: