தமிழில் பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்!

தமிழில்பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்!

http://www.viduthalai.periyar.org.in/20100703/snews02.html

தமிழில்பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்

திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற காஞ்சி சங்கராச்சாரியார்) ஒருநாள் தங்கியிருந்த போது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து-வைத்தார். ஏன் தாத்தாச்சாரியாரே.. .நாம எவ்வளவோ சபை நடத்துறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்ரோம். ஆனா… பிராமணா-ளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே… அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவர் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே… என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன். நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்-தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி?… ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?…

திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்தத் திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.

இதப்பாரும்…எல்லா கோயில்கள்லயம் திருப்பாவை _ திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச்சேரும். ஏன்னா… நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும். தமிழ். என்ன சொல்றீர்? என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.

சமஸ்கிருதத்தில் பேசியது மற்றவர்களுக்குப் புரியவில்லையாம்: நாங்கள் இப்படி பெரிய திட்டம் பற்றி சத்தமாக சிரித்து பேசிக் கொண்டிருந்த போதும்… சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள். அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக் கூட நாங்கள் பேசிக்கொள்வது புரியாது.

ஏன் ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?  என்று மகா-பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்: உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒருநாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்?… புரிந்து நடந்து கொள்… என்றேன். அப்போதும் அந்த கேள்வியை கேட்டவர்களுக்கு புரியவில்லை. உங்களுக்கு…?

(இந்து மதம் எங்கே போகிறது) அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

விடுதலையின் திரிபு-பொய்வாதம்: இதன் பொருள் புரிகிறதா? தமிழ் நீஷப்பாஷை என்பதும் சமஸ்கிருதம் தெய்வப் பாஷை என்பதும் அவாளின் உறுதியான எண்ணம். தமிழில் பேசிவிட்டால் தோஷம் ஏற்பட்டு விடும்; உடனே குளிக்க வேண்டுமாம், என்ன புரிகிறதோ தமிழர்களே!

ஏன்னா… நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும். தமிழ். என்ன சொல்றீர்? என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.

இப்படி சொல்லிவிட்டு, பிறகு எப்படி, அத்தகைய விளக்கம் அளிக்க முடியும்?

திருப்பாவை – திருவெம்பாவை என்ன அரேபிய மொழியிலா உள்ளது? தமிழில் தானே உள்ளது? பிறகு எதற்கு, திருப்பாவை – திருவெம்பாவை உற்சவம் நடத்த சொல்லவேண்டும், “சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு” ஏற்படவேண்டும்?
ஆக, வீரமணி நிச்சயமாக பொய்சொல்வது தெரிகிறது.

குறிச்சொற்கள்: , , , , , ,

3 பதில்கள் to “தமிழில் பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்!”

  1. நெட்டிமையார் Says:

    திராவிட கழகம் இவரது புத்தகத்தை பெரியார் திடலில் வைத்து விற்கிறது.

    முன்பு, நக்கீரன் இவரது (இவரால் எழுதப் பட்டது என்று) இந்து மதத்தைப் பற்றி தொடர் கட்டுரை பிறகு அது புத்தகமாகவும் வந்துள்ளதாக கேள்வி.

    ஆனால், இதில் நிச்சயமாக, அந்த கிழவர் எழுதியதற்கும் (அந்த வயதில் அவர் எழுதினாரா என்பதே சந்தேகம்), அச்சில் உள்ளதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன எனத் தெரிகிறது.

    ஒருவேளை, இவர் சொல்ல, யாரோ அதை எழுதி, அதை மாற்றி, அவர் எழுதியதாக வெளியிட்டிருப்பின், ஒன்றும் சொல்ல முடியாது.

    ஆக, ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றி விசாரிக்க வேண்டும்.

    தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல, முன்னுக்கு முரணாகத்தான், மேலேயுள்ள விஷயமும் இருக்கிறது.

    Like

  2. Pavitra Says:

    I met a friend of the family of the old man, they said Nakkeran Gopal paid small sum and took some manuscripts but none in the family says that the views put in by Nakkeran are not totally as per the old man’s views.

    But they cannot fight the mights of Nakkeran

    Like

    • vedaprakash Says:

      Thank you very much for your valuable information.

      In India, this type polemics has been order of the day expoliting the innocence of the Hindus.

      Hindus used to self-criticize without understanding the implications, i.e, how such views are taken by the others, particularly or specifically, the anti-Hindus.

      Coming to your another important note that, “none in the family says that the views put in by Nakkeran are not totally as per the old man’s views”. Here, if anyone of his family member issues such statement, then, the reliability of the book goes.

      So I request you to kindly request the family members to do so, for the good.

      Like

பின்னூட்டமொன்றை இடுக