தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய-இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (4)?

தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும்இந்தியஇந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (4)?

நரகாசுரனுக்கு வீர வணக்கம் - 2015

நரகாசுரனுக்கு வீர வணக்கம் – 2015

இணைப்பு (அதியமான் அறிக்கை)[1]: அதியமான் அறிக்கை தொடர்கிறது, “மதசார்பற்ற இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் இட்லர், முசோலினி வாரிசுகளான ஆர்.எஸ்.எஸ்., –பா..., சங்பரிவாரங் களின் நடவடிக்கைகளில் சில:

  • பகவத்கீதையை தேசியநூலாக அறிவிக்கத் துடிப்பது.
  • ஆசிரியர் தினத்தை குருஉத்சவ் என்று அறிவித்தது[2].
  • சமஸ்கிருதத்தை உலக மொழிக்கு இணையாக உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்வது.
  • பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சி.
  • கர்வாப்சி என்ற பெயரில் வறுமையில் வாடும் இசுலாமியருக்கு ரூ.5 லட்சமும், கிறித்துவருக்கு ரூ.2 லட்சமும் கொடுத்து ஆசைகாட்டி கட்டாயத்தின் பெயரில் இந்து மதத்திற்கு மாற்றும் முயற்சிகள்.
  • இசுலாமிய, கிறித்துவ தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள்.
  • பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து விநாயகர் ஊர்வலத்தின் போது, மசூதிகளின் மீது வெடிகுண்டுகளை வீசுவது, இசுலாமிய வரலாற்றுச் சின்னங்கள் இருக்குமிடத்தில் இந்துக் கடவுள்கள் பிறந்ததாக கட்டுக் கதைகளைக் கட்டவிழ்த்து விடுவது.
  • கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் மட்டும் 38 கிறிஸ்துவ ஆலயங்கள் மீதும், 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மீதும் தாக்குதல்[3],
  • கருத்துரிமைக்கு எதிரான படு கொலைகள்
  • பகுத்தறிவு கருத்தாளர்கள் புனேயை சேர்ந்த நரேந்திர தபோல்கர், பேராசிரியர் கோவிந் பன்சாரே, கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் துணை வேந்தர் கல்புர்கி, ஆகியோரைப் படுகொலை செய்தது[4].
  • ஆசிரியர் சுசீந்திரகுல்கர்னி முகத்தில் மை பூசி தாக்குதல் நடத்தியது.
  • பசுவதை எதிர்ப்பு என்ற பெயரில் நடத்தப்படும் மனிதப் படுகொலைகள்.
  • உத்தரப்பிரதேசம், தாத்ரியில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக வதந்தியைப் பரப்பி முகமது அக்லாக் என்பவரைப் படுகொலை செய்தது.
  • அடிமாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வழிமறித்து அதில் வருவோரை படுகொலை செய்வது,
  • மாட்டுக்கறி விருந்து கொடுத்ததாக கூறி காஷ்மீர் சுயேச்சை எம்.எல்.. ரஷித் என்பவர் முகத்தில் மை பூசி தாக்குதல் நடத்தியது,
  • இடஒதுக்கீட்டிற்கு எதிரான சதிகள்
  • மருத்துவக் கல்விக்கான இடஒதுக் கீட்டை ரத்து செய்து ஒரே மாதிரி யான நுழைவுத்தேர்வு முறையை கொண்டு வருவதற்கான முயற்சி.
  • தமிழகத்தில் தேவேந்திரர் குலம் என்று கூறிக் கொண்டு ஒரு சிலரை அழைத்து இடஒதுக்கீடே வேண் டாம் என்று வாக்குமூலம் கொடுக்க வைப்பது[5],
  • இடஒதுக்கீட்டிற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் ஜாதி இந்துக்களை தூண்டிவிடுவது.
  • தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான படுகொலைகள்.
  • அரியானா மாநிலம், சன்பேத் கிரா மத்தில் இரண்டு குழந்தைகளைப் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து படுகொலை.
  • அதே போன்று கோவிந்த் என்ற சிறுவன் படுகொலை,
  • 2014இல் 2249 தாழ்த்தப்பட்ட பெண் கள் மீது பாலியல் வன்கொடுமைகள்[6].
  • 500-க்கும் மேற்பட்ட ஜாதியப் படுகொலைகள்.
  • கவுரவக் கொலை என்ற பெயரில் 15க்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள்,
  • தருமபுரி மாவட்டம் சேஷசமுத்திரத்தில் தேர் எரிப்பு.
  • பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில்பேர் படுகொலை.”

 

gandhiji-statue-broken-salem

gandhiji-statue-broken-salem

தேசத் தலைவர்கள் அவமதிப்பு[7]: அதியமான் அறிக்கை தொடர்கிறது, “இந்திய நாட்டின் தேசப்பிதா என்றழைக்கப்படும்[8] காந்தியாரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு சிலைகளை எழுப்புவது, சமூகநீதிக்காக போராடிய தலைவர்கள் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பது[9]. தமிழகத்தில் வேளாண்துறை அதிகாரி முத்துகுமாரசாமி, திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணங்கள். இப்படி தொடரும் எண்ணற்ற ஜாதிவெறி, மதவெறி, பாலியல் கொடுமைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைத்தும் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதே! அவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும். தீபாவளியைப் புறக்கணிப்போம் இந்துத்துவாவை எதிர்க்கும் குறியீடாகவே அது இருக்கும்[10].

Karu temple - later removed

Karu temple – later removed

அதியமான் என்ன சொல்ல வருகிறார்?: அதியமான் தொகுத்துக் கூறியுள்ளதில் புதியதான விசயம் எதுவும் இல்லை. இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்ற, “மோடி-எதிர்ப்பு” பிரச்சாரத்தில், மிக்கப்படித்த மேதைகள், அதிமேதாவிகள், அறிவுஜீவிகள், பெரிய-பெரிய விருதுகளைப் பெற்றவர்கள், அவ்விருதுகளைத் திரும்பக் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள், அவர்கள் கூறுவதையெல்லாம் தினம்-தினம் நாளிதழ்களில் போட்டு, டிவி-செனல்களில் விவாதம் செய்து கொண்டிருக்கும் விசயங்கள் தாம் இந்த தொகுப்பு. தீபாவளி எதிர்ப்பு, இப்படி புது-புது கூட்டத்தினரால் எல்லாம் உபயோகப்படுத்தும் போலிருக்கிறது! இதனால், இவற்றிற்கு என்ன லாபம் என்று தெரியவில்லை! முதலில் இந்த “ஆதித் தமிழர் பேரவை” பற்றி தமிழகத்திலேயே எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. அறிக்கையை படித்துப் பார்க்கும் போது, இருக்கின்ற திராவிட சிந்தாந்திகளைப் போன்றுதான் கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. இந்துத்துவாவை எதிர்க்கும் குறியீடு எனும் போது, அதேபோல, மற்ற தத்துவங்களையும், அவற்றின் குறியீடுகளையும் இவர்கள் எதிர்க்காததும், அவற்றிற்கு வக்காலத்து வாங்குவதிலிருந்தும், இவர்களும், அவர்களின் ஆதரவாளர்களா இருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

மாவீரன் நரகாசுரன்

மாவீரன் நரகாசுரன்

இந்தியாவைத் தூற்றும்போக்கு ஏன்?: உலகத்திலேயே, சொந்த நாட்டை இவ்வாறு கேவலப்படுத்தும் மக்கள் இந்தியாவில் தான் இருக்கக்கூடும். “மோடி-எதிர்ப்பு” என்று சொல்லிக் கொண்டு, தேசத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள், கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவனமானப்படுத்தி, தூஷித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே இந்தியா என்றாலே, மற்ற நாடுகளுக்கு இளக்காரமாகத்தான். பாகிஸ்தான், போன்ற எதிரி நாடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இஸ்லாமிய-ஜிஹாதி நாடுகளான ஆப்கானிஸ்தான், சிரியா போன்றவையோ, இந்தியர்களை வைத்தே தீவிரவாத செயல்களை நடத்தி வருகின்றன. அல்-கொய்தாவை ஆதரித்ததாக இரண்டு இந்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது[11]. கடந்த ஓராண்டில் இந்தியாவில் சிரியா சென்று ஐ.எஸ். அமைப்பில் சேர திட்டமிட்ட 19 இந்தியர்களில் 16 பேர் தெலுங்கானா போலீஸாரால் அடையாளம் காணப்பட்டவர்கள். அதுதவிர ஐ.எஸ். அனுதாபிகள் 60 பேரை அடையாளம் கண்ட தெலுங்கானா போலீஸார் அத்தகவலை உளவு நிறுவனங்கள் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது[12]. அவர்கள் முஸ்லிம்கள் என்றதால், இவர்கள் அதைப் பற்றியெல்லாம் விவாதிப்பதில்லை[13]. அந்நிலையில் தான், இந்திய குடிமகன்களிடமிருந்து இத்தகைய அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இங்கும், மேலே பட்டியலிட்டுக் காணும் திறமைக் கொண்டவர்கள், கடந்த 60 ஆண்டுகாலத்தில், இந்தியா எப்படி வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்பதையும் கவனித்துப் பார்த்திருக்க வேண்டும். உண்மையில் இந்தியா ஏதாவது வளர்ச்சியடைந்துள்ளதா, முன்னேறியுள்ளதா, 1947க்குப் பிறகு, எதையாவது சாதித்துள்ளாதா என்று சீர்துக்கிப் பார்க்க வேண்டும். ஊடகங்கள் தாம், இத்தகைய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து 24 x 7, செய்திகளை தயாரித்து, அவற்றைப் பற்றிய வாதம்-விவாதங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதால் மட்டும் எதை சாதித்து விடப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

டாஸ்மாக் ஊழியருக்கு இரட்டிப்பு சம்பளம் - கரு, ஸ்டாலின்

டாஸ்மாக் ஊழியருக்கு இரட்டிப்பு சம்பளம் – கரு, ஸ்டாலின்

மதுவை எதிப்பவர்கள் கீழ்கண்டவற்றிற்கு பதிலளிப்பார்களா?:

  1. திராவிட சித்தாந்திகளுக்கு மகாத்மா காந்தி மீது எந்த கரிசனமும் இல்லை. காந்தி சிலைகள் உடைபடுவது தமிழகத்தில் தான். அச்சிலைகள் உடையாமல் ஏன் தடுக்கவில்லை?
  2. குடிப்பது என்பது தவறு என்றால், அதனுடன் தொடர்புடையவைகளும் தவறு என்று சுட்டிக் காட்ட மறுப்பது போலித்தனத்தைக் காட்டுகிறது.
  3. திராவிட ஆட்சியில் சாராயம், கள்ளாசாராயம், மதுக்கடைகள், அவற்றின் உற்பத்தி, ஏலம், முதலியவற்றை செய்து வருவது திராவிடர்களே, திராவிட சிந்தாந்திகளே.
  4. பிறகு அவற்றை வெளிப்படுத்திக் காட்டுவதில் ஏன் தயக்கம்?
  5. மதுவால் ஏற்படும் பிரச்னைகளால் “தலித்” மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், என்றால் அவர்களை திருத்தலாமே?
  6. அவர்கள் “அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும்” நிலைக்கு யார் வைத்திருக்கிறார்கள்? குடிப்பவர்களா, குடிக்காதவர்களா?
  7. இக்குடியை எதிர்ப்பவர்கள் “பப்-குடியை” ஆதரிப்பதேன்?
  8. தமிழ், தமிழன், ஆதித் தமிழன்……..என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்கள், திருவள்ளுவர் சொல்லியபடி கடைப்பிடித்து வாழ்வது தானே?
  9. மதுவை நிறுத்தினால் தீபாவளி நின்று விடுமா? இல்லை அவர்களால் மது விற்பனை நின்று விடுமா? பிறகு எதற்கு, இத்தகைய விளம்பர அறிக்கைகள்?
  10. தீபாவளிக்கு வெடிக்கக் கூடாது என்று மூன்று குழந்தைகள் வழக்குப் போட்டனவே? அதேப்போல இந்த வீரர்களும் வழக்குப் போட வேண்டியதுதானே?
திராவிடர்களின் மது சாம்ராஜ்யம்- எதிர்ப்பது யார்

திராவிடர்களின் மது சாம்ராஜ்யம்- எதிர்ப்பது யார்

© வேதபிரகாஷ்

08-11-2015

[1] http://www.inneram.com/news/tamilnadu/4987-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF,-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html

[2] ஆசிரியர்களை மதிக்க வேண்டாமா, வெறுக்க வேண்டுமா? ஆசிரியர்களை மதிக்காமல் தான், தமிழகம் இந்நிலையில் வந்துள்ளது.

[3]  இதில் ஈடுப்பட்டவர்கள், சாதாரண திருடர்கள் என்றும், அந்நிகழ்ச்சிகளும் திருட்டுவேலைகளுடன் சம்பந்தப்பட்டது என்று தில்லி போலீஸார் எடுத்துக் காட்டியதும், கிருத்டுவர்கள் அமைதியாகிவிட்டனர்.

[4] கொலைகள் நடந்தது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதுதான், கொலையாளிகளை கண்டுபிடிக்காமல் இருப்பது காங்கிரஸ் அரசுதான்.

[5] யார் எந்த ஜாதி என்பதெல்லாம் தீர்மானிக்கும் உரிமை இவர்களுக்கா அல்லது அவர்களுக்கா? இவரே தீர்மானித்து விட்டால், பிறகு மறவர்களின் உரிமை, சுதந்திரம் பற்றியெல்லாம் ஏன் பேசவேண்டும்.

[6]  இப்படி நடக்கின்ற குற்றங்களை, இப்பட்டியிலில் சேத்து சொல்லும் அவசியம் என்ன? 2014க்கு முன்னர் கொலைகளே நடக்கவில்லையா அல்லது வெறெந்த குற்றங்களே நிகழவில்லையா?

[7] இந்நேரம்.காம், மதுவெறி, மதவெறி சாதிவெறிக்கு எதிராக தீபாவளி புறக்கணிப்பு!, திங்கட்கிழமை, 02 November 2015 10:36.

[8] ஆக இவரோ, இவரது இயக்கமோ அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை போலும்! “மகாத்மா” என்று குறிப்பிடாதத்தும் கவனிக்கத்தக்கது. கருணாநிதியின், “உத்தமர் காந்தி”யையும் விடுத்து “காந்தியார்” என்று கூறுகிறார் அதியமான்!

[9] சகிப்புத்தன்மை அப்படியென்றால், யாரிடம் இல்லை என்று கவனிக்க வேண்டும். சிலைகளை மோதவிட்டது யார் என்று எடுத்துக் காட்ட வேண்டும். சாமிசிலைகளை உடைப்பவர்கள் யார், இச்சிலைகளை அவமதிப்பது யார் என்று கவனிக்க வேண்டும்.

[10] http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/29511-2015-11-02-05-30-33

[11]http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article7850869.ece

[12]http://tamil.thehindu.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7832565.ece

[13] http://www.dinamani.com/world/2015/11/07/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/article3117037.ece

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: