சிக்கிய சிடியில் “திடுக்’ கோவிலை தகர்க்க சதியா?

சிக்கிய சிடியில் “திடுக்’ கோவிலை தகர்க்க சதியா?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=36133

கொச்சி : கல்லூரி ஆசிரியர் கையை துண்டித்த வழக்கில், போலீசார் நடத்திய, “ரெய்டில்’ சிக்கிய, “சிடி’யில், சோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவிலை தகர்ப்பதற்காக, அக்கோவிலின் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும், “திடுக்’ தகவல் கிடைத்தது. கேரள மாநிலம் தொடுபுழாவில், நியுமேன் கல்லூரி ஆசிரியர் கையை துண்டித்த வழக்கு தொடர்பாக, தனிப்படை போலீசார் பலரையும் கைது செய்துள்ளனர்.

கொச்சி, ஆலுவா, தொடுபுழா, இடுக்கி உட்பட பல இடங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட, “ரெய்டு’களை போலீசார் நடத்தினர். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், குஞ்சிமோன் என்பவரது இன்னோவா கார், பட்டேரி கிராமத்தில் போலீசார் கைப்பற்றினர்; காரில் “சிடி’க்கள், லேப்-டாப் இருந்தன. “சிடி’ ஒன்றில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கொலைவெறித் தாக்குதல் குறித்த படங்களும், அல்-குவைதா அமைப்பு குறித்த பல்வேறு படங்களும் “சிடி’க்களில் இருந்தது தெரிந்தது.

பல்வேறு கொலை வழக்குகளில் குற்றவாளியான அவர், தலைமறைவாகி விட்டார். நேற்று முன்தினம், கொச்சி பகுதியிலும் ரெய்டு நடந்தது. ரெய்டில் நிறைய “சிடி’க்களும், புத்தகங்களும் சிக்கின. முக்கிய பிரமுகரான மன்சூர் வீட்டில் இருந்து சிக்கிய “சிடி’யில், எர்ணாகுளம் மாவட்டம் சோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில் குறித்த ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன.

அக்கோவிலை கைப்பற்றி தகர்க்கும் லட்சியத்துடன் இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது வீட்டில் இருந்து கைப்பற்ற டைரியில், தங்கள் அமைப்பிற்கு ஆட்களை கவர்ந்திழுக்க ஒரு நபருக்கு 60 ஆயிரம் ரூபாய் வீதம் பலருக்கு வழங்கப்பட்டிருப்பதும், அமைப்பின் உறுப்பினர்கள் சிலருக்கு, ஆட்டோ மற்றும் சரக்கு ஆட்டோக்களை வாங்கிக் கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் முகவரிகளும், தொலைபேசி எண்களும் கிடைத்துள்ளன. சிக்கிய, “சிடி’ லேப்-டாப், டைரி ஆகியவற்றை கொண்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், மேலும் பலர் போலீசார் வசம் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: