இந்து முன்னணி மாநாடு நடத்துவது ஏன்? ராமகோபாலன் விளக்கம்!

இந்து முன்னணி மாநாடு நடத்துவது ஏன்? ராமகோபாலன் விளக்கம்!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=19945

// <![CDATA[//

இந்து முன்னணியின் ஆறாவது மாநில மாநாடு: சென்னை:””இந்துக்களுக்கும் சம உரிமை, சமநீதி, சமவாய்ப்பு கேட்டு, இந்து முன்னணியின் ஆறாவது மாநில மாநாடு நடத்தப்படுகிறது,” என, அதன் அமைப்பாளர் ராமகோபாலன் கூறினார். இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கூறியதாவது: இந்து முன்னணியின் 30வது ஆண்டு விழாவை ஒட்டி கரூரில் வரும் 20ம் தேதி, மாநில மாநாடு நடக்கிறது. பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும், இந்தியாவில் இந்துக்களுக்கு சம உரிமை, சமநீதி, சமவாய்ப்பு மறுக்கப்படுகிறது. உலக அளவில் இந்துக்கள் சிறுபான்மை இனத்தவர்களாக உள்ளனர்.இந்துக்களுக்குத் தான் அதிக சலுகைகள் வழங்க வேண்டும். நாங்கள் அதைக் கூட கோரவில்லை. நம் நாட்டில் சிறுபான்மையினருக்கு தரப்படும் சலுகைகள் இந்துக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தியே இம்மாநாடு நடத்தப்படுகிறது.

அத்துடன்,

 1. கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்;
 2. கோவில்களை இடிக்கக் கூடாது;
 3. புனித பயணம் மேற்கொள்ளும் இந்துக்களுக்கும் மானியம் வழங்க வேண்டும்;
 4. கல்வியில் பாகுபாடு கூடாது;
 5. குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை அனைவருக்கும் செயல்படுத்த வேண்டும்;
 6. மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும்;
 7. பசுவதை தடை சட்டம் கொண்டு வர வேண்டும்;
 8. அனைவருக்கும் பொது சிவில் சட்டம் வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாநாடு நடக்கிறது.

இதில், திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத் தலைவர் சதானந்த சுவாமிகள், வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சைதன்யானந்த மகராஜ், ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் மானனீய சுரேஷ் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு ராமகோபாலன் கூறினார்.

இந்தியாவில் இந்துக்களுக்கு சம உரிமை, சமநீதி, சமவாய்ப்பு மறுக்கப்படுகிறது: இந்த உண்மை நிச்சயமாக அனைவரும் அறியவேண்டியுள்ளது. இந்துக்களுக்கு சம உரிமை, சமநீதி, சமவாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதில்லை, நிறைய நேரங்களில், பல நிலைகளில், அனைத்து இட க்களிலும் இந்துக்களுக்கு அடிப்படை உரிமை, நீதி, சமவாய்ப்புகளே மறுக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் “இந்துக்கள்” என்றால் “திருடர்கள்” என்று கருணாநிதியே வசைப்பாடுவார், ஆனால், போட்ட வழக்குகள் எல்லாம் நீதி மன்றங்களில் தூங்கிக்கொண்டிருக்கும்!

ஏதோ இந்துக்களுக்கு சூடு, சுரணை வந்தால் சரி: இப்படியாவது இந்துக்களுக்கு சூடு, சுரணை………….எல்லாம் வந்தால் சரி. இந்துக்கள் “மெஜாரிட்டி” என்று சொல்லிக் கொள்கிறார்களே தவிர, இந்தியாவில் “இந்துக்கள்” இருப்பதாகவேத் தெரியவில்லை.

 1. காஷ்மீரத்தில் கொலை செய்யப் பட்டுள்ளனர், மிஞ்சியவர் அடித்து விரட்டப்பட்டுள்ளனர்;
 2. வடகிழக்கு மாநிலங்களில் “இந்துக்களை”த் தேட வேண்டியுள்ளது.
 3. கேரளாவிலே “சிறுபான்மையினராக” உள்ளார்கள் போலும்;
 4. உபியிலேயோ, தேடி பிடிக்கவேண்டியுள்ளது.
 5. மற்ற மாநிலங்களில் ஏதோ இருக்கிறார்கள் என்ற நிலைதான் போலும்!

குறிச்சொற்கள்: , , , , , , , ,

ஒரு பதில் to “இந்து முன்னணி மாநாடு நடத்துவது ஏன்? ராமகோபாலன் விளக்கம்!”

 1. vedaprakash Says:

  வீரமணிக்கு புறுக்கவில்லை போல இருக்கிறது. உடனடியாக தலையங்கத்திலேயே பிடித்துக் கொண்டு விட்டார்:
  ————————————————————————
  கரூரில்இந்து முன்னணி மாநாடா?
  http://viduthalai.periyar.org.in/20100616/news07.html

  கரூரில் இந்து முன்னணி மாநாடு நடக்க இருக்கிறதாம். எதற்காக இந்த மாநாடு? அதன் மாநில அமைப்பாளர் திருவாளர் இராமகோபாலன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

  இந்துக்கள் தொடர்ந்து மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப் படுகிறார்களாம். கோவில் நிருவாகம், கல்வி, அரசின் சட்டங்கள் மற்ற மதத்தினருக்கு உள்ளது போல இந்துக்களுக்கும் சம உரிமை கேட்க இம்மாநாடு என்று கூறியிருக்கிறார்.

  இந்துக்கள் மூன்றாம் தர மக்களாக நடத்தப்படு-கிறார்களா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இந்துக்களுக்குள்ளேயே இந்த நாட்டின் பெரும்-பான்மையான மக்கள் நான்காம் தர மக்களாக, அய்ந்-தாம் தர மக்களாக ஆக்கப் பட்டுள்ளார்களே, நடத்தப்படுகிறார்களே. இதற்கு என்ன பதிலாம்? அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் கொண்டு வந்தால் அதனை எதிர்த்து இந்து மதத்தில் _ உயர்ஜாதி மக்கள் உச்சநீதிமன்றம் செல்லு-கிறார்களே. அதனை எதிர்த்து இந்து முன்னணி மாநாடு கூடப் போடவேண்டாம் _ கண்டித்து அறிக்கை விடலாமே _ ஏன் செய்யவில்லை?

  இந்துக்கள் பெரும்பான்மையான மக்களின் மொழி கோயில்களில் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்றால் அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்கள் யார்?

  கோயில்களிலும் பெரும்பான்மை இந்து மக்களின் மொழியான தமிழில்தான் அர்ச்சனை நடைபெற-வேண்டும் என்று இந்து முன்னணி கரூரில் நடக்க இருக்கும் மாநாட்டில் குறைந்த பட்சம் தீர்மானம் நிறைவேற்றுமா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

  இந்து முன்னணி மாநாடு நடத்த இருக்கும் அதே கரூரையடுத்த திருமுக்கூடலூர் சைவக் கோயிலுக்குத் தமிழில் குடமுழுக்கு செய்தார்கள் என்று கோயிலை இழுத்து மூடித் தோஷம் கழித்தார்களே, அப்பொழுது எங்கே போனார் இந்த ராமகோபாலன்?

  சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாடினார் என்பதற்-காக வயது மூப்படைந்த ஓதுவார் ஆறுமுகசாமி, தீட்சதப் பார்ப்பனர்களால் தாக்கப்பட்டபோது இந்து முன்னணி எங்கே போய் முக்காடு போட்டுக் கொண்டது?

  தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் இந்துக்கள் என்று இந்து முன்னணி ஒப்புக் கொள்ளு-மேயா-னால், அந்தத் தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்-பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியாராக அமர இந்து முன்னணி ஒப்புக்கொள்ளுமா என்ற கேள்விக்கும் விடை தேவை.

  வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்வீர் என்று கேட்பது போல, இந்து முன்னணிக் கும்பலே முதலில் உம் மதத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை, ஜாதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாநாடு கூட்டுங்கள். உம் வீட்டிலேயே வண்டி வண்டியாகக் குப்பைகளை வைத்துக் கொண்டு அடுத்தவன் வீட்டுக்கு நொட்டாரம் சொல்லுவது வீண் வேலையல்லவா?

  இந்துக்களுக்கும் கல்வியில் உரிமை வேண்டுமாம். அதற்காக இந்து முன்னணி மாநாடாம். வாயால் சிரிக்க முடியாது.

  இந்துக்களில் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும்பொழுதெல்-லாம் அதனை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த முற்போக்குக் கூட்டம் எது?

  குஜராத் பாணியிலே சென்னையில் ஊர்வலம் நடத்துவோம் என்று அறிவித்தவர்கள் யார்? எதிர் ஊர்-வலம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்த பிறகுதானே வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடினீர்கள்?

  இன்னும் தீண்டாமையை வைத்துக் கொண்டிருக்கிற மதம் உலகத்திலேயே இந்து மதம் தவிர வேறு ஒன்று உண்டா? தீண்டாமை க்ஷேமகரமானது என்று பச்சை-யாக சொன்னவர்தானே உங்களின் பெரியவாள் மறைந்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி?

  இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்-கும் இந்துக் கோயில்களின் நிருவாகம் இவர்களின் கைகளுக்கு வரவேண்டுமாம். ஏன், கொள்ளையடிக்-கவா? சுரண்டல் தொழிலை ஜாம் ஜாமென்று செய்யவா?

  சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சதப் பார்ப்-பனர்கள் அடித்த கொள்ளை இப்பொழுது வீதிக்கு வந்துவிட்டதே ; இக்கோயில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வந்த நிலையில் கடந்த 14 மாதங்களில் கோயில் வருவாய் ரூபாய் 29 லட்சம் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதே! அதே நேரத்தில் தீட்சதப் பார்ப்பனர்கள் கையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிருவாகம் இருந்த நேரத்தில் ஆண்டு ஒன்றுக்கு வருமானம் வெறும் ரூபாய் 37,199 என்றும், அதில் செலவு ரூபாய் 37,000 என்றும் மீதி ரூ.199 என்றும் உயர்நீதிமன்றத்திலே கணக்குச் சொன்னார்களே!

  இதை வைத்துப் பார்க்கும் போது எத்தனை நூறு ஆண்டு காலமாக கோடி கோடியாக இந்தப் பார்ப்-பனர்கள் பணத்தைச் சுரண்டிக் கொழுத்து இருப்பார்கள்.

  அந்தக் கொள்ளை மீண்டும் நடக்கத்தான் கோயில் நிருவாகம் இவர்களின் கைகளில் வரவேண்டுமா?

  கரூரில் இந்து முன்னணி மாநாடு நடத்கு முன் நாணயமாக இவற்றிற்கெல்லாம் பதில் சொல்வார்களா? எங்கே பார்ப்போம்?

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: