ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை!

ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை!

Vallalar Manram, Neur Agraharam

வழக்கம் போல இந்த ஆண்டும் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனைக்குப் புறப்பட்டோம். வல்லளார் மன்றத்தில் தங்கினோம். நெரூர் அக்ரரஹார வீதியில் மாற்றம் எதுவும் இல்லை. நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் சபாவுக்கு செல்லும் வழியில் சிலதூரத்திற்கு கான்கிரீட் சாலை அமைத்துள்ளனர். திருமதி ஈஸ்வரி சங்கர், ஒன்றிய கவுன்சிலர் என்று கான்கிரீட் அறிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மண்தெரு இருந்ததால், நான்கு வரிசைகளில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட வசதியாக இருந்தது.  நடுவில் காவிரி ஆற்று நீர் ஓடுகிறது, இரு பக்கமும் மண் தெரு, பழைய ஓடு வீடுகள். சில வீடுகள் கூரை விழுந்து, இடிபாடுகளுடன் கிடக்கின்றன. 15-05-2016 அன்று அங்கடைந்தபோது, தெரு இப்படித்தான் இருந்தது. வழக்கம் போல இருக்கும் கூட்டம் இல்லை. வீதி காலியாக இருந்தது. அடுத்த நாள் (16-05-2016) தேர்தல் என்ற காரணம் இருந்தாலும், வழக்கம் போல அங்கபிரத்க்ஷ்ணம் நடக்காது என்பதால் கூட்டம் குறைந்து விட்டது என்று தெரிகிறது.

Sadasiva Brimendrar 102 Aradhana Nerur

ரஜினி வந்து விட்டுப் போன சித்தர் கோவில்: கரூர் அருகே நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனையின் போது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்தர் சமாதி, ரஜினி முதலியோர் வந்து போகின்றனர் என்ற செய்திகளால் பிரபலமாகி வருகின்றது[1]. சினிமாகாரர்கள் வந்து போகிறார்கள் என்றால் பக்தி கூடுகிறதா, பக்தர்கள் கூடுகிறார்களா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்களும் நெரூர் கோவிலுக்கு வருகின்றனர். மற்ற நேரங்களில் இவ்வூருக்கு வர்பவர்கள் யாரும் இல்லை எனலாம். அதனால், இவ்விழா நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவ்வூர் மக்கள் ஆர்பாட்டம் செய்வதுண்டு. நூறு ஆண்டுகளாக இவ்விழா நடந்து கொண்டிருக்கும் போது, ஏன் வருடாவருடம், இதில்லை-அதில்லை என்று உள்ளூர் மக்கள் புகார் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

Nerur Ahrahara street, where Sadasiva Trust is there, concrete road has been laid.

ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனையின் போது கோவிலுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்: அவ்வாறு ஒவ்வொரு வருடமும், ஏதாவது கோரிக்கை வைத்து புகார் கொடுப்பர். 2016லும் அதேபோன்ற புகார்களை வைத்தனர். நெரூர் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாலும், குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து தண்ணீர் தேங்கி நிற்பதாலும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது[2]. டூவீலர்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், குண்டும், குழியுமான சாலையில் செல்லும் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, நெரூரில் சதாசிவம் பிரமேந்திரர் கோவிலுக்கு செல்லும் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று தினமலர் செய்தி வெளியிட்டது[3]. நெரூர் சதாசிவ கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்[4]. சுகாதார வளாகம் இல்லாமல் இருப்பதால், திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிட வசதி, இருக்கை வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றெல்லாம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன[5]. ஆனால், 101 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த அங்கப் பிரதிக்ஷணம் நின்று விட்டதால், இவ்வருடம் கூட்டம் வரவில்லை என்பதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

Nerur Ahrahara street, where Sadasiva Trust is there

நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம்: நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம் 16-05-2016 அன்று நடைபெற்றது[6]. கரூர் அருகே உள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் 102வது ஆராதனை விழா கடந்த 11ம்தேதி துவங்கியது. வைசாக சுத்த பஞ்சமி சங்கரஜெயந்தி அன்று உற்சவம் ஆரம்பித்து தினமும் பாகவத கோஷ்டியுடன் உஞ்சவிருத்தி, கிராம பிரதட்சணம், மஹன்யாசபூர்வ அபிஷேகம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் நடைபெற்றது[7].  வழக்கம் போல, அலங்கரிக்கப்பட்ட சதாசிவ பிரமேந்திராளின் உருவப் படத்தினை மடத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இசை கச்சேரியை ரசித்ததுடன், சதாசிவ பிரமேந்திராளின் அருளும், ஆசியும் பெற்றனர்[8]. 16-05-2016 அன்று (திங்கள்) வைசாக சுத்த தசமி தினத்தில் பிரம்மேந்திரசரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்சவம் நடைபெற்றது. லட்சார்ச்சனை பூர்த்தியும், ஸந்தர்ப்பனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  விழா ஏற்பாடுகளை நெருர் சதாசிவபிரம்மேந்திர சபா, நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சேவா டிரஸ்ட், நிர்வாக அங்கத்தினர் பக்தர்கள் செய்திருந்தனர். 25-05-2016, புதன்கிழமை அன்று நிகழ்ச்சிகள் முழுமை அடைந்தன[9].

IMG_20160515_125905397

102வது ஆராதனையின் போது அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை: 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அங்கபிரதிக்சணம் இவ்வருடம் நடைபெறவில்லை. சென்ற வருடம் தடை விதித்தது என்றால், ஒரு வருட காலமாக, நெரூர் சதாசிவ பிரும்மேந்திரர் சபை மற்றும் இதை ஆதரிக்கும் பல பிரபலங்கள், பக்தர்கள், சித்தர்-விரும்பிகள் மற்றும் அவரை ஆராதித்தித்தால் பலன் அடைந்தவர்கள் ஏன் மௌனமாக இருந்தார்கள் என்று தெரியவில்லை.  பல நீதிபதிகள், வக்கீல்கள் எல்லோருமே வந்து சென்றுள்ளனர். பிறகு, அவர்களுக்குக் கூட ஒன்றும் தோன்றவில்லையா என்று புரியவில்லை. இதுவிசயமாக 15-05-2016 அன்று ஹனுமந்தராவ் என்பவருடன் பேசி, விசாரித்தபோது, வழக்கைப் பற்றிய விவரங்கள், திருச்சியில் உள்ள வக்கீலுக்குத் தான் தெரியும் என்றும், இவ்வருடம் அங்கப்பிரதிக்சணம் நடைபெறாது என்றும் தெரிவித்தார். 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அங்கபிரதிக்சணம் நிறுத்தப்பட்டால், அதை ஏற்கக்கூடிய மக்களின் நம்பிக்கைப் புண்படாதா, அவர்களது உரிமைகள் பாதிக்கப்படாதா என்பதெல்லாம் ஆராயவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்ததில், இதுவரை அசுத்தத்தால் இலைகளில் புரண்டவர்களுக்கு நோய் ஏற்பட்டது போன்ற எந்த புகாரும் இல்லை. மாறாக தனது நோய் போய் விட்டது என்று சிலர் கூறிக் கொண்டுள்ளனர். ஆகவே, அந்த தலித் பாண்டியன் வேண்டுமென்றே விளம்பரத்திற்காக இவ்வழக்கைப் போட்டிருப்பதும், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் பக்தர்கள் பயந்து அமைதியாக இருப்பதும் தெரிகிறது. உதாரணத்திற்கு ஏப்ரல் 2016ல் நடந்த ஒரு நிகழ்ச்சி குறிப்பிட்டப்படுகிறது. ஏனெனில், கரூர் அருகே அது நடந்துள்ளது.

Nerur, Agraharam Street, Unjivritti as usual on 15-05-2016

ஏப்ரல் 2016 திருவிழாவில் சுத்தமற்ற உணவு உண்டதால் வாந்தி, மயக்கம்: கரூர் அருகே கோவில் திருவிழாவில் சுகாதாரமற்ற நீரினை சமைத்து சாப்பிட்ட 10 குழந்தைகள் உள்ளிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம் ஏறபட்டது[10]. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா பகுதியை சார்ந்த நெரூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10,11,12 2016 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் திருவிழாவின் இறுதி நாளான 12 ஆம் தேதி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு கிடா வெட்டி கறி இன்று வரை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த கிடா வெட்டிற்கு சமையல் செய்வதற்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து உபயோகபடுத்தியுள்ளனர் ஆனால் அந்த நீர் மிகவும் கலங்கலாகவும் செந்நிறமாகவும், மாசுபடித்திருந்த நிலையிலும் இருந்து வந்துள்ளது. ஆனால் அதை அறியாத மக்கள் அந்த தண்ணீரை உணவு சமைப்பதற்கு பயன்படுத்தி சாப்பிட்டுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து இன்று பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம், வயிற்றுவலி போன்ற இன்னல்களுக்கு ஆளாகினர், சம்பவம் அறிந்த சுகாதார துறை மருத்துவர்கள், செவிலியர்கள் முகாம் அமைத்து பாதிக்கபட்டவர்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது[11]. ஆனால், அந்த தலித் பாண்டியன் இதற்காக ஒன்றும் செய்யவில்லை. அதாவது, அசுத்தத்தினால் இம்மாதிரி பிரச்சினை ஏற்படலாம், ஆனால், நெரூரில் அத்தகைய பிரச்சினை இல்லை. இருப்பினும் வழக்கு, தடை எல்லாம் நடந்தேறியுள்ளன.

தலித் பாண்டியன், கரூர்

யார் இந்த தலித் பாண்டியன்?: இவர் தலித் விடுதலை இயக்கம், தேசிய அம்மைப்பாளர். ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் போட வேண்டும் என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்பவர்[12].  சென்ற ஆண்டு 2015ல், 101ஆம் ஆண்டு விழாவாக நடைபெற இருந்த இந்த மனிதத் தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.தலித் பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக விழாவிற்குத் தடை விதித்தனர்[13]. இவர் வேலாயுதபாளையத்தில், அண்ணாநகர், ஆதிதிராவிட காலனியில் வைத்து வருபவர்[14]. இவருக்கு பகவதி அம்மன் கோவில் திருவிழா சமாசாரம் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஒன்றும் செய்யவில்லை. எனவே,  நெரூர் விசயத்தில், ஏதோ உள்நோக்கத்துடன், யாரோ தூண்டுதலின் மீது வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று தெரிகிறது. இந்து அமைப்புகள் இதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை அவர்களுக்குத் தெரியாது என்று கூட சொல்லலாம்.

 © வேதபிரகாஷ்

 26-05-2016

[1] http://www.astrosuper.com/2011/10/blog-post_8478.html

[2] தினமலர், சதாசிவ பிரமேந்திரர் கோவில் சாலையை சீரமைக்க கோரிக்கை, மார்ச்.55,, 20166.007.14

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1472127

[4] தினமலர், புக்கார்பெட்ட்டி-கரூர், மே22.2016,  11.22.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1527014

[6] தினகரன், நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம், பதிவு செய்த நேரம்:2016-05-17 10:18:43

[7] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=573606&cat=504

[8] ஈநாடு.இந்தியா, சதாசிவ பிரமேந்திராள் கோயிலில் 102-வது ஆராதனை விழா, Published 11-May-2016 19:45 IST

[9] http://tamil.eenaduindia.com/Rainbow/SoulSpace/2016/05/11194604/Sri-Sadasiva-Piramentiral-Temple-festival-in-karur.vpf

[10]
தமிழ்.வெப்துனிய்யா, சுகாதாரமற்ற நீரில் சமைத்து சாப்பிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம்: கரூரில் பரபரப்பு, வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (15:19 IST)

[11] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/75-peopls-vomiting-fainting-in-karur-116041500032_1.html

[12] http://www.dinamani.com/edition_trichy/karur/article1399470.ece

[13] http://www.unmaionline.com/new/2587-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html

[14] DALIT PANDIYAN.V. Age:: 30, Category:SC. Sex:Male. Address: S/O. VELLAIYAN, 10/46, ADIDRAVIDA COLONY, ANNA. NAGAR, VELAYUTHAMPALAYAM …

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை!”

  1. ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது! (1) | உழவாரப்பணி Says:

    […] [3] https://antihidnu.wordpress.com/2016/05/26/nerur-rolling-on-leaves-ceremony-not-held-as-ban-imposed-… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: