பெரியார் பிறந்தநாள் விழாவும், இந்து அவதூறு பேச்சும், திக-இந்து முன்னணி மோதலும்!

பெரியார் பிறந்தநாள் விழாவும், இந்து அவதூறு பேச்சும், திக-இந்து முன்னணி மோதலும்!

பெரியார் பிறந்த நாள் விழாவும், இந்து விரோத பேச்சும்: விருகம்பாக்கம் மர்க்கெட் அருகே காளியம்மன் கோவில் தெருவில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் 133-வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நேற்று இரவு (26-09-2011) நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   8.30 மணி அளவில் சுப.வீரபாண்டியன் பேசிக் கொண்டிருந்தார். என்னத்தான் “செக்யூலார்” முகமூடி போட்டுக் கொண்டாலும், பேசும் போது, இந்த ஆளின் குணம் நன்றாகவே வெளிப்படுகிறது[1]. வழக்கம் போல இந்துமதத்தை விமர்சித்து பேச ஆரம்பித்தார். அப்போது மேடையில் ஒரு கல் வந்து விழுந்தது. இதனால் வீரமணி உள்ளிட்ட தி.க. நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்[2]. கல்வந்த திசை நோக்கி தி.க. தொண்டர்கள் 10 பேர் சென்று பார்த்தனர். அங்கு யாரும் இல்லை. அதாவது கல் எறிந்தவர் யார் என்று சொல்ல முடியாது. திகவினரே அவ்வாறு செய்து இருக்கலாம். ஏனெனில், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட வேண்டும் என்று, வீரமணி பேசுவதற்கு முன்பு அவ்வாறான யுக்திகளை திகவினர் கையாளுவதுண்டு[3]. இதனால், கொஞ்சம் கூட்டம் அதிகமாகும். பேச்சு தொடர்ந்தது. பின்னர் சிறிது நேரம் கூட்டம் அமைதியாக நடந்தது.

இந்து முன்னணியை விளித்து வீரமணி பேச்சு: சுப.வீரபாண்டியன் பேசிவிட்டு அமர்ந்ததும், கி.வீரமணி பேசத் தொடங்கினார். அவர் பேசும் போது, இந்து முன்னணியினருடன் கருத்து மோதலுக்கு திராவிடர் கழகம் தயாராக உள்ளது என்று பேச ஆரம்பித்தார்[4]. வழக்கம் போல இந்துமதத்தை விமர்சித்து பேச ஆரம்பித்தார். அப்பொழுது இந்து முன்னணியினர்ஆங்கு வர ஆரம்பித்தனர். சிலர் வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்தனர். திகவினர் கத்தி அதரட்டினர், திட்டவும் செய்தனர். ஆனால், வீரமணி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த போது திடீரென வன்முறை மூண்டது.   திகவினர் கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்ததால் வாக்குவாதம் மூண்டது.

திக-இந்து முன்னணி மோதல்: இந்து முன்னணியை சேர்ந்த 20 பேர் மேடை அருகே கட்டப்பட்டிருந்த டியூப்லைட்டுகளை அடித்து உடைத்தனர். திராவிடர் கழகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியே மேடையை நோக்கி அவர்கள் முன்னேறினர்[5]. திராவிடர் கழகத்தினரும் எதிர் தாக்குதலுக்கு தயாரானார்கள்.   அவர்கள் எப்பொழுதுமே அடிதடிக்கு தயாராக இருப்பார்கள். அத்தகையோர் 20-30 பேர்கள் இருப்பார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இந்து முன்னணியினரை விரட்டியடித்தனர். ஆனால், அவதூறு பேசிய திகவினரை ஒன்றும் செய்யவில்லை[6]. இந்த கல்வீச்சு மற்றும் மோதலில் இந்து முன்னணியை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் காயம் அடைந்தார்.

போலீசார் உதவியுடன் வீரமணி பேச்சு: போலீசாரின் தலையீட்டால் நிலைமை சீரானது, வீரமணி பேசி முடித்தார்.   அதாவது, வீராப்பு பேசிய வீரமணிக்கு போலீஸ் பாதுபகாப்பு அல்லது கூட்டம் நடத்தவே போலீசார் உதவி தேவைப் பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வட பழனி உதவி கமிஷனர் சீனிவாசன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இதில் இந்து முன்னணியைச் சேர்ந்த இளங்கோ (38), செந்தில்குமார் (29), செந்தில் (30), விட்டல் (34), தயாளன் (46), நாகேஷ்வரன் (48), மனோகரன் (42) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்[7]. இதேபோல திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சாக்ரடீஸ் (35), ஏழுமலை (45), நடராஜன் (37), பரசுராமன் (28) உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்[8]. பிறகு எல்லோரும் விடுவிக்கப்பட்டனர் என்ற செய்தியும் வரும்..

இந்து-விரோத நாத்திகம் திகவின் முகமூடியைக் கிழித்து விட்டது: முன்பு 1960கள் போல இல்லாமல், இப்பொழுது மக்கள் முழித்துக் கொண்டு விட்டனர். வீரமணி போன்றவர்கள் தங்களது போலித்தனமான நாத்திகத்தை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது. அவ்வாறு செய்தால், இந்து முன்னணி இல்லை, பொது மக்களே, அவர்களை அடித்து உதைப்பார்கள். அன்று முதல் இன்று வரை, திக-திமுக-கருப்புப் பரிவாரின் பெண்கள், குறிப்பாக மனைவிமார்கள், இவர்களை சபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வீட்டில் தஇட்டவும், கண்டிக்கவும் செய்கின்றனர். இருப்பினும், இத்தகைய பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

பெரியார் பிறந்த நாள் விழாவில் ஏன் இஸ்லாம், கிருத்துவம் விமர்சிக்கப்படுவதில்லை?: பெரியார் பிறந்த நாள் விழாவில் அல்லது பெரியார் பெயரில் இந்து மதம் மட்டும் தாக்கப் படும் ரகசியம் தெரிந்து விட்டது. திகவினர் அல்லது திராவிட நாத்திகர்கள் என்றுமே முஸ்லீம்-கிருத்துவர்களை, இஸ்லாம்-கிருத்துவ மதங்களை விமர்சிப்பதில்லை[9]. அதுமட்டுமல்லாது, அத்தகைய போலி நாத்திக முகமூடி அணிந்து கொண்டு முஸ்லீம்-கிருத்துவர்கள் இந்துமதத்தைத் தாக்கி வருகிறார்கள். பொது மக்கள் இப்பொழுது புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். போனால் போகட்டும் என்று தான் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். ஒரு நாள் அடிக்க ஆரம்பித்தால் தாங்க மாட்டார்கள், அதோ கதியாகி விடும். அவதூறு பேசும் போது, போலீஸார், அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு, அவர்கள் அவ்வாறு பேசாவிட்டால், பிரச்சினை வராதே, மோதல் உண்டாகாதே, இதை போலீஸார் கவனிக்க வேண்டும்.


[1] முன்பு ஒரு பதிவில், எப்படி ஒரு ரௌடி மாதிரி இவரே அடித்து உதைத்து, பிளிம் சுருளை பிடுங்கிக் கொள்ள முயன்றார் என்பதைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். ஆனால், தொலைக் காட்சிகளில் மாணவி-மாணவியர்களிடம், ஏதோ அப்பாவி மாதிரி பேசுவது போல சித்தரிக்கப் படுவார்.

[2] ஒருவேளை வீரமணி பேசுவதற்கு முன்பாக கல் எரிவதற்கு முன்பாக, சுபவீரபாண்டியன் பேசும் போது எரிந்து விட்டதால், திகைத்து விட்டனர் போலும்! ஒருவேளை சுபவீரபாண்டியனின் தீவிர  ரசிகராக இருப்பார் போலும்!!

[3] திக உள்-கூட்டங்களில் எவ்வாறெல்லாம் கலாட்டா செய்யலாம், மக்களின் கவனித்தைத் திருப்பலாம் என்று பேசிவிட்டு, ஒத்திகை பார்த்து, இதற்கெனவே ஒரு குழுவும் வைத்துக் கொண்டுதான், கூட்டத்திற்கே ஏற்பாடு செய்வார்கள், வருவார்கள்.

[4] அதாவது இந்து முன்னணி ஒன்று தான் திகவினரை தைரியமாக எதிர்க்கின்றனர் என்று திகவினரே புரிந்து கொண்டு, பயப்பட ஆரம்பித்து விட்டனர் என்று தெரிகிறது. மற்ற “இந்து”க் கட்சிகள் எல்லாம், அரசியல் கட்சிகளுக்கு, ஏன் திராவிடக் கட்சிகளின் கைப்பாவையாக செயல் பட்டு வருகின்றன போலும்!

[6] இங்குதான், போலீஸாரின் பாரபட்சம் மிக்க நடவடிக்கைப் புலப்படுகிறது. சட்டத்தை மீறுகிறார்கள் எனும் போது, முதலில் அவ்வாறு பேசும் பேச்சாளிகள் தான் கைது செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து இந்து முன்னணியினர் அல்லது இந்துக்களை விரட்டியடிப்பதில் “செக்யூலரிஸம்” இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றாகிறது.

[9] இங்குதான் அவர்களின் அல்லது அனைவரின் போலித்தனம் வெளிப்படுகிறது. அதாவது, இந்துக்கள் நசுக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள்……………

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: