தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (4)!

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (4)!

Akhsayta and sruti - daughters of Kamal

Akhsayta and sruti – daughters of Kamal – அக்ஷயா மற்றும் ஸ்ருதி என்றால் தமிழா, அரேபிக்கா, உருதா?

பகுத்தறிவாளன்: கமல் ஹஸன் தொடர்கிறார், “சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான் கோயிலை இடிப்பேன் என்பார்கள். எனக்கு நாத்திகம் என்ற பெயரிலேயே விருப்பம் கிடையாது என் பகுத்தறிவை கேலி செய்கிறார்கள். சொர்க்கம், நரகம் இரண்டையும் இந்த பூமியிலேயே அனுபவிக்காமல் போகமாட்டேன். தெய்வங்கள் அவரவர் பாக்கெட்டில் இருக்கட்டும். மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். என் சகிப்புத்தன்மை பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். நான் நாத்திகன் அல்ல. நாஸ்தி, ஆஸ்தி இரண்டும் வடமொழி சொற்கள். நான் பகுத்தறிவாளன். மந்திரசக்தி உள்ள எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கை குலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன். அந்த தெய்வத்திடம் சில கேள்விகள் கேட்பேன். சுனாமி வந்தபோது எங்கு இருந்தீர்கள்?, ஏழ்மை வந்தபோது எங்கு இருந்தீர்கள்?, ஆண்பெண் என்ற பாலினம் உங்களுக்கு தேவையா?, வடமொழியில் மட்டும்தான் பேச முடியுமா?, எனது தமிழில் ஏன் பேசவில்லை என்றெல்லாம் கேட்பேன்”. அதெல்லாம் சரிதான், அதேபோலத்தான் கடவுள் இலத்தீனில் பேசுமா, அரேபிய மொழியில் பேசுமா, உருது மொழியில் பேசுமா என்றேல்லாம் கேட்டிருந்தால், பகுத்தறிவின் உச்சத்தைக் கண்டு திகைத்திருக்கலாம், ஆனால், இது குறிப்பிட்ட மதத்தினரை எதிர்ப்பதாகத்தானே உள்ளது? அது சரி, தனது மகள்களுக்கு ஸ்ருதி மற்றும் அக்ஷரா என்று பெயர் வைக்க வேண்டும், அவை என்ன அரேபிய மொழியில் உள்ளனவா? இல்லை, இல்லாத கடவுளுக்குத் தெரியக் கூடாது என்று வைத்திருக்கிறரா?

எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கை குலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன்.

எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கை குலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன்.

இதைத்தான் சாப்பிட வேண்டும் என்பதா?: கமல் ஹஸன் தொடர்கிறார், “தெய்வங்கள் ஒரு புறம் இருக்கட்டும், உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர்கள். எந்த காரணங்களுக்காக சாப்பிடாதீர்கள் என சொல்கிறீர்கள் என்பதற்கான மருத்துவ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதலால் சாப்பிடாதீர்கள். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என்னை விட பெரிய மிருகங்களை சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். சாப்பாடே இல்லாமல் நிறைய பேர் இந்தியாவில் இருக்கிறார்கள், அதை கவனியுங்கள்.  மாட்டுக்கறி சாப்பிடாதீர்கள் என்று கூறு கிறார்கள்[1]உணவுகளை சாப்பிடுவது அவரவர் விருப்பம். அதை ஏன்? தடுக்கிறீர்கள். இதை, இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் எப்படி? உணவு பட்டியல் கொடுக்கலாம்[2]. மாடுகளை விட பூச்சிகளை சாப்பிடுவது நல்லது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 30 வருடங்களுக்கு பிறகு மனிதன் பூச்சிகளை சாப்பிடும் நிலை வரலாம். அப்போது பூச்சி சாமியார்கள் தோன்றி பூச்சிகளை சாப்பிடக் கூடாது என்று தடுப்பார்கள்”. அதிருக்கட்டும், பன்றி மாமிசம் சாப்பிடுகிறேன், எனக்கு உரிமை இருக்கிறது போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாமே? ஏன், அப்பொழுது ஏதாவது “பன்றி சாமியார்” வந்து பயமுருத்தப் போகிறாரா? சாப்பாடே இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், அது மாட்டிறைச்சி விவகாரத்தால் அல்ல, இவரைப்போல கோடீஸ்வரர்காளால் தான். இவருக்கு பட்டினி, பசி என்றெல்லாம் நடித்துதான் காட்ட முடியும். ஆனால், அவற்றை நீக்க முடியாது.

Kamal and beef eating philosophy

Kamal and beef eating philosophy

சகிப்புத் தன்மை இல்லை:  ஜனாப் கமல் ஹஸன் தொடர்கிறார், “சகிப்புத்தன்மை இந்த நாட்டில் இல்லை என்பதற்கு பெரிய உதாரணம் பாகிஸ்தான்[3]. நம்முடன் இருக்க வேண்டிய சகோதரனை பிரித்து வேறு வீடு கட்டி கொடுத்து விட்டோம். எவ்வளவு பெரிய நாட்டை பங்கு பிரிவினை போட்டு கொடுத்து விட்டோம் என்பதை நாம் உணர வேண்டும். மீண்டும் அது போன்ற நிகழ்வுகளை நிகழ விடக் கூடாது”, என்றார். விழாவில் கவிஞர் புவியரசு, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், எழுத்தாளர் சுகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். “சகிப்புத்தன்மை இந்த நாட்டில் இல்லை என்பதற்கு பெரிய உதாரணம் பாகிஸ்தான்”, என்பதில் விசமத்தனத்துடன் சொல்லியிருப்பது தெரிகிறது“[4].  “நம்முடன் இருக்க வேண்டிய சகோதரனை பிரித்து வேறு வீடு கட்டி கொடுத்து விட்டோம்,” என்றதிலிருந்து, ஏதோ இந்துக்கள் தாம் அவ்வாறு செய்தனர், முஸ்லிம்கள் ரொம்ப நல்லவர்கள் போன்று கூறியுள்ளார். இங்குதான் தெப்பெண்ணம், பாரபட்சம், திரிபுவாதம் முதலியவை வெளிப்படுகின்றன. மதத்தின் பெயரால் தனி வீடு, அதாவது நாடு கேட்டது ஜின்னா மற்றும் முஸ்லிம்கள். பாகிஸ்தான் உருவானால், எனது பிணத்தின்மீது தான் நடந்து செல்ல வேண்டியிருக்கும் என்று காந்தி சொன்னதையே பொய்யாக்கி விட்டு, உண்மையிலேயே பல இந்துக்களைக் கொன்று அவர்களின் மீதுதான் நடந்து பாகிஸ்தானிற்கு சென்றனர். அப்போழுதும், காந்தி, நவகாளியில் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள் என்று அங்கு பாதயாத்திரையாக சென்றார். இதையெல்லாம் சொல்லி என்ன பிரயோஜனம், இந்த நடிகன் இப்படி சொல்லிவிட்டான், இனி ரசிகர்கள் அதைத்தான் நம்பிக்கொண்டிருக்கும்.

அக்னி பரீட்சை கமல் தீர்மானிக்க வேண்டும்

அக்னி பரீட்சை கமல் தீர்மானிக்க வேண்டும்

தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை: ஶ்ரீமான் கமல் ஹஸன் தொடர்கிறார், “சமுதாய தெருவில் அசுத்தங்கள் கொட்டிக் கிடக்கிறது. அவற்றை சுத்தம் செய்ய எந்த கட்சி அழைத்தாலும் ஓடி வருவேன். பாகிஸ்தான் பிரிந்தபோதே நமது சகிப்புத்தன்மை போய்விட்டது. மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது. தேசபக்தியை தாண்டி உலக பக்தி நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கிறோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று 2 ஆயிரம் ஆண்டிற்குமுன் தமிழ் புலவன் சொன்னதை உலகத்துக்கு காட்டவேண்டாமா? நான் கோபமாக பேசுவதாக கருதலாம். என் நேர்மையை சந்தேகித்ததால் தான் இதையெல்லாம் சொன்னேன். எனக்கு அக்னி பரீட்சை வைக்க முடியாது. அதை சீதைக்கு வைத்துக்கொள்ளுங்கள். தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை. என் உறவுக்காரனை, அசுரனை கொன்றதற்காக அந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்”, இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்[5]. இங்கிருக்கும் இந்தியர்களுக்கு தேசபக்தி உள்ளதா, இல்லையா என்பது தெரியவில்லை போலும், “உலக பக்தி” பற்றி பேச ஆரம்பித்து விட்டான் “உலக நாயகன்”! இதேபோல, கிறிஸ்துமஸ், மொஹரம், மீலாது நபி போன்றவற்றையும் கொண்டாட மாட்டேன் என்று கூறியிருந்தால், இவரது செக்யூலரிஸத்தை பாராட்டலாம். ஆனால், திராவிட நாத்திகம் போலத்தான் பேசியிருப்பதால், போலி நாத்திகத்தைத்தான் காட்டியுள்ளார், இந்து-விரோதத்தன்மையினை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். அக்னி பரீட்சை வைக்கும் அளவுக்கு என்ன அப்படி தாம்பத்திய வாழ்க்கையினை தூய்மையாகவா வைத்திருந்தார் கமல். சட்டப்படி இரண்டு மனைவிகள், இரண்டு விவாக ரத்துகள், திருமணம் ஆவதற்கு முன்பே இரண்டு மகள்கள், சிம்ரன் உடன் வாழ்வு, செர்ர்ந்து வாழ்வது என்ற தோரணையில் பிறகு கௌதமி என்று வாழும் அவருக்கு யாரும் அக்னி பரீட்சை வைக்க முடியாதுதான்!

Pothys Kamal Hassan AD.2

Pothys Kamal Hassan AD.2

தீபாவளியேக் கொண்டாட மாட்டேன் எனக் கூறும் கமல், தீபாவளின்னா நல்ல டிரஸ் எடுத்துக் கொண்டாடனும் எனக் கூறுவதை விளம்பரத்தில் பார்க்கும் போது…..: பொதுவாக தமிழ் ஊடகங்கள் இதுவரை கருத்துத் தெரிவித்ததை பார்க்கவில்லை. ஆனால், இவ்விசயத்தில், “பத்திரிக்கையாளர்கள் எப்படி தன் சொந்தக் கருத்தை செய்தியில் சேர்க்கக்கூடாதோ, அது போல் நடிகர்களுக்கும் நடிப்பு வேறு, சொந்தக் கருத்துகள் வேறு தான். அது மறுப்பதற்கில்லை[6]. ஆனபோதும், தீபாவளியேக் கொண்டாட மாட்டேன் எனக் கூறும் கமல், தீபாவளின்னா நல்ல டிரஸ் எடுத்துக் கொண்டாடனும் எனக் கூறுவதை விளம்பரத்தில் பார்க்கும் போது சற்று நெருடலாகத் தான் இருக்கிறது”[7], என்று பிளிம்.பீட்.தமிழ் என்ற தளத்தில் படித்தது, சிலர் தமது கருத்தை வெளியிடும் நிலையில் உள்ளார்கள் என்று தெரிந்தது. நான் சொல்லவேண்டிய கருத்து அதில் உள்ளதால், அதனை அப்படியே போட்டுள்ளேன். இந்நிலையில், அவர் போத்தீஸிடம் வாங்கிய பணத்தை, எய்டஸ் பாதித்த குழந்தைகளின் நிறுவனத்துக்காக கமல் ஹாஸன் கொடுத்தார் என்பது பொய்[8] என்று குறிப்பிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது! இதேபோல கிறிஸ்துமஸ், மொஹரம், மீலாது நபி போன்றதற்கும் விளம்பரப்படங்களில் நடித்து, அப்பண்டிகளைப் பற்றி விமர்சனம் செய்தால், இவரது பகுத்தறிவை அல்லது செக்யூலரிஸ நாத்திகத்தை ஒப்புக்கொள்ளாலாம். தைரியமுள்ள, ரோசம், மானம் உள்ள உலக நாயகன் செய்வானா?

© வேதபிரகாஷ்

09-11-2015

[1] தமிழ்.ஒன்.இந்தியா, மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: நடிகர் கமலஹாசன், Posted by: Karthikeyan, Updated: Saturday, November 7, 2015, 21:00 [IST].

http://tamil.oneindia.com/news/tamilnadu/can-not-force-anyone-not-eat-beef-kamal-239458.html

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/can-not-force-anyone-not-eat-beef-kamal-239458.html

[3] http://www.dinamani.com/tamilnadu/2015/11/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88/article3119325.ece

[4] http://www.dinamani.com/tamilnadu/2015/11/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88/article3119325.ece

[5] http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/111650-2015-11-08-09-47-13.html

[6] பிளிம்.பீட்.தமிழ், உறவுக்காரன் இறந்த நாளைக் கொண்டாடாத கமல் தீபாவளிக்கு புதுத் துணி வாங்கச் சொல்றாரே.. நியாயமா?, Posted by: Jayachitra Published: Sunday, November 8, 2015, 15:21 [IST]

[7] Read more at: http://tamil.filmibeat.com/heroes/actor-kamal-s-controversial-attitude-on-diwali-celebration-037544.html

[8] This is false. Spreading this info gives false hope to our children. Please share and retweet this msg. Please avoid spreading inaccurate information. – Msg from Mr.Rajeev Nambiar (Founder Trustee)#kamalhaasan #ptptrust”

http://www.dnaindia.com/entertainment/report-ptp-trust-denies-that-kamal-haasan-made-a-donation-to-them-2131017

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: