ராமாயணத்தை பழித்த பாடம்: துணைவேந்தருக்கு நோட்டீஸ்!

ராமாயணத்தை பழித்த பாடம்: துணைவேந்தருக்கு நோட்டீஸ்!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=33786

டில்லி பல்கலைக் கழகத்திடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது: புதுடில்லி:டில்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பி.ஏ., வரலாறு இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில், ராமாயணத்தைப் பற்றி, உண்மைக்கு புறம்பான வகையிலும், ராமரின் புகழுக்கு களங்கத்தை விளைவிக்கும் வகையிலும் இடம் பெற்றுள்ள தகவல் குறித்து, டில்லி பல்கலைக் கழகத்திடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. அத்துடன், பல்கலைக் கழக துணை வேந்தருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. டில்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பி.ஏ., வரலாறு இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில் “முன்னூறு ராமாயணங்கள், ஐந்து உதாரணங்கள் மற்றும் மூன்று விதமான கருத்துக்கள் என்ற தலைப்பில், ராமாயணம் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது. இதை, மறைந்த பேராசிரியர் ராமானுஜம் என்பவர் தயாரித்திருந்தார்.

சட்டப்படி செல்லும் நபர் சுப்ரீம் கோர்ட் என செல்லவேண்டும் போல: இந்த பாடம், உண்மைக்கு புறம்பான வகையிலும், கடவுள் ராமரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்திலும் உள்ளது. இது போன்ற சர்ச்சைக்குரிய பாடத்திட்டத்தை, நீக்க வேண்டும் என, டில்லியை சேர்ந்த தீனா நாத்பத்ரா என்பவர், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை, டில்லி ஐ கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில், நாத், அப்பீல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ராமாயணத்தை பற்றிய பாடத்தில், உண்மைக்கு புறம்பான வகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து, உரிய ஆதாரங்களுடன், பல்கலைக் கழக துணைவேந்தரிடம் தெரிவித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என, கூறியிருந்தார்.

சுப்ரீம் கோர்ட் சொல்லியும் அடங்காப்பிடாரியாக இருக்கும் டில்லி பல்கலையின் துணைவேந்தர்: இதை கடந்த செப்., 18, 2009ல் சுப்ரீம் கோர்ட் விசாரித்து, மனுதாரர் நேரடியாக டில்லி பல்கலை துணைவேந்தரிடம் புகார் தெரிவிக்க அனுமதித்தது. ஆனால், டில்லி பல்கலை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் தீனாநாத். இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சதாசிவம் தலைமையில் விசாரணைக்கு வந்தது. ராமாயணம் பாடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து, டில்லி பல்கலைக் கழகம் உரிய முறையில் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறிய நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக, நடவடிக்கை எடுக்கத் தவறிய, டில்லி பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: