மதம் மாறமுடியாது என்று மறுத்தாலும், எதிர்த்தாலும் ஆண்கள் இல்லாத நேரத்தில் வந்து சிறார் மற்றும் பெண்களை மதம் மாற்ற முயலும் கிறிஸ்தவ மிஷனரிகள் – நரிக்குறவர்களும், உண்மையான மிஷி-நரிகளும்!

மதம் மாறமுடியாது என்று மறுத்தாலும், எதிர்த்தாலும் ஆண்கள் இல்லாத நேரத்தில் வந்து சிறார் மற்றும் பெண்களை மதம் மாற்ற முயலும் கிறிஸ்தவ மிஷனரிகள் – நரிக்குறவர்களும், உண்மையான மிஷி-நரிகளும்!

Narikuravar protest against christian conversion

Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்

நரிக்குரவர்களிடம் நரித்தனம் காட்டும் மிஷிநரிகள்: புதுக்கோட்டை அருகே ரெங்கம்மாள் சத்திரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட நறிக்குறவர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி உள்ளிட்ட கடவுளை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக (டிசம்பர் 2013 முதல்) அந்த பகுதியை சேர்ந்த மல்லி மற்றும் வேதையன் ஆகியோர் வேறு மதத்திற்கு மாறிவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து மல்லி மற்றும் வேதையன் ஆகியோர் புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு சிலருடன் சேர்ந்து கொண்டு நறிக்குறவர் காலனியில் வசித்து வரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாக கூறப் பட்டது. சிறுவர்களை வழிபாட்டிற்கு பெரியவர்களுக்கு தெரியாமல் அழைத்து கொண்டு சென்று விடுவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்[1].  இதுவே சட்டப்படிக் குற்றமாகும். நீயாய-தர்மங்களைப் பற்றி அவர்கள் என்றுமே கவலைபடாததால், அவற்றைப் பற்றி சொல்வதில் ஒன்றும் அர்த்தமில்லை.

Narikuravar protest against christian conversion - நன்றி நக்கீரன்

Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்

புகார் கொடுத்த பிறகும் மோசடியில் ஈடுபடும் கிறிஸ்தக்கூட்டங்கள்: தாங்கள் மதம் மாறமாட்டோம் என்று கூறினாலும் அவர்கள் மதமாற கட்டாயப்படுத்துவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசாரிடம் நறிக்குறவர்கள் புகார் அளித்துள்ள நிலையில்[2] 19-01-2014 அன்றும் ஒரு சிலர் குறவர் காலனிக்கு வந்து ஒரு குறிப்பிட்ட மதத்தை / கிருத்துவத்தைச் சேர்ந்த நெறிகள் அடங்கிய 10 கட்டளைகள் என்ற பெயரில் ஒரு விளம்பர பலகையை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விட்டு முன்பு வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இப்படித்தான் விற்க்கவேண்டும் என்றால், அவர்களது கடவுளது தகுதி முதலியவற்றை அறிந்து கொள்ளலாம்! இதனை அவர்கள் விரும்பவில்லை, எதிர்க்கவும் செய்தனர். இதனையடுத்து நறிக்குறவர் காலனி சங்க தலைவர் வேலன் தலைமையில் மதமாற்றம் செய்ய முயற்சிப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலணியில் 100க்கும் மேற்பட்டோர் காலனியில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலை குறவர்கள் கைவிட்டனர்[3].

Narikuravar protest against christian conversion - நன்றி நக்கீரன்

Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்

இந்து அமைப்புகளின் கண்டனம்: இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற  பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் புதுக்கோட்டையில் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி  நடைபெற்று வருவது குறித்து கண்டனம் தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு இப்பிரச்சினையை தொடக்க நிலையிலேயே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்[4]. இன்றைய நிலையில் ஓரளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், இந்து அமைப்புகள் தட்டிக் கேட்பது வரவேற்க்கத் தக்கதே. ஆனால், “இந்துக்கள்” என்று சொல்லிக் கொண்டு, இவர்களே பல குழுக்களில் பிரிந்து, மற்றவர்களைக் குழப்பி வருகிறார்கள் என்பதும் கண்டிக்கத் தக்கதே.

Narikuravar protest against christian conversion - நன்றி நக்கீரன்

Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்

ஜூலை 2012ம் இதே மாதிரி பொள்ளாச்சியில் புகார் கொடுத்துள்ளனர்: கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்துவதாக, இந்து நரிக்குறவர் சமூகத்தினர், குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், சப்-கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்[5]. பொள்ளாச்சி அருகேயுள்ள ஐந்து கிராமங்களில், இந்து நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அதிகளவில் உள்ளனர். இச்சமூகத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஆர். பொன்னாபுரத்தில் வசிக்கின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், கிறிஸ்துவ மதத்தினர், இந்து குறவர் இனத்தை சேர்ந்தவர்களை, மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. இச்சூழலில், ஐந்து நரிக்குறவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனராம். இச்சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பகல் நேரத்தில் வேலைக்கு சென்றவுடன், ஊருக்குள் கிறிஸ்தவ மத போதகர்கள் நுழைந்து, பெண்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்தும், குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள், பிஸ்கட் தந்தும், மத மாற்றம் செய்ய முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது[6]. இதுதொடர்பாக, நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த தேசிங்கு, ராஜேந்திரன், இந்து முன்னணி அமைப்பு மாவட்ட செயலர் உள்ளிட்டோர், நேற்று நடந்த குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், சப்-கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்.

Narikuravar protest against christian conversion - நன்றி நக்கீரன்

Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்

புதுவழியை அதாவது மோசடியை பின்பற்றும் மிஷனரிகள்: ஆண்கள் இல்லாத நேரங்களில், சிறுவர்கள் மற்றும் பெண்களிடம் தங்களது கைவரிசையைக் காட்டுகின்றனர் என்று பார்க்கும் போது, எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கின்றனர் என்று தெரிகிறது. ஆங்கிலேயர்கள் தாங்கள் ஏதோ உத்தமர்கள் போன்று இவர்களை குற்றம் புரியும் இனங்களுடன் சேர்த்து பட்டிலியலிட்டுக் கொடுமைப் படுத்தினர். ஆனால், இன்றும் கிருத்துவ மிஷனரிகள், இவ்வாறு நாகரிகம் வளர்ந்தும், மிகக்கொடுமையான எண்ணங்களுடன், குரூரக் குற்ற எண்ணங்களுடன் இப்படி மோசடி செய்து வருகின்றனர். ஆகவே, இவர்களை எந்த சட்டத்தில், எந்த வகையான பிரிவில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

கிருத்துவர்களின் முயற்சிகள் தோற்றது ஏன்?: இது – குறவர்கள் மதம் மாற்றத்தை எதிர்த்த நிலைப்பாடு, மறியல், எதிப்பு, புகார் முதலியன – நிச்சயமாக மிகமுக்கியமான செய்தியாகும். கிருத்துவ மிஷனரிகளின் பொய்ப்பிரச்சாரம், சரித்திர புரட்டல், இறையியல் மோசடிகள் அனைத்தையும் வெளிப்படுத்துவதாகும். “நரிக்குறவர்” என்பவரை நரிபிடிப்பவர்கள், பறவைப்பிடிப்பவர்கள் என்றுதான் குறிப்பிடுகின்றனர்[7]. “ஜிப்சி” போன்ற மக்களுடனும் ஒப்பிட்டு எழுதி வருகின்றனர்[8]. டி. எஸ். பிரகாஷ் போன்றோர் இவர்களை மதம் மாற்ற முயன்றிருக்கிறார்[9], ஆனால் வெற்றியடைவில்லை[10]. வலிய வந்து நிதியுதவியும் அளித்து வருகின்றனர்[11]. மனிதனை பலியிட்டுப் புசித்தல் என்ற இறையியலை மீது ஆதாரமாக ஆரம்பித்துப் பிறகு, இடைக்காலத்தில் மாற்றியமைக்கப் பட்டு “யுகாரிஸ்ட்” பெயரில் வளர்ந்த மதம் தான் கிருத்துவம். இதனால், அவர்கள் தாங்கள் எந்நாட்டிற்குச் சென்றாலும், அங்கிருப்பவர்கள் எல்லோரும் தங்களைப் போன்றே நாகரிகமற்று இருக்கும் மக்கள் என்றே நினைப்பது அவர்களுக்கு அவர்களுக்கு வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், இந்தியாவிற்கு வந்தபோது, அவர்களுக்கு பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு நிலையில், தமது மதத்தின் மூலமே இந்தியாவிலிருந்து தான் ஆரம்பித்தது என்ற எண்ணமும் தோன்றியது. உலகம் ஊழியில் மூழ்கி மறைந்து, பிறகு மனித இனம் தோன்றி வளர்ந்து பெருகிய கதைகளுக்கு ஆரம்பத்தைத் தேடிய போது, இந்தியாதான் என்று தெரிந்து கொண்டுனர். அவ்வகையில் தான், நரிக்குறவர்களை தம் முன்னோடிகள் என்று நினைத்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஆனால், அவர்களது எண்ணங்களின் ஆழங்களில் இந்திய இதிகாச-புராணங்கள் இருப்பது கொண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த உண்மையினை மறைக்கத்தான், அவர்கள் அமுக்கி வாசிக்க ஆரம்பித்தனர்.

சோமன்னாவை நினைவுப் படுத்திய பெரியவர்: இப்பொழுதும், ஒரு பெரியவர் கிருத்துவர்களை எதிர்த்ததோடல்லாமல், தங்களது நம்பிக்கையின் படி, ஒரு மணி, கற்ப்பூரம் இடும் பலகை மற்றும் இசைக்கருவி சகிதம் வந்து, தெருவில் உட்கார்ந்து, அந்த இசைக்கருவியை இசைக்க ஆரம்பித்தது, எனக்கு “சோமன்னத்துடி” என்ற படத்தின் நாயகன் “சோமன்னா”வின் ஞாபகம் தான் வருகிறது. பஞ்சத்தினால், ஒரு கிராமத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. வயல்கள் காய்கின்றன; கால்நடைகள் ஒன்றொன்றாக இறக்கின்றன; ஏன் மனிதர்கள் கூட இறக்கிறர்கள்; கிராம மக்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேற ஆரம்பிக்கின்றனர்; ஆனால், சோமன் தனது துடியை வாசித்துக் கொண்டு மழை வரும் என்று நம்பிக்கையோடு அங்கேயே இருக்கிறான்; அந்நிலையில் கிருத்துவ மிஷனரிகள் வந்து அவர்களுக்கு உதவுவது போல உதவி மதம் மாற்றுகின்றனர்; சோமன்னனின் தம்பியை மதம் மாற்றுகின்றனர்; அவனை வைத்து சோமன்னாவை மதம் மாற்றத் தூண்டுகின்றனர்; சொமன்னா மறுக்கிறான்; வருத்தத்தோடு தனது துடி/பறையை அடித்து முழக்குகிறான்; மழை வருகிறது; அத்தோடு கதையும் முடிகிறது! எனவே, இத்தகைய பெரியவர்கள் இருந்தாலே போதும், யாரும் ஒன்றும் செய்து விடமுடியாது. இப்பொழுது ஆர்.எஸ்.எஸ், பிஜேபி மற்ற இந்து அமைப்புகள் இந்த பெரியாரை மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளில் சிக்கிய நரிக்குறவர்கள்: ஆங்கிலேயர்கள் அவர்களை அடக்குமுறையில் ஒழிக்கவும் திட்டமிட்டனர். அதன்படியே அவர்களை குற்றபுரியும் மக்களிங்கள் சட்டம் [Criminal Tribes Act 1871] கீழ் கொண்டு வந்தனர். சுதந்திரம் பெற்றப் பிறகுதான், அவர்களது நிலை உயர ஆரம்பித்தது. ஆனால், கிருத்துவர்கள் இந்த உண்மைகளையெல்லாம் மறைந்து, அவர்களை ஏதோ உயர்த்துவோம் என்பது போல நடித்து சமூகத்தில் பிரிவினை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். இதுதான் இவ்விசயத்திலும் வெளிப்பட்டுள்ளது. மோசடி மூலம் எப்படி அவர்கள் மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டதால், அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, சமூக ஆராய்ச்சியாளர்கள், மற்ற பேராளர்களின் அவர்களது கீழ்த்தரமான காரியங்களைக் கண்டிக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

© 20-01-2014


[1] தினமணி, புதுகைஅருகேநரிக்குறவர்காலனியில்மதமாற்றம்: பொதுமக்கள்புகார், By மோகன்ராம், புதுக்கோட்டை, First Published : 19 January 2014 05:35 PM IST

[3] இரா.பகத்சிங், மதம்மாறகட்டாயப்படுத்துகிறார்கள்: நறிக்குறவர்கள்மறியல், நக்கீரன், ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2014.

[6] தினமலர், நரிக்குறவர்சமூகத்தினர்மதமாற்றம்? சப்கலெக்டரிடம்பொதுமக்கள்புகார், ஜூலை 23, 2012.

[7] G. Srinivasa Varma, Vaagri Boli. J.P. Vijayathilakan, Studies… Madras: Madras Christian College. They catch small birds, such as the parrot, but never eat the canary, which is sacred to the Goddess.

[8] William J. Jackson, Rituals of a “Gypsy” Tribe: The Vagri or Narikuravar ,  Religious Studies, Indiana Univ.-Purdue Univ., Indianapolis

Regional American Academy of Religion Conference, Bloomington, IN, 4/8/1989

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

4 பதில்கள் to “மதம் மாறமுடியாது என்று மறுத்தாலும், எதிர்த்தாலும் ஆண்கள் இல்லாத நேரத்தில் வந்து சிறார் மற்றும் பெண்களை மதம் மாற்ற முயலும் கிறிஸ்தவ மிஷனரிகள் – நரிக்குறவர்களும், உண்மையான மிஷி-நரிகளும்!”

 1. vedaprakash Says:

  தற்போது கேப்டன் சேனல் செய்தியில் ……… நரி குறவர் இனத்தை சேர்ந்தவர்களை மதம் மாற்ற வந்த கிருஸ்துவ கைகூலிகளை அடித்து விரட்டினர்.

  அச்செய்தில் பேசிய அந்த இனத்தை சேர்ந்த்ச் பெரியவர் ஒருவர் “ஏசு சாமி மட்டும்தான் சாமி நாங்க கும்படர சாமியெல்லாம் சாத்தானு” சொன்னாங்க “அதான் அவனுங்களை புடிச்சு சாத்தினோம்” என்று சொன்னார் .

  “நரி கொம்பு வித்தாலும் விப்போமுங்க ஆனால் காசுகாக மானத்தையே விக்கமாட்டோம்” என்ற எம்.ஜி.ஆர் பாடல் வரிகள்தாண் நியாபகம் வந்தது.

  ஹிந்து மதத்தில் உள்ள அணைத்து சாதியினரும் இதை உணர்ந்தால் நல்லது நரி குறவர் இனத்திற்கு தலை வணங்குங்கள் —

  பதிவு . M Suresh Varan

  பேஸ்புக்கில் ஒரு பதிவு!

  Like

 2. vedaprakash Says:

  நரிக்குறவர்கள் அல்ல; நெறிக்குறவர்கள்!
  நரிக்குறவர்கள் அல்ல; நெறிக்குறவர்கள்!
  – எஸ்.சுமன்
  திருவானைக்கா திருமண மண்டபம் ஒன்றில் பந்தி முடிந்து கை கழுவ வெளியேறிய அந்த 19 வயது இளைஞன், கண்ணில் பட்ட காட்சிக்கு அப்படியே விக்கித்துப்போகிறான். மண்டபத்தில் இருந்து எறியப்பட்ட எச்சில் இலைகளில் பன்றிக் கூட்டம் ஒன்று மேய்ந்துகொண்டு இருக்க, அவற்றோடு எச்சில் பருக்கை களுக்காக அடித்துப்பிடித்துக்கொண்டு இருந்த மனிதர்கள் அவனுடைய ரத்த உறவுகள். நாகரிகச் சமூகத்தில் தானும் ஓர் அங்கம் என உழைத்து வளர்ந்துகொண்டு இருந்த அவனை அந்தக் காட்சி உலுக்கிப்போட, கேவலுடன் மண்டப மூலையில் முடங்கி, யாரும் அறியாது அழ ஆரம்பித்தான்.
  ’20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த இந்தச் சம்பவம்தான் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது!’ – சுப்ரமணியம் சாதாரணமாகச் சொன்னாலும், அவர் சார்ந்த நரிக்குறவர் சமூகம் தலைநிமிரத் தன்னையே நெம்புகோலாக் கிக்கொண்டவர்.

  பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் இருந்து 4 கி.மீ. உள்ளடங்கி இருக்கிறது மலையப்ப நகர். ஊர் ஊராக நாடோடிகளாகத் திரிந்த தன் சமூக மக்களை எச்சில் இலைகளில் இருந்து மீட்கும் முயற்சியில் இரண்டு வழிகளைக் கையாண்டு இருக்கிறார் சுப்ரமணியம். முதலாவது, பெரியவர்களுக்கு சுயதொழில். இரண்டாவது, சிறுவர்களுக்கு பள்ளிப் படிப்பு.
  ‘எங்களுக்கு ஏற்கெனவே நல்லா தெரிஞ்ச பாசி மணி கோக்கும் தொழிலையே கொஞ்சம் பெரிசா எடுத்து பண்ண ஆரம்பிச்சோம். இதற்காக எங்க சமூகப் பெண்களை சுய உதவிக் குழுக்களா ஒருங்கிணைச்சேன். பெண்கள் அதிக அளவுல மணி மாலைகளைத் தயாரிக்க, இடைத் தரகர்களோட கொள்ளையை ஒழிக்க ஆண்கள் நேரடியா மார்க்கெட்டிங்ல இறங்கினோம். எங்க சிரத்தையால் செட்டிக்குளம் முருகன் கோயில் வாசலில் தொடங்கிய முயற்சி, கடல் கடந்து மலேசியா முருகன் கோயில் வரை களைகட்டியது. மூத்த தலைமுறையின் பொருளாதாரச் சுணக்கம் விலக, இரண்டாவது வியூகமாக குழந்தைகளைப் படிக்கவைக்கும் முயற்சியில் இறங்கினோம்!”
  இந்த இரண்டாவது முயற்சிக்காக சுப்ரமணியம் மேற்கொண்ட பாடுகள்தான் ஆச்சர்யம் அளிக்கும் போராட்டம்.
  ‘சிறுவாச்சூரில் பள்ளிக் குழந்தைகளுக்கான விடுதியை ஏற்பாடு செய்தேன். சாப்பாட்டுக்கு ஸ்பான்சர்கூடத் தயார். ஆனா, உழைக்கத் தயங்காத எங்க ஜனங்களால படிக்கிறதை மட்டும் ஏத்துக்க முடியலை. குழுவா பல ஊர் களுக்கும் பயணப்பட்டு எங்க சமூக மக்களிடம் பேசிப்பார்த்தோம். ஆண்டாண்டு காலமா ஊறிப்போன பழமை சுலபமா விலகுமா? எங்களை ஏதோ பிள்ளை பிடிக்கிற கூட்டமா பாவிச்சு, எங்க சொந்தக்காரங்களே பதறி விலகினாங்க. அதையும் மீறி குழந்தைகளை மீட்டு படிக்க வெச்சதுக்கு, வருமானம் பறிபோச்சேனு பல பெற்றோர் மண் வாரி விட்டதுகூட நடந்தது.

  இதோ ஆச்சு 11 வருஷம். முதல் தலைமுறை மாணவர்கள் 16 பேர் காலேஜ் போறாங்க. அதைப் பார்த்து பெத்தவங்க தானா முன்வந்து குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கிறாங்க. சிறுவாச்சூரைத் தொடர்ந்து இப்போ எங்க சமூக மக்கள் அதிகமா இருக்கும் மாயவரத்தைக் குறிவெச்சு பல்லவராயன்பேட்டையிலும் ஒரு உண்டு உறைவிடப் பள்ளியை ஆரம்பிச்சி இருக்கோம். வருஷத்துக்கு 10 ஊர்களைக் குறிவெச்சு விழிப்பு உணர்வுப் பிரசாரம் பண்றோம்!” என்று சொல்லும் சுப்ரமணியம் ஐந்தாம் வகுப்புதான் படித்திருக்கிறார். இந்த கல்வி சேவைக்காகத் தனது முன்னாள் தலைமையாசிரியர் பாலசுப்ரமணியத்தைத் தேடிக் கொண்டுவந்து தனது ஹாஸ்டலில் வார்டனாக்கி இருக்கிறார்.
  குளிக்காத தேகம், டால்டா டப்பா, காடை – உடும்புக் கறி, நரி வால் எனப் பொதுப்புத்தி பார்வை இனி மலையப்ப நகர் நரிக்குறவர்களிடம் எடுபடாது. பெயரில்கூட நரி போய் நெறி சேர்ந்திருக்கிறது. தமிழ்நாடு நெறிக்குறவர் கூட்டமைப்பின் தலைவராகி இருக்கிறார் சுப்ரமணியன். மலேசியா வரை போன மணிமாலை பிசினஸ் புண்ணியத்தில் இன்று அவர்கள் அனைவருடைய வீடுகளிலும் மோட்டார் சைக்கிள்கள் நிற்கின்றன. இருவர் கார் வைத்திருக்கிறார்கள். வாகிரி பாஷையில் தங்களுக்குள் பேசிக்கொண்டாலும் மற்றவர்களிடம் அதன் சாயலே இல்லாமல் தெள்ளு தமிழ் பேசுகிறார்கள். குழந்தைகள் கான்வென்ட் ஆங்கிலத்தில் அசத்துகிறார்கள். ”அடுத்தது அரசியல்தான். மற்ற மாநிலங்களில் எஸ்.டி. பிரிவில் இருக்கும் நாங்கள் தமிழகத்தில் மட்டும் அரசின் பாராமுகத்தால் எம்.பி.சி. பிரிவில் இருக்கிறோம். வட மாநில குஜ்ஜார்கள்போல தீவிரப் போராட்டத்துக்கான பூர்வாங்க வேலைகள் தயார்!”
  – திடமாக சுப்ரமணியம் பேச, சந்தோஷமாக அதை ஆமோதிக்கிறார்கள் மலையப்ப நகர் நரி… சாரி.. நெறிக்குறவ சகோதரர்கள்.
  என் விகடன் – திருச்சி
  http://news.vikatan.com/article.php?module=news&aid=4903

  Like

 3. anandhan Says:

  nan ungalai neenaithu perumai padugeren! ennai neenaithu vetkapadugerren………

  Like

  • vedaprakash Says:

   நீங்கள், “நான் உங்களை நினைத்துப் பெருமைப் படுகிறேன், என்னை நினைத்து வெட்கப்படுகிறேன்”, என்று எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

   ஆனால், நீங்கள் உங்களை “…நினைத்து வெட்கப்படுகிறேன்”, என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை.

   ஆண்டவனின் படைப்பில் அனைவரும் இவ்வுலகில் தேவையானவர்களே.

   இருக்கும் வரை யாதாவது செய்து கொண்டே இருக்கவேண்டும்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: